You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to sbc-ece-2010, gtecmba2k12
நினைத்த வாழ்க்கைகிடைத்தால் சந்தோஷமா... கிடைத்த வாழ்க்கையில் மகிழ்வதில் சந்தோஷமா.நிச்சயம் இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி தான். சிந்திக்க துவங்கும் காலம்தொட்டு சாகும் நாள் வரை மனதை அரித்து கொண்டே இருக்கின்ற கேள்வி இது தான்.இந்த கேள்வி இல்லாமல் வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள் அல்லது வாழ போகிறவர்கள்சொற்பம் தான். படித்து கொண்டிருக்கும் காலத்தில் துவங்குகிறது -இந்த ஏக்க பெருமூச்சு. "நினைச்ச கோர்ஸ் கிடைக்கல. அதனால் கிடைச்ச கோர்ஸ்லசேர்ந்து படிக்கிறேன்" என்பது தான் மனதளவில் மலரும் முதல் சமரச முயற்சி.பிறகு வேலை வாய்ப்பின் போதும் இது தொடர்கிறது. "படித்த படிப்புக்கு வேலைகிடைக்கல. அதனால கிடைச்ச வேலைல செட்டிலாயிட்டேன்" என்று இரண்டாவதுமுறையாக சமரச வாழ்க்கைக்கு,மனதளவில் உடன் படுகிறோம். அடுத்து இருக்கவேஇருக்கிறது - காதலும், மண வாழ்க்கையும். அங்கேயும் நினைத்தது கிடைக்கிறதா."விரும்பினவங்க கிடைக்கல. அதனால் கிடைச்சவங்கள விரும்ப பழகிகிட்டேன்"... ஏமாற்றங்கள்பழகி விடுவதால், பிறகு வரும் ஏமாற்றங்களுக்கு மனம் வருந்துவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வேளை வருந்தினால், நாம் வாழ்வில் அடுத்த அடி கூடஎடுத்து வைக்க இயலாது. இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவருக்குநினைத்ததெல்லாம் வாழ்க்கையாக அமைகிறது. இன்னொருவருக்கு கிடைத்தது தான்வாழ்க்கையாகிறது. இருவரில் யார்சந்தோஷமாக இருப்பது. சந்தோஷமாக இருத்தல் என்பது தானே எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டம். நினைத்தவாழ்க்கை கிடைத்தும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.விருப்பமில்லாத ஒன்றை கூட விருப்பத்திற்குரியதாக மாற்றி, வாழ்வைசந்தோஷமயமானதாக மாற்றுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி என்றால் மகிழ்ச்சிஎங்கே உள்ளது. மனதில் தவிர வேறு எங்கு இருக்க முடியும். "நான் நினைச்சதுகிடைக்கலயே, நான் நினைச்சது கிடைக்கலயே" என்று சொல்லி சொல்லியே கிடைத்தஅற்புதமான வாழ்க்கையை தொலைத்து கொண்டிருக்கிறார்கள் நிறைய பேர். நமக்குஎன்ன தான் கிடைத்து இருக்கிறது என்று மனக்கண் திறந்து பார்க்கலாமே. நினைத்ததுகிடைக்காதவர்களின் வாழ்க்கை இப்படி என்றால்- நினைத்ததை அடைந்தவர்களின்வாழ்க்கை இப்படி உள்ளது. நினைத்த வாழ்க்கை கிடைத்தும் அதை போற்றி வாழதெரியாமல்,கிடைத்ததை குற்றம் சொல்லி- "இதற்காக தானே ஆசை பட்டாய்" என்றுவிசனப்படுபவர்களும் இருக்கிறார்கள். முன்பு பிரபலமாக இருந்த நடிகர் அவர்.கல்லூரியில் படித்த நாள் முதல் காதலித்த பெண்ணை மணந்து கொண்டார்.கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் காதலித்தார்களாம். ஆனால் மணவாழ்க்கையின் ஆயுள்ஒன்பது வருடங்கள் கூட இல்லை. நினைத்ததை அடைந்தும், முழுமையாக வாழமுடியவில்லை. அப்படி எனில், நாம் தேடும் ஆனந்தம்- நினைத்தவாழ்க்கையிலா... கிடைத்த வாழ்க்கையிலா...",இதற்கு பதில் என்ன.பெரும்பாலோர் - ஆசைகள்,கனவுகள், தேடல்கள் என்று பேசி பேசி நம் பலவீனங்களை, தோல்விகளை மறைக்க விரும்புவதாகவே தோன்றுகிறது. "எதுக்கு இத்தனை அரியர்ஸ்"என்று கேட்டால் - "நான் விரும்பின மேஜர் கிடைக்கல. எப்படி இத படிக்கமுடியும்" என்று தன் தோல்விக்கு காரணம் சொல்பவர்களை என்ன சொல்ல முடியும். வேலைக்குசரியாக செல்லாத ஒரு மனிதரிடம் "ஏன் வேலைக்கு ஒழுங்கா போக மாட்டீங்கறிங்க"என்று கேட்கும் போது, "நா விரும்பின வேலை கிடைக்கல. அதனால் எந்த வேலைக்கும்போகல" என்று பதில் வந்தால் என்ன செய்வது. நம் தமிழ் சினிமாவின் நிறையபடங்களில் நாயகனோ,நாயகியோ காதலித்தவரை விட்டு, வேறு ஒருவரை மணந்து - தன்வாழ்க்கை துணையினை நோகடிப்படிப்பார்கள். (உ.ம். நெஞ்சத்தை கிள்ளாதே -சுகாசினி. மௌனராகம் - ரேவதி). அப்படங்களை பார்க்கும் போது, நமக்குஅவர்களின் மீது அபரீதமான வெறுப்பு தான் வரும். நிஜ வாழ்விலும்அப்படி வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கலாம். நினைத்தது கிடைக்காத வாழ்க்கைசூன்யம் என்று நாமாக கற்பித்து கொள்கிறோம். அதையும் பெரிது படுத்தி, பெரிதுபடுத்தி பேசுகிறோம். நம் மீது ஒரு பரிதாப உணர்ச்சி ஏற்பட கூட இப்படிபேசுகிறோமோ. "எனக்கு தான் நினைச்ச வாழ்க்கை கிடைக்கல. உனக்காவது நினைச்சவாழ்க்கை கிடைக்கட்டும்" என்கிற ரீதியில் பேசுவது. இது குழந்தைகளை அல்லது வளர் பருவத்தினரை திசை மாறி போக ஒரு வழி அமைத்து கொடுப்பது போலவே உள்ளது.
"என்இஷ்டத்துக்கு என்னை இருக்க விடுங்க. அப்ப தான் நா நினைச்சதை அடையமுடியும்" என்று பேச துவங்கிவிட்ட குழந்தைகளை பார்க்கிறோம். நினைத்தவாழ்க்கை கிடைப்பதற்கு - அடிப்படையில் ஒரு தகுதி இருப்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அந்த தகுதி குறித்து மறந்தவர்களே, நினைத்தது கிடைக்கவில்லைஎன்று அரற்றுபவர்கள். அந்த தகுதி இல்லாமல், நினைத்து கிடைக்கவில்லை என்றுவெதும்புவதில் என்ன உள்ளது. இந்த தகுதிக்கான அர்த்தங்கள், இடத்துக்கு இடம்மாறுபடலாம். வாழ்க்கையை முழுமையாக அறிந்தவர்கள்,நினைத்தது, விரும்பியது கிடைக்காமல் போனால் வருந்த மாட்டார்கள். ஒரு சந்தோஷமான நாள்முடிந்து விட்டது என்பதற்காக வருந்த முடியுமா. இன்னொரு சந்தோஷமான நாள்வராமலா போகும். ஒரு புகை வண்டி பயணத்தின் போது, நமக்கு பிடித்த ஒரு நகரம்கடந்து போய்விட்டது என்பதற்காக வருந்துவோமா.
விரும்பியது பிடிக்காமல் போகலாம். பிடிக்காதது விருப்பப்பட கூடியதாக மாறலாம். இந்த உண்மை மனதால் உணரப்பட்டால் துன்பமும் இல்லை. சஞ்சலமும் இல்லை.