Holy feet of Periyavaa

12 views
Skip to first unread message

K.N.RAMESH

unread,
Sep 18, 2025, 8:33:31 AM (8 days ago) Sep 18
to
குருவாரம் குருவைப்பற்றியது

ஸ்ரீ மஹா பெரியவா திருவடி சரணம் !

ஒருமுறை ஶ்ரீ மஹா பெரியவாளின் 
தகப்பனார் ஶ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகள் சுவாமிநாதனின் சிநேகிதன் கிருஷ்ண ஸ்வாமியின் அப்பா வெங்கட்ராமனைத் தேடிப் போனார். 

அவர் ஒரு சிறந்த ஜோதிடர்.மேலும் சுப்ரமண்ய ஐயருக்கு நெருங்கிய நண்பர்."வெங்கட்ராமா! சுவாமிநாதன் ஜாதகத்தைக் கொஞ்சம் பாரு. இவனுக்கு ஜாதகம் எப்படி இருக்கு?" என்று காட்டினார்.

அதைப் பார்த்ததும் ஜோசியருக்குப் பேச்சே வரவில்லை. சுவாமி நாதன் சாட்சாத் ஈஸ்வரன் என்று தெரிந்தது. ஆனால், ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் நண்பனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும்.

அதனால், "சுப்ரமண்யா! நீ உன் பிள்ளையைப் பற்றிக் கவலையே படாதே. நம்மைப் போன்றவர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தையாகத் தெரியவில்லை. 

இவன் ஜாதகத்தில் பெரிய ராஜாக்களுக்கு உண்டான யோகமெல்லாம் இருக்கு. சக்ரவர்த்தியாக உலகமே கொண்டாட வாழப் போகிறான்!" என்று பேசினார்.

வெறும் ராஜாவாகவா மாறினார்! உலகை உய்விக்க வந்த யதிராஜராக அல்லவா ஒளி வீசினார்! 

அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், ரேகைகளையும் பார்க்க
ஆவல்கொண்டஜோசியர்,

அங்கிருந்த சுவாமிநாதனிடம் ,"போய் கால் அலம்பிண்டு வா" என்று கட்டளையிட்டார் அலம்பிக் கொண்டு வந்தவனை,

நாற்காலி ஒன்றில் அமர்த்தி அழுக்கு ஒட்டிக் கொண்டிருந்த காலில் தண்ணீர் விட்டுத் தன் கையாலேயே அலம்பினார்.... துடைத்தார்.
 சற்று தூக்கிப் பார்த்தார்.

அப்படியே கெட்டியாய் பிடித்துக் கொண்டு அழுதார். காலை விடவேயில்லை.

"விடுங்கோ மாமா!" என்ற சிறுவனின் குரலோ, "என்ன இது! 

குழந்தை காலை பிடிச்சுண்டு...விடு" என்ற சுப்ரமணிய சாஸ்திரியின் குரலோ ஜோசியர் காதில் விழவேயில்லை.

"அது என்ன விடக்கூடிய காலா!

பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!" என்று நினைத்தார் போலும்.

காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர ரேகை, தனுர் ரேகை, பத்ம ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன் அவர் என்று கட்டியம் கூறிக் கொண்டு பளிச்சென்று அவர் கண்ணுக்குப் புலப்பட்டன.

முதன் முதலில் பெரியவாளுக்குப் பாத பூஜை பண்ணும் பாக்கியம் 

இந்த வெங்கட்ராமய்யருக்குத்தான் கிடைத்தது.நல்ல கைராசிதான்!

விஷ்ணுவுக்கும் கிடைக்காத பாதத்தை இவர் பார்த்துவிட்டார் என்றால், இவர் பாக்கியமே பாக்கியம்.

நண்பரின் பதிவு 
மே.மாம்பலம் சாந்தனம் அவர்களின் பதிவு.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடி சரணம் !
Reply all
Reply to author
Forward
0 new messages