The feet of Krishna- Tamil poem

37 views
Skip to first unread message

K.N.RAMESH

unread,
Jun 18, 2022, 7:55:25 AM6/18/22
to
ஶ்ரீராமஜெயம் :pray:  
ஸர்வம் ஸ்ரீராம மயம்

*ஸ்ரீ கிருஷ்ணா உன்*  
*திருவடிகளே சரணம்*  

பாதம் என்ன பாதம்  
இது கண்ணபிரான் பாதம்  
ஞானமதை நல்குகின்ற நலமுடைய பாதம்  
நம்பியோரை கைவிடாத குணமுடைய பாதம்  
ராதையவள் மலர்கள் சூட்டும் மணமுடைய பாதம்

மேகமென்று கருத்திருக்கும் கண்ணங்கரு பாதம்  
மேகமென அருள்பொழியும் கருணையுள்ள பாதம்  
பணிய பணிய பக்தியதை பெருகச் செய்யும் பாதம்  
பண்பினளாம் ருக்மிணியும் பக்திச் செய்யும் பாதம்

சிறையதனில் பிறப்பெடுத்த சிறப்பான பாதம்  
சிறைப்பட்ட மனமதனை விடுவிக்கும் பாதம்  
வசுதேவரும் தேவகியும் கொஞ்சிய நல்பாதம்  
வணக்கமுடன் பாமாவும் சேவை செய்யும் பாதம்

சகடமென வந்தவனை உதைத்தழித்த பாதம்  
மரமென்று நின்றவரை உதைத்துய்த்த பாதம்  
நளகூபர மணிக்ரீவர் புகழ்ந்துரைத்த பாதம்  
ஜாம்பவானின் ஜாம்பவதி பூசை செய்யும் பாதம்

காளிங்கன் தலைகளில் நடம்புரிந்த பாதம்  
காணுகின்ற போதிலே வினையழிக்கும் பாதம்  
கண்ணென்று கொள்வோரைக் கண்ணென்னும் பாதம்  
காதலோடு காளிந்தியும் கண்ணிலொற்றும் பாதம்

கம்சனை உதைத்திட பயணப்பட்ட பாதம்  
உத்தமராம் உத்தவரும் தொழுது நின்ற பாதம்  
குசேலனுக்கு செல்வங்களை நல்கிய நற்பாதம்  
நன்மைகுண நாக்னாஜிதி மடியிலேந்தும் பாதம்

பாண்டவருக்கு தூதுசென்ற பொறுப்புள்ள பாதம்  
பற்றியோரின் பற்றறுக்கும் பற்றற்ற பாதம்  
பற்றியோரை பற்றியாரும் தூற்றவிடா பாதம்  
பற்றுடனே மித்ரவிந்தை பிடித்துவிடும் பாதம்

பத்மரேகை சங்குரேகை அலங்கரிக்கும் பாதம்  
பலராமரின் தம்பியை தாங்குகின்ற பாதம்  
நந்தகோபர் யசோதை நெஞ்சில் கொண்ட பாதம்  
நன்மையளாம் லக்குமணை நெற்றி தொடும் பாதம்

கிருஷ்ண ஜெயந்தியன்று வீடுதோறும் வரையப்படும் பாதம்  
பக்தருள்ள வீடுதோறும் வலையவரும் பாதம்  
பார்த்தனுக்கு தேர்செலுத்தி வெற்றிதந்த பாதம்  
பாசமிகு பத்ரையும் பணிந்து தொழும் பாதம்

சரணென்று வந்தவரை வாழவைக்கும் பாதம்  
ஞானம்பெற பணிந்தவரை ஆளவைக்கும் பாதம்  
எப்போதும் நினைப்பவரை குழந்தையென்னும் பாதம்  
பதினாறாயிரம் மனைவிகளின் பாசம்பெற்ற பாதம்  
மாய கண்ணனவன் பாதம் .....

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 

ஓம் நமோ நாராயணாய
IMG-20220531-WA0004.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages