பல பிராமண குடும்பங்கள் தற்போது உள்ள சூழலில் சம்பிரதாய முறைகளை கடைப்பிடிக்க முடிவதில்லை. பிராமண பாஷைகள் கூட கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வருகின்றன். பெரியவர்கள் (அதாவது தற்போது ஐம்பது வயது தாண்டியவர்களின் தாய், தந்தை, தாத்தா, பாட்டி) காலமும் ஓய்ந்து விட்டால் நாம் சற்றேனும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் வலுவிழந்து விடும் நாட்கள் வெகுதூரம் இல்லை. வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் புரோகிதர்களுக்கும் பல விவரங்கள் சட்டென தெரிவதில்லை. 'ஆத்துக்கு போய் ஃபோன் பண்றேன்' என்பது அவர்களின் விடைகளாக இருக்கிறது.
விஷயத்திற்கு வருவோம். நம் வீட்டில், நம் உறவினர் வீடுகளில் நடக்கும் உயிர் இழப்புகளின் போது நாம் அனுசரிக்க வேண்டிய துக்க நாட்கள் அல்லது 'இறப்பு தீட்டு' விவரங்கள் நமக்கு தெரிவதில்லை. துக்கம் கேள்விப் படுகிறோம், செல்ல முடியாவிட்டாலும் தீட்டு முறைகளையாவது பின்பற்ற முடியாமல் இருந்துவிடுகிறோம் என்பது வேதனை.
கீழ்க்கண்ட இறப்பு தீட்டு விவரங்களை நாம் குறித்துக் கொள்வோம்.
1) புருஷன், மனைவிக்கு பத்து நாட்கள் விவரம்:
a) தாயார், தகப்பனார்.
b) பெரிய, சிறிய-தகப்பனார், சித்தி, பெரியம்மா.
c) அப்பா வழி-தாத்தா, பாட்டி.
d) தகப்பனாரின் இளையாள், மூத்தாள்.
e) சகோதரன், சகோதரின் மனைவிகள்.
f) தனது விவாஹம் ஆகாத பெண்.
2) ஸ்திரீகளுக்கு மட்டும் வரும் மூன்று நாள் தீட்டு:
a) பூனூல் போட்ட சகோதரன்
b) பூனூல் போட்ட மருமான்
c). பூனூல் போட்ட சகோதரியின் பிள்ளை.
d). சகோதரி.
3). புருஷன், மனைவிக்கு மூன்று நாட்கள் தீட்டு விவரம்:
a) தாயார் வழி தாத்தா பாட்டி
b). மாமா, மாமி
c). மாமனார், மாமியார்
d). தாய்வழி சித்தி, பெரியம்மா
e). தகப்பன் வழி
f). பூனூல் போட்ட மருமான்
g). பூனூல் போட்ட பெண் வழி பேரன்.
h). விவாகமான பெண், சகோதரிகள்.
I). ஸ்வீகாரமாகியிருந்தால் பெற்ற தாயார், தகப்பனார்.
j). பையனை ஸ்வீகாரமாக கொடுத்திருந்தால் அந்த பையன்
4). புருஷன், மனைவிக்கு ஒன்றரை நாள் (ஒரு பகல், இரண்டு இரவு அல்லது இரண்டு பகல், ஒரு இரவு) தீட்டு விவரம்:
a). அத்தையின் பிள்ளை, பெண்
b). மாமாவின் பிள்ளை, பெண்
c). தாயின் சகோதரியின் பிள்ளை, பெண்.
d). சகோதரியின் பெண்.
f). சகோதரியின் கல்யாணமான பெண்.
g). தகப்பனார் வழி, சித்தப்பா பெரியப்பாவின் பெண், பெண் வயிற்றுப் பேத்தி.
h). மூன்று வயதுக்கு மேல் உபநயனம் ஆகாத மருமான், பெண் வயிற்று பேரன்.
5). ஸ்த்ரீகளுக்கு மட்டும் தனியாக வரும் ஒன்றரை நாள் தீட்டு:
a). தகப்பனார் வழி-சித்தப்பா, பெரியப்பா
b). தாயின் சகோதரிகள்
c). மாமா, அத்தை
d). மேலே கண்ட நால்வருடைய பிள்ளை, பெண்கள்
e). தகப்பனார் வழி-தாத்தா, பாட்டி
f). தாய் வழி தாத்தா, பாட்டி
g). சகோதரியின் பெண்.
மேற்கண்ட விவரங்கள் அனைவரையும் அடைய விரும்பினால் உங்கள் நண்பர்களை tag செய்யுங்கள். நீங்கள் செய்யும் உபகாரமாக இருக்கும்.
இன்னொரு நாள் (விரைவில்), பிறப்பு விருத்தி தீட்டு விவரங்களை பார்ப்போம்.
THANKS TO Baskar Raman Sathya
தீட்டு உருவானதுக்கு காரணம் பர்சனல் hygiene தானே தவிர வேறு காரணம் இல்லை.
சுத்தத்தில் ஆன்மீகமும் அடங்கி உள்ளது. நாம் காணும் யாவும் நம் சங்கல்பங்கள் தான். உடலின் தன்மை பார்வையை, யோசனையை, செயலை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பாதிக்கிறது.
துக்கத்தின் போதோ, உடல்நலக் குறைவின் போதோ யோகாசனங்கள் செய்யக் கூடாது என்னும் அறிவுரை நினைவுகூரத் தக்கது.
ஒரே விதிவிலக்கு சந்தியாவந்தனம் மட்டும் தான். குளிக்க முடியாத சூழ்நிலையில் கூடப் பல்விளக்கித், திலகமிட்டுச் செய்யலாம்.
தர்ம சாஸ்திரம் என்ற புத்தகத்தில் எல்லா விஷயங்களும் அடங்கி உள்ளன