Onion, dried ginger, asafoetida - tamil cheyyul

9 views
Skip to first unread message

K.N.RAMESH

unread,
Sep 21, 2025, 1:07:47 PM (6 days ago) Sep 21
to
"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன! இங்கார் சுமந்திருப்பார் 
இச்சரக்கை மங்காத சீரகத்தை தந்தீரேல் 
தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே" 

எவ்வளவு சரக்குடன் ஒரு அருமையான பாடல் பலசரக்கை வைத்து வாழ்க்கை தத்துவத்தை சொல்லிவிட்டார்

வெங்காயம் ---- (வெண்+காயம்) வெண்மையான உடல்

சுக்கானால் ----- சுக்காக சுருங்கி போனால்
(இஞ்சி காய்ந்தால் சுக்கு)

வெந்தயம் ------ வெம்மையான நெருப்பிலே வேகக்கூடிய உடலால்

ஆவதென்ன - ஆவது ஒன்றுமில்லை

இங்கார் - - - - - - (இங்கு + ஆர்) இப்பூலகில் யார் 

சுமந்திருப்பார் இச்சரக்கை --- அவ்வுடலை வைத்துக்கொண்டிருப்பார்

மங்காத ---- குறைவில்லாத

சீரகம் --- வைகுந்தம்
(சீரகம் - சீர்+அகம் (ஸ்ரீ அகம்) - - - அனைவருக்கும் தாயான மஹாலஷ்மி தாயாரது சீர்மிகு பெரு வீடு) 

தந்தீரேல் ---- நீ கொடுத்துவிட்டால்

ஏரகத்து - - - (ஏர் +அகம்)
உயர்ந்த உலகமான வைகுந்தத்தில் தரிசனம் தரும்

செட்டியாரே! -- அனைத்து (சரக்குகளுக்கும்) செல்வங்களுக்கும் உரியவரான பெருமாளே! 

தேடேன் பெருங்காயம்--- இன்னொரு உடலை நான் தேடமாட்டேன்.
🟨. 🟨 🔥. 🟥
ஓம் நமோ நாாயணாய நமஹா!!!
Reply all
Reply to author
Forward
0 new messages