Friendship & love - do you need to handshake?

18 views
Skip to first unread message

K.N.RAMESH

unread,
Jan 26, 2026, 8:24:59 AM (2 days ago) Jan 26
to
🌞ஒருவர் எச்சிலை மற்றொருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் . 

🌞அது போல ஒருவர் செருப்பை மற்றொருவர் போட்டாலோ, இல்லை துணி மணியை உபயோகித்தாலோ, இல்லை ஒருவர் படுக்கையில் அடுத்தவர் படுத்தாலோ, இல்லை ஒருவர் மாலையை இன்னொருவர் சூட்டிக்கொண்டாலோ, ஒருவர் பாத்திரத்தை இன்னொருவர் உபயோகித்தாலோ, ஒருவர் உள்ளங்கையை இன்னொருவர் உள்ளங்கையால் தொட்டாலோ, அவர்கள் குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் .

🌞திருமணத்தின் பிறகு இருவருடைய மனமும் ஒத்து போக வேண்டும், சண்டை போட கூடாது என்பதால் இருவேறு குடும்பங்களில் இருந்து வந்த இவர்களுடைய குணங்களும் வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக வேண்டும்.

அதற்க்கு தான் திருமண சடங்குகளில் ஒருவர் மாலையை இன்னொருவருக்கு போடுதல் , ஒருவர் எச்சில் செய்த தட்டில் இன்னொருவர் சாப்பிடுதல் , இருவர் உள்ளங்கையையும் சேர்த்து பாணிக்கிரஹணம் என்று பிடித்தல் , ஒருவர் காலை இன்னொருவர் தொடுதல் , ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் துணியை இன்னொருவர் துணியுடன் முடி போடுதல் , என்று இருவருடைய வாசனைகள் , குணங்களை பரிமாறி கொள்ளும் சடங்குகளாக வைத்து இருக்கின்றனர் .

அதனால் மனமும் குணமும் வாசனைகளும் ஒத்துப்போனால் , சண்டைகள் குறைந்து ஒற்றுமையாக வாழ்வார்கள் என்பதே காரணம்.

🌞இதனால் தான் சாஸ்திரங்கள் மஹான்கள் /பக்தர்கள் சாப்பிட்ட எச்சிலை சாப்பிடு , அவர்களுக்கு கால் பிடித்து விடு , அவர்கள் உடுத்திய வஸ்திரத்தை நீ வாங்கிக்கொள், அவர்களுக்கு போட்ட பூமாலையை நீ போட்டு கொள், அவர்கள் கால் பட்ட மண்ணை தலையில் போட்டு கொள் என்றெல்லாம் சொல்வதற்கு காரணமும் இதுவே . 

அப்படியாவது அவர்களிடம் உள்ள தெய்வீகத்தில், குணங்களில் ,வாசனைகளில் கொஞ்சமாவது அழுக்கு படிந்த நமக்கு தப்பி தவறி வந்து விடாதா?? என்ற காரணமே.

🌞கோயில்களில் இறைவனுக்கு சாத்திய புஷ்பங்கள் வஸ்திரங்கள் பிரசாதங்கள் நமக்கு கொடுக்கும் காரணமும் இதுவே🌞

எனவே ஆபீஸிலோ, வெளி இடங்களிலோ ஒருவருடன் ஒருவர் பழகும் போது இவைகளை நாம் செய்யாதிருத்தல் நமக்கு நல்லது . FRIENDSHIP வேறு சுத்தமாக இருத்தல் வேறு , இரண்டையும் போட்டு குழப்பி கொள்ளாமல் பழகவேண்டும் .

🌞உபநிஷத்துகளில் மிக பெரிய தவங்கள் செய்த ஒரு மகரிஷி இன்னொருவர் செருப்பை போட்டு கொண்டதினால் இன்னொரு பிறவி எடுத்தார் .

🌞நாரதர் சாதாரண கீழ் குலத்தில் இருந்து நாரத மகரிஷி ஆனதிற்கு காரணம், ரிஷிகள் சாப்பிட்ட எச்சில் பிரசாதத்தை அவர் உட்கொண்டு வந்ததே .இது போல எண்ணற்ற உதாரணங்கள் நமது சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளது .

🌞தண்ணீருக்கு இந்த வாசனைகளை போக்கும் சக்தி உண்டு . அதனால் தான் ரிஷிகள் ஒரு கமண்டலுவில் அருகில் தண்ணீர் வைத்து கொள்வார்கள் . 

ஒரு திருடனின் வாசனையை மோப்பம் பிடிக்கும் நாய் , தொடர்ந்து சென்று அவன் போகும் பாதையை கண்டுபிடிக்கிறது . ஆனால் அவன் ஒரு நீர் நிலையை தாண்டிவிட்டால் அந்த நாயினால் அவனுடைய வாசனைகளை கண்டுபிடிக்க முடிவதில்லை . தண்ணீருக்கு அத்தனை சக்தி உண்டு . அதனால் தான் பெரியோர்கள், மஹான்கள் அடிக்கடி குளித்துக் கொண்டே இருக்கின்றனர் ,

எனவே சுத்தமாக தொட்டு தொட்டு கலந்து பழகாமல் இருக்க முடியவில்லை என்றாலும் அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பது தவறு ஏதும் இல்லை . நமக்கு மற்றவர்களிடம் இருந்து வரும் கெட்ட வாசனைகளில் , குணங்களை கொஞ்சமாவது குறைக்க முயற்சி செய்யலாம் .

நன்றாக நினைவில் கொள்ளுங்கள் ஒருவரிடம் நாம் மிகவும் நெருக்கமானவராக காட்டி கொள்வதற்காக , வித்யாசம் பார்க்கவில்லை என்பதை காட்டிக்கொள்வதற்காக , நம் சுத்தத்தை விட்டு கொடுத்து , எச்சிலை சாப்பிட்டு , தொட்டு தொட்டு பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை .

சுத்தம் வேறு, ஒருவரிடம் அன்பாக பழகுவது என்பது வேறு...!!!
Reply all
Reply to author
Forward
0 new messages