Overstep pariharam - chappal donation

11 views
Skip to first unread message

K.N.RAMESH

unread,
May 24, 2024, 4:45:21 AMMay 24
to
தாண்டினால் விளையும் தோஷங்கள்!

எவரையும் மிதித்தலோ, தாண்டுதலோ கூடாது. 

அறியாமையால் எவரையாவது மிதித்து விட்டால் இதற்குப் பிராயச்சித்தமாக “சிவசிவ”, “நாராயண, நாராயண” போன்ற இறைநாமாவைக் கூறவேண்டும். 

பரமாத்மாவின் ஒரு பிரதிபலிப்பான ஆத்மா அனைத்து ஜீவன்களிலும் உறைவதால் இறைவன் வாழும் கோயிலே ஒவ்வொரு ஜீவனின் சரீரமாகும். 

ஆறறிவு படைத்த மனிதனிடம் பரமாத்மாவின் பிரதிபலிப்பு அதிக விகிதாசாரத்தில் அமைந்திருப்பதால், ஒருவரை மிதிக்கும் போது அந்தத் தேகத்தில் உறையும் இறைவனை சிவசிவா, நாராயணா, முருகா, ஐயப்பா என்று விளித்து அர்ச்சிக்கின்றோம்.

அர்ச்சனையின் பலன்
நம் பெயரில் கோயிலில் செய்கின்ற அர்ச்சனை என்பது நாம் செய்கின்ற தவறுகட்குப் பிராயச்சித்தங்களாகவே அமைகின்றன. 

அறியாமல் செய்த பிழைகள் ஓரளவு இத்தகைய அர்ச்சனை வழிபாடுகளால் நீங்குகின்றன. 

ஆனால் சற்குரு பெயரில் அல்லது இறைவன் பெயரில் நாம் செய்கின்ற அர்ச்சனையே நம் பிராத்தனைகளைச் தாங்கிச் செல்கின்றன.

தாண்டலுக்குப் பிராயச்சித்தம்:

பன்னிரெண்டு வயது வரையுள்ள குழந்தைகளைத் தாண்டினால் “சிவ,சிவ, நாராயணா“ என்று துதித்து அவர்களைத் தொட்டு வணங்க வேண்டும்.

12 வயதுக்கு மேலுள்ள ஒரு பெண்ணைத் தாண்ட நேரிட்டால்,

"ஓம் சஞ்சல ஸ்ரீபூப்ரஸ்த்யை 
நம "
என்று சொல்லி அந்த பெண்ணைத் தொட்டு வணங்க வேண்டும். 

கணவன் தன் மனைவியைத் தாண்ட கூட இம்மந்திரத்தைக் கூறி மனைவியைத் தொட்டு வணங்கியே ஆகவேண்டும்.

ஒருபெண் ஆணைத் தாண்ட நேரிட்டால்

"ஓம் அபஸ்ரீ பால ஸமநாயை நம"

என்று துதித்து அந்த ஆணைத் தொட்டு வணங்க வேண்டும். 

இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் தன்னையும் அறியாமல் பிறர்மீது கால் பட்டாலும் சாபங்கள், தோஷங்கள் வருவதுண்டு. 

இதற்குப் பரிகாரமாக
            
1. “ஓம் சஞ்சலஸ்ரீபூப்ரஸ்த்யை நம :”
            
2. “ஓம் அபஸ்ரீ பாலஸமநாயை நம :”
என்று இரண்டு மந்திரங்களையும் சில நிமிடங்களாவது துதித்து, தியானித்து உறங்க வேண்டும். 

இதனால் உறக்கத்தில் பிறர் மீது கால்படுவதால் விளையும் சாபங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். 

இதன் காரணமாகவே நம் பெரியோர்கள் குருபாத பூஜை  என்ற ஓர் அற்புதமான பூஜை முறையாகப் பெரிய மகான்களின் திருப்பாதங்களைத் தாங்கும் பேறு பெற்ற பாதணிகளைத் தானம் செய்கின்ற நல்வழியைக் காட்டியுள்ளனர். 

ஏழைகளுக்குக் காலணிகளைத் தானமாக வழங்குவதால் பிறர்மீது கால்பட்ட குற்றங்கள், தெய்வ நிந்தனை, பெரியோர்களை ஏசுதல், மஹான்களைத் தூஷித்தல் போன்ற மாபெரும் குற்றங்களுக்குப் பிராயச்சித்தங்களாக 
இந்த காலணி தானம் அமைந்துள்ளது. 

காலணி தானமும் யானை சவாரியும்!

போ ஜராஜன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கலையார்வமும் ரசனையும் மிக்க அவன் தன் தலைநகரான தாரா நகரை கலைகளின் சிகரமாகவே வைத்திருந்தான். கவிஞர்கள், தத்துவ மேதைகள் அவன் ஆட்சியில் பெரு மதிப்பு பெற்று சிறந்து விளங்கினர். ஒரு நாள் அவன் அவையிலிருந்த அரசவைப் புலவர்களில் ஒருவர் அரண்மனை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

சூரியன் சுட்டெரிக்கும் பகல் அது. தான் செல்லும் வழியில் ஒரு பாரமிழுக்கும் வயதான தொழிலாளி செருப்பு அணியாத காலுடன் நெல் மூட்டைகள் அடங்கிய வண்டியை இழுத்து செல்வதை பார்த்தார். அதை கண்டு மனம் பொறுக்காத புலவர், தனது காலனியை கழற்றி அந்த தொழிலாளிக்கு கொடுத்தார்.

“ஐயா… எனக்கு காலணியை கொடுத்துவிட்டு நீங்கள் எவ்வாறு நடந்து போவீர்கள்? வெயில் உங்களை மட்டும் வருத்தாதா என்ன? எனக்கு காலணி வேண்டாம். உங்கள் இரக்க குணத்துக்கு நன்றி!” என்றார் அந்த முதியவர்.
“ஐயா பெரியவரே நான் சும்மா தான் நடந்து செல்கிறேன். என்னால் இந்த வெயிலை தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் இந்த முதுமையிலும் பாரமிழுக்கும் உங்களால் முடியுமா? எனவே ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறி காலணியை அவரிடம் கொடுத்துவிட்டு பதிலை கூட எதிர்பார்க்காமல் உடனே அங்கிருந்து அகன்று சென்றுவிட்டார்.

அப்போது பட்டத்து யானையுடன் வந்த அரண்மனை பாகன், ஆஸ்தான புலவர் ஒருவர் செருப்பின்றி வெறுங்காலுடன் நடந்து வருவதை பார்த்து அவரை யானை மீது ஏற்றிக்கொண்டு அரண்மனை நோக்கி சவாரியை தொடர்ந்தான்.
அது சமயம் எதிரே ரதத்தில் வந்த போஜராஜன், “என்ன புலவரே… உங்களுக்கு எப்படி யானை சவாரி கிடைத்தது?” என்றான் ஆச்சரியத்துடன்.

“எல்லாம் தானத்தின் மகிமை தான் மன்னா” என்றார் புலவர் பதிலுக்கு.

“அப்படி என்ன தானம் செய்தீர்கள்?”
“என் பழைய காலணியை வெயிலில் நடக்க சிரம்மப்பட்ட ஒரு முதியவருக்கு தானமளித்தேன். அதன் பலனாக எனக்கு பட்டத்து யானை மேல் அமர்ந்து சவாரி செய்யும் பாக்கியம் கிடைத்தது மன்னா!” என்றார்.
போஜனும் தானத்தின் பலனை உணர்ந்து ஆச்சரியப்பட்டான்.

உங்களுடைய ஜென்ம நட்சத்திரம்,நீங்க பிறந்த நட்சத்திரத்திலிருந்து 4 வது நட்சத்திரம், 6வது நட்சத்திரம், 9வது நட்சத்திரம் நாள்களில் காலணி தானம் செய்தால் நல்லபலன் கிடைக்கும்

ஜென்மநட்சத்திரத்தில் செய்யும் காலணி தானம் புகழை தரும் ஏழ்மையை நீக்கும்
        
4வது நட்சத்திரத்தில் காலணி தானம் செய்தால் பகைமை நீங்கும், காரிய சித்தியாகும்,தடைகள் விலகும்.

6வது நட்சத்திரத்தில் காலணி தானம் செய்தால் நோய் நிவர்த்தியாகும் , போட்டி பந்தயங்களில் வெற்றி பெறலாம், கடன் தீரும்

9வது நட்சத்திரத்தில் காலணி தானம் செய்தால் சொத்து கிடைக்கும், பிரிந்த உறவுகள் இணையும்.

வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி தேய்பிறை காலத்தில் வருகிற துவிதியை, திருதியை, பஞ்சமி திதி,
அட்சய திரிதி திதி ,அக்னி நட்சத்திர நாட்கள்
முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாட்களில் காலணி தானம் செய்யலாம்.
Reply all
Reply to author
Forward
0 new messages