மருத்துவமனையில் இறுதி மூச்சி வாங்கும் அப்பா கேட்கிறார் மகனிடம்: "என்னால் மறக்க முடியாத ஒன்று.. நீ ஒன்பதாவது படிக்கும்போது கணக்கு பரீட்சை மார்க்ன்னு 90 காண்பிச்சே.. எனக்கு நம்பிக்கையே இல்ல.. ஒன்பதுடன் நீ பூஜ்யத்தை சேர்த்து விட்டதாக குற்றம் சாற்றினேன்.. நீ உறுதியாக மறுத்தாய் ..."
"அப்பா என்ன இதெல்லாம்? முப்பது வருஷ கதையை சொல்லிண்டு?"
"இல்ல ரொம்ப நாளா என்னை உறுத்தற விஷயம் இது... நான் உன்னை அடிச்சு கேட்டும் நீ பூஜ்ஜியத்தை சேர்க்கலை என்ற சொல்லிண்டிருந்தே.. என்னால் அதை நம்பவும் முடியல.. இப்ப கேக்கறேன் உண்மையை சொல்லு? பூஜ்யத்தை சேர்த்தது நீ தானே?"
"நீங்க எப்ப கேட்டாலும் என் பதில் ஒண்ணுதான்பா.. நான் பூஜ்யத்தை சேர்க்கவேயில்லை.."
" ஆனா நீ 90 மார்க் வாங்கற மாணவன் இல்லையே?'"
"சரிப்பா.. நீங்க நினைத்ததும் சரி.. நான் சொன்னதும் சரி"
"அது எப்படி?'
"நான் சேர்த்தது. 9. ஐ.."
😳😳😳😳