Courtesy : Sri. Balasubramaniam vaidyanathan
இன்று எழுதியது - ஸுந்தரகாண்டம் ஸர்கம் 13 - 51 முதல் 60 ஶ்லோகங்கள்.
பலருக்கு பின்கண்ட ஶ்லோகம் தெரிந்திருக்கும்.
‘நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை
நமோஸ்து ருத்ரேந்த்ரயமானிலேப்யோ நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ய:’
இந்த ஶ்லோகத்துடைய பூர்வோத்தரம் இன்றைக்கு.
ஆஞ்சனேயர் ஸமுத்ரத்தைத் தாண்டி இலங்கையில் ஸீதையைத்தேடுகிறார். புஷ்பகவிமானம், ராவணனுடைய அந்தப்புரம், பானபூமி என எல்லாவிடத்திலும் தேடியபின்னும் ஸீதையைக் காணவில்லை. இந்த சூழ்நிலையில் மிகுந்த விரக்தியுறுகிறார். அப்போது எதிர்மறையாக யோசிக்கிறார். (இந்த விருத்தாந்தத்தைச் சொன்னதும் என் மனைவி என்னைப் போன்றே negative ஆகவே யோசிப்பதாக confirm செயதுவிட்டாள்)
‘ஸீதை இறந்திருப்பாள் அல்லது ராக்ஷஸர்களால் புசிக்கப்பட்டிருப்பாள். ஸீதையைக் காணவில்லை என்ற தகவலை ராமனிடம் கூறினால் அவன் இல்லாமலாவான், அதைப் பார்த்து லக்ஷ்மணன் இல்லாமலாவான். ப்ராதாக்கள் நஷ்டமானதை அறிந்து பரதன் மரிப்பான். பரதனைப்பார்த்து ஶத்ருக்னன் இல்லாமலாவான். புத்ரர்கள் இறந்ததைக் கண்டு கௌஶல்யை, ஸுமித்ரை, கைகேயி இறப்பர். ராமன் சென்றதைக்கண்டு நன்றியுடைய ஸுக்ரீவன் ஜீவனை விடுவான். அதனால் ருமை ஜீவனை விடுவாள். வாலியைப்பிரிந்த துக்கத்திலுள்ள தாரை ராஜன் இறந்தவுடன் இறப்பாள். அங்கதனும் மரணமடைவான். இதனால் எல்லா வானரர்களும் அடித்துக்கொண்டு இறப்பர். மொத்தமாக இக்ஷ்வாகு குலமும், வானரர்களும் நாசமாவர். அதனால் இங்கேயே வானப்ரஸ்தனாக ஆவேன், இல்லை அக்னியில் ப்ரவேசிப்பேன்’ ( 13 ம் ஸர்கம் 55 ஶ்லோகங்கள் புலம்பல் தான்) என்றெல்லாம் பலவாறு யோசித்துப்பின் ‘மீண்டும் ஸீதை கிட்டும்வரை மீண்டும் மீண்டும் லங்கையைத் தேடுவேன்’ என்று முடிவு செய்து அசோகவனத்தைப் பார்த்து அதனுள் போக விழைகிறார்.
“வஸுக்கள், ஆதித்யர்கள், அஶ்வினிதேவர், மருத்-களை நமஸ்கரித்து ராக்ஷஸர்களின் சோகத்தை வளர்த்துபவனாகச் செல்வேன். அனைத்து ராக்ஷஸர்களை ஜெயித்து ‘தபஸ்வியிடத்தில் ஸித்தியைப் போல’ இக்ஷ்வாகுகுல நந்தினியை ராமனுக்குத் திரும்ப அளிப்பேன்” என்று கூறுகிறார். (56,57)
वसून्रुद्रांस्तथाऽदित्यानश्विनौ मरुतोऽपि च।।5.13.56।।
नमस्कृत्वा गमिष्यामि रक्षसां शोकवर्धनः।
जित्वा तु राक्षसान् सर्वानिक्ष्वाकुकुलनन्दिनीम्।।5.13.57।।
सम्प्रदास्यामि रामाय यथा सिद्धिं तपस्विने।
அதன்பிறகு முஹூர்த்தநேரம் த்யானித்து எழுந்தவுடன் ஹனுமான் கூறியது நம் துவக்கத்தில் கண்ட ஶ்லோகம். (59)
नमोऽस्तु रामाय सलक्ष्मणाय देव्यै च तस्यै जनकात्मजायै।
नमोऽस्तु रुद्रेंद्रयमानिलेभ्यो नमोऽस्तु चन्द्रार्कमरुद्गणेभ्यः।।5.13.59।।
“லக்ஷ்மணனுடனான ராமனுக்கு, தேவியான அந்த ஜனகாத்மஜாவிற்கு (ஜனகனின் மகள்) நமஸ்காரங்கள் ஆகட்டும். ருத்ரன், இந்திரன், யமன், அனிலன் (வாயு) இவர்களுக்கு நமஸ்காரங்கள் ஆகட்டும். சந்திரன், அர்க்கன் (ஸூர்யன்), மருத்கணங்கள் இவர்களுக்கு நமஸ்காரங்கள் ஆகட்டும்.”
இவ்வாறு நமஸ்காரங்களைச்செய்து விட்டு அசோகவனத்தில் நுழையத் திட்டமிடுகிறார்.
#ராமம்பஜேஶ்யாமளம்