Soordas story

8 views
Skip to first unread message

K.N.RAMESH

unread,
Sep 13, 2025, 1:46:07 AM (13 days ago) Sep 13
to
ஸ்ரீ சூர்தாஸ்
தில்லி அருகே சிஹி என்ற கிராமத்தில் 1478 இல் அந்தப் பார்வையற்ற குழந்தை பிறந்தது.
பிறவிக்குருடர் ஆதலால் அவரை 
வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள். 
தாய் தந்தை சகோதரர்கள் ஆதரவின்றி
ஆறு வயதில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சூர் தாஸ் மெதுவாக நடந்து உத்திர பிரதேசத்தில் 
ப்ரஜ் என்கிற ஊருக்கு வந்தார்.. 
கண்ணன் பிறந்த மதுரா அருகில் உள்ளது இந்த ப்ரஜ் கிராமம்.
சிறு வயதில் பெற்றோராலும் மற்றோராலும் புறக்கணிக்கப்பட்ட சூர் தாஸ் தனிமையில் தான் வளர்ந்தார். 
ஒரு நாள் அவர் உட்கார்ந்திருந்த தெருவில் சிலர் கிருஷ்ண பஜனை செய்து கொண்டு சென்றது காதில் விழுந்தது.
” எனக்கும் கிருஷ்ணன் மேல் பாட வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? 
ஏன் முடியாது 
ஒரு நாள் என்னையும் கிருஷ்ணன் பாட வைப்பான்” என்ற நம்பிக்கையோடு மெதுவாக அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார்.
கூட்டத்தில் ஒருவன்
”டேய் ஏன் எங்களை தொடர்ந்து வருகிறாய்?””
‘கிருஷ்ணன் பாட்டு நீங்கள் பாடுவது பிடிக்கிறது. எனக்கும் உங்களை மாதிரி பாட ஆசையா இருக்கு”
”சரி வா” என்று அழைத்து சென்றது கூட்டம்.
இரவு வந்தது. 
சாப்பிட ஆகாரம் கொடுத்தார்கள். 
எதற்கு இந்த குருட்டு பையனை அழைத்து போகவேண்டும். அவனால் உபத்திரவம் தானே வந்து சேரும்” என எண்ணிய அந்த பக்தர் கூட்டம் மறுநாள் காலை அவரை அங்கேயே விட்டு விட்டு சென்றது.
ஒரு மரத்தடியில் அமர்ந்து மனதில் தோன்றிய கற்பனை வளத்தை உபயோகித்து இட்டு கட்டி கிருஷ்ணன் பாடல்களை பாடினார் சூர்தாஸ். 
அருகே ஒரு பெரிய ஏரி. பிருந்தாவனம் மதுரா போவோர் அங்கே வந்து மரத்தடியில் தங்கி ஓய்வெடுப்பார்கள். 
இவரின் பாட்டை கேட்டு வருவோர் போவோர் கொடுக்கும் ஆகாரமும்
கிராமத்து பெண்கள் கொடுக்கும் உணவே பசியை போக்கியது.
மக்கள் பேசும் பேச்சுகள் காதில் விழுவது தான் உலக ஞானம்.
உன் பெயர் என்ன என்று கேட்டால் 
சூர் என பதிலாய் சொன்னான்.
சூர் என்றால் குருடன் என அர்த்தம்
அதனையே தன் பெயராக ஆக்கிக் கொண்டார்.
பதினாலு வயதில் 
இந்த குருடான பாலகனிடம் ஒருவர் ஏதோ கேட்க
இவர் சொன்னது நடந்தது.
மக்களுக்கு குறி சொல்ல சொல்ல
இவர்
சொன்னது நடந்தது. 
ஊர் மக்கள் அவரை போற்றி பாதுகாத்தனர். 
”இவர் ஒரு அதிசய பிறவி” என்று அந்த ஊரே கொண்டாடி நம்பிக்கை வைத்தனர்.
மாலை நேரத்தில் 
நேரம் கிடைக்கும் நேரத்தில்
கிருஷ்ணனை பற்றி இவர் பாடும் பாடலை கேட்க தனி கூட்டமும் வந்தது.
அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனின் சிறு பையன் ஒருநாள் வழி தவறி எங்கேயோ
காணாமல் போய் விட்டான்.
பஞ்சாயத்து தலைவன் திண்டாட சிலர் சூர் தாஸிடம் கேட்கலாமே என சொன்னவுடன்
சூர் தாஸ் 
முன் வந்து நின்று என் பையனை கண்டுபிடிக்க உபாயம் கூறுங்கள் என்றார்.
சூர் தாஸ்
மனதில் தோன்றிய ஏதோ ஒரு இடத்தின் பெயரை சொல்லி அங்கே போய் பார் உனக்காக அழுகிறான் என்று சொல்ல, 
அந்த பஞ்சாயத்து தலைவர் சூர்தாஸ் சொன்ன இடத்தில் சென்று பார்க்க அந்த பையன் அழுதுகொண்டு நின்றான். 
பஞ்சாயத்து தலைவர்
கிருஷ்ணர் அருளால் சூர் தாஸுக்கு ஒரு கூரை போட்ட ஆஸ்ரமம் அமைத்துக் கொடுத்தார்.
ஊர்க்காரர்கள் ஒரு தம்புராவை சூரதாஸிடம் கொடுத்தார்கள்.
அதை உபயோகித்துக் கொண்டே ஏதோ ஒரு சுருதியில் அதை சேர்த்து கூடவே கிருஷ்ணரை பாடுவார் சூர்தாஸ். 
சிஷ்யர்கள் பலர் சேர்ந்தார்கள். அவர்கள் தான் சூர் தாஸ் பாட பாட எழுதி வைத்தவர்கள்.
கிருஷ்ணரை பற்றி பாடிய
சுமார் எட்டாயிரம் பாடல்கள் கிடைத்துள்ளது.
கண்ணன் சூர்தாஸரை காண வந்து,
அவர் முன் அமர்ந்து
சூர்தாஸரே என்னை பாருங்கள்
என்றார்.
கண்களை திறந்து கிருஷ்ணரை பார்த்து கண்ணா கண்ணா என 
மகிழ்ச்சி அடைந்தார் 
கிருஷ்ணர்
சூர்தாஸரே என்ன வரம் வேண்டும் என கேட்க
சூர்தாஸரோ என்னை மீண்டும்
குருடனாக்கி விடுங்கள்
தங்களை கண்ட கண்கள் இனி யாரையும் பார்க்கவே கூடாது என வரம் கேட்க கிருஷ்ணரும்
ஆகட்டும் என்றார்.
சூர்தாஸர் மீண்டும் குருடரானார்.
ஒரு இரவு கண்ணன் சூர் தாசை 
”சூர் தாஸ் இங்கிருந்து கிளம்பி நீ பிருந்தாவன் வா. நான் அங்கே உனக்காக காத்திருக்கிறேன்.” என்றார். 
சூர் தாஸ் தனியாக பிருந்தாவன் கிளம்புகிறேன் என சொன்னவுடன்
சிஷ்யர்கள் வருந்தினார்கள்.
”ஏன் எங்களை விட்டு போகிறீர்கள். நாங்கள் என்ன தப்பு, அவமரியாதை செய்தோம்?”
”அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் பிருந்தாவனம் செல்ல வேண்டும்
கிருஷ்ணர் அழைத்துள்ளார்" என்றார்.
வழியெல்லாம் கண்ணனை பாடிக்கொண்டே செல்கிறார். 
கிராமங்களில் மக்கள் சூர்தாஸரை இங்கேயே இருங்கள் என கேட்க
”என்னை கிருஷ்ணர் பிருந்தாவனம் அழைத்துள்ளார்" என்று ஒரே பதிலை அனைவரிடமும் சொல்கிறார்.
சூர்தாஸின் கால்கள் பிருந்தாவனத்தை நோக்கியே நகர்கின்றன. 
போகும் வழியில் காட்டில் ஒரு பெரிய பாழும் கிணறு ஓர் அடி எடுத்து வைத்தால் விழுந்து விடுவார்.
அவரை ஒரு சிறுவன் தடுத்து நிறுத்தினான்.
"யாரப்பா நீ"யென சூர்தாஸ் கேட்க
"மாடு மேய்க்கும் சிறுவன்" என சிறுவன் கூறியதும்
கிருஷ்ணா கிருஷ்ணா என பாடுகிறார். 
"என்னை பிருந்தாவனத்தில் கொண்டு சேர்த்து விடு கிருஷ்ணா" என கூறிய சூர்தாஸை
"எனக்கு மாடு மேய்க்கும் வேலை இருக்கிறது
பிருந்தாவன சாலை வரை வருகிறேன்.
இந்த 
குச்சியின் முனையை பிடித்து கொள்ளுங்க என சொன்ன சிறுவனிடம்
உன் கையை கொடுக்காமல்
குச்சியின் முனையை பிடிக்க ஏன் சொல்கிறாய் என சூர் தாஸ் கேட்டவுன்
சிரித்த சிறுவன்
மாடுகள் ஆபத்தில் சிக்கி கொண்டால் அப்படியே குச்சியை விட்டு விட்டு ஓட ஏதுவாக இருக்கும்
என்றார்.
குச்சியை பிடித்தவண்ணம் பேச்சு கொடுத்து வந்தவர் அந்த சிறுவன் கிருஷ்ணன் என்பதை ஊர்ஜிதம் செய்தார்.
பிருந்தாவனம் சாலை வந்துவிட்டது 
இப்படி செல்லுங்க என்று சொன்ன கண்ணனின் கையை தட்டுதடுமாறி பிடிக்கிறார் சூர்தாஸர்.
கையை விடுங்கள் என கூறி ஓடிய கண்ணனிடம்
என்றோ உன்னை என் மனதில் சிறை வைத்துவிட்டேன் என கூறிய சூர்தாஸை மகிழ்ச்சியோடு
கட்டிக்கொண்டார் கிருஷ்ணர்.
பிருந்தாவனம் வந்து சேர்ந்த சூர்தாஸ் 
பிருந்தாவனத்திலேயே கண்ணன் மேல் பாடல்கள் இசைத்தவாறு வாழலானார். 
அப்போது ஒருநாள் அவரைத் தேடிவந்தார், அவரது பாடல்களின் சிறப்பை அறிந்த இன்னொரு கவிஞரும் ஆசார்யருமான வல்லபாச்சாரியர். 
மதுராஷ்டகம் உள்ளிட்ட அற்புதமான கிருஷ்ண பக்தித் தோத்திரங்களை எழுதியவர்
வல்லபாச்சாரியர்
சூர்தாஸுக்கு மந்திரோபதேசம் செய்து வைத்தார். 
கோவர்த்தன் என்ற இடத்தில் உள்ள கண்ணன் ஆஸ்ரமான ஸ்ரீநாத் கோயிலில் அவரைப் பிரதான பாடகராகவும் நியமித்தார் வல்லபாச்சாரியார். 
அவரது எட்டுப் பிரதான சீடர்களில் சூர்தாஸ் முதன்மைச் சீடராகக் கொண்டாடப்படலானார். 
சூர்தாஸின் இசைப் பெருமை அறிந்து இசை ரசிகரான அக்பர், தாமே அவரைத் தேடிவந்து அவர் பாட்டைக் கேட்டதாகவும் வரலாறு சொல்கிறது. 
சூர்தாஸ், கண்ணனை மட்டுமே உறவாகக் கொண்டு, அந்த உறவின் ஆதாரத்திலேயே வாழ்வை நடத்தி இறுதியில் (1573 இல்) கண்ணனுடனேயே கலந்து விட்டார்.
Reply all
Reply to author
Forward
0 new messages