who are pundits? - Vidura

6 views
Skip to first unread message

K.N.RAMESH

unread,
May 27, 2024, 8:41:54 AMMay 27
to
*விதுரர் நீதி - பகுதி 3*

*யார் பண்டிதர்கள்*

விதுரர் தனது அறிவுரைகளை மேலும் தொடங்குகிறார். திருதராஷ்டிரனிடம் பண்டிதர்கள் என்றால் யார் என்றும் , முட்டாள்கள் என்றால் யார் என்றும், அவர்களுக்கான இலக்கணம் எப்படி இருக்க வேண்டும் , கீழ் வருமாறு கூறுகிறார். இதை படிக்கும் போது விதுரர் படித்தவர்கள் தான் பண்டிதர்கள் என்று எங்குமே கூறவே இல்லை. கீழ் வரும் நான்கு லட்சணங்கள் முதலாவதாக பண்டிதருக்கு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

1 தன்னைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டவர்கள்

2 தனக்கு தெரிந்ததை செயலாற்ற முயற்சி செய்பவர்கள்,

3 அதை செயலாற்ற முயற்சி செய்யும் போது வரும் தடங்கல்களை தாங்கும் பொறுமை உள்ளவர்கள்

4 செய்யவேண்டிய காரியங்களை தரும சாஸ்திரம் சொன்ன வழியிலேயே செய்ய முயற்சிப்பவர்கள்

தன்னை பற்றி ஒருவன் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் தன்னை பற்றி தாழ்வாகவோ அல்லது உயர்வாகவோ நினைத்துக் கொள்ளக் கூடாது தன்னால் என்ன செய்யமுடியும் எதை செய்ய முடியாது எனது பலம் என்ன என்று ஒருவன் நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு தனக்கு தெரிந்ததை செய்ய முயற்சி செய்யவேண்டும். தனக்கு எல்லாம் தெரிந்திருந்தும் அதை செய்யாவிட்டாலும் அவன் பண்டிதனாக மாட்டான்

மேலும் ஒரு காரியத்தை செய்ய முற்படும் பொது இடையில் வரும் தடங்கல்களை தாங்கும் சக்தியும் ஒருவனுக்கு இருக்க வேண்டும் அவ்வாறு ஒரு செயலை செய்யும் போது வரும் தடங்கல்களை தாண்ட அவன் தரும் வழியையே அவன் மேற்கொள்ள வேண்டும் எந்த குறுக்கு வழியையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் மேல் சொன்ன நான்கும் பண்டிதரின்முதல் லட்சணங்கள் என்று விதுரர் கூறுகிறார்

விதுரர் அடுத்து கீழ் கண்ட நான்கு காரியங்களை செய்பவன் பண்டிதன் என்றுகூறுகிறார் 

1 முன்னோர்கள் செய்த நல்ல காரியங்களை தொடருபவன் 

2 முன்னோர்கள் விட்டு விட்ட கெட்ட காரியங்களை தொடராமல் விட்டு
விடுபவன்

3 நாஸ்திக புத்தியை விட்டு விடுபவன் 

4 சாஸ்திரத்தில் சிரத்தையுடன் இருப்பவன்.

நமது முன்னோர்கள் எந்த காரியங்களை நல்லது என்று செய்து வந்தார்களோ அதை தொடர்ந்து செய்து வர வேண்டும் உதாரணத்திற்கு நீராடி உணவருந்துதல். அடுத்து நமது முன்னோர்கள் எதை செய்ய கூடாது என்று ஒதுக்கி வைத்தார்களோ அதை நாம் செய்யக் கூடாது என்று முதல் இரண்டு காரியங்களாக விதுரர் கூறுகிறார்

அடுத்து நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத பிரம்மம் போன்ற விஷயங்கள் இல்லை என்ற நாஸ்திக புத்தி இருக்கக் கூடாது என்றும் சாஸ்திரத்தில் எப்போதுமே சிரத்தையுடன் இருப்பவன் பண்டிதன் என்று கூறி முடிக்கிறார்.

அடுத்து கீழ்கண்டவைகளில் இருந்து விலகி இருப்பவனே பண்டிதன் என்று
கூறுகிறார்

1. அதிககோபம் 

2. மிக்க மகிழ்ச்சி

3. கர்வம் 

4. வெட்கம்

5. திமிர்

6. துரபிமானம் (தானே எல்லோராலும் மதிக்கப் படுபவன் என்று நினைப்பவன்

ஆக பண்டிதன் என்பவன் தனது திறமையை மறைத்துக் கொண்டு சிறு பாலனை போல் இருக்க வேண்டும் என்று கொள்ளலாம் யாரை
பார்த்தும் அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பவர்கள் பண்டிதர்கள் ஆக மாட்டார்கள்

ரைத்வர் என்ற மகாச்சாரியர்
ஒருவர் இருந்தார். அப்போது இருந்த ஜன சுருதி என்ற மன்னனுக்கு பிரம்ம ஞானத்தை தவிர மற்ற ஞானம் வந்து விட்டது அவனுக்கு பிரம்ம
ஞானத்தை சூட்ட இரண்டு ரிஷிகள் முடிவு செய்து இரண்டு பக்ஷிகளாக ராஜன் இருக்கும் இடத்திற்கு மேலே பறந்து வந்தனர் அந்த ராஜனுக்கு பக்ஷிகளின் பாஷைகள் தெரியும்

அப்போது ஒரு பறவை தனது நிழல் அந்த ராஜன் மீது படுமாறு சென்றது. அதற்கு மற்றொரு பறவை அதனிடம் அந்த ராஜன் தரும சிந்தனை உள்ளவர் உன்னை எரித்து விடுவான் ஒதுங்கி செல் என்று சொன்னது அதற்கு அந்த பறவை அவன் அவ்வாறு செய்ய அவன் என்ன ரைத்வனோ என்று கேட்டது விட்டு சென்று விட்டது. ராஜனுக்கு தான் ரைத்வன் இல்லை ஆதலால் உண்மையான ரைத்வனை தேட ஆரம்பித்தான்

பண்டித கோஷ்டிகள், பணக்கார கோஷ்டிகள், வியாபார கோஷ்டிகள்

என்று பல வித
மனிதர்களிடையேயும் ரைத்வர் கிடைக்கவில்லை கடைசியில் ஒரு வண்டி சக்கரத்தின் அருகே கிழிந்த உடைகளுடன் அழுக்காக இருக்கும் ஒருவன் தான் ரைத்வன் என்று வேலைக்காரன் சொல்ல அந்த ரைத்வனை அழைத்து வருமாறு ராஜன் ஆணை இட்டான் 

அந்த ரைத்வன், அழைக்க சென்ற சேவகனிடம் தனக்கு ராஜா என்ற
ஒருவரை யார் என்றே தெரியாது தான் வர மாட்டேன் என்று சொல்லிவிட்டான் ராஜன் ஒரு தேரை அனுப்பி அழைத்து வருமாறு ஆணை இட்டான் அதற்கு அந்த ரைத்வன் தான் வருவதாகவே சொல்லவில்லை மேலும் தனக்கு காலும் வலிக்கவில்லை ஆனாலும் வருவதற்கான எண்ணமே இல்லை என்றும் வர இயலாது என்றும் சொல்லிவிட்டான்

பிறகு மன்னன் தானே வந்து வணங்கியவுடன் அதற்கு நீ பறவை சொல்லி வந்தாயோ என்று கேட்க அவனே ரைத்வன் என்று அறிந்து ஞானத்தை புகட்டுமாறு கேட்டுக் கொண்டான். ரைத்வரும் ராஜனுக்கு பிரம்ம ஞானத்தை சூட்டினார் என்று சரித்திரம்

எனவே உருவத்தை வைத்து யாரையும் எடை போட முடியாது என்று கொள்ளலாம்.

யார் மூடர் - விதுர நீதி தொடர்ச்சி நாளை

தொடரும்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.🙏
ஓம் நமோ நாராயணாய 🙏
[15/10, 10:00] Varadan CEG Trichy: ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏

*விதுர_நீதி*_
*பகுதி 4*

யார் மூடர் - 

எந்த காலத்துக்கும் பொருந்தும் படியாக விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு மஹா பாரதத்தில் விதுரர் மூலம் சொல்லப் பட்டுள்ளது. இது உறங்காமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கு கூறப் பட்டிருந்தாலும் எல்லோரும் கேட்டு பயனடையுமாறு வியாச மகரிஷியால் நமக்கு அருளப் பட்டது நமது பெரும் பாக்கியம்.

அடுத்து மூடன் என்றால் யார் என்று கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.

1.கேள்விச் செல்வம் இல்லாதவன் அதாவது எதையுமே நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துக் கொள்பவன்
மூடன் ஆவான். நல்லோர்கள், படித்தோர்கள் சொல்வதை கேட்பவனே பண்டிதன் ஆவான்.

2. வீண் ஜம்பம் அடிப்பவன் அதாவது கையில் ஒன்றுமே இல்லாமல் 18 மாடி வீடு கட்டுவேன் என்று ஜம்பம் அடிப்பவன் மூடன் .

3. முயற்சி எதுவும் செய்யாமல் தானாக கிடைக்கும் என்று நினைப்பவன் எதையுமே செய்யாமல் நமது அறிவு, திறமையால் தானாகவே எல்லாம் கிடைக்கும் என்று நினைப்பவன் மூடன் ஆவான் .

4. தனது செயலை விட்டு விட்டு பிரர்த்தியார் செய்யும் தொழிலே நல்லது என்று நினைப்பவன் 
அதாவது தான் செய்யும் தொழிலை தாழ்வாக நினைத்து பிறர் செய்யும் தொழில் சிறந்தது என்று நினைப்பவன் மூடன்.

5. நண்பருக்கும் உறவினருக்கும் துரோகம் நினைப்பவன்
மூடன்.

 6. தன்னை விட பலசாலியை பகைவனாக நினைப்பவன் அதாவது
தன்னை விட பலம் மிகவும் அதிகமாக உள்ளவனிடம் யுத்தம் செய்ய
நினைப்பவன் மூடன் ஆவான் .

7. எதிலும் சந்தேகம் கொள்பவன் தேவையற்ற சந்தேகத்தை கொள்ளாதவனே அறிவுள்ளவன் ஆவான். 

8. சீக்கிரம் செய்ய வேண்டிய காரியத்தை தள்ளி போட்டுக்கொண்டே
இருப்பவன், எந்த காரியத்தையும் அந்தந்த நேரத்தில் செய்து முடிப்பதே புத்திசாலிதனமாகும். நேரம் தவறி செய்யும் காரியங்கள் அந்த காலத்திற்கு ஒப்பாமல் பயனற்று போகும்.

9.தெய்வங்களுக்கு பூஜை அர்ச்சனை மற்றும் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்யாதவன் 
மூடன்.

10. அழையாமல் வருபவன் மற்றும் தேவையில்லாமல் பேசுபவன்.

11.பிறர் குற்றத்தை பற்றி பேசுபவன், - அதாவது தான் மீது உள்ள
சீற்றங்களை பற்றி நினைக்காமல் பிறர் பற்றி குற்றம் பேசுபவன். சாஸ்திரம் படி மூன்று பேருக்குத்தான் குற்றத்தை கேட்கும் அதிகாரம் உண்டு., பகவான், மகாலட்சுமி தாயார், மற்றும் தரும தேவதை ஆகும்.
தங்களுக்கு 
இடப்பட்ட
வேலையை மட்டும் செய்பவனே அறிவுள்ளவன் ஆவான். 

12. தன்னால் எதுவம் செய்யமுடியாது என்று தெரிந்தும் கோபித்து
கொள்பவன், 
அதாவது கையாலாகதவன் கோபித்துக் கொள்வது அர்த்தமே இல்லை. பேசாமல் இருப்பதே நல்லது

 மேலே சொல்லப்பட்ட விஷயங்களில் இருந்து நமக்கு மூடனுக்கு உள்ள குணங்கள் எதாவது தப்பி தவறி நம்மிடம் உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம்.

யார் மூடர்கள் ?தொடர்ச்சி

 நாளை தொடரும்.....

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
ஓம் நமோ நாராயணாய 🙏
[17/10, 17:24] Varadan CEG Trichy: ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏

*விதுர_நீதி*
*பகுதி 6*

*விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்*

எந்த இரண்டுகளை பற்ற வேண்டும், எந்த இரண்டுகளை விட வேண்டும் - *விதுர நீதி* *தொடர்ச்சி*:

அடுத்ததாக இரண்டுகளைப் பற்றி கீழ் வருமாறு விதுரர் விவரிக்கிறார்.

1. இந்த இரண்டு பேரும் பாம்பின் வாயில் அகப் பட்ட தவளை போல அழிந்து விடுவர்.

சத்ரியன் ராஜாவாகவும் ராணுவ தலைவனாகவும் இருந்து விட்டு வரவழைத்த யுத்தத்திற்கு போக மாட்டேன் என்று சொல்பவன்.

பிராமணனாக இருந்து ஊர் ஊராக சென்று தொண்டு புரியாதவன். (பிராம்மண குலமே அழிந்து விடும்)

2. இந்த இரண்டு விஷயங்களை செய்பவர்கள் கொண்டாடப் படுவர்.

கெட்டவன் என்று தெரிந்து அவனை அர்ச்சிக்காதவன் அல்லது அவனை நல்லவன் என்று புகழாதவன்

மற்றவர்களை துன்புறுத்தும் வார்த்தைகளை உபயோகிக்காதவனை கொண்டாடுபவன்.

3. இந்த இரண்டு பேர்களுக்கும் சுய புத்தி கிடையாது.

மற்ற ஸ்திரிகளின் வஸ்துகளுக்கு (பொருட்களுக்கு) ஆசை பட்டு அதை அனுபவிக்க, வாங்க ஆசைப்படும் ஸ்திரிகள்.

ஒருவனைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே மற்றவர்கள் சொன்னார்கள் என்று உண்மையை தெரிந்துகொள்ளாமல் அவனைப் பற்றி புகழ்பவர்கள்.

4. இந்த இரண்டும் முள் போல குத்திக் கொண்டே இருக்கும்.

ஒருவனது கையில் காசு இல்லை என்றாலும் பலவற்றை வாங்க வேண்டும் என்று ஆசைபட்டால் அந்த ஆசை

தனக்கு சக்தி அல்லது பதவி இல்லை என்று தெரிந்தும் கோபப்பட்டால் அந்த கோபம்.

5. இந்த இரண்டு கர்மாக்களை செய்பவன் விளங்குவதில்லை.

எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் கிரகஸ்தன் (இல்லத்தரசன்)

வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் சந்நியாசி.

6. இந்த இரண்டு பேரும் சொர்க்கத்தை விட உயர்ந்த இடத்தில நிற்கிறார்கள்.

பொறுமை உள்ள பணக்காரன்  
தரித்திரனாக இருந்தும் தன்னிடம் உள்ளதை தானம் செய்பவன்.

7. இந்த இரண்டு செயல்களும் ஏற்று கொள்ளப் படாது

ஏற்பதுக்கு தகுதி உள்ளவனுக்கு கொடுப்பது
ஏற்கும் சக்தி உள்ளவனுக்கு கொடுக்காமல் இருப்பது

8. இந்த இரண்டு பேரும் கழுத்தில் கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்குபவர்கள்.

தனம் இருந்தும் ஈயாதவன் (சம்சாரக் கடலில் மூழ்கி விடுவான். )

 உலகத்து கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாதவன். (திருடு, கொள்ளை அன்று பல விதங்களில் மாட்டிக் கொண்டு விடுவான்.)

9. இந்த இரண்டு பேரும் சூரிய மண்டலத்தை தாண்டிய உயர் கதியை அடைவார்கள்.

யோகம் மற்றும் வைராக்கியம் உள்ள சந்நியாசி
போர்களத்தில் இறந்த வீரன்.
 
இவ்வாறு விதுரர் இரண்டுகளைப் பற்றி அழகாக விவரிக்கிறார். அடுத்து மூன்றுகளைப் பற்றி என்ன விவரித்தார் என்று அடுத்த அத்தியாத்தில் பார்ப்போம்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
ஓம் நமோ நாராயணாய 🙏
[18/10, 17:01] Varadan CEG Trichy: ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏

🌸 *விதுர நீதி 7*🌸*

*விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்*

தெரிந்து கொள்ள வேண்டிய *மூன்றுகள்*- *விதுர நீதி தொடர்ச்சி*

விதுரர் மேலும் தொடர்கிறார். கீழ்கண்ட மூன்று பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்று திருதராஷ்டிரனிடம் வலியுறுத்துகிறார்.

1. மனிதர்கள் மூன்று வகைப்பட்டவர்கள்
*தாழ்ந்தவன்* - தான் வாழ பிறரை கெடுப்பவன்.
*மத்திமன்* - தானும் வாழ்வான் பிறரையும் வாழ விடுவான். *உத்தமன்* - தான் கெட்டாலும் பிறரை வாழ வைப்பான். 

இந்த காலத்தில் உத்தமனாக வாழ்வது மிகக் கடினம். குறைந்த பட்சம் நாம் *மத்திமனாக* வாழலாம்.

2. இந்த மூவருக்கும் தனித்து சொத்து கிடையாது
*மனைவி*, *வேலைக்காரன்* மற்றும் *பிள்ளைகள்* மனைவியின் சொத்து கணவர் வசமே இருக்கும். பிள்ளைகள் சொத்து தகப்பனையே சேரும். (இந்த காலத்தில் கணவனையோ தகபனையோ சார்ந்து இருக்காதவர்களுக்கு இது பொருந்தாது. ) 

3. இந்த மூன்று குற்றம் நம்மை கெடுத்தே தீரும்.
*பிறர் சொத்துக்கு ஆசைப்படுதல்*. *பிறன் மனை நோக்குதல்* மற்றும் *நமக்கு நன்மை நினைத்தவனை விட்டு விடுதல்*. மேற்கண்ட குற்றங்கள் உடம்புக்கு உடனடியாக நன்மை தந்தாலும் ஆத்மாவுக்கு நாசம் தந்து விடும்.

4. இந்த மூன்று தோஷங்களை விட்டு விட வேண்டும்.
*காமம், குரோதம் மற்றும் பேராசை*. இந்த மூன்றும் இருந்தால் *நரகத்தின்* வாசல் நமக்காக திறந்தே இருக்குமாம்.

5. இந்த மூன்றை விட நண்பனை எதிரியிடம் இருந்து காப்பதே மேல்.
*நல்ல வரம்*, *ராஜ்யம்* மற்றும் *பிள்ளை பேரு*. நண்பன் எதிரியிடம் மாட்டிக் கொண்டால் மேல் சொன்ன மூன்று நன்மைகளை நாம் கேட்டு அடைவதை விட அவனை காத்தல் மிகவும் சிறப்பானது என்று கூறுகிறார்.

6. இந்த மூன்று பேரை எந்த காலத்திலும் விட்டுவிடக் கூடாது
*பக்தன்*, *வேலைக்காரன்*, நம்மிடம் *சரண் அடைந்தவன்*.

இவ்வாறு நமக்கு இருக்க வேண்டிய சிறப்புகளை மூன்று மூன்றாக அழகாக அடுக்கி வைக்கிறார். அடுத்த அத்தியாயத்தில் நான்குகள் பற்றி என்ன சொன்னார் என்று பார்ப்போம்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
ஓம் நமோ நாராயணாய 🙏
Reply all
Reply to author
Forward
0 new messages