தமிழ் கேட்கும் இரு பெரிய செவியான்
வஞ்சத்தில் ஒன்றானை, நெஞ்சத்தில் நின்றானை மாசற்றானை
வலம்வந்து கனியொன்றைப் பெற்றானை, வயிற்றானை,துதிக்கை யானை
விஞ்சித்தான் நின்றிட்ட கஜமுகனை வென்றானை மாற்றிட்டானை
வித்தானை மறையானை குறையானை வள்ளியினை வெருட்டி னானை,
கஞ்சத்தாள் பதத்தானை கதித்தோடும் மதத்தானை கருணை யானை
கமண்டலத்தைக் கவிழ்த்தானை காவிரியை விரித்தானை, கவிதை யானை
தஞ்சம்தான் என்றவரைத் தள்ளானை புரப்பானை தாங்குவானை
தமிழ்கேட்கும் இஇருபெரிய செவியானைப் பாடுகிறேன் காக்க நன்றே!
அடியே பெருங்கதியே
செய்யும் தொழிலெல்லாம் ஜெயம் சேரும் தொழிலாக
உய்யும் வழி முந்தச் செய்யும் ஊக்கம் நிறைவாக
மெய்யே இனி வாழ்வில் நனி மேவி வளம் கூட்ட
அய்யா கணபதியே உனதடியே பெருங்கதியே!
எண்ணும் கிழமையும்
ஒரு தந்தம் இருதிணை மும்மதம் நால்வாயோ(டு)
ஓங்கைந்து கரங்கொண்டவன்
ஒப்பரிய ஆறுதலை ஏழுதலை முறையெட்டும்
ஒய்யாரம் தருகின்றவன்
தெருவெங்கும் நவமாக அருள்பொங்கும் பதியாகத்
தேடியே வருகின்றவன்
செழித்தோங்கும் இன்பத்தைக் கொழித்தோங்கச் செய்பவன்
சித்தாந்தம் ஆகின்றவன்
தெருள்கூடும் ஞாயிறு திங்கள் அக்கினியெனத்
திகழ் மூன்று கண்கொண்டவன்
தேடரும் மறைச் செவ்வாய் அற்புதன் ஞானமெனும்
தேனருவியாழ நதியான்
அருள்வெள்ளி யங்கிரி சிறுபிள்ளை சனியினால்
அற்றதலை மற்றுடையவன்
ஆனைமுகன் கணபதி ஞானவிழி நாயகன்
ஆதாரமாய்க் காக்கவே
உயர உயர
திரிபு ரமமர் புரியச் சிவனும் செலும்பொ ழுதினில் கணபதி
திருவ டிதனைத் தொழுதி டவிலை ரதமொ ருமுளை முறிந்தது
பெருகும் தனது தொழிலைப் பிரமன் தொடங்கும் பொழுது மறந்திடப்
பிழைகள் படவே எடுபடும் உயிர் கெடுக ணமெனப் பெருகின
கருணை நிறையும் உமைதன் மகனைக் கனிவொடு குறை யிறைஞ்சிடக்
கடிய தடையும் நொடியில் பொடியக் கருதும் செயலும் முடிந்தது
உருவக் களிறு பெரிய வயிறு கணப தியருட் பெருமையை
உணர உணர உணரும் உயிரும் உயர உயர உயருமே!
ஆதாரமாய்க் காக்கவே!
எந்தவோர் தெய்வத்தைத் தொழுவதால் செய்கைகள்
இடரின்றி நிறைவேறுமோ
எந்தவோர் தெய்வத்தின் தோற்றத்தில் ஓங்காரம்
எண்ணத்தில் மறைகூறுமோ
எந்தவோர் தெய்வதம் சுழுமுனை நாடியில்
எழுயோக நிலை தேறுமோ
எந்தவோர் தெய்வத்தின் அருளினால் குண்டலினி
இறைஞான ஒளிகூடுமோ
எந்தவோர் தெய்வதம் அண்டபகி ரண்டங்கள்
எல்லாமும் தம்வயிற்றுள்
ஏற்றுப் புரக்குமோ இன்னருள் சுரக்குமோ
எல்லாமுமாய் இருக்குமோ
அந்தவோர் தெய்வதம் ஆதிப்பரம்பொருள்
ஆனந்தமாய்க் காக்கவே
ஆனைமுகன் கணபதி ஞானவிழி நாயகன்
ஆதாரமாய்க் காக்கவே!
அவன் தானே மூலம்!
ஆச்சரியம் அவனுருவம், ஆனந்த வெள்ளம்
அவனிருக்கும் தாமரையோ அன்பர்களின் உள்ளம்
பேச்சரிய ஓங்காரப் பிரணவத்தின் ஜோதி
பிறக்காத காலத்தே பிறந்திட்ட நீதி
வீச்சுடைய குண்டலினி பாம்புதவழ் உந்தி
விரியண்டம் ஆதாரம் யாவுமவன் தொந்தி
தீச்சுடராய்க் காணுகிற ஒளிவடிவத் தோற்றம்
ஜீவர்களின் இருள்போக்க எளிதாகும் ஏற்றம்
உள்ளிருக்கும் பூரணத்தின் உண்மையத னாலே
உட்காரும் மோதகமும் உள்ளங்கை மேலே
வெள்ளெருக்கம் பூவதுவும் விநாயகனைச் சாரும்
வேண்டாத பொருளுக்கும் புகழ்வந்து சேரும்
கள்ளிருக்கும் மலரென்ன, அறுகம்புல் போதும்
கடல் என்றும் அவன்நாத மந்திரத்தை ஓதும்
புள்ளிருக்கும் வடிவேலன் தந்தைசெவி அன்று
புகன்றதெது, கணபதியின் மந்திரமே நன்று!
பாசத்தை ஏந்தியுயிர் படைக்கும் ஒரு கரமே
பக்குவமாய் அங்குசத்தால் அழிக்கும் ஒரு கரமே
நேசத்தால் அபயமெனக் காக்குமொரு கரமே
நிறைஞான அடிகாட்டி அருளுமொரு கரமே
மாசக்தி துதிக்கையினால் மறைக்குமொரு கரமே
மாண்புடனே ஐந்தொழில்கள் யாவும் அவன் வரமே
ஓர்சக்தி யாய்த்தன்னுள் உருள்கின்ற ஞாலம்
ஒவ்வொன்றுள் ளுமிருக்கும் அவன்தானே மூலம்!
அவர்தான் எங்கள் பிள்ளையார்?
யார் யார் யார்
யார் இவர் யார்?
யானைத் தலைகொண்ட
ஆண்டவன் யார்?
பானை வயிறுள்ள
பகவான் யார்?
பெருச்சாளி ஏறும்
பெரியவர் யார்?
திருச்சி மலையில்
திகழ்பவர் யார்?
தாய்தந்தை தானே
சகலமெனப்
போய்வலம் செய்த
புண்ணியன் யார்?
முந்திக் கனிபெற்ற
முன்னவன் யார்?
சந்திக்குச் சந்தி
சார்பவர் யார்?
காகமாய்க் கமண்டலம்
கவிழ்த்தவர் யார்?
வேகமாய்க் காவிரி
விரித்தவர் யார்?
அவர்தான் எங்கள் பிள்ளையார்
அவருக்கிங்கே வேறிணையார்?
மிழ் கேட்கும் இரு பெரிய செவியான்
வஞ்சத்தில் ஒன்றானை, நெஞ்சத்தில் நின்றானை மாசற்றானை
வலம்வந்து கனியொன்றைப் பெற்றானை, வயிற்றானை,துதிக்கை யானை
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
செம்மொழித் தெய்வம்
எம்மொழித் தெய்வமே, செம்மொழி நாயகா
எங்களின் ஒலிநாதனே
எத்தனை துன்பங்கள் எத்தின எத்தின
எத்தியே அழிக்கவென்றே
நம்பியே தேவர்கள் நாடியே வேண்டிட
நம்பி, நீ தெம்பளித்தாய்
நாசமே செய்தவன் நாசமே ஆகிட
நல்லருள் நீபுரிந்தாய்
பம்பியே மேலெழப் பார்த்திடும் மாகடல்
பக்கமே கோயில் கொண்டாய்
பகழியின் பாடலில் அகமகிழ்ந்திடுகிற
பாலசுப் ரமண்யனே
அம்மவோ உன்னருள் அழகினைக் கண்டிட
ஆயிரம் கண்வேண்டுமே
அலைகடல் கவிதையை அனுதினம் ரசிக்கின்ற
அறுமுகா , காக்க காக்க!
முருகன் காவடிச் சிந்து
காளி இளஞ்சக்தி கன்றவன் -அருள்
காட்டிடும் மூலமாய் நின்றவன் - உயர்
கான மாமயில் ஏறியே உல கேழும் ஏழும் நலம்பெற வலம்
சென்றவன் நமை வென்றவன்
சூரனை வென்று தொலைத்தவன்- என்றும்
தூயவர் நெஞ்சில் நிலைத்தவன் -உயர்
நாரணன்திரு மால்மருகனாய் நாடும் அன்பரை வாழவைத்திடும்
நலத்தவன் செந்தில் தலத்தவன்
வள்ளியை ஈர்த்தவன் வேடன் - அந்த
வள்ளல்நம் செந்தமிழ் நாடன் -உயர்
வெள்ளியங்கிரி துள்ளுமால்விடை வள்ளலுமறை கொள்ளவாயினன்
சீடன் செங் கோடன்
சுப்பிர மணியன் தீரன் - எழில்
தோயும் இசையின் ரீங்காரன் - சொல
ஒப்பிலாவகை செப்புமாமொழி எப்புறத்திலும் முற்படச்செயும்
வீரன் எழில் மாரன்
கண்ணின் ஒளிநீ
கண்ணின் ஒளி நீ, பசும் புல்லின் நகை நீ, உளம் கண்டிடும் காட்சியும் நீ
பண்ணின் இசைநீ, வளர் மண்ணின் மணம் நீ, வியன் பாரிலே அசைவெலாம் நீ
எண்ணும் பொருள்நீ, தயை பண்ணும் அருள்நீ, சொலும் எண்னிக்கை இலாதவன்நீ
தண்ணம் தமிழ் நீ, தமிழ் சாரும் சுவைநீ, கவிதந்திடும் முருகையைனே
--
--
முருகன் - பாகம் 2
பழநி மலைக்குப் பாத யாத்திரை செய்பவர்களுக்காக எழுதப்பட்ட வழிநடைப் பாடல்
நட நட நட
நடநட நடநட நடநட
நமது தெய்வ வேலைப் போற்றி
நட நட
கடந்து செல்லும் பாதை தன்னில்
கண்ணாய் ஒளியைத் தருபவன்
கந்தன் வேலன் குகனைப் பாடிக்
காட்டில் மேட்டில் நட நட
தடங்கல் இல்லை தளர்ச்சியில்லை
சலிப்பும் மலைப்பும் இல்லையே
சாமி முருகன் துணையிருக்கச்
சற்றும் இல்லை தொல்லையே!
சந்தம் பாடித் தமிழைப் பாடி
சரவணனைப் போற்றியே
சிந்தையெல்லாம் அவன்நி னைவில்
சேர்ந்து பொங்கி நட நட
வாட்டுகின்ற பனியும் வாசம்
மல்கும் பன்னீராகவே
கூட்டு கின்ற குமரன் பாதம்
குழைந்து போற்றி நட நட
பேசப் பேச வாய் மணக்கும்
பேதம் நெஞ்சில் இல்லையே
மாசு தோன்றா நெஞ்சில் முருகன்
மஹிமை கூடும் நடநட
முத்தும் மணியும் பொன்னும் கொண்டு
முன்னிழைத்த போதிலும்
அத்தன் முருகன் அதனைப் பாரான்
அகத்தைப் பார்ப்பான் நடநட
நட நட நட நட நட நட
நமது தெய்வ வேலைப் போற்றி
நட நட
உனக்கென்ன நீ சிரிப்பாய்... .. .. ..
உனக்கென்ன நீ சிரிப்பாய் - முருகா
ஒவ்வோர் அசைவும் உன்றன் உத்தரவில் நடக்க (உனக்கென்ன)
எனக்குள் அலைகள் எழ, எழுந்து புரண்டு விழ
எழிலார் கடற்கரையில், இருக்கிறாய் அனபர் தொழ.. (உனக்கென்ன)
உன்விழி நோக்கதனை ஒருகோடியால் பகுத்தே
ஒருபங்கால் எனைநோக்கி ஒருமுறைகண் பாராயோ?
என்மொழி மந்திரம் எனவரம் தராயோ? ( உனக்கென்ன)
கொள்கலம் தந்திடு
வெள்ளலைக் கைகளை வீசிய டித்திடும் மேலெதிர் வாரிதியில்
தள்ளிடும் ஓர்கலம் சஞ்சலம் நீங்கியே சார்வதும் எப்படியோ?
உள்ள மெனுங்கடல் ஓங்கும லையிடை உந்துதல் எத்தனையோ?
கொள்கலம் தந்திடு கூட்டிய ணைத்திடு குன்றமர் கோமகனே!
இரத்னகிரி முருகன்
கும்மியடி பெண்ணே கும்மியடி மிகக்
கோலா கலமாகக் கும்மியடி
நம்பித் திருமணிக் குன்றம் உறைந்திடும்
நாதனைப் பாடியே கும்மியடி கும்மியடி
குன்றிருக்கும் அருள் சீலனடி- நித்தம்
குன்றா எழில் கொண்ட கோலனடி
என்றும் நமைக்காக்கும் வேலனடி - இவன்
இரத்ன கிரிவளர் பாலனடி கும்மியடி
சூரப் பகையைத் தொலைத்தவண்டி- என்றும்
தூயவர் நெஞ்சில் நிலைத்தவண்டி
நாரணற் கன்பு மருகனடி- இவன்
நம்மைப் புரக்கும் முருகனடி கும்மியடி
நாவிற் கசைவைக் கொடுப்பவண்டி- இவன்
நம்மை நல் மார்க்கம் விடுப்பவண்டி
பூவை மலரப் புரிபவண்டி - இவன்
புள்ளி மயில்மேல் வருபவண்டி கும்மியடி
செந்தமிழ் பாடும் கவிஞனடி - இவன்
தீங்கவி கேட்கும் சுவைஞனடி
எந்த இடத்திலும் காப்பவண்டி- ஏதும்
இன்னல் வராமலே பார்ப்பவண்டி கும்மியடி
சித்தர் மனத்துறை முத்தனடி- நம்
சிந்த கவர்ந்திடும் அத்தனடி
பத்திக் கிரங்கி வரமருள்வான் - நாம்
பாங்குடன் வாழும் தரமருள்வான் கும்மியடி
பால முருகனைப் போற்றுங்கடி - அவன்
பக்கம் வந்தும்குறை சாற்றுங்கடி
நீலமயி லேறி வந்திடுவான்- என்றும்
நிம்மதி வாழ்வினில் தந்திடுவான்! கும்மியடி
அம்மானை
அம்மானைக் கைக்கொண்ட அண்ணல் அருமைந்தன்
அம்மான் மகளுக் கலைந்தானே அம்மானை
அம்மான் மகளுக் கலைந்தானே யாமாகில்
செம்மான் மகளைத் திருடியதேன் அம்மானை
செம்மான் மகளைத் திருடியதும் முற்பிறப்பில்
அம்மான் மகளாய் அமைந்ததனால் அம்மானை
--
ஊர்த்துவ தாண்டவம்
தந்தாதிமி திந்தாதிமி திந்தாதிமி தந்தே
தனதாந்திமி தனதாந்திமி திந்தா
தந்தேன்வரம் இந்தாபிடி மைந்தாவென முந்தி
தனதாவென உனதேயெனப் பணிவார்க்கருள் மூர்த்தி
அந்தாதிகள் இல்லாதவன் ஆனைகுகன் தந்தை
அறுமாமறை முருகோனொடும் கரிமாமுக னோடும்
ஆடிக்குதி போட்டுக் களி கூடிச் ஜதிபாடி
ஆகாவென ஓகோவென அங்கெங்கினும் ஓட
மந்தாகினி அஞ்சம்புலி மானாகியர் ஆட
வாகாய்த் துடிதாளம் தர மாடும் விழி பார்க்க
வாடாச்சுடர் தீயாடிட பாம்பு படம்காட்ட
வாமம் உறை அருள்நாயகி மாறாநடம் கூட்ட
வந்தேயமர் வானோர்களும் வாழ்ந்தேமெனப் பொங்கி
மாதேவனின் திருத்தாள்பதம் போற்றிப் பணி செய்து
‘மைந்தாதியரோடே நடம் ஆடும் அருள் தேவா
வானோர் சொலும் ஒரு வாசகம் கேட்பா’யெனச் சொன்னார்
இமய மலையில் அடியர் பரவ அருளைப் பொழியும் சிகரமே
இஆயக்கம் அவைகள் தமது கதியில் இஆசையப் புரியும் தலைவனே
அமுது தமிழின் அசைகள் ஆஇசைய அழகு புனையும் புலவனே
அரபுப் புரவி எனவன் நரியை அடைய அருளும் புனிதனே
திமுதக் கடலின்அலையில் விடமும் மிடறில் பொலியும் விடையனே
திகழும் மதுரைப் பதியில் அடியின் வரியை உடைய உடலனே
சமய குரவர் தமிழில் இஆதயக் கனிவு பெருகும் கடவுளே
சபையில் வருக, நடன வகைகள் தருக மனமும் உருகவே!
ஆட்டுவிக்கும் பிரான் ஆடினான் ஆடினான்
அடியவர்க்கா ஆடினான்
அண்டபகி ரண்டங்கள் சுண்டுவிரல் தூக்கியே
ஆனந்தமாய் ஆடினான்
கூட்டுவிக்கும் அருள் நாட்டுவிகும் விழி
கூத்தாடவே ஆடினான்
குண்டலம் மண்டலம் கூடவே ஆடிடக்
கொண்டாட்டமாய் ஆடினான்
ஊட்டுவிக்கும் தயை ஓட்டுவிக்கும் இறை
ஒய்யாரமாய் ஆடினான்
ஒருகோடி பலகோடி சதகோடி கோடியாய்
ஒவ்வொன்றுள்ளும் ஆடினான்
நாட்டிவைக்கும் உயிர் வீட்டிவைக்கும் வகை
நமசிவாயன் ஆடினான்
நானுளேன் எங்கணும் நானுளேன் என்னவே
ஞாலமெலாம் ஆடினான்
*
மண்ணெடுத்தே ஓர்கை பண்டம் ஆக்க-அதை
வாங்கி உடன் ஓர்கை உயிர்தேக்க-ஆடி
மண்ணிலத்திலே வைத்ததுவே காக்க-அதை
வாழவிட்டுப் பின்னொருகை போக்க
பண்ணெடுத்தோர் கை உடுக்கை போட-ஒரு
பக்கத்திலே தீக் கொழுந்து சாட-பிறை
பட்டொளிரும் கங்கைமனம் ஊட- இஆடப்
பாகத்திலே தேவி எழில் கூட
கண்ணெடுத்துத் தேவரெலாம் நோக்க-ஐயன்
கண்களிலே நல்லருளே பூக்க-சுடர்
கற்றைச் சடை பக்கம் எழுந்தார்க்க-அங்குக்
கந்தன் வந்து தந்தை முகம் பார்க்க
விண்டுரைக்க மாட்டாத ஆட்டம்-சிவன்
விதவிதமாய்த் தருவது கொண்டாட்டம்-அது
விண்ணவர்கள் கண்களுக்கோர் ஊட்டம்-அட
விரியுதுபார் நடனமழைப் பாட்டம்
*
எண்ணாத பலகோடி அண்டங்கள் இசைந்தாட
எழுந்தோடி சிவனாடினான்
இங்கிங்கெனாதபடி தங்கித்த தாமென்ன
எங்கெங்கும் நின்றாடினான்
பண்ணாட துடியாட படர்ந்தாடும் எரியாட
படமாடு மரவமாட
பட்டான மதியாட மானாட மழுவாட
பனியாடும் இமயமாட
கண்ணாட இமையாட இடமாடும் களியாட
கதித்தோடும் கங்கையாட
கண்டக் கறுப்பாட புலியாடை கலந்தாடக்
கழலாடக் குழலாடவும்
விண்ணாளும் வேந்தாட, வித்துக்குள் மரமாட
விரிகதிர் பொங்கியாட
வேதாந்த நாயகன் விரிகதிர்த் தாயகன்
விரிவாக நடமாடினான்
*
நட்டநடு ராத்திரி ஆஇடுகாடு சுடுகாடு பேயாட பூதமாட
நடுவிலெரி பிணமாட தீயாட நாற்புறம் நரியாட கூகையாட
சுட்டெரியும் விறகாட பந்தங்கள் தூக்கியே சூழவும் கூளியாட
சுரும்பாடத் துரும்பாடக் கொள்ளிவாய்ப் பிசாசுகள் சுற்றியும் நின்றாடிட
வட்டமிடு புகையாட மண்டையோடுகளாட வானத்தில் மீன்களாட
வடிவற்ற முண்டங்கள் துண்டங்கள் அங்கங்கே வந்துவந்தே யாடிட
இட்டமுடன் சுடலையின் பொடியினைப் பூசியே எம்பிரான் நடமாடினான்
ஏராளமாகவே எடுத்ததை முடிக்கின்ற எம்பிரான் நடமாடினான்.
*
மண்டையோட்டு மாலைகளைக் கண்டமெலாம் போட்டுக் கொண்டு
மாகாளி ஆடிவரும் நேரம்-கண்ட
மாத்திரத்தில் யாவும் விழும் கோரம்-அவள்
வந்தவழி நின்றவழி சென்றவழி அத்தனையும்
மத்தெடுத்துத் தான் கடைந்த செம்மை-அவள்
` வட்டவிழி தீக்கனலின் வெம்மை-கொடும்
சண்டமாருதம் போலக் கண்டபடி துண்டமிட்டுச்
சக்தியவள் ஆடிவரும் கூத்து-அவள்
சட்டச்சட சட்டவெனத் தட்டிமுட்டிக் கொட்டிவரச்
சங்கரனும் தானெழுந்தான் பார்த்து-இடத்
தாளெடுத்து முன்குதித்தான் ஆர்த்து-அங்கே
கொண்டவனும் கொண்டவளும் கூத்தாடும் ஆட்டத்தில்
கொத்துக் கொத்தாய் அத்தனையும் ஆடும்-பனிக்
குன்றுகளும் தாமுருகி ஓடும்-அந்தக்
கொக்கரிப்புக் காய்ச்சலிலே கூத்தாடும் பாய்ச்சலிலே
கொப்புளங்கள் ஆகிவிடும் மேடை-எங்கும்
கோபக் கனல் பெருகும் ஓடை-நீல
கண்டனவன் ஆட்டமெலாம் காளியவள் ஆடிவர
காலமதும் கண்டிடாத போட்டி-நடக்
கலையின் வகைகளெல்லாம் காட்டி-அங்குக்
காளியவள் தன்னுடைய ஆண்டியுடன் ஆடுகையில்
கச்சிதமாய் மாற்றிவிட்டாள் ஆட்டம்-அந்தக்
காளியம்மை கொள்ளவில்லை வாட்டம்
நெடுநெடு நெடுநெடுவரை நடுநடு நடுங்கிட
நிறம்பிரி கதிர்வகை உலகில் ஒதுங்கிட
மடமடமடவென மரங்கள் ஒடிந்திட
வட்டமிட்டுக் கையைக் கொட்டி
எட்டுத் திக்கும் எட்டில் ஒட்டி
ஆடினான் சிவன் ஆடினான்
படபடபடவென வடவை சுருங்கிட
பறபற எரிகணை பறந்து நெருங்கிட
விடுவிடு நுதல்விழி பொறிகள் சொரிந்திட
ஒற்றைக் கையில் தீயைப் பற்றி
மற்றைக் கையில் மானைச் சுற்றி
ஆடினான் சிவன் ஆடினான்
தடதடவெனத் துடி சந்தம் முழங்கிடத்
தண்டிகு டிண்டிகு தாளம் வழங்கிட
கடகட கங்கண நாதம் எழுந்திட
மெட்டு வேதம் திக்கில் எட்ட
எட்டுத் திக்கும் மேகம் கொட்ட
ஆடினான் சிவன் ஆடினான்
முடிமுடியெனப் படம் நாகம் எடுத்திட
மொழிமொழியெனத் தமிழ் கானம் தொடுத்திட
அடிஅடிஅடியென நந்தி புடைத்திட
உச்சி மேலே காலைத் தூக்கி
இச்செயற்கோர் எல்லை ஆக்கி
ஆடினான் சிவன் ஆடினான்
ஊர்த்துவமாய்க் கால்தூக்கி சிவன் ஆடும் போது
உடனாட மாகாளிக் கில்லையது தோது
ஆர்த்தெழுந்த சினமெல்லாம் தாமடங்கிப் போக
அம்மை முகம் நாணத்தால் செம்மைமுகம் ஆக
பார்த்தெழுந்து சிவபெருமான் பக்கத்தில் சென்றாள்
பாகமென அவளுடனே ஒன்றாகி நின்றான்
நேர்த்தியிதைக் கண்டவர்கள் பாதத்தில் வீழ்ந்தார்
நிறைவாழ்வு தாம்பெற்றார், வளமெல்லாம் சூழ்ந்தார்.
ஊர்த்துவ தாண்டவம்
தந்தாதிமி திந்தாதிமி திந்தாதிமி தந்தா
தனதாந்திமி தனதாந்திமி தனதாந்திமி திந்தா
தந்தேன்வரம் இந்தாபிடி மைந்தாவென முந்தி
தனதாவென உனதேயெனப் பணிவார்க்கருள் மூர்த்தி
அந்தாதிகள் இல்லாதவன் ஆனைகுகன் தந்தை
அறுமாமறை முருகோனொடும் கரிமாமுக னோடும்
ஆடிக்குதி போட்டுக் களி கூடிச் ஜதிபாடி
ஆகாவென ஓகோவென அங்கெங்கினும் ஓட
மந்தாகினி அஞ்சம்புலி மானாகியர் ஆட
வாகாய்த் துடிதாளம் தர மாடும் விழி பார்க்க
வாடாச்சுடர் தீயாடிட பாம்பு படம்காட்ட
வாமம் உறை அருள்நாயகி மாறாநடம் கூட்ட
வந்தேயமர் வானோர்களும் வாழ்ந்தேமெனப் பொங்கி
மாதேவனின் திருத்தாள்பதம் போற்றிப் பணி செய்து
‘மைந்தாதியரோடே நடம் ஆடும் அருள் தேவா
வானோர் சொலும் ஒரு வாசகம் கேட்பா’யெனச் சொன்னார்
இமய மலையில் அடியர் பரவ அருளைப் பொழியும் சிகரமே
இயக்கம் அவைகள் தமது கதியில் இசையப் புரியும் தலைவனே
அமுது தமிழின் அசைகள் இசைய அழகு புனையும் புலவனே
அரபுப் புரவி எனவன் நரியை அடைய அருளும் புனிதனே
திமுதக் கடலின்அலையில் விடமும் மிடறில் பொலியும் விடையனே
திகழும் மதுரைப் பதியில் அடியின் வரியை உடைய உடலனே
சமய குரவர் தமிழில் இதயக் கனிவு பெருகும் கடவுளே
சபையில் வருக, நடன வகைகள் தருக மனமும் உருகவே!
ஆட்டுவிக்கும் பிரான் ஆடினான் ஆடினான்
அடியவர்க்கா ஆடினான்
அண்டபகி ரண்டங்கள் சுண்டுவிரல் தூக்கியே
ஆனந்தமாய் ஆடினான்
கூட்டுவிக்கும் அருள் நாட்டுவிக்கும் விழி
கூத்தாடவே ஆடினான்
குண்டலம் மண்டலம் கூடவே ஆடிடக்
கொண்டாட்டமாய் ஆடினான்
ஊட்டுவிக்கும் தயை ஓட்டுவிக்கும் இறை
ஒய்யாரமாய் ஆடினான்
ஒருகோடி பலகோடி சதகோடி கோடியாய்
ஒவ்வொன்றுள்ளும் ஆடினான்
நாட்டிவைக்கும் உயிர் வீட்டிவைக்கும் வகை
நமசிவாயன் ஆடினான்
நானுளேன் எங்கணும் நானுளேன் என்னவே
ஞாலமெலாம் ஆடினான்
*
மண்ணெடுத்தே ஓர்கை பண்டம் ஆக்க-அதை
வாங்கி உடன் ஓர்கை உயிர்தேக்க-ஆடி
மண்ணிலத்தில் வைத்ததுவே காக்க-அதை
வாழவிட்டுப் பின்னொருகை போக்க
பண்ணெடுத்தோர் கை உடுக்கை போட-ஒரு
பக்கத்திலே தீக் கொழுந்து சாட-பிறை
பட்டொளிரும் கங்கைமனம் ஊட- இடப்
பாகத்திலே தேவி எழில் கூட
கண்ணெடுத்துத் தேவரெலாம் நோக்க-ஐயன்
கண்களிலே நல்லருளே பூக்க-சுடர்
கற்றைச் சடை பக்கம் எழுந்தார்க்க-அங்குக்
கந்தன் வந்து தந்தை முகம் பார்க்க
விண்டுரைக்க மாட்டாத ஆட்டம்-சிவன்
விதவிதமாய்த் தருவது கொண்டாட்டம்-அது
விண்ணவர்கள் கண்களுக்கோர் ஊட்டம்-அட
விரியுதுபார் நடனமழைப் பாட்டம்
*
எண்ணாத பலகோடி அண்டங்கள் இசைந்தாட
எழுந்தோடி சிவனாடினான்
இங்கிங்கெனாதபடி தங்கித்த தாமென்ன
எங்கெங்கும் நின்றாடினான்
பண்ணாட துடியாட படர்ந்தாடும் எரியாட
படமாடு மரவமாட
பட்டான மதியாட மானாட மழுவாட
பனியாடும் இமயமாட
கண்ணாட இமையாட இடமாடும் கனியாட
கதித்தோடும் கங்கையாட
கண்டக் கறுப்பாட புலியாடை கலந்தாடக்
கழலாடக் குழலாடவும்
விண்ணாளும் வேந்தாட, வித்துக்குள் மரமாட
விரிகதிர் பொங்கியாட
வேதாந்த நாயகன் விரிகதிர்த் தாயகன்
விரிவாக நடமாடினான்
*
நட்டநடு ராத்திரி இடுகாடு சுடுகாடு பேயாட பூதமாட
கச்சிதமாய் மாற்றிவிட்டான் ஆட்டம்-அந்தக்
காளியம்மை கொள்ளவில்லை வாட்டம்
நெடுநெடு நெடுவரை நடுநடு நடுங்கிட
தந்தேன்கவி இந்தாபிடி மைந்தாயென முந்தி
தமிழாமொரு அமுதாமதைத் தந்தாயெனை எண்ணி
சகமாமிதில் இதுவேயினி சிவசூரிஎன் நாவில்
தந்தாதிமி திந்தாதிமி என்றாடிட வேண்டும்!
அந்தாதியும் சந்தாதியும் இந்தாஎன இன்றே
அரனாரவன் ஜதியேசொலி அவையோர்முனம் வந்தாய்
அடடாஇது நடமேஎனக் கவியேசெய நானும்
தடுமாறிடல் இல்லாதொரு துணையேபுரி வாயே.
பிழை பொறுத்தருள்க!
சிவசூரி.
ஊர்த்துவ தாண்டவம் கவிதையில் சில தட்டச்சுப்பிழைகள் வந்துவிட்டன. சந்தப்பாடல்களில் ஓரெழுத்துப் பிசகினாலும் உதைக்கும். எனவே அதை மீண்டும் முழுமையாக இங்கே இடுகிறேன்.
சந்தக்கவிதையைத் தவறான சந்தத்தில் படித்தாலும் நன்றாக இருக்காது. எனவே இந்தக் கவிதையை இன்று சந்தத்தோடு படித்துப் பதிவு செய்திருக்கிறேன். அந்த ஒலிக்கோப்பை பிறகு இடுகிறேன்.இந்தக் கவிதையை நடனக்கலைஞர் பத்மா சுரமணியம் அவர்கள் வீட்டில் நடந்த கவியரங்கில் நான் படிக்குமுன்னர் சற்றுத் தயங்கினேன். அங்கே நடனமாடும் சிறுமிகள் பலர் இருந்தனர். அவர்களுக்குப் படித்தால் ரசிக்குமா என நினைத்தேன், கவிதை தாளக்கட்டில் அமைந்திருப்பதால் நான் ஒவ்வொரு கவிதைக்கும் சந்தமாறிரிப் படித்த போது அவர்கள் மகிழ்ச்சியாக கொஞ்சமும் தப்பாமல் தாளமிட்டதைப் பார்த்த போது மிகவும் மகிழ்ந்தேன். அந்தக் கவியரங்கத்திற்கு வ.வே.சு தலைமை. ஹரி கிருஷ்ணன் அக்கவியரங்கில் கலந்துகொண்டார்.இலந்தை
ஊர்த்துவ தாண்டவம்
தந்தாதிமி திந்தாதிமி திந்தாதிமி தந்தா
தனதாந்திமி தனதாந்திமி தனதாந்திமி திந்தா
தந்தேன்வரம் இந்தாபிடி மைந்தாவென முந்தி
தனதாவென உனதேயெனப் பணிவார்க்கருள் மூர்த்தி
அந்தாதிகள் இல்லாதவன் ஆனைகுகன் தந்தை
அறுமாமறை முருகோனொடும் கரிமாமுக னோடும்
ஆடிக்குதி போட்டுக் களி கூடிச் ஜதிபாடி
ஆகாவென ஓகோவென அங்கெங்கினும் ஓட
மந்தாகினி அஞ்சம்புலி மானாகியர் ஆட
வாகாய்த் துடிதாளம் தர மாடும் விழி பார்க்க
வாடாச்சுடர் தீயாடிட பாம்பு படம்காட்ட
வாமம் உறை அருள்நாயகி மாறாநடம் கூட்ட
வந்தேயமர் வானோர்களும் வாழ்ந்தேமெனப் பொங்கி
மாதேவனின் திருத்தாள்பதம் போற்றிப் பணி செய்து
‘மைந்தாதியரோடே நடம் ஆடும் அருள் தேவா
வானோர் சொலும் ஒரு வாசகம் கேட்பா’யெனச் சொன்னார்
......
ஆடல் வல்லான் கோட்டம்
அந்தக் கவியரங்கில் தானா ஹரி அவர்கள்
"துள்ளலான தாளமோடு தேவிநித்ய நர்த்தனம்
தொலைத்ததே வெறுப்பெலாம் மனதுமகிட மர்த்தனம்" பாடினார்?
அங்கே நடனமாடும் சிறுமிகள் பலர் இருந்தனர். அவர்களுக்குப் படித்தால் ரசிக்குமா என நினைத்தேன், கவிதை தாளக்கட்டில் அமைந்திருப்பதால் நான் ஒவ்வொரு கவிதைக்கும் சந்தமாறிரிப் படித்த போது அவர்கள் மகிழ்ச்சியாக கொஞ்சமும் தப்பாமல் தாளமிட்டதைப் பார்த்த போது மிகவும் மகிழ்ந்தேன். அந்தக் கவியரங்கத்திற்கு வ.வே.சு தலைமை. ஹரி கிருஷ்ணன் அக்கவியரங்கில் கலந்துகொண்டார்.
திருக்கயிலாயப் பதிற்றந்தாதி
கண்டேன் கயிலைமலை, கண்டவுடன் ஆனந்தம்
கொண்டேன், உளத்திலெங்கும் கும்மாளம் - அண்டமெலாம்
ஆட்டத்தில் ஓட்டும் அகிலாண்ட நாயகனின்
தோட்டத்தில் நானோர் துளி
துளியேனும் மானசத்தின் தூநீரை உண்டால்
ஒளியேறும் , தீவினைகள் ஓடும் - தெளிவாகச்
சிந்திப்ப தெல்லாம் சிறப்பாம், சிவன்பாதம்
வந்திப்ப தொன்றே வகை
வகையறியேன், வாழும் வழியறியேன், நல்ல
தகையறியேன், என்தலைவா, என்னை - மிகையாக
வாழட்டும் என்றா வரவழைத்தாய்?, நின்னருளால்
சூழட்டும் ஞானச் சுடர்
சுடர்வெண்மைத் தூமணியே, தோன்றும் கயிலை
இடம்கொண்டு வாழும் இறையே- படங்கொண்ட
பாம்பணியும் தேவா, பராபரனே, உன்பதமே
நாம்புணையாக் கொண்டோம் நலம்
நலமாக உன்முகங்கள் நாற்புறமும் காணா
நிலைவைத்தாய் ஈதென்ன நீதி?- வலமாக
வாராத போதும் மகாதேவா, உன்தோற்றம்
தாராயோ நீவந்து தான்.
தானே தயையாலே தங்கும் சிறுகுன்றாய்,
நானே மகிழவந்தாய் நாயகனே!- வானேயிவ்
வையத் திறங்கியே வந்ததுவோ, வாக்கினிலே
ஐயனே நிற்பாய் அமர்ந்து.
அமரர் துயர்தீர ஆலாலம் உண்டாய்,
இமயக் கயிலை இறையே- தமிழில்
கவிதை உயிர்பெறவே காட்டிடுவாய், உண்டோ
புவியிலே வேறு புகல்
புகல்வதெலாம் உன்றன் புகழ்பாட வேண்டும்,
நிகழ்வதெலாம் உன்றன் நெறியே - திகழ்கின்ற
அஞ்செழுத்து மந்திரத்தை ஆரா தனை செய்யும்
நெஞ்சினுக் கேது நிகர்?
நிகரிலை என்றே நினதுமலை பேர்க்கும்
அகமுனைப் புற்ற அரக்கன் - பகபகெனக்
கர்ச்சித்தான் தன்னுடைய கைநைந்து போனதனால்,
அர்ச்சித்தான் பாட்டால் அவன்.
அவனியென்ன, பேரண்டம் அத்தனையும் உன்றன்
உவகையிலே தானொழுங்காய் ஓடும் - கவிதைகளில்
பண்ணாரக் கொஞ்சும் பரமா, மனம்நிறைந்தேன்
கண்ணார நானுன்னைக் கண்டு.
திரு சிவசூரி அவர்களின் வேண்டுகோளின் படி அப்பாலுக்கப்பால் நூலிலிருந்து சில பகுதிகளை இங்கே இடுகிறேன்.
அழகிய அந்தாதி.
S
நெல்லையப்பன் பதமே
நெல்லையப்பன் பதமே- மனமே
நீ துதிப்பாய் தினமே இதமே!
கல்வி அவன்தருவான்
காளையின் மேல் வருவான்
கதிதரும் செல்வங்கள்
கனமழையாய்ச் சொரிவான் நெல்லை
உள்ளதெலாம் அவன் உபகாரம் - அவன்
உள்ளிருக்கப் போகும் அகங்காரம்
வெள்ளம் எனப்பொங்கும் அருளன்றோ- அவன்
விழிதரக் கிடைப்பது பொருளன்றோ!
நெல்லையப்பன் பதமே
நெல்லையப்பன் பதமே- மனமே
நீ துதிப்பாய் தினமே இதமே!
கல்வி அவன்தருவான்
காளையின் மேல் வருவான்
கதிதரும் செல்வங்கள்
கனமழையாய்ச் சொரிவான் நெல்லை
உள்ளதெலாம் அவன் உபகாரம் - அவன்
உள்ளிருக்கப் போகும் அகங்காரம்
வெள்ளம் எனப்பொங்கும் அருளன்றோ- அவன்
விழிதரக் கிடைப்பது பொருளன்றோ!
அத்வைதம்
ஏனோ நெஞ்சே, எனைவாட் டுகிறாய்?
ஏதோ ஒன்றை நினைவூட் டுகிறாய்
யானோ என்னுள் அடங்கிக் கிடந்தேன்
யாவும் நீக்கி அறிந்து நடந்தேன்
ஆனால் நீயோ அவனைத் துறந்தாய்
யாரா தாரம், அதனை மறந்தாய்
நானார் நீயார் நடுவே அவனார்
நானும் நீயும் அவனும் சிவனார்.
தக்ஷிணாமூர்த்தி
கல்லால மரநிழலில் சொல்லாமல் மோனத்தால் கற்பிக்கின்ற
எல்லாமும் வல்லகுரு என்றனது குருவெனவே ஏற்பேன் நானே
சொல்லாமல் சொல்லுவதன் சூக்குமத்தைத் தேர்கின்ற சூழ்ச்சி பெற்றால்
பொல்லாத மொழியாலே போராட்டம் ஏதிங்கே புகலுவீரே!
ஆடி வருகவே
தந்த தன்ன தான தந்த
தாந்த தான தனனனா
தான தன்ன தான தந்த
தான தான தனனன்னா
காந்த னாடி வருகவே
காளை தன்னில் ஏறு கின்ற
கைலை நாதன் வருகவே!
மாண்பு நாதன் வருகவே
மாளு மென்னும் ஏது வின்றி
வாழுந் தேவன் வருகவே
ஆன்ம போதன் வருகவே
ஆடும் நன்மைப் பாம்ப ணிந்த
ஆடல் நாதன் வருகவே
ஏந்த லாடி வருகவே
ஏறு தன்னில் ஏறி அன்பின்
ஈசன் ஆடி வருகவே!
சிங்கமதன் மேலமர்ந்து சீரையெல்லாம் சேர்த்தருளும் அன்னை
சீற்றமுடன் ஆடுவதை இலந்தை-ஒரு
சித்திரமாய்த் தீட்டுவதை உவந்து -சூரி
சிந்தவந்து செப்புமொழி கேட்டு-அந்தச்
செந்தமிழர் எனக்காசி ஊட்டு!
பொங்கிவரும் வெள்ளமது தங்குதடை ஏதுமெங்கும் இன்றி
பொருநைநதி பாய்ந்துவரும் வேகம்-கவி
புந்தியதை யாத்தடங்கும் தாகம்-அதைப்
பொன்னிநதி பெற்றமகன் கண்டேன்!-அந்தப்
போதிமரம் சிந்துநிழல் கொண்டேன்!
தங்கமயில் ஏறிவரும் தண்டமிழின் தேவனவன் வந்து
தன்னருளைத் தந்துநிற்கும் போது-ஒரு
சந்தமது வந்தபின்னர் இன்னலெதும் ஏது-இந்தச்
சங்கமது இன்பமென்னும் வெள்ளமதில் நீந்தும்-இதைத்
தண்ணமுதாய் எண்ணிப் புவி சிந்தைதனில் ஏந்தும்!
சங்கமிதில் சந்தமுடன் தண்டமிழாம் முத்தெடுத்துக் கோத்து
தந்தருளும் சிந்துபல பார்த்து-அதில்
தன்னைமறந் திங்குவந்து ஆர்த்து-அதைத்
தானுமொரு பாட்டிலிங்கு சேர்த்து -இன்று
தந்தனத்தோம் ஆடுகின்றேன் வேர்த்து!
சிவ சூரியநாராயணன்.
வேண்டல் பஞ்சகம்
கல்விச் சிறப்பும் களங்கமிலா நன்னெஞ்சும்
சொல்லில் மிகத்தெளிவும் தூய்மையும்- நல்வாழ்வும்
சான்றோன் எனப்புகழும் சார்ந்துவர வீரபத்ரத்
தோன்றலே செய்வாய் துணை.
மாறுபட்ட தட்சன் மமதை ஒழித்துசிரம்
வேறுபட்டுப் போக விளைத்தவனே- நீறுபட்டுப்
போகுமுனம் எல்லாப் புகழும் அளித்தருள்வாய்
யோகத்(து) உனைக்காண் உயர்வு.
இன்னும்நான் செய்வதற்கு எத்தனையோ உள்ளதய்யா?
உன்னையன்றி யாரே உதவிடுவார்- என்றன்குல
தெய்வதமே, நீள் ஆயுள், தேகநலம், நல்லறிவு
பெய்திடுவாய் இன்னும் பெரிது.
ஏது நலமென்று எனக்குத் தெரியாது
தோதருள்வாய் நீயே சுகமாக- பாதகங்கள்
போக்கி நலங்கள் புதிது புதிதாக
ஆக்கம் அனைத்தும் அருள்.
என்னிடத்தில் உள்ளபரி(சு) என்னவென நானறியேன்
உன்னிடத்தில் என்றன் உளம்வைத்தேன் - பொன்னிடத்தில்
பூவைத்தேன் வேறு புகலறியேன், தந்தருள்வாய்
தேவைகள் எல்லாம் தெரிந்து.
---
Sent via Epic Browser
இது 25 ஆண்டுகட்கு முன்பு மேல் மருவத்தூர் ஆலயத்தில் தவத்திரு பங்காரு அடிகளார் முன்னிலையில் கவிமாமணி நா.சீ வரதராஜன் தலைமையில் நடந்த கவிஅரங்கில் பாடப்பெற்றது.
இலந்தை
அபயம் அளிக்கும் அன்னை அபிராமி
நெஞ்சறிவுறுத்தல்
நெஞ்சே உனக்கேன் நிம்மதி இல்லை
பஞ்சைப் போலப் பறப்பதும் ஏனோ?
வாவா என்றே வரவேற் கின்ற
மூவா முதல்வி முன்னிற் கையிலே
நெஞ்சே, உனக்கேன் நிம்மதி இல்லை
பஞ்சைப்போலப் பறப்பதும் ஏனோ?
உன்றன் பீடத்து ஒளியை விடுத்துச்
சென்றுசென் றெங்கோ தேடு கின்றாயே,
ஊஞ்சல் தன்னை உடனே நிறுத்து
நோஞ்சானாநீ, நோய்கொண்டவனா?
தாய்முன் சேயா சஞ்சலப் படுவது?
தூய்மை இருந்தால் துயரம் ஏது?
பார்பார் உன்முன் பளிச்செனத் தெரிவது
யார் யார் ? இன்னுமா அறியவில்லை நீ?
அன்னை மிகமிக அருகில் இருக்கிறாள்
மின்னும் முடிமுதல் மென்மை அடிவரை
என்னே நேர்த்தி, என்னே அழகு!
தின்னும் அழகைத் தெரிசிக்கலாமா?
முடிமுதல் அடிவரை....
காரலை மேகம் கடைந்த கூந்தல்,
சூரிய காந்தி சுடர்விடு நெற்றி,
விடியல் போதில் விளையும் செம்மை
வடிவம் கொண்ட மாணிக்கப் பொட்டு,
வான விளிம்பில் வனைந்த புருவம்
ஞானப் பார்வை நல்கும் நுதல்விழி
தண்ணொளி சிந்தும் கண்களிரண்டு
பண்கள் கேட்டுப் பழகிய காது
மண்டலம் குண்டலம் வயிரத் தூக்கு
அண்ட கோளம் அரைவடி வாகி
பொன்னின் மஞ்சள் பூசிய கன்னம்
மின்னல் துண்டில் விளைந்த மூக்கு
பவளக் கொடியில் பழுத்த செவ்வாய்
தவழும் முறுவல் தங்கும் இதழ்கள்
சங்குக் கழுத்து, தரள முத்தாரம்
தங்க மூங்கில் சமைத்த தோள்கள்
பொங்கும் கொங்கை, பூசிய சாந்தம்,
அங்குச பாசம், அழகிய கைகள்
கங்கண மாகக் காசினி வட்டம்
அங்கை செம்மை ஆளும் ரேகை
துரும்பின் உள்ளும் துள்ளும் சக்தி
கரும்பு வில்லோ கையின் நேர்த்தி
மென்தளிர் விரல்கள், வேத மோதிரம்
வன்னக் கடம்பின் மணங்கொள் மாலை
அண்டம் அடக்கிய அற்புத வயிறு
கொண்டு சுழித்த கொப்பூழ் கமலம்
தேகம் புதுக்கும் செம்பட் டாடை
பாகச் சுமையின் பாரம் அழுத்தும்
மெல்லிய நுண்ணிடை, இரத்தின மேகலை
சொல்ல முடியாச் சுந்தர மேடை
உருவில் அழகாய் ஒளிர்தரு கால்கள்
நாதம் சிலம்பும் நவமணிச் சிலம்பு
வேத முடியில் விளங்கிடு பாதம்
திருவும் கலையும் திகழ்ந்திடு பாதம்
பரிவு காட்டிப் பயன்தரு பாதம்
சிரங்கள் பட்டுச் சிவந்திடு பாதம்
ஒன்றும் ஒளியாய் உயர்ந்திடு பாதம்
போதம் அளிக்கும் புண்ணியப் பாதம்
போதின் மென்மை பூத்திடு பாதம்
புனிதப் பாதம், பொருந்திடு பாதம்
சரணம் சரணம் சார்ந்திடு பாதம்
மரணம் பிறவி மாய்த்திடு பாதம்
யாதும் ஆன அம்மையின் பாதம்
அந்தத் திருவை அறிந்திடு நெஞ்சே,
எந்தத் துயரும் இல்லா தோடும்
திருக்கடை யூரில் திகழ்ந்திடு தேவி
கருக்கடையூரின் கதவம் அடைத்தே
பிறவிப் பிணியைப் பெயர்த்தெறிகின்றாள்
சொல்வது உறுதி, தொழுதெழு மனமே!
அபிராமி பஞ்சகம்
பொங்கும் அருளே புதுமின் விரைவே
எங்கும் நலமே இசைவிப் பவளே
துங்கம் உயரத் தொழுதேன் பதமே
தங்கும் அபிரா மிநலம் தருக!!
இம்மா புவனம் இயக்கம் புரிவாய்
எம்மால் இயல்வ தினிவே றில்லை
சும்மா இருத்தல் அழகோ இறைவீ
அம்மா அபிரா மிநலம் தருக!
வாடும் அடியார் வருத்தம் விலகத்
தோடு நிலவாய்ச் சுடரப் புரிந்தாய்
ஈடு சொலவே இயலா உமையே
கூடும் அபிரா மிநலம் தருக!
சொல்லே பொருளே சுடரே ஒளியே
கல்லும் கனியக் கனிவிப் பவளே
புல்லும் பிணிகள் விலகப் புரிவாய்
வல்லாய் அபிரா மிநலம் தருக!
உனையன் றியொரு கதிவேறிலையே
நினையே சரணம் எனவந் தடைந்தேன்
இனிவே றெதுவும் இயம்பல் எதற்கு?
கனிவே அபிராமி நலம் தருக!
காளிகாம்பாள் துதி
சரணம் அம்மா நீயென்றே
சக்தி பாதம்பணிந்திடுவோம்
மரண அச்சம் ஓடிவிடும்
வாழ்வில் என்றும் உன்னதமே
தருணம் நோக்கிக் காலத்தைத்
தள்ளா தின்னே சரண்புகுவோம்
கருணை கொண்டு நமையெல்லாம்
காளிகாம்பாள் காத்திடுவாள்
*
என்ன கொடுப்பதவளறிவாள்- அதை
என்று கொடுப்பதவளறிவாள்
அன்னதை எவ்விதம் எங்குக் கொடுப்பதென்று
அத்தனையும் அவள் தானறிவாள்
*
இந்த விதியைப் புரிந்துகொண் டாலென்றும்
இன்னல்கள் ஏதும் கிடையாது
வந்துநிற் கும்யாவும் அன்னை அருளெனில்
வாழ்ந்துநாம் பார்க்கத் தடையேது?
நீலக் கடலும் ஓம் ஓமென்றே நித்தமும்
நீட்டி முழக்கிக் கவிபாடும்
நாலு மறைப்பொருள் ஆனநம் தாயவள்
நல்லரு ளாலே புவியோடும்
காலம் கணிப்பவள் காளிகாம்பாளவள்
காலம் கடந்தவள்,பூரணியாம்
மூலம் அவளென மூவுலகும் அருள்
முந்தும் அவள்பதத் தோரொளியாம்.
கன்னியாகுமரி
தெக்குப் பக்கம் நிக்கிறவ யாருடா- தம்பி
தேவி கன்யா குமரி என்னும் பேருடா
அக்கிரமக் காரன்தன்னைக் கொன்றவ- அவ
அன்னையாகக் கன்னியாக நின்றவ
வயிரக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குது- கடல்
வாசலிலே அவள் பேரே ஒலிக்குது
தைரியமா வாழலாண்டா பாரிலே- நலம்
தழைக்குமடா அன்னையவள் பேரிலே
வண்ணவண்ண மாகமணல் காணுது- தேவி
மணம் மாறிப் போன கதை தோணுது
கண்ணெதிரே காட்சியெல்லாம் தெரியுது- அந்தக்
காட்சியெலாம் அவளென்றே புரியுது
காசி விசாலாட்சி
புனிதங்கள் யாவையும் தனதுளே பொங்கியே
புண்ணியம் கூட்டும் பதி
போராடும் வினையெலாம் நீராடும் துறையிலே
போகத் தொலைக்கும் பதி
இனியொரு பிறவியும் இலையென ஆக்கிடும்
ஏற்றங்கள் நாட்டும் பதி
எமனுக்கும் அஞ்சிடா இயல்பினைத் தந்திடும்
இங்கிதம் காட்டும் பதி
பனிதிகழ் கங்கையின் வடமுகப் போக்கிலே
பவித்திரம் ஆகும் பதி
பரிவுடன் அப்பதி பதியுடன் அமர்ந்தருள்
பாலிக்கும் தேவ தேவி
கனிவுடன் காத்திடக் காத்திருக் கின்றனை
கடைக்கண் அருள்நோக்கிலே
கருதிடும் முக்தியை உறுதிகள் செய்திடும்
காசி விசாலாட்சியே!
காமாட்சி
காமாட்சியாம் காமாட்சி
காஞ்சிபுரம் காமாட்சி
நாமாட்சிகள் செய்யவே
நடத்தி வைப்பாள் காமாட்சி
காமம் தன்னை ஆண்டவள்
கரும்பு வில்லைப் பூண்டவள்
நேம மாகத் தவத்திலே
நித்ய சக்தி மூண்டவள்
நித்தம் பூக்கும் ஆதவன்
நெற்றி யாகத் தோதவன்
சக்தியிவள் உறவிலே
தமையன் ஆவான் மாதவன்
கையில் ஐந்து பூவினாள்
கானம் பூத்த நாவினாள்
வையம் என்றும் வாழவே
வாழ்வில் ஜீவன் தூவினாள்!
மதுரை மீனாக்ஷி
கொங்குதிகழ் பூமலர் தங்கிவளர் கூடலின்
கோமகள் தேவி உமையே
கோலாகலத் தமிழே நாலாபுறம் திகழக்
கொண்டாடும் கூடல் இறையே
திங்கள்முடி எம்பிரான் பங்கில்வளர் அம்மையே
தேனாட்சி மீனாட்சியே
செந்தமிழ் பேசிடும் பைந்தமிழ்ச் செல்வியே
சித்திரச் சீமாட்டியே
சங்கமுயர் மதுரையில் பொங்குதமிழ் ஆய்ந்திடத்
தான்விருந்தேற்கு மணியே
சத்தியத் தடாதகை இத்தரை உலாவிய
சக்தியே தேவதேவி
தொங்குமெழில் உச்சியில் தங்குமுகில் கோபுரச்
சோதியே ஞான வடிவே
சொக்கன்மனம் சொக்கியே சொக்கவரும் சொக்கியே
சுந்தரி மீனாக்ஷ¢யே!
வண்டாடும் தென்பாண்டி மண்டலம் குண்டலம்
மாவண்டம் முகமண்டலம்
வால்விழிப் பார்வையில் கால்கொளும் செந்தமிழ்
மாதாநின் தாள்மந்திரம்
பண்பாண்ட கூடலின் மண்பூண்ட பேறுநின்
பாதம் பதிந்ததன்றோ
பாராளும் வேந்தெனத் தாராள மாகவே
பரமன் வதிந்ததன்றோ?
திண்டாடும் நெஞ்சங்கள் கொண்டாட எத்தனை
சீர்விளை யாடல்களே
தேன்மழை சிந்திடும் வான்பரஞ் சோதியின்
தீந்தமிழ்ப் பாடல்களே
தொண்டாளும் உள்ளங்கள் சூழாது கள்ளங்கள்
ஜோதியே ஞானவடிவே
சொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே
சுந்தரி மீனாக்ஷ¢யே!
ஓடுகிற இப்புவி கூடுகிற யாவையும்
ஓடிடச் செய்பவள்நீ
ஓங்குதிரை நீர்ப்புனல் வாங்கிமுகி லாகவே
ஊற்றிடப் பெய்பவள்நீ
பாடுகிற என்மொழி போடுகிற வார்த்தையில்
பாவமாய் நிற்பவள்நீ
பாவனை யாகவே பாருளோர் கண்முனே
பாசமாய்க் கற்பவள்நீ
தேடுகிற மெய்ப்பொருள் வீடுபெறச் செய்பொருள்
ஜீவன் உருப்பொருள்நீ
சித்தாந்தம் யாவையும் கொத்தாக வேபதம்
சேர்க்கும் கருப்பொருள்நீ
சூடுபெறு தீயினை நீடுபெறு கையிலே
சூறையிடு வான்தேவிநீ
சொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே
சுந்தரி மீனாக்ஷ¢யே!
வந்துவிழும் செந்தமிழ் சந்தமியல் நாடகம்
வளர்கொங்கை மூன்றாக்கினாய்
வந்தபதி நாடகம் தந்தபதி ஆகையால்
மற்றதை நீபோக்கினாய்
சந்தமுயர் குருபரன் தந்ததமிழ் கேட்டுநீ
தத்தியே வந்த தத்தை
சன்னயிள முறுவலொடு சின்னதொரு பெண்ணாகத்
தந்தனை கொத்து முத்தை
சிந்தனையிலே பொருள் வந்தணையச் செய்தனை
செந்தமிழிலே பெய்தனை
சேல்விழிப் பெண்மையே கோல்நெறி வழுவாத
தெய்வமே மீனாக்ஷ¢யே!
சொந்தமென உன்னையே வந்தனைகள் செய்பவர்
தோல்வியே காணமாட்டார்
சொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே
சுந்தரி மீனாக்ஷ¢யே!
பெண்மையும் ஆள்வதாய் மண்ணில் விதைத்ததோர்
பேற்றினைக் கண்டவள்நீ
பித்தனும் உன்மனச் சித்திலே பித்தனாய்ப்
பீடுறக் கொண்டவள்நீ
உண்மையே, தண்ணளி வண்மையே, சிறுமியாய்
ஓர்வேள்வி பூத்தவள்நீ
உலகாளும் நாயகி, நிலபாரம் தாங்கியே
ஓர்குடை காத்தவள்நீ
கண்விழிப் பார்வையில் எண்ணிலா உயிர்களைக்
காத்துப் பிடித்தவள்நீ
கண்நுதல் தேவர்க்கும் பெண்முதல் கௌரவம்
கற்றுக் கொடுத்தவள்நீ
தொண்டர் மனக்குறை கண்டு பொறுத்திடாச்
ஜோதியே மீனாக்ஷ¢யே
சொக்கனும் சொக்கியே சுற்றிடும் சொக்கியே
சுந்தரி போற்றி போற்றி!
தலைவரே!
பாடல் அருமையோ அருமை! பக்தியும் வேகமும் அமுதத் தமிழும் சந்தமும் பரவசம் ஊட்டுகின்றன! எல்லாவற்றையும் மீண்டும் எழுதாமல் இந்தச் சிலவரிகளை மட்டும் குறிப்பிட்டு ஆனந்தம் அடைகின்றேன்:
வந்துவிழும் செந்தமிழ் சந்தமியல் நாடகம்
வளர்கொங்கை மூன்றாக்கினாய்
வந்தபதி நாடகம் தந்தபதி ஆகையால்
மற்றதை நீபோக்கினாய்
சந்தமுயர் குருபரன் தந்ததமிழ் கேட்டுநீ
தத்தியே வந்த தத்தை
சன்னயிள முறுவலொடு சின்னதொரு பெண்ணாகத்
தந்தனை கொத்து முத்தை
அன்புடன்,
தங்கமணி.
On Aug 8, 7:31 pm, Subbaier Ramasami <eland...@gmail.com> wrote:
> *மதுரை** **மீனாக்ஷி***
> 2012/8/7 Lalitha & Suryanarayanan <lallis...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > த்லைவருக்கு வணக்கம்.
>
> > நானும் பாட முயன்றேன்:
>
> > கண்டா மணியின் டொய்ங் டொய்ங் டொய்ங்
> > கவிதை தருமே டொய்ங் டொய்ங் டொய்ங்!
>
> > புவியோர் மகிழச் செய்யென்றே
> > புலமை வழியப் பெய்யென்றே
> > கவியோர் காதில் நல்லோசை
> > கற்பனை தந்திடும் சொல்லோசை!
>
> > ஆயிரம் கையுடன் வந்துள்ளாள்
> > ஆசிகள் கோடி தந்துள்ளாள்
> > மாயிருள் ஓடிட நின்றுள்ளாள்
> > மக்கள் மனத்தை வென்றுள்ளாள்
>
> > கல்லும் புல்லும் இன்னுந்தான்
> > காணும் காட்சிகள் எல்லாமும்
> > சொல்லும் அவள்சீர் என்றின்று
> > பொருளாய்க் கவியில் நின்றுள்ளாள்!
>
> > சந்தக் கவியின் தேனாகி
> > தண்டமிழ் மொழியும் தானாகி
> > இந்தக் கவிமுன் பூவாகி
> > எழுத்தில் வந்தாள் பாவாகி!
>
> > சிவ சூரியநாராயணன்.
>
> > 2012/8/8 Subbaier Ramasami <eland...@gmail.com>
>
> >> காளிகாம்பாள் கோயிலிலே ஒரு கவியரங்கம். மாலைநேரம் . கோயில் பூஜைக்காக
> >> மணியடிக்கத்தொடங்கினார்கள். மணி டொய்ங் டொய்ங் டொய்ங் என்று மூன்று முறை
> >> அடித்துப் பிறகு சற்ரு இடைவெளிவிட்டு முன்மாதிரியே தொடர்ந்தது. தலைவர் என்னைக்
> >> கவிபாட அழைத்துவிட்டார். நான் பாடிய சிந்துப்பாட்டீல் அரையடி சொன்னதும் அந்த
> >> அடுத்த அரையடி சொல்லும் இடைவேளையில் டொய்ங்க் டொய்ங் ஒலிக்கிறமாதிரி
> >> சந்தத்தில் கவிதை பாடினேன். அந்த மணியோசை கவிதைக்குத் தாளம் கொடுத்தது
>
> > --
> > நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> > பெறுகிறீர்கள்:
> > இக்குழுமத்தில் மின்மடல்
>
> ...
>
> read more »
பாடு பாடு பாடு
பாடு பாடு பாடு
சக்தி புகழ் பாடு
ஆடி ஓடிப் பாடு தேவி
அம்மை புகழ் பாடு
கவிதையாக வருவாள்- பாடும்
கவிஞர்க்கருள் புரிவாள்
புவியை ஓட்டிச் செல்வாள்- பக்தி
போற்றும் நெஞ்சை வெல்வாள் பாடு
காளியம்மை கோயில் சென்ற
காளிதாசன் நாவில
ஆளும் சொல்லை எழுத அவன்
ஆற்றல் பெற்றான் பாவில்
அம்மாவாசை இரவு- நிலா
ஆகாயத்தில் வரவு
தம்மாவன்பர் பட்டர்க் கருள்
பாலித்த நற்பரிவு. பாடு
திருவானைக் கா கோயில் - தனில்
திகழ்தாம்பூலம் வாயில்
கருத்துடனே தந்தாள்- அவன்
காளமேகம் ஆனான் பாடு
வேண்ட வேண்டத் தருவாள்- அவள்
விரைந்து காக்க வருவாள்
யாண்டும் அன்னை தோற்றம்- அவள்
அன்பு பெற்றால் ஏற்றம். பாடு
அன்னை ஆடும் அரங்கு
தன்னுளே நிலைத்து நிற்கும்
சத்திய ஜோதி என்னும்
மின்னலை, இறையை, வைய
விடிவினை, ஞானம் என்னும்
கன்னலை, சக்தி தன்னைக்
கருத்துடன் போற்று கின்ற
அன்பர்தம் உள்ளம் அன்னை
ஆடிடும் அரங்கம் ஆகும்!
கருமாரி
நாகவுரு வானவள், மேகநிற மேனியள்
ஞாலம் புரக்கின்றவள்
நடமாடுகின்றவள், படமாடுகின்றவள்
நாதம் வடிக்கின்றவள்
யாகமெனும் வாழ்விலே ஆராத அன்பினை
அள்ளிக் குடிக்கின்றவள்
அச்சங்கள் யாவையும் துச்சமாய்ப் போக்கியே
ஆக்கம் விளைவிப்பவள்
வேகமருள் கின்றவள் வேதமருள்கின்றவள்
வேற்காடு வாழ்கின்றவள்
விரிநீறு திருநீறு வியனருள் சாம்பலால்
விந்தை புரிகின்றவள்
ஊகமாய் இல்லாமல் உறவாடுகின்றவள்
ஊக்கம் தருகின்றவள்
ஓங்காரி ரீங்காரி ஆங்காரி அம்மையின்
ஒண்பாதம் போற்றி போற்றி!
ஆதி பராசக்தி அன்னை கருமாரி
ஆதி பராசக்தி அன்னை கருமாரி
அவள் பதம் பணிந்தார்க்கு அருள்தருவாள் வாரி (ஆதி)
யாதும் அவள் வரமே அளிப்பதவள் கரமே
அன்னை அடிமலரில் அடியேன் அடைக்கலமே (ஆதி)
அம்மையின் ஆணையில் அயனும் எழுதுகிறான்
அரனும் அரியும் அவளன்பில் இயங்குகிறார்
நம்புதல் நம்பாமை யாதும் அவள் வரமே
நல்லதும் அல்லதும் அவளின் திருவருளே! (ஆதி)
முன்னெது,பின்னது காலம் அவள் நடமே
மூவுலகெங்கணும் யாவும் அவள் இடமே
இன்னதை இப்படிக் காத்தல் அவள் உரிமை
எடுத்தவள் கொடுப்பதைப் பெறுவது நம்பெருமை (ஆதி
நங்கநல்லூர் வளர் ராஜராஜேஸ்வரி நாயகியே!
பொங்கும் அலைகடல் மேலுயிர் ஏற்றும் புது நிலவே
எங்கும் நிறைந்தெமைக் காத்திட வேயெழு பூரணமே
துங்கம் வளர்கெனச் ஜோதிப் பதங்கள் தொழுதிடுவேன்
நங்கநல்லூர் வளர் ராஜராஜேஸ்வரி நாயகியே!
நாயகன் போற்றிடும் நாயகம் ஆகிடும் நல்லமுதே
தாயகம் கொண்டெமைத் தாங்கிப் புரந்திடும் தண்ணளியே
சீயென யாரும் சினந்திடா வெற்றிச் சிறப்பருளே
காயெனும் நெஞ்சம் கனியென மாறக் கருதுவையே!
கருதிடும் யாவினும் காண்கிற தெய்வக் கனியமுதே
பெருகிடும் அன்புப் பிழம்பாய் அணைக்கும் பெருஞ்திறலே
உருகிடும் உள்ளத் துறைந்திடும் ஞானத்(து) உயர்பொருளே
கருத்திடை ஊன்றும் கவிதை களித்திடும் கற்பகமே!
கற்பகச் செந்தமிழ்க் காவிடைக் காவிய நாயகியே
நிற்கிறேன் ஏதோ நடக்கிறேன் என்ற நிலையிலதாய்
வெற்றி எனதடி வேண்டித் தொடரும் விதமருள்வாய்
அற்புதம் யாவினும் அற்புத மாகிடும் அன்னையளே!
அன்னையே , தேவி, அருள்வடி வாகிடும் ஆரமுதே
கன்னல் மொழியே கனியே அறிவே கவிநயமே
என்னயான் வேண்டுவேன் என்பது நீயும் அறிந்திலையோ
சொன்னதும் சொல்ல மறந்ததும் யாவும் உன் சுந்தரமே!
சுந்தரி, ஞானக் கடலே, துலங்கிடும் சொற்பொருளே
அந்திவான் வீசிடும் அற்புதச் செக்கரின் ஆனந்தமே
மந்திரம் தந்திரம் யாவையும் உன்முன் வசமிழக்க
முந்திடும் அன்பின் மொழியில் இறங்கிடும் முன்னவளே!
முன்னெனும் முன்னுக்கும் முன்னாகி நிற்கின்ற மொய்குழலே
மென்மையில் மென்மையே திண்மையில் திண்மையே விந்தையளே
தன்னையே போற்றித் தவித்திடும் என்மனம் சந்ததமும்
உன்னையே போற்றி உயர்ந்திடும் உண்மை உயர்வருளே!
அருள்வேண்டி அம்ம நினைச் சார்ந்தேன் அன்புடன் ஆதரிப்பாய்
உருளுமிவ் வாழ்வில் ஒருபயன் இன்றியே ஓடுவதோ?
தருவதும் தாரா திருப்பதும் தாயுன் தனிக்கருணை
கருதியென் நெஞ்சில் கனிவாய் அமர்தல் கடமையதே!
கடமைகள் காரணம் , காரியம்காட்சிகள் கற்பனையும்
உடைமையாய்க் கொண்டிடும் அன்னையே உன்றன் விரலசைவில்
நடந்திடும் வாழ்க்கையில் நல்லன தீயன சக்கரமோ
தடைகளை நீக்குவாய் தக்கதைக் காட்டும் தயவுடனே!
உடனேகி வாரா ஒழிபொருள் பற்றும் உறுதியினத்
திடமெனக் கொண்டு தினந்தினம் நானும் திரிவதுவோ
நடமிடும் நாவில் ஜதியிடும் ஞான நளிர்மணியே
புடமிடு பொன்னாய்ப் புகழ்வர நின்னருள் பொங்குகவே!
காந்திமதி
நெல்லையில் அருள்புரியும் காந்திமதி - அம்மா
நின்னடி துதிக்கின்றோம் நீயன்று ஏதுகதி?
இல்லையென்னும் சொல்லை இல்லையெனச் செய்வாய்
இயலிசை நாடகமும் என்னுள்ளே நீ பெய்வாய் - நெல்லையில்
வல்லமை யாவையும் நின்னருள் வரமன்றோ?
வழங்கிட நீகணிப்பாய் பக்தியின் தரமன்றோ?
எல்லையில்லா வெளியில் எங்கும் நிறைபவளே
ஏழை மனப் பேழையிலே என்றும் உறைபவளே! - நெல்லையில்
நங்கநல்லூர் வளர் ராஜராஜேஸ்வரி நாயகி
"பொங்கும் அலைகடல் மேலுயிர் ஏற்றும் புது நிலவே"
நித்திய நித்திய மாகுமந்த
நிருமல தேவியே வானத்தில்
புத்தொளி வீசும் நிலவாயிப்
பொங்கும் கடல்மேல் தோன்றிடவே
தாயினைக் கண்டதோர் சேய்போலத்
தரங்கக் கரங்களைக் கடல்நீட்ட,
பாயும் உயிரெனக் கொண்டதனால்
பரவையின் மேலுயிர் ஏற்றுகிற
மதியாய் அவளைக் கண்டாரோ,
கதியாய் அவளைத் துதித்தாரோ!
நீரிலை எனில்கட லிலையென்றே
நீராய் அவளே நிறைந்ததையே
சீராய்க் கவிஞர் செப்பினரோ!
உயிர்கள் பலவும் நீரினிலே
உறைவதால் இப்படி உரைத்தாரோ!
கூரை வேய்ந்தே வானத்தில்
கொட்டுது கடலே மழையென்றே,
ஏரிகள், குளங்கள் எனப்பலவும்
இதனால் தானே எனக்கொண்டே,
பாரின் உயிரிதில் இருப்பதனால்
நீரை நிறைத்த தேவியினைப்
பக்தியில் எதையெதைக் கண்டாரோ!
யாவும் சரியே என்பதுடன்
இதுமிக இனிமை யென்பேனே !
காந்திமதி
"மன்னுபுகழ் காந்திமதி நெல்லையப்பன் பாதம்
மாறாது பணிந்தருளை மாந்திவரும் தென்றல்"
நன்றுலவும் இலந்தையெனும் நல்லூரார் தாமும்
நாடியவள் பாதமலர் நாளெல்லாம் துதிக்க
என்றுமுள செந்தமிழின் எழிலெல்லாம் சேர்ந்தே
எழுந்தோடி நம்முன்னே வந்துடனே பாடல்
மன்பதையில் தோன்றுவதில் வியப்பென்ன, என்றன்
மனமீதும் பதமேநல் மணம்வீச வேண்டும்!
சிவ சூரியநாராயணன்.
இன்று மறந்தனையோ?
இன்று மறந்தனையோ - அடி
என்னைத் துறந்தனையோ?
அன்று நினைத்தவுடன்
கம் நிறைத்தவளே
இன்று மறந்தனையோ- அடி
என்னைத் துறந்தனையோ?
பாலத்தடியினிலே
பாவி எனைத்தழுவி
நாலு கவிதைகளை
நல்கி உயிர்த்தவளே
ஒன்றும் நினைவிலையோ?-அந்த
ஊற்றம் இனியிலையோ
என்றும் உனதுயிர்நான்
என்று மொழிந்தவளே
ஒன்றும் நினைவிலையோ-அந்த
ஊற்றம் இனியிலையோ
ஆல மரநிழலில்
ஆதிக் கதையெழுதி
நீல விசும்பளந்து
நெஞ்சு கலந்தவளே
பெண்ணே அதுகனவோ- அடி
பேசியதும் புனைவோ
கண்ணுள் ஒளியெனவே
காட்சி கொடுத்தவளே
பெண்ணே அதுகனவோ-அடி
பேசியதும் புனைவோ?
தூங்க விடாதெனையே
தொல்லைச் சுகங்கொடுத்து
நீங்கல் எனும்பதத்தை
நெம்பித் தொலைத்தவளே
ஓடி ஒளிந்தனையோ?-அடி
ஊக்கம் தளர்ந்தனையோ
ஏடு தனைநிறைக்கும்
எண்ணக் களஞ்சியமே
ஓடி ஒளிந்தனையோ-அடி
ஊக்கம் தளர்ந்தனையோ?
எண்ணம் இளமையடி
என்றும் வளமையடி
கண்ணிலே ஈரமடி
காலச்சஞ்சாரமடி
கலைமகள் பஞ்சகம்-1
நிலையே, நிதியே ,நிகழ்வே, நிறைவே
இலையே இணையே எனநிற் பவளே!
உலையா இசையே, உனைநான் தொழுதேன்
கலைமா மகளே கழல்தந் தருளே!
இசைநீ, எழில்நீ , இதம்நீ. இயலே
விசைநீ, வினைநீ, விதைநீ ,விளைவே
பசைநீ, பதம்நீ, பரம்நீ, பரிவே
திசைநீ, தினம்நீ, தெளிவே அருளே!
கவிநீ, கலைநீ, கருதும் கனிவே
புவிநீ, புகழ்நீ, புனிதப் பொருளே
தவம்நீ, தனிநீ, தமிழின் தகவே
நவம்நீ, நயம்நீ நலமே அருளே
இதுதான் எனநான் எனும்போ தினிலே
அதுவாய் அமைவாய் அமர்வாய் அமையே!
எதுவாய் இவனை இனிநீ செயினும்
துதிவாய் வரவே சொலுவாய் சுகமே!
விதியே, விதியின் விதியே, விரிவே
மதியே மரையில் மலரும் வடிவே
பதமே பணியும் பணிதா பரமே
உதவும் உதவி உனதா குகவே!
கலைமகள் பஞ்சகம்-2
நான்விட்டேன் என்றால் என்? நாமகள் நீயும் நழுவுவதோ?
ஏன்விட்டாய் என்றே எனைத்தட்டிக் கேட்கும் இதம்விடுத்தே
தான்விட்டால் எங்ஙன் தரிப்பேன்? என் நாவில் தயவுடனே
தேன்விட்டுப் பாய்ச்சிடு, செந்தமிழ் உத்திகள் சித்திக்கவே!
சித்திநீ, புத்திநீ, தேர்கலை வாணிநீ, சித்துகளின்
உத்திநீ, உண்மைநீ, உன்னத ஞானத்தின் உற்பத்திநீ
சத்துநீ, சந்தம் நீ, சாரும் கலைகளின் சங்கதிநீ
முத்திநீ தந்தே முறையுடன் காத்தருள் மொய்குழலே!
வாவென்று சொன்னால் வரவேண்டும், வந்து வளக்கவிதை
தாவென்று சொன்னால் தரவேண்டும், நீவந்து தான்நடிக்க
நாவொன்று வைத்துளேன், நன்றுநீ வாரா நலிவுசெய்தால்
ஓவென்று அழுவேன், உனக்கிது தேவையா உத்தமியே!
வேடிக்கை செய்வாய், விளையாடிச் சற்றே விலகிநிற்பாய்
வாடிக்கை என்று மனத்தில் உழன்று வருந்துகையில்
நாடிக்கை பற்றி நகைப்பாய், உனதருள் நாடகத்தில்
தேடிப் பிடித்த திரையோநான், வாணியென் தெய்வதமே!
வித்துகள் வைத்துளாய், விதைக்கும் நல்ல விளைநிலமாய்
ஒத்தை விதையினை என்னுளே ஊன்றிடு உனதருளால்
அத்தை வளர்த்தே அகிலம் பயன்பெற ஆணைகொடு
செத்தையும் உன்றன் திருவிழி நோக்கில் சிறந்திடுமே!
சிகரம் தொடவைப்பாய்
பூமி தனில் விழுந்தேன் - அழுதேன்
புன்னகை நீபுரிந்தாய்
ஆமந்த நாள்முதலாய்- எனக்கோர்
ஆதர வாயிருந்தாய்
வண்ணங்கள் இன்னவென- எனக்கு
வகுத்து நீயுரைத்தாய்
எண்ணங்கள் தோன்றுமுனே- ஒலிவகை
எத்தனை நீவிரித்தாய்!
கைவிரல் தான்விரித்து- அந்தநாள்
கணக்குப் போடாமல்
மெய்வகை காட்டுவித்தாய்- அம்மநான்
விடைகள் தேடாமல்
சந்தம் படிக்குமுன்னே- அதனைத்
தாளில் வடித்துவிட்டேன்
எந்த வகையினிலும் - மரபில்
எண்ணம் பிடித்துவிட்டேன்
உன்றன் அருளிலையேல்- எழுத்தில்
ஒன்றும் நடக்காது
அன்னை கலைவாணி-- உன்னருள்
யாது கொடுக்காது?
அள்ளிக் கொடுப்பதற்கே- தகுமா
அம்மா இடைவெளிகள்
வெள்ளமெனப் பொழிவாய் - அருள்வாய்
வேகம் கவியொளிகள்
நாள்கள் அதிகமில்லை- பெரிதாய்
நல்லருள் செய்யம்மா
தோள்கள் சுருங்குமுனே- சிகரம்
தொட்டிட வையம்மா!
உனையே குருவாக்கு
வீணையில் விளையாடும் கலைமகளே-என்மன
வீணையில் இசைபாட நீயருளே! - அம்மா
ஏணியைக் கொண்டுவந்து
ஏற்றியே வைத்துவிட்டு
வீணையைக் கைகொடுத்து
வித்தையை ஏன்மறைத்தாய்? (வீணையில்...)
பாடும் குயில்குரலில் பண்ணாய் இழைபவளே
பாவலர் நெஞ்சத்தில் என்றும் தழைப்பவளே
ஏடும் எழுத்தும்தந்து எழுத அழைப்பவளே
இலக்கியம் என்கின்ற வயலில் உழைப்பவளே
(வீணையில்..)
என்னைப் பணிகொண்டே ஏவல் புரிந்தாயே
என்னுள் புதுப்புதிதாய் தந்து பரிந்தாயே
இன்னல் வருகையிலே காக்க விரைந்தாயே
எங்கேநான் சென்றாலும் அங்கே இருந்தாயே!
(வீணையில்..)
ஊற்றை அடைக்காதே, ஏற்றம் தடுக்காதே
ஆற்றல் பொடிக்காதே போற்றல் முடக்காதே
தேற்றம் துடைக்காதே தெம்பை நொடிக்காதே
ஏற்றாய், அடிக்காதே, இன்னல் கொடுக்காதே
(வீணையில்,,)
புதுமை வரவாக்கு, போதம் விரிவாக்கு
விதியைச் சரியாக்கு, வித்தை உருவாக்கு
இதமே எனதாக்கு, எண்ணம் கருவாக்கு
பதமே பணிகின்றேன் உனையே குருவாக்கு!
(வீணையில்..)
வெள்ளமெனப் பொழிவாய்!
கள்ளமிலா மனம் கண்டு வதிந்திடும் கான இசைக் கலையே-உயர்
கல்வி தரு நிலையே
வள்ளல் இவன் தரு வார்த்தைதனில் வரும் வாழ்த்துப் பலிக்குமென-ஒளி
வந்து கொழிக்குமென
பள்ள முறைந்திடு பாமரரும் சொலும் பட்டயமே பெறவே-நலம்
பாவினிலே உறவே
வெள்ளமெனப் பொழி வெள்ளமெனப் பொழி,
வெள்ளமெனப் பொழியே!
எள்ளி நகைத்தவர் ஏளனம் செய்தவர் எண்ணி வருந்திடவே-என்னுள் ஏற்றம் இருந்திடவே
உள்ள மனைத்திலும் உன்திரு மந்திரம் ஓங்கி நிலைத்திடவே-கவி
ஓடிச் சலித்திடவே
தெள்ளு தமிழ்மொழி தேனருவிப் புனல் துள்ளி வரும்படியே-சுவை
அள்ளித்தரும் படியே
வெள்ளமெனப் பொழி வெள்ளமெனப் பொழி
வெள்ளமெனப் பொழியே!
முள்ளின் முனைதரு கூர்மை எனவரு மோனை நடம்பெறவேஅதில் வானம் இடம்பெறவே
கள்ளை,விரைந்திடு காற்றை, புனலினை, தீயைக் கடைந்தெடுத்தே-சொல் தேவப் படை தொடுத்தே
அள்ளப் பெருகிடும் ஆற்றல் அதிசயம் நாவில் பெரும் பொருளை
உன் நல்ல திருவருளை
வெள்ளமெனப் பொழி வெள்ளமெனப் பொழி
வெள்ளமெனப் பொழியே!
பிள்ளைப் பருவத்தில் உள்ளம் கவர்ந்தெனைப் பேசிட வைத்தவளே-கவி
வீசிட மொய்த்தவளே
தெள்ளத் தெளியத் தெளியாதன பல தேர்ந்திடச் செய்தவளே-ஒளி
ஆர்ந்திடப் பெய்தவளே
தள்ளி யிருப்பதும் தாய்க்கழ கில்லையே சார்ந்தென்றன் நாவினிலே-நான் சாற்றிடும் பாவினிலே
வெள்ளமெனப் பொழி, வெள்ளமெனப் பொழி,
வெள்ளமெனப் பொழியே!
இன்று மறந்தனையோ?
இன்று மறந்தனையோ - அடி
என்னைத் துறந்தனையோ?
அன்று நினைத்தவுடன்
கம் நிறைத்தவளே
கவிநீ, கலைநீ, கருதும் கனிவே
புவிநீ, புகழ்நீ, புனிதப் பொருளே
தவம்நீ, தனிநீ, தமிழின் தகவே
நவம்நீ, நயம்நீ நலமே அருளே
இதுதான் எனநான் எனும்போ தினிலே
அதுவாய் அமைவாய் அமர்வாய் அமையே!
எதுவாய் இவனை இனிநீ செயினும்
துதிவாய் வரவே சொலுவாய் சுகமே!
விதியே, விதியின் விதியே, விரிவே
மதியே மரையில் மலரும் வடிவே
பதமே பணியும் பணிதா பரமே
உதவும் உதவி உனதா குகவே!
கலைமகள் பஞ்சகம்-2
நான்விட்டேன் என்றால் என்? நாமகள் நீயும் நழுவுவதோ?
ஏன்விட்டாய் என்றே எனைத்தட்டிக் கேட்கும் இதம்விடுத்தே
தான்விட்டால் எங்ஙன் தரிப்பேன்? என் நாவில் தயவுடனே
தேன்விட்டுப் பாய்ச்சிடு, செந்தமிழ் உத்திகள் சித்திக்கவே!
சித்திநீ, புத்திநீ, தேர்கலை வாணிநீ, சித்துகளின்
உத்திநீ, உண்மைநீ, உன்னத ஞானத்தின் உற்பத்திநீ
சத்துநீ, சந்தம் நீ, சாரும் கலைகளின் சங்கதிநீ
முத்திநீ தந்தே முறையுடன் காத்தருள் மொய்குழலே!
வாவென்று சொன்னால் வரவேண்டும், வந்து வளக்கவிதை
தாவென்று சொன்னால் தரவேண்டும், நீவந்து தான்நடிக்க
நாவொன்று வைத்துளேன், நன்றுநீ வாரா நலிவுசெய்தால்
ஓவென்று அழுவேன், உனக்கிது தேவையா உத்தமியே!
வேடிக்கை செய்வாய், விளையாடிச் சற்றே விலகிநிற்பாய்
வாடிக்கை என்று மனத்தில் உழன்று வருந்துகையில்
நாடிக்கை பற்றி நகைப்பாய், உனதருள் நாடகத்தில்
தேடிப் பிடித்த திரையோநான், வாணியென் தெய்வதமே!
வித்துகள் வைத்துளாய், விதைக்கும் நல்ல விளைநிலமாய்
ஒத்தை விதையினை என்னுளே ஊன்றிடு உனதருளால்
அத்தை வளர்த்தே அகிலம் பயன்பெற ஆணைகொடு
செத்தையும் உன்றன் திருவிழி நோக்கில் சிறந்திடுமே!
2012/8/11 Subbaier Ramasami <elan...@gmail.com>இன்று மறந்தனையோ?
இன்று மறந்தனையோ - அடி
என்னைத் துறந்தனையோ?
அன்று நினைத்தவுடன்
கம் நிறைத்தவளே
--> Typo?
பால் குடித்தான் - பாலைக் குடித்தான் கை பற்றி கையைப் பற்றி இரண்டாம் வேற்றுமைத் தொகை ஒற்றுத் தேவையில்லை
வித்துகள் வைத்துளாய், விதைக்கும் நல்ல விளைநிலமாய்
ஒத்தை விதையினை என்னுளே ஊன்றிடு உனதருளால்
அத்தை வளர்த்தே அகிலம் பயன்பெற ஆணைகொடு
செத்தையும் உன்றன் திருவிழி நோக்கில் சிறந்திடுமே!
--> / ஊன்றிடு உனதருளால்/ புணர்ச்சி பிரித்து எழுதப்பட்டுள்ளதோ? ஆம்
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
கலைமகள் பஞ்சகம்-2
நான்விட்டேன் என்றால் என்? நாமகள் நீயும் நழுவுவதோ?
கவிஞரிவர் கலைமகளைக் கொஞ்சல் பாரீர்!
கவிதையிலே அவளருளைக் கெஞ்சல் பாரீர்!
புவியிருந்தும் இவருடைய நெருக்கம் பாரீர்!
தவமிருந்து தமிழகைப் பெற்றார் போலும்!
வாவென்று சொன்னால் வரவேண்டும், வந்து வளக்கவிதை
தாவென்று சொன்னால் தரவேண்டும், நீவந்து தான்நடிக்க
நாவொன்று வைத்துளேன், நன்றுநீ வாரா நலிவுசெய்தால்
ஓவென்று அழுவேன், உனக்கிது தேவையா உத்தமியே!
பாவென்றால் இதுவன்றோ, படிக்கும் போதே
ஓவென்றே அழுததையே உரைக்கற் போமோ!
சிவ சூரியநாராயணன்.
செல்வத் திருமகள்
செந்தாமரை மலர்மீதினில் சேர்ந்தேயமர் திருவே
நந்தாமணி வண்ணன்திரு மார்பில் வளார் தேவி
உன்தாள் மலர் பணிந்தேன் நலம் ஒருங்கே தருவாயே
பொன்தா மிகப் புகழ்தா வளர் பொருள்தா அருள் தாயே!
எல்லாமிருந் தாலும்பொருள் இல்லாநிலை சேரின்
வல்லான் இவன் நல்லான் எனப் போற்றும் புகழ் எல்லாம்
செல்லாநிலையாகும் திரு மாலின் அருள் தேவி
நல்லாய் உன தருட்பார்வையில் எல்லாம் உயர்வாகும்
தாயே அருள்வாயே விழிப்பார்வை தருவாயே
நீயே வளம் யாவும் எனைச் சேரப் புரிவாயே
பாயே எனப் பாம்பில் துயில் கூடும் பதி ஆகம்
ஏயும் மலர் மாதே பொருள் ஓங்கத் தருவாயே!
வருவாயே வரலக்ஷ்மி தாயே!
வருவாயே வீட்டுக்குள் வரலக்ஷ்மி தாயே
மனமார அழைக்கின்றோம் வரவேண்டும் நீயே!
உருகாத நெஞ்சுள்ளும் உணர்வாக நிற்கும்
உன்னதமே, தெய்வதமே வரலக்ஷ்மி தாயே!
(வருவாயே)
பரிவாக வருபவளே, பரந்தாமன் தேவி
பக்தருனை அழைக்கின்றோம் உன்நாமம் கூவி
தருவாயே வளமெல்லாம் வரலக்ஷ்மி தாயே
சரணடைந்தோம் காத்திடுவாய் வரலக்ஷ்மி தாயே!
(வருவாயே)
வாழைமரக் கன்றுகட்டி மண்டபம் சமைத்தோம்
மாவிலைகள் தோரணமாய் நாற்புறம் அமைத்தோம்
தாழைமடல் மல்லிகையும் சாமந்திப் பூவும்
தழைத்திருக்கும் மண்டபத்தில் எழுந்தருள்வாய் தாயே!
(வருவாயே)
பெருகிவரும் நற்செல்வம் தரவேண்டும் தாயே
பிழைசெய்யா மனம்தரவே வரவேண்டும் நீயே
கருமையெழில் திருமாலின் மார்பிலுறைபவளே
கமலா சனத்தில்வளர் காருண்ய தேவி!
(வருவாயே)
செல்வத் திருமகள்
செந்தாமரை மலர்மீதினில் சேர்ந்தேயமர் திருவே
நந்தாமணி வண்ணன்திரு மார்பில் வளார் தேவி
உன்தாள் மலர் பணிந்தேன் நலம் ஒருங்கே தருவாயே
பொன்தா மிகப் புகழ்தா வளர் பொருள்தா அருள் தாயே!
எல்லாமிருந் தாலும்பொருள் இல்லாநிலை சேரின்
வல்லான் இவன் நல்லான் எனப் போற்றும் புகழ் எல்லாம்
செல்லாநிலையாகும் திரு மாலின் அருள் தேவி
நல்லாய் உன தருட்பார்வையில் எல்லாம் உயர்வாகும்
தாயே அருள்வாயே விழிப்பார்வை தருவாயே
நீயே வளம் யாவும் எனைச் சேரப் புரிவாயே
பாயே எனப் பாம்பில் துயில் கூடும் பதி ஆகம்
ஏயும் மலர் மாதே பொருள் ஓங்கத் தருவாயே!
வருவாயே வரலக்ஷ்மி தாயே!
வருவாயே வீட்டுக்குள் வரலக்ஷ்மி தாயே
மனமார அழைக்கின்றோம் வரவேண்டும் நீயே!
உருகாத நெஞ்சுள்ளும் உணர்வாக நிற்கும்
உன்னதமே, தெய்வதமே வரலக்ஷ்மி தாயே!
(வருவாயே)
பரிவாக வருபவளே, பரந்தாமன் தேவி
பக்தருனை அழைக்கின்றோம் உன்நாமம் கூவி
தருவாயே வளமெல்லாம் வரலக்ஷ்மி தாயே
சரணடைந்தோம் காத்திடுவாய் வரலக்ஷ்மி தாயே!
(வருவாயே)
வாழைமரக் கன்றுகட்டி மண்டபம் சமைத்தோம்
மாவிலைகள் தோரணமாய் நாற்புறம் அமைத்தோம்
தாழைமடல் மல்லிகையும் சாமந்திப் பூவும்
தழைத்திருக்கும் மண்டபத்தில் எழுந்தருள்வாய் தாயே!
இனிய சந்தம்.2012/8/12 Subbaier Ramasami <elan...@gmail.com>
செல்வத் திருமகள்
செந்தாமரை மலர்மீதினில் சேர்ந்தேயமர் திருவே
நந்தாமணி வண்ணன்திரு மார்பில் வளார் தேவி
உன்தாள் மலர் பணிந்தேன் நலம் ஒருங்கே தருவாயே
பொன்தா மிகப் புகழ்தா வளர் பொருள்தா அருள் தாயே!
--> /மார்பில் வளார் தேவி/
Typo.
--> /பொன்தா மிகப் புகழ்தா/
புணர்ச்சியோடு நோக்கின், 'பொன்றா மிகப் புகழ்தா' என்றும் பொருள்கொள்ளலாமோ?
இன்று மறந்தனையோ?
இன்று மறந்தனையோ - அடி
என்னைத் துறந்தனையோ?
அன்று நினைத்தவுடன்
அகம் நிறைத்தவளே
இன்று மறந்தனையோ- அடி
என்னைத் துறந்தனையோ?
பாலத்தடியினிலே
பாவி எனைத்தழுவி
நாலு கவிதைகளை
நல்கி உயிர்த்தவளே
ஒன்றும் நினைவிலையோ?-அந்த
ஊற்றம் இனியிலையோ
என்றும் உனதுயிர்நான்
என்று மொழிந்தவளே
ஒன்றும் நினைவிலையோ-அந்த
ஊற்றம் இனியிலையோ
தியே, விரிவே
இராமபிரான்
ஆதி மூலம், அருள் வெள்ளம்
அறத்தின் ஆணி, ஆலமரம்
வேதம் வணங்கும் மெய்ஞானம்
வீரத் திற்கோர் மேலெல்லை
நீதி பாடம் கற்கின்ற
நேர்மைப் பள்ளி, குருபீடம்
ஏதி லர்க்கோர் அபயகரம்
இவனே இவனே இராமபிரான்
தந்தை சொல்லைக் காக்கின்ற
தர்மம் காக்கும் வைரமனம்
வந்து நின்றே அபயமெனில்
வாழ்வளிக்கும் கருணையுளம்
இந்த மண்ணி¢ல் மனிதனென
இறங்கி நடந்த பெருந்தெய்வம்
எந்த உயிர்க்கும் அருள்நெஞ்சம்
இவனே இவனே இராமபிரான்
ஓர்சொல் ஓர்வில் ஓரில்லாம்’
உயர்ந்த வாழ்க்கை ஆதாரம்
பேர்சொல் கின்ற அடியவரின்
பிறவி போக்கும் பேரிதயம்
நேர்மை, தன்னைப் புதுப்பிக்க
நின்றே உரசும் புனிதமலை
ஈர்க்கும் அழகுக் கெல்லை நிலம்
இவனே இவனே இராமபிரான்.
வான ரத்தை, வேட்டுவனை
வல்ல ரக்கன் வீடணனை
தானி ருக்கும் நிலைக்கொப்பத்
தம்பி யர்கள் ஆக்கியவன்
மானம் காக்கத் தீக்குள்ளே
மனைவி தன்னை இறக்கியவன்
ஏனென் கின்ற நிலைகடந்தோன்
இவனே இவனே இராமபிரான்
கையோ வீரம் விளைவிக்க
காலோ பெண்ணை உயிர்ப்பிக்க
மெய்யாம் சொல்லோ தீயர்களை
வீழ்த்தித் தேவர் தமைக் காக்க
மையின் வண்ணன் விழிப்பார்வை
வாரி வாரி அருள்பொழிய,
எய்த்தல் இன்றி வாழ்ந்தயிறை
இவனே இவனே இராம பிரான்
வாழிய இராம வள்ளல்
வாழிய இராம நாமம்
வாழிய அவன்பேர் சொல்லும்
மன்னுயிர் அனைத்தும், என்றும்
வாழிய தெய்வ நீதி
வாழிய எங்கள் தேசம்
வாழிய உலக மெல்லாம்
வாழிய வாழ்க, வாழ்க!
தர்மம் காத்த கர்ம வீரன்
மண்ணில் வந்த
அண்ணல் இராமன்
விண்ணை இங்கே
கண்ணில் தந்தான்
தந்தை சொல்லைச்
சிந்தை கொண்டான்
முந்தும் தீயர்
மந்தை மாய்த்தான்
வர்மம் கொண்ட
மர்மப் போரில்
தர்மம் காத்த
கர்ம வீரன்
ஓர்வில் ஓரில்
ஓர்சொல் என்ற
தேர்வில் வென்ற
பேர்சொல் மேலோன்
நேம மோடு
சேம மாச்சு
பூமி மீது
ராம ராஜ்யம்
சிமிழ் இராமாயணம்
கோசலை பெற்ற மைந்தன் கோமுனி கோசிகன்தன்
தாசனாய்ப் பின்னே சென்று தாடகை தன்னைக் கொன்று
தேசினைக் கால் கை காட்டச் சீதையை மணந்த செய்தி
பேசுவார் பீடு கொள்வார், பெண்கள் மங்கலங்கள் காண்பார்
தன்முனைத் தான் சந்தித்துத் தன்சிலை தானே வாங்கித்
தன்னரும் தந்தை செய்தி தாயவள் சொல்லக்கேட்டு
தன்னவள், தம்பி பின்னே தாம்வரக் கான்சென்றான்தன்
இன்னரும் கதையைச் சொல்வார் இகபரம் இனிது காண்பார்.
வேடனைத் தம்பி ஆக்கி மேல்செலத் தன்னை அங்கும்
தேடியே வந்த தம்பி திருவடி பெற்றுப் போக
கேடுசூழ் அரக்கி மூக்குக் கிழிபடக் காட்டில் வாழ்ந்தான்
ஈடிலா வாழ்க்கை சொன்னால் எடுத்ததை முடிப்பர் திண்ணம்
கெஞ்சியே பெண்மான் பொன்மான் கேட்டிட இராமன் செல்ல
சஞ்சலப் பட்ட சீதை தம்பியத் துரத்த , அங்கே
வஞனை வேடம் பூண்டு வந்ததோர் இலங்கை வேந்தன்
வஞ்சியை , சீதை தன்னை மண்ணொடும் எடுத்துப் போக
பாதையை ஜடாயு என்னும் பறவையும் மறித்து வீழ்ந்த
சேதியைச் சொல்லி விண்ணிற் சேர்ந்திட அனுமன் வந்தே
ஆதியின் முதல்வன் என்றே அன்னையை வணங்கி நின்ற
காதையைச் சொல்வார் வாழ்வில் கடவுளைக் காண்பார் உண்மை
குரக்கின வேடந்தன்னைக் கூடவே தம்பி யாக்கி
அரக்கரின் நகரை நோக்கி அனுமனை அனுப்ப, அன்னோன்
திரைகடல் தாண்டிச் சென்று தேவியைக் கண்ட செய்தி
உரைப்பவன் வாழ்வில் நல்ல உள்ளொளி பெற்றுவாழ்வான்.
தாயிடம் ஆழி தந்து தருக்களை அழித்து, சேனை
மாயவே வைத்து மன்னன் மாளிகை சேர்ந்து சீதை
நாயகன் பெருமை கூறி, இலங்கை மாநகரின் மீது
தீயினை வைத்து மீண்ட செய்தியைச் சொல்வார் வெல்வார்.
சேதுவில் இராம நாமம் செப்பியே அணையைக் கட்டி
மோதிடும் வானரங்கள் முன்செல இலங்கை சேர்ந்து
தூதினை அனுப்பிப் பின்னர் தொடங்கிய போரைப் பற்றி
மீதுறச் சொல்வார் செல்வம் மேவிட இனிது வாழ்வார்
ஆர்த்திடும் அரக்கர் கூட்டம் அழிந்திடப் போர் தொடுத்து
கூர்த்திடும் இந்த்ர சித்தன், கும்பனை வென்று வெற்றிப்
போர்த்தொழில் இராவணன்தன் புல்லுயிர் போக வைத்த
நேர்த்தியைச் சொல்வார் வெற்றி நித்தமும் பெற்று வாழ்வார்.
தேவியின் தூய்மை காட்டத் தீயிலே குளிக்க வைத்துத்
தாவிடும் அனுமன் மூலம் தம்பிக்குச் செய்தி சொல்லி
பாவலர் பாட ராமன் பட்டாபி ஷேகம் கொண்டான்
நாவினால் சொன்னால் போதும் நமக்கினிப் பிறவி இல்லை
சீதை
கங்கைக்குள் ஓர் இமயம், கனலுக்குள் ஓர்குளுமை, கனிந்து கொண்ட
நுங்குக்குள் ஓர்வைரம், நுட்பத்தில் போர்முரசு, , வெண்மை பூத்த
சங்குக்குள் ஓர்நாதம், சாந்தத்தில் ஓர்சாட்டை, தழல்படுத்த
தங்கத்துள் ஓர்வீச்சு, சத்தியத்தின் உயிர்மூச்சு, தாயே சீதை
இராமபிரான்
சிமிழ் இராமாயணம்
சீதை
தீம்பு கருதாத் திறல் நாயகன்
உள்ளம் எழுமோர் உணர்வுப் பொழிவில்
வெள்ளம் எனவே விரிகண் ணனையே
அள்ளும் தமிழில் அணிசெய் திடவே
வள்ளல் கரிமா வதனா சரணம்
உலகோ டுவதும், உயிரோ டுவதும்
பலகோ டிகணம் பணியோடுவதும்
வலகோ டிடகோ இடைகோ டெனவே
அலகோ டெழுமுன் அருளோ அரியே!
கண்ணா யமுனைக் கனியே, கடலின்
வண்ணா , இனிமை வளார்வேய்ங் குழலின்
பண்ணா டுகிற பவளத் திருவாய்
மண்ணாடியதேன் மணிவாய் திறவாய்,
ஒற்றைச் சிவிகை உலகாள் வதென
அற்றைக் குடையால் அறிவித்தவனே
பற்றை இறுகப் படிவித் தவனே
சற்றைப் பொழுதே னும்சரண் தருவாய்
மருந்தா னவனே மலர் நாயகனே
திருந்தா னிவனென் னுளமெண் ணுவதோ
வருந்தா வகையே மனமே புகுவாய்.
பிருந்தா வனமாய்ப் பெரிதாய் வருவாய்.
தணியட் டுமெனச் சமயத் தினிலே
மணிகட் டிவரும் வடிவே அருள்வாய்
பணியட் டுமெனப் பரிசை ஒளியாய்
பிணிபட் டவரின் பிணிவிட் டிடவே!
மேய்க்கும் தொழிலின் விவரம் அறிவாய்
தாய்க்கும் பெரிதாய்த் தயைகள் புரிவாய்
ஏய்க்கும் எமைமேய்த் தலுனக் கரிதோ
காய்க்குள் கனியைக் கனிவிப் பவனே!
பாம்புத் தலையில் பரத நடமோ
தாம்புக் கயிறுன் இடைபொன் வடமோ
வீம்புக் கெனநான் விலகிச் செலினும்
தீம்பு கருதாய் திறல் நாயகனே!
மணமே வரினும் வளமே வரினும்
பணமே வரினும், பதவி வரினும்
கணமே னுமனம் கலையா திருக்கும்
குணமே தருவாய் குளிர்மா மணியே!
நீலக் கடலுன் நிறமாய் மகிழும்
கோலப் புவியுன் கடைவாய் அமுதம்
காலக் கடலில் கரையும் அடியேன்
மூலக் கனலே எதனை மொழிவேன்?
கீதைச் சுடரைக் கிளர்வித் தவனே
பாதைப் பயணம் படிவித்தவனே
மாதைத் துயரின் மடிமீட் டவனே
தாதை எனநான் சதிரா டுவதோ?
விழியாய் ஒளியாய் விதியாய் நிதியாய்
மொழியாய், மொழியின் முதலாய், கவியாய்
வழியாய், வகையாய், வரமாய் வளமாய்
எழிலாய்த் திருவாய் இறைவா வருவாய்!
>>விழியாய்ஒளியாய் விதியாய் நிதியாய்
>>மொழியாய்,மொழியின் முதலாய், கவியாய்
>>வழியாய்,வகையாய், வரமாய் வளமாய்
குருவாயூர்க் கொண்டல்
எண்ணமே சொல்தரும் வண்ணமே குருவாயூர்
ஏந்தலே என் தெய்வமே!
ஈரமே அன்பதன் வாரமே பாசமே
ஈந்தருள் ஆனந்தமே
திண்ணமே போதமே சித்தமே சேர்ந்திடும்
சீரான சித்தாந்தமே
தீராத அமுதமே திகழும்வேய்ங் குழலிலே
தேனாகிடும் நாதமே
கண்ணனாய் வந்தநற் காந்தமே ராதையின்
காதல் எழில்மோகமே
கானமே வேதமே ஞானமே கோபியர்
காட்டும் எழில்முத்தமே!
பண்ணமர் நாரா யணீயமே பாடிடும்
பாஞ்ச சன்யச் சங்கமே
பாம்பினில் ஆட்டமே அப்பனே எனையென்றும்
பாதுகாக்க வேண்டுமே!
ஹயக்ரீவர் துதி
ஞானமெனும் அருள் போதம் - மிக
நல்கிடும் நாயகன் பாதம்- உயர்
நலமேதரும் ஹயக்ரீவனின் அருள்நாடிடின் பெறுவார் நிதம்
நன்மை எனும் தன்மை
லகக்ஷ்மி ஹயக்ரீவன் போற்றி - அவன்
நாமமே என்றென்றும் சாற்றி - புகழ்
இசைபாடிடும் அடியார்தினம் வளமோடுயர் பொருள்யாவையும்
பெறுவார் நலம் உறுவார்
செல்வத் திருமகளோடு - அருள்
சேர்ப்பவனின் பதம் நாடு. - மிகத்
தெளிவானதோர் ஒளியாவையும் அறிவாகவே உனைமேவிடச்
செய்வான் நலம் பெய்வான்
நெஞ்சில் நினைந்திடில் போதும்- ஒளி
நேராகவே உளம் மோதும் - அந்த
நிலையானவன் அருள்நாயகன் துயரேயினி இலையேயெனச்
சொல்வான் நமை வெல்வான்
கானக் குதிரை முகத்தான் - அவன்
ஞானியர் பக்தி அகத்தான் - ஒரு
நடுநாயகம் எனவேதெரி வகையே நமை உயர்ந்தோங்கிடப்
புரிவான் வளம் சொரிவான்
தாமதமேன் வருவதற்கு?
தாமதமேன் வருவதற்கு?- மக்கள்படும்
சங்கடங்கள் போதாதா அருளள்ளித் தருவதற்கு?
பூமியிலே அந்நாளில் கெட்டவர்கள் சிலரே
பொல்லாங்கு செய்பவர்கள் இந்நாளில் பலரே
மேனியிலே ஓடுகிற இரத்தத்தின் பகுதி
வீதியிலே சிந்துதடா தீமைகள்தாம் மிகுதி
ஈனமின்று செய்பவர்கே யார்கொடுத்தார் தகுதி?
எங்கெங்கும் எவ்விடத்தும் தீயர்களின் தொகுதி
அந்நாளில் நீசொன்ன சொல்லும் மறந்ததுவோ
அநியாயம் அளக்குங்கோல் அய்யா மறைந்ததுவோ
பொன்னான நின்வரவு நிகழ்வதும் எப்போது?
பூரணனே இத்தருணம் தானதற்குத் தோது..
அய்யப்பன்
மோகத்தின் சூழ்ச்சியால் முகிழ்த்தனைநீ ஆயினும்
மோகத்தை வென்று விட்டாய்
மோகித்துனை நாடும் பக்தர்தம் நெஞ்சிலே
மோனமாய் நின்றுவிட்டாய்
தாகத்தைத் தீர்த்திடும் தண்ணீராய் நீமனத்
தாபத்தைத் தீர்த்துவைப்பாய்
சபரிகிரி மீதிலே தனைநாடும் பக்தர்தம்
‘சரண’த்தில் வாழுகின்றாய்
மேகத்திலே மலை ஆகத்திலே உளம்
ஒன்றிடும் பக்தியோடே
மேலேறி வந்திடும் பக்தர்தம் வாழ்விலே
விந்தைகள் செய்து காப்பாய்
தேகத்திலே குறை இன்றியே சிந்தையில்
தெய்வமே நீயிருக்கச்
செய்யப்பனே அருள் பெய்யப்பனே எமை
ஆண்டிடும் அய்யப்பனே!
ஐயப்பன் காவடிச்சிந்து
ஞான நாதனைக் காண வேண்டுமேல்
நாட்டுக அருட் தாகம் - பதம்
நாடுவார்க் கிலை சோகம்- அட
நண்ணுமோ வெறும் மோகம் - அவன்
நாடும் அன்பர்கள் கேடறச் செயும்
நல்ல மாமழை மேகம்
பாதகம் தனை மோதி மாய்த்திடப்
பந்தளம் வளர் ஐயன் - அரி
பரமனின் எழில் பையன் - நமைப்
பாதுகாத்திடும் கையன்- படி
பத்தொ டெட்டதன் மேலமர்ந்தருள்
பாலிக்கும் அருள் மெய்யன்
சபரி மாமலை மீதமர்ந்தருள்
தந்திடும் ஒளி ஜோதி - ஐயன்
சாற்றி வைத்தவை நீதி- அவன்
சத்தியப் பெயர் ஓதி - பதம்
சரண மென்றவர் மரணமஞ்சிடார்
சாருமோ எம பீதி?
காட்டுப் பாதையில் ஏறிச் செல்கையில்
கால்களில் வலு ஏறும்- மனம்
கட்டுக்குள் இளைப்பாறும்- மணி
கண்டனின் பெயர் கூறும் - கொடும்
காமக் குரோதமும் லோப மோகமும்
கண்ணியத்துளே மாறும்
சாமியே சரண் என்னவே பதம்
சாருவார் இனம் ஒன்றே - கொடும்
சாதி பேதமே வென்றே- ஐயன்
சத்திய வழி நின்றே-அந்தச்
சாந்த மூர்த்தியைக் காணுவார் உயர்
சபரிமாமலை சென்றே!
காந்த மாமலை மீதில் ஜோதியாய்க்
காட்சி கண்டிட லாகும்- கூட்டம்
காணக் கோடியாய்ப் போகும்- கண்டால்
கண்ணில் நீர்வழிந் தேகும் - மிகக்
கட்டுப்பாட்டொடு காலடி தொழ
கால பாபமும் வேகும்.
*
எண்ணத்திலே எழும் சிந்தனைகள் ஆயிரம்
எழுதவோ முடிவதில்லை
எண்ணத்திலே எழும் சிந்தனை சிற்சில
எழுதிடும் போது மற்றோர்
எண்ணத்திலே புகுந்தீர்த்திடும் இந்திர
ஜாலத்தைத் தேறவில்லை
எங்கேயோ மூலையில் தோன்றிடும் சிறுபொறி
என்னையே தீய்க்கும் என்றே
எண்ணத்தைச் சொற்களில் வடிக்கிறேன் வடித்ததை
இங்குநான் எழுதுகின்றேன்
என்னையே என்சொலில் இழைக்கின்ற தன்மையை
என்றனுக் கருளிஉள்ளத்
திண்ணையிலே எழும் சிந்தனை யாவையும்
சிறந்ததாய் அமையும் வழியே
செய்யப்பனே, நலம் பெய்யப்பனே உயர்
தெய்வமே அய்யப்பனே!
நெய்யபிஷேகம்
ஐயப்ப சாமிக்கு நெய்யபிஷேகம்
ஆனந்தம் காண்கின்ற கண்களின் யோகம்
கையில் பபயன்தரும் அன்புப்ரவாகம்
காணலாம் நாமங்கே காருண்ய யோகம்
வானின் அபிஷேகம் மண்ணுக்கு மாரி
மக்களின் வாழ்வில் வரம்தரும் வாரி
கானம் பொழிந்திடும் நாதாபிஷேகம்
காதுகள் பெற்றிடும் ஆனந்த ராகம்
நாம் பெற்ற தேகம் ஓர் தேங்காயின் கூடு
நம்முன் நிறைந்தநீர் காமத்தின் பீடு
தாம்கொண்ட தேங்காயின் கண்ணைத் திறந்தே
சாய்த்திட நீங்கிடும் காமம் மறைந்தே!
சத்தியத் தீம்பசும் பால் புரையிட்டுத்
தர்மத் தயிரிடை ஞான மத்திட்டு
சத்தைக் கடைந்தருள் வெண்ணெயைக் காய்ச்சி
சார்ந்திட நாம்பெறும் நெய் அவன் மாட்சி
கண்கள் தி றந்துதேங் காயில்நெய் பெய்து
காமம் புகலாமல் காவலைச் செய்து
அண்ணலை நெய்யிலே நாம் புக வைத்தே
அன்பாய்த் தலையில் சுமப்போம் துதித்தே~
ஜீவன் பரம்பொருள் தன்னிலே ஏறும்
சேதியை நெய்யபி ஷேகமே கூறும்
யாவும் அவன்பரம் என்கிற நேர்த்தி
ஆவது நெய்ய பிஷேகத்தின் கீர்த்தி
ஒவ்வொரு பக்தனின் உள்ளொளி கூடி
ஓங்கும் பரம்பொருள் ஒளியினில் கூடி
செவ்விய காட்சியாய்க் கண்களில் காட்டும்
தேடியே வந்ததன் பயனினைக் கூட்டும்
சாமி தரிசனக் காட்சி முத்தாய்ப்பு
சத்திய நெய்யபி ஷேகமே வாய்ப்பு
சாமியின் நாமம் நம் நெஞ்சில் தொடுப்போம்
சரணம் எனக் குரல் ஓங்கிக் கொடுப்போம்~
உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி !
துதிக்கையோ நினதுமுதல் தத்து வத்தின்
துலக்கமெனப் போகத்தில் யோகம் காட்டும்
பதிக்கின்ற இவ்வுலகில் உயிர்க ளெல்லாம்
பாலுணர்வின் இயக்கத்தில் பூத்த வென்றே
விதிக்கின்ற புனிதத்தை எடுத்துக் காட்டி
வித்தைக்கு முதலிடத்தை அதற்குள் நாட்டி
உதிக்கின்ற ஞானத்தை ஊட்டு கின்ற
உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி! 1
எப்பொருளும் வீணாக முளைப்ப தில்லை
எவ்வுயிரும் அற்பமென உயிர்ப்ப தில்லை
எப்பொழுதும் எவ்விடத்தும் இயக்க மின்றி
எப்படைப்பும் நிகழ்வதில்லை, ஒவ்வொன் றுக்கும்
செப்பரிய பொருளுண்டு, தொடர்ச்சி யுண்டு
தெய்வத்தின் கற்பிதத்தில் அனைத்தும் கூடும்
உட்பொருளை தோற்றத்தால் எடுத்துக் காட்டும்
உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி 2
அற்புதனே, அங்குசமும் பாசம் தானும்
ஆயுதங்க ளாகவிரு கரங்கள் தாங்க
பொற்புடனே துணையையொரு கரமணைக்கப்
புனிதமது கரமொன்றில் பொலிவு கூட்ட
பற்றுமெழில் துணையுடனே உல்லாசத்தில்
பரிந்திருக்கும் எழில்ஞான போக மூர்த்தி
உற்றதுணை யாய்க்காக்கும் கருணை யோகி
உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி!` 3
இன்னவெலாம் நல்கிடுவாய் என்று சொல்ல
எவராலும் இயலாது, ஞானத் திற்கு
உன்னதமாய் எவையெல்லாம் உண்டோ, வாரி
உபாசகர்க்கு நல்குகிறாய், உலக வாழ்வில்
சொன்னயமாய்ப் பேசுகிற திறமை, எந்தச்
சூழலிலும் அஞ்சாமை, வீரம் என்றே
உன்னடியார் தேவைகளைப் பூர்த்தி செய்யும்
உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி! 4
இன்பத்தின் உருவகம் நீ என்ப தாலே
இன்பத்தை எல்லோர்க்கும் நல்குகின்றாய்
துன்பத்தைப் போவென்றே அதட்டி மிக்கத்
தொலைவுக்குத் துரத்துகிறாய், உன்றன் மேலே
உன்மத்தம் பிடித்தவராய் இயங்கும் பக்தர்
ஒருபோதும் தேவைகளில் வீழ்வதில்லை
உன்பாதம் பணிபவர்க்கு நீயே தேவை
உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி! 5
உன்மூல மந்திரத்தை உபதே சத்தால்
உள்வாங்கி,, ஒருமையுடன் ஆழ்ந்து போற்றித்
தன்நெஞ்சம் ஏற்றிஉரு வேற்றும் பக்தன்
தர்க்கத்தில் வெல்லுகிறான், எதிர்த்து முண்டி
முன்னிற்கும் எதிரிகளும் வசிய மாவார்
முனியாமல் காக்கின்ற தெய்வம் நீயே
உன்னன்புக் கீடில்லை, பணிகின் றேன்நான்
உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி! 6
எளியவன்நீ, இனியவன்நீ, நினைக்கும் நெஞ்சில்
இசைபவன்நீ,, இறையவன்நீ, வாக்கில் ஏறித்
தெளிவுதரும் வித்தகன்நீ, சிங்கா ரன்நீ
சித்தன்நீ, அத்தன்நீ, துயர்கள் யாவும்
களைபவன்நீ, கனிபவன்நீ, கவர்ந்தே ஈர்க்கும்
காந்தன்நீ, சாந்தன்நீ, அண்டத் துள்ளே
ஒளிர்பவன்நீ, ஓங்கார ரூபன் நீயே
உச்சிஷ்ட கணபதியே போற்றி, போற்றி! 7
வெள்ளெருக்கைத் தேர்ந்தெடுத்துச் சின்னக் கட்டை
விரலளவு உருவாக்கி , தேன்பொ ழிந்தே
உள்ளுருகப் பூசிக்கும் உபாச கர்தம்
உடன்பேசும் கணபதியே, வலது தோளில்
கொள்ளையெழில் காட்டியமர்ந் திருக்கும் ஐயா
குஞ்சரமே, உத்தமனே, பக்தர் நெஞ்சில்
உள்ளிருக்கும் பக்திகண்டு நெகிழும் தேவா
உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி! 8
எழில்நீலா சரஸ்வதியை இடப்பா கத்தே
ஏந்தி விளையாடுகிற தேவா, சற்றே
விழிபார்த்தால் இனியொருதாய் குடருக்குள்ளே
வீழுகின்ற நிலையில்லை, விண்ணோ ரெல்லாம்
வழிபார்த்தே உனைவணங்கக் காத்தி ருப்பார்
வாய்க்கும் உன் பிரசாத மீதம் உண்டால்
ஒழியாத துன்பங்கள் ஒழிந்து போகும்
உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி 9
படுக்கையிலே தானமர்ந்து ஜபித்த போதும்
பலனள்ளிக் கொடுக்கின்றாய், தீட்டில் கூட
அடுத்துனையே வணங்கிடலாம், கல்வி கேள்வி
அறிவுநலம், செல்வம், பின் பேற னைத்தும்
எடுத்தெடுத்துக் கொடுப்பதற்கே உன்னைப் போல
எவருள்ளார்?, உடுப்பின்றி வணங்க ஞான
உடுப்பணியக் கொடுக்கின்றாய், ஒப்பில் லாத
உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி! 10