தமிழ்த்தாய் பள்ளியெழுச்சி

2 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Apr 14, 2026, 9:36:17 AM (2 days ago) Apr 14
to santhavasantham
தமிழ்த்தாய் பள்ளியெழுச்சி

(எண்சீர் ஆசிரிய விருத்தம் - விளம் விளம் விளம் மா - அரையடிக்கு)

பனிமலர் விரிந்திடப் பரிதியும் எழுந்தான், 

… படர்பொருள் ஒளிர்ந்திடச் சுடர்மழை பொழிந்தான், 

தனியெழில் மிகுந்தவள் எனநினைப் புகழ்ந்து 

… தளிரடி வணங்கிடத் திரண்டனர் கவிஞர், 

நினைவெனும் வெளிதனில் நிறைந்திடும் அமுதே! 

… நிதம்நிதம் புதுக்கிடும் நிகரறு பொருளே! 

நனிமகிழ் வருளிடும் நலமிகு மொழியே! 

… நந்தமி ழே!பள்ளி எழுந்தரு ளாயே.  (1)


ஒருகையில் குறளுமற் றொருகையில் நாலும், 

… ஒலிமிகு சிலம்புடன் நடமிடும் காலும், 

இருள்கெடப் பொழிந்திடும் இருசுடர் ஒளிபோல் 

… இளமையும் செழுமையும் விளங்குமெந் தாயே! 

பரிவுடை விழிமலர் துயில்கெடத் திறப்பாய் 

… பழமையும் புதுமையும் குலவிடச் சிறப்பாய் 

மருள்கெடப் புவிக்கொரு தெளிவினை அளிப்பாய் 

… மணித்தமி ழே!பள்ளி எழுந்தரு ளாயே.  (2)


அடர்பொழில் பொதிகைவாழ் தென்றலில் மிதந்தாய்

… அகமகிழ் இளங்குயில் இசையிடைத் திகழ்ந்தாய்!

கடலலைச் சுருளுடன் கலந்தொலி விளைத்தாய்!

… களிமிகு கிளியின்வாய் மொழியென இனித்தாய்!

முடியுடை மூவர்வான் முரசுடன் எழுந்தாய்!  

… முரணறு பாணர்யாழ் முழக்குடன் இசைந்தாய்!

அடிதொறும் சுவைமிகு கவியென நடந்தாய்!

… அணித்தமிழே! பள்ளி எழுந்தருளாயே.  (3)


இதன் இசையைக் கேட்க : 



- இமயவரம்பன்



Siva Siva

unread,
Apr 14, 2026, 9:39:47 AM (2 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
தமி ழே!பள்ளி எழுந்தரு ளாயே.  (1) / 

I think it is the Tamil population that is sleeping.
So, maybe the following is more fitting.

தமி ழா!பள்ளி எழுந்தரு ளாயே.  (1)

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Apr 14, 2026, 9:41:18 AM (2 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
Ha ha! Very true! Thanks!

Kaviyogi Vedham

unread,
Apr 14, 2026, 11:12:11 AM (2 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
பலே  பலே இமயம்..,
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPgW6nQ5jpPunCd_L8TSMhD6JuX5G-W8UsU7aZhbS4Dqw%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Apr 14, 2026, 11:16:40 AM (2 days ago) Apr 14
to சந்தவசந்தம்
அருமை.

புலவர் ஐயா ஏற்பாட்டில் புலவர், சுரேஜமீ, விவேக்பாரதி மற்றும் நான் தமிழ்த்தாய் திருப்பள்ளியெழுச்சி எழுதினோம். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
maxresdefault.jpeg

K.R. Kumar

unread,
Apr 14, 2026, 9:09:57 PM (2 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு, இமையவரம்பன் ஐயா.

இனி வருங்காலத்திலும் இவ்வாறே பதிவிடுங்கள். முகநூல், எக்ஸ் தளங்களில் பதிவிட்டால் எங்களைப் போன்றோரிடம் வந்து சேராது.

அன்புடன்,
குமார்(சிங்கை) 

Reply all
Reply to author
Forward
0 new messages