பனிமலர் விரிந்திடப் பரிதியும் எழுந்தான்,
… படர்பொருள் ஒளிர்ந்திடச் சுடர்மழை பொழிந்தான்,
தனியெழில் மிகுந்தவள் எனநினைப் புகழ்ந்து
… தளிரடி வணங்கிடத் திரண்டனர் கவிஞர்,
நினைவெனும் வெளிதனில் நிறைந்திடும் அமுதே!
… நிதம்நிதம் புதுக்கிடும் நிகரறு பொருளே!
நனிமகிழ் வருளிடும் நலமிகு மொழியே!
… நந்தமி ழே!பள்ளி எழுந்தரு ளாயே. (1)
ஒருகையில் குறளுமற் றொருகையில் நாலும்,
… ஒலிமிகு சிலம்புடன் நடமிடும் காலும்,
இருள்கெடப் பொழிந்திடும் இருசுடர் ஒளிபோல்
… இளமையும் செழுமையும் விளங்குமெந் தாயே!
பரிவுடை விழிமலர் துயில்கெடத் திறப்பாய்
… பழமையும் புதுமையும் குலவிடச் சிறப்பாய்
மருள்கெடப் புவிக்கொரு தெளிவினை அளிப்பாய்
… மணித்தமி ழே!பள்ளி எழுந்தரு ளாயே. (2)
அடர்பொழில் பொதிகைவாழ் தென்றலில் மிதந்தாய்
… அகமகிழ் இளங்குயில் இசையிடைத் திகழ்ந்தாய்!
கடலலைச் சுருளுடன் கலந்தொலி விளைத்தாய்!
… களிமிகு கிளியின்வாய் மொழியென இனித்தாய்!
முடியுடை மூவர்வான் முரசுடன் எழுந்தாய்!
… முரணறு பாணர்யாழ் முழக்குடன் இசைந்தாய்!
அடிதொறும் சுவைமிகு கவியென நடந்தாய்!
… அணித்தமிழே! பள்ளி எழுந்தருளாயே. (3)
இதன் இசையைக் கேட்க :
![]() | |
- இமயவரம்பன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPgW6nQ5jpPunCd_L8TSMhD6JuX5G-W8UsU7aZhbS4Dqw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/6DA253EA-16B2-4B72-B0C8-D71E213FD5B5%40gmail.com.