தமிழாக்கக் கவிதைகள்

47 views
Skip to first unread message

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 16, 2026, 11:14:23 AM (9 days ago) Jun 16
to சந்தவசந்தம்
சிவதாண்டவம் ( தமிழில் )

சந்தக் கலிவிருத்தம்

(தனாதனா தனாதனா தனாதனா தனாதனா)

சடைக்குமேல் பெரும்புனல் சதாநிதம் பொழிந்திடும்
விடத்தினைத் தரும்பணம் விளங்கிடும் கழுத்தினில்
உடுக்கைடுட் டுடுட்டுடென் றொலித்திடும் களிப்புடன்
நடித்தசண் டதாண்டவம் நமக்கருள் வழங்குமே (1)

சடைக்குளே சுழன்றுநீர் தடாகமாய் விளங்கிடும்
துடிக்கரன் நுதல்தனில் சுடர்தகக் தகக்கவே
படர்ந்தநற் சடைக்குமேல் பனிச்சுடர் தரித்தவன்
இடம்நிதம் பணிந்துநான்  இறைஞ்சியே வணங்கினேன் (2)

பருப்பதன் மகட்கருள் பவன்நிதம் மகிழ்ந்திட
நிருத்தமிட் டணைத்தவன் நினைத்திடச் சிறந்தவன்
அருள்தனைக் கடைக்கணால் அளித்திடும் திகம்பரன்
வரம்தரும் சிவன்கழல் வணங்கிநான் மகிழ்கிறேன் (3)

அராமணிப் ரகாசமாய் அணிந்தவன் நிராகுலன்
விராவுகுங் குமத்துடன் விளங்குமா தரும்புகழ்
சராசரன் களிற்றதள் தரித்தவன் பராபரன்
புராரிசங் கரன்பதம் புகழ்ந்துபோற் றஇன்பமே (4)

அணாமலைக்கு நாதனே அரோகரா சிவாயெனக்
கணாயிரத் தனும்பரார் கனிந்துநின் றுபோற்றுமுக்
கணாஅரா நிலாதிகழ்  கதிர்ச்சடா தராஉனைப்
பணோடுபா டியாடியே பணிந்துளம் மகிழ்கிறேன்(5)

கருப்புவில் தரித்துவந் தகாமனைச் சிதைத்திட
நெருப்பெனும் நடுக்கணால் நெருப்பைவிட் டெரித்தவன்
திருச்சடைக் குமேல்நிலா திகழ்ந்திடும் கபாலியை
விருப்புடன் வணங்கவே விளைந்திடும் நலன்களே (6)

பகைத்துவந் தகாமனைப் படாரெனக் கணால்சுடும்
தகத்தகத் தகத்திடும் தழல்கணன் பருப்பதன்
மகட்கிடம் வழங்கிடும் மகேஸ்வரன் மகாசிவன்
அகத்திலன் புவைத்துநான் அவன்பதம் வணங்குவேன் (7)

நிலாஇலா இராவணம் நிகர்த்தநீ லகண்டனே
நிலாநிலா தநீர்அரா நிலைத்தசெஞ் சடாதரா
சலாபமாய்க் களிற்றதள் தரித்ததே வதேவனே
உலாசமா கஆடியே உனைத்தினம் வணங்குவேன் (8)

பகைத்ததக் கனின்சிரம் பரித்தவன் புரத்தினை
நகைத்தெரித் தநாயகன் நமன்நடுங் கிடச்செயும்
புகழ்த்திருப் பதத்தினான் புகழ்மலிந் தகாமனைப்
புகைத்தெரித் தஈசனைப் புகழ்ந்துபோற் றநன்மையே (9)

மலர்களைச் சடைக்குமேல் மகிழ்ந்தணிந் தஈஸ்வரன்
மலர்ச்சரத் தைவிட்டமன் மதன்தனைப் பொடித்தவன்
பலம்மிகுந் தமுப்புரம் பகைத்துவந் தெரித்தவன்
நலந்தரும் சிவன்பதம் நயந்துநான் வணங்குவேன் (10)

சடைக்குளே அராவினம் சதாசுழன் றுசீறுமே
நடுக்கணோ தகித்திடும் நெருப்புடன் விளங்குமே
உடுக்கைமத் தளத்தொடே ஒலிக்கவே ஒலிக்கவே
நடித்தசண் டதாண்டவம் நமக்கருள் வழங்குமே (11)

நரர்சுரர் பகுப்பிலா நலம்வழங் குநாதனே
விருப்பிலா வெறுப்பிலா விகிர்தனே ஒருத்தனே
அருட்புரிந் தனைத்துமாய் அனாதியா னஜோதியே
வரம்தரும் சிதம்பரா மகிழ்ந்துநான் வணங்கினேன் (12)

அவாவெலாம் அகற்றியே அகன்றகங் கைஆடியே
சிவாயஓம் சிவாவெனத் திருப்பெயர் களோதியே
சிவாலயத் திலேஉனைத் தினம்வணங்கிடச் செயாய்
சிவாயஓம் சிவாயஓம் சிவாயஓம் சிவாயவே (13)

சதாசிவன் திருப்புகழ் சதாதினம் படிக்கவே
சதாநிதம் துதிக்கவே சதாநினைந் துகேட்கவே
நிதானமே நிலைத்திடும் நிறைந்தநன் மைநல்குமே
அதாகஞா னமேஅடைந் தருள்நிறைந் துவாழ்வரே (14)

இராவணன் படைத்தஇந் தஏற்றமிக் கபாடலை
இராமுடிந் தகாலைதன் னிலேஎழுந் துபாடவே
இராஜரா ஜராஜனாய் எலோருமே தொழும்படித்
தராதலத் திலின்பமே தழைத்துவந் துசேருமே (15)


பிற்குறிப்பு:

இராவணன் சமஸ்கிருதத்தில் இயற்றிய சிவதாண்டவ ஸ்தோத்ரத்தைத் தழுவி தமிழில் இயற்றப்பட்டது.


யாப்புக் குறிப்பு:

சந்தக் கலிவிருத்தம் - தனாதனா தனாதனா தனாதனா தனாதனா.

இச்சந்தத்தைத் - தனாதனான தானனா தனாதனான தானனா - என்றும் நோக்கலாம்.

"லகு-குரு" என்ற அமைப்பு அடிகள்தோறும் 8 முறை வரும்.

லகு லகு லகு லகு லகு லகு லகு லகு

குரு = நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.

லகு = குறில் (ஒற்றுத் தொடராதபோது).

அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.

இச்சந்தத்தை வடமொழியில் "பஞ்சசாமரம்" (pañcacāmaram - पञ्चचामरम्) என்பர்;


Kanchipuram K Thangavel

Ram Ramakrishnan

unread,
Jun 16, 2026, 2:05:46 PM (9 days ago) Jun 16
to santhav...@googlegroups.com
அருமை, திரு. தங்கவேல்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 16, 2026, at 11:14, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

சிவதாண்டவம் ( தமிழில் )
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1f698046-dd35-4119-bd89-243a7cc6a088n%40googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 16, 2026, 6:44:26 PM (9 days ago) Jun 16
to சந்தவசந்தம்

திரு. ராம் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 16, 2026, 7:02:37 PM (9 days ago) Jun 16
to சந்தவசந்தம்

தங்கமாலை துதி

பாவகை : குறள்வெண்செந்துறை

விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் காய்

அன்புரு வேசிவன் அவன்புகழ் பாடியே    
  அகத்திருள் அழுக்கினை அகற்றிடுவேன்
அன்னையு டன்திகழ் அப்பனே சங்கர
   அடியவன் உன்னடிக் கடைக்கலமே (1)

ஆயிரங் கண்ணனின் அகந்தையை அடக்கிய
   ஐயனே அறத்தினைக் காப்பவனே
தாயுடன் மேவிய சங்கர னேசிவ
    தாமரைத் தாளிணை சரணடைந்தேன் (2)

இபத்ததள் அணிந்தனை அனங்கனை எரித்தனை
   எரிதிகழ் கண்ணுடை இறையவனே
அபயம ளித்திடும் அம்பிகை துணைவனே
    அடியவன் உன்னடிக் கடைக்கலமே (3)


பிற்குறிப்பு:

சங்கராச்சார்யர் அருளியசுவர்ணமாலா ஸ்துதி 
அ’ விலிருந்து ‘க்ஷ’ வரை உள்ள அக்ஷரங்களை
 வரிசைக்கிரமமாக ச்லோகங்களின் முதலெழுத்தாக 
வைத்து செய்த துதி ஆகும்.

அதை தழுவி தமிழில் உயிர்12 மற்றும் மெய் 18
ஆயுதம் 1 என 31 பாடல்களை எழுத உள்ளேன் .

பாடல் மற்றும் தமிழ் விளக்கம்
https://shaivam.org/scripture/Tamil/2581/suvarnamala-stuti-tamil-translation/#gsc.tab=0

பாடலக் கேட்க https://youtu.be/beZs0SF9R1Q?si=zw9ys-El79EKD-Jx

வினாக்கள்
எந்த ஒரு சமஸ்கிருத அல்லது வேற்று மொழிப் பாடலையும் 
மூலக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழில் 
நடையிலும் கவிதைச் சுவையிலும் பா அமைப்பிலும் மாற்றி அமைக்கலாமா?
(சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு இன்றி).

2) அதை தமிழாக்கக் கவிதைகள் என்று கூறலாமா ?

17/06/2026
Kanchipuram K Thangavel

Siva Siva

unread,
Jun 16, 2026, 8:54:19 PM (8 days ago) Jun 16
to santhav...@googlegroups.com
வர்ணமாலா = alphabet.
வர்ணமாலை - n. < varṇa-mālā. The alphabet; நெடுங்கணக்கு.

English translations of -  सुवर्णमालास्तुतिः (शङ्कराचार्यविरचिता) | suvarNamAlAstutiH | (Scan, Videos 12, meaning 123)  :

For padhigams with a similar concept:
மதிசூடி 2.56 - https://madhisudi.blogspot.com/2016/01/0256.html

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 18, 2026, 12:22:12 PM (7 days ago) Jun 18
to சந்தவசந்தம்
வணக்கம் குருவே
தங்களின் மதிசூடி 2.17 மற்றும் 2.56 ஏற்கனவே படித்தேன் 
மீண்டும் படித்தேன். நன்றாக உள்ளது.
தாங்கள் அனுப்பிய இணையதள இணைப்புகளுக்கு மிக்க நன்றி 
முடிந்த வரை கருத்து சிதையாமல்
எழுத முயல்கிறேன் 

முதல் பாடல் மூலப்பாடலில்  குணம் என்று உள்ளது.
நான் அன்பு என்று மாற்றியுள்ளேன்.

இரண்டாம் பாடலில் தண்டு முனிவருக்குப் பிரியமாவர் சிவன்
 என்ற கருத்து உள்ளது. எஎனவே திருத்தம் செய்ய விழைகிறேன் .
மேலும் ஏழாவது பாடல் எப்படி எழுதுவது???

சுவர்ணமாலா ஸ்துதி  -தங்கமாலை துதி

அத2 கத2மபி மத்3ரஸநாம் த்வத்3கு4ண
       லேசைர் விசோத4யாமி விபோ4
ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர
       சரணம் மே தவ சரணயுக3ம்  (1)

அன்புரு வேசிவன் அவன்புகழ் பாடியே     
  அகத்திருள் அழுக்கினை அகற்றிடுவேன்
அன்னையு டன்திகழ் அப்பனே சங்கர
   அடியவன் உன்னடிக் கடைக்கலமே (1)

ஆக2ண்ட3ல மத3 க3ண்ட3ந பண்டி3த
       தண்டு3 ப்ரிய சண்டீ3ச விபோ4
ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ3 சங்கர
       சரணம் மே தவ சரணயுக3ம்      (2)

ஆயிரங் கண்ணனின் அகந்தையை அடக்கிய
    ஐயனே தண்டுமு னிக்கினியாய்
தாயுடன் மேவிய சங்கர னேசிவ
    தாமரைத் தாளிணை சரணடைந்தேன் (2)

இப4சர்மாம்ப3ர சம்ப3ர ரிபுவபு:
       அபஹரணோஜ்ஜ்வல் நயந விபோ4
ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர
       சரணம் மே தவ சரணயுக3ம்    (3)

இபத்ததள் அணிந்தனை அனங்கனை எரித்தனை
   எரிதிகழ் கண்ணுடை இறையவனே
அபயம ளித்திடும் அம்பிகை துணைவனே 
    அடியவன் உன்னடிக் கடைக்கலமே (3)

ஈச கி3ரீச நரேச பரேச
       மஹேச பி3லேசய பூஷண போ4
ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர
       சரணம் மே தவ சரணயுக3ம் (4)

ஈசனே கயிலையின் வாசனே எங்களின்
   இறைவனே பாம்பினை அணிந்தவனே
ஈசையி னோடுறை சங்கர னேஉன
   திணையடிக் கடியவன் அடைக்கலமே (4)

உமயா தி3வ்ய ஸுமங்க3ள விக்3ரஹ -
       யாலிங்கி3த வாமாங்க3 விபோ4
ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர
       சரணம் மே தவ சரணயுக3ம்      (5)

உமையொரு பாகனே உமையவள் தழுவிய
  ஒளிமலி வடிவுடை சங்கரனே
உமையுடன் மேவிய ஒப்பிலா நாதனே
   உன்னடிக் கடியவன் அடைக்கலமே (5) 

ஊரீ குரு மாமஜ்ஞ மநாத2ம்
       தூ3ரீ குரு மே து3ரிதம் போ4
ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர
       சரணம் மே தவ சரணயுக3ம்   (6)

ஊனுட லோடுழல் ஊமைஅ னாதையின்
   ஊழ்வினைத் தீர்த்தெனை ஆண்டருள்வாய்
ஞானம ளித்திடும் நாயகி பாகனே
   ஞானம லர்ப்பதம் சரணடைந்தேன் (6)

ரிஷிவர மாநஸ ஹம்ஸ சராசர
       ஜநநஸ்தி2திலய காரண போ4
ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர
       சரணம் மே தவ சரணயுக3ம்             (7)

ஏழாவது பாடல் மூலத்தில் ரி தமிழில் எ என்ற எழுத்தில் எழுதலாமா?

Siva Siva

unread,
Jun 18, 2026, 1:18:59 PM (7 days ago) Jun 18
to santhav...@googlegroups.com
வடமொழியில் உள்ள சுலோகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் நல்ல முயற்சி. ஆனால் யாருக்குப் பயன் தரும் என்பது ஒரு வினா.
சில சமயம் மூலத்தில் உள்ள சில கருத்துகளை விட்டும், சில அடைமொழிகளை நுழைத்தும் தமிழில் எழுதவேண்டி வரும்.

சுவர்ணமாலையில் வடமொழி எழுத்துவரிசை தமிழ் எழுத்துவரிசை வேறுபாடுகளும் சிக்கலை விளைக்கும்.

வி. சுப்பிரமணியன்

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 24, 2026, 2:46:46 AM (yesterday) Jun 24
to சந்தவசந்தம்
வணக்கம் குருவே

மொழிபெயர்த்தலில் பற்றி தங்கள் விளக்கம் மிகவும் உதவியாக 
உள்ளது மிக்க நன்றி 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 24, 2026, 2:49:38 AM (yesterday) Jun 24
to சந்தவசந்தம்
தங்கமாலை துதி

பாவகை : குறள்வெண்செந்துறை
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் காய்

எண்ணிய முனிவரின் மனத்துறை ஈசனே
   இசைவுடன் முத்தொழில் புரிபவனே
அண்ணலே அன்னையு டன்திகழ் அப்பனே
  அடியவன் உன்னடிக் கடைக்கலமே (7)

ஏறினி லேதிகழ் சந்திர சேகரா
   எழில்தரும் கண்டிகை அணிந்தவனே
மாறிலா மங்கையு டன்திகழ் மன்னனே
   மலரடிக் கடியவன் அடைக்கலமே (8)

ஐயனே என்விழி மலர்களை உன்திரு
    அடிகளில் அர்ப்பணித் தேத்திடுவேன்
தையலு டன்திகழ் சங்கர னேசிவ
    தாமரைத் தாளிணை சரணடைந்தேன் (9)

ஒருவனே வேதமெ லாம்புகழ் ஐயனே
    ஓம்சிவ சிவசிவ சங்கரனே
திருநிறை உமையுடன் மருவிய ஈசனே
   திருவடித் தாமரை சரணடைந்தேன் (10)

ஓம்பிய பக்தருள் ஒன்றிய ஒருவனே
  உலகினைக் காத்திடும் நாயகனே
சாம்பவி உடனுறை சங்கர னேசிவ
  தாமரைத் தாளிணைச் சரணடைந்தேன் (11)

ஔவியம் நீங்கிய அடியவர் துதிசெயும்
அருமறை மெய்பொருள் ஆனவனே
கௌரியு டன்திகழ் சங்கர னேசிவ
கழலிணைக் கடியவன் அடைக்கலமே (12)

உயிரெழுத்துக்கள் வரிசை முற்று.
அடுத்து மெய்யெழுத்துக்கள் வரிசை விரைவில்...
Reply all
Reply to author
Forward
0 new messages