முற்குறிப்பு:
இந்தப் பாடல் சமீபத்தில் நிகழ்ந்த பாடற்-பட்டிமண்டபத்தின் தீர்ப்பு வருமுன்னரே எழுதப்பெற்றது!
படை - சேனை - தற்செயலாக அமைந்த ஒற்றுமை!
Another vegetable veNbA!
15)
2026-04-03
சேனைக்கிழங்கு
----------------
(வெண்பா)
மீனைப் புரைகண்ணி வீடாளும் மாதரசி
சேனைக் கிழங்கின்று தேவையென்றாள் - பானைக்
கடையருகே காய்க்கடையில் கண்டுவென்றேன் எந்தப்
படைவருமோ என்ற பயம்!
பதம் பிரித்து:
மீனைப் புரை-கண்ணி, வீடு ஆளும் மாதரசி
"சேனைக்கிழங்கு இன்று தேவை" என்றாள்; - பானைக்
கடை அருகே காய்க்கடையில் கண்டு, வென்றேன் எந்தப்
படை வருமோ என்ற பயம்!
புரைதல் - ஒத்தல்;
படை - ஆயுதம்;
V. Subramanian
On Apr 7, 2026, at 02:30, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMPQ8YVGNbmwm2guaGs7%2BrptL8XWpx5X1_4k%2B%3DGb1Um4w%40mail.gmail.com.
ஆனைப் பலம்கொண்டு ஆர்வரினும் நம்தேவ
சேனைப் பதியிருக்க ஏன்பயம்?-பானைக்
கடையருகே சேனையைக் கண்ட பெருமிதமே
படைகொண்டு வெல்லும் பலம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMPq_ARRKgSR20JcHynD4QurPsdYHNq-Nkc1VbJ_UtOEA%40mail.gmail.com.