--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருப்பூர் கிருஷ்ணன் முகநூலில் எழுதியது :கவிஞர் இளந்தேவன் ஜூலை 11 செவ்வாய் மாலை காலமானார். தொடர்புத் தொலைபேசி 8667328939, முகவரி 39, எஃப் 1,க்வீன் சரசுவதி, பாரதியார் தெரு, மாருதி நகர், ஐய்பப்நதாங்கல், சென்னை.
--
அவருக்குக் கவியரசுப் பட்டம் இரத்தினகிரியில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது நடந்த கவியரங்கில் 40 கவிஞர்களுக்குமேல் கலந்துகொண்டார்கள். நான் தான் தலைமை.தமிழ்மாறன் ஏற்பாட்டு செய்ய நாங்கள் தமிழ்நாட்டின் பல இடங்களில் கவிதைப் பட்டிமண்டபம் நிகழ்த்தியிருக்கிறோம். முத்துராமலிங்கம் என்பது இயற்பெயர். டி ஏ.வி பள்ளியில் ஆசிரியராகப்பணியாற்றியவர்.தமிழக அரசின் தமிழரசு பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
முதன்முதலில் 'மண்ணுலகத்து நல்லோசைகள்' என்ற தலைப்பில் டிஎன்ஆர் வீட்டில் நடந்த கவியரங்கில் வந்து on-the-spot composition என்று அன்று நடத்திய கிளையரங்கில் 'கிட்ணாம்பேட்டை துஸ்காணம்மன்' என்று முடியும் சந்தக் கவிதைதான் அவரை நினைத்தாலே நினைவுக்கு வருகிறது.அமரருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
"ஒன்று தெய்வம் ராமனே
உலகனைத்தும் கோயிலே
என்றுவாழும் தேவனே
எங்கள் ஆஞ்சநேயனே
அன்றரக்கர் வாலிலே
அஞ்சிலொன்றை வைப்பினும்
வென்றுவந்த வீரனே
வெல்க ராம தூதனே.
இரு நிலத்து வீரர்கள்
இருபுறத்தும் போரிட
குருநிலத்துப் பார்த்தனின்
கொடியில் வந்த மாருதி
அரிய வெற்றி அர்ஜுனன்
அன்றுபெற்ற காரணம்
கருதிவந்து நிற்கிறேன்
காக்கவேண்டும் ஐயனே
மூன்று தேவ தேவர்கள்
மூன்று தேவிமாருடன்
தோன்றுகின்ற போதிலே
தூயபிரம்மச் சாரியாய்த்
தோன்றுகின்ற வீரனே
துணையெனக்கு நின்னருள்
தோன்றுமாயின் என்னிடம்
தொடர்ந்து வெற்றி காணுமே
நாலு வேதம் நாவிலே
நல்லபக்தி மூச்சிலே
சீலம் அன்பு நெஞ்சிலே
சீர்த்தியென்றும் பேரிலே
நீலமேனி ராமனின்
நிலைத்தநாமம் உயிரிலே
நாளும் கொண்டு வாழும் உன்
நாமம் எங்கள் மந்திரம்
அஞ்சு பூதம் உன்னிடம்
அஞ்சும் பூதம் ஐயனே
மஞ்சுவண்ண ராமனை
மனதில் வைத்த மாருதி
தஞ்சமென்ற நேயரைத்
தாங்குகின்ற தெய்வமே
அஞ்சுவண்ண நாயகா
அஞ்சல் என்று காக்கநீ.
ஆறு வான மாகவே
அன்று சென்று ஜானகி
மீறு துன்பம் தீரவே
மீட்சிதந்த தூதனே
வீறுகொண்டு தூதர்கள்
மூவர்வந்து நிற்கையில்
கூற உண்டு மந்திரம்
கூவ உண்டு நெஞ்சகம்
ஏழு சாகரத்தையும்
இமைக்கும் முன்னர் தாவவே
மேலும் மேலும் ஓங்கும் உன்
மேன்மையென்ன புதியதா
பாலனான போதிலே
பரிதிநல்ல பழமென
நீளுகின்ற கையினால்
நீபறிக்கத் தாவினாய்
எட்டெழுத்தில் உள்ளவை
இரண்டெழுத்தில் உள்ளதைச்
சுட்ட வந்த மாருதி
சொல்லின் செல்வன் நீயெனக்
கட்டறுத்த ஞானியும்
கருதுகின்ற ராமனே
பட்டம் அன்று தந்தனன்
பல்கலைக்கும் வேந்துநீ.
ஒன்பதான வாசல்கள்
உள்ள வீட்டில் உள்ளநான்
இன்பவாழ்வு வாழவே
இராமநாமம் வேண்டுமே
அன்பிலாத கூட்டிலே
அச்சம் என்ற பேய்வரும்
என்பதாலே வேண்டினேன்
ஏற்றபக்தி நீகொடு
பத்து மொத்தம் திக்குகள்
பத்திடத்தும் உன்பெயர்
அத்தனென்று ஜானகி
அன்றழைத்த தன்மையால்
வித்து வேத வித்துநீ
வேட்கையற்ற ஞானிநீ
சித்து நீ அசித்துநீ
செய்கையற்ற பிரம்மம்நீ
தன்னை வெல்லும் ஒருவனே
தடையைவெல்லுவான் எனும்
உண்மைசொன்ன தேவனே
உன்னிடத்தில் வேண்டுகோள்
என்னுடம்பை எஃகிலும்
என்மனத்தை இடியிலும்
கண்ணிரண்டைக் கதிரிலும்
கடைந்துவைக்க வேண்டும் நீ
கன்னியர்க்குத் திருமணம்
காளையர்க்குப் பதவிகள்
சின்னவர்க்கு நெஞ்சுரம்
ஜெயம் எவர்க்கும் வேண்டுமே
பொன்னிறத்து மாருதி
புயலளித்த மைந்தனே
முன்னுகின்ற செயலெலாம்
முடித்துவைக்க வேண்டும் நீ
ஆழிதாவி ஆழியை
அன்று தந்த மாருதி
மீளவந்து நேரிலே
மெய்யர்காண நிற்கிறாய்
ஊழி ஊழி செல்லினும்
ஓங்கும் ஓங்கும் உன்புகழ்
வாழிராம மந்திரம்
வாழி ஆஞ்சநேயனே." ( இளந்தேவன் )
[ நன்றி : க.ரவி ]
உணர்வு பூர்வமான அஞ்சலி.அவரை நான் கேட்டதில்லை.இளந்தேவன் கவிதைகள் சில அவரை தெரிந்தவர்கள் இட்டால் நன்று.நா. கணேசன்
"ஒன்று தெய்வம் ராமனே
உலகனைத்தும் கோயிலே
என்றுவாழும் தேவனே
எங்கள் ஆஞ்சநேயனே
அன்றரக்கர் வாலிலே
அஞ்சிலொன்றை வைப்பினும்
வென்றுவந்த வீரனே
வெல்க ராம தூதனே.
இளந்தேவன் கவிமாமணிதானே?
அமரருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
--அன்புடன்,
ஹரிகி.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
இலக்கியச்சக்கரவர்தி கவியரசர் இளந்தேவன் அவர்கள் 5-12-1999 அன்று எனது “நிலவே நீ சொல்” என்ற கவிதைத் தொகுப்பிற்கு அளித்த அணிந்துரையை அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில்பெருமைப்படுகிறேன். இளந்தேவன் அவர்களுக்கு நான் செலுத்தும் அஞ்சலியும் ஆகும்.
Thanks Shri Pasupathy.
N V Subbaraman.
என் வருத்ததையும் இரங்கலையும் அவருடைய குடும்பத்தாருக்குதெரிவித்துக்கொள்கின்றேன்கலைமகள் ஹிதாயாரிஸ்வி -இலங்கை13 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 10:14 அன்று, Subbaraman NV <nvsubb...@gmail.com> எழுதியது:Please read my ENVIUS THOUGHTS in https://nvsr.wordpress.com this Sunday Story on 9/7/17 titled WEEK OF DEATHS.N V Subbaraman2017-07-12 5:07 GMT+05:30 Subbaraman NV <nvsubb...@gmail.com>:இது என்ன அநியாயம் இறைவா, ஏனிந்தக் கொடுமை.? காலையில் எழுந்திருந்து முதல் செய்தி இளந்தேவன், அடுத்து கல்பட்டாரா? இது என்ன சோதனை? சொர்கத்திலிருந்து பறவைகள் படம் பிடித்து அனுப்பட்டும். அனுபவிப்போம்.என் வி சுப்பராமன்..2017-07-12 5:02 GMT+05:30 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>:-- நடராஜன் கல்பட்டு அய்யா இதய அறுவை சிகிச்சையின் போது இறந்துவிட்டார்.
88 வயதிலும் இணையத்தில் தொடர்ந்து எழுதி வந்தவர். இயற்கை ஆர்வலர், கருப்பு
வெள்ளை புகைப்படங்களில் அவர் செய்த வித்தைகள், பறவைகளை படம் எடுக்க அவர்
எடுத்துக் கொண்ட சிரத்தைகள், பறவைகள் மீது அவர்க் கொண்ட காதல் அளவிட
முடியாதது.
அவருடைய குடும்பத்தாருக்கும், அவர்பால் அன்பு கொண்ட அனைவருக்கும்
என் வருத்ததையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.யோகியார்