சிவசிவசிவ ஓம

3 views
Skip to first unread message

Rajja Gopalan

unread,
Feb 14, 2026, 3:10:18 AM (5 days ago) Feb 14
to Santhavasanthsm சந்தவசந்தம்

🙏
டமடம டமடோம் - டமாட டமடோம்
டமடம டமடோம் - டமாட டமடோம்

டமடம டமடம டமடம - டம்டாம்
டமடம டமடம டமடம - டம்டாம்
டமடம டமடம டமடம - டம்டாம்
டமடம டமடம டமடம - டம்டாம்

டமடம டாமா - டமடம டாமா
டம்டம டாடம டாடம டாமா!

(பல்லவி)
சிவசிவ சிவ ஓம் - சிவாய நம ஓம்
ஹர ஹர சிவ ஓம் - ஹராய நம ஓம்

(அனுசரணம்)
(1)
பவபயம் அறவரப் பரிசருள் - தந்தாய்!
பரவச முகமதி பதிவிட - வந்தாய்!
பசுபதி எனதுயிர்ப் பரசிவம் - என்றாய்
பனிமலை தனிலுமை பணிவுற - நின்றாய்!

பரசிவ நாதா - பரமத யாளா!
பங்கயப் பூவிழி யாலருள் சீலா!
(சிவசிவ )

(2)
நதிசடை முடிமதி நளினமுங் - கண்டாய்!
நயனமுவ் வரியிடை கரியுரி - கொண்டாய்!
நரசுர முனிகணம் பணிவுற - விண்டாய்!
நடுவர வதுவிடம் நயந்துடன் - உண்டாய்!

நமனரி காலா! - சுகவனு கூலா!
நங்கையுன் னோடுற வேயருள் சீலா!
(சிவசிவ)

(3)
கரமொரு டமரமுன் கவினிசைச் - சிந்தாய்
கைமரை திரிபுரந் தரவரும் - விந்தாய்
கனலொளி சமனுறு கதிரெனும் - பந்தாய்
கழலடி நடமிடும் கருணையும் - தந்தாய்!

கதியருள் காலா! - மதியினுட் பாலாய்
கங்கையென் றூறிட வேயருள் சீலா!
(சிவ சிவ)

(4)
அருவமும் உருவமும் அருவுரு - ஒன்றாய்ச்
சிறுவணு புவனமும் செயலுற - நன்றாய்
திருவரு ளறிவொளி திசையிற்பு - கன்றாய்!
பெருவெளி நொடியென பிணைதரு - கின்றாய்!

ஒருமையின் மூலா! உமையொரு பாகா!
உங்கடைப் பார்வையென் மேலிடு சீலா!
(சிவ சிவ)

(5)
திரிபுர மரிவதும் அறிவதும் - நின்றால்
திசையவி கிறதெனுந் திருவருள் - என்றால்
அரியயன் அரனுரு அனைவருள் - ஒன்றாய்
விரிகிற மறைகிற விளைகதிர் - என்றாய்

பரிவரு ளாளா! பரமத யாளா!
பங்கயத் தாளருள்! பரசிவ சீலா!
(சிவ சிவ)

மீ. ரா
14-1-2026
AUDIO-2026-02-14-08-07-18.m4a

Sai Ganesan H

unread,
Feb 14, 2026, 4:37:40 AM (5 days ago) Feb 14
to santhav...@googlegroups.com
அருமை! 

On Sat, 14 Feb 2026 at 1:40 PM, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:

🙏
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/85782A67-56AB-4861-9E49-D9AAE53BAC28%40gmail.com.

Sent from my iPhone

Ram Ramakrishnan

unread,
Feb 14, 2026, 9:04:26 AM (4 days ago) Feb 14
to santhav...@googlegroups.com
அற்புதம், திரு. மீ. ரா.

சந்தமும் சொற்புனைவும் தாளமிட்டு ஆட வைக்கின்றன.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 14, 2026, at 03:10, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:

🙏

இமயவரம்பன்

unread,
Feb 14, 2026, 9:42:45 AM (4 days ago) Feb 14
to santhav...@googlegroups.com, Santhavasanthsm சந்தவசந்தம்
மிக இனிமையான பாடல்!

Subbaier Ramasami

unread,
Feb 14, 2026, 10:04:33 AM (4 days ago) Feb 14
to santhav...@googlegroups.com
கருத்தும் சந்தமும் பொருத்தம்

இலந்தை

On Sat, Feb 14, 2026 at 2:10 AM Rajja Gopalan <raj...@gmail.com> wrote:

🙏

Rajja Gopalan

unread,
Feb 14, 2026, 3:04:25 PM (4 days ago) Feb 14
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
நன்றி கவிஞரே
Sent from my iPhone

On 14 Feb 2026, at 14:04, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

அற்புதம், திரு. மீ. ரா.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Gopalan

unread,
Feb 14, 2026, 3:05:28 PM (4 days ago) Feb 14
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
நன்றி பெருமக்களே
Sent from my iPhone

On 14 Feb 2026, at 20:04, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:

நன்றி கவிஞரே
Reply all
Reply to author
Forward
0 new messages