கருவாழக்கரை காமாக்ஷி அந்தாதி மாலை
காப்பு
உன்னனையே என்னன்னை உன்னிஅவள் பேர்பாட
முன்னவனே நீவந்து முந்திக்கொள் – இன்னே
கருவாழ் கரைஉமையின் அந்தாதி நூற்றை
ஒருகொம்போய் என்வாயால் ஓது!
காத்தவராயன் துதி
காத்த வராய!நின் காலில் பணிகின்றேன்!
ஆத்தாள் அருள்பெறவே ஆவலுடன் – யாத்தேன்
அந்தாதி மாலை அலங்கல் ஒருநூற்றை
எந்தாயை ஏற்றருளச் செய்!
கருவாழக் கரையமரும் கருமாரீ காமாட்சீ
பெருவாழ்வொன்(று) எனக்கருளப் பேரருள்நீ புரிவாயேல்
திருஆக்கும் சீரடிகள் திரமாயென் நெஞ்சத்தை
ஒருவீடாய் ஏற்றங்கே உறவைத்தே அமர்ந்திடுக! (1)
அமரர்களின் ஆற்றல்;சித் தக்கினியில் உன்தோற்றம்;
குமரனும்அக் குஞ்சரனும் கொஞ்சுகிற அன்பன்னை;
சுமந்துவரும் பாவங்கள் சூழ்ந்திருக்கும் என்நெஞ்சில்
நிமலைநீ வந்தமர நிச்சயமாய் இடமுண்டு! (2)
இடம்பெற்றே வலம்தந்தாய் ஈசனுக்கு;உன் திருக்கரத்தால்
விடங்கொண்ட கண்டத்தை விழுங்குமுனர் பற்றியதால்
தொடங்குமுன்ஓர் அவலத்தைத் துருதமுடன் தீர்த்தாய்;இச்
சடங்கண்டு தயைஅருளத் தருணமினும் வரவிலையோ? (3)
விலையேதுஉன் சிலம்புகளின் வீரத்தின் கொஞ்சல்கள்
அலையலையாய் இசைதந்துன் அன்னநடை அழகோடு
மலைமகளே! லயமாகி மந்திரம்ஆம் மகிமைக்கு?
கலைஅறியாக் கசடன்எனைக் கசிந்தருளிக் காப்பாயோ? (4)
பாய்கின்ற நதியாவாய்ப் பள்ளத்தில் தேங்குவையாம்
ஓய்வற்ற கடலலையாய் ஓங்குமலை அருவியுமாய்
தாய்மழையாய்ப் பனியுருவாய்த் தண்ணீராய் அமுதானாய்;
சேய்மீ(து)உன் பதம்பட்ட சிறுதுளிகள் தெரித்திடுமோ? (5)
தெரிவதும்உன் நிலைநோக்கித் தெளிவதெனல் பொய்யன்றோ?
புரிவதெனப் புலவரெலாம் புகலுவதும் புதிரன்றோ?
அரியவள்;எவ் வறிவாலும் அறியொண்ணா ஆற்றல்நீ!
பரிவுடன்இப் பாமரற்குன் பதம்புகலாய்த் தந்திடுக! (6)
தந்திமுகன் ஒருமடியில் தமிழ்க்கடவுள் மறுமடியில்
சந்திரனும் கங்கையும்சேர்ச் சடைமகுடன் கைஅணைப்பில்
நந்தியின்மீ(து) அமர்ந்தபடி நாரதன்பா சுவைத்திருக்கச்
சுந்தரி!இத் தரிசனத்தில் சொக்கஎனக்(கு) அருளுவையோ? (7)
வையத்தை யாத்(து)அகன்ற வானையுமே யாத்தனைநீ!
தையல்நீ யாத்தவற்றைத் தாயாகிப் பேணுகிறாய்!
கையருளால் ஊட்டுகிறாய்! கண்ணருளால் வாழ்த்துகிறாய்!
ஐயனுடன் ஐக்கியமாய் அமையப்பன் ஆனவள்நீ! (8)
ஆனதுவும் ஆவதுவும் அன்னைஉன(து) எண்ணம்போல்!
போனதெலாம் உன்சரணம் புகுந்துலயம் உற்றிருக்கும்!
வானவர்உன் வரையரையுள் வாழ்ந்தபினர் உனையடைவர்!
தானவர்உன் தயைமறந்து தருக்கிஅழிந்(து) உனைச்சேர்வர்! (9)
சேர்ந்தொருசற் சங்கத்தில் சென்னியிலுன் பாதத்தைத்
தேர்ந்தவர்கள் மருள்நீங்கித் திருவொளியைக் காண்பாராம்;
நேர்ந்தஇருள் சகதிவிட்டு நின்பதத்தை நாடஅருள்
கூர்ந்(து)என்னைக் காப்பாற்றிக் கும்பிடும்பே(று) அளிப்பாயோ? (10)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பாட்டியல் இலக்கணம் இலக்கியங்கள் பலவகைப்படும். அவை பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி, உலா, தூது, பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு முதலியனவாகும். இவை பிற்காலத்தில் தோன்றிய இலக்கிய வகைகள் ஆகும். இத்தகைய இலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறுவதுபாட்டியல் இலக்கணம் எனப்படும். பாட்டியல் நூல்கள் இலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுவதுடன் பொருத்த இலக்கணமும் கூறுகின்றன. செய்யுளில் அமைய வேண்டிய பொருத்தங்கள் பத்து என்று பாட்டியல்கள் கூறுகின்றன. ஒருநூலின் தொடக்கம் நன்றாக இருந்தால்தான் நூல் நன்றாக அமையும் என்பது அக்கால நம்பிக்கை. இந்த நம்பிக்கையை ஒட்டியே பொருத்தங்கள் அமைகின்றன. பொருத்தங்கள்
எடுத்துக்காட்டாக செய்யுளின் முதல் சொல் மங்கலமாக இருக்க வேண்டும் என்பது மங்கலப் பொருத்தம் ஆகும். பாட்டியல் நூல்கள் இதை வற்புறுத்திக் கூறுகின்றன. மங்கலச் சொற்கள் இவை என்ற ஒரு பட்டியலும் பாட்டியல் நூல்களில் தரப்பட்டுள்ளன. சீர், உலகம், மணி, பொன், பூ, திங்கள், கடல், மலை முதலியன மங்கலச் சொற்கள் ஆகும். இவற்றை முதல் சொல்லாகக் கொண்டே நூல் இயற்ற வேண்டும் என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. |
ஸ்ரீ அனந்த்,
உங்கள் உடனடிப் பின்னூட்டத்திற்கு மிக நன்றி. ஒற்று முதலிய குறைகளை நிவர்த்தி செய்து கொள்கிறேன்.
ஆனதுவும் ஆவதுவும் அன்னைஉன(து) எண்ணம்போல்!
போனதெலாம் உன்சரணம் புகுந்துலயம் உற்றிருக்கும்!
வானவர்உன் வரையரையுள் வாழ்ந்தபினர் உனையடைவர்!
தானவர்உன் தயைமறந்து தருக்கிஅழிந்(து) உனைச்சேர்வர்!
[ நடந்து முடிந்தது, நடக்கவிருப்பது அனைத்தும் உன் சித்தப் படியே ஆகும். முடிந்துவிட்டவை எங்கு முடிந்திருக்க இயலும்? உன் சரணத்தில் லயம் அடைவதே உலகத்தில் முடிவென்று கருதப்படும்! உலக நன்மைக்காகப் படைக்கப்பட்ட தேவர்கள் நீ தந்த கடமைகளை ஆற்றிய பிறகு முடிவாக உன்னிடமே வந்து சேர்வார்கள். கூடவே களையாகப் பிறந்துவிட்ட அசுர சக்திகள் உன் தயை இன்றித் தமக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதை மறந்து, அகங்காரத்தால் அழிக்கப் படும்போது, அவர்களுடைய முடிவும் உன் சரணத்திலேயே அமையும். (எழுப்பி விடுவதும், வாழ்வித்துப் பேணுவதும், உறங்கச் செய்வதும் அன்னை அல்லவா?) ]
உண்மை கோபால். நல்ல ஆற்றொழுக்கான அந்தாதி,வாழ்கயோகியார்
.
தங்கள் சுட்டலுக்கு நன்றியுடன் திருத்தி அமைக்கப் பட்ட செய்யுள்:
திருஆக்கும் நின்னடியில் திரமாயென் சிரமமைக!
பெருவாழ்வொன்(று) எனக்கருளப் பேரருள்நீ புரிவாயேல்
கருவாழக் கரையமரும் காமாட்சீ என்நெஞ்சை
ஒருவீடாய் ஏற்றங்கே உறவைத்தே அமர்ந்திடுக! (1)
எங்கள் குலதெய்வம் மாயவரத்தின் அருகே உள்ள கருவாழக்கரை என்ற சிற்றூரில் எழுந்தருளி இருக்கும் காமாட்சி அம்மன். அந்த அம்மனின் பேரில் அந்தாதி மாலையாக நூறு செய்யுள்கள் எழுதியிருக்கிறேன். மன்றத்தின் ஆசி பெறவும் குறைநிறை அறியவும் இந்த இழையில் பத்து பத்தாக இட விழைகிறேன். தங்கள் உதவியைப் பணிவுடன் வேண்டுகிறேன்.நல்வாழ்த்துக்களுடன்,கோபால்.கருவாழக்கரை காமாக்ஷி அந்தாதி மாலை
காப்பு
உன்னனையே என்னன்னை உன்னிஅவள் பேர்பாட
முன்னவனே நீவந்து முந்திக்கொள் – இன்னே
கருவாழ் கரைஉமையின் அந்தாதி நூற்றை
ஒருகொம்போய் என்வாயால் ஓது!
காத்தவராயன் துதி
காத்த வராய!நின் காலில் பணிகின்றேன்!
ஆத்தாள் அருள்பெறவே ஆவலுடன் – யாத்தேன்
அந்தாதி மாலை அலங்கல் ஒருநூற்றை
எந்தாயை ஏற்றருளச் செய்!
கருவாழக் கரையமரும் கருமாரீ காமாட்சீ
பெருவாழ்வொன்(று) எனக்கருளப் பேரருள்நீ புரிவாயேல்
திருஆக்கும் சீரடிகள் திரமாயென் நெஞ்சத்தை
ஒருவீடாய் ஏற்றங்கே உறவைத்தே அமர்ந்திடுக! (1)
அமரர்களின் ஆற்றல்;சித் தக்கினியில் உன்தோற்றம்;
குமரனும்அக் குஞ்சரனும் கொஞ்சுகிற அன்பன்னை;
சுமந்துவரும் பாவங்கள் சூழ்ந்திருக்கும் என்நெஞ்சில்
நிமலைநீ வந்தமர நிச்சயமாய் இடமுண்டு! (2)
இடம்பெற்றே வலம்தந்தாய் ஈசனுக்கு;உன் திருக்கரத்தால்
விடங்கொண்ட கண்டத்தை விழுங்குமுனர் பற்றியதால்
தொடங்குமுன்ஓர் அவலத்தைத் துருதமுடன் தீர்த்தாய்;இச்
சடங்கண்டு தயைஅருளத் தருணமினும் வரவிலையோ? (3)
விலையேதுஉன் சிலம்புகளின் வீரத்தின் கொஞ்சல்கள்
அலையலையாய் இசைதந்துன் அன்னநடை அழகோடு
மலைமகளே! லயமாகி மந்திரம்ஆம் மகிமைக்கு?
கலைஅறியாக் கசடன்எனைக் கசிந்தருளிக் காப்பாயோ? (4)
பாய்கின்ற நதியாவாய்ப் பள்ளத்தில் தேங்குவையாம்
ஓய்வற்ற கடலலையாய் ஓங்குமலை அருவியுமாய்
தாய்மழையாய்ப் பனியுருவாய்த் தண்ணீராய் அமுதானாய்;
சேய்மீ(து)உன் பதம்பட்ட சிறுதுளிகள் தெரித்திடுமோ? (5)
தெரிவதும்உன் நிலைநோக்கித் தெளிவதெனல் பொய்யன்றோ?
புரிவதெனப் புலவரெலாம் புகலுவதும் புதிரன்றோ?
அரியவள்;எவ் வறிவாலும் அறியொண்ணா ஆற்றல்நீ!
பரிவுடன்இப் பாமரற்குன் பதம்புகலாய்த் தந்திடுக! (6)
தந்திமுகன் ஒருமடியில் தமிழ்க்கடவுள் மறுமடியில்
சந்திரனும் கங்கையும்சேர்ச் சடைமகுடன் கைஅணைப்பில்
நந்தியின்மீ(து) அமர்ந்தபடி நாரதன்பா சுவைத்திருக்கச்
சுந்தரி!இத் தரிசனத்தில் சொக்கஎனக்(கு) அருளுவையோ? (7)
வையத்தை யாத்(து)அகன்ற வானையுமே யாத்தனைநீ!
தையல்நீ யாத்தவற்றைத் தாயாகிப் பேணுகிறாய்!
கையருளால் ஊட்டுகிறாய்! கண்ணருளால் வாழ்த்துகிறாய்!
ஐயனுடன் ஐக்கியமாய் அமையப்பன் ஆனவள்நீ! (8)
ஆனதுவும் ஆவதுவும் அன்னைஉன(து) எண்ணம்போல்!
போனதெலாம் உன்சரணம் புகுந்துலயம் உற்றிருக்கும்!
வானவர்உன் வரையரையுள் வாழ்ந்தபினர் உனையடைவர்!
தானவர்உன் தயைமறந்து தருக்கிஅழிந்(து) உனைச்சேர்வர்! (9)
சேர்ந்தொருசற் சங்கத்தில் சென்னியிலுன் பாதத்தைத்
தேர்ந்தவர்கள் மருள்நீங்கித் திருவொளியைக் காண்பாராம்;
நேர்ந்தஇருள் சகதிவிட்டு நின்பதத்தை நாடஅருள்
கூர்ந்(து)என்னைக் காப்பாற்றிக் கும்பிடும்பே(று) அளிப்பாயோ? (10)
வாழ்க!சில கருத்துகள் / ஐயங்கள் - கீழ்க்காண்க.அன்போடு,
வி. சுப்பிரமணியன்
கருவாழக்கரை காமாக்ஷி அந்தாதி மாலை
காத்தவராயன் துதி
காத்தவரா யாநின் கழலைப் பணிகின்றேன்!
ஆத்தாள் அருள்பெறவே ஆவலுடன் – யாத்திருக்கும்
அந்தாதி மாலை அலங்கல் ஒருநூற்றை
எந்தாயை ஏற்றருளச் செய்!
--> /காத்த வராய!நின் காலில் பணிகின்றேன்!/"காத்தவரா யா!நின் கழலைப் பணிகின்றேன்!"
என்று இருந்தால் இன்னும் சிறக்கும் என்று எண்ணுகின்றேன். [திருத்திக் கொண்டேன்]
--> /யாத்தேன் அந்தாதி/
தளை? [சரி செய்திருக்கிறேன்]
--> /அந்தாதி மாலை அலங்கல் ஒருநூற்றை/இவ்வடியை எப்படிப் பொருள்கொள்ளவேண்டும்?
[இறையைத் துதித்து, நம் முறையீடுகளையும், வேண்டுதல்களையும் தெரிவித்து, அருளை நாடி எழுதப் படும் பாடலை அலங்கல் என்னலாம் என நினைத்தேன். இங்கே எழுதப் படும் பாடல் அந்தாதிமாலையாக அமைந்த அலங்கல்.]
இதில் பிழை இருப்பின் தெரிவிக்கவும்.
இடம்பெற்றே வலம்தந்தாய் ஈசனுக்கு;உன் திருக்கரத்தால்
விடங்கொண்ட கண்டத்தை விழுங்குமுனர்ப் பற்றியதால்
தொடங்குமுன்ஓர் அவலத்தைத் துருதமுடன் தீர்த்தாய்;இச்
சடங்கண்டு தயைஅருளத் தருணமினும் வரவிலையோ? (3)
--> /முனர் பற்றியதால்/
"முனர்ப் பற்றியதால்" என்று ப் மிக்குவரும். [சரி செய்துள்ளேன்]
--> /தொடங்குமுன்னோர் அவலத்தைத்/
அவலம் = ? [கேடு.}
--> /இச் சடங்கண்டு/
சடம் = ? [ஜடம் ஆகிய என்னை]
வையத்தை யாத்(து)அகன்ற வானையுமே யாத்தனைநீ!
தையல்நீ யாத்தவற்றைத் தாயாகிப் பேணுகிறாய்!
கையருளால் ஊட்டுகிறாய்! கண்ணருளால் வாழ்த்துகிறாய்!
ஐயனுடன் ஐக்கியமாய் அம்மையப்பன் ஆனவள்நீ! (8)
--> /கண்ணருளால் வாழ்த்துகிறாய்!/இறைவன் அருள்வான். வாழ்த்துவானா? அத்தகைய பிரயோகம் இலக்கியத்தில் உண்டா?கண்ணருளால் = அருட்கண்ணால் என்று பொருகொள்கின்றேன்.கண் என்றதால் அதன் செயலான பார்த்தல்/நோக்குதல் தானே வரவேண்டும்?
[நான் நினைத்தபடி: வாழ்த்துதல் என்பது நல்வாழ்வு கிட்டுவதை எண்ணி அந்த எண்ணத்தை வெளிப்படுத்துவது. கண்ணருள் என்பது கண்ணோக்கில் வெளிப்படும் அருள். அந்த அருளின் மூலம் வெளிப்படுவது இறைவியின் வாழ்த்து]/அமையப்பன்/அம்மையப்பன் என்றே சொல்லலாமே.[சரி செய்துள்ளேன்]
சேர்ந்தொருசற் சங்கத்தில் சென்னியிலுன் பாதத்தைத்
தேர்ந்தவர்கள் மருள்நீங்கித் திருவொளியைக் காண்பாராம்;
நேர்ந்தஇருள் சகதிவிட்டு நின்பதத்தை நாடஅருள்
கூர்ந்(து)என்னைக் காப்பாற்றிக் கும்பிடும்பே(று) அளிப்பாயோ? (10)
--> /காண்பாராம்/
ஆம் = ? [காண்பார்கள் என்று அறிகிறேன்]
நன்றி சிவசிவா. அருந்தமிழ் என்று சொல்வது மிகையாகி விடும் என்பதால் தங்கள் குறிப்பிலிருந்து சற்று மாற்றித் திருத்தியிருக்கிறேன்.
காத்தவராயன் துதி
காத்தவரா யாநின் கழலைப் பணிகின்றேன்!
ஆத்தாள் அருள்பெறவே ஆவலுடன் – யாத்திருக்கும்
அந்தாதி நூற்றினால் ஆனஇம் மாலையை
எந்தாயை ஏற்றருளச் செய்!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.
சந்தவசந்த அன்பர்களுக்கு வணக்கம். காமாக்ஷி அந்தாதியின் அடுத்த 10 பாடல்கள் தங்கள் பார்வைக்காக இடுகிறேன்.அளியாரும் மலர்த்தாரும் அட்டிகையும் அஞ்சனமும்ஒளிவீசும் செந்திலகம் ஓங்கரத்தின் ஒய்யாரம்நெளிகுழல்கள் செவ்விதழ்கள் நீண்டகன்ற கயற்கண்கள்எளிமையெழில் திருவுருவம் என்னெஞ்சில் குடிபுகுமோ? (11)
புகுமுன்னென் னுயிர்பிரிந்திப் பூதவுடல் எரிகாட்டுள்,தகுதியடைந் தென்னெஞ்சில் தரிசனத்தைக் காண்பேனோ?வெகுவாய்நான் இறைஞ்சியுமே விரைந்திலைநீ இரங்கிடவேநகுவரையில் பிறந்திறந்து நாயேனுன் சரணடைவேன். (12)
அடைகாக்கும் புள்ளைப்போல் அண்டமெலாம் காப்பவள்நீநடையழகில் அன்னப்புள் நடனத்தில் நீலமயில்இடைகண்டால் ஈசல்நீ இன்குரலில் கூங்குயில்தான்விடைபேசும் பைங்கிளியே வேதம்தான் உன்மொழியே! (13)
உன்மொழிதான் அயனுக்கிவ் வுலகியற்றும் சூத்திரமாம் !நின்மொழிதான் சுழற்சியிலே நிற்றலுடைச் சூக்குமஞ்சொல்மன்பதையின் நிலைகாக்கும் மாதவனின் மந்திரமாம் !தன்வசமாய் அனைத்தையுமே சங்கரிப்ப துன்உள்மூச்சாம்! (14)மூச்சாகிக் குருதியுமாய் மூளைநரம் பென்பாவாய்ப்பேச்சாவாய்ப் புலனாவாய்ப் பெருவிலங்கும் புழுவினமும்நீச்சலினம் பறவையுநீ நின்கருணைக் கடைக்கண்ணின்வீச்சன்றோ உயிரினங்கள் விழிப்பென்றே அறிவதெலாம். (15)
அறிவுமனம் இதயம்நீ அந்தரங்கம் ஆன்மாநீநெறிமுறையும் விதிகதியும் நியதியுநீ தேற்றம்நீகுறிப்பறிதல் அனுமானம் கொள்கையெலாம் நின்மாயைஅறியாமை யன்றோயான் அறிவேனென்(று) எண்ணுவது? (16)எண்ணுவதற்(கு) உத்தமமாம் என்னனையின் திருவுருவைக்கண்ணுதலான் அங்கத்தில் கலந்திருக்கும் கோலத்தில் !கண்படைத்த பயனென்கில் கணநேரம் அதைமூடிஉண்மனத்தில் உன்பதத்தை ஒளிமிளிரக் காண்பதுவே! (17)
காண்பதுயான் கண்ணெதிரே கருவாழக் கரையூரில்காண்'பதுமை'க் கோலத்தில் கருணையுடன் அன்பர்களைக்காண்'பதும'க் கண்ணாளை! காமாட்சீ யானுன்னைக்காண்பதுமெய் யாகட்டும் கண்விடுத்து நீங்காதே! (18)காதிலிழைத் தோடெறிந்து காரிருளில் கதிர்காட்டிவேதியரைக் காத்திட்டாய் வேந்தனிட்ட சோதனையில் !ஆதியிலா அந்தமிலா அபிராமி நினைச்சொலும்அந்தாதியெனும் தோத்திரத்தைச் சதகமேனப் பாட்டுவித்தாய். (19)
வித்துக்குள் மரம்வைத்த விஞ்ஞான வடிவினளேவித்தையெனத் தவச்சித்தர் வித்தகர்க்குத் தெரிபவளே [ஸ்ரீவித்யா]பத்துடனா(று) எழுத்தாகப் பரிணமித்த தத்துவமே [ஷோடசாக்ஷரீ]சித்துருநீ சத்துடனே சேர்ந்ததனிச் சத்தியமே ! (20)நல்வாழ்த்துக்களுடன்,கோபால்.[4.7.2015]
அளியாரும் மலர்த்தாரும் அட்டிகையும் அஞ்சனமும்ஒளிவீசும் செந்திலகம் ஓங்கரத்தின் ஒய்யாரம்நெளிகுழல்கள் செவ்விதழ்கள் நீண்டகன்ற கயற்கண்கள்எளிமையெழில் திருவுருவம் என்னெஞ்சில் குடிபுகுமோ? (11)--> /அளியாரும் மலர்த்தாரும்/Not sure which meaning you intended - அளியாரும்? அளியார்க்கும்?
அளி = வண்டு, தேனீ.; வண்டாரும் என்பது போல.
/ஓங்கரத்தின் ஒய்யாரம் / = ?
புகுமுன்னென் னுயிர்பிரிந்திப் பூதவுடல் எரிகாட்டுள்,தகுதியடைந் தென்னெஞ்சில் தரிசனத்தைக் காண்பேனோ?வெகுவாய்நான் இறைஞ்சியுமே விரைந்திலைநீ இரங்கிடவேநகுவரையில் பிறந்திறந்து நாயேனுன் சரணடைவேன். (12)--> நகுவரையில் = ?
அடைகாக்கும் புள்ளைப்போல் அண்டமெலாம் காப்பவள்நீநடையழகில் அன்னப்புள் நடனத்தில் நீலமயில்இடைகண்டால் ஈசல்நீ இன்குரலில் கூங்குயில்தான்விடைபேசும் பைங்கிளியே வேதம்தான் உன்மொழியே! (13)--> /அடைகாக்கும் புள்ளைப்போல் அண்டமெலாம் காப்பவள்நீ/Nice. (especially given that அண்டம் = Egg; முட்டை).
உன்மொழிதான் அயனுக்கிவ் வுலகியற்றும் சூத்திரமாம் !நின்மொழிதான் சுழற்சியிலே நிற்றலுடைச் சூக்குமஞ்சொல்மன்பதையின் நிலைகாக்கும் மாதவனின் மந்திரமாம் !தன்வசமாய் அனைத்தையுமே சங்கரிப்ப துன்உள்மூச்சாம்! (14)மூச்சாகிக் குருதியுமாய் மூளைநரம் பென்பாவாய்
பேச்சாவாய் புலனாவாய் பெருவிலங்கும் புழுவினமும்
நீச்சலினம் பறவையுநீ நின்கருணைக் கடைக்கண்ணின்
வீச்சன்றோ உயிரினங்கள் விழிப்பென்றே அறிவதெலாம்? (15)
--> / என்பாவாய்ப் பேச்சாவாய்ப் புலனாவாய்ப் பெருவிலங்கும்/ப் - does not not occur in these places - as these are விளி I think.
அறிவுமனம் இதயம்நீ அந்தரங்கம் ஆன்மாநீநெறிமுறையும் விதிகதியும் நியதியுநீ தேற்றம்நீகுறிப்பறிதல் அனுமானம் கொள்கையெலாம் நின்மாயைஅறியாமை யன்றோயான் அறிவேனென்(று) எண்ணுவது? (16)எண்ணுவதற்(கு) உத்தமமாம் என்னனையுன் திருவுருவைக்கண்ணுதலான் அங்கத்தில் கலந்திருக்கும் கோலத்தில் !கண்படைத்த பயனென்கில் கணநேரம் அதைமூடிஉண்மனத்தில் உன்பதத்தை ஒளிமிளிரக் காண்பதுவே! (17)--> /என்னனையின் திருவுருவைக் /பின்னர் "உன்பதத்தை" என்று சொன்னதால், இவ்விடத்தில் "என்னனையுன் திருவுருவைக் " என்றிருந்திருக்கவேண்டுமோ?
காண்பதுயான் கண்ணெதிரே கருவாழக் கரையூரில்காண்'பதுமை'க் கோலத்தில் கருணையுடன் அன்பர்களைக்காண்'பதும'க் கண்ணாளை! காமாட்சீ யானுன்னைக்காண்பதுமெய் யாகட்டும் கண்விடுத்து நீங்காதே! (18)காதிலிழைத் தோடெறிந்து காரிருளில் கதிர்காட்டிவேதியரைக் காத்திட்டாய் வேந்தனிட்ட சோதனையில் !ஆதியிலா அந்தமிலா அபிராமி நினைச்சொலும்அந்தாதியெனும் தோத்திரத்தைச் சதகமெனப் பாட்டுவித்தாய். (19)--> /சதகமேனப் பாட்டுவித்தாய்/ = ?
மிக்க நன்றி சிவசிவா.பதில்கள்/திருத்தங்கள் கீழே:2015-07-05 1:02 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:அளியாரும் மலர்த்தாரும் அட்டிகையும் அஞ்சனமும்ஒளிவீசும் செந்திலகம் ஓங்கரத்தின் ஒய்யாரம்நெளிகுழல்கள் செவ்விதழ்கள் நீண்டகன்ற கயற்கண்கள்எளிமையெழில் திருவுருவம் என்னெஞ்சில் குடிபுகுமோ? (11)--> /அளியாரும் மலர்த்தாரும்/Not sure which meaning you intended - அளியாரும்? அளியார்க்கும்?அளி = வண்டு, தேனீ.; வண்டாரும் என்பது போல.
/ஓங்கரத்தின் ஒய்யாரம் / = ?அவளுடைய ஒய்யாரமான அமர்ந்த கோலம் ஓங்கரத்தைக் காண்பதுபோல அமைந்திருக்கிறது!
பாங்கிலகு பாணிநியம் பொற்காலாக
வாங்கரிய யாக்கியமோர் விட்டமாக
ஓங்குபல பூங்கலைகள் பந்தலாக
ஆணிமறைச் சங்கிலிகள் நான்குமாக
ஆங்கு திருப்பாடியமே ஆட்டமாகப்
பாதுகை யாயிரமறையே போகமாக
ஓங்கர நாவொலிக் கோலராடிரூசல்
வேதசிரத் தேசிகனாராடி ரூசல். .2.
கருவாழக்கரை அந்தாதி (21-30)சத்தியுனைக் கண்டுசொலும் சதுரனிந்தப் பூமியிலார்?புத்திசெலும் எல்லையுநீ புனைந்ததெதோ அம்மட்டேவித்தியையுன் விளையாட்டென் வித்தியையாய்க் கற்பதெலாம்!நித்தியையென் நெஞ்சத்தில் நிரந்தரமாய் நிலைத்திடுக! (21)
கருவாழக்கரை அந்தாதி (21-30) க்கு இன்னும் அறிஞர்களின் ஆசிகள் கிடைத்தில்லை. நேரம் கிடைத்ததால் அடுத்த பத்தையும் SV இன் பார்வைக்காய் இடுகிறேன். பிழைகள் நீக்கும் ஆவலுடன்!கருவாழக்கரை அந்தாதி (31-40)கிட்டிவர நின்கருணை கிடைத்தாலே அன்றிஇந்தமட்டறிவும் மருள்மனமும் மலமூன்றின் மண்டுதலும்கட்டிவிட்ட நாயேனால் கரையேற முடியாது!சுட்டவித்துத் தூய்மையருள்! சுடர்காட்டி ஆட்கொள்க! (31)
ஆட்டத்தின் அரசனுடன் அங்கமரை பகிர்ந்தவளேதோட்டங்கள் நெல்வயல்கள் சூழ்ந்தபெரும் சிற்றூரில்வீட்டில்அமர் கோலத்தில் வீற்றிருந்து கருணைக்கண்காட்டுகிற கருவாழக் கரைவாழும் கலைவடிவே (32)
வடித்தவொரு பொற்சிலையோ வானயனின் தனிக்கலையோசடைப்புனலன் மனம்படர்ந்த சங்கரியின் ஓவியமோ!இடைக்கசட்டை விடுத்ததிங்கள் எடுத்தமொத்தத் திரட்டுதிப்போ!படைப்பிலுள்ள கலையனைத்தும் பரிணமித்த வனப்பிணைப்போ! (33)
இணைப்புக்கோர் இலக்கணமிங்(கு) எம்மன்னை தந்தையன்றோ!அணைப்புக்கும் இலக்கணமவ் அன்னையன்றி அரவாமோ?துணைக்கென்றும் இலக்கணமச் சூலக்கைச் சுந்தரியே !இணைத்தாளில் யானிணைந்தே இன்புறுதல் என்னாளோ! (34)
நாளெல்லாம் நலமாகும் நனவெல்லாம் வளமாகும்கோளெல்லாம் நமைஉயர்த்திக் கொண்டாட இடங்கொள்ளும்!ஆளும்பேர் அரசாட்சி ஆதரிக்கும்! அன்னையுமைதாளிணையைச் சென்னியிலே தாங்கிடும்பே(று) எய்திடிலே! (35)எய்தவொரு மலர்க்கணையால் எரிந்தழிந்த மன்மதன்தான்செய்தவற்றை அறிந்திலனே! சிவகாமி உனக்குன்றன்மெய்பகிர்ந்த காமேசன் மிசையிருந்த காதலெனும்தெய்வமுறை உள்ளுறவைத் தேவர்களும் அறியாரே! (36)யாருக்கும் எட்டாத யாமளையே நின்கருணைஊருக்கே உடைத்தாக்க உட்கார்ந்த உருவேற்றாய்!ஏருக்குப் பேர்பெற்ற எங்கள்மா யூரத்தின்சீருக்குச் சிறப்பேற்றும் சிற்றூரைத் தேர்ந்தவளே! (37)தவளநிறம் பல்வரிசை; தாயுள்ளம் போலத்தான்!குவளையுன்றன் கண்மலர்கள் குழலலைகள் காரருவி!சிவந்தொளிரும் திருத்திலகம்! செம்பொன்னாம் திருமேனி!பவமகற்றும் பதங்களுடன் பசுமைநின தரிசனமே! (38)
தரிசனைத்தும் தளிர்த்துவிடும், தழைத்துயிர்க்கும் காய்ந்தவனம்,விரிசலுற்ற வரள்நிலமும் விளைந்துவளம் கூடிவிடும்,சரிகணக்கில் மழைபொழியும், சனங்களிக்கத் தனங்கொழிக்கும்,கரிசனத்தால் நின்கடைக்கண் காசினியைக் கண்டிடிலே! (39)கண்டத்தைத் தாண்டாமல் கருமணியாய் விடம்நிறுத்திக்கண்டத்தைத் தாண்டஅரன் கழுத்தினிலுன் கைவைத்தாய் !கண்டத்தில் மங்கலநாண் கட்டியவன் கண்ணொத்துக்கண்(டு)அத்த னையுலகும் கருணையினால் படைத்தாயே! (40)நல்வாழ்த்துக்களுடன்,கோபால்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆட்டத்தின் அரசனுடன் அங்கமரை பகிர்ந்தவளேதோட்டங்கள் நெல்வயல்கள் சூழ்ந்தபெரும் சிற்றூரில்வீட்டில்அமர் கோலத்தில் வீற்றிருந்து கருணைக்கண்காட்டுகிற கருவாழக் கரைவாழும் கலைவடிவே (32)
வடித்தவொரு பொற்சிலையோ வானயனின் தனிக்கலையோசடைப்புனலன் மனம்படர்ந்த சங்கரியின் ஓவியமோ!இடைக்கசட்டை விடுத்ததிங்கள் எடுத்தமொத்தத் திரட்டுதிப்போ!படைப்பிலுள்ள கலையனைத்தும் பரிணமித்த வனப்பிணைப்போ! (33)
இணைப்புக்கோர் இலக்கணமிங்(கு) எம்மன்னை தந்தையன்றோ!அணைப்புக்கும் இலக்கணமவ் அன்னையன்றி அரவாமோ?துணைக்கென்றும் இலக்கணமச் சூலக்கைச் சுந்தரியே !இணைத்தாளில் யானிணைந்தே இன்புறுதல் என்னாளோ! (34)
நாளெல்லாம் நலமாகும் நனவெல்லாம் வளமாகும்கோளெல்லாம் நமைஉயர்த்திக் கொண்டாட இடங்கொள்ளும்!ஆளும்பேர் அரசாட்சி ஆதரிக்கும்! அன்னையுமைதாளிணையைச் சென்னியிலே தாங்கிடும்பே(று) எய்திடிலே! (35)
எய்தவொரு மலர்க்கணையால் எரிந்தழிந்த மன்மதன்தான்செய்தவற்றை அறிந்திலனே! சிவகாமி உனக்குன்றன்மெய்பகிர்ந்த காமேசன் மிசையிருந்த காதலெனும்தெய்வமுறை உள்ளுறவைத் தேவர்களும் அறியாரே! (36)
யாருக்கும் எட்டாத யாமளையே நின்கருணைஊருக்கே உடைத்தாக்க உட்கார்ந்த உருவேற்றாய்!ஏருக்குப் பேர்பெற்ற எங்கள்மா யூரத்தின்சீருக்குச் சிறப்பேற்றும் சிற்றூரைத் தேர்ந்தவளே! (37)
தவளநிறம் பல்வரிசை; தாயுள்ளம் போலத்தான்!குவளையுன்றன் கண்மலர்கள் குழலலைகள் காரருவி!சிவந்தொளிரும் திருத்திலகம்! செம்பொன்னாம் திருமேனி!பவமகற்றும் பதங்களுடன் பசுமைநின தரிசனமே! (38)
வித்தியை!உன் விளையாட்டென் வித்தியையாய்க் கற்பதெலாம்! என்ன பொருள்?
இலந்தைஆவலைத்தந்து ஆவல்தந்(து) என்றிருந்தாலே போதும். [ஏற்றேன்]
ஏத்திவித்தாம் எழுத்துபற்றி எண்பவர்க்கும்- என்ன பொருள்? [ஏத்தி = புகழ்ந்து. வித்தாம் எழுத்து = பீஜாக்ஷரம். எண்பவர்க்கு = ஜபிக்கையில் எண்ணுபவருக்கு.]
சத்தியுனைக் கண்டுசொலும் சதுரனிந்தப் பூமியிலார்?
புத்திசெலும் எல்லையுநீ புனைந்ததெதோ அம்மட்டே
வித்தியையுன் விளையாட்டென் வித்தியையாய்க் கற்பதெலாம்!
நித்தியையென் நெஞ்சத்தில் நிரந்தரமாய் நிலைத்திடுக! (21)
வித்தியை!உன் - வித்யை உன் என்பதன் தற்பவம்? [ஆம்! இங்கு வித்தியை விளி ]
வித்தியையாய் ? [என் கல்வி என]
நிலையில்லா உலகத்தை நீஅமைத்தாய் விளையாட !
மலையாறு மரஞ்செடிகள் மாரியொடு மாருதமும்
குலைகுலையாய்க் கனிவகைகள் கொத்தெழிலாய் மலர்விதங்கள் !
அலைந்துழல விலங்குகளோ(டு) அழகுறவே படைத்திட்டாய் ! (22)
அலைந்துழல – அலைந்துலவ என்னலாம். [நன்று. ஏற்றேன்.]
திட்டமிட்டோ அதைப்போன்றே கேளிக்கைச் சிரிப்புக்காய்
மட்டில்லா ஆசைகளை மலர்க்கொத்தாய் மண்டவிட்டும்
எட்டிவிடும் ஆவலைத்தந்(து) ஏராளப் பழங்களிட்டும்
சட்டென்றே இதற்கதற்குத் தாவுமனக் குரங்கைவிட்டாய்! (23)
நிலையில்லா உலகம், நிலையில்லா மனம்! [ஆம்!]
விட்டிலனிவ் விகத்துழல்கை வினையுந்து வாழ்முறையை !
பட்டபினும் உணர்ந்துநல்ல பாடமெதும் கற்றிலனே!
வட்டமுளே சிக்கியிங்கு வாடிடுமோர் விட்டில்எனைச்
சட்டெனவே தூக்கிவிட்டுச் சரணளித்துக் காத்திடுவாய்! (24)
இவ்)விகத்துழல்கை வினையுந்து – உழல்கை? [வினைப் பயனால் உந்தப் பட்டு மீண்டும் வினைசெய்து வாழ்கின்ற இந்த உலக வாழ்வில் உழலுகின்ற முறையை விடமுடியாதவனாய் இருக்கிறேன்!]
வாய்ப்பேச்சில் வாய்மையிலன் மனத்தினிலும் உண்மையிலன்
தேய்ந்திறக்கும் தேகத்தால் மெய்ம்மையொடு சேர்ந்துமிலன்
ஆய்ந்துணரும் அறிவறத்தை அணுவளவும் தேர்ந்துமிலன்
சேய்எனக்குன் சேவடியின் திருநிழலும் புகல்தருமோ? (25)
அழகு!
வலிதந்தேன் வாழ்வளித்த பெற்றவட்கக் காரணத்தால்
கிலிகொண்ட சூழலிலே கீழ்மையிலே வாழுகிறேன்!
கலிகொண்ட பூமியிதில் கருவாழக் கரையிருக்க
நலிவுண்ட பாமரர்க்கு நல்லபுகல் வேறுண்டோ? (28)
பெற்றவட்கக் காரணத்தால்? [பெற்றவளுக்கு; பெற்ற அன்னைக்கு வலிதந்த காரணத்தால்]
காத்திருந்தும் பசித்திருந்தும் கானகத்தில் தவமிருந்தும்
நேத்திரங்கட்(கு) இடையிறுத்தி நினைவுமுற்றும் நினைநிறுத்தி
ஏத்திவித்தாம் எழுத்துபற்றி எண்பவர்க்கும் எட்டிலள்நீ ! [பீஜாக்ஷர ஜபம்]
பாத்திரமே அற்றவெற்குன் பாதமென்று கிட்டிடுமோ! (30)
எழுத்துபற்றி – வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் ஒற்றுமிகும். [ஒற்று பூச்சீராய் ஆக்கிவிடும். இங்கு இது இரண்டாம் வேற்றுமைத் தொகை. எழுத்தைப் பிடித்துக்கொண்டு என்ற பொருளில். ஒற்று அவசியமா? ஆம் என்றால் திருத்திக் கொள்கிறேன்.]
எண்பவர்க்கும்? (எண்ணுபவர்?) [எண்ணுவோர்க்கும் என மாற்றிக் கொள்கிறேன். 'உம்' தேவை என்பதால்.]]
கிட்டிவர நின்கருணை கிடைத்தாலே அன்றிஇந்த
மட்டறிவும் மருள்மனமும் மலமூன்றின் மண்டுதலும்
கட்டிவிட்ட நாயேனால் கரையேற முடியாது!
சுட்டவித்துத் தூய்மையருள்! சுடர்காட்டி ஆட்கொள்க! (31)
சுட்டவித்து? [புடம் போட்டு, தண்டித்து.]
ஆட்கொள்ளே என ஏகாரத்தில் முடிக்கலாம். [நன்று. ஏற்றேன். இதபோல வேறு சில இடங்களிலும் முடித்திருக்கிறேன்.]
வடித்தவொரு பொற்சிலையோ வானயனின் தனிக்கலையோ
சடைப்புனலன் மனம்படர்ந்த சங்கரியின் ஓவியமோ!
இடைக்கசட்டை விடுத்ததிங்கள் எடுத்தமொத்தத் திரட்டுதிப்போ!
படைப்பிலுள்ள கலையனைத்தும் பரிணமித்த வனப்பிணைப்போ! (33)
> சடைப்புனலன் மனம்படர்ந்த சங்கரியின் ஓவியமோ!
அவளே சங்கரி என்னும்போது சங்கரியின் ஓவியமோ என்னல் சரியாகுமா?
--
--
காவேரிக் கரையிருக்கும் - எழில்கருவாழக் கரையிருக்கும்பூவாசம் மிகுந்திருக்கும் - புகழ்புண்ணியர்கள் தொழுதிருக்கும் - உயர்நாவாசம் சுமந்திருக்க - அதில்நற்றமிழும் கமழ்ந்திருக்க - நீபாவாசம் தொடுத்திருக்க - நாம்பரவசத்தை மடுத்திருப்போம்.சிவசூரி.
கருவாழக்கரை அந்தாதி (61-70) மன்ற அறிஞர்களின் ஆசிகளுக்காகவும் பிழைத் திருத்ததிற்காகவும் வணக்கத்துடன் இங்கே சமர்ப்பிக்கிறேன்.வாழ்விதற்குப் பொருளிலையே வனிதையுன(து) அருளிலையேல்ஆழ்விரதம் அகண்டசபம் அசடனெனால் ஆகாதே!சூழ்நிலையும் சுயநினைவும் சுத்தமில்லை; அகந்தையினால்கீழ்மையிலே வாடுமிந்தக் கீடத்தைக் கண்ணுருவாய்! (61)
கண்ணுதலின் கண்ணோடு கண்ணுற்றுக் கணபதியைவிண்ணோர்க்கு மூத்தவனாய் வேதத்தின் முன்னிசைக்கும்ஒண்ணொலியாம் பிரணவமாம் ஓங்கார எழுத்துருவாய்த்தண்ணருளால் தரணியின்ஆ தாரமெனத் தந்தவளே! (62)தந்தனையுன் சக்தியினால் தந்திமுகன் தம்பினனாய்க்கந்தனை,ச்செந் தமிழ்முருகக் கடவுளினை, அறுமுகனாய்வந்தவனை, அழகுமயில் வாகனனை, வேல்பிடித்துச்சிந்தனையைக் கவர்ந்திழுக்கும் சிங்கார வேலவனை! (63)
வேலொத்த விழியாள்நீ வில்லொத்த புருவத்தாள்மாலொத்த நீலநிறம் மழலையினும் இன்மொழியாள்பாலொத்த உள்ளத்தாள் பட்டொத்த மென்மேனிசூலத்தை ஏந்தியவள் சூரத்த னத்துரியாள்! (64)
உரியுடுத்தான் பத்தினிநீ உறிஉடைத்தான் சோதரிநீகிரிகொடுத்த புத்திரிநீ கரிபடைத்த அன்னையுநீவரிவொலிக்கு நாயகிநீ எரிஎழுந்த சித்துருநீவிரிமனத்து வள்ளலுநீ சரிசமத்தில் அற்றவள்நீ! (65)
அற்றதுமற் றுள்ளதுமாய் அருவமுமாய் உருவமுமாய்பெற்றதுமாய்ப் பிறந்தவையாய்ப் பெரியதுமாய்ச் சிறியதுமாய்நிற்றலுமற் றசைதலுமாய் நிற்குணியாய்ச் சுகுணியுமாய்க்கற்றலுமாய்க் கற்பனவாய்க் கரைவரைகள் கடந்தவளே! (66)
வாழ்விதற்குப் பொருளிலையே வனிதையுன(து) அருளிலையேல்ஆழ்விரதம் அகண்டசபம் அசடனெனால் ஆகாதே!
சூழ்நிலையும் சுயநினைவும் சுத்தமில்லை; அகந்தையினால்
கீழ்மையிலே வாடுமிந்தக் கீடத்தைக் கண்ணுறுவாய்! (61)
தந்தனையுன் சக்தியினால் தந்திமுகன் தம்பினனாய்க்கந்தனை,ச்செந் தமிழ்முருகக் கடவுளினை, அறுமுகனாய்வந்தவனை, அழகுமயில் வாகனனை, வேல்பிடித்துச்சிந்தனையைக் கவர்ந்திழுக்கும் சிங்கார வேலவனை! (63)
வேலொத்த விழியாள்நீ வில்லொத்த புருவத்தாள்மாலொத்த நீலநிறம் மழலையினும் இன்மொழியாள்பாலொத்த உள்ளத்தாள் பட்டொத்த மென்மேனிசூலத்தை ஏந்தியவள் சூரத்த னத்துரியாள்! (64)
உரியுடுத்தான் பத்தினிநீ உறிஉடைத்தா ன் சோதரிநீகிரிகொடுத்த புத்திரிநீ கரிபடைத்த அன்னையுநீவரிவொலிக்கு நாயகிநீ எரிஎழுந்த சித்துருநீவிரிமனத்து வள்ளலுநீ சரிசமத்தில் அற்றவள்நீ! (65)
அற்றதுமற் றுள்ளதுமாய் அருவமுமாய் உருவமுமாய்பெற்றதுமாய்ப் பிறந்தவையாய்ப் பெரியதுமாய்ச் சிறியதுமாய்
நிற்றலுமற் றசைதலுமாய் நிர்க்குணியாய்ச் சுகுணியுமாய்க்
கற்றலுமாய்க் கற்பனவாய்க் கரைவரைகள் கடந்தவளே! (66)
http://www.tamilvu.org/slet/l6600/l6600son.jsp?subid=3673
1-5
ஓதாம
லொருநாளும் இருக்க *வேண்டாம்
ஒருவரையும்
பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
*`வேண்டாம்'- என்னும் இச்சொல், `வேண்டா' என்றிருத்தல்வேண்டுமெனப் பெரும் புலவர் சிலரால் கருதப்படுகின்றது.
------------
பாஞ்சாலி சபதம், ஹரியின் இழையிலிருந்து:
வல்லவன்
வென்றிடுவான் - தொழில்
வன்மை யிலாதவன்
தோற்றிடுவான்
நல்லவன்
அல்லாதான் - என
நாணமி லார்சொலுங்
கதைவேண்டா
வல்லமர்
செய்திடவே - இந்த
மன்னர்முன்னே
நினை அழைத்துவிட்டேன்
சொல்லுக
வருவதுண்டேல் - மனத்
துணிவிலையேல்
அதுஞ் சொல்லுகென்றான்.
(177)
--------------
படர்க்கையில் தொடங்கி முன்னிலையில் முடிகிறதே
. . .சண்டமுண்டரைச் சங்கரித்த காமாட்சி . . . .அகற்றியவள், கருவாழக் கரையில் வாழ்பவள். [முழுதும் படர்க்கை அல்லவா?]
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.
--
கருவாழக்கரை அந்தாதி (71-80) மன்ற அறிஞர்களின் ஆசிகளுக்காக!படித்துலகக் கலையெல்லாம் பயனென்நீ சரணமெனப்படிப்பினையாய்ப் பெறவிலையேல்! படியளக்கும் பரதேவீ!படிப்படியாய்ப் பத்தியினால் பரவசத்தால் அனுபவித்துப்படித்தவர்க்குப் பணிசெய்யப் படித்திலனென் பயனாவேன்? (71)
பயநிலையும் எழுவாய்செய் படுபொருளும் மொழியும்நீதயவும்நீ கருவமுநீ தாய்மையுநீ சேய்மையுநீநியமம்நை மித்திகமும் நித்தியமாம் கருமமுநீஅயலும்நீ சுயமும்நீ அதிர்வலைவென் றனைத்தும்நீ (72)அனைத்துயிர்க்கும் அன்பான அனைநீயே ஆயிடினும்எனைத்தனய னாயேற்க ஏனிந்தத் தாமதமோ ?தினைத்துணையே னும்நின்றன் திடநெஞ்சம் கரையுமெனில்நினைத்துன்னை நெக்குருகி நிதம்பாடக் கவித்துவந்தா! (73)
தாவறவே விருப்பற்ற தானற்ற உள்ளம்தாநீவந்து நிலைகொள்ள நெஞ்சத்தில் நிருமலம்தாநாவற்றிப் போனாலும் நாமஞ்சொல் நலனைத்தாசாவறவும் பிறப்பறவும் சரணத்தில் சரணம்தா! (74)சரணம்உள்ளில் பதிந்துவிடச் சஞ்சலங்கள் அடங்கிவிடும்கரஅபயம் கண்டுகொளக் கலிமிரட்டல் ஓய்ந்துவிடும்பரம்பொருள்உன் தொடர்பெனக்(கு)உன் பரிவின்றிக் கிட்டா(து)என்சிரமுனக்(கு)உன் சரணெனக்(கு)என் சீவனைக்கொண்(டு) அருள்கொடுநீ (75)அருளுதற்காய்த் தனைத்தானே அழகுருவாய் அமர்வித்துக்கருவாழக் கரைதன்னில் கழனியிடைத் தளிர்த்தவளே!திருபுரமும் எரித்தசிவன் தேகத்தைப் பகிர்ந்தவளே!திருபுரத்துச் சுந்தரியே திரவிடத்தில் மிளிர்கனலே! (76)
கனற்பானைச் சிவன்பிடிக்கக் கன்னற்கோல் பிடித்தவள்நீகனப்பானை வயிற்றோனைக் கைப்பிடித்த எயிற்றோனைவனப்பானை முகத்தோனை, வள்ளிதனைத் தினைவிளையும்புனம்பார்த்துக் கவர்ந்தானைப் பதல்வர்களாய்க் கொண்டவள்நீ! (77)கொண்டையிலே கொத்துப்பூ குரல்மழலைத் தித்திப்பு!வண்டழரும் தார்மறைக்கும் வண்ணப்பூ மாராப்பு!கண்டவர்கள் கைக்குவிக்கக் கால்மடித்த வீராப்பு!மண்டியிட்ட மக்கட்கு மனமெல்லாம் பூரிப்பு! (78)
பூரிதமாய்ப் பொன்னிகடல் புகுநகரம் ஒருமருங்கில்பேரிலுயர் மாயவரப் பெருநகரம் மறுமருங்கில்மாரியம்மை இவைக்கிடையே மகிமைபெறும் ஊர்தேர்ந்துவாரியருள் மாரியென வந்தமர்ந்த வள்ளல்நீ! (79)
வள்ளன்மை, மனத்திட்பம், வாய்மைநலம், நாவினிமை,உள்ளுவதில் உயர்வு,ஒண்மை, உடல்வலிமை, நோயின்மை,கள்ளமின்மை, கலைமேன்மை, கயமையின்மை, அழுக்காறென்(று)எள்ளளவும் இல்லாமை, எலாம்வரும்உன் தயவாலே! (80)நல்வாழ்த்துக்களுடன்,கோபால்.
மிக்க நன்றி சிவசிவா. என் விடைகள் கீழே:
படித்துலகக் கலையெல்லாம் பயனென்நீ சரணமெனப்படிப்பினையாய்ப் பெறவிலையேல்! படியளக்கும் பரதேவீ!படிப்படியாய்ப் பத்தியினால் பரவசத்தால் அனுபவித்துப்படித்தவர்க்குப் பணிசெய்யப் படித்திலனென் பயனாவேன்? (71)/நீ சரணமெனப் படிப்பினையாய்ப் பெறவிலையேல்/நீ என்றதனால் இப்பாடல் நெஞ்சுக்கோ பிறருக்கோ சொல்வது.ஆயின், "என் பயன் ஆவேன்" என்று முடிகின்றதே!பரதெவீ! 'நீ'யே தான் சரணம் என்பதைப் படிப்பினையாய்ப் பெறுவதே படிப்பின் பயன்! அவ்வாறு பெறவில்லையேல் பல கலை படித்தும் பயனில்லை! நானோ உன் மகிமையை அனுபவிக்கும் அடியார்களுக்குப் பணிசெய்வதைக் கூட இன்னும் அறிந்திலனே! என் பயன் ஆவேன்?அனைத்துயிர்க்கும் அன்பான அனைநீயே ஆயிடினும்எனைத்தனய னாயேற்க ஏனிந்தத் தாமதமோ ?தினைத்துணையே னும்நின்றன் திடநெஞ்சம் கரையுமெனில்நினைத்துன்னை நெக்குருகி நிதம்பாடக் கவித்துவந்தா! (73)--> /நின்றன் திடநெஞ்சம் கரையுமெனில் /கடவுளுக்குக் கல் நெஞ்சு என்பது போல் இலக்கியங்களில் வந்ததுண்டா?அறியேன். அன்னையாய் இருந்தும் என்னைப் பிள்ளையாக ஏற்கத் தாமதிப்பதால் அவள் நெஞ்சம் இன்னும் கரையாமல் திடமாக இருப்பதாக எனக்குள் எழுகிற உணர்ச்சி.அருளுதற்காய்த் தனைத்தானே அழகுருவாய் அமர்வித்துக்கருவாழக் கரைதன்னில் கழனியிடைத் தளிர்த்தவளே!திருபுரமும் எரித்தசிவன் தேகத்தைப் பகிர்ந்தவளே!திருபுரத்துச் சுந்தரியே திரவிடத்தில் மிளிர்கனலே! (76)--> /திருபுர.../Typo?typo இல்லை. தவறான பிரயோகமே. ஆனால் தமிழில் பல மொழிபெயர்ப்புகளில், பலர் எழுத்துக்களில், பலர் பெயர்களில், மேலும் பலவிடங்களில் திருபுரம், திரிபுரம் என்பவை வேறுபாடின்றிக் கையாளப் படுவதைக் காண்கிறேன், ஒரு இலக்கணப் போலி போல! வடமொழியிலும் ஹிந்திப் பெயர்ப்புகளிலும் கூட त्रिपुर, तृपुर என்கிற பிரயோகங்கள் காணப்படுகின்றன. तृपुर என்பது ஏற்கப் படுமானால், திருபுரம் ஏற்கப்படலாம். கிருஷ்ணன் என்பது போல. எதுகைக்குத் துணைசெய்ததால் இந்தப் போலியை ஏற்றுக் கொண்டேன். If you feel it better to change it, I will manage.
கொண்டையிலே கொத்துப்பூ குரல்மழலைத் தித்திப்பு!வண்டழரும் தார்மறைக்கும் வண்ணப்பூ மாராப்பு!கண்டவர்கள் கைக்குவிக்கக் கால்மடித்த வீராப்பு!மண்டியிட்ட மக்கட்கு மனமெல்லாம் பூரிப்பு! (78)--> வண்டழரும் = ? 'வண்டயரும்' என்றிருந்திருக்க வேண்டும். நன்றி./மண்டியிட்ட மக்கட்கு/ மண்டியிட்டு வழிபடும் வழக்கம் இந்திய மரபில் உண்டா?மண்டியிடுதல் பணிந்து வணங்குவதைக் குறிக்கும். Not necessarily/literally an accepted/prescribed posture during worship.
பூரிதமாய்ப் பொன்னிகடல் புகுநகரம் ஒருமருங்கில்பேரிலுயர் மாயவரப் பெருநகரம் மறுமருங்கில்மாரியம்மை இவைக்கிடையே மகிமைபெறும் ஊர்தேர்ந்துவாரியருள் மாரியென வந்தமர்ந்த வள்ளல்நீ! (79)--> /மாயவரப் பெருநகரம்/ - ? மாயவரம் என்னும் பெரிய நகரம். இந்தப் பிரயோகத்தில் காணும் குறை/பிழை புரியவில்லை. சரியான பிரயோகத்தைச் சற்று விளக்க
கருவாழக்கரை அந்தாதி (71-80) மன்ற அறிஞர்களின் ஆசிகளுக்காக!படித்துலகக் கலையெல்லாம் பயனென்நீ சரணமெனப்படிப்பினையாய்ப் பெறவிலையேல்! படியளக்கும் பரதேவீ!படிப்படியாய்ப் பத்தியினால் பரவசத்தால் அனுபவித்துப்படித்தவர்க்குப் பணிசெய்யப் படித்திலனென் பயனாவேன்? (71)
கருவாழக்கரை அந்தாதி (81-100) மன்ற அறிஞர்களின் ஆசிகளுக்காக!அறிவாலும் இறையுணர்வாலும் மூத்தவர்களின் நல்வாழ்த்தின்றி இச்சிறியேனின் இம்முயற்சி முழுமையடைந்திருக்க இயலாது. மன்றத்தின் நல்ல உள்ளங்களை எண்ணி என் சிரம் தாழ்கிறது.வாலையென வேதியர்கள் வணங்குகிற தெய்வம்நீ!மேலையூரும் கீழையூரும் மேவுகிற வழித்தடத்தில்மேலப்பா தியினருகில் மிளிர்கின்ற திருவூரில்சோலைகளின் சூழலிலே சுந்தரிநின் திருக்கோவில்! (81)கோவிலின்முற் கூடத்தில் கொண்டாடிக் குலப்பெண்கள்காவியிட்டுக் கோலமிட்டுக் கஞ்சிவைத்துக் கூழ்சமைத்துமாவிளக்கு கள்படைத்து மாலைகட்டி நினக்களித்துதேவியுன்னைப் புகழ்ந்துபாடத் தேன்பிறந்து செவிநிறைக்கும்! (82)
செவிக்கினிப்புன் சீர்நினைந்து செப்புகிற தோத்திரங்கள் !கவிபடைத்துன் கவின்புகழ்ந்தால் கற்பனையின் வளம்சிறக்கும் !அவிடேகம் செயக்கணுற்றால் அகம்குளிர்ந்து புனிதமுறும்!புவிப்பிறப்புப் பயன்பெறும்கற் பூரவொளித் தரிசனத்தால்! (83)
மிக்க நன்றி சிவசிவா!தங்கள் இரண்டு சுட்டல்களுமே பயனுள்ளவை. நன்றியுடன் என் செய்யுள்களை கீழ்க்காண்பவைபோல் மாற்றியிருக்கிறேன்.2015-08-18 8:01 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:-> /மாவிளக்கு கள்படைத்து மாலைகட்டி நினக்களித்து /"மாவிளக்குப் படைத்துமலர் மாலைகட்டி அலங்கரித்துத்"என்பது போல் இருக்கலாமோ?
அர்ச்சகர் அல்லாத பத்தர்கள் யாரும் அம்மனை நேரில் அங்கு அலங்கரிக்க இயலாதென்பதால் 'நினக்களித்து' என்பதை வைத்துக் கொண்டேன்.