இறைவனையே வாழ்த்து நெஞ்சே!

8 views
Skip to first unread message

KKSR

unread,
Apr 4, 2026, 2:41:22 AM (8 days ago) Apr 4
to santhav...@googlegroups.com
இறைவனையே வாழ்த்து நெஞ்சே!
~~~~~~~~~~~~~

உதடொன்று சொல்ல உளமொன்று நினைக்க உறவாடும் கூட்டம் முன்னே
நிதமென்னை நிறுத்தி நெஞ்சமர்ந்து சிரிக்கும் நிமலனவன் காட்சி என்னே!
பதமென்ன அறியேன் பழகுதற்கோ எளியேன் படும்பாடு அறிந்து கொண்டே
புதன்வியாழன் வெள்ளி சனிஞாயிற் திங்கள் செவ்வாய்பாம் பிரண்டும் வாழ்த்த

உதவுதற்காய் ஐந்தை உலவவிட்ட இறைவன் ஒருபோதும் அகலான் என்னை
சதமானம் பவதி சௌந்தர்யம் பெருகி தரணியை ஆள்க வென்றே
இதமான சூழல் இயற்கைதரும் சுகமும் இன்பமென வைத்துத் தன்னை
விதவிதமாய்க் காட்டி விண்ணுயர்ந்து நிற்கும் அழகிலெனை மறந்தேன் அன்றோ!

எவர்மாட்டும் இல்லை எள்ளளவும் சிறுமை என்பதனை ஏற்கும் உள்ளம்
உவர்ப்பினிப்பு புளிப்பு உறுகாரம் கைப்பு துவர்ப்பையும் ஒன்றாய்க் கொள்ளும்
நவநவமாய் உலகில் நாயகனின் படைப்பில் நன்றாகத் துய்த்து நாளும்
சிவமாக வாழும் சிதறாது நெஞ்சம் சீரிதற்கு நேரும் உண்டோ?

பவமெல்லாம் நீங்கும் பரிதியின்முன் பனிபோல் பக்தனுக்கு இரங்கும் நெஞ்சால்
தவவாழ்வு கூடும் தகையெல்லாம் சேரும் தரணியிலுன் புகழும் வாழும்
இவரவரென் றில்லா இறைவனையே காணும் நிலைவந்து விட்டால் வேறிங்(கு)
எவைவேண்டும் சொல்க இன்னுயிர்க்கு வாழ்வில் இறைவனையே வாழ்த்து நெஞ்சே!

~ சுரேஜமீ
04.04.2026 காலை 10:36

Sent from Mobile

Ram Ramakrishnan

unread,
Apr 4, 2026, 6:20:26 AM (7 days ago) Apr 4
to santhav...@googlegroups.com
அருமை, திரு. சுரேஜமீ.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 4 Apr 2026, at 12:11 PM, KKSR <aur...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAG%2BHesshuEJidx-v058gZmBMjpdaynK1%3DPrNv%3DvvMiTyWTrhbg%40mail.gmail.com.

இமயவரம்பன்

unread,
Apr 4, 2026, 8:03:57 AM (7 days ago) Apr 4
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமையான சந்தத்தில் அமைந்த இனிமையான பாடல்கள், அண்ணலே!

ஞாயிற் திங்கள் - இப்படி வருமா என்று தெரியவில்லை.

- இமயவரம்பன்

Siva Siva

unread,
Apr 4, 2026, 8:55:28 AM (7 days ago) Apr 4
to santhav...@googlegroups.com
1) பாடல் அடிகளின் வாய்பாடு / சந்தம் என்ன?
2) இவை நான்கும் தனித்தனியே பொருள் முற்றுப்பெறும் பாடல்களா? அன்றேல், குளகமாகத் தொடர்ந்து வரும் பாடல்களா?
3) நான்கும் நெஞ்சை நோக்கிப் பாடுவதாக அமைந்த பாடல்களா?

வி. சுப்பிரமணியன் 

KKSR

unread,
Apr 4, 2026, 11:13:13 AM (7 days ago) Apr 4
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி அண்ணா.

Sent from Mobile

KKSR

unread,
Apr 4, 2026, 11:14:36 AM (7 days ago) Apr 4
to santhav...@googlegroups.com
நன்றி இளவலே! 

ஞாயிற் திங்கள் - அசை கருதித் தொகுத்தது! கடைக்குறையாகக் கொள்ளலாம்!

Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Apr 4, 2026, 11:15:32 AM (7 days ago) Apr 4
to santhav...@googlegroups.com

KKSR

unread,
Apr 4, 2026, 11:16:43 AM (7 days ago) Apr 4
to santhav...@googlegroups.com
வருக அண்ணலே!

1) காய் மா காய் மா காய் மா தேமா
2) முதல் இரண்டு குளகம்! 
3) முதலிரண்டு தன்விளிப்பு! பின்னிரண்டு பொது விளிப்பு

Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 4, 2026, 11:22:50 AM (7 days ago) Apr 4
to santhav...@googlegroups.com
மீண்டும் ஒருமுறை படித்துப் புணர்ச்சியால் வாய்பாடு கெடும் இடங்களைச் சீர்செய்க.

Looks like the week starts from Wednesday where you live!

/ பாம் பிரண்டும் வாழ்த்த / = ?

V. Subramanian

KKSR

unread,
Apr 4, 2026, 12:43:09 PM (7 days ago) Apr 4
to santhav...@googlegroups.com
நன்றி மாமா!

Sent from Mobile

KKSR

unread,
Apr 4, 2026, 12:46:22 PM (7 days ago) Apr 4
to santhav...@googlegroups.com
ஆஹா...மாட்டிக்கிட்டோமே!

சரி!

பாம்பிரண்டு  - இராகு, கேது

நவகிரகங்களை எதுகைக்காக மாற்றிவைத்தேன்!

வாய்ப்பாடு கெட்டதாகத் தெரியவில்லை; சுட்டுக அண்ணலே! சூட்டுவோம மாலை!

Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 4, 2026, 12:53:40 PM (7 days ago) Apr 4
to santhav...@googlegroups.com
குற்றியலுகரத்தில் முடியும் சொற்கள் வரும் இடங்களை மீண்டும் நோக்குக.

KKSR

unread,
Apr 4, 2026, 1:24:50 PM (7 days ago) Apr 4
to santhav...@googlegroups.com
சரி அண்ணா!

Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages