ஏகாதசிப் பாடல்

1 view
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
10:25 AM (10 hours ago) 10:25 AM
to சந்தவசந்தம்
கவிஞர் திரு. கோபால் அவர்களின் இன்றைய ஏகாதசிப் பாடலை அவர் கேட்டுக்கொண்டபடி கீழே தந்துள்ளேன்.

ஏகாதசிப் பாடல் [10 ஜூலை 2026]

காட்சி எல்லாம் நீ!

விண்ணளந்து மாவலியின் விதி வகுத்தாய்!
……வில்லொடித்து மைதிலியை வென்று கொண்டாய்!
மண்ணசித்துத் தாய்மனத்தை மயக்கி விட்டாய்!
……மங்கையர்கள் இதயமெல்லாம் மணக்க நின்றாய்!
தண்ணளிக்கு நின்கருணை தாய்க்கும் மேலாம்!
……தாரணிக்கு நின்சரணே சரணமாகும்!
கண்ணஉன்றன் ஒளியன்றே கதிர்களெல்லாம்!
……காட்சியெலாம் நீதான்என் கண்விழிக்கே!

[அசித்து = தின்று/உண்டு]

நல்வாழ்த்துகள்
கோபால்.
[10/07/2026]

Siva Siva

unread,
10:47 AM (10 hours ago) 10:47 AM
to santhav...@googlegroups.com
மண்ணுண்ட மாலைப் போற்றும் பாடல் நன்று.

வி. சுப்பிரமணியன்

இமயவரம்பன்

unread,
2:04 PM (6 hours ago) 2:04 PM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமையான துதிப்பாடல்!

Ram Ramakrishnan

unread,
4:14 PM (4 hours ago) 4:14 PM
to santhav...@googlegroups.com
அருமை, திரு. கோபால்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



On Fri, Jul 10, 2026 at 10:25 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia3wepSbqk-QxxU%3DR1_SxVmDg-5sMaff6FoEyJib_haX3g%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages