வண்ண விருத்தம் முயற்சி 24 (ராம்)

12 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Sep 30, 2026, 10:13:59 PMSep 30
to santhavasantham
 

 

வண்ண விருத்தம் முயற்சி 24 (ராம்)

சந்தக் குழிப்பு: (மனத்தில் தோன்றியவாறு)

தய்ய தனதத்தா  தய்ய தனதத்தா
தய்ய தனதத்தா                    தனதான

 

image.png

கல்லில் அடிபட்டாய் வில்லில் அடிபட்டாய்

        கர்ண உரைபெற்றாய்                  சிவனாரே


கர்ம நிலையுற்றே மெய்யர் கணையிட்டார்

        கல்லும் உருகிற்றே                       கையிலாயா

 

செல்லல் மிகவுற்றே பிள்ளை அமுதிட்டார்

        செவ்வி அருளிட்டாய்                 பரமேசா


செல்வர் உளமுற்றே மெய்யில் விசையுற்றார்

கையின் மழுவெட்டோர்           அருளோனே

 

வல்லி முதலைத்தாம் உள்ளன் விடுவித்தாய்

ஒல்லை துயர்செற்றாய்            குணசீலா

 

மம்மர் விளைதற்காய் அய்யன் அமிழ்வித்தார்

இம்மை மனிதப்பே                ரருள்நேயா


சில்லம் வினையற்றேன் நல்ல சமயத்தே

தொல்லை விலகத்தாள்          தருவாயே

 

செல்லும் வழிபெற்றாம் உய்ய னமதைத்தா

தில்லை நகரத்தாள்              பெருமானே.


பதம் பிரித்துப் பொருள்:

கல்லில் அடிபட்டாய் வில்லில் அடிபட்டாய்

        கர்ண உரைபெற்றாய்                 சிவனாரே

 

(சாக்கிய நாயனார் (பக்தியினால்) உன்மேல் கற்களை எறிய அதனால் அடிபட்டாய். அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெறுவதற்காகப் போரிட்ட போது, அவனது காண்டீப வில்லினால் உண்டான அடியையும் பெற்றாய். தந்தையாகிய சிவபெருமானுக்குக் குருமூர்த்தியாக நின்று, அவரது காதில் (கர்ணத்தில்) பிரணவ மந்திரத்தின் நுட்பமான பொருளை உரைத்ததையும் கேட்ட்டாய், சிவபெருமானே)

கர்ம நிலையுற்றே மெய்யர் கணையிட்டார்

        கல்லும் உருகிற்றே                கையிலாயா

(வினைப்பயன்களால் மெய்யன்பராகிய கண்ணப்பர் தன் கண்ணையே அம்பினால் தோண்டி உனக்கு அப்பிய பேரன்பைக் கண்டு, கல்லும் உருகும் படியாக மனம் உருகி அருள்செய்த கயிலாயப் பெருமானே
கணையிட்டார் – கண்ணை இட்டார் என்பதன் விகாரம்)

 

செல்லல் மிகவுற்றே பிள்ளை அமுதிட்டார்

         செவ்வி அருளிட்டாய்              பரமேசா

(எல்லை இல்லாத துன்பமும் மனக்கலக்கமும் அடைந்தும் தம் ஒரே புதல்வனான சீராளனை அறுத்து சமைத்து அமுதாகப் படைத்தார் சிறுத்தொண்ட நாயனார். அவரது ஒப்பற்ற பக்தியைக் கண்டு உவந்து) உடனடியாகக் காட்சி தந்து, அப்பள்ளையானை மீண்டும் உயிருடன் மீட்டெடுத்து அருள் புரிந்தாய் பரமேஸ்வரனே – செவ்வி – ஏற்றசமயம்)

 

செல்வர் உளமுற்றே மெய்யில் விசையுற்றார்

        கையின் மழுவெட்டோர்           அருளோனே

(சிவனாரின் சிந்தனையில் முழுமையாகத் திளைத்து, அவர்மீது கொண்ட பக்தியால் உள்ளம் நிறைந்தவராய், உடலிலும் செயலிலும் தெய்விக வேகமும் உக்கிரமும் கொண்டவராகி (தந்தையே ஆயினும் சிவபூஜைக்கு இடைஞ்சல் செய்ததால்) கையில் ஏந்திய மழுவினால் (கோடரியால்) அவரது கால்களை வெட்டிய சண்டேசுவர நாயனாருக்குச் சண்டேசப் பதவியும், தன் கொன்றை மலர் மாலையும் வழங்கி அருளிய இறைவனே)

வல்லி முதலைத்தாம் உள்ளன் விடுவித்தாய்

       ஒல்லை துயர்செற்றாய்            குணசீலா

(கொடிய பேராற்றல் கொண்ட முதலை தான் உட்கொண்ட சிறுவனை மீண்டும் (சுந்தர மூர்த்தி நாயனார் பதிகம் பாட) உயிருடன் வெளிவரச் செய்து மீட்டருளினாய். அதனால் விரைவினில் பெற்றோரும் மற்றோரும் கொண்ட துன்பத்தை விரைவில் நீக்கினாய், நற்குணங்களின் பெரு வடிவோனே)

மம்மர் விளைதற்காய் அய்யன் அமிழ்வித்தார்

      இம்மை மனிதப்பே                ரருள்நேயா

(சமணர்கள் துன்பம் உண்டாகும் பொருட்டு, அப்பரடிகளை பெரிய கல்லோடு பிணைத்துக் கடலில் அமிழ்த்தினார்கள். அந்தக் கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறச் செய்து) இப்பிறவியிலேயே மனிதர்களுக்குத் தன் பேரருளை வழங்கிடும் அருள் அன்பனே)

சில்லம் வினையற்றேன் நல்ல சமயத்தே

       தொல்லை விலகத்தாள்           தருவாயே

(சிதறிக் கிடக்கும் என் பாப வினைகளெல்லாம் நசித்துப் போகும்படி, இந்த நல்ல சமயத்தில், என்னைப் பிடித்துள்ள தொன்மையான பிறவித் துன்பங்கள் அனைத்தும் அகல உனது திருவடித் தாமரைகளைத் தந்தருள்வாயே. சில்லம் – சிதறுண்ட) 

செல்லும் வழிபெற்றாம் உய்ய னமதைத்தா

         தில்லை நகரத்தாள்               பெருமானே

(பிறவிப் பெருங்கடலைக் கடந்து முக்தி நெறியை அடையும் நல்வழியை நாங்கள் அடையும்பொருட்டு, உன்னுடைய அருளாகிய உய்யானத்தை (நந்தவனத்தின் பசுமையை / இன்ப நிழலை)த் தந்தருள்வாயாக, தில்லை மாநகரில் வீற்றிருந்து உலகாளும் பெருமானே. உய்யனம் – உய்யானம் என்பதன் விகாரம் – நந்தவனம்)


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Siva Siva

unread,
Oct 1, 2026, 8:17:45 PMOct 1
to santhav...@googlegroups.com
/ தய்ய தனதத்தா  தய்ய தனதத்தா
  தய்ய தனதத்தா                    தனதான /

This appears to be a challenging pattern.

V. Subramanian

On Wed, Sep 30, 2026 at 10:13 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
 

 

வண்ண விருத்தம் முயற்சி 24 (ராம்)

சந்தக் குழிப்பு: (மனத்தில் தோன்றியவாறு)

தய்ய தனதத்தா  தய்ய தனதத்தா
தய்ய தனதத்தா                    தனதான

 

கல்லில் அடிபட்டாய் வில்லில் அடிபட்டாய்

Ram Ramakrishnan

unread,
Oct 1, 2026, 8:49:27 PMOct 1
to santhav...@googlegroups.com
Thanks, Sri. Sivaa.

This pattern was ringing in mind mind when I was asleep. On getting up in the morning I immediately noted down the same. It was daunting indeed. I would only say, that God’s grace was there when I stated to write.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 1, 2026, at 20:17, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPYyyEAw0Y2SRzWZsjWuhrBdDNmULSZikO8eTEjn1myRg%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Oct 1, 2026, 9:23:23 PMOct 1
to சந்தவசந்தம்
அற்புதம் அண்ணலே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Oct 1, 2026, 9:55:00 PMOct 1
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 1, 2026, at 21:23, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:


அற்புதம் அண்ணலே!

On Thu, 1 Oct 2026, 7:44 am Ram Ramakrishnan, <ramr...@gmail.com> wrote:
 

 

வண்ண விருத்தம் முயற்சி 24 (ராம்)

சந்தக் குழிப்பு: (மனத்தில் தோன்றியவாறு)

தய்ய தனதத்தா  தய்ய தனதத்தா
தய்ய தனதத்தா                    தனதான

 

<image.png>

Siva Siva

unread,
Oct 1, 2026, 10:20:50 PMOct 1
to santhav...@googlegroups.com
I tried writing in this pattern. 

Will post in my usual thread shortly!

V. Subramanian
Reply all
Reply to author
Forward
0 new messages