Re: வாட்ஸ்ஆப்பில் வந்தவுரு

12 views
Skip to first unread message

Rajja Gopalan

unread,
Sep 4, 2025, 4:34:52 AMSep 4
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com


🙏


*புத்தகமாய் வந்தாயப்பா! - *
*பிள்ளையாரப்பா!*
பூதகண நாதனே அப்பா!

சுத்தசுகந் தந்தாயப்பா! - எனுள்
சித்தமுதப் பந்தாயப்பா! - இருட்
கத்தவிழ வந்தருளி
புத்தியினுட் தந்தொளிரப் - (புத்தகமாய்)

வித்தையருள் செய்வாயப்பா! - எனுள்
நித்தமருள் பெய்வாயப்பா! - அருள்
முத்தவிழ நெய்தருளிச்
சித்திபல எய்துவிடப் - (புத்தகமாய்)

அத்துவிதந் தந்தேயப்பா - மறை
அத்தனையுட் செந்தேனப்பா - இறைச்
சத்தியமென் நித்தியமாய்
முத்தியருள் நித்திலமாய்ப் - (புத்தகமாய்)

மீ. ரா
Video.mov

இமயவரம்பன்

unread,
Sep 4, 2025, 7:31:40 PMSep 4
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
புத்தகமாய் வந்தருளும் பூதகண நாதனடி
பத்திமையால் போற்றுதமிழ்ப் பாட்டு.

மிக அருமை!

Ram Ramakrishnan

unread,
Sep 4, 2025, 8:35:16 PMSep 4
to santhav...@googlegroups.com
மிகவும் அருமை, தரு. மீ. ரா.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 4, 2025, at 04:34, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:


<Video.mov>


🙏
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/BFBA3883-8D00-4CFE-A8E1-43D5962ECA17%40gmail.com.

Rajja Gopalan

unread,
Sep 15, 2025, 2:12:41 AMSep 15
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com


*அருமை மழை பானு -
அதிலொரு செய்தி*

கொட்டுகிற மழை - இதயந்
தொட்டுவிட நனை! - இனிய
பட்டுமணி இழை - அமுது
திட்டபுனற் சுனை! - புதினங்

கட்டுகிற திரை! - வயதின்
திட்டமறு! இறை - அருளை
மட்டுமினி உரை! - துயரும்
விட்டதறி! நிறை! - மலர

மொட்டவிழுங் கிளை! - இனிமை
சொட்டுமதிற் திளை! - அதனில்
விட்டுவிடு பிணை! - நிறைவு
இட்டமனத் தினை - இறைவன்

ஒட்டுமதில் இணை! - இனியுன்
திட்டமென நினை! - இனிமை
மட்டும்வரும்! அணை!- மகிமை
இட்டதருட் துணை - சிவமே!
இட்டதருட் துணை!

மீ. ரா
15-9-2025
Video.mov

Rajja Gopalan

unread,
Sep 17, 2025, 5:00:52 AMSep 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com

🙏
May You not go anywhere, as You are the fulfilling effulgence within me, O Govinda!

ஏகா தசி அறியேன்!
எளியேன் அறம் புரியேன்!
ஈகா திருந் துழல்வேன்!
ஈனன் எனப் பிறழ்வேன்!
வாகாய் அருள் சுரந்தே
வந்தவனே! பர மாத்மா!
*போகா தெனுட் பொலியும்*
*பூரணனே! கோவிந்தா!*

நாகா சயன எழில்
நாரணனே! வனமாலி!
ஏகா தசி எழுந்தாய்!
எங்கேநீ புறப்பட்டாய்?
தேகா தியுங் கடந்த
தேஜோ மய விளக்கே!
*போகா தெனுட் பொலியும்*
*பூரணனே! கோவிந்தா!*

வேகா மனம் உருக்கி
வேத முதந் தந்திளக்கிச்
சோகா பாச மிருட்
சுமை யவிழ வந்திறக்கி
ஏகா தசி வருவாய்!
ஏழை எமக்கே அருள்வாய்!
*போகா தெனுள் பொலியும்*
*பூரணனே! கோவிந்தா!*

I don’t know Ekādaśi, am a simpleton, not even doing any Seva; Without giving to others, I lead such a lowly life. Yet, fittingly, giving the grace, O Paramātma, You have come! May You not go anywhere, as You are the fulfilling effulgence within me, O Govinda!

Having risen from the Serpent bed on this Ekādaśi, O Śri Nārāyana, O Vanamāli, where are you poised-to-go? O Who transcends the embodiments and shines as the infinite bliss!
May You not go anywhere, as You are the fulfilling effulgence within me, O Govinda!

May you melt my un-melting heart, soak it with elixir of Vedānta and by doing so, may You remove the laden weight of Samsāra, the deluded illusory cycle of grief! May you come on this Ekādaśi, to rescue this poor person! May You not go anywhere, as You are the fulfilling effulgence within me, O Govinda!

Rajja
image0.jpeg

Rajja Gopalan

unread,
Sep 20, 2025, 2:48:25 PM (11 days ago) Sep 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
🙏



வடையால் அணி உடையாகிட
வருவாய் அருள் தருவாய்!
உடையான் அடிப் படையாகிய
உருவாய் அனு மந்தா!

சடையானரன் அவ தாரமெனும்
அடையா ளமும் இடுவாய்!
மடையாய்ச் சுக மழையாய்ச்
சுபமருள்வாய் அனு மந்தா!!

தடையாயினிக் கிடையாதெனத்
தயவாற் துணை தருவாய்!
விடையாய் எதிர் வருவாயருள்
விமலா அனு மந்தா!

நடையாய்த் திரை கடல்தாண்டிய
நளினா! பஜ ரங்கா!
தொடையாற் பகை அரிவாயருட்
துணையாய் அனு மந்தா!

இடையேதற இரகுராமனின்
இணையாம் அடி பணிவாய்!
புடைசூழுமுன் புகழ் ஆலயம்!
புனிதா அனு மந்தா!

கிடையாதினிக் குறையாய் மனக்
கிளர் வானவை அவிவாய்!
வடைமாலையில் வருவாய் அருள்
வரந்தா! அனுமந்தா!

ஜய் ஹனுமான்!

மீ. ரா
20-9-2025
image1.jpeg
Reply all
Reply to author
Forward
0 new messages