அருணகிரிநாதர்
அவரது பாட்டை இராஜ பாட்டை
அரண்மனைக்குத்தான் அது செல்லும்
அவரது வாக்கு சத்ய வாக்கு
அறுமுகனைத்தான் அதுசொல்லும்
அவரது பார்வை அருள்சேர் பார்வை
யாவும் ஒன்றாய் அதுகாட்டும்
அவரது மூச்சு சந்த வீச்சு
அதற்குத் தெய்வம் தலையாட்டும்
கற்புடை மனைவி கண்பார் வைக்குக்
கணவன் மட்டும் ஆண்பிள்ளை
அற்புத மாக வடிவேல் பாடும்
அருண கிரியோர் சொற்கிள்ளை
சொற்பதம் பாடச் சொல்லித் தந்த
சுப்ரமண்யன் தருநாதம்
கற்பனை கடந்த கவிதை காட்டும்
கடவுள் தந்த அருட்போதம்.
எப்படி இப்படித் தப்படி யின்றி
இவரால் பாட முடிந்ததுவோ?
சுப்படி செப்பிட ஒப்பிட லில்லா
துள்ளல் வாக்கில் படிந்ததுவோ?
அப்படிச் செப்பிட இப்படி இனிமேல்
யாரும் பிறக்க முடியாது
செப்படி வித்தைகள் துப்பிடும் சொற்கள்
சிறிதள வேனும் கிடையாது.
வேறு
அருணகிரி பாடலில் பெருகுகிற சந்தமே
அற்புதமே சிந்துமே
அருள்பெருகு மேமனம் அதி லுருகுமே பெரும்
ஆனந்தமே முந்துமே
திருமுருகன் தன்னைமுன் வருமுருகனாகவே
திருப்புகழ் தான் பாடுமே!
திருத்தலம் யாவுமே அவர்கவி மேவுமே
சித்திகள் தாம் கூடுமே!
ஒரு பெரிய அனுபவம் பெருகுமனம் பூக்குமே
உயருமே மெய்சேர்க்குமே
உள்ளபடி யாவையும் நல்லபடி யாகவே
ஒவ்வொன்றுமே பூக்குமே
குருவடிவில் வருமழகு குழந்தைவடி வேலனருள்
குறைகளெல்லாம் தீர்க்குமே
கோபுர மாகவுள ஞானமே கூட்டுமே
குமரனை முன் காட்டுமே!
வேறு
வீசும் காற்றுக் கென்ன வேலை
வேலன் நாமம் சுமக்கிறதாம்
பேசும் வார்த்தை பெம்மான் புகழைப்
பேச என்றே பிறக்கிறதாம்
வாசப் பூக்கள் மாலின் மருகன்
மாலை சூட்டப் பூப்பனவாம்
ஆசை அறுத்த அருண்அ கிரிக்கோ
ஆசை முருகன் அடிமலராம்
அவரின் பாடற் கவனே மையம்
அடுத்த பலரும் சுற்றுக்கள்
கவரும் வகையில் சுற்றைப் பற்றிக்
கவிதை பாடும் போதினிலும்
தவறா தங்கே மையம் கொள்ளச்
சாமி நாதன் தோன்றிடுவான்
உவகை கொள்வான் உள்ளம் வெல்வான்
உயர்வு ஞானம் ஊன்றிடுவான்
வேறு
மாலையில் பூக்க ளாக
வருபவர் பிற தெய் வங்கள்
மாலையைச் சூடிக் கொள்ள
வருபவன் குமர வேளே!
சோலையின் பசுமைக் குள்ளும்
சுடரிலும் காற்றினுள்ளும்
வேலையின் வீச்சி னுள்ளும்
வேலனே தோன்று கின்றான்
வேறு
செப்பாமாய்ப் பூட்டிய செந்தமிழ்ச் சந்தங்கள்
கொப்பளித் தார்க்கும், குதித்துவரும் தாளலயம்
உச்சி மலையிருந்து ஓங்கி விழுமருவி
எச்சரிக்கை பாடி எழுந்து குதிப்பதுபோல்
மெச்சுபுகழ்ச் சந்த்தத்தில் வேலன் நடந்தெரியும்
நாவோ சுழலும், நடிப்பில் மொழிதுடிக்கும்
பாவோடும் பக்தி பரதம் தனில் சுடரும்
வல்லோசை, மெல்லோசை, வட்டோசை, தட்டோசை
வில்லோசை, ஆர்க்கும் வெடியோசை, மீட்டோசை
ஓடும் புனலோசை, ஓங்கு திரையோசை
பாடும் குயிலோசை, பாயும் பரியோசை
தட்டும் முழவோசை தாளத் தறியோசை
கொட்டும் இடியோசை, கொஞ்சும் குழலோசை
தென்றல் தவழ்ந்து சிலுசிலுக்கும் தேனோசை
மன்றின் நடிப்போசை வான மழையோசை
எல்லாம் கொடுக்கும் இசைசேர் திருப்புகழில்
வல்லான் திருமுருகன் மாலன் எழில் மருகன்
தண்டையணி கிண்கிணி தானசைய ஆடிடுவான்
தாயின் மடியேறிச் சந்தங்கள் பாடிடுவான்
மாயன் மருகனென வந்துவிளை யாடிடுவான்
அண்ணன் கணபதிக்கு அண்டையிலே நின்றிடுவான்
விண்ணுலக வேந்தன் மகள் மெல்லியலாள் நாயகனாய்
மான்வயிற்றில் தோன்றிவந்த வள்ளிமண வாளனுமாய்
தேன்பிலிற்றும் செந்தமிழில் தெய்வம் வலம்வருவான்
பார்க்கும் இடத்திலெல்லாம் பச்சைமயில் வாகனனே
பூக்கும் மலரிலெல்லாம்புன்னகைப்பான் வேலவனே
வாக்கைக் கொடுத்துவிட்ட வள்ளலவ் வாக்குகளை
யார்க்கும் முழுதும் அளிக்க விடவில்லை
தானே பெரும்பகுதி தட்டிக்கொண்டோடிவிட்டான்
வானேறிப் போக வெண்ணி வாடும் அருணகிரி
கோபுரத்தில் ஏறிக் குதித்து விழும்போதில்
ஆபத்தினின்றும் அவரையன்று காத்தபிரான்
வாக்கில் கடிவாளம் மாட்டிவிட்டான். தன்னையே
பார்க்கும் நிலையளித்தான், பக்தர் தனைக் காத்தான்.
சந்தத்தின் உச்சமெல்லாம் தான்காட்டிப் பக்தியெனும்
பந்தத்தில் கட்டிப் படியேறச் செய்துவிட்டான்.
ஒன்றையே காட்டியவ் வொன்றைப் படம்பிடிக்கப்
பின்புலத்தில் வேறுபல பிம்பங்கள் தான்காட்டிக்
கந்தனை நம்மனத்தில் கால்பதிக்க வைத்துவிட்ட
சந்த அருணகிரி தாள்மலரைப் போற்றுகின்றேன்
வாக்கிற் கருணகிரி வந்து வழிகாட்டப்
பூக்கூடை தூக்கிப் புறப்பட்டேன், பூமாலை
ஆக்கிடுவேன், அந்த அறுமுகற்குச் சாத்திடுவேன்
பூக்கின்ற பூக்கள் புனிதத்தில் ஏறிவிடும்
வாய்க்கின்ற யாவும் வரலாறாய் ஆகிடுமே!
இலந்தை
1-1-1985
குமரன் குன்றம்
குரோம்பேட்டை
அருணகிரிநாதர்
அவரது பாட்டை இராஜ பாட்டை
அரண்மனைக்குத்தான் அது செல்லும்
அவரது வாக்கு சத்ய வாக்கு
அறுமுகனைத்தான் அதுசொல்லும்
அவரது பார்வை அருள்சேர் பார்வை
யாவும் ஒன்றாய் அதுகாட்டும்
அவரது மூச்சு சந்த வீச்சு
அதற்குத் தெய்வம் தலையாட்டும்
கற்புடை மனைவி கண்பார் வைக்குக்
கணவன் மட்டும் ஆண்பிள்ளை
அற்புத மாக வடிவேல் பாடும்
அருண கிரியோர் சொற்கிள்ளை
சொற்பதம் பாடச் சொல்லித் தந்த
சுப்ரமண்யன் தருநாதம்
கற்பனை கடந்த கவிதை காட்டும்
கடவுள் தந்த அருட்போதம்.
எப்படி இப்படித் தப்படி யின்றி
இவரால் பாட முடிந்ததுவோ?
சுப்படி செப்பிட ஒப்பிட லில்லா
துள்ளல் வாக்கில் படிந்ததுவோ?
அப்படிச் செப்பிட இப்படி இனிமேல்
யாரும் பிறக்க முடியாது
செப்படி வித்தைகள் துப்பிடும் சொற்கள்
சிறிதள வேனும் கிடையாது.
வேறு
அருணகிரி பாடலில் பெருகுகிற சந்தமே
அற்புதமே சிந்துமே
அருள்பெருகு மேமனம் அதி லுருகுமே பெரும்
ஆனந்தமே முந்துமே
திருமுருகன் தன்னைமுன் வருமுருகனாகவே
திருப்புகழ் தான் பாடுமே!
திருத்தலம் யாவுமே அவர்கவி மேவுமே
சித்திகள் தாம் கூடுமே!
ஒரு பெரிய அனுபவம் பெருகுமனம் பூக்குமே
உயருமே மெய்சேர்க்குமே
உள்ளபடி யாவையும் நல்லபடி யாகவே
ஒவ்வொன்றுமே பூக்குமே
குருவடிவில் வருமழகு குழந்தைவடி வேலனருள்
குறைகளெல்லாம் தீர்க்குமே
கோபுர மாகவுள ஞானமே கூட்டுமே
குமரனை முன் காட்டுமே!
வேறு
வீசும் காற்றுக் கென்ன வேலை
வேலன் நாமம் சுமக்கிறதாம்
பேசும் வார்த்தை பெம்மான் புகழைப்
பேச என்றே பிறக்கிறதாம்
வாசப் பூக்கள் மாலின் மருகன்
மாலை சூட்டப் பூப்பனவாம்
ஆசை அறுத்த அருண்அ கிரிக்கோ
ஆசை முருகன் அடிமலராம்
அவரின் பாடற் கவனே மையம்
அடுத்த பலரும் சுற்றுக்கள்
கவரும் வகையில் சுற்றைப் பற்றிக்
கவிதை பாடும் போதினிலும்
தவறா தங்கே மையம் கொள்ளச்
சாமி நாதன் தோன்றிடுவான்
உவகை கொள்வான் உள்ளம் வெல்வான்
உயர்வு ஞானம் ஊன்றிடுவான்
வேறு
மாலையில் பூக்க ளாக
வருபவர் பிற தெய் வங்கள்
மாலையைச் சூடிக் கொள்ள
வருபவன் குமர வேளே!
சோலையின் பசுமைக் குள்ளும்
சுடரிலும் காற்றினுள்ளும்
வேலையின் வீச்சி னுள்ளும்
வேலனே தோன்று கின்றான்
வேறு
செப்பாமாய்ப் பூட்டிய செந்தமிழ்ச் சந்தங்கள்
கொப்பளித் தார்க்கும், குதித்துவரும் தாளலயம்
உச்சி மலையிருந்து ஓங்கி விழுமருவி
எச்சரிக்கை பாடி எழுந்து குதிப்பதுபோல்
மெச்சுபுகழ்ச் சந்த்தத்தில் வேலன் நடந்தெரியும்
நாவோ சுழலும், நடிப்பில் மொழிதுடிக்கும்
பாவோடும் பக்தி பரதம் தனில் சுடரும்
வல்லோசை, மெல்லோசை, வட்டோசை, தட்டோசை
வில்லோசை, ஆர்க்கும் வெடியோசை, மீட்டோசை
ஓடும் புனலோசை, ஓங்கு திரையோசை
பாடும் குயிலோசை, பாயும் பரியோசை
தட்டும் முழவோசை தாளத் தறியோசை
கொட்டும் இடியோசை, கொஞ்சும் குழலோசை
தென்றல் தவழ்ந்து சிலுசிலுக்கும் தேனோசை
மன்றின் நடிப்போசை வான மழையோசை
எல்லாம் கொடுக்கும் இசைசேர் திருப்புகழில்
வல்லான் திருமுருகன் மாலன் எழில் மருகன்
தண்டையணி கிண்கிணி தானசைய ஆடிடுவான்
தாயின் மடியேறிச் சந்தங்கள் பாடிடுவான்
மாயன் மருகனென வந்துவிளை யாடிடுவான்
அண்ணன் கணபதிக்கு அண்டையிலே நின்றிடுவான்
விண்ணுலக வேந்தன் மகள் மெல்லியலாள் நாயகனாய்
மான்வயிற்றில் தோன்றிவந்த வள்ளிமண வாளனுமாய்
தேன்பிலிற்றும் செந்தமிழில் தெய்வம் வலம்வருவான்
பார்க்கும் இடத்திலெல்லாம் பச்சைமயில் வாகனனே
பூக்கும் மலரிலெல்லாம்புன்னகைப்பான் வேலவனே
வாக்கைக் கொடுத்துவிட்ட வள்ளலவ் வாக்குகளை
யார்க்கும் முழுதும் அளிக்க விடவில்லை
தானே பெரும்பகுதி தட்டிக்கொண்டோடிவிட்டான்
வானேறிப் போக வெண்ணி வாடும் அருணகிரி
கோபுரத்தில் ஏறிக் குதித்து விழும்போதில்
ஆபத்தினின்றும் அவரையன்று காத்தபிரான்
வாக்கில் கடிவாளம் மாட்டிவிட்டான். தன்னையே
பார்க்கும் நிலையளித்தான், பக்தர் தனைக் காத்தான்.
சந்தத்தின் உச்சமெல்லாம் தான்காட்டிப் பக்தியெனும்
பந்தத்தில் கட்டிப் படியேறச் செய்துவிட்டான்.
ஒன்றையே காட்டியவ் வொன்றைப் படம்பிடிக்கப்
பின்புலத்தில் வேறுபல பிம்பங்கள் தான்காட்டிக்
கந்தனை நம்மனத்தில் கால்பதிக்க வைத்துவிட்ட
சந்த அருணகிரி தாள்மலரைப் போற்றுகின்றேன்
வாக்கிற் கருணகிரி வந்து வழிகாட்டப்
பூக்கூடை தூக்கிப் புறப்பட்டேன், பூமாலை
ஆக்கிடுவேன், அந்த அறுமுகற்குச் சாத்திடுவேன்
பூக்கின்ற பூக்கள் புனிதத்தில் ஏறிவிடும்
வாய்க்கின்ற யாவும் வரலாறாய் ஆகிடுமே!
இலந்தை
1-1-1985
குமரன் குன்றம்
குரோம்பேட்டை
V
// குதித்துவரும் தாளலயம் //
தாளலயம் - ஒருபொருட்பன்மொழி?
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
வல்லான் திருமுருகன் மாலன் எழில் மருகன்
தண்டையணி கிண்கிணி தானசைய ஆடிடுவான்
தாயின் மடியேறிச் சந்தங்கள் பாடிடுவான்///
சரியான முறை! ஒரு சான்றோரை போற்றும் போது அவர் வரிகளை சொல்லுவது உண்மையான முறை.
அதிலும் சொல்லெல்லாம் மந்திரமாக விளங்கும் அருணகிரிநாதர் பாடலின் வரிகளை கோப்பது நல்ல விஷயம். இதுதான் சரி.
இலந்தையார்ருக்கு வணக்கங்கள்!
--
//அருணகிரி பாடலில் பெருகுகிற சந்தமே
அற்புதமே சிந்துமே
அருள்பெருகு மேமனம் அதி லுருகுமே பெரும்
ஆனந்தமே முந்துமே //
"மே" என்னும் சொற்சந்தம் அழகு!
இலந்தை அவர்களுக்கு வாழ்த்துகளுடன்,
நல்ல சந்தப் பாடலைத் தந்த சிறப்பிற்கும்
நன்றி!
அன்புடன்,
தங்கமணி.
On Jun 17, 11:25 pm, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> As a sequel to PASUPATHI'S aruNagiri, I am posting my poem on
> ARUNAGIRINATHAR...
> read more »
>
> MURUGAN.jpg
> 65KViewDownload
>
> lord_muruga_blessing_aurnagiri.jpg
> 47KViewDownload
>
> arunagiri.gif
> 80KViewDownload