கம்பன் பொழில்

530 views
Skip to first unread message

சௌந்தர்

unread,
Dec 24, 2009, 8:56:37 PM12/24/09
to சந்தவசந்தம்
கம்பன் பொழில்

(பொற்கிழிக் கவிஞர், கவிமாமணி டாக்டர் சவகர்லால்)

2005-ம் ஆண்டில் பழனியம்மாள் வெளியீடு-சென்னை வெளியிட்ட நூல்.

கவிதை ஒவ்வொன்றும் நட்சத்திரக் கவிதை. இதனால்தானோ என்னவோ இந்தத்
தொகுப்பில் உள்ள கவிதைகள் மொத்தம் 27. கவிஞர் யாவரும் அவசியம் படிக்க
வேண்டிய நூல். புத்தக வடிவில் மட்டும் இருந்தால் போதாது, இணையத்தில்
தேடி எடுக்கும் வகையில் இருப்பது நலம் என்று தோற்றியது. விடுமுறை
நேரமாக இருப்பதால் முடிந்தவரை தட்டச்சி இங்கே இடுகிறேன் ஒவ்வொன்றாக.
-------------------------------------------------------------------
1. கம்பன்

உள்ளத்தில் போதைவரும்; பாடப் பாட
. . உலகத்தை மறக்கவரும்; ஆழ்ந்த பக்தி
வெள்ளத்தில் நீந்தவரும்; மூளும் தீய
. . வினைப்பயனை அறுக்கவரும்; அரும்பும் நெஞ்சக்
கள்ளத்தை நீக்கவரும்; கடலாம் இன்பக்
. . கவிதையிலே திளைக்கவரும்; கம்ப நாடன்
உள்ளத்தில் உடைப்பெடுத்த இராம காதை
. . ஓட்டத்தில் இணைந்திட்டால் வருமெல் லாமும்!


சொல்லழகைச் சுவைப்போமா? முந்து கின்ற
. . தொனியழகைச் சுவைப்போமா? இராமன் கையின்
வில்லழகைச் சுவைப்போமா? சரங்கள் பாயும்
. . வேகத்தைச் சுவைப்போமா? உயிர்தான் பெற்ற
கல்லழகைச் சுவைப்போமா? மூக்க றுந்த
. . காரிகையை ரசிப்போமா? அவள்தன் எண்ணம்
சொல்லழகைச் சுவைப்போமா? எதைச்சு வைப்போம்?
. . தொட்டவிட மெல்லாமே கலைச்சு வைத்தேன்.

சொல்லாலே மண்டபத்தை அமைத்தான; பாட்டுச்
. . சுவையாலே மேடையினைப் போட்டான்; சந்தச்
சொல்லணங்கை ஆடவிட்டான்; அணிக ளென்னும்
. . சுவையணங்கை நடக்கவிட்டான்; உணர்வை எல்லாம்
அள்ளுகின்ற கவியணங்கை ஆட்டு வித்தான்
. . அவளாடக் கலைவளத்தைக் கூட்டு வித்தான்
வல்லவனாம் பெருங்கம்பன் ஆட்டு விக்க
. . வளர்கவிதை நங்கையவள் நடன மாடும்.

அறியாத பொருளில்லை; கம்ப நாடன்
. . அணுகாத துறையில்லை; உலக வாழ்வில்
தெரியாத நெறியில்லை; அவன்சொற் பட்டுத்
. . திகழாத கலையில்லை; அறிவாம் நெய்யில்
எரியாத விளக்கில்லை; கைவண் ணத்தால்
. . இலங்காத கருத்தில்லை; இவன்நெஞ் சத்தில்
புரியாத பொருளில்லை; செய்தி இல்லை
. . பாவிமகன் கல்வியிலே பெரிய வன்தான்.

நாட்டுவளங் காட்டுகிறான்; செல்வ மிக்க
. . நகரவளங் காட்டுகிறான்; மாத ராடும்
ஆட்டவளங் காட்டுகிறான்; அதனுட் பத்தை
. . அழகுபெறக் காட்டுகிறான்; மழலை வெல்லும்
பாட்டுவளங் காட்டுகிறான்; மதன்தூ தர்கள்
. . பயில்வளத்தைக் காட்டுகிறான்; சுருங்கச் சொன்னால்
காட்டுவள மத்துணையுங் காட்டி விட்டான்
. . காணாக்கால் நம்கண்ணின் பார்வை தப்பு.
------------------------------------------------------------------------------------------------

SUBBAIER RAMASAMI

unread,
Dec 24, 2009, 9:03:47 PM12/24/09
to santhav...@googlegroups.com

இராமகதா ரத்னம் புதுக்கோட்டைத் தியாகராஜன் உயிருடன் இருந்தபொழுது சவகர்லாலின் கம்பன் புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு

“அந்தக்கவிஞரைப் பார்த்து அவர் காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணவேண்டும். கவிதைகள் அவ்வளவு சிறப்பு” என்றார். மிகச் சிறந்த கவிதைத் தொகுப்பு

 

இலந்தை


2009/12/25 சௌந்தர் <rsou...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Kaviyogi Vedham

unread,
Dec 25, 2009, 8:55:25 AM12/25/09
to santhav...@googlegroups.com, arsvedhammanian
ஆம் இலந்தை உண்மையிலேயே எண்சீரின் அழகுகளை எல்லாம் ரொப்பிவைத்து நம்மைக்கவனிக்கவைத்த கவிதை இது!வாழ்க சவகர்லால்!
யோகியார்

2009/12/25 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>



--
யோகியார்..
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம், நீலாங்கரை,சென்னை-41(போன் 64565979)-

srirangammohanarangan v

unread,
Dec 25, 2009, 9:56:36 AM12/25/09
to santhav...@googlegroups.com
திரு  சவகர்லாலின்    மரபு  துள்ளும்    பாடல்  வரிகளை   இட்டு    நல்ல   வாசிப்புக்  கணங்களைக்  கொடுத்தமைக்குச்   சௌந்தருக்கு  நன்றிகள்.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

 

சௌந்தர்

unread,
Dec 25, 2009, 1:28:20 PM12/25/09
to சந்தவசந்தம்
2.கம்பன் திறம்

கம்பனைப்போல் இன்னொருவன் வரவா கூடும்?
. . கலைத்துறைக ளெத்துணையோ அவற்றை எல்லாம்
கம்பனைபோல் இன்னொருவன் தொடவா கூடும்?
. . கவிதைகளில் மின்னுகிற வித்தை எல்லாம்
கம்பனைப்போல் இன்னொருவன் தரவா கூடும்?
. . காலமெல்லாம் தமிழ்க்கன்னி தவமி ருந்து
கம்பனைபோல் வேண்டினாலும் வருவா னென்று
. . கவித்துறையில் உறுதியுடன் சொலவா கூடும்?

சந்தங்கள் கைகட்டி ஏவல் செய்யும்;
. . சுவையழகு சொற்களிலே குதித்து வீழும்;
அந்தமிலாக் கலைநயமோ விரல சைவில்
. . ஆனந்த நடனமிடும்; பாத்தி ரங்கள்
எந்தவிதக் குறையுமின்றிக் காவி யத்தில்
. . இணையின்றித் திகழ்ந்துநிற்கும்; கம்ப னுக்குச்
சொந்தமெனக் கவிநங்கை ஆகி இன்பம்
. . சொரிகின்ற வித்தைநமை மயக்கி நிற்கும்.

கூன்முதுகு கவிதையிலே நிமிர்ந்து நிற்கும்;
. . கவந்தநிலை கவிதையிலே முழுமை ஆகும்;
கான்குரங்கு பாட்டினிலே கலைக ளாகும்;
. . காமவல்லிக் கழியாத நிலைகள் கூடும்;
தேன்சிந்தும் சொல்லாலே கம்பன் தொட்டால்
. . தெருக்கல்லும் உயிர்பெற்றுப் பெண்ணா யாகும்;
வான்கவிஞன் இறைவனையே தொட்டால் இன்ப
. . வண்ணங்கள் எண்ணத்தில் பிறந்தி டாதா?

பாத்திறத்தைக் காணுங்கால் நெஞ்ச மெல்லாம்
. . பதைப்பொடுங்கி அடிமையாகும்; நீப டைத்த
பாத்திரத்தை நோக்குங்கால் சிந்தை யெல்லாம்
. . பைத்தியமா யாகிவிடும்; சிந்து கின்ற
சீர்த்திறத்தைப் பார்க்குங்கால் உள்ள மெல்லாம்
. . செயலொடுங்கி யுனைவணங்கும்; கம்ப னேஉன்
பேர்த்திறத்தை நினைத்தாலே அடியா னாகிப்
. . புலம்புகிறேன்; எப்படித்தான் பாட்டி சைத்தாய்?

எங்கிருந்து சொல்லெடுத்தாய்? அதைத் தொடுக்க
. . எந்தவகை நாரெடுத்தாய்? கருத்து வெள்ளம்
எங்கிருந்து முகந்திட்டாய்? அவற்றை நீயே
. . எவ்வாறு கொட்டிவைத்தாய்? சந்த வீச்சை
எங்கிருந்து அள்ளிவந்தாய்? கவிய ணங்கை
. . எப்படித்தான் ஆட்டுவித்தாய்? அப்பப் பாஉன்
தங்கமணிக் கையசைவி லுதிர்ந்த தெல்லாம்
. . தமிழமுதக் கவிச்சுவையின் துளிகள்; ஆமாம்!

-------------------------------------------

Siva Siva

unread,
Dec 25, 2009, 2:07:39 PM12/25/09
to santhav...@googlegroups.com
ஓர் ஐயம்.

// பெண்ணா  யாகும் //
'பெண்ணாய் ஆகும்' - இத்தகைய பிரயோகம் இதுவரை கண்டிலேன்.
'பெண்ணே ஆகும்' என்று இருந்திருக்குமோ?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/12/25 சௌந்தர் <rsou...@gmail.com>
2.கம்பன் திறம்



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Soundar

unread,
Dec 25, 2009, 2:13:16 PM12/25/09
to santhav...@googlegroups.com
பெண்ணாய் ஆனது கல் என்பதால் இப்படி வந்துள்ளது.
சௌந்தர்


2009/12/25 Siva Siva <naya...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Dec 25, 2009, 2:19:02 PM12/25/09
to santhav...@googlegroups.com
On 12/26/09, Siva Siva <naya...@gmail.com> wrote:
ஓர் ஐயம்.

// பெண்ணா  யாகும் //
'பெண்ணாய் ஆகும்' - இத்தகைய பிரயோகம் இதுவரை கண்டிலேன்.
'பெண்ணே ஆகும்' என்று இருந்திருக்குமோ?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
 
பெண்   ஆக   ஆகும்   என்பது   பெண் +  ஆய்  ஆகும்  என்று  வருகிறது.   கண்   ஆய்  நின்றது.     மண்  ஆய்  போயிற்று.

--

Siva Siva

unread,
Dec 25, 2009, 2:27:07 PM12/25/09
to santhav...@googlegroups.com
ஆய் = ஆகி.

(உதாரணம்: http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=40260&padhi=026&startLimit=9&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அணியன் ஆய் - அணிமையில் உள்ளேன் ஆகி;)

'பெண் ஆகி ஆகும்' என்று பொருள்படுவதால் அவ்வையம் எழுந்தது.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/12/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Dec 26, 2009, 4:53:13 AM12/26/09
to santhav...@googlegroups.com
அட்டகாசம் அட்டகாசம்..ரொம்ப இனிமை...சௌந்தர்!
யோகியார்

2009/12/25 சௌந்தர் <rsou...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:

சௌந்தர்

unread,
Dec 26, 2009, 5:21:54 PM12/26/09
to சந்தவசந்தம்
3. கம்பனுக்குப் பாராட்டு--பாரதி
(கவிஞர் சவகர்லால்; காரைக்குடி 9-4-1979)

கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லை யென்னும்
. . வசைகழிக்க வந்தவன்நான் என்று சொன்னேன்
கவியரசே உன்புகழைப் பறைய றைந்து
. . கட்டியமாய்க் கூறினேன்நான்; உனைநோக் குங்கால்
புவியினிலே என்கவிதை எங்கே நிற்கும்?
. . பரிதிமுன்னே சிறுவிளக்காய் ஒளிகுன் றாதா?
கவிக்கென்றே பிறந்தவன்நீ தெளிவாய்க் கற்ற
. . கல்வியிலே பெரியவன்நீ; யார்ம றுப்பார்?

புரட்சியென்பார் பாட்டினிலே புதுமை கண்ட
. . புலவனென்பார்; உணர்ச்சியெலாம் ஒன்றாய் ஆன
திரட்சியென்பார்; தெய்வவரம் தன்னைப் பெற்ற
. . செம்மலென்பார்; சிந்தனையை எரியச் செய்த
நெருப்பென்பார்; வெளிநாட்டார்க் கீட்டி என்பார்;
. . நாட்டினிலே எனைக்குறித்துப் புலவ ரெல்லாம்
திரட்டியளிக் கின்றபட்ட மெல்லாம் உன்றன்
. . சிறுகீற்றின் ஒளியலவோ கம்ப நாடா!

3.1 கம்பன் என் காதலன்

கம்பன் மனநிலையைத் தங்கமே தங்கம்-இன்று
. . கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்.
செம்பொன் கவிவளங்கள் செய்திற னெல்லாம்-நானே
. . தெரிந்துகொள வேணுமடி தங்கமே தங்கம்!


ஆற்றங் கரையிலொரு வேடன் மகனைத்-தூய
. . அன்புச் சுரங்கமென ஆக்கியே வைத்தான்
போற்றிப் புகழ்ந்தணைக்க ஏங்கியே நிற்பேன்-வந்து
. . பாவை எனைத்தழுவச் சொல்லடி தங்கம்!

சொல்லுக்குச் சொல்லழகு கூட்டியே வைத்தான்-பாட்டுச்
. . சுவையினிலே போதையினைச் சேர்த்துமே வைத்தான்
வில்லுக்கு வல்லவனைத் தலைவனாய் வைத்தான்-கவிசெய்
. . வித்தையில் மயங்கிவிட்டேன் தங்கமே தங்கம்!

நாட்டு விடுதலையே மூச்சென நின்றேன்-நான்தான்
. . நாளும் அதற்கெனவே பாட்டினைக் கொண்டேன்
பாட்டுத் திறமென்னுங் குழந்தை தன்னையே-அவன்
. . பாரில் எனக்களித்தான் தங்கமே தங்கம்!

3.2 கம்பன் என் காதலி

சின்ன வயதிலுனைச் சேர்ந்த தில்லையோ?-என்
. . சிந்தை பறிகொடுத்தே நின்ற தில்லையோ?
வண்ணக் கவியழகைக் கண்டுனை நெஞ்சில்-நான்
. . வடித்துத் தலைவியெனக் கொண்ட தில்லையோ?

கன்னி மனதிலந்தக் காளை சென்றதும்-அங்கே
. . கண்க ளொன்றையொன்று கவ்வி நின்றதும்
பின்னை அவன்புகுந்து வில்லைவென்றதும்-நீதான்
. . பாடுந் திறத்தினில்நான் வீழ்ந்த தில்லையோ?

சொல்லித் தெரிவதில்லை கவியெனுங்கலை-உன்
. . சொல்லில் நான்தெரிந்து பாடவில்லையோ?
கல்லிற் குயிர்கொடுத்த வள்ளல் தன்னையே-உன்
. . கவியிற் கண்டுதினம் மயங்கவில்லையோ?

அள்ளி யணைக்கவெனக் கெஞ்சவில்லையோ?-உன்
. . அணைப்பிற் கவிபிறந்த துண்மையில்லையோ?
சொல்லித் தெரிவதில்லை கவியெனுங்கலை-உன்
. . சொல்லில் நான்தெரிந்து பாடவில்லையோ?

3.3 கம்பன் என் தோழன்

நெஞ்சக் கவலைகள் என்னைக் குதறிடும்
. . நேரந் தனில் வருவான்-சுவை
கொஞ்சக் கவிதைகள் கொட்டி முழக்கியென்
. . குறைகள் களைந்திடுவான்-சொற்கள்
தஞ்ச மெனவந்து கொஞ்சும் எழிலினைக்
. . கண்டு மயங்கிடுவேன்-அந்தக்
கொஞ்சு தமிழினில் நெஞ்சைப் பறித்ததுமே
. . கூடிக் குலவிடுவான்.

கம்பனை நானொரு மானுட னாகவே
. . கவிதையிற் செய்துவைத்தேன்-அந்த
வம்பனே மானுடம் வென்ற வகையினை
. . வாழ்த்தியே கவிதை தந்தான்-மிக்க
துன்ப நிலையினிற் பெண்கள் நலிந்திடத்
. . தோன்றுக சக்தியென்றேன்-பொங்கும்
இன்பம் பெருகிடச் சக்தி விடுதலை
. . இன்முறை காட்டிநின்றான்.

3.4 கம்பன் என் குழந்தை

சின்னஞ் சிறு கிளியே-அடியென்
. . செல்வக் களஞ்சியமே
வண்ணக் கவிவளமே-என்றன்
. . வாழ்வுப் பெருஞ்சுவையே

சொல்லில் மயங்கி நிற்பேன்-பாட்டுச்
. . சுவையில் உணர்விழப்பேன்
துள்ளிக் குதித்துவரும்-அந்தச்
. . சந்த மெனையிழுக்கும்.

என்கையில் நீயிருந்தால்-வான்மண்
. . எல்லாம் எனக்குளடி
எங்கேயோ போய்வருவேன்-அவை
. . இன்பப் பயணமடி

இன்பச் சுவைகளெல்லாம்-உனைப்போல்
. . ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பைப் படைப்பதிலே-உனைநேர்
. . ஆகுமோர் கவிஞனுண்டோ?

3.5 கம்பன் என் ஆண்டான்

தஞ்ச முலகினி லெங்கணு மின்றித்
. . தவித்துத் தடுமாறி
பஞ்சக் கவிஞன் அடிமை புகுந்தேன்
. . பார முனக் காண்டே-ஆண்டே
. . பார முனக் காண்டே!

கம்ப னடிப்பொடி யென்றவோர் சான்றோர்
. . கட்டளை யேற்றுவிட்டேன்
செம்பொற் கவியுனை யெங்கணும் போற்றிச்
. . சொல்லுவேன் நானாண்டே-ஆண்டே
. . சொல்லுவேன் நானாண்டே!

செஞ்சொற் கவிமகள் தன்னையே சுற்றிச்
. . சிலபுதுப் பேய்கள் வந்தே
வஞ்சனை செய்யுது மந்திரஞ் செய்துமே
. . விரட்டிட வேண்டுமையே-ஆமாம்
. . விரட்டிட வேண்டுமையே!

----------------------------------------

சௌந்தர்

unread,
Dec 28, 2009, 9:49:06 PM12/28/09
to சந்தவசந்தம்
4.0 இராவணன் பார்வையில் கம்பன்

(பொற்கிழிக் கவிஞர், கவிமாமணி டாக்டர் சவகர்லால்; இராசபாளையம்,
25-10-1980)

என்னைப்போல் வாழ்ந்தவன் ஏழுலகில் யாருமில்லை;
என்னைப்போல் வீழ்ந்தவனோ என்றும் இருப்பதில்லை.

மாணிக்கத் தூண்நட்டு வைரமணிப் பந்தரிட்டு
ஆணிப்பொன் ஆசனத்தில் அண்டமெலாம் ஆண்டவன்நான்

எட்டுத் திசையெங்கும் எட்டும் புகழ்கொண்டேன்
எட்டாத திசையில்லை; ஏறாத புகழில்லை.

முக்கோடி வாழ்நாளை முயன்று பெற்றவன்நான்
எக்கோடி யாராலும் வெல்லப் படாதவன்

வீரம்; பெருங்கல்வி; வியக்கும் இசையாற்றல்
ஈரம்;பேரழகு எல்லாமே நிறைந்தவன்நான்

ஈடில்லா மனையாள்; இணையில்லா வீரமகன்;
தேடாத பெருஞ்செல்வம் திகழ்கின்ற வளநாடு;

எல்லாமே பெற்றவன்நான்; ஏதோ ஒன்றில்லை
இல்லாத அந்தஒன்றென் வாழ்வை முடித்ததுவே!

என்னைப்போல் வாழ்ந்தவன் ஏழுலகில் யாருமில்லை;
என்னைப்போல் வீழ்ந்தவனோ என்றும் இருப்பதில்லை.

சண்டாளி சூர்ப்பனகை தன்மூக்கை இழந்துவிட்டுக்
கொண்டுவந்த செய்தியென்றன் குலநாச வித்தாச்சு.

மூக்கிழந்த சண்டாளி மூக்கோடு உடன்சேர்ந்து
நாக்கும் இழந்திருந்தால் நான்தவறி இருப்பேனா?

தீயைக் காதலிக்கச் செய்துவிட்டாள் சூர்ப்பனகை
தீயைக் காதலித்தேன்; விட்டிலெனச் செத்தேன்;

சிறுபிள்ளை தீயைத் தெரியாமல் தொடுவதுண்டு;
பெரியவன்நான் தெரிந்தெடுத்தேன்; பொசுங்கி அழிந்துவிட்டேன்

ஆனாலும் என்றன் அகத்தில் போராட்டம்
தேனாகக் கவிதையிலே செப்பியவன் கம்பனேதான்.

கம்பனே!

என்கை படாமல் ஏந்திழையைக் கொணர்ந்த என்மேல்
உன்கை பட்டதனால் இன்றும் வாழ்கின்றேன்.

விண்ணேறி ஒளிரும் மதியின் மறுப்போல
என்மீது களங்கம் இருந்ததைப் பாடினாய் நீ

கொடுமைத் தனத்தின் மொத்த உரு வாகவெனைப்
படைக்காமல் பரிதாபம் கலந்து தந்தவன்நீ

பாலைத் துளிநஞ்சு பாய்ந்து கெடுத்தது;
பாலைப்பழிக்காமல் பரிவோடு பாடினாய்நீ

வெம்மடங்கல் நான்களத்தில் வீழ்ந்தேன் என்முகத்தை
மும்மடங்கு பொலியவைத்தாய்; பாட்டில் நிலைக்கவைத்தாய்.

கடலணைப்பைக் கைவிட்டுக் காலை எழுங்கதிரும்
படபடப்பாய் என்குறிப்பைப் பார்த்தே எழுந்துவரும்.

வெய்யிற் கடுமையென்றன் வியன்நகரைத் தாக்காமல்
பைய்யவே ஒதுங்கிப் பயணம் மேற்கொள்ளும்

மெல்ல வருந்தென்றல் மெதுவாய் உடல்தடவும்
எல்லா இயற்கையுமே என்னேவல் கேட்டுநிற்கும்

பூதங்க லெள்ளாம் பணிசெய்ய வாழ்ந்தவன்நான்
நாதத்தில்எழுந்த அபசுரத்தால் வீழ்ந்தவன்நான்

வெம்மடங்கல் நான்களத்தில் வீழ்ந்தேன் என்முகத்தை
மும்மடங்கு பொலியவைத்தாய்; பாட்டில் நிலைக்கவைத்தாய்.

அறத்தை நடக்கவைத்தேன்; அருங்கானில் துடிக்கவைத்தேன்;
புறத்துன்ப மெல்லாம் பட்டுத் தவிக்க வைத்தேன்;

பஞ்சுப் பொதியிலொரு பொறியைக் கொண்டுவைத்தேன்
மிஞ்சியது நெருப்பே: வேறெல்லாம் கரியாச்சு

வரங்கொண்ட திமிரால் மனங்கொண்ட நெறிசென்றேன்
திறங்கொண்ட அறத்தால் சாவுதனைக் கொண்டேன்.

வெம்மடங்கல் நான்களத்தில் வீழ்ந்தேன் என்முகத்தை
மும்மடங்கு பொலியவைத்தாய்; பாட்டில் நிலைக்கவைத்தாய்.

அவைகூட்டி னேன்நான்; ஆங்கும் என்கருத்தை
அவைகேற்றி ஒப்புதல் அழகாய் வாங்கிவிட்டேன்

அதிகாரம் கையிருந்தால் அவையும் கையில்தானே!
எதிராக எந்தக் குரலும் எழுந்திடுமோ?

அறம்போக்கைச் சிலர்சொன்னார்; ஆனால் அவர்பேச்சைப்
புறம்போக்காய் ஆக்கிப் பொல்லா நெறிசென்றேன்.

அண்ணன் போகும் வழிதவ றெனெஉணர்ந்து
பொன்னான தம்பி போய்விட்டான் அறத்தினிடம்.

கண்ணான கும்பகர்னனும் இடித்துரைத்தான்
என்னாசைத் தீயில் எல்லாம் பொசுங்கியது.

மாய மானாகி மாமன் நடம்புரிந்தான்
மாயம் அறியாத மங்கை தடம்புரண்டாள்.

அந்த மான்பின்னே அண்ணலவன் சென்றான்
இந்த மான் பேச்சால் இலக்குவனும் சென்றான்.

ஆசைப் பட்டஅந்த அழகு மயில்மேலே
ஆசைப் பட்டநானோ, அவ்விடத்தை யேபெயர்த்தேன்.

மூலக் கவிஞனெனை மூர்க்க னெனெஆக்கிக்
கோலக் கன்னியினைக் கைப்பற்றி இழுக்கவைத்தான்.

பண்பாட்டில் நீராடிப் பண்பாடும் கவிஞன்நீ
உன்பாட்டில் என்னை உயர்த்தி நிற்கவைத்தாய்.

அசோக வனத்தில் அவளைச் சிறைவைத்தேன்
அசோக வனமங்கே சோக வனமாச்சு

தவமிருந்தாள் தையல்; அவள்கருணை வேண்டித்
தவமிருந்தேன் நானும்; தவறேதும் கருதவில்லை;

என்னெல்லை, என்கோட்டைக் குள்ளே இருந்தாலும்
மின்னொளியை எந்த மாசும் தொடவில்லை;

இந்தப் பெருஞ்சிறப்பைக் கம்பனே நீசொன்னாய்
அந்தப் பெருங்கவிஞன் அவ்வளவாய்ச் சொல்லவில்லை.

வெம்மடங்கல் நான்களத்தில் வீழ்ந்தேன் என்முகத்தை
மும்மடங்கு பொலியவைத்தாய்; பாட்டில் நிலைக்கவைத்தாய்.

கரிய திருமேனி கருவில்லில் விடுபட்டு
வருபவை அம்புகளா? எல்லாம் அறக்கூறு.

ஐயன் விளையாட்டின் அற்புதத்தில் அடிபட்டுக்
கையிருந்த எல்லாம் களத்தில் ப்றிகொடுத்தேன்

"இன்றுபோய் நாளைவா" எனஅந்த நாயகன்தான்
நின்றுவிடை கொடுத்தான்; நாணத்தில் நான்செத்தேன்.

எல்லாமே களத்தில் இழந்துவிட்டு வருவதைநீ
சொல்லாலே சொல்லிச் சொக்கவைத்தாய் நாயகனே.

வானகம் மண்ணகம் நகுவதொரு பொருட்டில்லை
சானகி நகுவாளென்றே நாணத்தால் சாம்பிநின்றேன்.

என்ன அழகாக இதயம் படம்பிடித்தாய்
சொன்ன அழகில்நான் இன்னும் வாழ்கின்றேன்.

வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி
சல்லடைக் கண்ணாகித் தரைமேற் கிடந்ததுவாம்

மண்டோதரி வந்தாள்; வாரி அணைத்தழுதாள்;
விண்டுரைத்த சொற்களிலே விளையாடு கின்றாய்நீ!

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியைக் கவர்ந்த காதல்
உள்ளிருக்கும் எனஎண்ணித் தடவியதாம் ஒருவாளி.

தேடியும் கிடைக்காமல் திரும்பியவாளி என்றன்
பீடுதனைச் சொல்லிப் பெருமை சேர்க்கிறது.

மெய்யோ அம்பால் வீழ்ந்து படுகிறது
பொய்யில்லா என்றன் புகழோ உயர்கிறது.

வெம்மடங்கல் நான்களத்தில் வீழ்ந்தேன் என்முகத்தை
மும்மடங்கு பொலியவைத்தாய்; பாட்டில் நிலைக்கவைத்தாய்.

என்னை நிலைக்கவைத்தாய் என்றும் நானிருப்பேன்
பொன்னான இராமன் புகழிருக்கும் வரைவாழ்வேன்.

கற்கோட்டைக் குள்ளேஓர் கசிவு வந்ததையும்
கற்கோட்டை அந்தக் கசிவால் அழிந்ததையும்

சொற்கோட்டை கட்டிச் சொன்ன நாயகனே
சொற்கோட்டைக் குள்ளேநான் சுகமாய் வாழ்கின்றேன்.
--------------------------------------------

சௌந்தர்

unread,
Dec 29, 2009, 2:25:34 PM12/29/09
to சந்தவசந்தம்
5.0 கம்பனில் ஒரு சோறு

(பொற்கிழிக் கவிஞர், கவிமாமணி டாக்டர் சவகர்லால்; சென்னை 8-8-1992)

ஒருசோறு போதாதா? பானைச் சோற்றில்
. . உருவான பதம்பார்க்க; வெளியே வீழும்
ஒருவார்த்தை போதாதா? கூறு வார்தம்
. . உள்ளத்தைப் பதம்பார்க்க; அசையும் கண்ணின்
ஒருவீச்சு போதாதா? பெண்கள் நெஞ்சின்
. . ஓட்டத்தைப் பதம்பார்க்க; போதும்; ஆனால்
ஒருபாடல் கம்பனிலே பொறுக்கல் இங்கே
. . உயிர்வாதை யாகிறதே என்ன செய்ய?

கடலுக்குள் தள்ளிவிட்டீர்; மூச்ச டக்கிக்
. . காட்டுங்கள் ஒருமுத்தை என்று சொன்னீர்;
கடலுக்குள் கைநீட்டும் இடமெல் லாமும்
. . கட்டாணி முத்துகள்; என்னைப் பார்த்துக்
கடகடவெனச் சிரிக்கின்ற அவைகட் குள்ளே
. . கண்டெடுத்து நல்முத்தை நானா சொல்ல?
இடியேற்றின் ஒளிக்கூற்றை அளந்து சொல்ல
. . இந்தஒரு மின்மினியா? செத்தேன் போங்கள்!

இப்படியும் சொல்லலாமோ என்று கற்போர்
. . எண்ணுகிற படிசொல்லு கின்றான்; நாட்டில்
தப்பாத படியிருக்கும் வளங்கள் தம்மைச்
. . சரியாக வருணித்துக் கவிஞர் சொல்வார்
தப்படியென் றொன்றில்லாக் கம்பன் சற்றும்
. . தவறுபடி நேராமல் விளையாட் டாக
எப்படித்தான் சொல்லுகிறான்; இவனுக் கென்றே
. . எப்படித்தான் கற்பனைகள் சிறக டிக்கும்.

கற்றோர்கள் நிறைந்துள்ள சிறப்பை இங்கே
. . கவிதையிலே சொல்லவந்த கம்ப நாடன்
முற்றாக வேறுவகை கூறு கின்றான்
. . மலர்ந்தசிறப் பெல்லாமே நிறைந்த நாட்டில்
கற்றகல்வி வல்லாரே இல்லை யென்பான்;
. . கருத்துக்குள் முள்தைக்க நிமிரு கின்றோம்
கற்றவராய் அனைவருமே இருப்ப தாலே
. . கல்விமுற்ற வல்லாரே இல்லை யென்பான்!

கல்லாதார் இல்லாத கார ணத்தால்
. . கல்வியில்லார் படுந்தீமை அங்கே இல்லை
கல்விமுற்றிக் கனங்கொண்டோர் அங்கே இல்லை
. . கற்றவர்கள் தருந்தீமை அதனா லில்லை
கல்வியினால் வரும்நன்மை; அதுவே முற்றிக்
. . கனமாகும் பெருந்தீமை; இவற்றை நெஞ்சைக்
கிள்ளுமாறு சொல்லுகிறான்; கிறங்கி வீழ்வோம்
. . கவிச்சக்ர வர்த்தியேதான் கம்ப நாடன்.

இல்லாத கொடுமையினால் ஏழை மக்கள்
. . இலாத கொடுமையெலாம் படுவார்; நாட்டில்
எல்லார்க்கும் எல்லாமும் கிடைத்து விட்டால்
. . எல்லாரும் மகிழ்வடைவார் என்றே எண்ணி
இல்லாமை இல்லாத சமுதா யத்தை
. . எழுச்சிமிகு பாவேந்தன் படைத்தான்; இங்கே
எல்லார்க்கும் எல்லாமென் றிருப்ப தான
. . இடம்நோக்கிச் சொல்கிறது வையம் என்றான்.

இத்தகைய புதுக்கருத்தை, இந்நூற் றாண்டில்
. . எழுந்திட்ட அறிவியலின் விளைச்சல் தன்னை,
அத்தருணம் கற்பனையில் கூட யாரும்
. . அறியாத தத்துவத்தைக் கம்ப நாடன்
சத்தியமாய்ச் சொல்லுகிறான். அவன்தன் நாட்டில்
. . செல்வமில்லார் இருப்பவரென் றிரட்டை யில்லை
இத்தரையின் செல்வங்கள்எல்லா ரும்தாம்
. . எய்துவதால் வேற்றுமையே இல்லை யென்பான்.

இல்லாரைச் சுரண்டுகின்ற இருப்போ ரில்லை;
. . இருப்பாரை வெறுக்கின்ற இல்லோ ரில்லை;
இல்லாரை வறுமையெனும் நெருப்பில் தள்ளி
. . எரிக்கின்ற இருப்போர்கள் இல்லை; மாறாய்
இல்லாரின் நெஞ்சத்தில் எரியும் தீயால்
. . எரிபட்டு வாழ்கின்ற இருப்போ ரில்லை
இல்லாரும் இருப்பாரும் இல்லை யென்ற
. . இனிமையினை ஒருபாடல் எடுப்பாய்க் காட்டும்.

கல்லாது நிற்பார் பிறரின்மையின் கல்வி முற்ற
வல்லாருமில்லை யவைவல்லார் அல்லாரு மில்லை
எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்த லாலே
இல்லாரும் இல்லை உடையார்களு மில்லை மாதோ!

[பால காண்டம்-நகரப்படலம்-74]

----------------------------------------

சௌந்தர்

unread,
Dec 30, 2009, 12:57:38 PM12/30/09
to சந்தவசந்தம்
6.0 கம்பனில் ஒரு சொல்

(கவிஞர் சவகர்லால் -பாரதி கலைக்கழகம் 14-10-2001)

அடிமடியைத் தடவுவதே சிலருக்கு வேலை;
. . அன்றாடம் கழற்றுகின்ற சட்டைப் பையின்
அடிவரையில் தடவுவதே மனைவி யர்தம்
. . அறமாகும்; முயன்றவுடன் சிரம மின்றி
எடுபட்டால் தேடுகின்ற வேலை இல்லை;
. . இருக்காதா எனஎண்ணி இல்லா ஒன்றைக்
கடைசிவரை தேடுவதே தேட லாகும்
. . கண்டுவிட்டால் தேடற்குப் பயன்க ளுண்டு.

அப்படியோர் தேடலினை இராமன் விட்ட
. . அம்பொன்று செய்ததெனக் காவி யத்தில்
எப்படித்தான் கம்பநாடன் கூறு கின்றான்!
. . இலக்கினையே தவறாத இராம னம்பு
அப்புறமும் இப்புறமும் தடவிப் பார்த்து
. . அங்கந்தத் தேடுபொருள் காணா தாகி
முப்புரமும் எரிசெய்தோன் பக்தன் மேனி
. . முழுப்புறமும் தடவியதோ என்றாள் நங்கை.

கற்பரசி ஒருத்தியினை உளத்தே வைத்த
. . கள்ளத்தால் அழிந்தானின் மேனிக் குள்ளே
கற்பரசி நினைப்பெச்சம் உளதோ வென்று
. . கடுஞ்சரத்தான் தடவியதாய்ச் சொன்ன அந்தக்
கற்பரசி கூற்றுக்குள் அவனெஞ் சத்தே
. . கள்ளிருக்கும் மலர்க்கூந்த லாளின் காதல்
அற்பளவும் இல்லையென ஆற்றிக் கொள்ளும்;
. . அரிவையவள் புலம்பலிலே கம்பன் நிற்பான்.

கம்பன் பாடல்

வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த

. . திருமேனி மேலுங் கீழும்
எள்ளிருக்கு மிடமின்றி உயிரிருக்கும்
. . இடம்நாடி இழைத்த வாறோ


கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை

. . மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கு மெனக்கருதி யுடல்புகுந்து
. . தடவியதோ ஒருவன் வாளி.

(இராவணன் வதைப்படலம் 239)
----------------------------------

Kaviyogi Vedham

unread,
Dec 31, 2009, 10:26:44 AM12/31/09
to santhav...@googlegroups.com
அடடா! என்ன நயம் உள்ள எண்சீர்!..படிக்கப்படிக்க இன்பம்.வாழ்க ஜவஹர்!
யோகியார்

2009/12/30 சௌந்தர் <rsou...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

சௌந்தர்

unread,
Dec 31, 2009, 1:00:44 PM12/31/09
to சந்தவசந்தம்
7.0 இராமன்-வாலி சந்திப்பு

(கவிஞர் சவகர்லால்; திருவாரூர் 5-2-1978)

வன்பிறவி நோய்தீர்க்கு மருந்து; தூய
. . வாழ்வியலில் அறஞ்சேர்க்குங் கொழுந்து; பொங்கும்
அன்புருக்கிப் பரிமாறும் விருந்து; எந்த
. . ஆரிடருங் காக்கின்ற காப்பு; வில்லின்
வன்மையிலே நிகரில்லா வனப்பு; பேசும்
. . வாய்மையிலே சிறக்கின்ற சிறப்பு; எந்தத்
தன்மையிலுங்குறைவில்லா நிறையோன் ராமன்
. . சந்திக்கப் போகொன்றான் எங்கே? யாரை?

வரம்பில்லா வலியோனை, அரக்கன் தன்னை
. . வாலாலே வதைத்தோனை, நெஞ்சி லென்றும்
தரங்குறையாப் பண்போனைக் கடலை யன்று
. . தனியாகக் கடைந்தோனை, எதிர்த்து முன்னால்
வரப்பெற்றோன் வலிமையிலே தனக்குப் பாதி
. . வரப்பெற்ற வரத்தோனைத் தாரை யென்னும்
தரத்திலுயர் தாரத்தைப் பெற்றான் தன்னைச்
. . சந்திக்குஞ் சூழ்நிலையைப் பார்ப்போம்! பார்ப்போம்.

வளையாத அறமிங்கு வளைந்த தென்றும்
. . வாராத பழியிங்கு வந்த தென்றும்
குலையாத நெடுந்தர்மம் குலைந்த தென்றும்
. . குனியாத தலையிங்கு குனிந்த தென்றும்
விளையாத மாசிங்கு விளைந்த தென்றும்
. . வீரமிங்கு சோரம்போய் விட்ட தென்றும்
பலமுனையின் தாக்குதலுக் கிலக்காய் நாளும்
. . பாடுபடும் இடமிந்தச் சந்திப் பன்றோ!

மறைந்திருந்தே அம்பெய்தான்; வழிவே றில்லை;
. . வந்துநின்றால் வலிமைபாதி வாலிக் கன்றோ!
உறைப்பாகப் பாய்ந்துவரும் அம்பைக் கையால்
. . உருவுகின்றான்; பார்க்கின்றான்; துடிப்பான் வாலி;
மறைப்பொருளே! மறைபொருளாய் ஆகி விட்டாய்
. . மிருகத்தை வேடனவன் அடிப்ப தைப்போல்
மறைந்திருந்து கொன்றாயே; என்ன நியாயம்?
. . வதைபட்டேன்; வரவேற்பேன்; எதிரில் வா வா!

இப்படியா சந்திக்க வேண்டும்? உன்றன்
. . ஏறுகின்ற புகழ்கேட்டேன்; பலரும் நாவாற்
செப்புகின்ற திறங்கேட்டேன்; நிகரில் லாத
. . தீரத்தை ஆற்றலினைக் கேட்டேன்; இராமா!
எப்படியும் உனைக்காணும் வேட்கை நெஞ்சில்
. . ஏறிநிற்கப் பெற்றேன்நான்; உன்னை இங்கே
இப்படியா சந்திக்க வேண்டும்? நெஞ்சில்
. . இறங்கிநிற்கும் அம்போடு கேட்கின் றேன்நான்.

அறங்காக்க வந்தவன்நீ; வாய்மை காத்த
. . அரசனுக்குப் பிறந்தவன்நீ; நீதி மாறாத்
திறங்காக்க முனைந்தவன்நீ; நாட்டில் தீய
. . செயலொழிக்க நின்றவன்நீ; பாதை மாறி
அறத்தினையே நீகொல்லக் களமாய் என்றன்
. . அருநெஞ்சா அமையவேண்டும்? இங்கு தானா
அறவடிவே! சந்திப்பு நிகழ வேண்டும்?
. . அய்யய்யோ! இதுநடவா திருக்க லாமே.

மேகந்தான் தூதாகச் சென்ற துண்டு
. . மிதந்துவரும் தென்றலும்தூ தான துண்டு;
வேகத்தோ டிடிபோல இறங்கி நெஞ்சில்
. . விளங்குகின்ற அம்புதானா எனக்குத் தூது?
ஆகத்தில் அதைநிறுத்திப் பார்த்த பின்தான்
. . அடித்தவன்நீ என்தலைவன் என்று ணர்ந்தேன்
வேகத்தில் தவறுசெய்து விட்டாய் இராமா!
. . விவேகத்தில் ஓட்டைவிழச் செய்து விட்டாய்!

என்தம்பி; உடன்பிறப்பு; தவறி ழைத்தான்
. . இரத்தத்தின் இரத்தமென் அரசைக் கொண்டான்;
என்னுரிமை கைக்கொண்டேன்; கோழை யாக
. . எங்கெங்கோ ஒளிந்துநின்ற அவனை அங்கே
தன்கணவ னெனக்கொண்டு வாழ எண்ணித்
. . தவிக்கின்ற பேதையினை பாது காப்பாய்
என்பொறுப்பில் வைத்திருந்தேன் தப்பா? அந்த
. . இடுப்பொடிந்த கோழைக்கேன் குடும்ப வாழ்க்கை?

மரம்விட்டு மரந்தாவும் குரங்கு நாங்கள்
. . மனங்கூட அவ்வாறே; எங்கள் வாழ்வில்
அறமேது? புறமேது? மனைவி யென்ற
. . ஆசைக்கு வரம்பேது? நினைத்த போது
மரமேறிக் கனியுண்போம்; நிற்கு மெந்த
. . மரமாக ஆனாலுங் கவலை யில்லை
அறந்தவற லென்றுநாங்கள் நினைப்ப தில்லை
. . அந்தநெறி எங்களுக்குள் இல்லா ஒன்று.

எடுப்பார்கைப பிள்ளையென ஆகி விட்டாய்;
. . இணைபிரிந்தே இளகிநின்ற நெஞ்சிற் கேற்பத்
தொடர்பாக என்தம்பி துயரந் தன்னைச்
. . சொன்னமையால் தடுமாறிப் போனாய்; உள்ளத்
துடிப்போடு எனைக்கொல்ல முனைந்து விட்டாய்;
. . தோன்றலேநீ அறங்கொன்று விட்டாய்; இங்கே
துடிக்கின்றேன்; என்துன்பத் தாலா; இல்லை
. . 'சொடக்'கென்று அறக்கொம்பு முறிந்த தாலே.

மலையொடுங்கி இருந்தவன்தான்; உயிருக் கஞ்சி
. . மனமொடிந்து வாழ்ந்தவன்தான்; மன்ன னென்ற
நிலையொடுங்கிக் கிடந்தவன்தான்; என்பேர் சொல்ல
. . நெஞ்சொடுங்கிச் சுருண்டவன்தான்; இன்றென் முன்னே
நிலைமீறி ஆர்ப்பாட்டம் போட்டான்; என்னை
. . நேருக்கு நேர்போர்க்கே அழைத்தான்; இந்த
நிலைமாற்றம் புதுமாற்றங் கண்டேன்; வீர
. . நெஞ்சத்திற் கனலேற்றிப் போர்க்கெ ழுந்தேன்.

என்மனைவி குறுக்கிட்டாள்; "உங்கள் தம்பி
. . இன்றென்ன புதுப்பிறவி பெற்றா விட்டான்?
இன்றும்மை எதிர்த்திங்கே ஆர வார
. . எழுச்சியுடன் வருவதென்றால் அதற்குப் பின்னே
நின்றிருக்கும் துணைவலிமை நோக்க வேண்டும்
. . நாயகனாம் இராமனவன் துணையா யங்கே
இன்றிருக்கும் செய்தியினை ஆய்ந்து பாரீர்
. . என்னுயிரே!" என்றென்னைத் தடுத்துப் பார்த்தாள்.

கேட்டேனா மனைவிபேச்சை? இல்லை; வீரங்
. . கிளர்த்தெழுந்தே இராமனேஉன் பெருமை யெல்லாம்
போட்டங்கே விரித்திட்டேன்; அறமு னக்குப்
. . புரியாது எனச்சொல்லி வாய டைத்தேன்
நாட்டினிலே தர்மமென்றும் தவறா தென்ற
. . நம்பிக்கை யாற்சொன்னேன் நடந்த தென்ன?
நாட்டோரே எனையறிந்த பின்ன ரேனும்
. . நன்மனைவி சொல்மீறாக் கணவ னாவீர்.

நான்மட்டு மாசெத்தேன்; இல்லை யில்லை
. . நல்லறமும் நாயகனின் நல்ல பேரும்
வான்முட்டும் வீரமொடு நீதி தானும்
. . வாலியொடு செத்ததடா; தேவி தன்னைத்
தான்பிரிந்தால் செய்கையுமா திகைத்துப் போகும்?
. . தன்னறிவுப் பெருமையுமா மழுங்கிப் போகும்?
தானங்கே இராவணனை வெல்ல வேண்டின்
. . என்னைவிட்டுச் சிறுமுயலா துணையாக் கொள்வான்?

வானிறங்கி வந்தவனா யிருந்தா லென்ன?
. . வையத்தைப் புரப்பவனாய்த் திகழ்ந்தா லென்ன?
தேனிருக்கு மலர்க்கூந்தல் பிரிந்தா லென்ன?
. .தொடர்ந்துவந்த இடர்க்கடல்லில் குளித்தா லென்ன?
நானிருக்கு மிடத்திலவர் செய்த தென்றும்
. . நீதிக்குப் புறம்போக்கே; இராம னென்னும்
தேனடையில் பாய்ந்தகல்லே; இனியும் பன்னிச்
. . சொல்லுவதா லென்னபயன்? வனங்கி உய்வேன்.

என்தம்பி சிறுவனேதான்; இல்லை யென்றால்
. . எனைக்கொல்ல உனையழைத்தே இருக்க மாட்டான்;
என்தம்பி இனிமேலும் தவறு செய்வான்;
. . ஏதேனுங் கண்டக்கால் பொறுப்பாய்; இங்கே
என்மார்பில் எய்திட்ட அம்பை என்றும்
. . எய்யாத வரம்தருவாய்! மேலும் உன்றன்
அன்புடைய தம்பியர்கள் இவனைப் பார்த்தே
. . அருவெறுப்பே கொள்ளாமற் காப்பாய்; என்றும்.

இந்திரற்கு மகனாகப் பிறந்தேன்; மண்ணில்
. . இறங்கிவந்தே இராவணனை வதைக்க நிற்கும்
சுந்தரனாம் உன்றனுக்குப் போரில் நானே
. . துணையா நின்றிருக்க வேண்டும். ஏதோ
வந்தவழி மாறியவன் தோழ னானேன்
. . வரும்போரில் என்னிலைமை பெரிய சிக்கல்
அந்தமுடிச் சவிழ்த்துவிட்டாய்; என்னைக் கொன்றாய்
. . அவ்வரக்கன் அழிந்திடுவான்; திண்ணம், உண்மை.

--------------------------------------------

Kaviyogi Vedham

unread,
Jan 1, 2010, 6:54:29 AM1/1/10
to santhav...@googlegroups.com
அழகு கொஞ்சறதே சௌந்தர்..நூலாக இது வெளி வந்ததா நண்பரே.. அடிக்கடி எடுத்துப்போடுகின்றீர்!சொல்க!..உமக்கு வாழ்த்துகள்
யோகியார்

2009/12/31 சௌந்தர் <rsou...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Soundar

unread,
Jan 1, 2010, 11:25:34 AM1/1/10
to santhav...@googlegroups.com
ஆமாம் யோகியார் அவர்களே. இந்தத் தொடர் இடுகையின் முதல் மடலில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன். உங்கள் மீள்பார்வைக்கு இங்கே  சில வரிகள்.


கம்பன் பொழில்
(பொற்கிழிக் கவிஞர், கவிமாமணி டாக்டர் சவகர்லால்)

2005-ம் ஆண்டில் பழனியம்மாள் வெளியீடு-சென்னை  வெளியிட்ட நூல்.

கவிதை  ஒவ்வொன்றும் நட்சத்திரக் கவிதை. இதனால்தானோ என்னவோ இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் மொத்தம் 27. கவிஞர் யாவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல். புத்தக வடிவில் மட்டும் இருந்தால் போதாது, இணையத்தில் தேடி  எடுக்கும் வகையில் இருப்பது நலம் என்று தோற்றியது. விடுமுறை  நேரமாக இருப்பதால் முடிந்தவரை  தட்டச்சி இங்கே இடுகிறேன் ஒவ்வொன்றாக.

சௌந்தர்

2010/1/1 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

சௌந்தர்

unread,
Jan 1, 2010, 11:30:42 AM1/1/10
to சந்தவசந்தம்
8.0 என்னைப் படைத்தவாறு-அநுமன்
( கவிஞர் சவகர்லால், காரைக்குடி 2-4-1977)

நீண்டவனை அறங்காக்கப் படைத்தான்; தூய
. . நிழலவனைத் தொண்டுசெயப் படைத்தான்; காதல்
பூண்டவனைத் துணைபோகப் படைத்தான்; காமம்
. . பொங்கரசை அழியவெனப் படைத்தான்; இந்த
நீண்டநெடும் பயணத்தின் இடையே என்ன
. . நினைத்தென்னைப் படைத்தானோ தெரிய வில்லை;
பூண்டதொரு கடனாற்றும் ஆற்ற லாலே
. . புகழ்பெறவே பாட்டாலே படைத்து விட்டான்.

வரம்பில்லா வலிமைகொண்டே துன்பு றுத்தும்
. . வாலிக்குப் பயந்திருந்தோம்; அவன்வா ராத
வரம்பாகும் மலையொடுங்கி வாழ்ந்து நின்றோம்;
. . வாலியெனும் பெயருக்கே நடுங்கி நின்றோம்;
அறங்கொண்ட உருவமென இருவர் கண்ட
. . அப்பொழுதே துன்பமெலாம் தீர்ந்து போன
திறங்கண்டேன்; என்புருகக் கொண்டேன்; என்றன்
. . தெய்வமென அக்கணமே தொண்ட னானேன்.

வன்பிறவி நோய்தீர்க்கு மருந்தைத் தூய
. . வாழ்வியலில் அறஞ்சேர்க்கும் கொழுந்தைப் பொங்கும்
அன்புருகி அணைக்கின்ற திறத்தை எந்த
. . ஆரிடரும் காக்கின்ற காப்பை; வில்லின்
வன்மையிலே நிகரில்லா வனப்பைப் பேசும்
. . வாய்மையிலே சிறக்கின்ற சிறப்பைக் கண்ணால்
என்றுகண்டே னன்றேநான் ஆளப் பட்டேன்
. . இவ்வுலகிற் பிறந்தபயன் அடைந்து விட்டேன்.

தருமத்தின் தனிமைதீர்க்க வந்த வன்நான்;
. . தகவில்லான் சிறைவைக்க வாடி நைந்த
தருமத்தின் தனிமைதீர்த்தேன்; துணையி ருக்கும்
. . திசையறியா துளமொடிந்து கலங்கி நின்ற
தருமத்தின் தனிமைதீர்த்தேன்; இலங்கை வேந்தன்
. . தாக்கிட்ட களத்திலறம் சாகா மல்நான்
தருமத்தைக் காத்துநின்றேன்; அவ்வப் போது
. . தடுமாற்றந் தாங்கிடுகோ லாக நின்றேன்.

மாயவலைப் பட்டந்தப் போர்க்க ளத்தில்
. . மாண்டநிலை எய்திவிட்டான் இலக்கு வன்தான்;
தூயவனும் உயிரிழப்பான்; சுற்றி யுள்ள
. . தொண்டரினம் உயிரிழக்கும்; அந்தப் போதில்
மாயாமல் அறங்காத்த ஆணி யானேன்;
. . மருந்துமலை கொண்டுவந்தேன்; இராம காதை
சாயாமல் அதைத்தாங்கும் சக்தி யானேன்
. . தன்னிகரில் லாத்தொண்டில் உயர்ந்து நின்றேன்.

இழந்ததுணை தேடியங்கே இராமன் வந்தான்;
. . என்தலைவன் தன்துணையை அண்ணன் கையில்
இழந்துவிட்டே புகலிடமாய் மலையில் நின்றான்;
. . இந்தவிரு சக்திகளை ஒன்றாய்க் கூட்டிப்
பழகிடவே செய்தேன்நான்; வாலி செத்தான்.
. . பெருவலியோன் வாலியிங்கே சாகா விட்டால்
மழகளிற்றோன் இராவணனோ டிணைந்தி ருப்பான்
. . முள்மரத்தை இளைதாகக் கொல்லச் செய்தேன்.

பேராற்றல் உண்டெனக்கு; துள்ள வில்லை;
. . பெருங்கடலாம் நூல்கற்றோ ரிடத்தே உள்ள
பேரறிவு நிறையவுண்டு தளும்ப வில்லை;
. . பிறர்வியந்தே எனைப்போற்றிச் சொன்ன போதும்
பேராற்ற லால்நிலையை இழக்க வில்லை;
. . பெரும்பணிவை மிகக்கொண்டேன்; சாம்ப வன்தான்
பேராற்ற லென்னாற்றல் சொன்ன பின்பே
. . பெருங்கடலைக் கடந்தேன்நான் பணிவாய்ச் செய்தேன்.

கல்லுக்கே உயிரளித்தான்; குகனாம் அன்புக்
. . கடலுக்கே நட்பளித்தான்; தஞ்சம் என்ற
சொல்லுக்கே வாழ்வளித்தான்; தம்பி என்ற
. . சுடருக்கே ஒளியளித்தான்; போரில் அம்பாற்
கொல்லப்பட் டார்க்கெல்லாம் வீட ளித்தான்;
. . குவலயத்தில் என்தொண்டைப் போற்றித் தன்னை
அள்ளிக்கொள் வாயென்று தனையே தந்தான்;
. . ஆரிந்தப் பரிசுபெற்றார் என்னை விட்டால்?

எனைப்படைத்த முழுப்பயனை அடைந்து விட்டேன்
. . இராமவள்ளல் தனைத்தந்தான்; கற்பின் செல்வி
இணையில்லாப் பருமுத்த மாலை தந்தாள்;
. . என்னையந்த அன்னையவள் தொழவும் செய்தாள்;
எனைப்போற்றி "ஆணியிந்த உலகுக் கெல்லாம்"
. . என்றுசொன்ன வள்ளலுரை கேட்டேன்; தம்பி
கனையெரியில் மூழ்குவதன் முன்னம் சென்று
. . காத்திட்டேன், வாழ்த்திட்டேன் என்றும் வாழ்வேன்.

------------------------------------------

Kaviyogi Vedham

unread,
Jan 1, 2010, 12:03:23 PM1/1/10
to santhav...@googlegroups.com, kaviyog...@gmail.com
ரொம்ப நன்றி சௌந்தர்..அவர் (கவிஞர் சவகர்லால்) என் வீட்டு விழாவில் 10-01-10 அன்று இலந்தை தலைமையில் மகான்கள் எனும் தலைப்பில் கவி படிக்க இருக்கிறார்.
இது பற்றி விரைவில் எழுதுகிறேன்.நன்றி.
 யோகியார்

2010/1/1 Soundar <rsou...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

சௌந்தர்

unread,
Jan 2, 2010, 9:23:29 AM1/2/10
to சந்தவசந்தம்
9.0 கம்பன்-செவிநுகர்க் கனிகள்
"திரிந்தது"

(கவிஞர் சவகர்லால்- காரைக்குடி 22-3-1989)

கைகேயி என்னைத் தெரியாதார் இந்த
வையகத் திருந்தால் அப்பாவி மக்களவர்;

கோசலையைத் தெரியாமல் இருக்கலாம்; நல்லவள்;
வீசுபுகழ் இராமனைப் பெற்ற மணிவயிறு;

சுமித்திரையைத் தெரியாமல் இருக்கலாம்; நல்லவள்;
இமைமூடாத் தவச்செம்மல் இலக்குவன் தவழ்ந்தமடி;

என்னைத் தெரியாமல் இருக்கமாட்டீர்; காட்டுக்கு
மன்னன் இராமனை அனுப்பிவைத்த மாபாவி.

துன்பத் தொடர்கதைக்குத் தொடக்கம் தந்துவிட்டு
இன்பக் கதைக்குமுற்றுப் புள்ளிவைத்த கரும்புள்ளி

காடாளக் காகுத்தன் தனையேவி விண்ணோர்
நாடாளத் தயரதனை நடத்திவைத்த நாசகாரி

மனமெல்லாம் நிறைந்து மணம்பரப்பி நின்றவனை
வனமெல்லாம் நடக்கவிட்டு மனமகிழ்ந்த பழிகாரி

ஒளிவெள்ளந் தனிற்குளித் துவகைநடம் புரிந்தநகர்
ஒளியிழந் திருள்வெள்ளம் தனில்மூழ்கச் செய்தபாவி.

கதறிக் கதறித்தன் காலில் விழுந்தவனை
உதறித் தள்ளியஅவன் உயிர்பிரித்த கொலைகாரி

சீதேவி வெளிநடக்க மூதேவி உள்நுழைய
பூதேவி அயோத்தி புலம்ப வைத்தமகள்

வாராத நன்மை மகனுக்குச் செயநினைத்துத்
தீராத பழிசூட்டித் திருவிழந்த ஒருபேதை

வரங்கேட்கும் மனைவியர்க்கு வழிகாட்டி; அந்தப்
புரங்கூட்டும் கொடுமை புரியவைக்கும் நெறிகாட்டி.

மகனிடம் தருதற்கு நாட்டை வாங்கியந்த
மகனிடமே வசவுபெற்று நைந்த மாதரசி

இதுவும் சொல்வீர்கள்; இன்னமும் சொல்வீர்கள்
பொதுவாகக் கைகேயி மிகக்கொடிய ளென்பீர்கள்

என்னுள்ளம் அழுமோசை யாருக்குக் கேட்கிறது?
என்னெஞ்சத் துயர்ப்பாரம் எவருக்குத் தெரிகிறது?

சொல்லி அழுதால் சுமைகுறையும் என்பதனால்
சொல்லி அழுகின்றேன்; துயர்க்கதையைக் கேளுங்கள்.

வாய்விட்டுப் புலம்பினால் மனப்பாரம் குறையுமென்பார்
வாய்விட்டுப் புலம்பியென் மனம்விட்டுக் காட்டுகிறேன்.

பண்பின் திருவுருவாம் பசுங்கொண்டல் இராகவனை
அன்பே சிறிதுமின்றி அனுப்பினேன் முடிபறித்து

இதுதானே நீங்கள் எடுத்தெறியும் முதற்கல்!
அதுசரி இராமனை எனக்குமேல் அறிந்தவர்யார்?

பரதனைஎன் வயிறு பத்துமாதம் சுமந்ததுண்மை
வரதனையோ என்னெஞ்சு பொழுதெல்லாம் சுமந்ததே!

அந்தச் சுமையிலென் அகம்மகிழ்ந்த தாகையினால்
எந்தக் கணமும் இறக்கிவைக்க நினைத்த தில்லை;

பரதன் கண்ணென்றால் இராமனென் கண்மணிதான்
உரையுங்கள் கண்ணுக்காய்க் கண்மணியை இழப்பேனா?

தண்டைக்கால் கிண்கிணியில் தளிர்நடனம் இட்டமனம்
தண்டைக்கா லைநெருப்பில் தள்ளி மகிழ்ந்திடுமா?

பிஞ்சு விரலசைவில் பெருஞ்சொர்க்கம் கண்டநெஞ்சம்
பிஞ்சு விரல்களையே பிய்த்தெடுக்கத் துணிந்திடுமா?

அழகனவன் தலையசைவில்ஆனந்தம் கண்ட உள்ளம்
அழகனவன் பெரும்பேற்றின் அடிவேரைப் பேர்த்திடுமா?

அப்படியோர் வறண்டநெஞ்சில் அன்புநீர் ஊறிடுமா?
எப்படியோ கொடும்பாவி எனஎன்னை ஆக்கிவிட்டீர்.

நீரென்ன செய்வீர்கள்; நிகழ்ந்தசெய்தி அறிவீர்கள்;
யாரென்றன் நெஞ்சுக்குள் நுழைந்து பார்த்தவர்கள்?

ஒட்டி உறவாடித் தொட்டவனே திட்டியபின்
கொட்டியதைக் கேட்டஉம்மைக் குறைசொல்ல வாமுடியும்?

மேனியைத் தொட்டவன் மனசைத் தொட்டிருந்தால்
கூனியாற் கெட்டமனக் கூனியெனச் சொல்வானா?

உள்ளே கொதிக்கின்ற உலைமூலம் அறிந்திருந்தால்
அள்ளிச் சாபங்கள் அடியவட் களிப்பானா?

நெஞ்சின் உள்மூண்ட நெருப்பை உணர்ந்திருந்தால்
வஞ்சிக் கொடியளென வாய்விட் டுரைப்பானா?

அவனே உணரவில்லை; அடிமனங் காணவில்லை
அவனியோர் உணரத் தவறியதில் தவறென்ன?

தீக்குளித்த சானகியைத் தெரியும்; நெஞ்சுக்குள்
தீக்குளித்த கைகேயி திறமுமக்குத் தெரியாது;

சொல்லி யழுதால்தான் சுமைகுறையும் ஆகையினால்
சொல்லி யழுகின்றேன்; துயர்க்கதையைக் கேளுங்கள்.

திரிந்தது சிந்தையெனச் சொல்லிக் காட்டாதீர்
திரிந்தஅந்த சிந்தைக்குள் விரிந்ததைக் கேளுங்கள்

இராமனுக்கு முடிசூட்டு; எங்கெங்கும் எழிற்கூட்டு
இராமன் என்மகன்; என்னெஞ்சு மகிழாதா!

கொண்டுவந்து செய்திசொன்ன கோதைக்கு மகிழ்ச்சியுடன்
கொண்டுசெல்வா யெனமுத்து மாலை யளித்தேனே!

பராவருந் துயருன்னைப் பற்றுதென்ற கூனிக்கு
இராமனைப் பயந்தஎற் கிடருண்டோ என்றேனே.

கூன்பட்ட நெஞ்சுக் கூனியின் வலையில்
நான்பட்டுக் கொள்ளாமல் நங்கையைத் திட்டினேனே!

எனக்கு மட்டுமன்று; இனிய நம்பரதன்
தனக்கும் நல்லையல்லை எனத்தேளாய்க் கொட்டினேனே

இப்படிக் கூனியை ஏசியவள், பேசியவள்!
எப்படி எப்பொழுது இடியாக மாறினேன்?

அந்த முடிச்சுத்தான் அவிழா முடிச்சாகிச்
சொந்த நாயகற்கும் சொலமுடியா முடிச்சாச்சு

அஸ்திரங்கள் வீணாகக் கண்டகூனி இறுதியிலோர்
அஸ்திரத்தை விட்டாள்; அதுவே பிரம்மாஸ்திரம்

கன்னியா சுல்கமெனும் அந்த அஸ்திரந்தான்
பெண்ணென்னை மாற்றிப் பேயாக ஆக்கியது.

ஆன்றோரே! சான்றோரே! அருமைத் தாய்க்குலமே!
ஆன்ற கவனமுடன் அடியேன்சொற் கேளுங்கள்!

முன்னே இருமனைவி மூத்தவர்க ளங்கிருக்கப்
பின்னே வந்தென்னைப் பெண்கேட்டான் மாமன்னன்

விருப்பம் தந்தஎன் தந்தையார் அவர்நெஞ்சின்
விருப்பத்தை வாக்குறுதி யாகக் கேட்டிட்டார்

கைகேயி வயிற்றுப் பிள்ளைக்கே முடிசூட்டி
வைப்பாயா எனக்கேட்டு வாக்குறுதி தரப்பெற்றார்

அன்றே என்வயிற்றுக் கயோத்தி உரிமையாச்சு
பின்புதான் என்வயிறு பரதனுக்கு உரிமையாச்சு

அன்றென் தந்தைக் களித்தாரே வாக்குறுதி
இன்றது என்னவாகும்? இராமனுக் கரசென்றால்

கேகயன் முன்வாய்மை கேலியாகிப் போகாதா!
கேகயன் சிரித்தால் கைகேயி பொறுப்பேனா!

வாய்மையும் மரபுங் காத்திட இந்தத்
தாய்மை துணிந்தது; தனிப்பழி சுமந்தது.

பழிசுமந்து கணவர்க்குப் புகழ்தந்தேன்; என்றன்
விழிசுமந்த கண்ணீரில் வேதனைப் படகுவிட்டேன்

யாருக்காய்ப் பழிசுமந்தேன்; அவருண்மை யறியவில்லை
ஊருக்கு நானுண்மை உரைப்பதனா லாவதென்ன?

என்மகன் இராமனென் இதயம் அறிந்திட்டான்
என்னை யவன்தெய்வம் என்ற ததனால்தான்

அதுபோதும் என்றன் ஆன்மா சாந்தியுறும்
இதுவரைக்கும் கேட்டநீர் இனிமேலும் திட்டாதீர்

என்னைப்போற் பெருந்தியாகம் யாரும் செய்ததில்லை
என்னைப்போற் பெரும்பழியை யாரும் சுமந்ததில்லை

புரிந்த பெருந்தியாகம்; பெற்ற பெரும்பழி
இரண்டுக்கும் இடையில் ஆழமான இருட்படலம்

அந்த இடத்திருளை அகல விரட்டிவிட்டால்
சொந்தமென நான்புரிந்த தியாகம் வெளியாகும்.

யாருக்காய்ச் செய்தேனோ நாயக னாமந்தப்
பேருக்கே தெரியவில்லை; பிறரை என்ன சொல்ல?

எல்லாப் பெரும்பழியும் என்மேற் சுமந்துகொண்டேன்
நல்ல பெரும்புகழை நாயகனுக் களித்துவிட்டேன்

உள்ளத்தில் மகிழ்ச்சி; அதுபோதும்; ஊர்வசவு
வெள்ளத்தில் மிதந்துபின் வெந்தாலும் சரியேதான்

அரக்கர் செய்தபாவம் அல்லவர் செய்தஅறம்
உருக்கொண்ட தால்தான் சிந்தை திரிந்ததெனக்

கம்பனே சொன்னபின்னே வம்புக்காய் வேறெந்தக்
கொம்பனே சொன்னாலும் கோபிக்க மாட்டேன்நான்!

இராமன் புகழ்பரப்ப இங்கேநான் பழிசுமந்தேன்
இராமனை உணர்ந்தவர்கள் என்னையும் உணர்வார்கள்

பழிசுமந்த பாவியெனப் பரிதாபம் காட்டுங்கள்
பழிகாரக் கொடும்பாவி எனப்பட்டம் சூட்டாதீர்!

------------------------------------

சௌந்தர்

unread,
Jan 3, 2010, 11:48:51 AM1/3/10
to சந்தவசந்தம்
10.0 மண்டோதரி புலம்புகிறாள்

(கவிஞர் சவகர்லால், நாச்சியார்புரம் 29-4-1980)

பெண்ணைப்போல் சுமைதாங்கி பூமியில்வே றேதுமில்லை
என்னைப்போல் பெரும்பாவி ஏழுலகும் இருந்ததில்லை.

தேவரெல்லாம் பணிசெய்யத் திசையெட்டும் அடங்கிநிற்க
மேவிவரு பெரும்புகழோன் நாயகியாய் ஆனவள்நான்.

கதிரவனும் என்கணவர் கட்டளையைப் பெற்றுத்தான்
மெதுவாக வானேறி மாலைவரை ஒளிசெய்வான்;

தேவரொடு மூவரும் திரிலோக வானவரும்
நாவசைக்க என்கணவர் நற்குறிப்பைப் பார்த்திருப்பார்;

விரலசைக்கத் தேவரெலாம் விரைந்தோடி வருவார்கள்;
விரல்சொடுக்கத் தேவகுல மகளிர் திரள்வார்கள்;

வீரத் திருவிழியின் வீச்சுக்கு நடுங்குகிற
சூரத் தேவர்தம் தொடைநடுக்கம் கண்டவள்நான்;

என்கணவர் மேன்மையினை எண்ணிமனம் பூரித்தேன்;
என்கணவர்க் கீடில்லை எனமகிழ்ந்து திளைத்திட்டேன்

அந்த மகிழ்ச்சியெனக் கதிகநாள் தாங்கலையே!
சொந்தக் கணவனுயிர் துணையாக நிற்கலையே!

சண்டாளி சூர்ப்பனகை தன்மனதை இழந்துவிட்டுக்
கொண்டுவந்த செய்தியிது கோடரியாய் வீழ்த்தியது

சீதைபே ரழகையவள் செப்பிய திறத்தினிலே
போதை ஏறாமற் பேராண்மை இருக்காது

என்கணவ ரென்ன இரும்பாலா மனங்கொண்டார்?
தன்மனதை அந்தத் தையல்பின் போகவிட்டார்

அன்று முளைத்தஎங்கள் அழிவுவிதை மரமாகிக்
கொன்று குவித்தகதை கூறிடவா பெண்மகள்நான்?

ஆசை மகனுடைய அழகும் வீரமுமே
பேசிமுடியாது பேச்சில் அடங்காது

இந்திரனை வென்றிட்ட இளங்காளை; ஒருநொடியில்
சந்திரனே வேண்டுமெனிற் கொண்டுவரும் தீரமகன்;

அப்பன் பேர்சொல்லும் அதிவீரம்; பெருந்துணிவு;
தப்பாமல் வெற்றிமகள் தனைக்கொள்ளும் மாவீரன்;

கண்நிறைந்த கணவன்; கருத்தள்ளும் செல்வமகன்;
பெண்ணெனக்கு வாய்த்தும் பீடுபெற வாழலையே!

பெண்ணைப்போல் சுமைதாங்கி பூமியில்வே றேதுமில்லை
என்னைப்போல் பெரும்பாவி ஏழுலகும் இருந்ததில்லை.

மாணிக்கத் தூணிறுத்தி வயிரமணிப் பந்தரிட்டு
ஆணிப்பொன் கூரை அழகாக வேய்ந்தமனை;

செல்வமக ளெம்வீட்டில் சிரித்துவிளை யாடிடுவாள்;
எல்லா வளமும் இணைந்தங்கே கிடந்திடும்;

மங்காத எங்கள் வளம்யார்க்குத் தெரியாது?
அங்கதனைக் கண்டாசை கொள்ளாதார் யாருள்ளார்?

அத்தனையும் சொந்தமென அணைத்துக் கிடந்தவள்நான்
கத்துகடல் சூழிலங்கை கடைசிவரை ஆளலையே!

பெண்ணைப்போல் சுமைதாங்கி பூமியில்வே றேதுமில்லை
என்னைப்போல் பெரும்பாவி ஏழுலகும் இருந்ததில்லை.

ஆயிரமாய் அரம்பையர்கள் அடிவருடக் கெஞ்சிநிற்கத்
தீயினைப்போய்க் கவர்ந்துவந்து செத்தகதை என்னசொல்வேன்?

கண்வீச்சுக் கேங்கிப்போய்க் கோடிநங்கை காத்திருக்க
மின்வீச்சை நாடிப்போய் வெந்தகதை என்னசொல்வேன்?

பஞ்சுப் பெரும்பொதியோர் தீப்பொறியால் அழிந்ததைப்போல்
விஞ்சுபுகழ் காமத்தால் எரிந்தகதை என்னசொல்வேன்?

ஆசைக் குளம்நீந்தி அமுதசுகங் காண்கையிலே
ஆசைக் குளம்வற்றி அழிந்தகதை என்னசொல்வேன்?

பெண்ணைப்போல் சுமைதாங்கி பூமியில்வே றேதுமில்லை
என்னைப்போல் பெரும்பாவி ஏழுலகும் இருந்ததில்லை.

வெற்பெடுத்த திருமேனி வீழ்ந்துபட்டுப் போர்க்களத்தில்
அற்ப மெனக்கிடக்கும் அவலநிலை தாங்கலையே

மும்மடங்கு பொலிந்த முகவழகு கண்டமன
வெம்மை அடங்குதற்கு வேறுவழி தோணலையே

உள்ளிருக்குங் காதல் உணர்வுதனைத் தேடியம்பு
செல்லுநிலை கண்டவென்றன் சிந்தை நொறுங்கலையே

வாழ்ந்தமன்னன் வீழ்ந்தபின்னர் வாழும் நினைப்பிலையே
ஆழ்ந்த கற்புமனம் அடுத்துவாழ எண்ணலையே

உடன்வீழ்ந்தேன் இதய ஒப்பரிய தெய்வத்தின்
உடன்சென்றேன் வானவுலகில் நான்சேர்ந்தேன்.

பெண்ணைப்போல் சுமைதாங்கி பூமியில்வே றேதுமில்லை
என்னைப்போல் பெரும்பாவி ஏழுலகும் இருந்ததில்லை.

---------------------------------------------

சௌந்தர்

unread,
Jan 4, 2010, 9:00:31 PM1/4/10
to சந்தவசந்தம்
11.0 இன்றைய உலகிற்கு இவை கூறும் அறவுரை

இராமனின் ஈரம்

(கவிஞர் சவகர்லால், விழுப்புரம் 3-8-1986)

கன்னத்தி லறைந்தவர்க்கு மறுகன் னத்தைக்
. . காட்டென்ற ஏசுவுக்குச் சிலுவை தந்தோம்
எண்ணத்தில் வாய்மையினைத் தீப மாக
. . ஏற்றென்ற காந்திக்குக் குண்டு தந்தோம்
என்னத்தைக் கேட்டாலும் ஆராய் வாய்நீ
. . என்றிட்ட மேதைக்கு நஞ்சு தந்தோம்
நன்றாக இதையெல்லாம் அறிந்த தாலே
. . நடுங்குகிறேன் அறிவுரைகள் நாட்டுக் கீய.

அறநெறியைப் புதைகுழிக்குள் புதைத்து விட்டே
. . அதன்மேல் அலங்கார மேடை போட்டுப்
புறநெறிகள் ஆட்சிசெய்யும் இந்த நாளில்
. . பொய்நெறியே சட்டமெனப் போன நாளில்
அறவுரைகள் சொல்லவென ஒருவன் போனால்
. . அவன்மீண்டு முழுதாக வரவா கூடும்!
திறமான கூர்மையொடு கத்தி தாங்கித்
. . தொண்டர்படை நிற்கையிலே அறிவு ரையா?

காட்டிலவன் நடக்கின்றான்; தூசு பட்டுக்
. . கல்லொன்று பெண்ணாகி வணங்கக் கண்டான்
நாட்டிலெங்கும் காணாத அதிச யத்தை
. . நடப்பினிலே கண்டவனோ கதையைக் கேட்டான்
வேட்கையிலே பலியாகிச் சாபம் பெற்று
. . வீதியிலே கல்லாகிக் கிடந்த பெண்ணைக்
கூட்டியவள் கணவருடன் சேர்த்து வைத்த
. . கால்வண்ணச் செயல்ராமன் ஈரம் காட்டும்.

படகுதள்ளி வாழ்கின்ற வேடன் அன்புப்
. . பெட்டகமாய் நாயகனைக் கரைசேர்த்திட்டான்
உடன்கொண்டு வந்திட்ட மீனும் தேனும்
. . உண்டிடவே வேண்டுகிறான்; உண்டோ மென்று
தடையின்றிப் பொழிந்திட்ட சொல்லில் அன்புச்
. . சாரலினைப் பார்க்கின்றோம்; குகனைச் சேர்த்தே
உடனைந்து பேரானோம் என்று ரைத்த
. . உரையிராமன் நெஞ்சிலுள்ள ஈரங் காட்டும்.

போர்க்களத்தில் ஒப்பாரி யாயென் றிங்கே
. . பயின்றுவரும் பழமொழியின் பொருள்தா னென்ன?
போர்க்களத்தில் அனுதாபம் தற்கொ லையாய்ப்
. . போகுமென்னும் கருத்துத்தான்; இராம வள்ளல்
போர்முனையில் இராவனனை ஆய்த மின்றிப்
. . பார்த்ததுமே இன்றுபோய்நீ நாளை வானென்(று)
ஓர்வார்த்தை சொன்னானே அவனெஞ் சத்தில்
. . உயர்ந்துள்ள ஈரத்திற் கெல்லை யுண்டா?

நல்லவனாம் வீடணனை அணைத்துக் கொண்டான்;
. . நங்கையவள் சபரிக்கு மோட்ச மீந்தான்;
வல்லவனாம் வாலிக்கு வீட ளித்தான்;
. . வளரன்புச் சுக்ரீவன் மிதந்தான் அன்பில்;
கள்ளமிலாச் சடாயுவுக்குக் கடன்கள் செய்தான்;
. . காட்டினையே அறச்சாலை யாக்கி நின்றான்;
சொல்லவரின் அவனிறங்கி மண்ணில் வந்து
. . தோன்றியதே அவன்நெஞ்சின் ஈரத் தால்தான்.

--------------------------------------

Siva Siva

unread,
Jan 4, 2010, 9:49:59 PM1/4/10
to santhav...@googlegroups.com


2010/1/4 சௌந்தர் <rsou...@gmail.com>

11.0  இன்றைய உலகிற்கு இவை  கூறும் அறவுரை

            இராமனின் ஈரம்

(கவிஞர் சவகர்லால், விழுப்புரம் 3-8-1986)

கன்னத்தி லறைந்தவர்க்கு மறுகன் னத்தைக்
. . காட்டென்ற ஏசுவுக்குச் சிலுவை  தந்தோம்
எண்ணத்தில் வாய்மையினைத் தீப மாக
. . ஏற்றென்ற காந்திக்குக் குண்டு தந்தோம்
என்னத்தைக் கேட்டாலும் ஆராய் வாய்நீ
. . என்றிட்ட மேதைக்கு நஞ்சு தந்தோம்
நன்றாக இதையெல்லாம் அறிந்த தாலே
. . நடுங்குகிறேன் அறிவுரைகள் நாட்டுக் கீய.

அழகிய பாடல்.
 

அறநெறியைப் புதைகுழிக்குள் புதைத்து விட்டே
. . அதன்மேல் அலங்கார மேடை  போட்டுப்
புறநெறிகள் ஆட்சிசெய்யும் இந்த நாளில்
. . பொய்நெறியே  சட்டமெனப் போன நாளில்
அறவுரைகள் சொல்லவென ஒருவன் போனால்
. . அவன்மீண்டு  முழுதாக வரவா  கூடும்!
திறமான கூர்மையொடு கத்தி தாங்கித்
. . தொண்டர்படை  நிற்கையிலே  அறிவு ரையா?


'பொய்ந்நெறி' என்றிருக்கவேண்டுமோ?

 
காட்டிலவன் நடக்கின்றான்;  தூசு பட்டுக்
. . கல்லொன்று பெண்ணாகி வணங்கக் கண்டான்
நாட்டிலெங்கும் காணாத அதிச யத்தை
. . நடப்பினிலே  கண்டவனோ  கதையைக் கேட்டான்
வேட்கையிலே  பலியாகிச் சாபம் பெற்று
. . வீதியிலே  கல்லாகிக் கிடந்த பெண்ணைக்
கூட்டியவள் கணவருடன் சேர்த்து வைத்த
. . கால்வண்ணச் செயல்ராமன் ஈரம் காட்டும்.


'"வேட்கையிலே  பலியாகி" - உருபு மயக்கம் என்றுகொள்ளவேண்டுமா?

 

சௌந்தர்

unread,
Jan 5, 2010, 9:12:07 PM1/5/10
to சந்தவசந்தம்

On Jan 4, 9:49 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2010/1/4 சௌந்தர் <rsoun...@gmail.com>

> > புறநெறிகள் ஆட்சிசெய்யும் இந்த நாளில்
> > . . பொய்நெறியே  சட்டமெனப் போன நாளில்

>


> 'பொய்ந்நெறி' என்றிருக்கவேண்டுமோ?

தட்டச்சுப் பிழை. (புத்தகத்தில் ஒற்று மிகாமல்தான் பிரசுரமாயுள்ளது)

> > காட்டிலவன் நடக்கின்றான்;  தூசு பட்டுக்
> > . . கல்லொன்று பெண்ணாகி வணங்கக் கண்டான்
> > நாட்டிலெங்கும் காணாத அதிச யத்தை
> > . . நடப்பினிலே  கண்டவனோ  கதையைக் கேட்டான்
> > வேட்கையிலே  பலியாகிச் சாபம் பெற்று
> > . . வீதியிலே  கல்லாகிக் கிடந்த பெண்ணைக்
> > கூட்டியவள் கணவருடன் சேர்த்து வைத்த
> > . . கால்வண்ணச் செயல்ராமன் ஈரம் காட்டும்.
>
> '"வேட்கையிலே  பலியாகி" - உருபு மயக்கம் என்றுகொள்ளவேண்டுமா?

'வேட்கையாலே' என்றுவந்தால் மாத்திரை கூடுமென்று இப்படி
எழுதியிருக்கலாம்.

சௌந்தர்

unread,
Jan 5, 2010, 9:19:41 PM1/5/10
to சந்தவசந்தம்
12.0 சிவதனுசு பேசுகிறது

(கவிஞர் சவகர்லால், புதுக்கோட்டை, 24-7-1982)

பண்டொருநாள் முக்கண்ணன் புயந்தழுவிப் போருக்குச்
சென்றதுண்டு; வளைந்ததில்லை; தக்க னழிந்துவிட்டான்;

தழல்மேனி கையில் தனுவென்னைக் கண்டுவிட்டே
தழலிற் புழுவாகத் தவித்தார் தேவரெலாம்

தேவை யிலாநடுக்கம் தேவர் கொள்ளுவதைத்
தேவாதி தேவன் கண்டென்னைப் புறம்வைத்தான்

சனகன் முன்னோரில் ஒருவ னிடம் சென்ற
நினைவுண்டு; எழுந்துநின்ற நினைவே எனக்கில்லை;

கண்காட்சிப் பொருளாக ஆகிவிட்டேன்; நாள்தோறும்
புண்ணாகி என்னெஞ்சம் புலம்புவதை யார்கேட்பார்?

கார்முக மென்பார்கள்; கடுஞ்சரம் பாய்கின்ற
போர்முக மறிந்ததில்லை; புறம்வந்து பார்த்ததில்லை

வேட்டுவன் கைவில்லா யிருந்தாலும் நாலுதரம்
காட்டில் வளைந்திருப்பேன் கரடிபுலி எய்திருப்பேன்

காமன் கைவில்லா யிருந்தாலும் மலரம்பைப்
பூமேனி தனிலெய்து புகழ்மேனி செய்திருப்பேன்

வானில் இடுவில்லா யிருந்தாலும் வண்ணங்கள்
தானாகக் கூட்டித் தண்மாரி தந்திருப்பேன்.

சிவன்கை வில்லானேன் சிவனே யெனக்கிடந்தேன்
எவன்கையும் எனைத்தீண்டி யெடுக்கத் துணியவில்லை;

கொழுமுகத்தில் தோன்றிக் கொழுகொழு வெனவளர்ந்தே
அழகால் உலகாண்டாள் அருமைமகள் சீதை

நாற்குணமும் படையாக நானிலத்தை வென்றுவர
வேற்கண்ணின் வீச்சறிந்தே வீழ்ந்தார் மன்னரெலாம்

ஒருபொருட்குப் பலபோட்டி என்றால் நடைமுறையில்
உருவாகி நிபந்தனைகள் உடன்வந்து தோன்றாதா?

நான்தான் கிடைத்தேனா? எனைவளைத்த வீரர்க்கே
தேன்சிட்டின் பொன்மேனி மணங்கிட்டு மெனஉரைத்தார்

ஆசைப் பெருக்கோடு யார்யாரோ வந்தார்கள்
ஓசை யொடுமுயன்றார்; உடல்வளைத்து பின்சென்றார்

மேருமலை யெனக்கிடந்தேன்; வந்தார்கள்; போனார்கள்
யாருமெனை எடுக்கவில்லை; ஐவிரலும் தீண்டவில்லை

இடுப்பொடிந்தோர்; மனமொடிந்தோர்; எடுக்கும் முயற்சியிலே
மிடுக்கொடிந்தோர்; எனமன்னர் வரிசை தொடர்ந்ததுவாம்.

என்மேனி வளைத்தே இணையில்லாப் பேரழகுப்
பொன்மேனி வளைக்கும் புகழ்வீரர் வரவில்லை

நானும் கிடந்தேன் நல்லமலர்க் கற்பகத்தின்
தேனும் கிடந்தது; தீண்டுவார் தோன்றவில்லை

பெட்டிக்குள் கிடந்தேன்நான்; புகழ்போர்த்த சீதையவள்
கட்டுக்குள் கிடந்தாள்; கட்டிக்கொள் வாரில்லை

சனகன் உளம்நொந்தான்; சங்கடக் கடல்வீழ்ந்தான்
நினைவெல்லாம் வேதனையாய் நித்தநித் தம்செத்தான்

இருட்டென்றால் விடிவொன் றிருக்கத்தா னேவேண்டும்
இருட்டுளத்தில் ஒளிதரவோர் இருட்டே வந்ததுவாம்

கார்வண்ண மேனிக் கதிர்வண்ணங் கண்டிந்தப்
பார்வண்ணம் மாறிப் பகல்வண்ணங் கொண்டதுவாம்

நம்பியைக் கண்டான்; நம்பிக்கை கொண்டான்
நம்பி(க்)கை அந்த நங்கைக்கே எனக்கண்டான்

மன்னனிவ னிந்த மைந்தனைக் காணுமுன்பே
எண்ணரும் நலத்தினாள் இளையனைக் கண்டுவிட்டாள்.

அண்ணலும் நோக்கினாள்; அவளும் நோக்கினாள்
பின்னென்ன? இதயங்கள் மாறிப் புகுந்தனவாம்

சீதையுளம் முன்வாங்கிச் சனகனுளம் பின்வாங்கித்
தாதவிழ்ந்த மலராகத் தயரதரா மன்வந்தான்

இப்பொழுது 'வில்லன்' இணையில்லா வில்நானே
தப்பாமல் எனைவளைத்தால் தானே திருமணமாம்

திட்டாத பேரில்லை; என்பேரில் வசைமாரி
கொட்டாத பேரில்லை; குமையாத மனமில்லை

இவளுக் கிவனென்றே இதயங்கள் முடித்தபின்னே
இவர்களுக் கிடையூறு சிவதனுசா என்றார்கள்

மன்னனுக் கறிவில்லை; மகனைக் கைப்பிடித்து
இன்றைக்கே கொடுக்காமல் வில்லெடுக்கச் சொன்னாரே

அள்ளிக் கொடுக்காமல் அரியவில்லை எடுக்கஇந்தப்
பிள்ளைமுன்னே வைத்தது பேதைமை என்றார்கள்

அத்தனையுங் கண்டேன்; அனைத்தையுங் கேட்டேன்
பித்தனைப் போலாகிப் பெட்டிக்குள் ளேகிடந்தேன்

அறுபதி னாயிரம்பேர் அருமையுடன் கொண்டுசென்றே
இருத்திவைத்தார்; இராமனெனை எடுக்க நெருங்கிவந்தான்

எல்லாமே அறிந்தவன்நான்; இதயமும் எனக்குண்டு
சொல்லியா தரவேண்டும்? மணமுடிக்க முடிவுசெய்தேன்

தொட்டான்; எடுத்தான்; தொடுத்தான்; என்மேனி
பட்டென்று முறிந்தேன்; பாதத்தில் வீழ்ந்தேன்

பிரிந்தவர் மறுபடி பிணைந்திடச் செய்தற்காய்
முறிந்தவன் எனக்கென்றும் முழுமதியாய்ப் புகழுண்டு!

வேறு

தொட்டதைக் கண்டா ரில்லை; தூயவன் கைக ளென்மேற்
பட்டதைக் கண்டா ரில்லை; பையவே என்மேல் நாணை
இட்டதைக் கண்டா ரில்லை; இடிமுழக் கொன்றே கேட்டார்
இற்றது நான்தான்; பொங்கி எழுந்தது மற்றோர் உள்ளம்.

விழுந்துபோய்க் கிடக்கு மென்னை விரும்பியே பார்ப்பா ரில்லை
எழுந்தனர்; மகிழ்வி லாடி இணைந்தனர்; தூய கற்பின்
கொழுந்தினை வாழ்த்தி னார்கள்; குமரனைப் போற்றி னார்கள்
எழுந்துமே செய்தி சொல்ல எங்கெங்கோ ஓடி னார்கள்

நங்கையின் புகழ்பே சட்டும் நாயகன் திறம்பே சட்டும்
இங்குவந் திணைந்த கோடி எழில்நலம் மிகப்பே சட்டும்
இங்கதிற் குறையே யில்லை என்னுடல் முறிந்து வீழ்ந்து
நங்கையின் மணஞ்சேர்த் தேனே! நாலுசொல் சொலக்கூ டாதா!

என்னவோ போங்கள் என்றன் இதயமும் நினைப்பு மெல்லாம்
வண்ணமா மகளாம் சீதை வாழ்வுறல் ஒன்றே யாகும்
என்னைநான் முறித்துக் கொண்டேன் இருவரை இணைத்து வைத்தேன்
மண்ணிலே இதுவே போதும் மண்ணொடு சென்றா லென்ன!

--------------------------------------------------

சௌந்தர்

unread,
Jan 6, 2010, 10:16:06 PM1/6/10
to சந்தவசந்தம்
13.0 எம் கணிப்பில் இராமன்
குகன்

குகன் பேசுகிறான்

(கவிஞர் சவகர்லால், காரைக்குடி 5-4-1982 )

நினைப்புக்குள் அடங்காத நெடியவன் புகழ் என்றன்
கணிப்புக்குள் அடங்கிடுமா? கைக்குள்ளே சூரியனா?

கங்கைப் பேராற்றின் கரையளந்து திரிபவனால்
மங்காப் பெரும்புகழோன் மாண்பளக்க முடிந்திடுமா?

ஆற்றைக் கடந்திடவே தோணியசைப் பவன்பிறவி
ஆற்றைக் கடக்கவரும் தோணிபுகழ் அளந்திடவா!

வேட்டுவ நாயேன்நான் வியனொளியைத் திசையெல்லாம்
நீட்டும் நாயகனின் புகழளக்கத் துணிந்திடவா.

நினைத்தாலே என்றன் நெஞ்சுருகி யவன்பாதம்
நனைக்கிறதே அவன்பெருமை நானளப்ப தெவ்வாறு?

என்ன புண்ணியன்நான் எப்பிறவி செய்தேனோ
வண்ணப் பேரழகை வரவேற்கப் பெற்றேன்நான்

கண்ணாலே பெருமானைக் கண்டநாள் முதலாக
எண்ணங்கள் அவன்பாதம் சரணடைந்தே கிடக்கிறது

சிந்தையை அவனடியிற் சேர்த்த பின்னர்நான்
எந்தத் துணைகொண்டு எப்படிக் கணித்திடுவேன்?

முற்றிப் பழுத்தஅற முதற்பொருளை இந்தப்
பற்றாத குறையறிவுப் பாவியா பகருவது?

ஆசைக்கோர் அளவு வேண்டாமா! புனிதமான
பூசைக்கோர் பொருளைப் புரட்டியா பார்ப்பார்கள்?

நாடாளும் பேற்றைத் துறந்திட்டு நடந்திங்கே
காடாள வந்தஒளிக் கதிர்காணச் சென்றேன்நான்

தேனோடு மீனையும் திருத்திச் சுவையோடு
நானவர்க்குக் கொண்டுசென்றேன் நடப்பறியாப் பெரும்பேதை

என்னைப் பார்த்தவுடன் இலக்குவன் மனங்கொடுத்தான்
என்னை அழைத்தே எம்பெருமானிடம் விட்டான்

மேனி யொளிப்பெருக்கில் என்னிருகண் தடுமாற
நானவரைத் தேனோடுமீன் உண்ண அழைத்திட்டேன்

உண்டனென் எனச்சொன்னான் ஒப்பரிய பெருஞ்செல்வம்
கண்டனென் எனநானும் களிப்பில் மிதந்திட்டேன்

பின்னாலே சிந்தித்துப் பார்க்கையில்தான் மடத்தனத்தை
என்னாலே உணர்தற்கே இயன்றது நடுங்கிவிட்டேன்

எம்பெருமான் என்றவுடன் என்னுள்ளம் மிகஉருகிச்
செம்பொருளை நாடிச் சென்றதலால் வேறில்லை

மீனைத் தொடுவாரா? நினைத்தே பார்க்கவில்லை
கானைப் புனிதமாக்கும் கடவுளைத் தான்நினைத்தேன்.

அறியாப் பேதைநான் அளித்த பண்டத்தைப்
பரிவுட னேபெற்றுப் பவித்திர மென்றானே;

அந்தப் பெருமானின் அருமைக்குமுன்னாலே
எந்தப் பேருலகும் ஈடாகி நின்றிடுமா?

கார்வண்ண மேனிக் கதிராளும் பேற்றையிப்
பார்மகள் தானிழந்தாள்; பெரும்பாவி யாகிவிட்டாள்

விரிகின்ற சுடரொளியின் வீச்சுக்காட் பட்டபின்னே
தெரிகின்ற தெல்லாமே தெய்வத்தின் திருவடிதான்

கங்கை நதிக்கரையும் கவிந்துள்ள காடுகளும்
எங்கோ செய்தபேறே இங்குராமன் வந்ததுவாம்

பாவ இருள்போக்கிப் புண்ணிய ஒளியூட்ட
மேவிவந்த கருஞ்சுடர்தான் மேன்மைத் தவவடிவம்

கங்கையைப் புனிதமாக்கிக் காட்டு வேடரெமைப்
பங்கமிலாப் பிறவியாக்கிப் பார்க்கவே வனவாசம்

கார்வண்ண மேனிக் கதிர்வண்ணத் தால்காடு
சீர்வண்ணம் பெற்றுத் திகழ்வண்ணங் கண்டேன்நான்.

கங்கை நதியலையென் கட்டுக்குள் ளேயிருக்கப்
பொங்கும் மனவலையோ புனிதனிடம் அடைக்கலமாம்

பிறவிக் கடல்கடக்கப் புணையாய் அவதரித்த
பிறவிக்கு நதிகடக்கப் புணையீயும் பேறுபெற்றேன்

நாவாய்கள் கணக்கிலவாய் நான்பெற்றே இருந்தாலும்
நாவாய்கள் இன்றே நற்பேற்றைப் பெற்றனவாம்

ஏறிவந்த பேரையெலாம் கரைசேர்த்த நாவாய்தான்
ஏறிவந்த நாயகனால் இப்பிறவி கடந்ததுவாம்

கழுவப் பட்டபாவக் குப்பையெலாம் எம்பெருமான்
செழுமைத் திருப்பாதச் சுடரில் எரிந்தனவாம்

கங்கை நதிசெய்த புண்ணியந்தான் எம்பெருமான்
இங்கே தொடும்பேற்றை இப்பிறப்பில் பெற்றதுவாம்.

காகுத்தன் மேனிக் கதிரொளியென் கண்ணைவிட்டுப்
போக மறுக்கிறதே! பொழுதெல்லாம் வதைக்கிறதே

மண்ணாளும் வேந்தன் மனமாளும் பேற்றைநான்
இந்நாளில் பெற்றதனை எண்ணியெண்ணித் திளைக்கின்றேன்

ஒருவயிற்றிற் பிறந்தோர்கள் ஒப்பரிய பகைவளர்க்கும்
திருநாட்டில் இராமனெனைச் சோதரனாய் ஆக்கிவிட்டான்

நங்கையைக் கொழுந்தியென்றான் நம்பியைத் தம்பியென்றான்
அங்கேயே வீட்டுலகை அடிநாயேன் கண்டுவிட்டேன்

அன்பைச் சொல்லுவேனா? அவனிடம் நிறைந்திருந்த
பண்பைச் சொல்லுவேனா? பயில்திறத்தைச் சொல்லுவேனா?

செம்மை அறம் தூய்மையெலாம் சேர்ந்துவந்த ஓருருவாய்
இம்மையிலிங் கவதரித்த ஏற்றத்தைப் புகழுவேனா?

எம்பெருமான் இருந்தவரை இக்கங்கைக் கரையெல்லாம்
பண்புடைய அயோத்தியெனப் பளபளப்பா யிருந்ததுவாம்.

சரஞ்சரமாய்ப் பெய்தமழை சட்டெனவே நின்றதுபோல்
விரிகதிரைப் பொழிந்தசுடர் மேகத்துள் மறைந்ததுபோல்

எல்லையிலா அன்புமழை என்னெல்லை தனைவிட்டுச்
செல்லுகையில் பாவியென்றன் சிந்தையெலாம் நெருப்பாச்சு

கரிய திருமேனி காகுத்தன் திருத்தொண்டில்
உருகி நின்ற உள்ளம் ஒப்பாரி வைக்கலாச்சு

(வேறு)

அன்பினை விளக்கிக் காட்டும் அளப்பரு மிலக்கி யங்கள்
என்பினை யுருக்கு மிந்த ஏந்தலின் செயற்கு முன்னே
என்றுமே தோற்றுப் போகும் இளமையாய் முறுவல் பூத்தால்
அன்னவன் திருப்பா தத்தில் ஆயிர முள்ளம் சேரும்

கையினை அசைப்பான்; எங்கள் கண்ணெலாம் மலராய்ப் பூக்கும்
மெய்யினை யசைப்பான்; எங்கள் மனமெலாம் மகிழ்ந்து துள்ளும்
பையவே இதழ சைப்பான் புல்லெலாம் பொன்னாய் மாறும்
ஐயனின் அசைவி லிந்த அவனியே பெருமை காணும்

மலரெனுங் கையால் நீரை மகிழ்வுட னளைவான்; உள்ளம்
புளகுறக் கங்கைப் பெண்ணாள் புரண்டுமே நெளிந்து மெல்லச்
சலசலத் திடுவாள்; மின்னும் சேலினைத் துள்ளச் செய்வாள்
அழகிய மேனி தொட்ட அதிர்ச்சியில் மயங்கி நிற்பாள்

காட்டிலா நானி ருந்தேன்? கலைதிகழ் மேன்மை கொஞ்சும்
வீட்டிலே இருந்தேன்; தூயோன் மனத்திலே இருந்தேன்; நெஞ்சக்
கூட்டிலே இருந்தேன்; அன்புக் குவிப்பிலே இருந்தேன்; இன்ப
ஏட்டிலே இருந்தேன்; வள்ளல் இதயமாம் சிறையி ருந்தேன்

--------------------------------------------

Kaviyogi Vedham

unread,
Jan 7, 2010, 9:34:02 AM1/7/10
to santhav...@googlegroups.com, Pas Pasupathy, VETTAI ANANTHANARAYANAN
ரொம்ப அற்புதம்சௌந்தர்!!. எந்த வரி அற்புதம் இல்லை எனச் சொல்லமுடியும்?. அத்தனையும் தேன் என என்முன்னே வந்து சொட்டும்போது?
 வரிகள் யாவுமே அழகோ அழகு!வாழ்க நெடுங்காலம் ஜவஹர்!
 யோகியார்

2010/1/7 சௌந்தர் <rsou...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

SUBBAIER RAMASAMI

unread,
Jan 7, 2010, 1:41:57 PM1/7/10
to santhav...@googlegroups.com

அன்புள்ள சௌந்தர்,

 

நான் டாக்டர் ஜவகர்லால் அவர்களைப் புத்தகச் சந்தையில் பார்த்தேன். கம்பன் பொழில் மடலில் ஒரு நகல் கொடுத்தேன். மிகவும் மகிழ்ந்தார். உடனே உங்களுக்கு ஒரு நன்றி மடல் வரைந்து கொடுத்தார். இத்துடன் இணைத்திருக்கிறேன். நீங்கள் முழுதும் இட்டதும் அதை ஒரு சிடியில் போட்டுத் தருவதாகச் சொன்னேன்.

 

இலந்தை

 
 
2010/1/7 சௌந்தர் <rsou...@gmail.com>
13.0   எம் கணிப்பில் இராமன்
jawahar.jpg

சௌந்தர்

unread,
Jan 7, 2010, 9:15:44 PM1/7/10
to சந்தவசந்தம்
அன்புள்ள இலந்தை:

கவிமாமணி டாக்டர் ஜவகர்லால் அவர்களைச் சந்தித்துப் பேசி இது பற்றிச்
சொன்ன உங்களுக்கு நன்றி. அவர் எழுதிய கவிதைகளை இணையத்தில் அவர்
அனுமதியின்றி இவ்வாறு இட்டு வருகின்றேனே என்று எண்ணியிருந்தேன். அன்பர்
ஜவகர்லால் அனுப்பிய மடல் கண்டு மிக்க மகிழ்ச்சி. இப்போது அந்தக் கவலை
தீர்ந்தது.
அவரது மின்னஞ்சல் முகவரி எம்மிடம் இல்லாததால் நீங்களே அவருக்கு
எம்சார்பில் நன்றியைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கம்பனின் பொழில மர்ந்து கவினுறு கவிதை யாத்துக்
கம்பனின் பெருமை பேசும் கவிஞராம் சவகர் அன்பாய்
நம்மிடை அனுப்பி வைத்த நலந்தரும் மடலே இன்று
கம்பனே நேரில் வந்து கைபடத் தந்த ஒன்று!

சௌந்தர்

சௌந்தர்

unread,
Jan 8, 2010, 8:02:43 PM1/8/10
to சந்தவசந்தம்
14.0 கம்பனில் சிறுபாத்திரம்- நீலமாலை

(கவிஞர் சவகர்லால்---புதுக்கோட்டை, 29-7-1990)

மிகச்சிறிய பாத்திரம் நான்; நாட கத்தில்
. . வந்துசெல்லும் மிகச்சிறிய வேடந்தாங்கல்;
மிகச்சிறிதே யானாலும் கடுகைப் போல
. . மேலான உணவுக்குச் சுவைதாளிப்பு;
மிகச்சிறிய விளக்கைப்போல் இருள்வி ரட்டி
. . மகிழ்ச்சியொளி வீசவைத்த சின்னச் சொப்பு
மிகச்சிறிய பாத்திரம்தான்; வருமி டத்து
. . மேன்மையினால் பளபளப்பேன் விளங்கி நிற்பேன்.

மிதிலைநகர் வீதியிலே ஒருவன் சென்றான்
. . மாடங்கள் விழிபூத்த தடாக மாச்சு.
எதிரில்லாக் காளையவன் நடந்த போது
. . இதயங்கள் நொறுங்குகின்ற சத்தம் கேட்கும்
மதுவாகிப் போதையூட்டும் கண்க ளுக்கே
. . மதுவானான்; போதையிலே மிதந்தார் பெண்கள்;
இதயத்தில் தைத்திட்ட முள்ளெ டுக்க
. . இயலாமல் பெண்களெலாம் கிறங்கிப் போனார்.

பண்தாங்கி நடைபோடும் பாடல் போல
. . வில்தாங்கிக் கார்முகிலோன் நடந்தான்; அங்கே
கண்தாங்கிப் பூத்திருக்கும் தாம ரைகள்
. . கள்தாங்கி மயக்கத்தில் ஆட லாச்சு.
புண்தாங்கிப் பெண்களெல்லாம் நைய அந்தப்
. . புயல்தாங்கி நகரங்கே பொலிய லாச்சு;
மண்தாங்கிக் காக்கவந்த வள்ளல் தன்னை
. . மனந்தாங்க முடியாமல் செத்தார் பெண்கள்.

சானகியும் அதிலொருத்தி; காளை போகும்
. . சாலையிலே விழிபரப்பி நின்ற போது
வானுலவும் கருமுகில்தான் வில்லைத் தாங்கி
. . வருகின்ற பேரழகைக் கண்டாள்; அந்தத்
தேன்மலரில் வண்டாகித் திளைத்த கண்கள்
. . திரும்பிவர முடியாமல் திகைத்து நிற்க
வானமகன் மேல்பார்த்தான்; பார்வை இரண்டும்
. . மோதிடவே தனைமறந்து நின்றான் அண்ணல்!

பெண்ணழகை அவன்பார்த்தான்; பேச்சி ழந்தான்;
. . பெருகிவரும் வெள்ளமென உணர்வு டைத்த
கண்ணழகை அவள்பார்த்தாள்; கருத்தி ழந்தாள்;
. . கண்ணரங்கில் நாடகமே நடக்க லாச்சு.
அண்ணலவன் நோக்குகிறான்; ஆர ணங்காம்
. . அருமருந்தும் நோக்குகின்றாள்; இதயம் இரண்டும்
கண்வழியே பரிமாறப் பட்டுச் செல்லக்
. . கருத்தினிலே பதியமிட்டுச் சென்றான் காளை.

வேல்தைக்கத் துடிக்கின்ற மானை; அண்ணல்
. . விழிதைக்கத் துடிக்கின்ற மலரைத் தூயோன்
கால்தைக்கும் முள்ளாகக் கனாக்கண் டாளைக்
. . காதலுக்குள் உழல்பவளைக் கண்டேன்; அந்தச்
சீதைக்குத் தோழியாம்நான் என்ன செய்வேன்?
. . தண்ணீரால் அணைகின்ற நெருப்பா காதல்?
சீதைக்குள் தைக்கின்ற முள்ளெ டுத்துச்
. . சுகமூட்ட எல்லாமே செய்து நின்றேன்.

அய்யய்யோ நான்பட்ட வேதனைகள்
. . யார்படுவார்? காதலினால் தாக்கப் பட்ட
பொய்யிடையாள் புலம்புவது நியாயம்; அந்தப்
. . பேதைக்குத் துணைநான்ஏன் புலம்ப வேண்டும்?
அய்யாநான் சத்தியமாய்ச் சொல்வேன்; இங்கே
. . யாருக்கும் காதலதே வேண்டாம்; பாவம்
கைவில்லைக் கண்ணுக்குள் வைத்துக் கொண்டு
. . காரிகையாள் பட்டதுயர் போதும்; போதும்.

கண்ணுக்குள் முகில்நுழைய நங்கை சீதை
. . கருத்துக்குள் புயல்நுழைய லாச்சு; சொந்த
எண்ணத்துள் இருப்பவனைச் சொந்த மாக்க
. . இடையூறாய் மலைபோல வில்லொன் றுண்டே!
எண்ணத்தைப் படக்கென்று முறித்துப் போட்ட
. . இந்தவில்லன் அந்தவில்லை முறித்தால் தானே
எண்ணங்கள் நிறைவுபெறும்; இல்லை யென்றால்
. . என்னவாகும் எனப்புலம்பி நின்றாள் சீதை.

அரசவையில் அவனிருக்க ஆயி ரம்பேர்
. . அந்தவில்லை இழுத்தங்கே கொண்டு சேர்த்தார்;
அரசவையின் இதயத்தில் பெருந்து டிப்பு;
. . அண்ணலிவன் செயல்நோக்கும் பரப ரப்பு
பெரியவில்லைச் சிறியஇவன் தொட்டுப் பார்த்தான்
. . பூமாலை தனைக்கையால் எடுப்ப தைப்போல்
விரைவாக எடுத்திட்டான்; அவையோர் எல்லாம்
. . வில்முறித்த சத்தமென்றே கேட்டிட் டார்கள்.

வில்வளைத்த செய்தியினை சொல்லு தற்காய்
. . விரைகின்ற அம்பாகச் சென்றேன்; அங்கே
அல்குழைத்த நிறத்தானை நினைந்து நையும்
. . அவளிடத்தே வில்முறித்த செய்தி சொன்னேன்;
சொல்வளைத்தே எய்வதற்கு முன்பே அந்தச்
. . சேயிழைக்குப் பெருமயக்கம்; அன்று கண்ட
வில்தழைத்த தோளனிவன் இல்லை யென்றால்
. . வாழ்விழக்க முடிவுசெய்தாள் வடிவு நங்கை.

முனிவருடன், தம்பியுடன் வந்த வன்தான்
. . முறித்தவனென் றுரைத்தவுடன் அவனே என்று
நனிவருத்தம் அழித்துமன மகிழ்ந்தாள் அந்த
. . நற்செய்தி நான்கொணர்ந்த இனிப்புச் செய்தி
கனிந்திட்ட காதலது மனத்தில் கூடும்
. . காரியமாய் ஆனதனால் நான்ம கிழ்ந்தேன்;
இனியென்ன சீதைக்கு மணந்தான் என்ற
. . இன்னினைவு உள்ளமெலாம் மணக்கக் கண்டேன்.

. . . . (வேறு). . . . . .

நானொரு செய்தியைச் சேர்த்துவைத்தேன்-சீதை
. . நங்கையின் உணர்வினைச் செழிக்க வைத்தேன்
தேனெனெச் செவியுளே பாயவைத்தேன்-அந்தச்
. . சிற்றிடை வாழ்க்கையைப் பூக்கவைத்தேன்.

கார்முகில் வில்லினைத் தொட்டதுவும்-எல்லாக்
. . கண்களும் அவனையே மொய்த்ததுவும்
நேர்பட வில்லினை முறித்ததுவும்-சொல்லி
. . நங்கையின் உயிரினை நிற்க வைத்தேன்.

கண்டதும் மனம்பறி கொடுத்ததுவும்-அந்தக்
. . கனலினை நெஞ்சினில் தொடுத்ததுவும்
பெண்டவள் தவிப்பதும் நானறிவேன்-அந்தப்
. . பேதையின் மனநிலை தானறிவேன்.

தவிக்கிறாள் துடிக்கிறாள் தனைமறந்தாள்-அந்தத்
. . தையலின் வேதனை துடைத்து நின்றேன்
செவிக்குளே வீரனின் செயலுரைத்தேன்-அந்தச்
. . செம்மலைச் சேயிழை மனம்நிறைத்தேன்

காதல் நெருப்பினை உண்டதுவும்-அந்தக்
. . கார்முகில் மனத்துளே கொண்டதுவும்
சீதை தவிப்பதும் நானறிவேன்-இந்தச்
. .செய்தி காத்திடும் என விரைந்தேன்.

செய்தியைக் கேட்டதும் சீதைமனம்-அங்கே
. . துள்ளியே கொண்டது ஆசைநடம்
மெய்யினில் உணர்வலை ஆர்ப்பரிக்கும்-அந்த
. . மெல்லிடை அங்கொரு கூத்தளிக்கும்.

வில்லை முறித்தவன் அவன்தானா?-என்ற
. . வினாவில் அவளுயிர் தொங்கிநிற்கும்
வில்லவன் முனியுடன் வந்தவன்தான்-என்ற
. . விடையினில் அவளுயிர் தங்கிநிற்கும்.

மனத்தை ஒடித்தவன் வில்லொடித்தான்-என்ற
. . மெய்ம்மையை உணர்ந்ததும் திளைத்து விட்டாள்
வனத்தில் மலர்கிற மலர்களைப்போல்-அந்த
. . மங்கை மனமெலாம் மலர்ந்துவிட்டாள்.

மனமொரு நாட்டிய மங்காட-அதன்
. . வழியினில் இடையொரு கூத்தாட
மனவழி கண்களும் சேர்ந்தாட்-அந்த
. . மங்கை யாடுதல் கண்டி ருந்தேன்.

கார்முகில் மின்னலைச் சேருகின்ற-அந்தக்
. . காரியம் தனில்நான் பங்காளி
கார்முகில் நினைப்பினில் ஆடுகின்ற-அந்தக்
. . களிமயில் தனக்குநான் கூட்டாளி

பின்னொரு காவியம் விரிந்திடவே-போட்ட
. . பாயிரம் போலொரு சின்னவள்நான்
விண்ணில் பிரிந்தவர் இணைந்திடவே-இந்த
. . மண்ணில் உதவிய பெண்ணவள்நான்!

------------------------------------

சௌந்தர்

unread,
Jan 10, 2010, 12:28:37 PM1/10/10
to சந்தவசந்தம்
15.0 இளமை பாடிய எழிற்கம்பன்

. . . . . சுமித்திரை. . . . . .

(கவிஞர் சவகர்லால், காரைக்குடி, 3-4-1985)

தேரோட்டித் திசைவென்ற மன்ன னுக்குத்
. . தேவியராய்ச் சிறந்தவர்கள் மூவ ருள்ளே
சீரோடு திகழ்கின்ற இளைய வள்நான்;
. . சுமித்திரையென் றெனைச் சொல்வார்; நீண்ட காலம்
பேருரைக்க மகவின்றி ஏங்கிப் பின்னர்
. . பெருயாகம் செய்தந்தப் பிண்டம் உண்டு
சீருடைய மக்களையும் பெற்றோம்; அந்தச்
. . செல்வங்கள் பெற்றதனாற் பெற்றோ ரானோம்.

பிண்டத்தைப் பங்கிடுங்கால் மிஞ்சிப் போன
. . பங்கினைநான் மறுமுறையும் பெற்ற தாலே
அன்புமிகு மைந்தரெனக் கிருவ ரானார்.
. . அருமைமிகும் இலக்குவனும் சத்ருக் கனுமாம்
அண்டத்தை வெல்லுகின்ற ஆற்ற லோடும்
. . அறிவுநலம் சிறந்தவரென் னருமை மக்கள்
என்னளவில் இராமனென்ன பரத னென்ன
. . எல்லோரும் என்கண்ணின் மணிக ளேதாம்.

இராமனுக்கு நிழலொன்றைச் சுமந்து பெற்றேன்
. . இணைபிரியா நிழல்கூட இரவு நேரம்
விராவியுட னிருக்காமல் மறையும் ஆனால்
. . விழியிமையில் உயிரைவைத்தே அண்ண னுக்காய்
இராப்பகலென் றெப்பொழுதும் இமைத்த லின்றி
. . இன்தொண்டு செய்தானே தம்பி; அந்த
விராவுபுகழ் இலக்குவனை நான்தான் பெற்றேன்
. . வள்ளலவன் தொண்டுக்கே அவனை விட்டேன்.

தனைப்பெற்ற வயிறென்று மெண்ணி டாமல்
. . தகர்த்தானே தன்தாயைப் பரதன்; அங்கே
எனைக்கூற வரும்போதே இனிமை கூட்டி
. . இதயத்தில் கலந்துரைப்பா னென்றால் அன்பில்
நனைந்திருக்கு மென்னையவன் உணர்ந்த தால்தான்.
. . நாடாண்ட பெருமன்னன் இளையா ளாக
எனையென்றும் நான்கருதி மிதந்த தில்லை
. . இதயத்தில் சிறுதவறும் நுழைந்த தில்லை.

காகுத்தன் காட்டுக்குப் பயண மானான்;
. . கட்டியவள் பின்தொடர்ந்தாள்; அவர்க ளோடு
ஏகுதற்கே புறப்பட்டான் இலக்கு வன்தான்
. . இனிமையுடன் அருகழைத்தே காடு நோக்கிப்
போகுங்கால் நீஇராமன் தம்பி யில்லை;
. . பணியாளென் றெண்ணிக்கொள்; ஏவல் செய்வாய்
ஆகுமட்டும் தொண்டுசெய்வாய் தீமை யேதும்
. . ஆகிவந்தால் நீமடிவாய் முன்னே என்றேன்.

தொண்டுக்காய் இருபிள்ளை பெற்றுத் தந்த
. . தூயமணி வயிறிதுதான்; இராம வள்ளல்
தொண்டுக்கே இலக்குவனைப் பணித்தேன்; உள்ளம்
. . தூயவனாம் பரதனுக்குப் பக்கம் நின்றே
என்றைக்கும் தொண்டுசெயச் சத்ருக் கன்னை
. . ஏவிவிட்டேன்; நான்பெற்ற இரண்டு பேரும்
என்றைக்கும் என்னருகில் இருந்த தில்லை
. . என்றைக்கும் இருவரையும் பிரிந்த தில்லை.

. . . . . . (வேறு). . . . . . . .

இளமைக் கனவுகள் இனிய உணர்வுகள்
. . என்மனம் கொண்ட தில்லை-எங்கும்
வளமை நிறைந்துமே வழிந்து சொரியினும்
. . வாரிட நினைத்ததில்லை.

இராமனை வேறென இலக்குவன் வேறென
. . இதயமே கண்டதில்லை-அந்த
இராமனை நிழலென இலக்குவன் தொடர்ந்திட
. . என்றுமே மறுத்ததில்லை.

ஆசைகள் உணர்ச்சிகள் சூழ்ச்சிக ளென்னும்
. . அவ்வலைப் பட்டதில்லை-பொங்கும்
நேச நினைப்பினை நெருப்பினில் வாட்டியே
. . நிறுத்துப் பார்த்ததில்லை.

இராமனின் பின்வனம் இலக்குவன் ஏகவே
. . ஏவினேன் மகிழ்ச்சியுடன்-அந்த
இராமனுக் காகநீ இறந்திடு வாயென
. . இயம்பினேன் நெகிழ்ச்சியுடன்.

பரதனுக் கொருவனைத் தொண்டனா யாக்கியே
. . பணிசெயப் பணித்துவிட்டேன்-அந்த
வரதனுக் கொருவனாய்ப் பாரதனுக் கொருவனாய்
. . மகன்களைத் தந்துவிட்டேன்.

பத்துச் திசையிலும் வெற்றி செலுத்தினோன்
. . பத்தினி யாயிருந்தும்-என்றன்
சித்தம் எவ்விதப் பித்த மயக்கிலும்
. . சிக்கலைத் தந்ததில்லை.

ஆசை யுடன்வரும் நேசன் நினைப்பினை
. . அலைக்கழித் திட்டதில்லை-எந்த
மோச நினைப்புமென் மாசில் நெஞ்சினில்
. . முளைத்திட விட்டதில்லை.

சின்னவள் நானொரு வண்ணக் கனவினில்
. . திளைக்கும் வயதினள்தான்-ஆனால்
என்னவோ என்னுளம் சின்ன நினைப்பினை
. . என்றுமே கொண்டதில்லை.

இளமை யுனர்ச்சிகள் இனிமைக் கிளர்ச்சிகள்
. . எழுகிற இளையவள்தான்-ஆனால்
இளமைக் கிளர்ச்சிகள் என்னுள நெருப்பினில்
. . எரிபடும் சருகெனவே.

எங்குளன் இராமனே அங்குளேன் நானென்
. . றியங்கிய இலக்குவனும்-என்றும்
பங்கமி லாதஅப் பரதனின் தொண்டனாம்
. . சத்ருக்க னும்மகன்கள்.

கடைமை பொறுப்பெனும்நெருப்பின் நாக்கினில்
. . கருகிடும் என்னிளமை-என்றன்
உடைமை கற்பெனஓங்கி அறைகுவென்
. . உயர்ந்திடும் என்பெருமை.

இளமை முறுக்கினில் எதையெதை யோசெயும்
. . என்னரும் இளையவர்காள்- உங்கள்
இளமை நிலைத்திடா இன்புகழ் நிலைத்திடும்
. . என்பதை உளம்வையுங்கள்.

அன்பெனில் அன்புதான் அதிலொரு கலப்படம்
. . அணுவும் கலக்காதீர்-தூய
அன்பினில் தெய்வமே அருள்மழை பொழிந்திடும்
. . அதனை மறக்காதீர்.
--------------------------------------

சௌந்தர்

unread,
Jan 11, 2010, 9:09:35 PM1/11/10
to சந்தவசந்தம்
16.0 இளமையின் நிலைமை

. . . . . அங்கதன். . . . .

( கவிஞர் சவகர்லால், விழுப்புரம், 4-8-1985)

பரம்பொருளின் அம்பாலென் தந்தை மாண்டான்
. . பரம்பொருளின் அம்பாய்நான் இலங்கை சென்றேன்
பரம்பொருட்குப் பகையாயென் தந்தை செத்தான்
. . பரம்பொருளின் பகையிடம்நான் தூது சென்றேன்
பரம்பொருளைச் சாகுங்கால் துதித்தான் எந்தை
. . பரம்பொருளை வாழுங்கால் துதிக்கப் பெற்றேன்
பரம்பொருளின் நம்பிக்கை பெற்றே வீரப்
. . பரம்பரைக்குப் பெருமைதந்த இளைஞன் நானே.

அரக்கனைத்தன் வால்நுனியில் கட்டிச் சென்றே
. . ஆகாய வழியெல்லாம் அலைக்க ழித்த
குரக்கினத்து வேந்தனவன் என்றன் தந்தை
. . கொலையுண்டான் இராமன்கை அம்பால்; பொங்கிப்
பெருக்கெடுக்கும் உணர்வோடு தந்தை மேனி
. . புரண்டவன்நான் இராமனையே நிமிர்ந்து பார்த்தேன்
அறக்கடவுட் பெருஞ்சோதி முகத்தில் கண்டேன்
. . அப்போதே அவனடிமை யாகி விட்டேன்.

தந்தைகொன்ற பழிகாரத் தோற்ற மில்லை
. . தருமத்தை வாழ்விக்கும் ஏற்றங் கண்டேன்
சிந்தையொன்றி அக்கடலில் கலக்கக் கண்டேன்
. . தொண்டுசெய்ய என்னையேநான் ஆக்கிக் கொண்டேன்
தந்தையுமே என்கையைப் பற்றி யந்தத்
. . தருமத்தின் கைகொடுக்க உருக லானேன்;
சிந்தையந்த நாயகத்தைச் சேர்ந்த தாலே
. . தந்தைகொலை பெரிதாகத் தோன்ற வில்லை.

ஆனாலும் தந்தையினைப் பார்க்கும் போது
. . அணையுடைக்கும் கண்ணீரை அடக்க லாற்றேன்
மேனாளில் தனியாளாய்க் கடல்க டைந்து
. . மேலான அமிர்தத்தைத் தேவர்க் கீந்தான்;
தேனான அமுதத்தைக் கொடுத்தோன் செத்தான்;
. . தேவரெலாம் வாழ்கின்றார்; இதுவா நீதி?
நானாகப் பலநினைப்பில் புலம்பி நின்றேன்
. . நல்லறத்தைப் பார்த்தவுடன் நெகிழ்ந்து விட்டேன்.


. . . . . . . . (வேறு) . . . . . . . .

கொன்றவன் நின்றான்; ஆங்கே
. . கொலைப்படு மகனோ துன்பாய்
நின்றவன் எனைய ழைத்தே
. . நீட்டிய கையால் தன்னைக்
கொன்றவன் இடத்தி லேயே
. . கொடுக்கிறா னடைக்க லம்மாய்
என்பதை நினைத்துப் பார்த்தால்
. . ஏற்றமே புரிய லாகும்.

தூதென இலங்கை சென்று
. . திரும்பிடத் தேடுங் காலம்
தோதென என்னை யந்தத்
. . தோன்றலே தேர்ந்தெ டுத்த
மேதகு நம்பிக் கையில்
. . மிகமிக உயர்ந்து விட்டேன்
சாதலும் இனிதே அந்தத்
. . தொண்டினில் எனம கிழ்ந்தேன்

வாலியின் மகன்நான் என்ற
. . வாய்மொழி கேட்ட தும்மே
சாலவே மகிழ்வு காட்டித்
. . தன்கையை விரித்து நீட்டி
'ஆளவே அரசு தந்தேன்;
. . அணைத்திட வாராய்; என்றன்
தோழனின் மகனே என்று
. . தூண்டிலை வீசிப் பார்த்தான்.

நாயதா சிங்கத் திற்கு
. . நல்லர சளித்தல்; காட்டுப்
பேயதா அரச னுக்குப்
. . பெருமுடி சூட்டல்; சீச்சீ
போயிதை யாரும் வேறு
. . புல்லனைப் பார்த்துச் சொல்லு!
நாயகன் பாதம் வீழ்ந்தே
. . நற்கதி பெறுவா யென்றேன்.

எனக்கென பயமா அந்த
. . இலங்கையின் வேந்த னுக்குக்
கணக்கிலாத் தலையி ருந்தும்
. . கண்ணெனப் பலவி ருந்தும்
கணக்கினில் தவறி விட்ட
. . குருடனைப் பார்த்துத் தூய
நினைப்பினில் ஒளிரும் தெய்வத்
. . தொண்டனா பயத்தைக் கொள்வான்!

தேவியை விடுகின் றாயா?
. . செருக்களம் தன்னி லுன்றன்
ஆவியை விடுகின் றாயா?
. . அறையடா என்றே அந்தப்
பாவியைக் கேட்டேன்; செய்த
. . பாவமே முற்றும் போது
பாவிகள் குருடாய்ப் போகும்
. . பாங்கினை அங்கே கண்டேன்.

நீதியை அறத்தை அந்த
. . நீசனே அறிய வில்லை
நீதியைச் சொன்ன வர்தம்
. . நெஞ்சமும் உணர வில்லை.
பாதியில் அழிந்து போகும்
. . படுவிதி யவனுக் கென்றால்
மீதியை நிறுத்தி வைக்க
. . முயன்றிடில் யாரா லாகும்!

-------------------------------------

சௌந்தர்

unread,
Jan 14, 2010, 8:52:42 PM1/14/10
to சந்தவசந்தம்
17.0 சித்திர கூடம்

(கவிஞர் சவகர்லால், காரைக்குடி, 19-3-1981)

இயற்கை யரங்கேறி எழிற்கோல நடமாடி
மயக்கும் பேரழகு வாய்ந்த நிலையம்நான்

மேகம் தவழ்ந்துவரும் மின்ன லிடையாடும்
வேகத் துடனிடியோ மனத்தாழம் பார்த்திடிக்கும்

சூல்கொண்ட மேகம் தள்ளாடி நெளிந்துவர
மால்கொண்ட களிறு பிடியெனவே கைநீட்டும்

பசுமை குடியுருக்கும் பரவி அழகிருக்கும்
கசிவு நிறைந்திருக்கும் கட்டழகு நிலைத்திருக்கும்

தூய்மை உறவாகும் துறவுள்ளம் நடமாடும்
வாய்மை நிறைந்தாடும் வளங்கள் குவிந்தாடும்

மேவிய வளத்தினிலே மேனி சிலிர்க்கின்றேன்
தேவர் கைதொழும் சித்திர கூடம்நான்.

மண்னைத் தொட்டாலும் மாப்புகழைத் தரும்கம்பன்
என்னைத் தொட்டபின்னே இளக்கார மாவேனா?

விண்ணை யிடிக்கின்ற மேம்புகழைப் பெற்றுவிட்டேன்
மண்ணி லீடில்லா மனச்செருக்கில் மிதக்கின்றேன்

விண்விட்டு வந்த மேலோன் தந்தைசொல்லால்
மண்விட்டு வந்தென் மடியமர்ந்தான்; நானுயர்ந்தேன்;

தருமத்தை வாழ்விக்கத் தரையிறங்கி வந்தவனுக்(கு)
அருமெத்தை யாகி அகங்களித் தாடுகின்றேன்.

அழகுப் பேரெல்லை யான இருவருமே
பழகி நடமாடும் பெரும்பேறு செய்தவன்நான்.

மருங்கில்லாத் தேவி; வசையில்லாத் தேவன்;
மேவிய சங்கீத மேன்மை சுவைத்திருந்தேன்.

மேவிய வளத்தினிலே மேனி சிலிர்க்கின்றேன்
தேவர் கைதொழும் சித்திர கூடம்நான்.

என்னிடம் வந்தான்; எழில்கண்டான் என்னைத்
தன்னிட மாக்கித் தங்கினான் தனிமுதல்வன்;

தொண்டுக்குப் பிறப்பெடுத்த தூய திருமேனி
அண்ணனுக்குச் சாலை அழகாய் அமைத்திட்டான்.

பாசமெனுங் கால்நட்டுப் பந்தரென அன்பைவைத்து
நேசமெனும் வேலிக்குள் நிறுத்தினான் சாலையினை;

அண்ணல் கண்டான் ஆகா வெனவியந்தான்
என்று கற்றனை நீயிது போலென்றான்

தொண்டுசெய்து அவன்மகிழத் தூய தம்பிசெயும்
தொண்டுகண்டு இவன்மகிழ அவைகண்டு மகிழ்ந்தேன்நான்.

நாள்தோறும் தூயதொண்டும் நற்பண்பும் உறவாட
நாள்தோறும் பெரும்பேற்றை நான்பெற் றுயர்ந்திட்டேன்.

மேவிய வளத்தினிலே மேனி சிலிர்க்கின்றேன்
தேவர் கைதொழும் சித்திர கூடம்நான்.

கைகேயி பெற்ற மகன் கடல்போன்ற படைதொடர
வையகம் அதிரவரு கின்றான் என்னெல்லை;

தொட்டால் வெடிக்கும் சினவெடியாம் இலக்குவன்
பட்டென்று வெடிக்கிறான்; பதறித் துடிக்கிறான்;

வில்லெடுத்துச் சரமெடுத்து வேகத் துடன்கோபச்
சொல்லெடுத்து வீசுகிறான்; துடிப்பின் மறுவுருவம்;

அண்ணன் பாசம் அவன்கண்ணை மறைக்கிறது
பின்னவன் பெருமை புலப்படாமல் மறைகிறது.

பரதனைக் கொன்று பழிதீர்க்கத் துடிக்கும்
உரவோன் செயல்கண்டு உயர்ந்தோன் சிரிக்கின்றான்.

முக்கோணப் பாச முக்கூடல் நடக்கிறது;
அக்கூடற் சிறப்பிற் கடியேன் களமானேன்.

மேவிய வளத்தினிலே மேனி சிலிர்க்கின்றேன்
தேவர் கைதொழும் சித்திர கூடம்நான்.

அரசைப் பெற்றமகன் அய்யய்யோ எனப்பதறித்
துறக்கத் துடித்துத் தோன்றலிடம் வருகிறான்

வேதனைத் திருமகள் விட்டதூ தெனவந்து
நாதனைத் தொழுகிறான்; நானிலம் விழுகிறான்

இலக்குவன் உணர்வலையில் எங்கேயோ போகிறான்
கலக்கியநெஞ்சக் கடலுள்ளே ஆழ்கிறான்

சொல்லும் விழுந்தது; சினமும் விழுந்தது;
வில்லும் விழுந்தது கண்ணீரும் விழுந்தது;

காட்சி மாற்றமொரு கணத்தில் நிகழ்கிறது
மாட்சிமைப் பட்டமன மாசு மறைகிறது.

இத்தனையும் என்றன் மேடையிலே நடக்கிறது
இத்தரையில் அதையெண்ணி உள்ளம் மகிழ்கிறது

மேவிய வளத்தினிலே மேனி சிலிர்க்கின்றேன்
தேவர் கைதொழும் சித்திர கூடம்நான்.

மன்னுயர் தோளினான் மாப்புகழ் தயரதன்
விண்ணடைந்த செய்தி இங்கேதான் தெரிகிறது;

நந்தா விளக்கனைய நாயகன் பிரிவறிந்து
சிந்தா குலராமன் செத்தவன் போல்வீழ்ந்தான்

துன்பம் துடைக்கவந்த தோன்றல் அங்குகொண்ட
துன்பத்தைக் கண்டேன்நான்; துவண்டு நைந்திட்டேன்.

தம்பியர் தேற்றத் தனிமன்ன வர்தேற்ற
வெம்பி நைகின்ற வேதனையைக் கண்டேன்நான்.

மேவிய வளத்தினிலே மேனி சிலிர்க்கின்றேன்
தேவர் கைதொழும் சித்திர கூடம்நான்.

முறையின்றிப் பெற்ற முடியுரிமை அண்ணனுக்குத்
தருதற்குத் துடிக்கிறான் செம்மையின் ஓராணி

எடுத்துக்கொள் அரசையெனப் பரதன் கெஞ்சிநிற்க
எடுத்துநீ ஆள்கவென இராமன் ஆணையிட

ஆட்சிப் போட்டியிங்கே அகம்புறமாய் நடக்கிறது;
ஆட்சி மற்றவர்க்கே அளிக்கிறார் இருவருமே!

நெறிகாக்கத் துடிக்கிறான் பரதன்; தந்தை
உரைகாக்கத் துடிக்கிறான் இராமன்; ஆங்கே

அரசாட்சி தூசாகி அரும்பண்பு வெல்கிறது;
அறந்திறம்பா நெறிகண்டு அகம்பெரிதும் வியந்தேன்நான்.

மேவிய வளத்தினிலே மேனி சிலிர்க்கின்றேன்
தேவர் கைதொழும் சித்திர கூடம்நான்.

முறைதிறம்பா வகையாட்சி மூத்தவனுக் களிப்பதற்காய்
உரைசெய்து பார்த்தான்; உருகியழுது நின்றான்;

இராமன் அசையவில்லை; பரதனோ அறவடிவாம்
இராமன் அடித்தலம் இரண்டையும் வாங்கினான்;

அடித்தலம் முடித்தலம் முறையிற் சூடினான்
அடித்தொண்ட னாயிதற்கே ஆட்படுவே னெனப்போனான்

தமையன் பாதுகையைத் தலைமேலே தாங்கி
அமைவுடன் ஆள்தற்குப் போன திறங்கண்டேன்.

நானறியாப் புதுவியப்பில் நெஞ்சயர்ந்து போய்விட்டேன்
வானறியாப் பெரும்புகழின் வள்ளலை வணங்கினேன்நான்.

மேவிய வளத்தினிலே மேனி சிலிர்க்கின்றேன்
தேவர் கைதொழும் சித்திர கூடம்நான்.

என்களத்தில் நடந்த இணையில்லா நிகழ்ச்சிகளைச்
சொன்னால் நாவினிக்கும்; சிந்தையெலாம் தேனூறும்;

ஆவேசம் எழுகிறது; அழிக்கத் துடிக்கிறது;
பூவாக அதைமாற்றிப் பொறுமை சிரிக்கிறது;

முன்கோபம் பொங்கி மூண்டிங்கே எரிகிறது;
பண்பாளன் அன்பதனைப் பக்குவமாய் அணைக்கிறது;

தியாகத்தின் அறிமுகம் சிறப்பாக நடக்கிறது;
வியாபித்துக் காவியம் முழுதும் கிடக்கிறது;

அன்புக்கு முன்னாலே ஆட்சிபஞ் சாகிறது
பண்பு புகுந்தஇடம் பரதனெனெ ஆகிறது;

பாதுகை பரதன் தலைமேல் அமர்கிறது;
தீதிலா நம்பியின் சிறப்பங்கே உயர்கிறது;

அறமிங்கே நிற்கிறது; அருமைப் பண்புகளின்
திறமிங்கே தெரிகிறது; செம்மை விளைகிறது;

நற்பண்பு வல்லரசின் முக்கூட்டு மாநாடு
சொற்கெட்டாப் புகழோடு சிறப்பாய் நடக்கிறது;

எல்லாச் சிறப்புக்குங் களமாகி நின்றவன்நான்
வள்ளற் பெருமானால் வளைபுகழைப் பெற்றவன்நான்

என்னைப் போற்றுங்கள்; என்றும் நினையுங்கள்
மண்ணில் சித்ரகூடம் மனத்தில் இருத்துங்கள்.
-------------------------------------

சௌந்தர்

unread,
Jan 15, 2010, 9:09:01 PM1/15/10
to சந்தவசந்தம்
18.0 கவிஞர்கள் பார்வையில் கம்பன்

. . . . . ஆசிரியன். . . . .

(கவிஞர் சவகர்லால், விழுப்புரம், 7-8-1988 )


என்பார்வை எப்பொழுதோ பழுதாய்ப் போச்சு;
. . எதனைநான் பார்த்தாலும் அவைக ளெல்லாம்
வண்ணமெனத் தெரிகிறது; பேசு கின்ற
. . வார்த்தையெலாம் நடிக்கிறது; உள்ளே தோன்றும்
எண்ணமெலாம் மறைகிறது; உறவு கொள்ளும்
. . இதயமெலாம் ஒளிகிறது; நன்மை ஏதும்
என்பார்வை தனிலொன்றும் படுத லில்லை;
. . என்னைப்போய்க் கம்பனையே பார்க்கச் சொன்னீர்.

பார்க்கின்றேன்; வான்வெளியில் கவிதை ஏறிப்
. . பறக்கின்றேன்; மீன்களைநான் மாலை யாகக்
கோர்க்கின்றேன்; பதக்கமென நிலவை ஆக்கிக்
. . கொடுக்கின்றேன்; ஆனாலும் அந்தக் கம்பன்
பார்க்கின்ற பார்வையிலோர் சிறுகூ றேனும்
. . பாவியென்றன் பாவுக்குள் வருமா? பின்னே
பார்ப்பதனால் என்னபயன்; கம்ப னைநான்
. . பார்க்கின்றே னென்பதுதான் பயன்வே றென்ன!

வீதிவிட்டுக் கல்லூரி நுழைந்த நேரம்;
. . வெகுநாட்கள் அடைகாத்த பின்னர் ஏதோ
பாதியோ(டு) உடைகிறது; தலையை நீட்டிப்
. . பார்ப்பதுதான் குஞ்சுகளா? குழம்பா? என்று
மீதியையும் பார்த்தால்தான் தெரியும்; இந்த
. . வேதனையில் ஆசிரியர் இருக்கும் போது
மோதிவிழும் சொல்லெல்லாம் கவிதை யாக்கும்
. . மேன்மகனைக் குருவாகப் பார்க்கச் சொன்னீர்!

எனக்கினிய குருவாகக் கம்ப னையே
. . ஏற்றேன்நான்; அன்றாடம் கவிதை யென்னும்
மனக்கணக்கை அவனிடம்தான் கற்பேன்; மொட்டை
. . மலர்விக்கும் வித்தையினை அவன்தான் சொன்னான்.
நினைப்பினிலே கருக்கொண்டு கவிதைப் பேற்றை
. . நிகழ்த்துகின்ற ஆற்றலினை அவன்தான் தந்தான்
மணக்கின்ற சொல்லாலே மாலை கட்டும்
. . மாமாய வல்லமையை அவன்தான் தந்தான்.

இல்லறத்தில் எனைவந்து மோது கின்ற
. . இடர்கண்டு நைவேன்நான்; கம்ப நாடன்
வில்லறத்து வீரரினைக் காட்டி அன்னார்
. . விளையாட்டாய் வெல்லுகின்ற திறத்தைச் சொல்வான்
கல்லாகிப் போய்விட்ட இதயங் கண்டு
. . கலங்குவேன்நான்; இராகவன்தன் பாதம் பட்டுக்
கல்கனிந்து காரிகையாய் மலர்ந்து வந்த
. . கதைசொல்லி என்னுள்ளம் கவர்ந்து நிற்பான்.

சாதியெனும் நெருப்பலைதான் வந்து மோதும்
. . சங்கடத்தில் நோவேன்நான்; அன்பி னாலே
மோதிநெஞ்சை உடைத்தனுள் புகுந்து நின்ற
. . வேட்டுவன்தான் தம்பியான கதையைச் சொல்வான்.
நாதியிலா ஏழைகளின் வாழ்வி லென்றும்
. . நல்லனவே வாராதா எனநை வேன்நான்.
கோதில்லாக் குணக்குன்றாம் சபரி தன்னைக்
. . குறிப்பாகக் காட்டிநெஞ்சம் கொள்ளை கொள்வான்.

கொடுமனத்துக் கைகேயி கூனி செய்த
. . கொடுமையினைக் குறிப்பேன்நான்; அவர்கள் செய்த
கொடுமைதானே அரக்கரினை அழித்த தென்று
. . குறிப்பாகக் காட்டிடுவான் அமைதி கொள்வேன்.
வடுப்பட்ட வினையன்றோ அந்த வாலி
. . வதையென்பேன்; இல்லையில்லை; முள்ளை முள்ளால்
எடுக்கின்ற செயல்திறந்தான் என்பான்; அந்த
. . இனியமகன் வாலிகூற்றைச் சான்றாய்ச் சொல்வான்.

அரக்கனவன் ஆற்றலினை வியந்து பார்த்தே
. . அழிந்ததுவே ஆற்றலெலாம் என்று சொல்வேன்
நெருப்பையவன் பஞ்சுக்குள் சிறைவைத் திட்டான்
. . நெருப்புக்கா அழிவுவரும்; அழிந்தான் என்பான்.
விருப்பிலவன் எல்லையினைத் தாண்டி விட்டால்
. . மின்னலுக்குச் சேதாரம் வருமா என்பேன்.
நெருப்பையொரு கரையானா அரிக்கக் கூடும்
. . நினைப்பெழுந்த கணத்தேயே அழிந்தா னென்பான்.

---------------------------------------------
குறிப்பு: சில கவிதைகளில் விளாங்காய்ச் சீர்கள் விரவி வருவதைப்
பார்க்கிறேன். 70-80 களில் இணையம் என்ற அமைப்பு இல்லாததாலும், மேலும்
கவியரங்கங்களில் கையிலேந்தி வந்த கவிதைகளைக் கவிஞர்கள் படிக்கும்போது
ஒருமுறையே கேட்க முடிந்ததாலும், கேட்போர் பின்னர் அசையிட்டு அனுபவிக்க
வாய்ப்பு இல்லாமலிருந்ததால், இதுபோன்ற விளங்காய்ச்சீர்கள் வருவதை
யாவராலும் விமரிசிக்க இயலாமல் போயிருக்கும். இந்நாளில் கவிதைகள்
எழுத்துருவில் இணையங்களில் வருவதால் கவிதையைப் படிப்போர் கருத்துச் சொல்ல
வசதியாக இருக்கிறது.
மேலும் இங்கே இடவிருக்கும் கவிதைகளிலும் விளாங்காய்ச் சீர்கள் வருவதைக்
காண்கிறேன்.

thangamani

unread,
Jan 16, 2010, 2:33:44 AM1/16/10
to சந்தவசந்தம்
//மேவிய வளத்தினிலே மேனி சிலிர்க்கின்றேன்
தேவர் கைதொழும் சித்திர கூடம்நான்.//

//எடுத்துக்கொள் அரசையெனப் பரதன் கெஞ்சிநிற்க


எடுத்துநீ ஆள்கவென இராமன் ஆணையிட
ஆட்சிப் போட்டியிங்கே அகம்புறமாய் நடக்கிறது;
ஆட்சி மற்றவர்க்கே அளிக்கிறார் இருவருமே!
நெறிகாக்கத் துடிக்கிறான் பரதன்; தந்தை
உரைகாக்கத் துடிக்கிறான் இராமன்; ஆங்கே
அரசாட்சி தூசாகி அரும்பண்பு வெல்கிறது;

அறந்திறம்பா நெறிகண்டு அகம்பெரிதும் வியந்தேன்நான்//

உணர்ச்சிகள் போட்டியிடும் களம்!
பாசமும்,பிரிவின் வலியும்,
அன்பின் வெளிப்பாடும்,பண்பின் நிலைப்பாடும்
அறத்தின் நெறியழகும் தியாகத்தின் பிறப்பிடமும்
இணைந்த உன்னத சந்திப்பு!
நிகழ்ந்த சித்திரக்கூடக் களத்தினை வணங்குவோம்!

கவிஞர் ஜவஹர்லால் அவர்களுக்கு,வணக்கம்!
கவியழகும்,கருத்தழகும்,சொல்லழகும் போட்டியிட எளிய
தமிழிலே இத்துணை சிறப்புறப் படைத்தமைக்கு
என் சிரம்தாழ்ந்த வணக்கம்.
தட்டச்சு செய்து இங்கிட்ட அன்பு சௌந்தருக்கு
என் மகிழ்வான பாராட்டுகள்!வாழ்த்துகள்!!

அன்புடன்,
தங்கமணி.

> read more »...

srinivasan s

unread,
Jan 16, 2010, 3:00:50 AM1/16/10
to santhav...@googlegroups.com
 இங்கு சற்று மாற்றம். அங்கு, தந்தை தர, மகன் ஏற்க மறுத்தான். இங்கு தந்தை எப்போது தருவாரோ என்று காத்து நிற்கிறான். அங்கு தம்பிக்கு விட்டுக் கொடுத்தான் அரச பரிபாலனத்தை. இங்கு, தம்பியிடமிருந்து அரசை எப்போதும் தட்டிப் பறிக்கக் கூடிய தனயன்.
காலம் முழு சுற்றுப் பெறுகிறது. வட்டமிடும் காலத்தில் சிக்கிக் கொண்டுள்ளோம் மக்கள் நாம்.
அன்பில் சீனிவாசன்

2010/1/16 thangamani <tvthan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
S. Srinivasan
F/4, Godavari Block,
SSM Residency,
Moppedu Road, Alapakkam,
New Perungalathur,
Chennai-600 063
Phone No: 044-2279 2334
Mob:+919971079484
vasan...@gmail.com
vasan...@yahoo.com

Kaviyogi Vedham

unread,
Jan 16, 2010, 3:52:02 AM1/16/10
to santhav...@googlegroups.com
ரொம்ப அழகாக உணர்ச்சியுடன் படைத்துளார். ஜவஹர்.. வாழ்க!
யோகியார்

2010/1/16 thangamani <tvthan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
யோகியார். வேதம்.

அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-41(போன் 64565979)-
*****************************
Pl. donate liberally to Our Yogasrama Annadhanam and Valarchchi Nidhi-
2)-Pl. visit us to learn yoga, Pranic healing, Inner chakra meditation to avoid Any Disease!
3)-Pl. come by appointment For Babaji AruLvaakku(ph.64565979)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 16, 2010, 8:07:08 AM1/16/10
to santhav...@googlegroups.com

அன்புள்ள சௌந்தர்,

கவிமாமணி சவகர்லாலின் கம்பன் பொழில் என்னும் அற்புதக் காவியத்தைப் படித்து நீங்கள் மகிழ்ந்தது மட்டுமன்றிப் பிறருக்கும் அந்த வாய்ப்புக் கிட்ட வேண்டும் என்ற பெருநோக்கில் அதை இங்கு இட்டுவரும் பணியைப் பெரிதும் பாராட்டுகிறேன். கம்பன் பொழிலை விடுமுறை நாட்களில் தட்டச்சுச் செய்ய ஆரம்பித்த நீங்கள் விடுமுறை கழிந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் தொடர்வது உங்கள் மனத் திண்மையையும் படித்து வருவோரின் அதிர்ஷ்டத்தையும் காட்டுகிறது.

நீங்கள் சொல்வது போல் விளாங்காய்ச் சீர்கள் வந்துள்ளன. அவற்றைச் சரிசெய்வது எளிது என்றாலும், கவிஞரின் மனஓட்டத்தில் வந்து விழும் சொற்பிரவாகத்தின் துடிப்பில் அவை குறையாகத் தோன்ற மறுக்கின்றன! மேலுள்ள பகுதியில் ‘ கோர்க்கின்றேன்’ என்பது கோக்கின்றேன் என்றிருக்க வேண்டும்; எதுகைக்காகப் பேச்சு வழக்கைப் பின்பற்றியதாகக் கொள்ளலாம்.

அனந்த்
17-1-2010 
 

2010/1/15 சௌந்தர் <rsou...@gmail.com>

சௌந்தர்

unread,
Jan 17, 2010, 12:26:25 PM1/17/10
to சந்தவசந்தம்
19.0 கம்பன் கற்பகத் தரு

. . . . . தருமம். . . . . .

(கவிஞர் சவகர்லால், புதுக்கோட்டை, 28-7-1985 )

தருமத்தைக் காப்பாற்ற வந்த ராமன்
. . தாரத்தைக் காப்பாற்றத் தவறி விட்டான்
தருமத்தின் நடைபாதைத் துன்ப மெல்லாம்
. . தாரணிக்குக் காட்டிடவே நடந்தான் ராமன்
தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்,
. . தருமமறு படிவெல்லு மென்று சொல்லத்
தருமத்தை வில்லோடு நடக்க விட்டச்
. . சுவையான கதைசொன்னான் கம்ப நாடன்.

கங்கைநதி வேடனையும் தம்பி யென்றான்
. . காட்டில்வாழ் குரங்கினையும் தம்பி யென்றான்
பொங்கிவரு மறவுணர்வால் வந்து சேர்ந்த
. . புத்திலங்கை அரக்கனையும் தம்பி யென்றான்
எங்கணுமே அன்புவெள்ளம் பெருக்கெ டுக்க
. . இருகையால் அருள்வழங்கித் தருமம் என்றும்
மங்கிவிடா வகையினிலே காத்து நின்ற
. . மாவீரன் அறங்காத்த வள்ள லன்றோ.

இல்லையென்பார் அங்கில்லை; ஆத லாலே
. . இருப்பார்க ளங்கில்லை; பார்க்கும் கண்ணாம்
கல்வியிலார் அங்கில்லை யாத லாலே
. . கற்றரவர்க ளங்கில்லை; என்று பாட்டிற்
சொல்லியொரு சமஉடைமைச் சமுதா யத்தைச்
. . சுட்டுகிற கம்பநாடன் சிந்தை கண்டால்
நல்லதொரு பெருந்தரும நெறியை நாட்டில்
. . நடக்கவிடுந் துணிவென்றே போற்றக் கூடும்.

நம்பிவந்த மனைவியவள் கைய ணைப்பில்
. . நடந்துவரும் போதினிலும் சுற்றிச் சுற்றி
நம்பியவன் கண்வலையோ மீனைத் தேடும்
. . நாட்டினிலே பொருள்வசதி வந்து விட்டால்
தெம்போடு சின்னவீடு பலவாய்க் காணும்
. . திருவிளையா டல்களையே பார்க்கும் நாட்டில்
எம்பிரானை நடக்கவிட்டே ஓரில் என்னும்
. . இனியஅறங் காட்டியவன் கம்ப நாடன்.

பண்பாட்டைக் குழிதோண்டிப் புதைத்து விட்டுப்
. . பதவியாசைப் பேயாக ஆடு வோரே
கண்பட்ட இடமெல்லாங் காணு கின்றார்;
. . கழிவடைந்தப் பேட்டையென நாட்டை யாக்கிப்
புண்பட்டுப் புரையோடி நாடு சாகப்
. . புத்தாட்டம் போடுகின்ற நம்மி டையே
பண்பாட்டுச் சிகரத்தை இராமன் என்று
. . படைத்தானே அதுதருமப் படைப்புத் தானே.

தருமத்தின் கால்வீச்சில் கிளம்பும் தூசி
. . தெருக்கல்லைப் பெண்ணாக்கிச் சிரிக்க வைக்கும்
தருமத்தின் வாள்வீச்சில் மின்னும் கீற்று
. . சண்டாளர் கூட்டத்தைத் தொலைத்து நிற்கும்
தருமத்தின் வாய்ப்பேச்சில் பொங்கும் அன்பு
. . தனிக்காட்டு வேடனையே தம்பி யாக்கும்
தருமத்தை நடக்கவிட்டே மேன்மை காட்டும்
. . தனியாற்றல் நாயகனே கம்ப நாடன்.

மறுத்துரைக்கும் எதிரியினைத் தூங்கும் போது
. . மாறுகையும் மாறுகாலும் வாங்கி விட்டுச்
சிரித்துநிற்கும் மாண்புகளே திகழும் நாட்டில்
. . தினந்தோறும் பூபாளம் கொலைகள் தானே!
செறுத்துநிற்கும் அரக்கனொரு படையு மின்றித்
. . தனியாளாய் நிற்கின்ற கோலங் கண்டு
சிரித்துநின்றே இன்றுபோய்நீ நாளை வாராய்
. . என்றுசொன்ன தருமத்தை என்று காண்போம்.

------------------------------------

Siva Siva

unread,
Jan 17, 2010, 12:53:51 PM1/17/10
to santhav...@googlegroups.com
இன்றைய அவலங்களையும் சாடுகின்ற அருமையான பாடல்கள்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2010/1/17 சௌந்தர் <rsou...@gmail.com>

சௌந்தர்

unread,
Jan 18, 2010, 7:48:01 AM1/18/10
to சந்தவசந்தம்
20.0 கம்பன் நெறியில் --பண்பாடு

(கவிஞர் சவகர்லால், காரைக்குடி, 29-3-1980 )


எங்கும் பண்பழிந்தே இருக்கின்ற நிலைமையினை
அங்கம் அங்கமாகக் கம்பன் அறிந்திட்டான்

வேதனைப் பெருமூச்சை வெளியிட்டே அந்தச்
சாதனைக் கவிதைமகன் சலிப்படைந்து புலம்புகின்றான்

அழுகின்ற கம்பன் அழுகுரலைக் கேட்டிங்கே
அழுவதற்கே வாருங்கள்; அழுகையினைக் கேளுங்கள்.

இந்தப் பிறவியிலே இருமா தரைநெஞ்சிற்
சொந்த மெனக்கொள்ளாத் தூயவனைப் படைத்தேன்நான்.

இன்றந்தக் கற்புநெறி எங்கே இருக்கிறது?
கண்கள் பலபெண்ணைக் கற்பழிப்புச் செய்கிறது.

பண்பாடு எங்கோ பதுங்கிப் போய்க் கிடக்கிறது
புண்பட்ட அறமங்கே புலம்பித் தவிக்கிறது

கங்கை வேடனையுங் காட்டுக் குரங்கினையும்
(இ)லங்கை அரக்கனையும் இராமனுக்குத் தம்பியென்றேன்

சாதிச் சுவரில்லை தரம்பிரிக்குங் கேடில்லை
பாதிப்பொன் றில்லாமற் பண்பாடு கொஞ்சியது

சாதிக் கொடும்பேயின் சதிராட்டம் நடக்கிறது
மீதிப்பேய் தாளம் போட்டுச் சிரிக்கிறது

சமுதாயத் தோட்டத்தில் சாதிப்பூ மணக்கிறது
சமுதாய்ச் சாக்கடையில் சாதிப்பூ வாமணக்கும்?

வேடக் குகனோடு வித்தகராம் அத்திரியும்
நாடிச் சுவைத்தளித்த நல்லமகள் சபரியும்

விருந்தோம்பிக் குன்றின்மேல் விளக்காக ஆனார்கள்
விருந்தோம்பல் இன்றிங்கே எங்கே இருக்கிறது?

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்க்கின்ற
நல்லறந்தான் சிவப்புவிளக் கெல்லையில்தான் நடக்கிறது


. . . . . .(வேறு). . . . . . .

கலையழகு கொஞ்சுகின்ற காவி யத்தைக்
. . கைப்பிடிப்பான்; பாடங்கள் படிப்பான்; அந்தச்
சிலையழகு கொஞ்சநாளில் கசக்க வேறு
. . சின்னவீடு பார்த்திடுவான்; மனையாள் தன்னை
நிலைகுலைய அழித்திடுவான்; இந்தச் செய்தி
. . நாள்தோறும் படிப்போர்க்குச் சீதை யென்னும்
சிலைகடத்தப் பட்டபின்னே அவளுக் காகச்
. . சிலையிராமன் பட்டதுயர் மறக்கப் போமோ.

படித்திடுவார் இராமகாதை; படித்து விட்டுப்
. . பண்புகளைப் புறக்கணித்தே வேகத் தோடு
இடித்திடுவார் பெருமாளின் ஆல யத்தை
. . இதுதானே நடப்பிங்கே! சீதா என்றே
துடித்திட்ட இராகவனின் துடிப்பு கண்டும்
. . துணையாக வந்தவளைத் துன்பு றுத்தித்
துடிக்கவைக்கத் தயங்குவதே இல்லை; தீயால்
. . சுடுவதற்குத் தோல்கண்டார் தோல்கண் டாரே.

அழுகின்ற நெஞ்சங்கள் அழகாகச் சிரிக்கட்டும்
பழகுதமிழ்நாட்டுப் பண்பாடு சிறக்கட்டும்

பட்டமரந் தளிர்க்கட்டும்; பழம்பழுத்தே தள்ளட்டும்
கெட்டமனந் திருந்தட்டும்; கேடெல்லா மொழியட்டும்

பாதைகெட்ட பயணங்கள் பட்டென்று நிற்கட்டும்
பாதை தெரிந்தஅறப் பயணங்கள் தொடரட்டும்

நல்லோர்க்கு வாழ்வு கதவந் திறக்கட்டும்
அல்லார்க்குக் கதவம் அன்றே அடைக்கட்டும்

இராமன்கள் பிறக்கட்டும் சீதைகள் வாழட்டும்
இராமனுக்குத் தொண்டு செய்ய இலக்குவன்கள் துடிக்கட்டும்

பண்பாடு சிறக்கட்டும்; புகழ்ப்பாதை திறக்கட்டும்
மண்மீது தமிழ்ப்பண்பின் மேன்மை உயரட்டும்

----------------------------------------

சௌந்தர்

unread,
Jan 19, 2010, 6:32:54 AM1/19/10
to சந்தவசந்தம்
21.0 கம்பன் கவிச்சோலைக்குள்ளே

. . . . . மலையின் உயர்ச்சி. . . . .

(கவிஞர் சவகர்லால், புதுக்கோட்டை, 27-7-1980)

சொல்லை மலையாக்கிச் சொக்கவைக்கு மிந்தக்
கல்விக் கடல்வீச்சிற் காண்பதெலாம் மலைதானே!

சொற்சுவையும் பாடல் தொடையின் பெருஞ்சிறப்பும்
நற்கவிதை உயர்வும் நன்மலையாய் உயர்கிறது

பண்பாடும் வாழ்க்கைப் பெருங்குணமும் நல்லொழுங்கும்
பண்ணியைந்த பாட்டிற் பெருமலையாய் நிற்கிறது

அந்த மலையின் அருமை எதிரொலியை
இந்தக் கவியரங்கில் என்பாட்டிற் காட்டுகிறேன்.

பார்க்கும் இடமெல்லாம் பண்பாட்டு நொறுங்கல்கள்
நோக்குந் திசையெல்லாம் நேர்மைச் சிதறல்கள்

இந்த வேதனையில் என்னெஞ்சம் மூழ்குகையில்
வந்தேன் கம்பனவன் கவிச்சோலைக் குள்ளேநான்

சோலைக்குள் கவிநுழைந்தால் அடடா வோஅந்தச்
சோலைச் சுகத்தையெந்தச் சொல்லில் நான்சொல்வேன்

சொல்லழகில் என்றன் சிந்தை நனைகிறது
வில்லழகன் சிறப்பில் மேனி குளிர்கிறது

தலையோ நிமிர்கிறது; தமிழ்நெஞ்சங் குளிர்கிறது;
மலையின் உயர்ச்சியிலே மனசுபறி போகிறது;

கிளைவிட்டுக் கிளைதாவும் படலங்கள் இன்று
கலையாக நடக்கிறது; கொள்கை பறக்கிறது

நனைத்தகை காயுமுன்பே நாக்குப் புரள்கிறது
நினைத்தவுடன் நாடகத்தில் புதுக்காட்சி பிறக்கிறது

நன்றிக்குப் பொருளின்று நாட்டில் மறைகிறது
சொன்னால் புரியாத தத்துவமாய் ஆகிறது

கும்ப கருணனெனும் நன்றிப் பேருருவைக்
கம்பன் காட்டுகிறான்; கைகள் குவிகிறது

தலையோ நிமிர்கிறது; தமிழ்நெஞ்சங் குளிர்கிறது;
மலையின் உயர்ச்சியிலே மனசுபறி போகிறது;

அணைத்த கையோடு அகமுடையாள் வரும்போதே
இணைவிழிகள் கடைவீதி எல்லாம் மேய்கிறது;

கண்ணாலே கற்பழிக்கும் காம விற்பனர்கள்
பெண்ணுக்கு மட்டும் பேசிவைத்தார் கற்பதனை;

இந்தப் பிறவியிலே இருமா தரைநெஞ்சிற்

சொந்த மெனக்கொள்ளாத் தூயவனைக் கண்டென்றன்

தலையோ நிமிர்கிறது; தமிழ்நெஞ்சங் குளிர்கிறது;
மலையின் உயர்ச்சியிலே மனசுபறி போகிறது;

பின்னிருந்து தாக்கிக் கொன்று பழிவாங்கும்
வன்மனந்தான் இன்றைக்கு வாழ்வில் உயர்கிறது

இராவணன் படையிழந்தான்; எதிரில் நிற்கிறான்
இராமன் பார்க்கின்றான் இதயம் நெகிழ்கின்றான்

இன்றுபோய்ப் போர்க்கு நாளைவா எனச்சொல்லி
அன்போ டனுப்புகிறான். அப்பண்புக் கீடேது?

போர்க்களத்தும் அறம்படைத்த பண்புயர்வைக் காண்கின்றேன்.

தலையோ நிமிர்கிறது; தமிழ்நெஞ்சங் குளிர்கிறது;
மலையின் உயர்ச்சியிலே மனசுபறி போகிறது;

அண்ணன் தம்பியென அணைத்துக் கிடப்பார்கள்
பின்வந்து பெருங்குழியைத் தோண்டிப் புதைப்பார்கள்

உடன்பிறப்புத் தோழர்கள் உருவாக்கும் சதிச்செயலில்
உடன்பிறந்தே கொல்கின்ற நோயும் புறங்காணும்

ரத்தத்தின் ரத்தங்கள் நாள்தோறும் மோதிச்
செத்துத் தொலைப்பார்கள்; சரித்திரம் படைப்பார்கள்;

பண்பாட்டைப் புதைப்பார்கள்; பதைக்காமல் அவரவர்கள்
தன்பாட்டைப் பார்ப்பார்கள்; தன்னலத்தில் மூத்தவர்கள்.

ஆட்சிப் போட்டியிலே அறுபடுந் தலைகட்குச்
சாட்சியும் வேண்டுமோ; சரித்திரமே அதுதானே

ஏறிவிட்ட பேரை இறக்குதற்கும், தானாட்சி
ஏறுதற்குந் தானே இயங்குதிங்கே அணியெல்லாம்

கம்பன் சோலையிலோ காட்சிகள் மாறிப்போய்ச்
செம்பொன்னாய் ஒளிர்கிறது; சிறப்பாய் மிளிர்கிறது

பரதனுக் காட்சியினைப் படைத்துப் பார்க்கவெனப்
பெரிய உயிர்போக்கிப் பெற்றிட்டாள் கைகேயி.

அந்த ஆட்சியினை அடச்சீ எனஒதுக்கி
நொந்துபோய் இராமனிடம் நெஞ்சங் கதறினான்

பொறுப்பில் அமராமல் இராமன்தன் பாதுகையை
பொறுப்போடு ஆளவைத்தான், தொண்டனாய் அவனானான்

அன்புப் பரதன் அரும்பண்பு மலையுச்சி
நின்று சிரிக்கிறது; நினைவில் இனிக்கிறது.

தலையோ நிமிர்கிறது; தமிழ்நெஞ்சங் குளிர்கிறது;
மலையின் உயர்ச்சியிலே மனசுபறி போகிறது;

மூக்கறுந்த நங்கை மோகவல்லி சூர்ப்பனகை
நாக்கில் தெறித்ததெலாம் நல்லமுதச் சுவைத்துளிகள்

சாதுரிய வட்டம்; சதுரங்க மாயவலை
மாதவள்தோற் றாலென்ன! மயக்கமின்றும் வருகிறது.

நாணத்துக் கோர்வடிவாய் நங்கை நின்றதுவும்
கோணிப்போய்க் காமக் குறிப்பைச் சொன்னதுவும்

மூக்கிழந்த வேகத்தில் மூத்தவனாம் இராவணனை
வாக்கால் வீழ்த்தியதும் வடித்தெடுத்த சுவைக்குவியல்.

தலையோ நிமிர்கிறது; தமிழ்நெஞ்சங் குளிர்கிறது;
மலையின் உயர்ச்சியிலே மனசுபறி போகிறது;

----------------------------------------

சௌந்தர்

unread,
Jan 20, 2010, 6:13:37 AM1/20/10
to சந்தவசந்தம்
22.0 கம்பனில். . . கடமை

(கவிஞர் சவகர்லால், சேலம், 17-1-1982)

சொத்துப் பிரிவினையில் சொந்தத் தகப்பனையே
குத்திக் கொலைசெய்யும் கொலைகாரர் ஏராளம்

இந்தச் சூழ்நிலையில் இனிய தமிழ்க்கம்பன்
தந்த கதைகண்டால் நெஞ்சம் இனிக்கிறது.

முடிசூட நாளை 'வாமகனே' என்றழைத்தான்
நடைபோட்டுச் செம்மாந்து இராமன் நடந்துவந்தான்

முடியில்லை காடாளப் போமகனே என்றுசொன்னான்
தடையின்றி மகிழ்வோடு தங்கமகன் நடந்துசென்றான்

தந்தையின் சொற்காக்கும் கடமையின் முன்னாலே
இந்தப் பேரரசு எனக்குச் சிறுதூசு;

என்றெழுந்து காடுசென்ற இராமன் கடமையினை
இன்றைக்கும் நினைக்கையிலே இதயம் இனிக்கிறது

அன்றலர்ந்த செந்தா மரையினை வென்றமுகம்
நின்று கடமையினை நெஞ்சில் பதிக்கிறது.

அண்ணன் சொல்லை அவன்தம்பி கேட்பதில்லை
எண்ணத்தில் பணிவோ என்றும் இருப்பதில்லை.

பிஞ்சிலே மூத்துப் பெரியவனுக் கறிவுரைகள்
அஞ்சாமற் கூறும் தம்பிகளே ஏராளம்

கம்பன் சோலையிலே புதுக்காட்சி விரிகிறது
அன்பிற் குளித்தெழுந்த தம்பிமூலம் தெரிகிறது

மண்ணாளும் வாய்ப்பிழந்து வனமாள வந்தமகன்
எந்நாளும் தனையாள அவன்தொண்டில் இவன்கரைந்தான்

தன்மேனி நிழல்கூடத் தன்னடியில் மறைவதுண்டு
அன்புரு வானதம்பி அண்ணனைப் பிரிந்ததில்லை

தூங்காத கண்கள் துவளாத தொண்டுள்ளம்
ஏங்காத உணர்வுகள் இளைக்காத பெருவீரம்

துடிப்புடைய வீரன்செய்திட்ட கடமையினைத்
தொடுத்து நினைத்தாலே தழைக்கிறது நம்நெஞ்சம்

நெருப்பாகிச் சீறிடுவான்; அண்ணனெனும் நீரில்
நெருப்பவியத் தன்னெஞ்சப் பூவையவன் கால்வைப்பான்;

தம்பிக்கு வராத சோதனையா? மாயமானை
நம்பிச் சென்றதனால் நடந்தவை போதாதா?

நெருப்புக்குள் குளித்தெழுந்து சுடர்விடுந் தங்கம்போல்
விருப்பமுடன் சோதனையுள் சுடர்விட்டான் இலக்குவன்தான்

அன்புருவம் இலக்குவன்செய் அருங்கடமைத் திறம்நந்தம்
என்புருகச் செய்கிறது; இதயம் நிறைக்கிறது.

அங்கே ஒருதம்பி அண்ணனைப் போல்வீரன்
கங்குகரை யில்லாத கடமை யுணர்வுடையான்

தூங்கி யெழுந்தமகன் 'தோன்றியதா போரெ'ன்றான்;
வாங்கிவந்த வினைபழுத்து விட்டதா எனக்கேட்டான்.

குலச்சிறுமை செய்தாய்; விட்டுவிடு சானகியை
அழித்துக் கொள்ளாதே எனச்சொன்னான் ஏறவில்லை

ஆனவரை சொல்லிப் பார்த்துவிட்டே இனியிங்கே
தானவனுக் காற்றும் கடமையில் தெளிந்திட்டான்.

நெருப்பினைக் காதலித்து நீளிலங்கை வைத்திட்டே
உருக்குலைந்தே அழியப்போம் உடன்பிறப்பை உணர்ந்திட்டான்

தடுக்க வழியில்லை; தமையன் திருந்தவில்லை
படைக்கலம் பூண்டு பலியாக முடிவுசெய்தான்

போர்க்கோலம் பூண்டுவிட்ட அண்ணனுக்காய்க் கும்பகன்னன்
போர்க்களத்தில் மாண்டு புகழ்நிறுத்திச் சென்றிட்டான்

அண்ணன் வழிதவறென் றறிந்தபின்னும் அவனுக்காய்த்
தன்னுயிரைத் தந்ததம்பி கடமையை வியக்கின்றோம்

அறமெடுத்துச் சொல்லி அழிந்திட்ட அவன்கடமைத்
திறங்கொண்டு நெஞ்சம் திளைத்து மகிழ்கிறது.

வாலியெனும் சுடுநெருப்பு வதைக்காத மலையில்போய்
காலமெலாம் சிறையிருந்தான் அவன்தம்பி சுக்கிரீவன்;

தாரத்தைத் தனதாக்கித் தம்பியைக் கொல்லுதற்குத்
தாரை நாயகன் கொதிப்பேறி நின்றிட்டான்;

சொல்லின் செல்வனெனும் சுந்தர அனுமன்தான்
நல்லமைச்ச னாகி நாயகனைக் காக்கின்றான்;

துணைதேடி நல்ல துணைதேடி வந்தவரைத்
துணையாகச் சேர்த்துச் சுக்கிரீவ னைக்காத்தான்;

அரசனுக் கவனாற்றும் அருமைக் கடமையின்
திறனறிந்து நெஞ்சம் திளைத்து மகிழ்கிறது.

கூனியவள் செயல்கூடக் கொடுமையாய்த் தெரிந்தாலும்
இராணிக்குச் செய்திட்ட கடமைநிலை ஏற்றதுதான்.

நீரற்ற பாலை நெடுவழியில் தவிக்கையிலே
நீரூற்று, சோலைநிழல் நிறைந்து காணுதல்போல்

சமுதாயப் பாலைவழித் தவிப்புப் பயணத்தில்
அமைவுடைய கம்பன் அருநிழலாய்த் திகழ்கின்றான்

கடமைத் திறனாற்றிக் கவிதையில் நிற்பவர்கள்
படமாக விரிந்து பாடமாகத் தெரிகின்றார்.

அழகான கம்பன் அருமைக் கவிதையிலே
பழகிவரும் உள்ளம் பண்பிலே தவறாது.

--------------------------------------------

சௌந்தர்

unread,
Jan 21, 2010, 8:58:23 PM1/21/10
to சந்தவசந்தம்
23.0 கம்பன்--கலைவளம்

(கவிஞர் சவகர்லால், தேரழந்தூர், 7-4-1974)

வான்மீகக் கதையெடுத்தான்; வளர்ப்பதிலோர் முறைவகுத்தான்
தான்என்றும் நிற்கின்ற தனிமுத் திரைபதித்தான்.

ஆனவரை தமிழ்ப்பண்பின் அடிசருக்கா வகைகாத்தான்
தேன்சுவையின் திருப்பங்கள் தேவையுள இடத்தமைத்தான்.

நான்என்னும் அகந்தைரத்த நாளமெல்லாம் கலந்துவிட்டால்
வானளவு கொடுமை வளர்த்துவிடும் அந்தரத்தம்.

தானெடுத்துக் குடல்சரித்துத் தூய்மைசெயக் கம்பத்தில்
தான்வெடிக்கும் நரசிங்கம், கம்பனவன் கலைப்படைப்பு.

தொட்டிழுத்தால் தமிழ்ப்பண்பு தூளாகிப் போகுமெனச்
சுற்றியுள்ள இடத்தொடு தூக்கிடவே இராவணனை

விட்டகதை தமிழ்த்தூய்மை காத்தகதை; அந்தஇடம்
எட்டமுடி யாப்பெருமை இன்கம்பன் கலைப்படைப்பு.

அறமுணர்ந்த நெஞ்சங்கள் அகங்கலந்து வாதிடுங்கால்
அறமில்லை யென்றுணர்ந்தும் அண்ணனுக்கே சாகின்றேன்

வரமாட்டேன் கும்பிட்டு வாழகில்லேன் என்றுசொன்ன
திறத்தாலே வாழ்கின்ற இடம்கம்பன் கலைப்படைப்பு.

. . . . . . . . (வேறு). . . . . . . .

மலையுருவிச் செல்வதுபோல் இராம னம்பு
. . மார்புருவிச் செல்லுவதைப் பிடித்தி ழுத்து
நிலையுருக மறைந்தெய்த வேந்தே பிரிவால்
. . நீயுருகில் போனாயோ பிழைத்து விட்டாய்
சிலையுருவாம் சீதையினை மீட்க வேண்டின்
. . செய்வேனே நொடிக்குள்ளே 'எனப்பு லம்பி'
மலையுருக மரமுருகப் பேசும் வாலி
. . மூலத்தை விஞ்சுகின்ற கலைப்ப டைப்பு.

. . . . . . . . (வேறு). . . . . . . .

. . . . . . . . அரசியற் கலை. . . . . . . .

பேசாத இராமச் சந்திரனைக் கலைஞனிவன்
பேசவைத்தான் அரசியலைப் பேசுகிறான் தெளிவாக.

காசினியி லாட்சி கைப்பற்றி விடலாம்பின்
தூசாகிப் பறக்காமல் தாங்குவது தான்பெருமை;

அரசியலிற் பூனை யானையென்றே எவருமில்லை
தரங்குறைத்துப் பார்த்துத் தடுமாறித் தவிக்காதே;

சிறியவனும் பொருள்வளத்தால் சிறந்திருக்கும் சீமானும்
தரத்தினிலே ஒன்றாவார் தாங்குகின்ற மன்னனுக்கே;

சிறுதூசே யென்றாலும் கண்ணில் விழுந்துவிட்டால்
உறுத்துங்காண்; கூனிகதை மறக்காதே என்றும்நீ;

உருவாகும் தீயவரை உடனே பொசுக்கிவிடு
பெரிதாகும் தீயெச்சம்; பின்னிருந்து தவிக்காதே!

என்றெல்லாம் சுக்கிரீவற் கெடுத்துரைக்கும் அரசியலில்
நன்றாகக் காண்பதெது; இராமன் புகழதுவா!

பொன்றாத கம்பன் புகழன்றோ தெரிகிறது
வென்றொளிருங் கலைவளத்தை வேணமட்டுங் காண்கின்றோம்.

. . . . . . . . (வேறு). . . . . . . .

வில்வளத்தை இராமனிடம் படைத்தான்; விஞ்சும்
. . வீரத்தை இலக்குவனில் கொடுத்தான்; நல்ல
சொல்வளத்தைக் காட்டுதற்கே அனுமன் வந்தான்
. . சொல்லிற்கே செல்வனந்தச் சுந்த ரன்தான்.
வெல்லுவகை துணைசேர்க்கும் போதும் மீள
. . வேறுவகை உரையாற்றும் போதும் அந்தச்
சொல்வேந்தன் பேச்சினிலே கம்பன் காட்டும்
. . சொல்வளத்தைக் கண்டுமனம் சொக்கிப் போவோம்.

மருத்துவத்தை இவனென்ன விட்டா வைத்தான்
. . மனிதருடை உடலினிலே தோன்றும் புண்ணை
அறுத்தெறிதல்; குருதிமாற்றல்; நெருப்பில் காட்டி
. . அப்புண்ணை வேகவைத்தல் என்றே மிக்க
மருத்துவமாம் நுண்கலையை விளக்கிச் சொல்வான்
. . மாக்கவிஞன் அச்சின்ன நெஞ்சுக் குள்ளே
உருவாகி வுள்ளபொருள் உலகின் மட்டாம்
. . ஒன்றொன்றாய்ச் சுவைத்தாலும் ஆயுள் மட்டம்.

. . . . . . . . (வேறு). . . . . . . .

மூக்கறுந்து போனவளை முன்னழகு தீர்ந்தவளை
ஏக்கத்தால் நெஞ்சம் எரிமலையா யானவளைக்
கூக்குரலிட் டேஅண்ணன் கோபம் வளர்ப்பவளை
பார்க்கின்றோம் சுவைக்கின்றோம்; படைத்தவனின் கலைவளத்தால்.

முதுகோடு நெஞ்சும் முழுதும் வளைந்தவளை
முதுகொடிய தீமை மூவுலகும் படைப்பவளை
மதுக்குழலாள் கைகேயி மனத்தை ஒடித்தவளை
இதுவரைக்கும் நினைக்கின்றோம்; எழுதினவன் கலைவளத்தால்.

மேருமலை யிரண்டை இருபக்கம் வைத்ததுபோல்
வீறுபெறும் தோள்கள் விளங்குடலங் கொண்டவனை
நூறுநூறு குடங்கள் நுங்கிவிட்டே எழுபவனை
மாறிமாறி நினைக்கின்றோம் மாக்கவிஞன் கலைவளத்தால்.

இமயம் தலைவணங்கி எறும்பைமண்டி யிட்டதுபோல்
அமைந்த புகழனைத்தும் அடியோடு கீழாகக்
குடைகின்ற உளத்தோடு கெஞ்சுகின்ற இராவணன்தான்
நமையுருக்கி நிற்கின்றான் நடத்துபவன் கலைவளத்தால்.

கோசலத்தை மிதிலையினைக் கொஞ்சும் இலங்கையினை
மாசகலப் புகழுங்கால் வளர்கலைகள் வளத்தினையே
பேசுகிற கம்பன் பெருமையிலே திளைப்போம்நாம்
வீசுபுகழ் கவிவன்மை விஞ்சிடுமே கலைவளத்தால்.

----------------------------------------

சௌந்தர்

unread,
Jan 23, 2010, 6:49:54 PM1/23/10
to சந்தவசந்தம்
24.0 கம்பன்-மருதம்

(கவிஞர் சவகர்லால், திருப்பத்தூர், 29-8-1982)

மழைபெய்தால் புல்முளைக்கும்; அதுவுங் கூட
. . மறுநாளே நிறம்மாறும் மாவட் டம்நான்;
மழைபெய்தால் நீர்வருமே வாய்க்கால் அந்த
. . மாதிரியில் பெரிதா இருக்கு மென்று
குழைவாக ஆறுபற்றி மகற்குச் சொல்வேன்;
. . குறையாத சீவநதி என்ன என்பான்
அழுகின்ற தம்பியவன் மூக்கைப் பார்ப்பாய்
. . அதுதாண்டா சீவநதி எனமு டிப்பேன்.

ஆற்றுவளம் நானறிந்த தவ்வ ளவ்வே
. . அறிந்திருந்தும் என்னைப்போய் மருத மென்னும்
சேற்றுவளம் பாடென்றால் என்ன செய்வேன்?
. . சிரிப்புவளம் நீர்காணப் பலிதான் நானா!
நாற்றுவளம் வேண்டாமா? வயலி லெல்லாம்
. . நடுகைவளம் வேண்டாமா? பார்த்துத் தானே
கூற்றுவளம் கவிதையிலே கூட்ட வேண்டும்
. . கொடும்பாலை நிலத்தினிலே பயிரா தோன்றும்?

பச்சைநிறக் கம்பளத்தைக் காற்றில் சற்றுப்
. . படபடக்க வைத்ததுபோல் தென்ற லாங்கே
இச்சையுடன் நடைபயிலப் பயிர்க ளெல்லாம்
. . எழில்பொங்க நெளிந்தாடி வாவா என்னும்!
பச்சையுடல் தொட்டணைத்துத் தழுவிச் செல்லும்
. . பனித்தென்றல் செயல்காண நாணி நண்டு
கிச்சென்று வளையுள்ளே ஒடுங்கும் பின்னே
. . கிட்டவந்து தலைநீட்டிக் குறும்பாய்ப் பார்க்கும்.

ஏரதையா மருதத்தான் நடத்து கின்றான்?
. . இயல்கின்ற நம்வாழ்வை நடத்து கின்றான்
தாரதுதான் சிறுகோலா; இல்லை இந்தத்
. . தாரணியை நடத்துகின்ற செங்கோ லேதான்
யாரதனை இன்றைக்கிங் குணரு கின்றார்
. . எடுப்பார்கைப் பிள்ளையென உழவ னானான்
சீர்மறந்து நிலைமறந்து தடுமா றிப்போய்ச்
. . செயல்மறந்து கிடக்கின்றான்; மருத மன்னன்.

பிடிக்குள்ளே முடியடக்கி ஒன்றி ரண்டாய்ப்
. . பிரித்துநட்டுச் செல்லுகின்ற தாய்க்கு லத்தின்
பிடிக்குள்ளே முடியடக்கம்; ஆனா லந்தப்
. . பேதைகளோ பொருளுக்குள் அடங்கிப் போனார்
பிடியிடையைப் பிடிப்பதற்கும் காளை நெஞ்சம்
. . பொருளெடையைப் பார்ப்பதனால் வாழ்க்கை என்றும்
பிடிபடாத தத்துவமாய்ப் போகப் பெண்கள்
. . பெரும்பெண்டாய் மணமின்றிக் கழிகின் றார்கள்.

. . . . . மருதம் பேசுகிறது. . . . .

செழிப்புக்குப் பதவுரைநான்; இயற்கை யன்னை
. . சிரிப்புக்கு விரிவுரைநான்; உழவர் நெஞ்ச
விழிப்புக்குத் தெளிவுரைநான்; நாட்டு மக்கள்
. . வினைமுயற்சித் தீர்ப்புரைநான்; ஆள்வோர் கட்சி
நலத்துக்குச் சான்றுரைநான்; நிலவு கின்ற
. . நன்மைகளின் அளவுரைநான்; நல்ல மாட்டு
வளர்ச்சிக்கு வாழ்த்துரைநான்; வருங்கா லத்தின்
. . வரவேற்(பு) உரையாயும் நானி ருப்பேன்.

வயல்வெளியில் பயிராக நடனம் செய்வேன்
. . வாய்க்காலில் புல்லாகப் படுத்தி ருப்பேன்
அயலங்கு மரமாக நிமிர்ந்து நிற்பேன்
. . அசைகாற்றில் இலையாக ஆடி நிற்பேன்
கயல்மோதித் தாமரையாள் நளினங் காட்டக்
. . கம்பளமாய்க் குளத்தினிலே விரிந்தி ருப்பேன்
வியனுலகம் நான்சிரித்தால் சிரிக்கும்; இன்றேல்
. . வேதனையின் வாய்ப்பட்டுக் கருகிப் போகும்.

சேற்றுக்குள் ஏரோட்டி நடந்து செய்யும்
. . செயலுக்குள் சிறப்பூட்ட வில்லை யென்றால்
சோற்றுக்குள் கைநீட்ட வழியில் லாமல்
. . துன்பத்துள் இவ்வுலகம் மூழ்கிச் சாகும்.
நாற்றுக்குள் ளிருக்கின்ற கருவுக் குள்ளே
. . நாட்டுயிரின் கருவிருக்கும்; நான்தான் அந்த
நாற்றெல்லாம் மேனியிலே தாங்கி நிற்பேன்
. . நான்தானே உயிக்கெல்லாம் உயிரா யாவேன்.

மருதத்தை அரசனாக்கி மனம்ப றிக்கும்
. . மயிலினத்தை மங்கையராய் ஆடச் செய்து
பெருமலராம் தாமரையை விளக்கா யாக்கி
. . பிறந்துவரும் இடிமுழக்கம் முழவாய்க் கூட்டி
விரியலையைத் திரைச்சீலை யாக்கி ஆங்கே
. . விழிக்கின்ற குவளைகளைச் சுவைஞ ராக்கித்
தருகின்றான் அரசவையாய்க் கண்டு நெஞ்சம்
. . தடுமாறி மயங்குகிறோம் கள்ளுண் டாற்போல்.

களைபறிக்கச் செல்கின்றார் உழவர்; வீட்டுக்
. . கட்டழகி முகம்கண்வாய் எல்லாம் ஆங்கே
களையாகக் கண்டிடவே பறிக்க அஞ்சிக்
. . கண்மயங்கிச் சோர்கின்றார்; என்று காட்டும்
சுளைக்கவிதை காணுகின்றோம் உடனே பாட்டில்
. . சுருக்கென்று குத்துகிறான்; சிறிய வர்கள்
பிழைப்பாரோ பெண்கள்பால் வைத்த நேயம்
. . பாவிமகன் சுவையாகக் கிண்டல் செய்வான்.

நங்கையர்கள் கல்லூரி செல்லுங் காலம்
. . நம்பிகளின் படைபின்னால் போகக் காண்போம்
நங்கையர்க்குப் பாதுகாப்பு; நாட்டுத் தொண்டு;
. . நம்கவிஞன் மருதநிலங் காட்டு கின்றான்
நங்கையர்கள் செல்வராம்; அவர்பின் னாலே
. . நடப்பனவாம் ஆண்மயில்கள்; பெண்ம யில்போல்
மங்கையர்கள் சாயலங்கே இருப்ப தாலே
. . மயங்கினவாம் ஆண்மயில்கள்; கொன்று விட்டான்.

அன்னத்தைப் பார்க்கின்றான் இராமன்; சீதை
. . அழகுநடைக் கஞ்சிய(து) ஒதுங்கக் கண்டே
சின்னமுறு வல்செய்தான்; நங்கை நல்லாள்
. . திமிர்ந்தநடை யானையொன்று அவனைக் காண
எண்ணத்தில் நாணுற்றே மீள்வ தாக
. . இளமுறுவல் புதிதாகச் செய்தாள்; ஆங்கே
மின்னல்போல் இருமுறுவல் மோதுங் காட்சி
. . மேதினியிற் கிடைக்காத கம்பன் காட்சி!

----------------------------------------

சௌந்தர்

unread,
Jan 24, 2010, 12:59:59 PM1/24/10
to சந்தவசந்தம்
25.0 கம்பன் எண்துறை மேதை

. . . . . . . . இலக்கணப் புலவன். . . . . . . .

(கவிஞர் சவகர்லால், கோபி, 1-1-1985)

உயிரெழுத்துத் தெரிவீரா என்பேன்; எங்கள்
. . உயிரெடுக்கு மேயதனைத் தெரியும் என்பார்;
உயிர்மெய்யை அறிவீரா என்பேன்; எங்கள்
. . உயிரோடு மெய்யறுக்கும் அறிவோம் என்பார்;
உயிரளபு, ஒற்றளவு, சார்பு, என்பேன்;
. . உயிர்போன பிணங்கள்போல் அவரி ருப்பார்;
பயிற்றுவிக்க வகுப்பினிலே உயிர்கொ டுத்துப்
. . பாட்டரங்கில் உயிர்பிழைத்துத் திரிந்து வந்தேன்.

அதுபொறுக்க வில்லையா எம் அய்யா வுக்கே!
. . அலைகடலை விட்டமாலின் கதையைக் கம்பன்
மதுகைக்கத் தந்தானே, அதிலே கேட்போர்
. . மனந்தைக்கப் பாடுதற்குப் பொருளா இல்லை?
எதுகருதி இலக்கணத்தை எனக்குத் தந்தீர்?
. . என்னபிழை செய்தேனிச் சிறுவன்? அய்யா
இதுபொறுப்ப தில்லையெனப் பீமன் போல
. . எரிதழலா தேடுவன்நான்? பாடிப் பார்ப்பேன்!

தேமாவும் புளிமாவும் அதனை விட்டால்
. . செயப்பாட்டு வினையும்சொல் தமிழ்வ குப்பு
மாமாவா கம்பநாடன்; கற்ப வர்தம்
. . மனம்விரும்பாப் பாடத்தைத் திணித்து நோகும்
சாமான்ய ஆசிரியர் தொழிலா பாட்டுச்
. . சக்ரவர்த்தி செய்திட்டான்? இலை இல்லை
தேமாவும் தீம்பலாவும் தோற்றுப் போகும்
. . தித்திப்புச் சுளையன்றோ இராம காதை.

அதற்குள்போய் இலக்கணத்தைத் தேட லாமா?
. . அமுதத்தில் கல்தேடி நோக லாமா!
கதகதப்பும் புத்துணர்வும் ஊட்டு கின்ற
. . கவிதையிற்போய் எழுத்தெண்ணி நைய லாமா?
கதைநடப்பும் காவியத்தின் இடைநெ ளிப்பும்
. . கண்சிமிட்டும் சுவைவீச்சும் கண்டு நெஞ்சம்
குதிபோட நீர்வீழ்ச்சி குளிப்ப தல்லால்
. . குற்றியலு கரம்தேடித் திரிய லாமா?

அவனுக்குத் தெரியாத இலக்க ணம்மா?
. . அவனெடுத்துப் பாடாத விதிமு றையா?
அவனுக்குப் புரியாத சமுதா யம்மா
. . அவன்காட்டாப் பொருளியலா! அக்கா லத்தில்
அவனுக்கு வாராத அறிவி யல்லா!
. . அத்துணையும் கையாளும் கம்ப நாட்டான்
எவனுக்கும் வழிகாட்டும் இலக்க ணங்கள்
. . எத்துறைக்கும் பாவயலில் சிறக்க நட்டான்.

எங்கேயும் மரபுக்க ளுடைக்கப் பட்டால்
. . இலக்கணமாம் வரையறைகள் நொறுக்கப் பட்டால்
எங்கேயும் இலக்கணத்தை மீற லொன்றே
. . இலக்கணமென் றாகிவிட்டால் நமது நாட்டுக்
கங்கைநதி வீடுகளைக் குளிப்பாட் டாதா!
. . காவிரியும் ஊருக்குள் விளையா டாதா?
எங்கெங்கும் கொடும்பேய்கள் ஆட்டம் போடும்
. . இடுகாடாய் நம்நாடு மாறி டாதா?

இலக்கணமில் லாஆட்ட அரங்க மாக
. . இலங்கைத்தீ விலங்கியது; அவராட் டத்தால்
கலக்கமிகக் கொண்டார்கள் முனிவர்; வாழ்க்கை
. . கலங்கிடவே கண்டார்கள்; அந்நே ரத்தில்
இலக்கணமாம் நெறிநிறுத்த இராமன் வந்தான்
. . இனிமையெங்கும் தவழ்ந்திடவே நடந்தான்; அந்த
இலக்கணத்தை இலக்கியமாய்க் கம்பன் செய்தான்
. . இன்றுவரை இனிக்கிறதவ் விலக்க ணம்தான்.

கங்கைநதிப் புறத்தினிலே ஒருவன்; சின்னக்
. . கருங்குரங்குக் கூட்டத்தில் ஒருவன்; தீமை
பொங்குகிற அரக்கரிலே ஒருவன் என்று
. . போற்றியணைத் தான்ராமன் தம்பி யாக
இங்கின்று ஒருமைப்பா டென்கின் றோமே
. . இனிமையுடன் அதனுடைய இலக்க ணத்தை
அங்கன்றே தந்தோன்நம் இராமன் தானே
. . அதைக்கவிதைத் தறிநெய்தோன் கம்பன் தானே.

கட்டியவள் கையணைப்பில் நடக்கும் போதே
. . கண்பார்வை கடைவீதி முழுதும் மேயும்
கெட்டமனம் தறிகெட்டு நிலையுங் கெட்டு
. . கேடுகெட்டுத் தடுமாறி அலைந்து சாகும்.
துட்டமன வயப்பட்ட ஆண்கட் குள்ளே
. . தூயமன வள்ளலெனத் தோன்றி என்ன
கெட்டாலும் இருமாதர் தம்மை நெஞ்சாற்
. . காணேன்நான் எனச்சொன்னான் இலக்க ணந்தான்.

ஏற்றத்தாழ் வில்லாத சமுதா யத்தை
. . எப்போதோ படைத்திட்டான்; இருப்பார் இல்லார்
வேற்றுமைகள் இல்லாத சமதர் மத்தை
. . விளங்கவைத்தான் விளக்கவுரை தெளிவாய்ச் செய்தான்
ஏற்பார்கள் இல்லாத தாலே அங்கே
. . இடுவார்கள் இல்லையென்றான் எங்கே நாம்தாம்
தோற்கிறோமோ அங்குவெற்றிக் கொடியை நாட்டித்
. . துவளாமல் நிற்கின்றான் கம்ப நாடன்.

வீரத்தின் இலக்கணத்தைச் சொல்லும் நல்ல
. . விளக்கவுரை எத்துணையோ படித்தோம்; இந்த
வீரமகன் போர்க்களத்தில் ஆடி நிற்க
. . வெற்றாளாய்ப் போனபகை வீரன் தன்னைத்
தீரனேநீ இன்றுபோய் நாளைவா வென்று
. . சொன்னவன்போற் பார்த்ததுண்டா? இராம னங்கே
வீரத்தின் இலக்கணமாய் நின்றான்; அந்த
. . விளையாட்டைக் கம்பநாடன் பாட்டில் தந்தான்.

அன்புக்கு முன்னலே ஆசா ரங்கள்
. . அடிபட்டுத் தவிடுபொடி ஆன செய்தி
அன்புருவாம் கண்ணப்பர் கதையிற் காண்போம்
. . அதைப்போலக் குகன்படைத்த மீன்க ளெல்லாம்
இன்போடு உண்டோம்நாம் என்று ரைத்த
. . ஏற்றத்தில், சபரிதந்த கனியை மிக்க
அன்போடு சுவைத்திட்ட அழகில் தூய
. . அன்பிற்கோர் இலக்கணத்தைக் காணு கின்றோம்.

கற்பிற்கோர் இலக்கணத்தைக் கண்ணிற் கண்டோம்
. . காகுத்தன் எப்படியும் வருவா னென்று
பொற்புடனே தவமிருந்த தவமாம் தையற்
. . பொலிவினிலே பொறுமைக்கும் நம்பிக் கைக்கும்
கற்றிட்டோம் இலக்கணத்தை; கண்டு வந்து
. . கலைநுணுக்க முடன்சொன்ன சொல்லின் செல்வன்
சொற்றிறத்தில் சொல்லாடும் இலக்க ணத்தைச்
. . சொல்லிவைக்க மகிழ்ச்சியுடன் அதனைக் கற்றோம்.

செய்வினையும் செயப்பாட்டு வினையு மாகத்
. . தீயமகள் கூனியுடன் இளையாள் நிற்க
உய்வினைக்கே வழியின்றி வரங்க ளென்னும்
. . வினையெச்சம் வினைமுற்றாய் முதிர்ந்து தோன்றச்
செய்திட்ட தீவினையா லணையும் பேராய்த்
. . தயரதன்தான் அணைந்துபோக, இராமன் செல்லக்
கைகொட்டி எதிர்மறையாய்ப் பரதன் துள்ளக்
. . கம்பநாடன் காட்டுகின்றான் இலக்க ணத்தை.

இப்படித்தான் கம்பனைநான் பார்க்கக் கூடும்
. . இதனைவிட்டே காரிகையை அளவு கோலாய்
எப்படித்தான் அளந்தாலும் இலக்க ணந்தான்
. . இளைத்துவிடும்; காவியந்தான் ஏற்றங் காணும்
எப்படியோ நான்கண்ட இலக்க ணங்கள்
. . எடுத்துரைத்தேன் ஓரளவு பொறுத்துக் கேட்டீர்.
தப்படியாய் இருந்தாலும் எனைப்பொ றுப்பீர்
. . தர்மஅடி தாராதீர்; வணக்கம் நன்றி.
-------------------------------------

சௌந்தர்

unread,
Jan 25, 2010, 5:29:20 AM1/25/10
to சந்தவசந்தம்
26.0 கம்பன் அட்டமூர்த்தம்

. . . . . . . . உலக நேயக் கம்பன். . . . . . . .

(கவிஞர் சவகர்லால், காரைக்குடி, 16-3-1984 )

நல்ல தலைப்பெனக்குத் தந்தீர்கள்! உலகநேயம்
சொல்லிக் கவிபாட நான்தானா அகப்பட்டேன்;

வீட்டுமாந்த ரிடத்தையே வேண்டும் நேயத்தைக்
காட்டத் தெரியாமல் கருந்தேளாய்க் கொட்டுவேன்நான்.

சொல்வீச்சு நெருப்பில் சுடப்பட்டு நோகின்ற
மெல்லியலாள் இதைக்கேட்டு மெல்லச் சிரிக்கின்றாள்.

பண்டிதரின் பேரன்நான் என்பதனால் பஞ்சசீலங்
கொண்டிருந்த உலகநேயம் கொடுத்தீரோ; தெரியவில்லை

கலகநேயச் செயல்நெருப்பில் குளிர்காய்வோர் செவிகளிலே
உலகநேயச் சங்கை ஊதினால் எடுபடுமா?

தம்வீடு தம்மக்கள் தம்வாழ்க்கை நலந்தவிர
இம்மா நிலந்தன்னில் யார்பிறரை நேசிப்பார்?

நேயத்தைக் காட்டியறம் நிகழ்த்திய சான்றோர்கள்
போயொழிந்த இடத்தில் புல்முளைத்து நாளாச்சு;

தன்னைப்போல் பிறனையும் நேசிக்கச் சொன்ன அந்தப்
புண்ணிய வேதனுக்குச் சிலுவைபரி சளித்தார்கள்;

நேயத்தை வாய்மையுடன் நிகழ்த்திய சான்றோனாம்
தூயவனுக் கொருகுண்டு பரிசாகத் தந்தார்கள்;

நேயத்தைச் சொன்னவர்க்கு நேர்ந்தகதி அறிந்துலக
நேயத்தைச் சொல்லென்றால் நெஞ்சம் அஞ்சாதா?

அஞ்சும் நெஞ்சத்தைக் கொஞ்சம் இழுத்துவந்து
மிஞ்சும் சுவைக்கம்பன் பாட்டில் நுழைகின்றேன்.

இமயமுதல் குமரிவரை உயிரோட்டம் ஒன்றென்பார்
அமைவாகச் சிந்தித்தால் அதிலுண்மை தெரிகிறதா?

காவிரிக்கு நீர்கேட்டால் கைவிரித்துக் காட்டுகிறார்
நாவிரித் தொருமைப்பாடு நவில்வதிலோ குறைச்சலில்லை

சொல்லொன்று வாயில் தமிழாக வெளிவந்தால்
கல்லொன்று கொஞ்சிப் பல்லொன்றை எடுக்கிறது

என்னடா யிதுவென்றால் 'கன்னடா' படியென்பார்
அண்டைமா நிலநேயம் அப்படித் திகழ்கிறது.

வள்ளல் நடக்கின்றான்; கால்தூசி பட்டவுடன்
மெள்ளப் பெண்ணொன்று யிர்பெற் றெழுகிறது.

சாப விடுதலை பெற்ற அகலிகையின்
பாபம் விடுதலை பெற்றது; பெண்ணுயர்ந்தாள்;

பெண்ணவளை முனிவனுடன் பிணைத்தங்கே வள்ளல்
சொன்னதெலாம் உயிர்நேயம் சிறக்கும் சொற்குவியல்

கழுகொன்று பத்துத் தலையோடு போராடி
விழுகிறது; மகன்கடன்கள் வள்ளல் செய்கின்றான்

காக்கை குருவியெங்கள் சாதியென் றவன்கூடக்
காக்கைக்கோ குருவிக்கோ கருமங்கள் செய்ததில்லை

கழுகுக்கு மகனாகிக் குரங்குக்கு அண்ணனான
அழகனிடம் உலகநேய அமுதம் கொப்புளிக்கும்

இந்த உலகநேயம் எம்கற்ப னையில்கூட
இந்தப் பிறவியிலே என்றைக்கும் அரும்பாது.

கங்கைக் கரைவேடன் காகுத்தன் தம்பியானான்
அங்கே கிட்கிந்தைக் குரங்குடன் பிறப்பானான்

சேற்றுக் குள்மலர்ந்த தாமரையாம் வீடணனும்
ஏற்றுக் கொளப்பட்டான் இரத்தத்தின் இரத்தமானான்

நல்லவுயி ரத்துணையும் நம்முடன் பிறப்பென்று
கொள்ளுமவ னுள்ளத்தில் உலகநேயம் கொப்புளிக்கும்

நடப்பிலெங்கும் கலக நேயமே கண்டு கம்பனேஉன்
செம்பொன் திருவோடு திருமாலாம் இறைவனையும்

இந்த உலகத்தில் இறக்கிக் காட்டியது
வந்த பெருமாளின் வழிப்பாட்டே உன்பாட்டு

தென்னிலங்கைத் தீவையொரு விண்ணிலங்கை ஆக்கிடவே
வண்ணமக ளடிவைக்க வள்ளலையும் மிதிக்கவிட்டாய்.

வரத்தோடு படையெல்லாம் தொலைத்துநிற்கும் இராவணனை
திறத்தோடு இன்றுபோய் நாளைவா எனச்சொன்னான்

. . . . . . . . . . வேறு. . . . . . . .

ஆற்றினிரு கரைகடக்கத் தோணி யோட்டும்
. . அவனையாரும் மனிதனென் றிதுவ ரைக்கும்
ஏற்றுக்கொண்ட தேயில்லை; அவன்பி றப்பால்
. . இழிந்தவனாம்; அவனைத்தான் உன்றன் ராமன்
ஏற்றிட்டான்; தம்பியென அணைத்துக் கொண்டான்
. . இதயத்தில் அன்பென்னும் சுடர்வி ளக்கை
ஏற்றிவைத்தான்; வேட்டுவனாம் அவனுக் குன்றன்
. . இராமனளித் திட்டநேயம் உலக நேயம்.

கொள்வார்கள் இல்லாத சமுதா யத்தைக்
. . கொடுத்திட்டாய்; கொடுப்பார்கள் இல்லை யென்றாய்
உள்ளதைநான் சொல்லுகிறேன்; இன்றைக் கிந்த
. . உலகத்தில் ஏழைமக்க ளிடமி ருந்து
கொள்வாரே இருக்கின்றார்; கொடுப்பா ரில்லை
. . குடியாட்சி எனக்கிழியப் பேசி விட்டுக்
கொள்ளையடிக் கின்றவொரு கூட்டம் வாழும்
. . குவலயத்தில் உன்நேயம் உலக நேயம்.

உன்பார்வை தனிப்பார்வை; உன்னேயம் தனிநேயம்
. . என்பார்வைக் குள்ளந்த உலகநேயம் எட்டாது
எட்டாத நேயத்தை எட்டியெட்டிப் பார்த்திட்டேன்
. . தொட்டால் அதுவிலகித் தொடுவான மாகிறது.

. . . . . . . . . . வேறு. . . . . . . . . .

அட்டமூர்த்தம் பாடவந்தேன்; அவையோரே இதைநானும்
. . கெட்டமூர்த்த மாக்காமல் கடையை மூடிவிட்டேன்.
------------------------------------------------

சௌந்தர்

unread,
Jan 26, 2010, 8:30:23 PM1/26/10
to சந்தவசந்தம்
27.0 கவிதைப் பட்டி மண்டபம்

. . . . என்னை அடிமைகொள்வது எதுவோ?. . . . .

(கவிஞர் சவகர்லால், காரைக்குடி, 27-3-1983)

. . . . . . . . . . கவிதை வளம். . . . . . . . . .

கம்ப நாடன் கவிதையிற்போல் கற்றோர்க் கிதயங்கள்
இம்ப ருலகத்தில் எதனிலும் மகிழாது

கருத்தில்லை கம்பனிடம் எனச்சொல்ல வரவில்லை
நம்கருத்தடிமை யாவது கவிதையில்தான் எனச்சொல்வோம்

எந்தப் பொருளை எந்தச் சொல்லாலே
எந்த இடத்தில் எப்படிச் சொல்லுவதோ

அதுதானே கவிதை; அதுதானே அடிமையாக்கும்
இதுதெரிந்தும் வாதாட என்நண்பர் வந்துள்ளார்.

. . . . . . . . . . காட்சி-1. . . . . . . . . .

ஊரெல்லாம் திருக்கோலம் உள்ளமெல்லாம் நகைக்கோலம்
சீருடைய இராமனுக்கு முடிசூட்டும் முடிவெண்ணி

வாசலெல்லாம் மாக்கோலம் மனமெல்லாம் பூக்கோலம்
தேசுடைய வள்ளலுக்குத் திருமுடிநாள் வரவெண்ணி,

மகிழாத உயிரில்லை; மனம்விரியாப் பொருளில்லை
அகமகிழாக் கூனியின்சொல் அம்பலம் ஏறியது.

திசையெல்லாம் வெடிக்கத் திளைத்திருந்த பூமியிலே
திசைமாறி மேல்கீழாய்ச் செய்திநிலை மாறியது.

விரித்த கூந்தலுடன் நெருப்பான கைகேயி
விரித்த நாடகத்தால் காட்சி மாறியது.

பொழுது புலர்ந்து விடிந்த இயற்கையினை
அழகொழுகக் கவிதையிலே அமுதமெனத் தருகிறான்.

வானப் பரப்பெல்லாம் மீனாகித் திகழ்ந்தநிலை
தானிங்கு மாறத் தனிக்கதிர் எழுந்ததுவாம்.

வள்ளலுக்கு முடியென்று விரித்தமுத்து வான்பந்தர்
உள்ளநிலை யறிந்ததுமே ஒப்பனையை மாற்றியதாம்.

"விரித்த பந்தர் பிரித்த தாமென மீனொளித்தன வானமே"

பொழுது விடிந்தது; மீன்கள் மறைந்தன
சொலுங்கருத் ததுதானே! சொல்லும் முறைஎன்ன!

துடித்துவரும் சொல்வீச்சில் தோன்றிவருங் கவிதைநமை
அடிமை கொள்கிறது; அகமகிழ்ந்து திளைக்கிறோம்.

. . . . . . . . . . காட்சி-2. . . . . . . . . .

மேருமலை வீழ்ந்ததுபோல் வீரமலை கீழ்க்கிடக்கச்
சீருடைய கற்பின் திறத்தாள் புலம்புகிறாள்;

வெற்பெடுத்த திருமேனி வீழ்ந்து கிடப்பதுவும்
கற்புடைய சானகிமேற் காதலெனக் கதறுகிறாள்;

எள்ளிருக்க இடமின்றி உடம்பெல்லாம் தைத்துருவும்
வள்ளலவன் கையம்பு வலிமைகண்டு வியக்கின்றாள்;

கற்கனியக் கனிகின்ற காகுத்தன் கையம்பு
நிற்காமல் ஊடுருவித் துளைத்த திறங்கண்டாள்;

தேவியின் மேல்வைத்த தீராத பெருங்காதல்
ஆவியைப் பிரித்தது; ஆற்றலை அழித்தது.

உடலுக்குள் புகுந்தின்னும் அம்புதேடும் பொருளென்ன?
தடுமாறும் நெஞ்சத்தாள் தானாகக் கூறுகிறாள்.

"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கவர்ந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி"

பாவைமேற் கொண்டகாதல் பெருவீரன் நெஞ்சுக்குள்
மேவி யிருக்கிறதா எனத்தேடித் துளைத்ததுவாம்;

. . அம்பு துளைத்தது; அதுதானே கருத்து
. . இன்பக் கவிதையிலே எப்படிச் சொல்லுகிறான்!

கற்பனைக் கவிதையின் காற்றில் மோதுண்டு
அற்பனாய் வீழ்ந்து அடிமையாய் ஆகின்றேன்.

விரித்துவிட்ட கூந்தலிலே மலர்வைக்க முடியாத
நெருக்கடியை எண்ணியவள் நெஞ்சம் பதறுகிறாள்.

சானகியைச் சொல்லுங்கால் துயரோடு மலர்க்கூந்தல்
சானகி என்றுசொல்லித் தாகம் தீர்க்கின்றாள்.

இந்தக் கவிதைவளம் என்நெஞ்சை அடிமை கொள்ளச்
சொந்த உணர்விழந்து சொக்கிப்போய் நிற்கின்றேன்.

. . . . . . . . . . காட்சி-3. . . . . . . . . .

வஞ்ச நினைப்புநெஞ்சில் விஞ்சி நிறைந்திடவே
வஞ்சி சூர்ப்பநகை வருகின்றாள் பேரழகாய்!

தோற்றப் பொலிவிற்கும் சூழ்வினை யால்மனது
ஏற்ற செயலிற்கும் எள்ளளவும் தொடர்பில்லை;

அழகெல்லைக் கோட்டினிலே அடிவைத்துப் பயில்வதுபோல்
அழகெல்லாம் ஓருருவாய் அன்னநடை காட்டுகிறாள்.

வஞ்சமது மிஞ்சிவர வஞ்சியவள் கொஞ்சிவர
நஞ்சமது வருவதுபோல் நங்கையவள் வருகின்றாள்

ஓசைப் பொழிவிற்கே ஏங்கிநிற்கும் கம்பனுளம்
ஆசைப் பெருக்கோடு அள்ளித் தரும்பாட்டு.

பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம னுங்க
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடியள் ஆகி
அஞ்சலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.

இந்தக் கவிதைவளம் என்னெஞ்சை அடிமைகொள்ளச்
சொந்த உணர்விழந்து சொக்கிப்போய் நிற்கின்றேன்.

. . . . . . . . . . காட்சி-4. . . . . . . . . .

காட்டில் இருக்கின்றார்; கையருகில் உயிரமுது
தேட்டை யிடுங்கண்கள் திரும்பிப் பார்வையிடும்;

வனத்தில் நடைபயிலும் அன்னம் வருகிறது
மனத்தில் நடைபயிலும் அன்னத்தை யிவன்பார்த்தான்;

அன்னத்தைப் பார்க்கின்றான்; அழகுநடை பழகுமதன்
எண்ணத்தைப் பார்க்கின்றான்; ஏக்கமே தெரிகிறதாம்!

சீதையவள் நடைக்குமுன்னால் தன்னடைதான் கொஞ்சமும்
தோதில்லை எனஎண்ணி ஒதுங்கியதாம் அவ்வன்னம்.

பார்த்தவன் தேவியைப் பார்த்தான் மெலச்சிரித்தான்
*கோ(ர்)த்தமுத்து மாலையவள் குறிப்பறிந்து மகிழ்ந்திட்டாள்.
(மூலத்தில் *கோர்த்த என்றே பதிவாகியுள்ளது)

அன்ன நடையழகைத் தன்நடைதான் வென்றதெனச்
சொன்னவன் நடையழகைச் சுட்டவே நினைக்கின்றாள்;

ஆண்யானை ஒன்று அண்ணாந்து நடந்துவந்து
தான்நீர் பருகிப்பின் மீளும் நடைபார்த்தாள்;

பார்த்தவள் நாதனைப் பார்த்தாள் முறுவலித்தாள்;
சேர்த்துவைத்த பெருமையிலே திளைப்பதனைக் காட்டிநின்றாள்.

பார்வை மேடையிலே முறுவல் நாடகந்தான்
சீர்மை யுடன்நடக்கச் சிந்தை குளிர்ந்தார்கள்.

சிரிப்புக்குச் சிரிப்பே பதில்சொல்லக் கவிதை
விரிப்பைக் காட்டுகிறான்; வெல்லுகிறான் நம்நெஞ்சை

ஓதிமம் ஒதுங்க, கண்ட உத்தமன், உழையள் ஆகும்
சீதைதன் நடையை நோக்கி, சிறியது ஓர் முறுவல் செய்தான்;
மாதுஅவள்தானும், ஆண்டு வந்து, நீர் உண்டு, மீளும்
போதகம் நடப்ப நோக்கி, புதியது ஓர் முறுவல் பூத்தாள்

கருத்து விரிப்பில்லை; கவிதைதான் விரிப்பாகிக்
கருத்தெல்லாங் கொள்ளைகொண்டு கட்டடிமை செய்கிறது;

சிரிக்கும் கவிதைவளச் செம்மாப்பில் நம்நெஞ்சம்
சிரிப்போடு அடிமையாகிச் சிலிர்ப்போடு மகிழ்கிறது.

. . . . . . . . . . காட்சி-5. . . . . . . . . .

இராமனை நினைக்கிறாள்; அழுகிறாள்; கண்களில்
விராவி விழும்நீரில் ஆடை நனைகிறதாம்

துக்கப் பெருமூச்சில் தோன்றிப் பரவுகின்ற
மிக்க வெப்பத்தால் மெல்லாடை காய்கிறதாம்.

படிக்குந் தோறும் நம்முள்ளம் நனைகிறதே
துடிக்கும் கவிதை வளந்தானே காரணமாம்.

நனைந்து காய்ந்து நனைந்து காய்வதை
நினைந்து நினைந்து நெஞ்சு மகிழ்கிறதே!

கருத்துச் செறிவா; கவிதைதானே காரணமாம்


நடுவரே! மதுரைப் பாண்டியனே; முன்னொருநாள்
வடுவான தீர்ப்பினால் விளைந்ததை மறக்காதீர்

கடல்நீரில் உப்பில்லை எனச்சொல்ல மாட்டார்கள்
உடலில் உயிரில்லை எனஉரைக்க மாட்டார்கள்.

பூவில் மணமில்லை எனக்கூறும் துணிவெந்த
நாவுக்கும் வந்திடுமா? வந்தால் பிழைத்திடுமா?

கவிதை வளமேதான் கருத்தை அடிமையாக்கும்
கவிதை வளத்திற்கு அடுத்துதான் கருத்தெனவே

தீர்ப்பை வழங்குங்கள்; திருத்தப் படாத
தீர்ப்பாக அதுவிளங்கும்; மாறிக் கூறினாலோ

மேன்முறை யீடுசெய்திடுவோம்; அதெல்லாம்
வேண்டாமல் தீர்ப்பைக் கவிதைக்கே வழங்குங்கள்

என்று சொல்லி வணங்கி இனிதாய் விடைகொண்டேன்
நின்றூ நிலைக்கின்ற தீர்ப்பை எதிர்பார்ப்போம்.
---------------------------------------

சௌந்தர்

unread,
Jan 29, 2010, 8:28:54 PM1/29/10
to சந்தவசந்தம்
இதுவரை 27 கவிதைகள் இடப்பட்டுள்ளன. முன்னமே சொன்னபடி இவை ஒவ்வொன்றும்
நட்சத்திரக் கவியாக இருப்பதால் மொத்த எண்ணிக்கை 27-ஆக வருவது இந்தக்
கருத்திற்கு ஏற்புடையதாக அமைகிறது.
இந்தப் புத்தகத்தின் முன்னுரையாக கவிஞர் எழுதிய பாடல் இங்கே இடுகிறேன்.
இதைத் தொடர்ந்து திரு பாரதி சுராஜின் அணிந்துரையும், மற்ற கவிஞர்களின்
கருத்துகளும் இடம்பெறும்.
ச.வ அன்பர்கள் கவிஞர் சவகர்லாலைப் பாராட்டி இங்கே எழுதலாம்.
-----------------------------------------------------------------------

. . . . . நானும் பாடுகிறேன். . . . . . .

. . . . (கவிஞர் சவகர்லால்)

நானும் பாடுகிறேன்; கம்பனில் கிறுக்காகி
நானும் பாடுகிறேன்; கிறுக்கனுக் கச்சமில்லை!

கற்பவர் சிந்தைக்குள் அமுதச் சுவைபெருக்கி
நிற்பவை கம்பனின் நிகரில்லாப் பாடல்கள்;

பாட்டுச் சுவைபருகித் திளைப்பவர் ஏதோவோர்
கூட்டுக் களியினிலே கொள்ளை போய்விடுவார்;

தொட்ட இடமெல்லாம் தீஞ்சுவைத் தேன்வெள்ளம்
கொட்டும் தேன்கூடு கம்பன் பாட்டுக்கள்;

கவிவண்ணங் கண்டவர்கள் சுவைவண்ணந் தனில்மூழ்கிப்
புவிவண்ண மேமறந்து புதுவண்ண மாயிடுவார்;

அவ்வண்ணச் சுவையறிய என்னை இழுத்தணைத்தே
இவ்வண்ணம் அறியவைத்தார் கம்பனடிப் பொடியார்;

அவரணைப்பில் கம்பன் அரங்கங்க ளெங்கெங்கும்
கவிபாடிச் சான்றோர் பாராட்டைப் பெற்றேன்நான்;

அந்தக் கவிதைகளை அழகான நூலாக்கித்
தந்துவிடத் துணிந்தேன்நான்; ஆசை வெட்கம் அறிவதில்லை;

கம்பன் பொழிலுக்குள் நுழைந்தால் அதுசொர்க்கம்;
அம்புவியில் அதற்கிணையாய் எப்பொழிலும் கிடையாது;

அழகு குடியிருக்கும்; அருமை மணமிருக்கும்;
பழகு தமிழ்நெஞ்சைப் பற்றி இழுத்து நிற்கும்;

தேன்குடத்துள் கைவிட்டுப் புறங்கை வழிதேனை
நானிங்கே உதறினால் சிந்துந்தேன் சுவைக்காதா?

படைத்துவிட்டேன் நூலாக; உங்கள் திருமுன்பு
படைத்துவிட்டேன் படையலென; ஏற்றென்னை வாழ்த்துங்கள்.

இவர்கட்கென் நன்றி

சொல்லின் செல்வர் பாரதி சுராஜ்; கவிமாமணி பூவை அமுதன்;
ஓவியக் கவிஞர் அமுதபாரதி; மணவை வ.இளங்கோ
என் துணைவி பழனியம்மாள்.

சௌந்தர்

unread,
Jan 31, 2010, 5:26:06 PM1/31/10
to சந்தவசந்தம்
அணிந்துரை

சொல்லின் செல்வர் பாரதி சுராஜ்

தலைவர்-பாரதி கலைக்கழகம்

கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
. . காற்றையும் வான வெளியையும்- சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப் புலவோர்கள்-பல
. . தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

என்பது மகாகவி பாரதியார் வாக்கு. அத்தகைய தெள்ளு தமிழ்ப் புலவர்களில்-
கவிஞர்களில் ஒருவர் கவிமாமணி பொற்கிழிக் கவிஞர்-டாக்டர் சவகர்லால். இவர்
பாரதி கலைக்கழகத்தில் இணைந்தது எங்கள் பேறு.

கவிதை வரிகளைத் தொட்டால் கிறுகிறுக்க வேண்டும். சவகர்லாலின் எந்தக்
கவிதையை வேண்டுமானாலும் தொட்டுப்பாருங்கள். ஓசை மனதை நிறைக்கும்.
கவிஞர் சிவகங்கை மாவட்டக்காரர். கல்லூரிப் பேராசிரியர். தமிழ்த்துறை
முதல்வர். இப்படிப்பணிகள் செய்து, தமிழும் சமயமும் வளரக் காலமெல்லாம்
பாடுபட்ட அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அன்புப்
பார்வைக்குரியவரானார். கம்பன் புகழ்பாடி நாடெல்லாம் கன்னித்தமிழ் வளர்த்த
அமரர் கம்பனடிப்பொடி சா.கணேசன் பார்வையில் விழுந்து காரைக்குடி கம்பன்
விழாக்களில் பங்கு பெற்றார். கம்பனைப் பற்றிக் காரைக்குடியிலும், பிற
இடங்களிலும் பாடிய கவிதைகளை இன்று திரட்டிக்'கம்பன் பொழில்' என்ற
தலைப்பில் இந்தத் தொகுப்பு நூலைக் கொண்டு வந்துள்ளார். நூலுக்குத் தம்
உரையை 'நானும் பாடுகிறேன்' என்று கவிதையாகவே தந்துள்ளார்

'நானும் பாடுகிறேன் கம்பனில் கிறுக்காகி' ஆம்! கம்பனை ஆழ்ந்து
படிப்பவர்கள் கிறுக்காகித்தான் போவார்கள்.

'தொட்ட இடமெல்லாம் தீஞ்சுவைத் தேன்வெள்ளம்' கம்பனைப் பற்றி இவர்கூறும்
சொற்கள் இவர் கவிதைகளுக்கும் பொருந்தும். புகழ்மொழி அல்ல. உண்மை வெறும்
புகழ்ச்சியில்லை' நூலைப்படித்துப்பின் சொல்லுங்கள். எந்த நூலிலும்,
கதை, கட்டுரை, நாவலனாலும் முதற்பகுதி, முதற்பாட்டு, முத்தானதாயிருக்க
வேண்டும். இல்லையென்றால் நூலைப் புரட்டவே மாட்டார்கள்! கம்பன்
முதல்பாட்டு, முத்தான பாட்டு.

உள்ளத்தில் போதைவரும்; பாடப் பாட
. . உலகத்தை மறக்கவரும்; ஆழ்ந்த பக்தி
வெள்ளத்தில் நீந்தவரும்;


சொல்லழகைச் சுவைப்போமா? முந்து கின்ற
. . தொனியழகைச் சுவைப்போமா? இராமன் கையின்
வில்லழகைச் சுவைப்போமா? சரங்கள் பாயும்
. . வேகத்தைச் சுவைப்போமா? உயிர்தான் பெற்ற
கல்லழகைச் சுவைப்போமா?

புரியாத பொருளில்லை செய்தி இல்லை
பாவிமகன் கல்வியிலே பெரியவன்தான்

உள்ளத்தில் போதை வந்து இவர் பாடிய இந்தப் பாடலைப் படியெடுத்து
கவிச்சுவை அறிந்த அன்பர்களுக்கெல்லாம் கொடுத்து மகிழ்ந்திருக்கிறேன்.

'கம்பன் திறம்; என்று ஒரு கவிதை.

தேன்சிந்தும் சொல்லாலே கம்பன் தொட்டால்
தெருக்கல்லும் உயிர்பெற்றுப் பெண்ணேயாகும்

கவிதை என்ற அழகிய பெண்ணையும் தொட்டுத் தெருக்கல்லாக்கிவிடும்
கவிஞர்களையும் எனக்குத் தெரியும். கம்பனுக்குப் பாராட்டு என்ற தலைப்பில்
பாரதியே, பாடுவது போல, அவன் உத்திகள், அவன் சொற்கள் பலவற்றையும்
கையாண்டு கம்பனைக் காதலன், காதலி, தோழன், குழந்தை, ஆண்டானாகப் பாடி
மகிழ்கிறார்.

செஞ்சொற் கவிமகள் தன்னையே சுற்றிச்
. . சிலபுதுப் பேய்கள் வந்தே
வஞ்சனை செய்யுது மந்திரஞ் செய்துமே
. . விரட்டிட வேண்டுமையே-ஆமாம்
. . விரட்டிட வேண்டுமையே!

கவிஞரின் ஆதங்கம் புரிந்தால் சரி; அதிகம் 'சொன்னால் விரோதம்'.

இராவணன் பார்வையில் கம்பன் என்றொரு பாடல். கம்பன் பார்வையில் இராவாணன்
என்பதல்ல தலைப்பு. இராமனைப் பற்றித் தனித்தலைப்பில் பாடாத கவிஞரின் நீள்
கவிதை இது. சவகர்லால் கவிஞர்; புதிய பார்வையுடையவர் என்பதைக் காட்டும்
பகுதி இது.

'என்னைபோல் வாழ்ந்தவன் ஏழுலகில் யாருமில்லை'

என்று கம்பீரமான தொடக்கம். டாக்டர் சவகர்லால் இராவணனாகவே வேடமிட்டு,
கிரீட குண்டலங்களுடன் அவையில் நின்று பாடுவதாகவே நான் கற்பனை செய்து


கொள்கிறேன்.

மாணிக்கத் தூண்நட்டு வைரமணிப் பந்தரிட்டு
ஆணிப்பொன் ஆசனத்தில் அண்டமெலாம் ஆண்டவன்நான்

இராவணன் அவையை மட்டும் தானா சொல்லுகிறார்! பொல்லாத சவகர்லால் பாடும்
வரிகள் இவை!

அதிகாரம் கையிருந்தால் அவையும் கையில்தானே!
எதிராக எந்தக்குரலும் எழுந்திடுமோ?

கம்பனில் ஒரு சோறு அடுத்த தலைப்பு.

எல்லார்க்கும் எல்லாமென் றிருப்ப தான
. . இடம்நோக்கிச் சொல்கிறது வையம் என்றான்.

எப்போது சொன்னான்? அவன் பாடிய

அத்தருணம் கற்பனையில் கூட யாரும்
. . அறியாத தத்துவத்தைக் கம்ப நாடன்

பாடிய சிறப்பைப் பாடி மகிழ்கிறார் கவிஞர்.

கம்பனில் ஒருசொல் என்ற தலைப்பு. இராமன் அம்பு இராவணன் மார்பில் புகுந்து
தேடி, தடவிய வெள்ளெருக்கச் சடைமுடியான் என்ற ஒருபாடல் பற்றிய சிறுகவிதை,
கவிஞரின் நகைச்சுவை உணர்வைக் காட்டுகிறது.

இவருக்குத் துணைவியாரிடம் பயமே இல்லை! இருந்திருந்தால் பலரறிய, அச்சில்
வரும் இவ்வரிகளைப் பாடி இருப்பாரா?

அடிமடியைத் தடவுவதே சிலருக்கு வேலை;
. . அன்றாடம் கழற்றுகின்ற சட்டைப் பையின்
அடிவரையில் தடவுவதே மனைவி யர்தம்
. . அறமாகும்;

'இராமன் வாலி சந்திப்பு' இராமயணத்திலேயே நெருடலான இடம்; பட்டிமண்டபப்
பேச்சாளர்களுக்கு, சொடுக்கும் கவிபாடவல்ல கவிஞர்களுக்குச் சுவையான
தலைப்பு; கிடைத்தால் விடமாட்டார்கள்.

மறைப்பொருளே! மறைபொருளாய் ஆகி விட்டாய்

இங்குதானா

அறவடிவே சந்திப்பு நிகழ வேண்டும்
அய்யய்யோ இது நடவாதிருக்கலாமே!

இராம பக்தர்கள் நெஞ்சங்கள் இப்படித்தானே நினைக்கும்?

செவிநுகர்கனிகள் தலைப்பில், மனம் திரிந்த கைகேயி, மண்டோதரி
புலம்புகிறாள் இவற்றிலெல்லாம் தம் கைவண்ணத்தால் கவிவண்ணம் காட்டுகிறார்
கவிஞர்.

கண்வீச்சுக் கேங்கிப்போய், கோடி நங்கை காத்திருக்க மின்வீச்சை
நாடிப்போய் வெந்தகதை என்ன சொல்வேன்?

மண்டோதரியின் சொற்கள் இவை.

கம்பனில் மிகச்சிறிய பாத்திரம் சீதையின் தோழி நீலமாலை. வில்ஒடிந்த
செய்தியைச் சீதையிடம் விரைந்து சொன்னவள் இவள்.

விண்ணில் பிரிந்தவர் இணைந்திடவே-இந்த

. . மண்ணில் உதவிய பெண்ணவள்நான்!

மண்ணைத் தொட்டாலும் மாப்புகழைத் தரும்கம்பன்


என்னைத் தொட்டபின்னே இளக்கார மாவேனா?


என்று சொல்லிச் சித்திர கூடம் பேசும் பகுதியில் இயற்கை வளமும், இராம,
சீதை, இலக்குவ முக்கோணப்பாச முக்கூடல் நடப்பதையும் விரிவாகப் பாடுகிறார்
கவிஞர். சித்திரக்கூடத் திருப்ப சிறுகாக்கை முலைதீண்ட இங்குதான்
காகாசுரன் கதை நடந்தது. இது ஏனோ குறிக்கப்பெறவில்லை.

'கம்பனில் கடமை' என்று ஒரு தலைப்பு.

தன்மேனி நிழல்கூடத் தன்னடியில் மறைவதுண்டு
அன்புரு வானதம்பி அண்ணனைப் பிரிந்ததில்லை

தூங்காத கண்கள் துவளாத தொண்டுள்ளம்

ஏங்காத உணர்வுகள் இளைக்காத பெருவீரம்

இளையவன் இலக்குவன் கண்முன்னே தெரிகிறான்!

இலக்குவன் மட்டுந்தானா? கும்பகர்ணனை எப்படி மறக்க முடியும்?
போர்க்கோலம் பூண்டுவிட்ட அண்ணனுக்காகக் கும்பகர்ணன் போர்க்களத்தில்
மாண்டு புகழ் நிறுத்திச் சென்றிட்டான்.

தம்பியரின்றி மாண்டு கிடப்பனோ? தமையன் மண்மேல்?

என்று கேட்ட கும்பகர்ணன் ஒருபழைய திரைப்படப் பாடலில் கூறுவதுபோல்
'செத்தும் சாகாத சரித்திரப்புகழ்' தாங்குபவனல்லவா?

கம்பன் கலைவளம்

சீதாப்பிராட்டியை இராவணன் அவளிருந்த பர்ணசாலையோடு தூக்கிச் சென்றார் என
மாற்றி அழுதிய கம்பனின் பண்பாட்டை,

தொட்டிழுத்தால் தமிழ்ப்பண்பு தூளாகிப் போகுமெனச்
சுற்றியுள்ள இடத்தொடு தூக்கிடவே இராவணனை

விட்டகதை தமிழ்த்தூய்மை காத்தகதை.... என்று சுவைகூட்டிக் காட்டுகிறார்
கவிஞர்.

கம்பனில் மருத நிலத்தைப் பாடச் சொல்லி விட்டார்கள். கவிஞரின் குறையைக்


கேளுங்கள்.

மழைபெய்தால் புல்முளைக்கும்; அதுவுங் கூட
. . மறுநாளே நிறம்மாறும் மாவட் டம்நான்;

இவர் குழைவாக ஆறு பற்றி மகனுக்குச் சொல்வாராம்!

. . குறையாத சீவநதி என்ன என்பான்; பொல்லாதவன்.

அழுகின்ற தம்பியவன் மூக்கைப் பார்ப்பாய்
. . அதுதாண்டா சீவநதி எனமு டிப்பேன்.

நகைச்சுவை கொப்பளிக்கிறது. (தீவிர ஜலதோஷம் அனுபவம் பெற்றவர்களுக்கு இது
புரியும்)

ஆற்றுவளம் அறியாத இவரைப் போய், மருத மென்னும்

சேற்றுவளம் பாடென்றால் என்ன செய்வேன்?
. . சிரிப்புவளம் நீர்காணப் பலிதான் நானா!

இப்படிக்கூறி மருத வளத்தை அமர்க்களமாய்ப் பாடிவிட்டார் சவகர்.

எத்தனை தான் எழுதுவது? நான் குறிப்பிடாமல் விட்ட பகுதிகள் நிறைய உண்டு.

இத்தொகுப்பு ஒரு கவிதைப் பட்டிமண்டபத்துடன் நிறைவு பெறுகிறது. என்னை
அடிமை கொள்வது எதுவோ? கவிதை வளமா? கருத்து வளமா? தலைப்பு.

கவிதைவளக் கட்சியில் கவிதையால் வாதிட்டிருக்கிறார் சவகர்லால்.

எந்தப் பொருளை எந்தச் சொல்லாலே
எந்த இடத்தில் எப்படிச் சொல்லுவதோ

அதுதானே கவிதை; அதுதானே அடிமையாக்கும்

என்று அழகாகத் தொடங்கி ஐந்து காட்சிகளிலே தம் வாதத்தை வைக்கிறார்
கவிஞர்.

வெறும் அவலம். நகைச்சுவைப் பட்டி மண்டபங்களை நாளும் பார்த்து
வருகிறோம். கவிதைப் பட்டி மண்டபம் கண்டு கேட்டுப் பல நாளாயிற்று.
காரைக்குடியில் வழங்கிய தீர்ப்பு எது? அதுமேல் முறையீட்டுக்குச்
சென்றதா என்ற தகவல்கள் எல்லாம் இல்லை.

சவகர்லால் கவிதைகளில் கவிதைவளமும் கருத்துவளமும் கைகோத்து வருகின்றன.
கம்பன் இருக்கட்டும்; இவரது கவிதைகளில் விஞ்சி நிற்பது எது எனத் தனியொரு
பட்டிமண்டபமே நடத்தி விடலாம். கம்பனை ஆழமாகப் படித்தவர்களுக்கு
இத்தொகுப்பு அரியதோர் விருந்து. அங்கங்கே படித்து, கேட்டிருப்போரும்
இந்நூலைச் சுவைத்து மகிழ்வர். கம்பன் பக்கம் தலையை வைத்துப்
படுக்காதவரும், இக்கவிதைகளைப் படித்தபின் கம்பனைத் தேடிச் சுவைக்க
முற்படுவர்.

சவகர்லால் பெயர் சொல்லப்போகும் நூல் இது
கவிஞரை வாழ்த்துகிறேன்; பல்லாண்டுபாடுகிறேன்.

பாரதி சுராஜ்

31-8-2005

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 1, 2010, 6:46:05 PM2/1/10
to santhav...@googlegroups.com

கவிமாமணி சவகர்லால் அவர்களின் கம்பன் பொழிலுக்கு எங்களையும் இட்டுச் சென்று பேரின்பம் அனுபவிக்க வைத்த உங்கள் அன்புள்ளத்திற்கு மீண்டும் எனது மனம் நெகிழ்ந்த நன்றி. கவிஞரின் பாடல்களால் கவரப்பட்டு எழுந்த வாழ்த்துப் பாடல் ஒன்று கீழே இட்டுள்ளேன். 

 

 

சொல்லழகின் திறமறிந்தேன் சொற்பொருளின் வகையறிந்தேன்

.. தொக்கிநிற்கும் உவமைகளின் சுவையறிந்தேன் தூண்டிவிடும்

 

கல்வியதன் உரமறிந்தேன் கம்பனையே கடவுளெனக்

.. கருதுமன நிலையறிந்தேன் கணுக்கணுவாய் அவன்கவிதை

 

எல்லாமும் உள்வாங்கி எடுத்துரைக்கும் பாங்கறிந்தேன்

.. எங்களுடன் பகிர்ந்துகொளும் இனியதொரு குணமறிந்தேன்

 

வல்லுநராம் சவகரது வளமுரைக்க வார்த்தைகளை

.. வடித்தெடுத்துக் கொடுக்கின்ற வகைமட்டும் அறியேனே!

 

அன்புடன்,

அனந்த்

1-2-2010



2010/1/29 சௌந்தர் <rsou...@gmail.com>

Pas Pasupathy

unread,
Feb 2, 2010, 6:44:10 AM2/2/10
to santhav...@googlegroups.com
ஒருரோஜா என்றால்நம் உள்ளங்கள் மலரும்
ஒப்பற்ற நம்தலைவர் ஜவகர்லால் நினைவால் ;
இருபத்தேழ் கம்பமலர் என்றாலே கற்றோர்
இதயங்கள் மணந்திடுமே  கவிஜவகர் புனைவால்!

பசுபதி
2 Feb 2010

2010/2/1 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>



--

பசுபதி
http://groups.google.ca/group/yAppulagam

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 3, 2010, 4:14:26 AM2/3/10
to santhav...@googlegroups.com

சௌந்தருக்கு நன்றி சொலல்:


உம்பர் உலகை அடைவதற்காய்
.. உஞற்றும் தவமும் உலகுதரும்

இன்பம் பலவும் பெறுவதற்காய்
.. இயற்றும் தவமும் தவமல்ல

துன்பம் பாரா தெமக்காகத்
.. தொடர்ந்து சவகர் லால்யாத்த

’கம்பன் பொழிலை’ப் படிசெய்த
.. கரங்கள் செய்தது தவமாமே!

அனந்த்
3-1-2010

2010/2/1 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

thangamani

unread,
Feb 4, 2010, 5:12:22 AM2/4/10
to சந்தவசந்தம்
பாத்திரங்கள் பேசுகின்ற பார்வைகளில் நம்சவகர்
கோத்தணியாய் தந்தவிதம் கோடிபெறும்!-- பாத்திறத்தில்
கம்பனிலேத் தோய்ந்தசுவை காகுத்தன் அறக்காதை
செம்மைபெறச் செய்தவர்க்கெம் சிறப்பு.

அன்புடன்,
தங்கமணி

On Feb 3, 1:14 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> சௌந்தருக்கு நன்றி சொலல்:
>

> *உம்பர் உலகை அடைவதற்காய்
> .. உஞற்றும் தவமும் உலகுதரும்*
>
> *இன்பம் பலவும் பெறுவதற்காய்
> .. இயற்றும் தவமும் தவமல்ல*
>
> *துன்பம் பாரா தெமக்காகத்
> .. தொடர்ந்து சவகர் லால்யாத்த*
>
> *’கம்பன் பொழிலை’ப் படிசெய்த
> .. கரங்கள் செய்தது தவமாமே!*


>
> அனந்த்
> 3-1-2010
>
> 2010/2/1 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
>
>
> > கவிமாமணி சவகர்லால் அவர்களின் கம்பன் பொழிலுக்கு எங்களையும் இட்டுச் சென்று
> > பேரின்பம் அனுபவிக்க வைத்த உங்கள் அன்புள்ளத்திற்கு மீண்டும் எனது மனம் நெகிழ்ந்த
> > நன்றி. கவிஞரின் பாடல்களால் கவரப்பட்டு எழுந்த வாழ்த்துப் பாடல் ஒன்று கீழே
> > இட்டுள்ளேன்.
>
> > சொல்லழகின் திறமறிந்தேன் சொற்பொருளின் வகையறிந்தேன்
>
> > .. தொக்கிநிற்கும் உவமைகளின் சுவையறிந்தேன் தூண்டிவிடும்
>
> > கல்வியதன் உரமறிந்தேன் கம்பனையே கடவுளெனக்
>
> > .. கருதுமன நிலையறிந்தேன் கணுக்கணுவாய் அவன்கவிதை
>
> > எல்லாமும் உள்வாங்கி எடுத்துரைக்கும் பாங்கறிந்தேன்
>
> > .. எங்களுடன் பகிர்ந்துகொளும் இனியதொரு குணமறிந்தேன்
>
> > வல்லுநராம் சவகரது வளமுரைக்க வார்த்தைகளை
>
> > .. வடித்தெடுத்துக் கொடுக்கின்ற வகைமட்டும் அறியேனே!
>

> > *அன்புடன்,*
>
> > *அனந்த்*
>
> > *1-2-2010*
>
> > 2010/1/29 சௌந்தர் <rsoun...@gmail.com>

> >>http://groups.google.com/group/santhavasantham?hl=ta- Hide quoted text -
>
> - Show quoted text -

Kaviyogi Vedham

unread,
Feb 4, 2010, 5:22:02 AM2/4/10
to santhav...@googlegroups.com
கம்பனிலே-த்-? தோய்ந்தசுவை காகுத்தன் அறக்காதை
செம்மைபெறச் செய்தவர்க்கெம்  சிறப்பு.(தங்கமணி)
..
 ஆமாம் அம்மையே! நீங்க சாதாரணமா வெண்பாவில் தப்பு விடமாட்டீங்களே.. தூக்கக்கலக்கத்தில் எழுதினீங்களா?
 1)- லே..(த்)- எதற்கு?
த்- வராது.
 2)-அறக்காதை- அற எப்படி வரும்? காய்முன் நேர் தானே வரும்?
 3)-சிறப்பு--சிற எப்படி வரும்..திரும்ப காய் முன் நேர்தானே வரும்?
 சீர் என்றால் சரியாக இருந்திருக்குமே! திருத்தவும்..
யோகியார்


2010/2/4 thangamani <tvthan...@gmail.com>



--
யோகியார். வேதம்.(Yogiyar vedham)
Anaivarum vaazhga vaLamudan!--..
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600041

அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-41(போன் 64565979)-
*****************************
My Upadhesam to ALL " Anyhow we shd join DIVINE in the ULTIMATUM. So why yu r all  not practising  severely towards that gOAL and Pranayama YOGA!!..
Pl. come to ME I will Teach You!,
Yogiyaar-044-64565979

thangamani

unread,
Feb 4, 2010, 7:53:22 AM2/4/10
to சந்தவசந்தம்

On Feb 4, 2:22 am, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> கம்பனிலே-த்-? தோய்ந்தசுவை காகுத்தன் அறக்காதை
> செம்மைபெறச் செய்தவர்க்கெம்  சிறப்பு.(தங்கமணி)
> ..
>  ஆமாம் அம்மையே! நீங்க சாதாரணமா வெண்பாவில் தப்பு விடமாட்டீங்களே..
> தூக்கக்கலக்கத்தில் எழுதினீங்களா?
>  1)- லே..(த்)- எதற்கு?
> த்- வராது.
>  2)-அறக்காதை- அற எப்படி வரும்? காய்முன் நேர் தானே வரும்?
>  3)-சிறப்பு--சிற எப்படி வரும்..திரும்ப காய் முன் நேர்தானே வரும்?
>  சீர் என்றால் சரியாக இருந்திருக்குமே! திருத்தவும்..

> யோகியார்...
>
> read more »
>
> 2010/2/4 thangamani <tvthangam...@gmail.com>

> > > -- Hide quoted text -

thangamani

unread,
Feb 4, 2010, 8:32:42 AM2/4/10
to சந்தவசந்தம்
> திரு.யோகியார் அவர்களுக்கு,
ஆமாம். தளைகளைச் சரிசெய்து இட்டிருகிறேன்.
மின்சாரம் இல்லை.இப்போதுதான் வந்தது.
தளைதட்டல் தெரிந்தது.மின்சாரம் வந்ததும் இடவந்தேன்.
பிழை சுட்டலுக்கு தங்களுக்கு என் நன்றி!
வயதாகிக் கொண்டே போகிறது.தவறுதலும் செய்கிறேன்.
இனிமேல் சரியாக இட முயலுவேன்.

பாத்திரங்கள் பேசுகின்ற பார்வைகளில் நம்சவகர்
கோத்தணியாய் தந்தவிதம் கோடிபெறும்!-- பாத்திறத்தில்

கம்பனிலே தோய்ந்தசுவைக் கண்டாய்க் கவிபொழிந்த
செம்மலுக்குச் செய்வோம் சிறப்பு.

அன்புடன்,
தங்கமணி

On Feb 4, 2:22 am, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> கம்பனிலே-த்-? தோய்ந்தசுவை காகுத்தன் அறக்காதை
> செம்மைபெறச் செய்தவர்க்கெம்  சிறப்பு.(தங்கமணி)
> ..
>  ஆமாம் அம்மையே! நீங்க சாதாரணமா வெண்பாவில் தப்பு விடமாட்டீங்களே..
> தூக்கக்கலக்கத்தில் எழுதினீங்களா?
>  1)- லே..(த்)- எதற்கு?
> த்- வராது.
>  2)-அறக்காதை- அற எப்படி வரும்? காய்முன் நேர் தானே வரும்?
>  3)-சிறப்பு--சிற எப்படி வரும்..திரும்ப காய் முன் நேர்தானே வரும்?
>  சீர் என்றால் சரியாக இருந்திருக்குமே! திருத்தவும்..

> யோகியார்...
>
> read more »
>
> 2010/2/4 thangamani <tvthangam...@gmail.com>
>
>
>

> > > -- Hide quoted text -

சௌந்தர்

unread,
Feb 4, 2010, 6:57:49 PM2/4/10
to சந்தவசந்தம்
கவிஞர் சவகரைப் பற்றி மற்றைய கவிஞர்கள் என்ன சொல்கின்றனர்?

அருள்நெறித் தந்தை தவத்திரு. குன்றக்குடி அடிகளார்:
---------------------------------------------
பொற்கிழிக்கவிஞர் டாக்டர் சவகர்லால் அவர்கள் ஒரு பிறவிக்கவிஞர். இவர்தம்
கவிதைகள் அறநெறி காட்டுவன; ஆசிரியத்தன்மையுடையன; இன்னுயிர்க்கு இதம்
பயப்பன; உண்மையை உரைப்பன; பகுத்தறிவு நலமிக்குடையன; பொதுமை நலங்
கொழிப்பன; கவிஞரின் படைப்புகளில் பொதுவுடைமை இயல்வழிச் சிந்தனைகள்
பாவும் நூலுமாக அமைந்துள்ளன.

கவியரசு முடியரசன்:
----------------

எண்ணச் சிறகுவிரித் தெங்கும் பறந்துலகோர்
பண்ணுஞ் செயலெல்லாம் பார்த்துவந்தான்-வண்ணமுறப்
பாடினான் பின்சீறிப் பாய்ந்தெழுந்து பாட்டாலே
சாடினான் தீமைகளைத் தான்

பெரும்புலவர் பேராசிரியர் பா. நமசிவாயம் எம்.ஏ:
---------------------------------------
பொற்கிழிக்கவிஞர் டாக்டர்சவகர்லால் நாடறிந்த நல்ல கவிஞர். கவியரங்க
மேடையில் அவர் தோன்றினால் அவையினர் மிக்க ஆர்வத்துடன் அவரது பாடல்களை
ரசிப்பதைக் கண்டு நான் ரசிப்பது வழக்கம், நல்ல அறிஞர். சமுதாயச்
சிந்தனையாளர். கவிதை என்ற கைவாளால் சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும்
நச்சு மரங்களை வெட்டிச் சாய்க்கும் வீரர். அன்பு செலுத்துவதில் அன்னை;
கவிதை அவருக்குக் கைவந்த கலை. கவிதைக்குரிய அழகு கவிஞரின் பாடல்களில்
குடியிருக்கும். டாக்டர் சவகர்லால் ஒரு பிறவிக் கவிஞர்.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 4, 2010, 9:04:30 PM2/4/10
to santhav...@googlegroups.com

அழகிய வாழ்த்துப் பாடல். (’பாத்திரம்-பாத்திறம்’ அமைப்பு அழகு. 'பாத்திறத்தால்' என்றிருந்தால் இன்னும் சரியாக இருக்குமெனத் தோன்றுகிறது. கோத்தணியாய்*த்* தந்தவிதம் - ஒற்று வரும்)

அனந்த்

2010/2/4 thangamani <tvthan...@gmail.com>

thangamani

unread,
Feb 5, 2010, 1:30:52 AM2/5/10
to சந்தவசந்தம்
திரு அனந்த் அவர்களுக்கு,
மிக்க நன்றி!'கோத்தணியாய்த்' தந்தவிதம்
ஒற்று இட்டு,சரிசெய்து இட்டுள்ளேன்.

பாத்திரங்கள் பேசுகின்ற பார்வைகளில் நம்சவகர்

கோத்தணியாய்த் தந்தவிதம் கோடிபெறும்!-- பாத்திறத்தால்


கம்பனிலே தோய்ந்தசுவைக் கண்டாய்க் கவிபொழிந்த
செம்மலுக்குச் செய்வோம் சிறப்பு.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 4, 6:04 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> அழகிய வாழ்த்துப் பாடல். (’பாத்திரம்-பாத்திறம்’ அமைப்பு அழகு. 'பாத்திறத்தால்'
> என்றிருந்தால் இன்னும் சரியாக இருக்குமெனத் தோன்றுகிறது. கோத்தணியாய்*த்*

> தந்தவிதம் - ஒற்று வரும்)...
>
> read more »
>
> அனந்த்
> 2010/2/4 thangamani <tvthangam...@gmail.com>

> > > > > >> தந்துவிடத் துணிந்தேன்நான்;  ஆசை- Hide quoted text -

சௌந்தர்

unread,
Feb 5, 2010, 11:21:12 PM2/5/10
to சந்தவசந்தம்
கம்பன் கவியினிலே கல்லொன்(று) உயிர்பெற்றால்
கம்பன் பொழிலினிலோ வில்லொன்(று) உயிர்பெறுமே!

இராமன் கைப்பட்டு விளங்காத பொருளில்லை; ஆனால்
இராமன் கைப்பட்ட வில்லன்று முறிந்ததன்றோ?

முறிந்த வில்லுந்தான் கவிஞர் கைப்பட்டுச்
செறிந்த மொழிபேசும் திறங்கள் காட்டியதோ!

ஒடிந்துவிட்ட வில்லினுக்(கு) உயிரூட்டிப் பேசவைத்துப்
படிப்போர்கள் இன்புறவே பாப்புனைந்தார் சவகர்லால்.

காமன் வில்லாகிக் களைத்துப் போகாமல்
நாமங்கள் ஆயிரத்தான் நற்கையின் சேர்க்கையினால்

அன்று நடந்தவற்றை அணுக்கமுடன் ஆராய்ந்தே
இன்று நம்மிடையே இன்பமுறக் கூறுகின்ற

அரிய வில்லை இன்றளவும் நாமெல்லாம்
அறிய வில்லை; கவிஞரது கற்பனையில்

பிரிந்தவரை மீண்டும் பிணைத்திடச் செய்துவித்த
முறிந்த வில்லும் முழுமையினைப் பெறுகிறது

இருவரையும் இணைத்திட்(டு) எந்நாளும் வாழ்கிறது
உருவான கற்பனையில் உள்ளம் திளைக்கிறது.

சௌந்தர்

On Jan 5, 9:19 pm, சௌந்தர் <rsoun...@gmail.com> wrote:
> 12.0 சிவதனுசு பேசுகிறது
>
> (கவிஞர் சவகர்லால், புதுக்கோட்டை, 24-7-1982)
>
> பண்டொருநாள் முக்கண்ணன் புயந்தழுவிப் போருக்குச்
> சென்றதுண்டு; வளைந்ததில்லை;  தக்க னழிந்துவிட்டான்;
>
> தழல்மேனி கையில் தனுவென்னைக் கண்டுவிட்டே
> தழலிற் புழுவாகத் தவித்தார் தேவரெலாம்
>
> தேவை  யிலாநடுக்கம் தேவர் கொள்ளுவதைத்
> தேவாதி தேவன் கண்டென்னைப் புறம்வைத்தான்
>
> சனகன் முன்னோரில் ஒருவ னிடம் சென்ற
> நினைவுண்டு;  எழுந்துநின்ற நினைவே  எனக்கில்லை;
>
> கண்காட்சிப் பொருளாக ஆகிவிட்டேன்;  நாள்தோறும்
> புண்ணாகி என்னெஞ்சம் புலம்புவதை  யார்கேட்பார்?
>
> கார்முக மென்பார்கள்; கடுஞ்சரம் பாய்கின்ற
> போர்முக மறிந்ததில்லை; புறம்வந்து பார்த்ததில்லை
>
> வேட்டுவன் கைவில்லா  யிருந்தாலும் நாலுதரம்
> காட்டில் வளைந்திருப்பேன் கரடிபுலி எய்திருப்பேன்
>
> காமன் கைவில்லா  யிருந்தாலும் மலரம்பைப்
> பூமேனி தனிலெய்து புகழ்மேனி செய்திருப்பேன்
>
> வானில் இடுவில்லா  யிருந்தாலும் வண்ணங்கள்
> தானாகக் கூட்டித் தண்மாரி தந்திருப்பேன்.
>
> சிவன்கை  வில்லானேன் சிவனே  யெனக்கிடந்தேன்
> எவன்கையும் எனைத்தீண்டி யெடுக்கத் துணியவில்லை;
>
> கொழுமுகத்தில் தோன்றிக் கொழுகொழு வெனவளர்ந்தே
> அழகால் உலகாண்டாள் அருமைமகள் சீதை
>
> நாற்குணமும் படையாக நானிலத்தை  வென்றுவர
> வேற்கண்ணின் வீச்சறிந்தே  வீழ்ந்தார் மன்னரெலாம்
>
> ஒருபொருட்குப் பலபோட்டி என்றால் நடைமுறையில்
> உருவாகி நிபந்தனைகள் உடன்வந்து தோன்றாதா?
>
> நான்தான் கிடைத்தேனா?  எனைவளைத்த  வீரர்க்கே
> தேன்சிட்டின் பொன்மேனி மணங்கிட்டு மெனஉரைத்தார்
>
> ஆசைப் பெருக்கோடு யார்யாரோ  வந்தார்கள்
> ஓசை  யொடுமுயன்றார்; உடல்வளைத்து பின்சென்றார்
>
> மேருமலை  யெனக்கிடந்தேன்; வந்தார்கள்;  போனார்கள்
> யாருமெனை  எடுக்கவில்லை;  ஐவிரலும்  தீண்டவில்லை
>
> இடுப்பொடிந்தோர்;  மனமொடிந்தோர்;  எடுக்கும் முயற்சியிலே
> மிடுக்கொடிந்தோர்;  எனமன்னர் வரிசை  தொடர்ந்ததுவாம்.
>
> என்மேனி வளைத்தே  இணையில்லாப் பேரழகுப்
> பொன்மேனி வளைக்கும் புகழ்வீரர் வரவில்லை
>
> நானும் கிடந்தேன் நல்லமலர்க் கற்பகத்தின்
> தேனும் கிடந்தது;  தீண்டுவார் தோன்றவில்லை
>
> பெட்டிக்குள் கிடந்தேன்நான்;  புகழ்போர்த்த சீதையவள்
> கட்டுக்குள் கிடந்தாள்;  கட்டிக்கொள் வாரில்லை
>
> சனகன் உளம்நொந்தான்; சங்கடக் கடல்வீழ்ந்தான்
> நினைவெல்லாம் வேதனையாய் நித்தநித் தம்செத்தான்
>
> இருட்டென்றால் விடிவொன் றிருக்கத்தா  னேவேண்டும்
> இருட்டுளத்தில் ஒளிதரவோர் இருட்டே வந்ததுவாம்
>
> கார்வண்ண மேனிக் கதிர்வண்ணங் கண்டிந்தப்
> பார்வண்ணம் மாறிப் பகல்வண்ணங் கொண்டதுவாம்
>
> நம்பியைக் கண்டான்;  நம்பிக்கை  கொண்டான்
> நம்பி(க்)கை  அந்த நங்கைக்கே  எனக்கண்டான்
>
> மன்னனிவ னிந்த மைந்தனைக் காணுமுன்பே
> எண்ணரும் நலத்தினாள் இளையனைக் கண்டுவிட்டாள்.
>
> அண்ணலும் நோக்கினாள்;  அவளும் நோக்கினாள்
> பின்னென்ன? இதயங்கள் மாறிப் புகுந்தனவாம்
>
> சீதையுளம் முன்வாங்கிச் சனகனுளம் பின்வாங்கித்
> தாதவிழ்ந்த மலராகத் தயரதரா  மன்வந்தான்
>
> இப்பொழுது 'வில்லன்' இணையில்லா  வில்நானே
> தப்பாமல் எனைவளைத்தால் தானே  திருமணமாம்
>
> திட்டாத பேரில்லை; என்பேரில் வசைமாரி
> கொட்டாத பேரில்லை;  குமையாத மனமில்லை
>
> இவளுக் கிவனென்றே  இதயங்கள் முடித்தபின்னே
> இவர்களுக் கிடையூறு சிவதனுசா  என்றார்கள்
>
> மன்னனுக் கறிவில்லை;  மகனைக் கைப்பிடித்து
> இன்றைக்கே  கொடுக்காமல் வில்லெடுக்கச் சொன்னாரே
>
> அள்ளிக் கொடுக்காமல் அரியவில்லை  எடுக்கஇந்தப்
> பிள்ளைமுன்னே  வைத்தது பேதைமை  என்றார்கள்
>
> அத்தனையுங் கண்டேன்;  அனைத்தையுங் கேட்டேன்
> பித்தனைப் போலாகிப் பெட்டிக்குள் ளேகிடந்தேன்
>
> அறுபதி னாயிரம்பேர் அருமையுடன் கொண்டுசென்றே
> இருத்திவைத்தார்;  இராமனெனை  எடுக்க நெருங்கிவந்தான்
>
> எல்லாமே  அறிந்தவன்நான்;  இதயமும் எனக்குண்டு
> சொல்லியா தரவேண்டும்?  மணமுடிக்க முடிவுசெய்தேன்
>
> தொட்டான்;  எடுத்தான்;  தொடுத்தான்;  என்மேனி
> பட்டென்று முறிந்தேன்;  பாதத்தில் வீழ்ந்தேன்
>
> பிரிந்தவர் மறுபடி பிணைந்திடச் செய்தற்காய்
> முறிந்தவன் எனக்கென்றும் முழுமதியாய்ப் புகழுண்டு!
>
>     வேறு
>
> தொட்டதைக் கண்டா ரில்லை; தூயவன் கைக ளென்மேற்
> பட்டதைக் கண்டா  ரில்லை;  பையவே  என்மேல் நாணை
> இட்டதைக் கண்டா  ரில்லை;  இடிமுழக் கொன்றே  கேட்டார்
> இற்றது நான்தான்;  பொங்கி எழுந்தது மற்றோர் உள்ளம்.
>
> விழுந்துபோய்க் கிடக்கு மென்னை  விரும்பியே  பார்ப்பா  ரில்லை
> எழுந்தனர்;  மகிழ்வி லாடி இணைந்தனர்;  தூய கற்பின்
> கொழுந்தினை  வாழ்த்தி னார்கள்; குமரனைப் போற்றி னார்கள்
> எழுந்துமே  செய்தி சொல்ல எங்கெங்கோ  ஓடி னார்கள்
>
> நங்கையின்...
>
> read more »

Reply all
Reply to author
Forward
0 new messages