அன்பின் பெயரே கடவுள்
அன்பின் பெயரே கடவுள் - ஆன்ற
… அறிவின் பெயரே கடவுள்
முன்பின் அறியார் துயரைப் - போக்க
… முனையும் பரிவே கடவுள்
பொன்பின் அலையா மனமும் - மெய்ம்மை
… போற்றும் குணமும் கடவுள்
துன்பம் அலைபோல் வரினும் - என்றும்
… துவளாத் துணிவே கடவுள்
தன்னை அறியும் அறிவால் - வரும்
… சாந்த நிலையே கடவுள்
சென்றுள் கலந்த அருளால் - இருள்
… தீர்ந்த தெளிவே கடவுள்
- இமயவரம்பன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/E6510673-FE70-4900-B6C1-969951605973%40gmail.com.
On 26 Nov 2025, at 5:00 PM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
… சாந்த நிலையே கடவுள்
சென்றுள் கலந்த அருளால் - இருள்
… தீர்ந்த தெளிவே கடவுள்."
உண்மை தான்.
அதனால் தான் கடவுளை அறிவதும் அடைவதும் மிகக் கடினம் போலும்.
சங்கரன்
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/692995C0-4FBF-4670-9180-ED6D31929DDD%40gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BWjxeyB9keumSe7di3QKZMSFj410TMohMTdkTRnOadU_w%40mail.gmail.com.