தக்ஷிணாயனம் - மீ. விசுவநாதன்

9 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Jul 19, 2026, 1:50:02 AM (4 days ago) Jul 19
to Santhavasantham, M. Viswanathan
தக்ஷிணாயனம்
        (மீ.விசுவநாதன்)
 
ஆடி மாதப் பிறப்பின்று
    அழகும் அத்தனை அதற்குண்டு !
வாடிக் கிடக்கும் பயிரெல்லாம்
    வண்ணம் கொள்கிற சுகமுண்டு !
ஓடிப் பிடித்து விளையாடும்
     உயிராம் காற்றதன் உறவுண்டு !
பீடித் திருக்கும் கவலைக்கு
     பெரிய ஆறுதல் பிடியுண்டு !
 
சாதுர் மாஸ்ய விரதத்தை
     சரியாய்த் துவங்கிடும் துறவியர்க்கு
தோதாய் இருந்து உதவுகிற
     தூய தினங்களும் பலவுண்டு !
மாதர் மனத்தில் பலம்கூட்டி
     மகிழ்ச்சி அளிக்கிற விரதமுண்டு !
ஓதும் பாவை தந்திட்ட
      உறவாம் கோதையின் தினமுண்டு !
 
கதிரோன் தெற்கே பயணிக்கும்
     காலம் துவங்குற கணக்கின்று !
நதியில் தண்ணீர் நிறைந்தோடும்
     நல்ல பசுமைக் கணமுண்டு !
எதிலும் வெற்றி உனக்கென்று
      இறைவன் காட்டுற வழியாக
புதியாய்ப் பிறந்த பொழுதெனவே 
      புத்தி மகிழ்கிற தொடக்கமிது !
                *************************

Sai Ganesan H

unread,
Jul 19, 2026, 1:55:56 AM (4 days ago) Jul 19
to santhav...@googlegroups.com, M. Viswanathan
அருமை, ஐயா! 

-  சத்ய வேழன் H சாயிகணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-sqsdSTe_5np5RjgA0h9sTxTksbr0QUW54uJHhe5OfR2A%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Jul 19, 2026, 2:21:52 AM (4 days ago) Jul 19
to சந்தவசந்தம், M. Viswanathan
அருமை அண்ணா!

--

Swaminathan Sankaran

unread,
Jul 19, 2026, 6:58:38 AM (3 days ago) Jul 19
to santhav...@googlegroups.com, M. Viswanathan
அருமையான தக்ஷிணாய கவிதை.
மனதை ஊக்குவிக்கும் கவிதை.

சங்கரன் 



--
 Swaminathan Sankaran

Ram Ramakrishnan

unread,
Jul 19, 2026, 7:55:11 AM (3 days ago) Jul 19
to santhav...@googlegroups.com
அருமை, திரு. மீ. வி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 19, 2026, at 01:50, M. Viswanathan <meev...@gmail.com> wrote:


--

Siva Siva

unread,
Jul 19, 2026, 8:23:29 AM (3 days ago) Jul 19
to santhav...@googlegroups.com
Nice.

/ துவங்குற  /
/ காட்டுற  /

இப்பிரயோகங்கள் பாடலின் அழகைக் குறைக்கின்றன.

இவை தொடங்கும் & காட்டும் என்று பொருள்களிலா?

வி. சுப்பிரமணியன்




On Sun, Jul 19, 2026 at 1:50 AM M. Viswanathan <meev...@gmail.com> wrote:
தக்ஷிணாயனம்
        (மீ.விசுவநாதன்)
 
....

M. Viswanathan

unread,
Jul 19, 2026, 1:37:07 PM (3 days ago) Jul 19
to santhav...@googlegroups.com

அன்புக் கவிஞர் பெருமக்களின் கருத்துக்கு மகிழ்ச்சி. நன்றி.

அன்பன்,
மீ. விசுவநாதன் 
19.07.2026 23.06 PM 

 
Reply all
Reply to author
Forward
0 new messages