ஒட்டப்பட்ட ஒழுங்கு

7 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Sep 19, 2021, 8:55:24 PM9/19/21
to santhavasantham
வெட்ட வெளியினில் விந்தை நிறங்களில்
வீசிடும் ஈர்ப்பும் பொழிவுகளைக்
கொட்டிக் கிடக்கிற கொள்ளை அழகினைக்
கூடையில் வார முடிந்திடுமா?
தொட்டுத் தடவிடும் சொர்க்க சுகத்தினைச்
சொல்லிடும் வார்த்தை சுமந்திடுமா
பொட்டு மலரினில் வெட்டி அமைந்துள
பூரண வித்தைக் கதிபதி யார்?
இயற்கையின் அற்புத த்தை என்னவென்று சொல்வது. இத்துணூண்டு மலர். அந்த மலரில் வெட்டிவிடப்பட்ட ஒழுங்காக அடுத்தடுத்து அழகாக அடுக்கிவைக்கப்பட்ட இதழ்கள். என்ன ஒழுங்கு. இதை வடிவமைத்து யார், வனைந்தது. நமக்கு விந்தை. வடிவமைத்தவருக்கு அது ஒரு விளையாட்டு. பட த்தில் பெரிதாகத் தெரிகிறது. ஒவ்வொரு மலரும் அரை செண்டிமீண்டர் அளவுகூட இல்லை. ஒவ்வொன்றிலும் 26 இதழ்கள். இப்படிப் பலவண்ண மலர்கள். இது ஒரு மாதிரி அவ்வளவே!

image.pngவ்

Swaminathan Sankaran

unread,
Sep 19, 2021, 9:46:20 PM9/19/21
to santhav...@googlegroups.com
அற்புதமான மலர்கள். அவற்றுக்கேற்ற வெகு நயமான கவிதை. 

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAYGaD76_M%2B37-GrEeMS%2Bm4Zogoj2v2mhQxMbafhLkJ2A%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 19, 2021, 10:08:00 PM9/19/21
to சந்தவசந்தம்
arumai!

ananth

On Sun, Sep 19, 2021 at 8:55 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--

Subbaier Ramasami

unread,
Sep 19, 2021, 10:52:04 PM9/19/21
to santhav...@googlegroups.com
நன்றி

Virus-free. www.avg.com

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Sep 19, 2021, 10:52:19 PM9/19/21
to santhavasantham

Vis Gop

unread,
Sep 19, 2021, 11:50:45 PM9/19/21
to santhav...@googlegroups.com
கொட்டிக் கிடக்கிற கொள்ளை அழகினைக்
   கூட்டி வாரியொர் சித்திரமாய்
எட்டி இருக்கிற எமக்கும் அளித்திட
   எம்முன் சிரித்தன நித்திலமாய்!
மொட்டைத் தலையென மொட்டை அமைத்தவன்
   முறுவல் முகமென மலர்த்துகிறான்!
சிட்டிக் கலைஞனின் சேட்டம் அறிந்திடச்
   சீவன் எவர்க்கெனுஞ் சாத்தியமோ?

கோபால். 

Sent from my iPhone

Subbaier Ramasami

unread,
Sep 19, 2021, 11:53:24 PM9/19/21
to santhavasantham
அருமை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Sep 20, 2021, 3:50:46 AM9/20/21
to santhavasantham
your 2 poems and relative good poems attracted me. i saved
yogiyar

Ramamoorthy Ramachandran

unread,
Sep 20, 2021, 7:41:44 AM9/20/21
to Santhavasantham
எல்லாத்    திசையிலும் எட்டியே பார்க்கிறோம் 
மெல்ல  தலையை விரிக்கிறோம் - பொல்லாத 
காற்றும்  மறைந்துள்ள  கத்திரியால்  வெட்டுவதை 
ஏற்காதே வையம் இனி !
- புலவர் இராமமூர்த்தி 

Reply all
Reply to author
Forward
0 new messages