> - "நாள்கள்" என்பது, "நாள்" என்பதன் பன்மையைக் குறிக்கும்.
> - "நாட்கள்" என்பதோ, அன்று இறக்கிய "கள்" (மது) என்னும் பொருளைத் தரும்.
> "நாட்கள் உண்டு நாண்மகிழ் மகிழின்
> யார்க்கும் எளிதே தேரீ தல்லே''.
> (புறநானூறு - 123)
> "அன்று இறக்கிய கள்ளைக் குடித்துவிட்டு அதனால் ஏற்படும் மகிழ்ச்சியில், தேரைப்
> பரிசாகக் கொடுத்தல் யார்க்கும் எளிது'' என்பது இவ் அடிகளின் பொருளாகும்.
> பல்லோராலும் தவறாகப் பயன்படுத்தப்படுவது "நாட்கள்" எனும் சொல். நம் முன்னோர்கள்
> "நாள்கள்" என்றே எங்கும் பயன்படுத்தக் காணலாம்.
புறப்பாட்டிலும், இன்றைய 20-ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூலிலும்
காணமுடியும்.
http://www.noolaham.net/project/01/88/88.htm
"கடுமையான வெயில். காற்று அவ்வளவாக வீசவிவல்லை. தென்னை மரங்கள்
அங்கொன்றும் இங்கொன்றும் தலைகளை அசைக்காமல் சாதாரணமாக நிற்கின்றன. தென்னை
மரங்களுக்கிடையில் வீடு. கல் வீடல்ல. பணை ஓலையால் வேய்ந்த பெரியதோ
சிறியதோ என்று சொல்ல முடியாத நடுத்தர வீடு. திருவலையில் அவன். முன்னால்
கள்ளுப் போத்தலும் ஒரு பூச்சுக் கோப்பையும். கோப்பையில் கள்ளு. அவனுடைய
அக்கா மாலுக்குள் இருந்து சமைத்துக் கொண்டிருக்கிறாள். அக்காவின்
பிள்ளைகள் பள்ளிக்குப் போய் விட்டார்கள். கள், வெயில், தென்னம்
பிள்ளைகள், வீடு, மால், முற்றம்-இவை எல்லாம் அவனுக்கு மயக்கத்தைக்
கொடுத்தன. அதற்காத்தான் அவன் ஓடோடி வந்தான் இவைதான் அவனின் நோய்கள்
அனைத்தையும் தீர்க்கும் மருந்துகள். ஒரு கிழமை ஊரில் தங்கி விட்டான்.
காலையும் மாலையும் கள்ளுக் குடித்தான். தெற்குக் கடலில் பிடித்த புது
மீன்களைப் போட்டுக் கூழ் காய்ச்சிக் கொடுத்தாள் அவன் தமக்கை ஒடியல்
இடித்தாள். தம்பி வந்திட்டானே என்று ஓடி ஓடிச் செய்தாள் குஞ்சி அம்மா
வீட்டு வளவில் போட்டிருந்த பாத்தியில் கிழங்கு பிடுங்கிச் சுட்டுக்
கொடுத்தாள். நுங்கு மட்டும் சாப்பிடக் கிடைக்கவில்லை. அது நுங்குப்
பருவமில்லை. அது பனங்கள்ளுப் பருவம். அதுவும் அப்பா வீட்டுப் பனையில்
இருந்து இறக்கிய புதுக் கள். ஊரை வீட்டு வெளிக்கடவே மனமில்லை. இரண்டு
நாளில் திரும்பி விடவேண்டும் என்று தான் வந்தான். ஒரு கிழமை ஆகிவிட்டது.
இன்னும் போக மனமில்லை. "
நா. கணேசன்
One has to look at all manuscripts in Tirumantiram, Periyapuranam
etc.,
As these old texts show many verses with nALkaL instead of nATkaL,
the one instance in these books as nATkaL may be a recent error
by those who read them for printing.
A good essay from Dinamani.
சென்ற வாரம், ப.குருநாதன் எழுதியிருந்த "கள் மயக்கம் தெளியுமா?" என்ற
கட்டுரை, ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை. அவர்தம் "கள்"
மயக்கத்தை
இக்கட்டுரை தெளிவிக்கும் என நம்புகிறேன்.
மகாவித்துவான் மே.வீ.வேணுகோபால் பிள்ளை காலத்திற்கு முன்புவரை "கள்"
விகுதி
சிக்கலுக்கு உரியதாகத் தெரியவில்லை. ஆனால், வேணுகோபால் பிள்ளைதான் இது
குறித்து
ஓர் ஐயத்தை எழுப்பி, தக்க விடையும் தந்தார்.
வருமொழி இடைச்சொல்லாகவோ, உரிச்சொல்லாகவோ, வடமொழி போன்ற பிறமொழிச்
சொல்லாகவோ
இருந்தால், அங்கே வலி மிகுவதில்லை என்பது அறிந்த ஒன்று. இந்நிலையில்,
பன்மை
குறித்த "கள்" என்பது இடைச்சொல். ஆதலால், "எழுத்துகள், கருத்துகள்,
வாழ்த்துகள்" என்று எழுதுவதே ஏற்புடையதாகும்.
"வன்தொடர் அல்லன முன்மிகா அல்வழி''
என்னும் விதியால், வன்தொடர் குற்றியலுகரத்தின் பின் வருமொழி முதலில்
வரும்
வல்லினம், அல்வழி வேற்றுமையாகிய இரண்டு இடங்களிலும் மிகும்.
"சுக்குக் கடிது, பதக்குப் பெரிது (எழுவாய்த் தொடர்கள்) என வன்தொடரால்
வலி
மிக்கதைக் காண்க'' என்பார் மயிலைநாதர்.
"கொக்குப் பறக்கும் புறாப்பறக்கும்
குருவி பறக்கும் குயில்பறக்கும்
நக்குப் பொறுக்கி களும்பறப்பர்
நானே பறப்பன் நராதிபனே!''
(இராம
கவிராயர்)
கொக்குப் பறக்கும் என அல்வழியிலும், நக்குப் பொறுக்கிகள் என
வேற்றுமையிலும் வலி
மிகுவது ஏனெனில், பொருள் புணர்ச்சிக் கருதி அங்கே வலி மிகுந்தனவாம்.
விகுதிப்
புணர்ச்சிக்கு அவ்விதியைப் பயன்படுத்துதல் கூடாது.
"வாழ்த்துக்கள்" என்று தவறாக எழுதுகின்ற பலர், தம்மை அறியாமலேயே
"வாழ்த்துகிறோம்" என்று சரியாக எழுதுகின்றனர். காரணம் என்ன?
"வாழ்த்துகின்றோம்" என்னும் சொல்லைப் பகுபதங்களாகப் பிரிக்கும்போது,
வாழ்த்து +
கின்று + ஓம் எனப் பிரிக்கிறோம்.
வாழ்த்து என்பது வன்தொடர் குற்றியலுகரமாயினும், பொருள் புணர்ச்சி
விதியின்படி
"வாழ்த்துக்கின்றோம்" என எழுதுவதில்லை. காரணம், "கின்று" என்பது
இடைச்சொல்.
எனவே, இப்புணர்ச்சியில் வலி மிகவில்லை.
"இடைஉரி வடசொல்லின் இயல்பிய கொளாதவும்
போலியும் மரூஉம் பொருந்திய வாற்றிற்கு
இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே''.
(நன்னூல் - 239)
விதி விலக்கான விதிகள்:-
8 ஓரெழுத்து ஒருமொழியின் பின் வலி மிகும்.
- ஆ-ஆக் கள்;
- ஈ-ஈக்கள்;
- ஊ-ஊக்கள்;
- ஏ-ஏக்கள்;
- கா-காக்கள்
8 ஓரெழுத்து ஒருமொழி அடையெடுத்து அமைந்தாலும் அங்கு வலி மிகும்.
- தேனி-தேனீக்கள்;
- பூங்கா-பூங்காக்கள்.
- கை-கைகள்;
- தை-தைகள்
என வலி மிகாது இருக்கின்றன. ஏனெனில், கை, தை, பை - "ஐ" கூட்டுயிர்.
ஆதலால்
அங்கே வலி மிகவில்லை.
8 அகர ஈறு: அகர ஈற்றுச் சொற்களின் பின் வலி மிகும்.
- கள-களக்கள்;
- விள-விளக்கள்.
8 ஆகார ஈறு:-
ஆகார ஈற்றுச் சொற்களின் பின் வலி மிகும்.
- ஆலா-ஆலாக்கள்;
- கனா-கனாக்கள்;
- பலா-பலாக்கள்.
8 உகர ஈறு:-
உகரத்தை இறுதியாகக்கொண்ட குறிலிணைச் சொற்களின் பின் வலி மிகும்.
- அணு-அணுக்கள்;
- உடு-உடுக்கள்;
- கரு-கருக்கள்;
- தெரு-தெருக்கள்.
8 ஊகார ஈறு:- ஊகார ஈற்றுச் சொல்லின் பின் வலி மிகும்.
- கொண்மூ-கொண்மூக்கள்.
"புள்" என்னும் ஒருமைச் சொல்லுக்குப் "புட்கள்" என்பது பன்மையானது
போன்று,
"நாள்" என்பதன் பன்மையை "நாட்கள்" என்றே பலர் தவறாக எழுதக் காண்கிறோம்!
நாள்கள்
என்பது வேறு; நாட்கள் என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள பொருள் வேறுபாடு
தெரியாமல் பலர் பயன்படுத்துகின்றனர்.
- "நாள்கள்" என்பது, "நாள்" என்பதன் பன்மையைக் குறிக்கும்.
- "நாட்கள்" என்பதோ, அன்று இறக்கிய "கள்" (மது) என்னும் பொருளைத் தரும்.
"நாட்கள் உண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேரீ தல்லே''.
(புறநானூறு - 123)
"அன்று இறக்கிய கள்ளைக் குடித்துவிட்டு அதனால் ஏற்படும் மகிழ்ச்சியில்,
தேரைப்
பரிசாகக் கொடுத்தல் யார்க்கும் எளிது'' என்பது இவ் அடிகளின் பொருளாகும்.
பல்லோராலும் தவறாகப் பயன்படுத்தப்படுவது "நாட்கள்" எனும் சொல். நம்
முன்னோர்கள்
"நாள்கள்" என்றே எங்கும் பயன்படுத்தக் காணலாம்.
"நடத்தல்அரிது ஆகும்நெறி நாள்கள் சிலதாயர்க்கும்''.
(கம்ப.சுந்தர காண்டம் - 547)
"நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே''
"தோள்கள் இருந்த வாகாணீரே சுரிகுழலீர் வந்துகாணீரே''
(திவ்யப் பிரபந்தம் - பெரியாழ்வார் -
211)
"உரையா தார்இல்லை ஒன்றுநின் தன்மையைப்
பரவா தார்இல்லை நாள்களும்''.
(சம்பந்தர்
தேவாரம் - 596)
"நாளைப்போ வேன்என்று நாள்கள்செலத் தரியாது''
"நீந்துவார் நெடுநாள்கள் நிறைவெம்போர்த் துறைவிளைத்தார்''.
(பெரியபுராணம் - 1067,1296)
"கேழில் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?''
(திருவெம்பாவை - 8)
"தமையன்எம் ஐயன் தாள்கள்பாடி''.
(திருவாசகம்
- 207)
மேற்கூறிய இவ்வரலாறுகளின் வழி, நம் முன்னோர்கள் எதை எப்படிச்
சொன்னார்களோ, அதை
அப்படிக் கூறுவதே சால்புடையதாகும். பவணந்தி முனிவரும் இந்நோக்கில்,
"என்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே''.
(நன்னூல் - 388)
என்று கூறியுள்ளார்.
மரபின் பெருமையை உணர்ந்து, நமக்கு அதனை உணர்த்தவே தொன்னூலாசிரியர்
தொல்காப்பியர் தம் நூலில் மரபு என்னும் சொல்லை 75 இடங்களுக்கு
மேற்பட்டுக்
கையாண்டிருப்பதைக் காணலாம். மரபுவழி கூறவில்லையெனில் பொருள் வேறுபடும்
என்றுணர்ந்து அதற்கென விதி செய்தார்.
"மாற்ற அரும்சிறப்பின் மரபு இயல் கிளப்பின்''
"மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்''.
(தொல்:-1500,1591)
எனவே, மரபுவழி நிற்றலே நமக்கு உரிய - உயரிய மாண்பு என்பதை உணர வேண்டும்.
வாழ்த்துக்கள், கருத்துக்கள், எழுத்துக்கள், நாட்கள், பொருட்கள் என
எழுதுவது
தவறு.
வாழ்த்துகள், எழுத்துகள், கருத்துகள், நாள்கள், பொருள்கள் என எழுதுவதே
சரி!
முகில் தமிழ்ச்செல்வன்
நன்றி:- தினமணி
தினமணி கட்டுரை போல் செய்தால், ஒழுங்கமைதி (யுனிஃபார்மிட்டி) கூடும்
என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள் என்பது இலக்கணப்படி சரியாய் இருக்கலாம்.
ஆனால், வாழ்த்துக்கள் என்பது நடைமுறையில் பல
பெரிய எழுத்தாளர்கள் தற்காலத்தில் கைக்கொள்வதால்
விதிவிலக்காய் ஏற்பது பொருந்தும் என எண்ணுகிறேன்.
திருவள்ளுவர் சமண சமயஞ்சார்ந்தவர் என்று விரிவாகத்
தம் மாணவர்களுக்கு விளக்கிய மகாவித்துவான்
மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை போன்றோர் இக்
கேள்வியை ஆய்ந்துள்ளனர் என்பது சிறப்பு.
மறைந்துவிட்ட இரா. திருமுருகனார் இதுபற்றி எழுதியுள்ளாரா?
நெடில் எழுத்துடன் தொடங்கும் ஓரசைச் சொற்களில்
-கள் சேரும் போது ல் > ற் ஆகவோ, ள் > ட் ஆகவோ
ஆகாது என்று சொல்லித் தரலாம். நாட்கள் பாரதி
போன்ற பெரியவர்கள் 20-ஆம் நூற்றாண்டில் அதிகம்
பயன்படுத்தி உள்ளார்கள். எனவே நிச்சயம் ஏற்கலாம்.
Uniformity கூடவேண்டும் என்று நினைத்தால் தமிழ்ச் செல்வன்
கட்டுரையில் உள்ளபடி நெடில் எழுத்தில் தொடங்கும்
வார்த்தைகளுக்கு -கள் சேர்த்தலாம்.
”இப்படம் எத்தனை அழகாயிருக்கிறது என்றெழுதுகின்றார்கள். எத்தனை என்பது
எண்ணைக் குறிக்கும் எவ்வளவு அழகாய்
இருக்கிறது என்று எழுத வேண்டும்.
மாடுகள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன என்பது தவறு. மாடுகள் புல்லை
மேய்ந்து கொண்டிருந்தன என்க.
பல ஆறுகளின் நீர்களைக் குடித்தேன் என்பது தவறு.
பல ஆறுகளின் நீரைக் குடித்தேன் என்க.
பலருடைய தாகங்களைத் தண்ணீர் கொடுத்து நீக்கினான்
என்பது தவறு. தாகத்தை என்க.
நாட்டு மக்களுடைய வறுமைகளை ஒழிக்க என்பது தவறு.
வறுமையை என்க.
புல், நீர், தாகம், வறுமை ஆகியவற்றிற்குப் பன்மை கிடையாது.
கால்கள் என்பதைக் காற்கள் என்று எழுதுகிறோமா? இல்லையே. ஆகையால், நூற்கள்
என்றும் தொழிற்கள் என்றும் எழுதாமல் நூல்கள் என்றும் தொழில்கள் என்றும்
எழுதுக. தோள்கள் என்பதைத் தோட்கள் என்று சொல்வதில்லையே; தோள்கள் என்றே
சொல்கிறோம். அது போலவே நாள்கள் என்பதை நாட்கள் என்று எழுதாமல் நாள்கள்
என்றே எழுதுக. நாட்கள் என்பது புதிய கள் என்றே பொருள் தரும்.”
(அ. மு. பரமசிவானந்தம், நல்ல தமிழ் எழுத வேண்டுமா?,
1955, பாரி நிலையம்).
பல்லாண்டுகள் முன்னர் கம்பனில் நாள்கள் என்னும்
பொருளில் நாட்கள் என்ற சொல் இல்லை என்று
பல பாடல்கள் கொடுத்திருந்தேன். நாலாயிர திவ்விய
பிரபந்தம் பல உரைகளைக் கண்டிருக்கிறது, அதில்
நாள்கள்தான், நாட்கள் இல்லை என்பதை முக்கியமாய்க் குறிப்பிடல் வேண்டும்.
திருமந்திரம்,
பெரியபுராணம், 19, 20-ஆம் நூற்றாண்டு ஏடுபெயர்த்தோர்
கவனக்குறைவால் “நாட்கள்” என்று எழுதிவிட்டார்களா?
என்று ஆராய்ந்து தமிழறிஞர்கள் தெரிவித்தால் நல்லது.
எனவே, தினமணி கட்டுரை நாள்கள் எனப் பொருள்படும்படி
நாட்கள் என்பது பழந்தமிழில் காணோம். 99% நாள்கள் தான்.
அ. மு. பரமசிவானந்தம், மகாவித்துவான் மே. வீ. வே
போன்றோர் கூறுவதைத் தமிழ்ப் பத்திரிகைகள் செய்தால்
தமிழ் நடையில் ஒரு யுனிஃபொர்மிட்டி கிடைக்கும்.
பேரா. அ. மு. ப. போன்றோர் தரும் விதியைக் கையாண்டால்
விளைவு என்ன?
நெடில்கீழ் -ல்/-ள் வார்த்தைகளுடன் -கள் என்னும் பன்மை விகுதி
சேரும்போது ள் > ட் எனத் திரிபு ஏற்படாது. உ-ம் பல சொல்லலாம்:
வேல்கள், நாள்கள், தாள்கள், நூல்கள், கால்கள், கோல்கள், கோள்கள்,
சேல்கள், சால்கள், தாள்கள், தால்கள், தேள்கள், தோள்கள்
நாள்கள், நூல்கள், வால்கள், வாள்கள், வேல்கள், ......
[காற்கள், நூற்கள், தோட்கள், நாட்கள், ... என்பன பிழை.
கால்கள், நூல்கள், தோள்கள், நாள்கள் என்பன சரியானவை.]
நா. கணேசன்
> 2011/10/22 Kannan Natarajan <thara...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > வாழ்த்துகள், எழுத்துகள், கருத்துகள், நாள்கள், பொருள்கள் என எழுதுவதே சரி!
>
> > முகில் தமிழ்ச்செல்வன்
> > நன்றி:- தினமணி
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
நா. கணேசன்
சில நாள்களுக்கு முன் இதைப் பற்றிப் பேச்சு வந்தது நினவில் இருக்கலாம்.
அதைப் பற்றி இரு கட்டுரைகள்.
***
கட்டுரை-1
****
"கள்" விகுதி
(புலவர் இரா. கிருட்டிணன் (இராகி) பி.லிட்.)
'வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் மிகும்' என்னும் விதி, சொல்லொடு சொல்
புணரும் பொருட்புணர்ச்சிக்கே பொருந்துவதாகும்.விகுதி முதலிய இடைச் சொற்
புணர்ச்சிக்கு
ஏற்புடைத்தாகத் தோன்றவில்லை. இருவகை வழக்குகளையும் 'ஒப்பீட்டு முறையில்'
உற்று நோக்கின் இது தெற்றெனப் புலப்படும்.
1. உலக வழக்கு :
(வீட்டுக்) கணக்குகள்; மக்குகள்; நாக்குகள்; வாக்குகள்; கொக்குகள்;
விளக்குகள்; (மூன்று) முடிச்சுகள்; கச்சுகள்; வீச்சுகள் (இரும்புப்)
பூட்டுகள்;தட்டுகள், ஓட்டுகள்; முட்டுகள்;மத்துகள்; வித்துகள்;
வாத்துகள்;கொப்புகள்; ஆப்புகள்; தோப்புகள் (தென்னங்)கீற்றுகள்;
நாற்றுகள்; கூற்றுகள்;
2. செய்யுள் வழக்கு :
1 'மாதரம்' பொற் "கொப்புகளும்"...
என்று கலைசைச் சிலேடை வெண்பாவும்,
2 'மலக்குகள் வணக்கம் செய்தார்...'
என்று சீறாப்புராணமும்,
3 'நாடியே வட்டுகள் ஆடிடுவோம்...'
என்று கவிமணியும்,
4 'கோள்களாற் பலர் குத்துகளாற் பலர்...'என்று கம்பரும், பிற்காலச்
சான்றோர் பலரும் ஆண்டுள்ளனர். மிகுத்து எழுதுவதால் ஏற்படும்
பொருள்மாறுபாட்டையும்
காண்போம். சான்றுக்கு ஒன்று :
'தோப்புக்கள்' என்று மிகுத்தபோழ்து, 'தோப்பிலிருந்து இறக்கப்பட்ட கள்'
என்னும் பொருள் தந்து, 'கள்' சொல்லாகி விடுகிறது. எனவே, 'தோப்புகள்'
என்று மிகாமையே பன்மையைக் குறிக்கிறது எனலாம். இந்நிலையில்
'எழுத்துக்கள்' என்றால், எழுத்திலிருந்து இறக்கப்பட்ட 'கள்' என்று
பொருளாகு மன்றோ! அப்படி ஒருவகைக் கள் இந்நாள் வரை இல்லையன்றோ!
இப்படியெல்லாம் எண்ணிப் பார்த்தால் நகைப்பிற்கு இடமளிக்கிறதன்றோ! எனவே,
இனியாகிலும்; வாழ்த்துக்கள், கருத்துக்கள், குறிப்புக்கள் என்றெல்லாம்
மிகுத்து எழுதும் போக்கை நீக்கி,
"இனியொரு விதி செய்வோம் -- அதை
எந்த நாளும் காப்போம்!"
என்று பாரதி சமுதாயத்திற்குப் பாடியது, இதற்கும் பொருந்துவதாக வுள்ளதை
எண்ணி, இயையப் புணர்த்தல் தெள்ளியோர் கடனாய்க் கொள்வோம்.
குறிப்பு : 'கருத்து' முதுப்பெரும் புலவர் உயர்திருமே.வீ.வே.
அவர்களுடையது.
.நன்றி : செந்தமிழ்ச் செல்வி 56-வது சிலம்பு
******
கட்டுரை-2
****
தமிழண்ணல்
------
நாட்கள்/நாள்கள்
''நாள் என்பதன் பன்மைச் சொல் நாள்கள் அல்லது நாட்கள் - இதில் எது
சரி?''. ''நாட்கள் என்பது நாட்பட்ட பழைய கள்ளைக் குறிக்கும் என்றும்
நாள்கள் என்பதே சரி என்றும்'' பலர் கருதுகின்றனர். முன்பே பெரியவர்
மே.வீ.
வேணுகோபாலப் பிள்ளை இதைப் பலமுறை விளக்கியுள்ளார். வாள்கள், தாள்கள்,
நாள்கள் என்றே வரும். 'கள்' விகுதி பிற்பட்டதாகலின் இலக்கண நூல்களில்
அதற்கு விதி கூறப்படவில்லை. வாள் + கண் = வாட்கண். நாள் + குறிப்பு =
நாட்குறிப்பு என ஏனைய இடத்தில் திரியும் பழக்கத்தில் இது வந்துவிட்டது.
சரியானபடி பயன்படுத்த முயற்சி
யெடுத்துத் தவறாக எழுதிவிடும் பழக்கத்தை இது காட்டுகிறது. 'சியோல்
ஒலிம்பிக் போட்டிகள் பதினாறு நாள்கள் நடக்கும்' என்பதே முறையாகும். ஆனால்
'நாட்கள் நடக்கும்' என்றால்தான் செவ்விய தமிழ்போல் தோன்றுமளவும் நிலைமை
முற்றிவிட்டது.
'நாள்கள்' என்னும்போது ஒலிப்பு ஒரு மாதிரியிருத்தலால் நாட்கள் புகுந்து
நிலைத்து விட்டது போல் தோன்றுகிறது.
சென்னை எம்.ஏ.ராஜசேகரன், தமிழ் அறிஞர் அ.மு.ப. அவர்களது கருத்தைத் தம்
மடலில் கீழ்வருமாறு தந்துள்ளமை குறிப்பிடத்தக்க சிந்தனையாகும்:
நாட்கள் என்ற சொல் பற்றி, பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம், தனது, 'தனது
ஏழு நாட்களில் எழுபது நாடுகள்' என்ற நூலில் பின்வருமாறு
குறிப்பிட்டுள்ளார். 'நாள்கள் என்பதுதான் இலக்கண முறைப்படி சரியாயினும்
நாட்கள் என்று நான் கொண்டதற்குக் காரணம் காட்டல் வேண்டும். நாள்கள்
என்னும்போது ஒலியமைப்பில் ஓசை தடைப்படுகின்ற (HIATUS) காரணத்தால், இம்
மாற்றம் கையாளப் பெறுகின்றது. 15 ஆண்டுகளுக்கு முன், சென்னைப்
பல்கலைக்கழக சார்பில், பச்சையப்பன் கல்லூரியில், என் பொறுப்பில் நடைபெற்ற
புத்தொளிப் பயிற்சி (Orientation Course) வகுப்பில் பெரும்புலவர்
வேணுகோபாலப் பிள்ளை உட்படப் பல அறிஞர்களும் 20 கல்லூரிகளின்
பேராசிரியர்களும், பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறையினரும், இரண்டு மணி
நேரம் இச்சொல்
பற்றி விவாதித்து ஆராய்ந்து 'நாள்கள்' தான் இலக்கண மரபில் ஏற்றுக் கொள்ள
வேண்டியதாயினும், ஓசை இனிமை கருதியும், இடையில் ஓசைத்தடங்கல் இன்றிச்
செல்ல வேண்டியும், (இலக்கண நெறியும் அந்த வகைக்கே வழி செய்கின்ற
ஒன்றாதலானும்) 'நாட்கள்' எனவும் எழுதலாம் என்று முடிவு செய்தனர். பலரும்
அச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர். எனினும், தமிழாசிரியனான நான்
பயன்படுத்துவது
தவறு எனச் சிலர் கருதக்கூடும். எனவே, இக் குறிப்பினை எழுதினேன்.’
******
20-ஆம் நூற்றாண்டுத் தமிழில் அப்படித்தான் தெரிகிறது.
இசைப்பாடல்களில் தமிழின் ஓசைநயம்
காட்டிய பாரதியார் நாட்கள் என்று பலமுறை எழுதுகிறார்.
பாரதியாரின் இசைவல்லமை பற்றி ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
http://www.jeyamohan.in/?p=21383
நாட்கள் போலவே 20-ஆம் நூற்றாண்டுத்தமிழில் அதிகம்
உள்ள இன்னொரு சொல்: ஆட்கள்.
ஈழத் தமிழர் யாரிடமாவது இக்கட்டுரை இருக்கிறதா?
என்று கேட்போம்.
மகாவித்துவான் F. X. C. நடராசா. சொல்லும் பொருளும், 1982.
8. நாட்களா, நாள்களா@ ஆட்களா, ஆள்களா.
http://www.noolaham.net/project/03/217/217.htm
நா. கணேசன்
வேல்கள், நாள்கள், தாள்கள், நூல்கள், கால்கள், கோல்கள், கோள்கள்,
சேல்கள், சால்கள், தாள்கள், தால்கள், தேள்கள், தோள்கள்
நாள்கள், நூல்கள், வால்கள், வாள்கள், வேல்கள், ......
இவற்றுக்கெல்லாம் ஓசை சரியாய் இருக்காதா?
நா. கணேசன்
On Oct 24, 9:14 am, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:
On Oct 24, 9:30 am, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> 2011/10/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > பல ஆறுகளின் நீர்களைக் குடித்தேன் என்பது தவறு.
>
> > பல ஆறுகளின் நீரைக் குடித்தேன் என்க.
>
> > பலருடைய தாகங்களைத் தண்ணீர் கொடுத்து நீக்கினான்
> > என்பது தவறு. தாகத்தை என்க.
>
> > நாட்டு மக்களுடைய வறுமைகளை ஒழிக்க என்பது தவறு.
> > வறுமையை என்க.
>
> > தாகம், வறுமை ஆகியவற்றிற்குப் பன்மை கிடையாது.
>
> வாழ்த்து என்பதும் மேற்குறித்தவாறு தானே. வாழ்த்து போன்ற சொற்களுக்குப்
> பன்மையுண்டா
>
பழைய காலத்தில் இல்லை. விஜயராகவன் ஒருமுறை கேட்டிருந்தார்.
‘மாடல்ல மற்றையவை’ குறளில் மாடு என்றால் இப்போதைய மாடுகள் தானே.
இப்போது பொங்கல் வாழ்த்துகள்/வாழ்த்துக்கள் எல்லாம் வந்துவிட்டது.
இங்கிலீஷில் cow, cows, என்றெல்லாம் இருப்பதால், தமிழுக்கும்
“கள்” -s விகுதிக்கு ஆகிறது போலும்.
கணேசன்
> அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
பண்டைக்காலத்தில் எழுத்து என்றால் போதுமானதாக இருந்துள்ளது.
”எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப”
- முதல் நூற்பா, தொல்காப்பியம்.
சொற்கள், கற்கள், பற்கள், முட்கள், ... இருக்கின்றன. புட்கள் (= புள்கள்)
உண்டோ?
---------
நெடிலில் தொடங்கும் ஓரசைச் சொல்களுக்கு பொதுவாகச் சந்தித்திரிபு இல்லை.
நாட்கள் - ஒரு விதிவிலக்கு எனலாம். ஏனைச் சொற்கள் ள் > ட் ஆகாமல்
இருப்பதால் கெடாத ஓசை, நாள்கள் என்றால் எப்படிக் கெடுகிறது
என விளங்கவில்லை.
நா. கணேசன்
On Oct 25, 11:15 pm, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:
> On Oct 25, 8:03 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
>
> > இந்தப் பொருள் பற்றிய பல கட்டுரைகளில் இல்லாத சில நுண்மைகளும் தற்காலப்
> > பயன்பாட்டில்/பரிந்துரையில் காணப்படுகின்றன. மேலும் வரும்.
>
> > சில சொற்களில், ஒற்று மிகுதலால் பொருள் வேறுபடுவதைக் குறிக்கிறார்கள் என்பது
> > ஒரு நுணுக்கம்.
>
> > உதாரணம்:
> > தமிழ் மொழியில் எத்தனை எழுத்துக்கள்( letters) உள்ளன?
>
> > எனக்குக் ’கல்கி’யின் எழுத்துகளைப்( writings) பிடிக்கும்.
>
> பண்டைக்காலத்தில் எழுத்து என்றால் போதுமானதாக இருந்துள்ளது.
> ”எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப”
> - முதல் நூற்பா, தொல்காப்பியம்.
>
> சொற்கள், கற்கள், பற்கள், முட்கள், ... இருக்கின்றன. புட்கள் (= புள்கள்)
> உண்டோ?
>
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச் *சொற்கள்*
என்ன பயனும் இல (குறள்)
தொண்டரடிப்பொடியாழ்வார் - திருப்பள்ளியெழுச்சி
(921)
புலம்பின *புட்களும்* பூம்பொழில் களின்வாய் போயிற்றுக் கங்குல் புகுந்தது
புலரி
கலந்தது குணதிசை கனைகட லரவம் களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான் அமரர்கள் புகுந்தன ராதலி லம்மா
இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில் எம்பெரு மான் பள்ளி யெழுந்தரு ளாயே.
சொற்கள், கற்கள், பற்கள், முட்கள், ... இருக்கின்றன. புட்கள் (= புள்கள்)
உண்டோ?
"வானத்துப் புட்களெல்லாம் மையலுறப் பாடுகிறாய்.
ஞானத்தில் புட்களிலு நன்கு சிறந்துள்ளாய். (36)
காதலர்நீ யெய்துகிலா காரணந்தான் யாதென்"றேன்.
வேதனையு நாணு மிகுந்த குரலினிலே