பாதமே ஏத்தாப் பகல்

3 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
May 13, 2026, 8:48:42 PM (2 days ago) May 13
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய (14-05-26)வெண்பா  🪷🪷🪷

ஆதாரம் என்றறிந்தும் ஆன்மாநீ யென்றறிந்தும்
போதெல்லாம் போக்கினேன் புன்மையன் - சாதுசனம்
கோதின்றிச் சொன்னதெல்லாம் கொண்டேன் இனிவேண்டேன்
பாதமே ஏத்தாப் பகல்                                                                               1

  _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
May 14, 2026, 8:45:58 PM (17 hours ago) May 14
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய ( 15-05-26)வெண்பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷

வேதனை வந்தாலும் சோதனை வந்தாலும்
சாதனை செய்யவே நின்றாலும் - ஆதியா
நீதியாய்க் கொண்டேன் நினைவினில் வேண்டேனுன்
பாதமே ஏத்தாப் பகல் 
                                              2


  _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Reply all
Reply to author
Forward
0 new messages