8. அண்ணாமலை வளர் நெடுதீயாய்…
வாணிவரன் வேணுதரன் நாணயிவர் காணவெழு வாணன்வளர்தீத்
தூணிலுறை நீணெடிய தாணுவுரு பூணுமரன் சோணகிரிவாழ்
ஆணனிரு பாணமெதிர் தூணெரியும் வீணனென தாணவமலம்
வேணிபுய மாணனவன் தாணினையு மாணொழுக வேணுமகமே
பதம்பிரித்த வடிவம்:
வாணிவரன் வேணுதரன் நாணயிவர் காணவெழு வாணன்வளர்தீத்
தூணிலுறை நீள்நெடிய தாணுவுரு பூணும்அரன் சோணகிரிவாழ்
ஆணன் இரு பாணம் எதிர் தூள் நெரியும் வீணனெனது ஆணவமலம்
வேணிபுய மாணன் அவன் தாள் நினையு மாணொழுக வேணுமகமே
[வாணிவரன் - Lord Brahma வேணுதரன் - Lord who wears the flute, Vishnu வாணன் - Lord Shiva தாணு - Column (of fire) or mountain பூணுதல் - Wear ஆணன் - One who is the great purusha or ruler நெரிதல் - break into pieces ஆணவமலம் - Ego, வேணி - root புயத்தல் - to pluck
or pull out தாணினையு = தாள்+நினையு(ம்), மாண் - Greatness]
வாணியின் வரனான பிரம்மாவும், வேணுகோபாலனான விஷ்ணுவும் ஆணவமழிய, நாண, நெடிது வளர்ந்த அம்பலவாணன் தீயினாலான தூணாய் அடிமுடியின்றி தாணுவுரு பூண்டான். அந்த அரனது சோணகிரியில் வாழும் ஆணன் (எம்பெருமான் ரமணன்) தன் இரு கண்மலர் பாணங்களைச் செலுத்த, அவற்றின் எதிரில் தூள் தூளாய்
நெரியும் வீணணாகிய எனது ஆணவமலம். இருந்தும் அந்த ஆணவத்தினை வேரோடு பிடுங்கி எறிய அந்த மாண்புக்குரிய குரு ரமணரின் தாளை நினைக்கும் மாண்பை ஒழுக வேண்டும் என் அகமே!
The groom of goddess Vani, i.e. Lord Brahma and the Lord who carries the flute, i.e. Lord Krishna (or Vishnu) watched in shame as their egos were crushed by the ever-rising column of fire, i.e., the infinite form of Lord Ambala Vanan. He is none other than
our Lord who lives in Sona Giri, the great purusha, i.e., Lord Ramana, who assumed out of his compassion, this infinite pillar form of fire. In front of His piercing arrow like two eyes, my impure ego will break into pieces and disintegrate. In order to pluck
out its root, please remember the feet of the noble guru and practice that noble discipline without fail, Oh my heart!
Always in Bhagavan
Sathiya
--
சும்மா இரு. Be Still.