as young as you feel

19 views
Skip to first unread message

veNbA virumbi

unread,
Mar 22, 2026, 9:16:57 AM (3 days ago) Mar 22
to சந்தவசந்தம்
Received via Whatsapp earlier today:

"Today is as young as you feel day.  Don't allow yourself to be treated as old or feel old."

My (pessimistic) reaction/response is given below.  Thanks for your time and indulgence.

********************
(நேரிசை வெண்பா)

மெய்யில் வலிபலவும் வெவ்வேறு நோயுமுள்ளத்
தொய்வும் வயதேறத் தோன்றுமால் - மெய்யில்
அகத்தில் உளதே அகவையெனும் எண்ணஞ்
சுகத்தைத் தருவதெங்ஙன் சொல்.
********************

இமயவரம்பன்

unread,
Mar 22, 2026, 9:40:41 AM (3 days ago) Mar 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Very nice Venba that excels in form, style and feeling! 

My attempt on the similar (pessimistic) theme Inspired by your poem: 

வளைவுற்ற தண்டூன்றி வன்பிணியால் வாடிக்
களையற் றுதிர்சருகாய்க் காய்ந்தே - உளமும் 
தளர்வுற் றுருக்குலைந்தார் தம்மெண்ணத் தெங்கே
இளமை இருக்கும் இயம்பு.

- இமயவரம்பன் 

Arasi Palaniappan

unread,
Mar 22, 2026, 10:13:52 AM (3 days ago) Mar 22
to சந்தவசந்தம்
தாளிரண்டின் தள்ளாமை தாங்கவொரு கால்தொடர 
நாளெல்லாம் வாட்டி  நலிமுதுமை - ஆள்போதும் 
செய்ய தமிழ்ப்பெண்ணாள் சிந்தை கொலுவிருக்க 
வையம் அவர்கை வசம்!

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/70213365-6889-4b62-acc8-4bf200fe44b9n%40googlegroups.com.

Rajagopalan Soundararajan

unread,
Mar 22, 2026, 10:47:39 AM (3 days ago) Mar 22
to சந்தவசந்தம்

An optimistic counter thought.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனைய துயர்வெனவே-கள்ளமின்றி

எண்ணம் இதுவாகில் என்றும் இளமைதான்

திண்ணம் நிறைவாம் திறம்.


On Sunday, 22 March 2026 at 09:16:57 UTC-4 veNbA virumbi wrote:

இமயவரம்பன்

unread,
Mar 22, 2026, 10:48:00 AM (3 days ago) Mar 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com


செந்தமிழால் சிந்தை நலமாகும் என்னும் சிறந்த கரூத்துப் பொலிந்த கவிதை மிக அருமை, திரு. பழனியப்பன்!

- இமயவரம்பன்

Arasi Palaniappan

unread,
Mar 22, 2026, 11:44:46 AM (2 days ago) Mar 22
to சந்தவசந்தம்
மிக்க நன்றி இளவல் இமயமே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Saranya Gurumurthy

unread,
Mar 22, 2026, 12:13:09 PM (2 days ago) Mar 22
to சந்தவசந்தம்
அருமையான பாடல்கள்.

பொய்கை ஆழ்வாரின் பாசுரம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

காப்புன்னை உன்னக் கழியும் அருவினைகள்,
ஆப்புன்னை உன்ன அவிழ்ந்தொழியும் - மூப்புன்னைச்
சிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி. 

சரண்யா

GOPAL Vis

unread,
Mar 22, 2026, 10:18:07 PM (2 days ago) Mar 22
to santhav...@googlegroups.com
மூப்பை உணர முதிர்வோம் உதிர்வோமா?
காப்புக் கிறைமுன் கையிரண்டும் கூப்பி
உளம்நிறைவோம்; உள்ளவுடல் நோய்வலிகள் எல்லாம்
இளமை முதுமைக் கியல்பு!

நல்வாழ்த்துகள்
கோபால்
[23/03/2026]

--

Subbaier Ramasami

unread,
Mar 23, 2026, 9:47:15 AM (yesterday) Mar 23
to santhav...@googlegroups.com
முதுமை வரும் நோய்கள்  முற்றாக மாறிச்
சிதைய இளமையிலும் சேரும் - இதமாய்
முதுமை  வரையில் முறையொழுங்கில் வாழ்ந்தால்
சுதிமாறா வாழ்வில் சுகம்



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages