பாரதி வழியிலாநாம்
பயணத்தைச் செலுத்து கின்றோம்
யாரடா சொன்னார் ?, இந்த
அவலத்தை என்ன சொல்வேன்?
வேரடி வரையில் சென்று
வித்தகன் தேச பக்திச்
சீரினை பாடிச் சென்றான்
தேசத்தை மறந்து விட்டோம்
எப்படி நிலைக்கும் அஞ்சாது
இருவென நமக்குச் சொன்னான்
அப்படிச் சொன்னால் நம்மை
அடிப்பனோ, சற்றே மாற்றி
இப்படிச் சொன்னால் எங்கே
இடிப்பனோ என்று தானே
செப்படி வித்தை காட்டிச்
சீவனை நடத்து கின்றோம்---
பாரதி வழியிலா நாம் பயணத்தைச் செலுத்துகின்றோம்
பாடினான் சுதந்தி ரத்தை,
பரவினான் பாரத தத்தை
நாடினான் கிடைத்த பின்னே
நாடுகொள் பெற்றி எல்லாம்
ஈடிலாக் கவிஞன் கண்ட
எழுச்சிகள் மறந்து விட்டு
கோடியில் தானே நித்தம்
குளிக்கிறார் தலைவர் பல்லோர்!-
ரதி வழியிலா நாம் பயணத்தைச் செலுத்துகின்றோம்
பேசுக தமிழை என்றான்,
பிழையறக் கற்கச் சொன்னான்
மாசிலாக் கவிஞன் சொன்ன
வார்த்தைகள் கேட்கின் றோமா?
காசிலை எனினும் அப்பன்
'கான்வெண்டில்' பயலைச் சேர்ப்பான்
ஆசையாய்த் தமிழைப் பேச
ஆளிலை என்ன செய்ய்?
-பாரதி வழியிலா நாம் பயணத்தைச் செலுத்துகின்றோம்
சாதிகள் இல்லை என்றான்
சரியென ஏற்றுக் கொண்டே
வீதிகள் எங்கும் சாதி
வீறுகள் பேசு கின்றார்
நாதியே இன்றி சாதி
நலிந்திடும் என்ற போதும்
போதியோ, என்று சொல்லிப்
பொறுப்புடன் பாது காப்பார்
-பாரதி வழியிலா நாம் பயணத்தைச் செலுத்துகின்றோம்
தன்னலம் கருதி டாமல்
தாங்குக நாட்டை என்றான்
என்மகன் எனக்குப் பின்னே
என்னரும் மனைவி மார்கள்
தன்னரும் மக்கள் எல்லாம்
தலைவர்க:ள் ஆக வேண்டும்
அன்னதே விதியென்றேதான்
ஆட்டங்கள் ஆடு கின்றார் -
பாரதி வழியிலா நாம் பயணத்தைச் செலுத்துகின்றோம்
அடிமையாய்ப் பெண்கள் வாழ்ந்த
அவலமே கண்டு நொந்து
விடியலைக் காட்டு தற்கு
வித்தகப் பாட்டி சைத்தான்
விடுத்தவன் கவிதை யாலே
விடியலை நெருங்கும் போதும்
அடுப்புகள் பெண்க ளுக்கா
அடிக்கடி வெடிப்ப தேனோ? --
பாரதி வழியிலா நாம் பயணத்தைச் செலுத்துகின்றோம்
பண்டிதன் ஆன போதும்
பரிவதும் இல்லை யென்றால்
விண்டிடும் கவிதை அந்தோ
வெற்றெனச் சொன்னான், இங்கே
குண்டுகள் வெடிக்கும், பல்லோர்
குற்றுயிர் ஆகிப் போவார்
கண்டுநாம் பதற மாட்டோம்
கவிதையும் உயிர்த்தி டாது.
பாரதி வழியிலா நாம் பயணத்தைச் செலுத்துகின்றோம்
(பிறர் துன்பத்தைக் காணும் போது தனது துன்பம் போல் எண்ணி வருந்தும் இயல்புடைய ஒருவனும்
பிறர் துன்பத்தைக் கருதாத ஒருவனும் யாப்பிலக்கணம் படித்துக் கவிதை செய்யப் பழகுவாராயின்
முந்தியவன் உண்மையான கவிதை எழுதுவான், பிந்தியவன் கவிதைகளைப் பின்னுவான், இவனுடைய தொழிலிலே கவிதை இராது-- பாரதி கட்டுரைகள் - சங்கீத விஷயம்- பக்கம் 212))
தொழிலினைக் கற்று மக்கள்
சுகம்பெற வாழு தற்கு
வழியினைச் சொன்னான், இங்கே
வரவினுக் காய்கல் லூரி
கொழித்திடும், செல்வ முள்ளோர்
குறைவறக் கற்றல் கூடும்
விழியினைத் தைத்து விட்டால்
வெளிச்சத்தைக் காண்ப தெப்போ? –
பாரதி வழியிலா நாம் பயணத்தைச் செலுத்துகின்றோம்
(திருச்சியிலே ஒரு தொழிற்கல்விச்சாலை திறக்கப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ந்து
பாரதி அப்படிப்பட்ட கலாசாலைகள் நிறையத் திறக்கப்படவேண்டும் என்றும்
அவற்றில்கற்பவர்கள் ஏழைகளாக இருப்பதால் பணம் கொடுக்க இயலாது என்றும்
அரசே இதற்கு முன்வரவேண்டும் என்றும் எழுதுகிறான்- (விஜயா,8 பிப்ரவரி, 1910)
பாரதி வழியில் செல்லும்
பக்குவம் பெறுவ தற்கு
வேரிலே வெந்நீர் ஊற்றும்
வீணரைச் சதைக்க வேண்டும்
ஓரிரு பேர்க ளேனும்
ஊரிலே நல்லோர் வேண்டும்
காரிருள் தனை விரட்டக்
கைவிளக்கு ஒன்று வேண்டும்
-பாரதி வழியிலா நாம் பயணத்தைச் செலுத்துகின்றோம்
இலந்தை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCeH_U0oRmM1nPqdQPmMocWo-T3-8a3tiPcO9wrJLq04g%40mail.gmail.com.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/4D49652D-9C80-4476-8987-1543362E1282%40gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtgFz%3DL-6_OmJ0O83gJ4d%2BXAvyVOdmfjb6mZejYH7BH9uw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNMO0vvvaNPa_oee5gxvL2jpuaYcSTdBTFsXU63eHk8tbA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-%2Bb9YkQRjpeSSA%3D337SjuM01W2etYZZugGBxLx8%2BW-U8A%40mail.gmail.com.
On Dec 12, 2025, at 07:17, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
இராமசாமியின் பாட்டைப் பாரடா,