இறகுப்பந்துவிடு தூது!
காற்றில் எழுந்து கணக்காய் நனிவிரைந்து
மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து –தோற்றாராய்
ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என்
ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு!
ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்!
வேகும் அவள்நினைவின் வெப்பத்தால்; -ஆகம்*
இழைபோல் இளைத்த இவன்நிலையைச் சொல்லி
அழைப்பாய் அவளைச்சென் றாங்கு! (ஆகம் -உடல்)
ஆங்கவளைக் கண்டார்த் தருங்கதைகள் பேசிப்பின்
தேங்குவளைக் கண்ணாட்குச் சேவைசெய்! –பாங்காய்ப்பின்
என்நிலையைச் சொல்க! எழுங்காதல் மிக்குடையாள்
தன்நிலையைச் சொல்வாள் தளர்ந்து!
தளர்ந்து தனித்துத் தவிக்கின்றேன் நீபோய்
வளர்ந்தமுலை மாதை வரச்சொல்! –குளம்வாழ்
மரைமுகத் தாளும் மறுப்பாள் எனிலோ
இறப்பான் இவனென் றியம்பு!
இயம்புங்கால் அன்னவளின் இன்முகத்தை நோக்கு!
மயங்கும் விழிகள்; மருள்வாள்; -தயங்காதே!
நண்டோடு நீர்த்துறையில் நானுள்ளேன்; என்னுயிரோ
ஒண்டொடி தன்சொல்லில் உண்டு!
உண்டா எனக்கேள் உறுகாதல் என்மீதிற்
பெண்டாள் இலையென்னாள்; பின்பென்ன? –பண்டென்
உளங்கள வாடி உவந்தாள்தன் மேனி
வளங்கள வாடுகிறேன் வந்து!
வந்தாரக் கட்டி வளஞ்சேர்க்கச் சொல்தன்னைத்
தந்தாலே என்னுயிர் தங்குமெனும் –அந்தப்பேர்
உண்மையினைச் சொல்லி உளமறிந்து வா!இந்த
நன்மையினைச் செய்க நயந்து!
நயந்தேன்; அவளின் நறுந்தேன் உடலை
வியந்தேன்; இதனை விளம்பத் –தியங்குமென்
ஆவியுண் கண்ணாள் அருகிருந்தென் னையணைக்கத்
தூவிறகுப் பந்தே!போ தூது! (தியங்குதல் –கலங்குதல்)
தூதாக உன்னையத் தோகை இடஞ்செல்லத்
தோதாவாய் என்பதினால் சொல்லிவைத்தேன் –போதாயோ?
மெல்லபோ கின்ற மிறல்*பந்தே! பெண்நெஞ்சை
வெல்லப்போ கொஞ்சம் விரைந்து! (மிறல் -பெருமை)
அகரம் அமுதா
தூதிலக்கியத்திற்கென்று சில நெறிமுறைகள் உண்டு.
அவற்றில் சில
அனுப்புகிற தூதை மற்றத்தூதுகளைவிடச் சிறந்ததாகச் சித்தரிக்கவேண்டும்.
யாருக்கு அனுப்புகிறோமோ அவர் இருக்குமிடம் அங்குச் செல்லும் வழி சொல்ல வேண்டும்
யாருக்கு அனுப்புகிறோமோ அவரின் அடையாளங்கள் சொல்ல வேண்டும்.
இருவர் மட்டும் அறிந்த குறியீட்டுச் சொற்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை அடையாளமாகச் சொல்லலாம்.
அடுத்தது சொல்ல வேண்டிய செய்தி.
இலந்தை
சொல்லிய வெண்பாச் சுகம்கண்டேன் - புல்லிய
வார்த்தைகள் வீழாமல் வாகாய் இணைந்திருக்கும்
நேர்த்தியைப் போற்றுமென் நெஞ்சு
அகரம் அமுதா அளித்தவெண் பாக்கள்
சிகரத்தில் ஏற்றிவைத்த தீ
இலந்தை
சான்றோரின் பார்வைக்கு! பிழையிருப்பின் சுட்டுக.
இறகுப்பந்துவிடு தூது!
காற்றில் எழுந்து கணக்காய் நனிவிரைந்து
மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து –தோற்றாராய்
ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என்
ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு!
ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்!
வேகும் அவள்நினைவின் வெப்பத்தால்; -ஆகம்*
இழைபோல் இளைத்த இவன்நிலையைச் சொல்லி
அழைப்பாய் அவளைச்சென் றாங்கு! (ஆகம் -உடல்)
ஆங்கவளைக் கண்டார்த் தருங்கதைகள் பேசிப்பின்
தேங்குவளைக் கண்ணாட்குச் சேவைசெய்! –பாங்காய்ப்பின்
என்நிலையைச் சொல்க! எழுங்காதல் மிக்குடையாள்
தன்நிலையைச் சொல்வாள் தளர்ந்து!
தளர்ந்து தனித்துத் தவிக்கின்றேன் நீபோய்
வளர்ந்தமுலை மாதை வரச்சொல்! –குளம்வாழ்
மரைமுகத் தாளும் மறுப்பாள் எனிலோ
இறப்பான் இவனென் றியம்பு!
இயம்புங்கால் அன்னவளின் இன்முகத்தை நோக்கு!
மயங்கும் விழிகள்; மருள்வாள்; -தயங்காதே!
நண்டோடு நீர்த்துறையில் நானுள்ளேன்; என்னுயிரோ
ஒண்டொடி தன்சொல்லில் உண்டு!
உண்டா எனக்கேள் உறுகாதல் என்மீதிற்
பெண்டாள் இலையென்னாள்; பின்பென்ன? –பண்டென்
உளங்கள வாடி உவந்தாள்தன் மேனி
வளங்கள வாடுகிறேன் வந்து!
வந்தாரக் கட்டி வளஞ்சேர்க்கச் சொல்தன்னைத்
தந்தாலே என்னுயிர் தங்குமெனும் –அந்தப்பேர்
உண்மையினைச் சொல்லி உளமறிந்து வா!இந்த
நன்மையினைச் செய்க நயந்து!
நயந்தேன்; அவளின் நறுந்தேன் உடலை
வியந்தேன்; இதனை விளம்பத் –தியங்குமென்
ஆவியுண் கண்ணாள் அருகிருந்தென் னையணைக்கத்
தூவிறகுப் பந்தே!போ தூது! (தியங்குதல் –கலங்குதல்)
தூதாக உன்னையத் தோகை இடஞ்செல்லத்
தோதாவாய் என்பதினால் சொல்லிவைத்தேன் –போதாயோ?
மெல்லபோ கின்ற மிறல்*பந்தே! பெண்நெஞ்சை
வெல்லப்போ கொஞ்சம் விரைந்து! (மிறல் -பெருமை)
அகரம் அமுதா
On 1 Sep, 22:06, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> அந்தாதி அமைப்பில் நல்ல முயற்சி. வாழ்த்துகள்!
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2009/9/1 agramamutha <agramamuth...@gmail.com>
> --http://nayanmars.netne.net/
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -
தோகைப்பந் தைத்தேர்ந்து தோகைக்குத் தூதனுப்பும்
வாகும் வனைந்தகவின் வெண்பாவும் - நீகை
தட்டிப்பா ராட்டென்று சாற்றியவே ஆதலின்கை
கொட்டியிங்குக் கூறுவேன் வாழ்த்து!
அனந்த்
1-9-2009
////பந்தேநீ இங்குப் பறந்துன்னை ஏகிட்டார்
எந்தவூரில் உள்ளார் எதற்குநீ -- வந்தாய்
எனக்கென்ன செய்தி எடுத்துரை நீயே
உனக்குநான் மிட்டாய் தரேன். ////
உள்ளத்தில் உள்ள ஒருவனை அப்பேதை
கள்ளத் தனத்தால் கரந்தபடி -உள்ளபடி
சொல்லூரை என்றால் சொலுமோஅத் தோகைப்பந்
தல்லூறும் வெண்மதியாட் காங்கு?
On Sep 2, 3:07 am, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
> அஞ்சிறைப் பந்தை அகச்சிறை யிட்டு
> தன்சிறை யன்பின் தகவளித்துக் - கெஞ்சி
> உளக்கிடக்கை வஞ்சிக்(கு) உரைக்க வுரைத்தார்
> வளக்காதல் தூதால் வர!
>
> நடராஜன்.
>
> (முதல் வெண்பா காற்றில் எனத் தொடங்கியதால் கடைசி வெண்பாவின் ஈற்று சீர் காற்று
> என முடித்திருந்தால் அந்தாதி மேலும் சிறந்திருக்கும்.)
>
> 2009/9/1 agramamutha <agramamuth...@gmail.com>
> > அகரம் அமுதா- Hide quoted text -
//தோகைப்பந் தைத்தேர்ந்து தோகைக்குத் தூதனுப்பும்
வாகும் வனைந்தகவின் வெண்பாவும் - நீகை
தட்டிப்பா ராட்டென்று சாற்றியவே ஆதலின்கை
கொட்டியிங்குக் கூறுவேன் வாழ்த்து!////
தட்டிக் கொடுத்துத் தகவுடனே பாராட்டும்
நட்பிற் கரணான நம்ஆனந்த் -பெட்பின்
உருவாய்ச் சமைந்த ஒருவராம் இஃதில்
இருசொல்லுக் குண்டோ இடம்?
> > - Show quoted text -- Hide quoted text -
நடராஜன்.
(முதல் வெண்பா காற்றில் எனத் தொடங்கியதால் கடைசி வெண்பாவின் ஈற்று சீர்
காற்று
என முடித்திருந்தால் அந்தாதி மேலும் சிறந்திருக்கும்.)/////
அய்யா நடராசன் அவர்களின் பாவும் கருத்தும் அருமை. அந்தாதியாக எழுதியது
இதுவே முதன்முறை. மேலும் தூதெழுதியதும் முதன்முறையாகும். அய்யா இலந்தை
அவர்களும் சிற்சில விதிமுறைகளைச் சுட்டினார். தங்களின் இக்கருத்தையும்
மனதுட் கொள்கிறேன். இனியொரு தூதியம்புவேனாயின் இக்கருத்துக்களை உள்ளடக்கி
அழகிய தூதாக அமைத்துத்தருவேன். நன்றிகள்.
வெண்பா அந்தாதி நன்றாய் உள்ளது.
இறகுப்பந்து விடுதூது என்று பதம் பிரிக்கவும்.
அவ்வாறே உவேசா அச்சுப்போட்டுள்ளார்:
தமிழ் விடுதூது, கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது, ....
பந்தாடல் செய்யுள்கள் பல: கந்துகவரி (சிலம்பு), பெருங்கதை,
உந்தீ பற என்பதில் உந்தி ஒரு தக்கைப்பந்தே.
... குறவஞ்சிகள், வள்லலார் பாரதிதாசன், கண்ணதாசன், ... என்று
கேட்டுள்ளேன்.
பாரதிதாசன் பாட்டை முன்பு பார்த்துள்ளேன். பந்தாடல்
நமக்குத் தெரிந்த பாட்டுக்களைத் தொகுக்கலாம்.
புதுப் பந்து விளையாட்டுகள்ளுக்கு அவற்றின் நுட்பங்கள்,
நயங்கள், ஒலிக்குறிப்பு, சந்தத்தோடு பாட்டுக் கட்டவும்
இங்கு கவிகள் உளரே.
முன்பு பேரூர் மரகதவல்லி பந்தடி என்ற
பிரபந்தம் அச்சானது. 2 பாட்டு பார்த்துள்ளேன்.
தேடித் தருகிறேன். சந்த விருத்தம் பந்தடிக்கு
நல்ல யாப்பு.
கண்ணதாசன் பாடிய பந்தாட்டப் பாட்டு (சினிமா, ...)
யாரிடமாவது உள்ளதா?
நா. கணேசன்
/////பந்தாடல் செய்யுள்கள் பல: கந்துகவரி (சிலம்பு), பெருங்கதை,
உந்தீ பற என்பதில் உந்தி ஒரு தக்கைப்பந்தே.
... குறவஞ்சிகள், வள்லலார் பாரதிதாசன், கண்ணதாசன், ... என்று
கேட்டுள்ளேன்.
பாரதிதாசன் பாட்டை முன்பு பார்த்துள்ளேன். பந்தாடல்
நமக்குத் தெரிந்த பாட்டுக்களைத் தொகுக்கலாம். //////
கண்டிப்பாக. அறிந்தவர்கள் அனைவரும் பயன்பெற இழையிற் பதிப்பார்கள் என
எதிர்பார்க்கிறேன்.
திரு. கணேசனின் இடுகையைக் கண்டதும் தோன்றிய பாடல். இது சிலப்பதிகாரக் கந்துகவரிப் பாடலை* ஒட்டிய ஓசை கொண்டது:
அனந்த்
2-9-2009
On Sep 2, 10:00 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> திரு. கணேசனின் இடுகையைக் கண்டதும் தோன்றிய பாடல். இது சிலப்பதிகாரக்
> கந்துகவரிப் பாடலை* ஒட்டிய ஓசை கொண்டது:
>
> இங்கு மங்கு மாக ஏகும் இறகுப் பந்தை மாதரார்
> தங்கை மட்டை கொண்டு தாங்கித் தட்டி ஆடும் போதிலே
> தொங்கு கூந்தல் துள்ளி யாடத் தோடு மாடக் காண்கையில்
> பொங்கி ஆடும் காளை நெஞ்சில் பூத்த காதல் பூவுமே!
>
http://www.youtube.com/watch?v=QaV6gsyGfYI
http://www.raaga.com/play/?id=28178
பாடல்: பறக்கும் பந்து பறக்கும்
திரைப் படம்: பணக்காரக் குடும்பம் (1964)
பாடியவர்கள்: டி.எம்.ஸௌந்தர ராஜன், பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
நடிப்பு: எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி
டி.எம்.எஸ்: பறக்கும் பந்து பறக்கும் - அது
பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும் -அது
சிரித்தோடி வரும் மாது
சுசீலா: பறக்கும் பந்து பறக்கும் - அது
பறந்தோடி வரும் தூது
டி.எம்.எஸ்: சிரிக்கும் அழகு சிரிக்கும் - அது
சிரித்தோடி வரும் மாது
சுசீலா: ஓடும் உனை நாடும் - எனை
உன் சொந்தம் என்று கூறும்
திரும்பும் எனை நெருங்கும் - உந்தன்
பதில் கொண்டு வந்து போடும்
டி.எம்.எஸ்: பறக்கும்
இருவரும்: பந்து பறக்கும் - அது
பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும் - அது
சிரித்தோடி வரும் மாது
டி.எம்.எஸ்: இது தான் இந்த நிலவோ என்று
முகம் பார்க்கும் வண்ணப் பந்து
இல்லை இது முல்லை என்று
போராடும் கண்ணில் வண்டு
சுசீலா: வருவார் இன்று வருவார் என்று
மனதோடு சொல்லும் பந்து
வரட்டும் அவர் வரட்டும் என்று
வழி பார்க்கும் காதல் செண்டு
டி.எம்.எஸ்: பறக்கும்
இருவரும்: பந்து பறக்கும் - அது
பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும் - அது
சிரித்தோடி வரும் மாது
சுசீலா: முதல் நாள் இரவில் தனியே என்னை
அழைத்தோடி வரும் தென்றல்
இவர் தான் கொஞ்சம் கவனி என்று
இழுத்தோடி வரும் கண்கள்
டி.எம்.எஸ்: அருகில் மிக அருகில் கண்டு
அணை மீறி வரும் வெள்ளம்
அடங்கும் அன்று அடங்கும் இன்று
அலை பாய்ந்து வரும் உள்ளம்
இருவரும்: பறக்கும் பந்து பறக்கும் - அது
பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும் - அது
சிரித்தோடி வரும் மாது
~ கவிஞர் கண்ணதாசன்
On Sep 1, 8:42 am, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> தூதிலக்கியத்திற்கென்று சில நெறிமுறைகள் உண்டு.
>
> அவற்றில் சில
> அனுப்புகிற தூதை மற்றத்தூதுகளைவிடச் சிறந்ததாகச் சித்தரிக்கவேண்டும்.
> யாருக்கு அனுப்புகிறோமோ அவர் இருக்குமிடம் அங்குச் செல்லும் வழி சொல்ல வேண்டும்
> யாருக்கு அனுப்புகிறோமோ அவரின் அடையாளங்கள் சொல்ல வேண்டும்.
> இருவர் மட்டும் அறிந்த குறியீட்டுச் சொற்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை
> அடையாளமாகச் சொல்லலாம்.
>
> அடுத்தது சொல்ல வேண்டிய செய்தி.
>
அன்பின் அமுதா,
வணக்கம். இலந்தை ஐயாவின் ஒலிநாடா விடுதூது வாசிக்கவும்:
http://nganesan.blogspot.com/2004/05/blog-post_23.html
தமிழ் விடுதூது:
http://www.tamil.net/projectmadurai/pub/pm0040/tviTutUtu.pdf
பேரூர் மரகதாம்பிகை மீது குட்டியப்ப கவுண்டர் சொன்ன
கண்ணாடி விடுதூதை முதன்முதலாக உலகுக்குப்
ப்ராஜக்ட் மதுரை வாயிலாக நன்கொடை அளித்தேன்.
http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0183.html
குட்டியப்பக் கவி (18-ஆம் நூற்றாண்டு) பற்றி எழுத வேண்டும்: அவர் ஓர்
அந்தகக்கவி. தூதில் குறிப்புண்டு. சோதிட சாத்திரத்தில்
புலியாக விளங்கியவர் அவரது ஏழாம் தலைமுறைப் பேரர்
ஆர். என் கலியாணசுந்தரப் புலவர் ஏட்டிலிருந்து
16 - ஆகஸ்ட் - 1939 ஆம் வருடம் பெயர்த்து வைத்தது எனக்குக் கிடைத்தது.
இதுகிடைக்க ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தரின் சிஷ்யர்
சச்சிதானந்த சுவாமிகள் உதவினார்:
http://en.wikipedia.org/wiki/Swami_Satchidananda
(ரஜினிகாந்த் சச்சிதானந்தரின் சீடர் ஆகி பாபா என்ற படம் எடுத்தார்.
அதைப் பாருங்கள் என்று சொன்ன வேண்டுகோளுக்காக
தியேட்டருக்குப் போனார். ஏற்பட்ட கூட்ட நெரிசலால்
சச்சிட்தனந்தர் மாண்டார்.)
சுவாமி சச்சிதானந்தர் குட்டியப்ப கவுண்டருக்கு 8-ஆம் தலைமுறை,
ஆர். என். கலியாணசுந்தரத்தின் மகன். ஆர்.என்.கே தான்
சித்திரகவிக்கு முதலில் புத்தகம் அச்சுப்போட்டவர்
- முருகன் மீது ‘கந்தன் சித்திரபந்தன மாலை’.
------------
நடராஜன் சொல்வதுபோல், காற்று என்னும் ஈற்றுச்சொல் உள்ள
வெண்பா ஒன்று சேர்த்தால் பதிகம் ஆகிவிடும்.
முழுவட்டமாக முதல்வெண்பாவுடன் தொடர்புறும்.
-------
மத்திய கிழக்கு நாடுகளில் பணியமரும் பல இந்தியர்களுக்கும்
தம்பதியர் பிரிவைச் சுந்தரக் கவிராயரின் பழைய தனிப்பாடல் பொருந்தும்:
நறையொழுகுங் குழலாளை அமுதொழுகும் மொழியாளை நயனவேலிற்
பிறையொழுகும் நுதலாளைப் பிரிந்திருக்க இப்பிறப்பில் பெரிதும்யான்செய்
குறையெதுவோ மதன்கணைக்கு மிகவருந்த எனைவிதித்த கொடியோனான
மறையவனும் கலைமகளைப் பிரிந்திருந்தால் தெரியுமிந்த வருத்தந்தானே!
கணேசன்
> இலந்தை
>
> மெல்லிறகுப் பந்தை விரைகின்ற தூதாகச்
> சொல்லிய வெண்பாச் சுகம்கண்டேன் - புல்லிய
> வார்த்தைகள் வீழாமல் வாகாய் இணைந்திருக்கும்
> நேர்த்தியைப் போற்றுமென் நெஞ்சு
>
> அகரம் அமுதா அளித்தவெண் பாக்கள்
> சிகரத்தில் ஏற்றிவைத்த தீ
>
> இலந்தை
>
> 2009/9/1 agramamutha <agramamuth...@gmail.com>
அன்புடன்
அன்பில் சீனிவாசன்/////
உள்ளத்தில் உள்ள ஒருவனை அப்பேதை
கள்ளத் தனத்தால் கரந்தபடி -உள்ளபடி
சொல்லூரை என்றால் சொலுமோஅத் தோகைப்பந்
தல்லூறும் வெண்மதியாட் காங்கு?
/////உள்ளத்தில் உளன்பேர் உரைத்தால் அவள்தான்
கொள்வாள் பெருங்களிப்பு கூடலால் -- துள்ளும்
பெருமகிழ்வுக் கீடாய் புதுத்தென்றல் வீசும்
தருமாகில் பந்து பதில்.
அன்புடன்
அன்பில் சீனிவாசன்/////
////உள்ளத் துளன்பேர் உரைத்தால் அவளுந்தான்////
ஒருவனெனை வைத்துவக்கும் உள்ளத்தை ஊரார்க்
கருளியுவக் கின்றாளோ அந்தப்பெண்! அய்யய்யோ
பேரை உரையென்னும் பேதையவட் கென்சொல்வேன்?
ஆரையான் நோவ தறை!
On Sep 3, 8:30 pm, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> அழகு அழகு..
> யோகியார்
>
> 2009/9/2 Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
>
>
>
>
>
> > பூவைப் போன்ற காதல் மோத பூவை கண்ணைப் பார்க்கவே
> > ஏவும் பந்தை விட்டுக் கோதை ஏசிப் பேசிக் காய்த்தனள்
> > மேவும் காதல் உள்ள மோடி மூடக் காளைக் கண்களைப்
> > பாவும் பார்வை யோடு காளை பாட்டுப் பாடி நின்றனன்
>
> > 2009/9/3 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
> >> திரு. கணேசனின் இடுகையைக் கண்டதும் தோன்றிய பாடல். இது சிலப்பதிகாரக்
> >> கந்துகவரிப் பாடலை* ஒட்டிய ஓசை கொண்டது:
> >> இங்கு மங்கு மாக ஏகும் இறகுப் பந்தை மாதரார்
>
> >> தங்கை மட்டை கொண்டு தாங்கித் தட்டி ஆடும் போதிலே
> >> தொங்கு கூந்தல் துள்ளி யாடத் தோடு மாடக் காண்கையில்
> >> பொங்கி ஆடும் காளை நெஞ்சில் பூத்த காதல் பூவுமே!
>
> >> அனந்த்
> >> 2-9-2009
> >> * கந்துக வரியின் முதல் பாடல்
> >> பொன்னி லங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதை வில்லிட
> >> மின்னி லங்கு மேக லைக ளார்ப்ப ஆர்ப்ப எங்கணும்
> >> தென்னன் வாழ்க வாழ்க வென்று சென்று பந்த டித்துமே
> >> தேவார மார்பன் வாழ்க வென்று பந்த டித்துமே
>
> >> இதுபோன்ற சந்தத்தில் நானும் பசுபதியும் முன்பு போரம்ஹப் தளத்தில் கந்துகவரி
> >> பற்றிய இடுகைகளில் எழுதியது நினைவுக்கு வருகிறது.
>
> >> 2009/9/2 N. Ganesan naa.gane...@gmail.com
> அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!- Hide quoted text -
மேலும் பற்பலரும் பந்துபற்றி அழகிய செய்திகளையும் பாடல்களையும்
வழங்கியுள்ளீர்கள். அனைத்தையும் படித்து வியந்து நிற்கிறேன். இன்னும்
பந்தைப் பற்றி எத்தனை பாடல்களை உள்ளனவோ? அறிந்தவர் அறியத்தாருங்கள்.
> > >>> > தூவிறகுப் பந்தே!போ தூது! (தியங்குதல்- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »
> அஞ்சிறைப் பந்தை அகச்சிறை யிட்டு
> தன்சிறை யன்பின் தகவளித்துக் - கெஞ்சி
> உளக்கிடக்கை வஞ்சிக்(கு) உரைக்க வுரைத்தார்
> வளக்காதல் தூதால் வர!
நடராஜன்,
“அஞ்சிறை வண்டு, தும்பி” ~ அஞ்சிறைச் சிட்டு பற்றிப் பேசினோம்.
இறகுப் பந்துக்கு (ஷட்ல் சாக்) - அஞ்சிறைப் பந்து மிகப்
பொருத்தம். அஞ்சிறைச் சிட்டு (ஹம்மிங் பறவை) போல
காற்றில் சிறகால் விர், விர்ரெனப் பறப்பது அல்லவா அது?
----
"மருமாலை நீவாங்கி வா” என்பதுபோல் தூதுகள் முடியும்.
அஞ்சிறைப் பந்தே! அகச்சிறை நண்பரவர்
தன்சிறை யன்பின் தகவளித்துக் - கெஞ்சி
உளக்கிடக்கை வஞ்சிக்(கு) உரைக்க அமுதா
வளக்காதல் தூதாக வா!
நா. கணேசன்
> நடராஜன்.
> (முதல் வெண்பா காற்றில் எனத் தொடங்கியதால் கடைசி வெண்பாவின் ஈற்று சீர் காற்று
> என முடித்திருந்தால் அந்தாதி மேலும் சிறந்திருக்கும்.)
> 2009/9/1 agramamutha <agramamuth...@gmail.com>
> > அகரம் அமுதா- Hide quoted text -
> - Show quoted text -- Hide quoted text -
- Show quoted text -- Hide quoted text -
HP: 91852063
Email: girijavar...@gmail.com
=> On Sep 1, 2:07 pm, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
>
> > அஞ்சிறைப் பந்தை அகச்சிறை யிட்டு
> > தன்சிறை யன்பின் தகவளித்துக் - கெஞ்சி
> > உளக்கிடக்கை வஞ்சிக்(கு) உரைக்க வுரைத்தார்
> > வளக்காதல் தூதால் வர!
>>
> "மருமாலை நீவாங்கி வா” என்பதுபோல் தூதுகள் முடியும்.
>
> அஞ்சிறைப் பந்தே! அகச்சிறை நண்பரவர்
> தன்சிறை யன்பின் தகவளித்துக் - கெஞ்சி
> உளக்கிடக்கை வஞ்சிக்(கு) உரைக்க அமுதா
> வளக்காதல் தூதாக வா!
>
> நா. கணேசன்
>
இரவா
குற்றாலக் குறவஞ்சியில் வரும் பாடல்களில் ஒய்யாரி(நவநாகரிகமானவள்) வசந்த
வல்லி பந்தாடும் போது எப்படியிருந்தாள் எப்படியிருந்தது என்பதை விளக்கும்
பாடல்களில் ஒன்று, தாங்கள் விரும்பிக் கேட்ட பாடல். நான் முழுவதையும்
அளிக்கின்றேன்.
"செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயஞ்செயம் என்றாட - இசை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று
குழைந்து குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே!
சிவந்த கைகளின் வளையல்கள் கலின் கலின் என்று ஒலித்த ஒலி 'வெற்றி வெற்றி'
என்று கூறுவன போல ஒலித்து அசைந்தன! தண்டையும் சிலம்பும் இணைந்து ஒலித்த
ஒலி, இடை இருக்கிறதோ இல்லையோ? இடை ஒடிந்து விட்டால் என்னசெய்வோம்! என்று
அஞ்சிப் புலம்புவது போல இருந்தது! கொங்கைகள் தம் கொடிய பகையாகிய (கொங்கை
பந்து போல் இருக்கிறது என்று சொல்லப் படுவதனால் பந்து பகையாயிற்று)
பந்துகளை வென்று விட்டோமென்று நெகிழ்ந்து நெகிழ்ந்து அசைய மலர்களை யுடைய
பசுங்கொடி போன்ற அழகுடைய வசந்த வல்லி பந்து ஆடினாள்.
பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை
புரண்டு புரண்டாடக் - குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
மதன்சிலை வண்டோட - இனி
இங்கிது கண்டுல கென்படும் என்படும்
என்றிசை திண்டாட - மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே!
கனத்த காதணிகள் கெண்டை மீன் போன்ற கண்களின் மீது புரண்டு புரண்டு ஆடின!
கூந்தலாகிய மேகத்திலிருந்து வண்டுகள்(ஆடுகின்ற ஆட்டத்தில் வண்டுகள் அஞ்சி
கூந்தலில் இருந்து பறந்துச் சென்றன)கலைந்து செல்வதைக் கண்டு மன்மதன்
கரும்புவில்லின் நாணாகிய வண்டுகளும் உடன் சென்றன! இதைக் கண்டு உலகம் என்ன
பாடுபடுமோ! என்பது போல் இடையானது துவண்டு துவண்டு நடுங்க செந்தாமரை
மலரில் வீற்றிருக்கும் திருமகளை ஒத்த வசந்த வல்லி என்னும் அழகி பந்து
ஆடினாள்.
சூடக முன்கையில் வால்வளை கண்டிரு
தோள்வளை நின்றாடப் - புனை
பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு
பாவனை கொண்டாட - நய
நாடகம் ஆடிய தோகை மயிலென
நன்னகர் வீதியிலே - அணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி
அடர்ந்து பந்தாடி னாளே!
கைகளில் அணியப் பெற்றுள்ள சூடக வளையல்களும் சங்கு வளையல்களும் சேர்ந்து
இரண்டு தோள்வளையல் களையும் மேலெழுந்தாடச் செய்தன! கால்களில் அணிந்துள்ள
கொலுசுகளும் தண்டைகளும் மேலேருவதும் கீழே வருவதுமாகிய தன்மைகளைக் கொண்டு
ஆடின. நல்ல கூத்தாட்டம் ஆடும் மயில் போல குற்றால நகரத் தெருவில் அழகிய
ஒய்யாரியாகிய நங்கை வசந்தவல்லி பந்து ஆடினாள்!
இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ
ரம்பையோ மோகினியோ - மன
முந்தியதோ விழி முந்தியதோ கர
முந்தியதோ வெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
சங்கணி வீதியிலே - மணிய
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி
பொற்பந்து கொண்டாடினாளே!"
இவ்வாறு ஆடிக் கொண்டிருக்கும் அழகிய ஒய்யாரி வசந்த வல்லியாகிய இவள்,
திருமகளோ! இரதியோ! அரம்பையோ! மோகினியோ! என்று, கண்டவர்கள் ஐய்யப்பட்டுக்
கொண்டிருந்தனர்! இவள் பந்தாடும்போது, பந்து அடிக்க இவளின் மனம் முன்
செல்கிறதா? இவள் கண்கள் தாம் முந்திச் செல்கின்றனவா? இவள் கைகள்
முந்துகின்றனவா? எது முதலில் முன் செல்கிறது? என்று, வியக்குமளவுக்கு
மூன்றாம் பிறையை அணிந்து தில்லையில் கூத்தாடியவர் வீற்றிருக்கும் குற்றால
மாநகர் வீதியில் ஒய்யாரி வசந்த வல்லி பந்தாடினாள்.
குறிப்பு: சானியா மிர்ஸா பந்து ஆடும்போது பார்த்திருக்கிறீர்களா? அதைத்
தான் இப்பாடல் குறிப்பிடுகிறதோ!
அன்புடன்
இரவா
இரவா
குற்றாலக் குறவஞ்சியில் வரும் பாடல்களில் ஒய்யாரி(நவநாகரிகமானவள்) வசந்த
வல்லி பந்தாடும் போது எப்படியிருந்தாள் எப்படியிருந்தது என்பதை விளக்கும்
பாடல்களில் ஒன்று, தாங்கள் விரும்பிக் கேட்ட பாடல். நான் முழுவதையும்
அளிக்கின்றேன்.
On Sep 4, 11:25 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/9/3 N. Ganesan naa.gane...@gmail.com
விருத்தமென்னும் ஒண்பாவைக் கொண்டு முதன்முதலில் காவியமியற்றியது
திருத்தக்கத் தேவர் தானென்றும், நூல் சீவக சிந்தாமணி என்றும் முன்பு ஒரு
நூலில் படித்தேன் உண்மையா? ஹரிகி அவர்கள் சிந்தாமணியில் இருந்து
வழங்கியிருக்கும் இருபாக்களும் அருமை. மேலும் பந்தடி பாக்கள் இருப்பதை
அறிந்தவர் வழங்குக. ஹரிகி அவர்களுக்கென் நன்றிகளைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆண் : லவ் ஆல்
பெண் : ம்ஹூம் லவ் ஒன்
ஆண் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து
லவ் ஆல்
பெண் : லவ் ஒன்
என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று
இருப்பதைக் கூறட்டும் விரைவினில் சென்று
என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று
இருப்பதைக் கூறட்டும் விரைவினில் சென்று
ஆண் : கங்கையின் சங்கமம் கடலோடு கண்டேன்
மங்கையின் சங்கமம் பார்த்திட வந்தேன்
பெண் : கரைவழி செல்வது கங்கையின் பெருமை
முறைவழி செல்வது மங்கையின் பெருமை
ஆயிரம் நாடுகள் சென்றுவந்தாலும்
தாயகப் பெருமை காத்திட வேண்டும்
ஆண் : காதலும் தாயகப் பெருமையில் ஒன்று
காணட்டும் அதையும் இளமயில் இன்று
பெண் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
ஆண் : சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து
ஆண் : மந்திரம் சொல்லும் மணவறைக் கோலம்
மனதினில் தோன்றும் ஒவ்வொரு நாளும்
பெண் : எண்ணுவதெல்லாம் நேரினில் காணும்
புண்ணியம் இருந்தால் அது எங்கு போகும்
------------------
http://www.tamilgsm.com/index.php
எம்பி3 கோப்பு
சானியா மிர்சா டென்னிஸ் விளையாட்டுக்கு
இளைஞர் ரசிகவ் ஞானியார் பாட்டு, பழைய சிற்றிலக்கியம் போல் :)
(யாப்புக்கு சில திருத்தம் தேவை)
*சானியா குறவஞ்சி*
அங்கிங் கெனாதபடி எங்கும் சுழன்று
அச்சம் தவிர்த்து - வெற்றி
தங்கும் பொருட்டு தனித்து ஆடி
தன்னிலை மறந்து - சீறிப்
பொங்கும் ஊழிபோல பாய்ந்து ஓடி
பெண்மை அடிமை பேசும் - பழைமை
மங்கும் பொருட்டு மங்கை நீயவர்
முகத்தில் உமிழ்ந்திடு
அட்டைப் பூச்சியின் இரத்தம் குடித்தலாய்
அழகாய் இதயம் ஒட்டினாய் - சாராயப்
பட்டை அடித்தவன் போதை போல
பருவம் நுழைந்து கொட்டினாய் - தேர்வில்
பிட்டை எடுத்த மாணவன் போல..
புருவம் இரண்டை புரட்டினாய் - கோழி
முட்டை விழியினில் கவனம் சிதைத்து
மூச்சை நிறுத்தி மிரட்டினாய்!
மூக்கோடு மூக்குத்தி ஒட்டி நிற்க
முகத்திலே அழகாட - மரத்
தேக்கோடு சந்தனம் கலந்து செய்த
தேவதையின் காலாட - நேற்று
பூக்காடு வாசமாய் நெஞ்சம் நிறைந்து
புன்னகைத்து போனியா..? - இனி
சாக்காடு வந்தாலும் சிதறி ஓடும்
சின்னவளே சானியா!
குட்டை ஆடை அணிந்த ஒய்யாரி
குமரர் மனம் பிடுங்கி - மைதான
வெட்டை வெளிதனில் நடனம் ஆடி
வெகுண்டு எழுந்து - மர
மட்டை கொண்டு பந்தை அடித்து
மனசைப் பிடுங்கியவளை - நாட்டுக்
கட்டை என்று அழைப்பர் சிலர்
நாசமாய் போகட்டுமவர்!
இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்
http://groups.google.com/group/anbudan/msg/b118e1e2806d928e
"மர மட்டை ' என்பதில் பொருள் குற்றம் உள்ளது. ப்யான் போர்க் காலத்திற்குப் பிறகு இந்த அடிமட்டைகளை " ஸ்டீல்" இணைத்தே செய்கிறார்கள். என்றாலும் "கோழி முட்டை விழியினில்" கவனம் சிதைந்து போயிருக்க வாய்ப்பு இருக்கிறது.நமது இளைஞர்கள் விளையாட்டைக் கூட விளையாட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்பது புரிகிறது.
பறக்கும் பந்தோடு ம்னதையும் பறக்க விடுபவர்களுக்காக
அன்புடன்
வவேசு
On Sep 5, 10:06 pm, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
>
> > பந்தோடு ஆடும் பாவை பறப்பார்
>
> சிந்தான ஆடை சிறகெனப் பறக்கும்
> முந்துடல் இளையர் மனமும்
> செந்தமிழ் தேடிச் சிறந்து பறந்ததே!
>
பாரதிதாசனின் குறும்பா:
பந்தாடல்:
கரடிகள் கீழிருந்து கைஏந்த ஏந்த
மரக்கிளை ஆடரங்காகக்
குரங்கு பந்தடித்தது விளாம்பழம் கொண்டே!
தலைவி :
அடித்த பந்தினை மறுத்துப் பிடிக்க
ஆகாதடி மாதே
ஆகாதடி
தோழி :
பிடித்துப் பந்தினை திருப்பினேன் அடி
நீபாரடி மாதே
நீபாரடி
தலைவி :
அங்குவந்த பந்துன் திங்கள் முகத்தொடு
போராடுதே மானே
போராடுதே
தோழி :
மங்கை என் பந்துப றந்துன் மார்புக்கு
நேராகவே மானே
நேராகவே
தலைவி:
தாக்கிடும் என்பந்து பார்த்துத் தடுத்துக்கொள்
நேராகவே தோழி
நேராகவே
தோழி :
தூக்கி அடித்தேனே பூப்பந்து பாரடி
தோள் மீதிலே தோழி
தோள் மீதிலே
~ பாரதிதாசன்
-------------
இதுவும் வழக்கமான பெண்களின் பந்தாடல்.
பின்னால் பந்தாடல் பத்ததி சேர்வது
கேரள மோகினியாட்டத்தில். மோகினியாட்டத்தில்
குற்றாலக் குறவஞ்சியின் தாக்கம். நெல்லையைப்
பூர்வீகமாய்க் கொண்ட தஞ்சை நால்வரில்
வடிவேலு நட்டுவனார் சுவாதித் திருநாள்
மகாராசாவுக்காக மோகினியாட்டம்
தயார் செய்தார். பழைய மோகினியாட்டப்
பத்ததிகள் கேரள பல்கலைகளில்
மலையாள லிபியில் அச்சாகியிருக்கும்.
இருந்தால், அவற்றின் புத்தகங்கள் என்ன?
என்று கமலம் சேச்சியைக் கேட்க ஆவலுடையேன்.
ஆண்கள் பந்தாட்டம் தொடர்பாய் அருமையாக ஒருபாடலில்
பதிந்துள்ளார் பாரதிதாசன். அதுவே ஆண்கள் ஆடும்
பந்தாட்டம் பாடல்களில் முதன்முறையாக வருவதாகலாம்.
அது பின்னர்.
நா. கணேசன்
சுடர்தொடீஇ! கேளாய்-தெருவில் நாம் ஆடும்
மணற்சிற்றில் காலிற்சிதையா,அடைச்சிய
கோதை பரிந்து,வரிப்பந்து கொண்டோடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி,மேலோர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா,இல்லீரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு,அன்னை
அடர்பொன் சிரகத்தால் வாக்கி,சுடர்இழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா என்றாள்;என யானும்
தன்னை அறியாது சென்றேன்,மற்று என்னை
வளைமுன்கை பற்றிநலியத் தெருமந்திட்டு,
அன்னாய்!இவன் ஒருவன் செய்தது காண்! என்றேனா,
அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்,
உண்ணுநீர் விக்கினான் ! என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி,நகைக்கூட்டம்
செய்தான்,அக்கள்வன் மகன்.
முனைவர் கல்பனா சேக்கிழார், அண்ணாமலைப் பல்கலை.
http://www.sekalpana.com/2009/07/blog-post_9963.html