https://tamil.samayam.com/latest-news/salem/salem-kottai-mariamman-temple-story/articleshow/80097901.cms”சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில்
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த
மாரியம்மன் கோயிலையும், ஒரு
பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள்.”
புலவர் செ. ராசு குழுவில் கேட்டுள்ளேன். சேலத்திலும், அம்மாவட்டப் புலவர் பலரும் பங்குகொள்ளும் குழு.
அதில் வந்த தகவலின் படி, பாளையக் காரர்கள் ஆட்சியில், சேலம்
கோட்டை மாரியம்மன் கோவில்,
கோட்டை பெருமாள் (அழகிரி பெருமாள்) கோவில் கட்டப்பட்டன. அழகர்மலையின் பெருமாள் பெயராகிய சுந்தரராஜப் பெருமாள் என்ற பெயர்தான் இந்தப் புதிய கோவிலுக்கும் சார்த்தப்பட்டது என்றார்கள். இதுபோல், நாயக்க மன்னர் ஆட்சியில் சில அழகிரிநாதர் கோவில்கள் கட்டப்பெற்றுள்ளன. குட்டிக்குட்டி கோவில்கள். சொக்கநாதர், வெங்கடேஷ், ... கோவில்கள் போல. புரந்தரர் காலத்தில் இல்லாதன இவை. கல்வெட்டும் இல்லை. 1900-ம் ஆண்டு வாக்கில் மீண்டும் வணிகர்களால் சற்று பெரிதாக்கப்பட்டதாம். மதுரை நாயக்கர்களுக்கு வேண்டிய வணிகர்கள் கொங்குநாட்டில் எடுப்பித்தது. சமூக ஆவணங்களில், கோட்டை மாரி, கோட்டை பெருமாள் பற்றின செய்திகள் இருந்தால் சொல்லவும். 3-4 நூற்றாண்டுகளான இக் கோவில்களுக்கு இலக்கியம் ஏதுமில்லை.
கடப்பாவில் நான் அறிந்தவரை அழகிரிகோவில் ஒன்றுமில்லை. இருந்தால் காலம், எத்தனை சதுர அடி, கல்வெட்டு,
பிரபந்தம், ... உண்டா என ஆராய்தல் வேண்டும்.
சூளாதி, தேவரநாமா என்பன புரந்தரதாசர் தமிழ்நாட்டுக்கு வந்து கற்றுக்கொண்டு, விஜயநகரப் பேரரசில் கன்னட பாஷைக்கு உருவாக்கி அருளினார். தமிழ்நாட்டில் இருந்த பஜனை சம்பிரதாயங்கள், சங்கீத பாரம்பரியங்கள் பெரிதும் உதவின எனக் காட்டியுள்ளார் அறிஞர் மு. அருணாசலம். புரந்தரதாசர் ஒரு பாடலில் 20 க்ஷேத்திரங்களைப் பாடியுள்ளார். எவை என்னென்ன என விளக்கி உள்ளேன்:
புரந்தரதாசர் துதிக்கும் தமிழகத் திருப்பதிகள்https://groups.google.com/g/santhavasantham/c/RJ-VosxD1M0கன்னடம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு இத்யாதி மொழிகளில் ஏதாவது கட்டுரை புரந்தரர் பாடும் க்ஷேத்திரங்கள் பற்றி இருக்கும். அதன் அச்சுவிவரங்கள் கிடைத்தால் பெற்றுப் படிக்கலாம்.
தனியாக, புரந்தரர் பாடல்களில் அழகிரி என்னும் அழகர்மலை பாடல் பாக்யத பாரம்மா புகழ்மிக்க ஒன்று பிறவும் பார்ப்போம்.
நா. கணேசன்