வரம் அருளாய் வடிவேலே
(வண்ண விருத்தம்;
தந்தனன தந்தனன தந்தனன - தானா)
ஒன்றியுன தன்புவழி நின்றமனம் - வேணும்
.. உன்றனடி பந்தமென உய்ந்தநலம் - வேணும்
குன்றமென நின்றுதுயர் வென்றவுரம் - வேணும்
.. குந்தியுணும் மந்தநிலை குன்றிவிட - வேணும்
தென்றமிழை உண்டுகளி கொண்டமதி - வேணும்
.. செங்கமலம் என்றுவிரி சிந்தையது - வேணும்
நன்றுவரம் இந்தவணம் இன்றருளி - ஆளாய்
.. நம்புபவர் நெஞ்சி(ல்)நிலை நின்றவடி - வேலே!
(பந்தம் = பற்று;
உரம் = உறுதி;
குந்தி = உட்கார்ந்து;
இந்த வணம் = அடியேன் கேட்டவாறு; )
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/682588BE-6E25-4839-BA72-30D90B886446%40gmail.com.
On Oct 21, 2025, at 8:31 PM, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
attagaasam imay..yogiyar
என்றுமுன தன்புநெறி நின்றமனம் - வேணும்
.. இன்பமுற நின்கழலில் ஒன்று(ம்)நலம் - வேணும்