வந்தேமாதரம்

1 view
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
3:53 PM (2 hours ago) 3:53 PM
to santhavasantham
வீர சுதந்திர மந்திரம் வந்தே மாதரம்
எப்பக் கத்தும் எதிரிகள்
ஏறிக் தாக்கும் போதிலும்
வெப்பம் வாட்டும் வெண்பனி
வெட்டிக் கொல்லும் போதிலும்
அப்ப ழுக்கில் லாதநம்
அன்னை நாமம் போற்றியே
சொப்ப னத்தில் கூடநாம்
சொல்வோம் வந்தே மாதரம் *
ஓடு கின்ற குரதியின்
ஓசை வந்தே மாதரம்,
நாடு நம்முள் மீட்டிடும்
நாதம் வந்தே மாதரம்,
வீடு நல்கும் நான்மறை
வேதம் வந்தே மாதரம்,
ஈடில் லாத மந்திரம்
இன்ப வந்தே மாதரம் *
அம்மா அம்மா என்னவே
அன்பு கூட்டும் மந்திரம்,
செம்மை யான சொந்தமாய்
தேசம் நம்மைக் காப்பதால்
இம்மண் மீது அனாதையே
இல்லை யாக்கும் மந்திரம்,
நம்முள் பொங்க வைக்கிற
நாதம் வந்தே மாதரம் *
சின்னச் சின்னக் கையினால்
தேடி வாயில் போட்டுநாம்
அன்று நின்ற மண்ணிது,
ஆத ரிக்கும் மண்ணிது,
நிறை கண்ணன் வாயிலே
தேர்ந்தே அண்டம் ஆனது,
அன்னை தன்னைப் போற்றியே
ஆர்ப்போம் வந்தே மாதரம் *
பள்ளிக் கல்வி தள்ளியே
பாய்ந்து பொங்கி அன்றுநாம்
வெள்ளைக் காரன் பூட்;டிய
விலங்கொ டிக்கப் பாடினோம்,
கொள்ளைக் காரர் நம்மவர்
கோடி கோடி சேர்க்கிறhர்
கள்ளர் வீய இன்றெழும்
கானம் வந்தே மாதரம் *
வீர மான சுதந்திரம்
வெல்ல வைத்த மந்திரம்
சூர ராகப் பற்பலர்
சூளு ரைத்த மந்திரம்
சார மான மந்திரம்
தாயைப் போற்றும் மந்திரம்
ஈர மான மந்திரம்
இதயமான மந்திரம்
இன்றைக்கோ,
உத்த ரத்தைச் சாய்க்கிறார்ர்
ஓடடி ஓடி ஏய்க்கிறார்
சத்த னைத்தும் மாந்தியே
சக்கை அள்ளி வீசுறார்
எத்த னைநாள் தாங்குவோம்
ஏமாற் றத்தில் ஏங்குவோம்
எத்தர் ஓயப் பாடுவோம்
இன்ப வந்தே மாதரம்
அன்று கொண்ட விலங்கினை
அறுத்துப் போட முடிந்தது
இன்று சொந்த மக்களே
இன்னும் பெரிய விலங்கினை
அன்னை கையில் பூட்டியே
ஆர்பாட் டங்கள் செய்கிறhர்
மின்னல் வாளாய் வெட்டவே
வேண்டும் வந்தே மாதரம்
கொட்டம் போட்டு மக்களைக்
குலைந டுங்க வைக்கிற
துட்டர் ஆட்டம் இன்னமும்
தொடர விட்டுப் பார்ப்பதோ ?
வெட்டிச் சாய்க்கும் கோடரி
வேர ருக்கும் வீரவாள்
சுட்டெரிக்கும் எரிமலை
சொல்வோம் வந்தே மாதரம்
உசுப்பு கின்ற மந்திரம்,
உயிர்கொ டுக்கும் மந்திரம்,
பசப்பு வார்த்தை பேசியே
பதுக்கு கின்ற பேர்களை
நசுக்கு கின்ற மந்திரம்
நலிவு போக்கும் மந்திரம்,
இசைக்க வேண்டும் இன்றுநாம்
இன்ப வந்தே மாதரம்
பகைவர் யாரும் நாட்டிலே
பாத கம் நினைத்திடில்
துகைத்தெ டுப்போம் சீறியே
தூள்ப டுத்தி வீழ்த்துவோம்
சகத்தில் வீறு மிக்கதாய்த்
தாய கம்சி றந்திட
வகுத்து நல்ல காரியம்
மாண்புடன் நிகழ்த்துவோம்

Arasi Palaniappan

unread,
4:26 PM (1 hour ago) 4:26 PM
to சந்தவசந்தம்
அற்புதம் தலைவரே!

சிந்த னைக்குள் ஓங்குமோர் 
        சிறந்த வந்தே மாதரம் 
வந்தனை செய்(து) அன்னையை 
        வணங்கும் வந்தே மாதரம்!
நிந்த னைசெய் கொடுஞ்சிரம் 
         நெரிக்கும் வந்தே மாதரம் 
எந்தம் தலைவர்  இலந்தையார் 
       ஏத்தும் வந்தே மாதரம்!

வணங்கிப் போற்றும் 
அரசி. பழனியப்பன் 
        


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDyMupcRr%2BNLT%3DbeU_fC-pLCBsdM3VHKTzEtECih8qJew%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
4:39 PM (1 hour ago) 4:39 PM
to santhav...@googlegroups.com
அற்புமான வந்தே மாதரம் பாட்டு, தலைவரே. மெய்சிலிர்க்க வைத்தது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 15, 2026, at 16:26, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:


Reply all
Reply to author
Forward
0 new messages