கார்த்திகைத் தீபம் 2021 ஸ்பெஷல் - மதிசூடி X.Y

30 views
Skip to first unread message

Siva Siva

unread,
Nov 19, 2021, 10:47:21 PM11/19/21
to santhavasantham
Thanks to Gopal for his comment in the other thread.
==============

2021-11-19

பொது - கார்த்திகைத் தீபம் - கார்த்திகை விளக்கீடு

---------------

(அந்தாதி - முதற்பாடல் "கதியெமக்குன்" என்று தொடங்கி ஈற்றுப் பாடல் "உயர்கதியே" என்று முடிந்து மண்டலித்து வரும் அந்தாதி)

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்)


1)

கதியெமக்குன் கழலென்று கைதொழுதார்க் கருந்துணையைப்

புதியவனைப் பழையவனைப் பொன்னாரும் மேனியனைக்

கதிர்மதியம் நிறைநாளில் கார்த்திகை விளக்கேற்றிப்

பதியவனைப் பணிந்தேத்தப் பழவினைகள் பற்றறுமே.


V. Subramanian


Siva Siva

unread,
Nov 20, 2021, 8:52:38 AM11/20/21
to santhavasantham

2)

பற்றுமலை வில்லாலே பகையசுரர் முப்புரம்தீப்

பற்றவொரு கணையெய்த பசுபதியைப் பரம்பரனைக்

கற்றவருண் கனிதன்னைக் கார்த்திகை விளக்கேற்றிப்

புற்றரவம் பூண்டானைப் போற்றவினை போயறுமே.


V. Subramanian 

Subbaier Ramasami

unread,
Nov 20, 2021, 5:46:26 PM11/20/21
to santhavasantham
கொண்டு கூட்டிப் பொருள் கோடலோ?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNctKJCgxwh6SdmxDfG-XvryC8uCbT8d8BNEBGW_ccBOw%40mail.gmail.com.

Siva Siva

unread,
Nov 20, 2021, 6:13:43 PM11/20/21
to santhavasantham
Good observation. Thanks.

ஆம். இப்பதிகத்தில் கொண்டுகூட்டிப் பொருள்கோள் அமைந்துள்ளது

பாடல்களில் இறைவனைச் சுட்டும் சொற்றொடர்களை முதலிற்கொண்டு பின்னர் அவனைக் கார்த்திகை விளக்கேற்றி வழிபடுவதைக் கொள்க.

Siva Siva

unread,
Nov 21, 2021, 8:20:39 AM11/21/21
to santhavasantham
On Sat, Nov 20, 2021 at 8:52 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
On Fri, Nov 19, 2021 at 10:47 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Thanks to Gopal for his comment in the other thread.
==============

2021-11-19

பொது - கார்த்திகைத் தீபம் - கார்த்திகை விளக்கீடு

---------------

(அந்தாதி - முதற்பாடல் "கதியெமக்குன்" என்று தொடங்கி ஈற்றுப் பாடல் "உயர்கதியே" என்று முடிந்து மண்டலித்து வரும் அந்தாதி)

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்)


1)

கதியெமக்குன் கழலென்று கைதொழுதார்க் கருந்துணையைப்

புதியவனைப் பழையவனைப் பொன்னாரும் மேனியனைக்

கதிர்மதியம் நிறைநாளில் கார்த்திகை விளக்கேற்றிப்

பதியவனைப் பணிந்தேத்தப் பழவினைகள் பற்றறுமே.


2)

பற்றுமலை வில்லாலே பகையசுரர் முப்புரம்தீப்

பற்றவொரு கணையெய்த பசுபதியைப் பரம்பரனைக்

கற்றவருண் கனிதன்னைக் கார்த்திகை விளக்கேற்றிப்

புற்றரவம் பூண்டானைப் போற்றவினை போயறுமே.



3)

அறுத்தவனை தாமரைமேல் அயன்றலையை, அவியளிக்க

மறுத்தவனை ஒறுத்தவனை, வன்னஞ்சை உண்டுகண்டம்

கறுத்தவனைக், கண்ணுதலைக், கார்த்திகை விளக்கேற்றிப்

பொறுத்தருளாய் என்றுதொழப் புணையாகிக் காப்பானே.


V. Subramanian 

Siva Siva

unread,
Nov 21, 2021, 8:22:59 AM11/21/21
to santhavasantham
Added the missing த்.

On Sun, Nov 21, 2021 at 8:20 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
On Sat, Nov 20, 2021 at 8:52 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


On Fri, Nov 19, 2021 at 10:47 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Thanks to Gopal for his comment in the other thread.
==============

2021-11-19

பொது - கார்த்திகைத் தீபம் - கார்த்திகை விளக்கீடு

---------------

(அந்தாதி - முதற்பாடல் "கதியெமக்குன்" என்று தொடங்கி ஈற்றுப் பாடல் "உயர்கதியே" என்று முடிந்து மண்டலித்து வரும் அந்தாதி)

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்)


1)

கதியெமக்குன் கழலென்று கைதொழுதார்க் கருந்துணையைப்

புதியவனைப் பழையவனைப் பொன்னாரும் மேனியனைக்

கதிர்மதியம் நிறைநாளில் கார்த்திகை விளக்கேற்றிப்

பதியவனைப் பணிந்தேத்தப் பழவினைகள் பற்றறுமே.


2)

பற்றுமலை வில்லாலே பகையசுரர் முப்புரம்தீப்

பற்றவொரு கணையெய்த பசுபதியைப் பரம்பரனைக்

கற்றவருண் கனிதன்னைக் கார்த்திகை விளக்கேற்றிப்

புற்றரவம் பூண்டானைப் போற்றவினை போயறுமே.



3)

அறுத்தவனைத் தாமரைமேல் அயன்றலையை, அவியளிக்க

Subbaier Ramasami

unread,
Nov 22, 2021, 9:16:12 AM11/22/21
to santhavasantham
அயன்தலையைத் தாமரைமேல் அறுத்தானா?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Nov 22, 2021, 10:17:26 AM11/22/21
to santhavasantham

பொருள்கோள்: "அறுத்தவனைத் தாமரைமேல் அயன்றலையை" = "தாமரைமேல் அயன் தலையை அறுத்தவனை";

பொருள்கோள் வகைகளில் இதனைச் "சுண்ணமொழிமாற்றுப் பொருள்கோள்" என்று சொல்வரோ?


"மலர்மேல் அயன்" என்ற சொற்றொடரைத் தேவாரத்தில் காணலாம்.

உதாரணமாக:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=30830&padhi=083&startLimit=9&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

3.83.9

மாலுமலர் மேலயனு நேடியறி யாமையெரி யாய



On Mon, Nov 22, 2021 at 9:16 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
அயன்தலையைத் தாமரைமேல் அறுத்தானா?

On Sun, Nov 21, 2021 at 7:22 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
Added the missing த்.

Siva Siva

unread,
Nov 22, 2021, 10:21:01 AM11/22/21
to santhavasantham

4)

காத்தருளும் மறைக்காடா கதவுதிறந் தருளென்று

தோத்திரஞ்செய் அப்பரவர் சொற்றமிழை உகந்தானைக்

கார்த்தவிடம் உண்டானைக் கார்த்திகை விளக்கேற்றி

ஏத்தியடி இணைவணங்க எண்ணுவரம் ஈவானே.


வி. சுப்பிரமணியன் 

Siva Siva

unread,
Nov 23, 2021, 8:53:00 AM11/23/21
to santhavasantham

5)

ஈயாமற் கரந்தாருக் கில்லானை மார்க்கண்டர்

மாயாமல் உயிர்வாழ மறலிதனை உதைத்தானைக்

காயாத சடையானைக் கார்த்திகை விளக்கேற்றி

வாயாரப் புகழ்பாட வல்வினைநோய் மருவாவே.

Siva Siva

unread,
Nov 24, 2021, 8:51:36 AM11/24/21
to santhavasantham

6)

மருவார்தம் புரமூன்றை மலைவில்லால் எய்தவனை

மருவாரும் கணையெய்த மன்மதனைக் காய்ந்தவனைக்

கருநாகம் உரித்தானைக் கார்த்திகை விளக்கேற்றிப்

பெருவாரத் தொடுபோற்றப் பேரின்பம் அருள்வானே.

Vis Gop

unread,
Nov 24, 2021, 11:55:58 AM11/24/21
to santhav...@googlegroups.com

மருவார்தம் புரமூன்றை மலைவில்லால் எய்தவனை

மருவாரும் கணையெய்த மன்மதனைக் காய்ந்தவனைக்

கருநாகம் உரித்தானைக் கார்த்திகை விளக்கேற்றிப்

பெருவாரத் தொடுபோற்றப் பேரின்பம் அருள்வானே.


மருவார் பிரயோகம் அருமை. 
கோபால். 

Sent from my iPhone

On 24-Nov-2021, at 7:21 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:
…….

Siva Siva

unread,
Nov 25, 2021, 8:40:02 AM11/25/21
to santhavasantham

7)

அருள்கொண்டு மதிசூடும் அழகனைவல் விடங்கண்டு

வெருள்கொண்ட விண்ணோர்க்கு விரும்பியஇன் னமுதீந்த

கருள்கண்டம் உடையானைக் கார்த்திகை விளக்கேற்றிச்

சுருள்கொண்ட சடையானைத் தொழுதேத்தத் திருவாமே.

Siva Siva

unread,
Nov 26, 2021, 9:17:34 AM11/26/21
to santhavasantham

8)

திருமலையைச் சினந்திடந்த தென்னிலங்கைக் கோனையழ

ஒருவிரலால் நெரித்தவனை உழுவையதள் தரித்தவனைக்

கருமணியார் மிடற்றானைக் கார்த்திகை விளக்கேற்றி

உருகிநினை அடியார்தம் உளத்தெந்தை உறைவானே.

Siva Siva

unread,
Nov 27, 2021, 9:03:34 AM11/27/21
to santhavasantham

9)

வானத்தில் பறந்தானும் மாலுமறி யாத்தழலை

ஞானத்தின் உருவானை நள்ளிருளில் கணம்சூழக்

கானத்தில் ஆடிதனைக் கார்த்திகை விளக்கேற்றி

ஊனத்தைத் தீர்தமிழால் ஓதவினை பொடியாமே.

Vis Gop

unread,
Nov 27, 2021, 10:53:49 AM11/27/21
to santhav...@googlegroups.com
ஊனத்தைத் தீர் தமிழ் என்பதென்ன?
கோபால். 

Sent from my iPhone

On 27-Nov-2021, at 7:33 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:
…….

Siva Siva

unread,
Nov 27, 2021, 11:05:11 AM11/27/21
to santhavasantham

கார்த்திகை விளக்கேற்றி ஊனத்தைத் தீர் தமிழால் ஓத வினை பொடி ஆமே - கார்த்திகைத்தீபம் ஏற்றிக் குற்றங்களை நீக்கும் தேவாரம் பாடி வழிபட்டால் நம் வினையெல்லாம் சாம்பலாகும்;

(ஊனம் - குற்றம்; பிறவி முதலிய குறைகள்); (பொடி - தூள்; சாம்பல்);

(அப்பர் தேவாரம் - 4.80.6 - "ஊனத்தை நீக்கி உலகறி யவென்னை ஆட்கொண்டவன்");

(சம்பந்தர் தேவாரம் - 2.15.1 - "காறாயில் ஊரானே என்பவர் ஊனமி லாதாரே");



On Sat, Nov 27, 2021 at 10:53 AM Vis Gop <vis...@gmail.com> wrote:
ஊனத்தைத் தீர் தமிழ் என்பதென்ன?
கோபால். 


On 27-Nov-2021, at 7:33 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:
…….

Vis Gop

unread,
Nov 27, 2021, 11:22:16 AM11/27/21
to santhav...@googlegroups.com
விளக்கத்திற்கு நன்றி. 
கோபால். 

Sent from my iPhone

Siva Siva

unread,
Nov 28, 2021, 8:41:22 AM11/28/21
to santhavasantham

10)

பொடியணியா மிண்டருரை பொய்ம்மொழிகள் நீங்கிடுவீர்

கொடியிடையாள் பங்கினனைக் கூர்மழுவாட் படையானைக்

கடியுலவு கொன்றையனைக் கார்த்திகை விளக்கேற்றி

அடிபரவிக் கைதொழுவார் அருட்செல்வர் ஆவாரே.

Siva Siva

unread,
Nov 29, 2021, 9:01:11 AM11/29/21
to santhavasantham

கார்த்திகைத் தீபப் பதிகத்தின் ஈற்றுப் பாடல்:

(இப்பாடல் "உயர்கதியே" என்று முடிந்து "கதியெமக்குன்" என்று தொடங்கும் முதற்பாடலோடு மண்டலித்து வருகின்றது).

11)

வாராரும் முலையாளை வாமத்தில் மகிழ்ந்தானை

நீராரும் சடையானை நெற்றிக்கண் உடையானைக்

காராரும் மிடற்றானைக் கார்த்திகை விளக்கேற்றி

ஏராரும் இன்தமிழால் ஏத்தவரும் உயர்கதியே.

Vis Gop

unread,
Nov 29, 2021, 12:08:53 PM11/29/21
to santhav...@googlegroups.com
அருமையான, ஒரே மூச்சில், ஒரே தினத்தில் இயற்றப்பட்ட, அந்தாதி அற்றவனுக்கு அளிக்கப்பட்ட அந்தாதி மாலைப் பதிகம். 

கார்த்திகை விளக்கேற்றிக் கார்க்கண்டன் பேர்பாட
நீர்த்தலையன் கயிலைதனில் நின்றான் கரியுரியைப்
போர்த்தியவன் உமைபங்கன் பொடிபூசி பலபிறப்பில்
சேர்த்தவினை அத்தனையும் சிமிட்டுமுனர் நீக்குவனே!

கோபால். 

Sent from my iPhone

Siva Siva

unread,
Nov 29, 2021, 12:47:57 PM11/29/21
to santhavasantham
Thank you for being the catalyst!

Siva Siva

unread,
Nov 30, 2021, 9:08:34 AM11/30/21
to santhavasantham

Another Karththigai Deepam context special!


2021-11-29

அண்ணாமலை - "கந்த பத்யம்"

-----------

("கந்த பத்யம்" அமைப்பில் - in "kanda padyam" meter)


1)

கண்ணன் கமலத் தான்மண்

விண்ணிற் றேடித் துதிக்க வியனெரி ஆனான்

அண்ணல் மலையண் ணாமலை

எண்ணித் தொழுதெழு மடியவ ரிருவினை அறுமே.


வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Dec 1, 2021, 8:19:36 AM12/1/21
to santhavasantham

2)

கஞ்சன் மால்தொழ நின்றான்

நஞ்சுண் கண்டன் வனமுலை நாரிம ணாளன்

மஞ்சார் மலையண் ணாமலை

நெஞ்சால் நினைவார் வினையறு நிலையடை வாரே.


வி. சுப்பிரமணியன்


On Tue, Nov 30, 2021 at 9:08 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

1)

Siva Siva

unread,
Dec 2, 2021, 9:25:00 AM12/2/21
to santhavasantham

3)

கமலன் மாலிவ ரறியா

நிமலன் சுடலையி னடமிடு நித்தன் கத்தன்

கமழும் பொழிலண் ணாமலை

விமலன் திருவடி நினைக்க வீடும் வினையே.


வி. சுப்பிரமணியன்


On Wed, Dec 1, 2021 at 8:19 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Siva Siva

unread,
Dec 3, 2021, 9:20:16 AM12/3/21
to santhavasantham

4)

பண்டய னரியிவ ரேத்திட

ஒண்டழ லானான் மதகரி உரிபுனை மார்பன்

வண்டிசை முரலண் ணாமலை

அண்டன தடிநினை அடியவ ரருவினை அறுமே.


வி. சுப்பிரமணியன்


On Thu, Dec 2, 2021 at 9:24 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Siva Siva

unread,
Dec 4, 2021, 8:33:50 AM12/4/21
to santhavasantham

5)

மண்டனை அகழரி வேதன்

கண்டிட அரியான் எயிலெரி கணைதொடு சிலையான்

எண்டிசை புகழண் ணாமலை

மண்டிய அன்பால் நினைக்க வல்வினை அறுமே.


வி. சுப்பிரமணியன்


On Fri, Dec 3, 2021 at 9:20 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Siva Siva

unread,
Dec 5, 2021, 8:41:36 AM12/5/21
to santhavasantham

6)

பிரமனு மரியும் திருவடி

பரவிட ஓங்கிய சுடரெரி பத்தர்க் கன்பன்

வரமரு ளரனண் ணாமலை

விரவிடு மடியார் இருவினை வீடும் திடனே.


வி. சுப்பிரமணியன்


On Sat, Dec 4, 2021 at 8:33 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

5)

Siva Siva

unread,
Dec 6, 2021, 9:04:39 AM12/6/21
to santhavasantham

Next 3 songs:

7)

போதன் பாம்பணை மாலும்

பாதந் தொழநின் றவனதி பாயும் சடையான்

வேதன் திருவண் ணாமலை

நாதன் கழலடி கருதிட நலியா வினையே.


8)

இருவரு மறியாப் பெருமான்

அருவரை பேர்த்திடு மரக்க னழவிர லிட்டான்

கருமுகி லாரண் ணாமலை

உருகிநி னைந்தார்க் குலகினி லொருதுய ரிலையே.


9)

முன்பய னரிதொழ நின்றான்

அன்பொடு வழிபடு மடியவ ரகமக லாதான்

என்பணி வானண் ணாமலை

மன்பெய ரனுதின முரைசெய வல்வினை அறுமே.


வி. சுப்பிரமணியன்


On Sun, Dec 5, 2021 at 8:41 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Siva Siva

unread,
Dec 7, 2021, 9:43:17 AM12/7/21
to santhavasantham

Final 2 songs of this padhigam:

10)

எய்த்தய னரிதொழ எழுதீ

எத்துரை ஈனர்க் கருளில னெண்டோள் ஈசன்

பத்திமை யாலண் ணாமலை

முத்தலை வேலன தடிதொழ முத்தியு மெளிதே.


11)

கரியவ னான்முக னார்கட்

கரியவ னரைமிசை உழுவையி னதளணி அரையன்

பெரியவ னணியண் ணாமலை

வரியர வன்றன தடியரை வாழ்விப் பானே.


பதம் பிரித்து:

கரியவன் நான்முகனார்கட்கு

அரியவன்; அரைமிசை உழுவையின் அதள் அணி அரையன்;

பெரியவன்; அணி அண்ணாமலை

வரி-அரவன் தனது அடியரை வாழ்விப்பானே.


வி. சுப்பிரமணியன்



On Mon, Dec 6, 2021 at 9:04 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

Next 3 songs:

7)

Reply all
Reply to author
Forward
0 new messages