திரு. மீவி அவர்கள் எழுதிய “தனது தனது என” என்னும் மிக அழகிய பாடலின் சந்தத்தில் அடியேன் எழுத முயன்ற சிவத்துதி.
அரனின் அருள் நம்மை ஆளும்
(சந்த மூலம்: "கருட கமன தவ" என்ற கீர்த்தனை - ஶ்ரீ பாரதீய தீர்த்த மகா ஸ்வாமிகள் இயற்றியது)
"தனன தனன தன தனன தனன தன
தனன தனன தன தான - தன
தனன தனன தன தான - தன
தானன தானன தான - தன
தானன தானன தான"
கடலில் மலையில்விரி வெளியில் வளியில்எரி
கனலில் அரனினெழில் கூடும் - அவன்
கருணை அதனைமனம் நாடும் - இணைக்
கால்களி லேமலர் சூடும் - மிகு
காதலில் வான்கவி பாடும்.
உடலும் உயிரும்என துணர்வும் அரனினொளி
உருவில் உருகியமு தூறும் - அவன்
உயர்வில் நினைவுகளி கூரும் - சிவ
ஓமெனும் ஓர்மொழி கூறும் - புகழ்
ஓங்கிடும் நீள்கழல் சேரும்.
இடர்கள் கொடுவினைகள் பிணிகள் ஒழியவினி
இனிமை நிறையுமுல கேழும் - அரன்
இணையில் ஒளியிலிருள் வீழும் - மனம்
ஈசனின் மாண்பினில் ஆழும் - பிறப்
பேழிலும் ஓரருள் சூழும்.
அடியும் முடியும்முனம் அடைய முனையுமவர்
அறிய அரியவுரு ஆளும் - அரன்
அருளில் நனையுமுயிர் நாளும் - மனம்
ஆழ்ந்திடும் ஓர்துயர் மாளும் - நலம்
ஆற்றிடு மாம்உறு கோளும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2F7EE028-933B-4129-ADC1-462123F25D11%40gmail.com.
உ
அலை வாயினில்நின் றருள்வேலா!
மலை ஆளுகின்ற சிவபாலா!
(அலை)
முருக னடிமைமன முருகித் துதிக்கவர
மருளு மொருதிருச்செந் திலிலே
மருவு மமைதியெம்சிந் தையிலே
(அலை)
குமர விடங்கனெனக் குமரி ஜெயந்தியினை
அமரை ஜெயித்தபின்னர் மணந்தாய்!
மனமும் மகிழதினம் அருள்வாய்!
(அலை)
குறத்தி மகளெனவந் தொருத்தி வளைக்கரத்தைப்
பிடித்து மணம்புரிந்து மகிழ்ந்தாய்!
பிடித்த வரனமைய அருள்வாய்!
(அலை)
அழகு ஜெயந்தியின்ப தியென எழுந்தருளி
அசுரர் களையழித்த குகனே!
அவர்க்கு மருளியஷண் முகனே!
(அலை)
முகங்கள் மதிஒளிர முழுதும் சிவப்பணிந்து
முதல்வன் சிவனெனவந் தருள்வாய்!
முயலும் அகமெமக்கு முகல்வாய்!
(அலை)
பிறவிப் பயனைநல்கும் பிரம்ம னெனவருளப்
புலரில் வெளுப்பணிந்து வருவாய்!
பலரின் துயர்களைந்தும் அருள்வாய்!
(அலை)
பகலு மிரவுமளம் துயிலும் பரமனெனப்
பசுமை நிறமணிந்து வருவாய்!
சிசுவின் வரமெமக்கும் அருள்வாய்!
(அலை)
கடின விரதமுடன் கணமும் உனைத்துதிக்கும்
அடிய வருக்குமுடன் உகல்வாய்!
அடிகள் இரண்டுமுடன் அருள்வாய்!
(அலை)
அலைக ளுகலுகந்தப் பெரும னருளுகின்ற
இலையில் பொதிந்துவைத்தத் திருநீ
றணியப் பிணியகற்றி அருள்நீ
(அலை)
அழகு பொழிமயிலொன் றருண கிரியையுமிங்
கழைத்துக் கொணர்ந்ததுனைத் தொழவே
அழகுத் தமிழிலிசை பெறவே
(அலை)
அழித்தும் அருளுமுன்கை பிடித்த வலியவெலை
வழிக்குத் துணையெனவும் தருவாய்!
சுழிக்குள் அமிழ்ந்துமெழ அருள்வாய்!
(அலை)
வினைகள் தமையழித்தும் பிறவி களைத்தடுத்தும்
உயர்ந்த ஒருவகத்தைத் தருவாய்!
உனத ருகிலிருக்க அருள்வாய்!
(அலை)
--
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/39C98DF9-7F59-4DFD-A78C-45BB608FF622%40gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vhwWUgUyNuERd8MSAJrXV%3D8ZQgLb9DxEDzjjA%2BYmpO%2Bg%40mail.gmail.com.
On Mar 24, 2026, at 16:18, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPa3kTFEtAy-1zbRy-nyLFq7YHndA6tAniuTRC%3DR5-49w%40mail.gmail.com.
On Mar 24, 2026, at 10:50 AM, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-%2BWaHRTNhQpHSJ%2B7y96dUJODB9km6XX5qXcO7jAOiHGXQ%40mail.gmail.com.