தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் .. தனதான )
“துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்” (திருத்தணிகை) –
(ராகம் – பெஹாக்)
… பத்தா யெனதைத் தரவேணும்
… பற்றா சுற்றே னத்தா லத்தா
… பற்றே விடுதற் பெறவேணும்
வெப்போ டப்போ டிட்டார்
நச்சே
… மெய்ப்பா டறியப் பிணிபோகும்
… விச்சா தித்தா னற்சே வித்தே
… மிட்டா மிசைதற் செயலோனே
முற்பா வத்தா லிப்பா
ருற்றேன்
… இற்றே வினையைக் களைவாய்நீ
… பொற்பா தத்தே விட்டே னற்றேன்
… சற்றே துணையைத் தருவாயோ
தக்கோ ரற்றே கற்றே
னற்றேன்
,,, பொற்பா மறிவைத் தருமீசா
… தற்போ தத்தே உட்கா ணுற்றால்
… சித்தே கையிலைப் பெருமானே
பற்று ஆகிப் பாவத்தே உற்றேன்
பத்தா எனதைத் தரவேணும்
பற்றாசு உற்றேன் அத்தால் அத்தா
பற்றே விடுதல் பெறவேணும்
வெப்போடு அப்போடு இட்டார் நச்சே
மெய்ப்பாடு அறியப் பிணிபோகும்
விச்சாதித்தான் நற் சேவித்தே
மிட்டா மிசைதல் செயலோனே
முற் பாவத்தால் இப்பார் உற்றேன்
இற்றே வினையைக் களைவாய்நீ
பொற் பாதத்தே விட்டேன் அற்றேன்
சற்றே துணையைத் தருவாயோ
தக்கோர் அற்றே கற்றேன் அற்றேன்
பொற்பா மறிவைத் தரும் ஈசா
தற்போதத்தை உட்காண் உற்றால்
சித்தே கையிலைப் பெருமானே.
பற்று ஆகிப் பாவத்தே
உற்றேன் பத்தா எனதைத் தரவேணும்
பந்தம் கொண்டு பாவத்தை அடைந்தேன். (நான் யாரென்ற) எனது முகவரியைத் தருவாய். பத்தா – முகவரி, விலாசம். சுருக்கமாக, நான் எங்கிருந்து எதற்காக இப்பிறவி வெடுத்துப் பந்தத்திலுற்றேன்என்பதைத் தெரிவிப்பாயாக.
பற்றாசு உற்றேன் அத்தால் அத்தா பற்றே விடுதல் பெறவேணும்
பற்றுக்கோடாக உன்னை அடைந்தேன். அதனால், தலைவா என் பற்றினை விடுதல் செய்வாயாக. பற்றாசு - பற்றுக்கோடு, அத்தால் – அதனால், அத்தா - தலைவா
வெப்போடு அப்போடு இட்டார் நச்சே மெய்ப்பாடு அறியப் பிணிபோகும்
(அப்பர் பெருமானைச் சமணர்கள்) சுண்ணம்புக் காளவாயிலும், கடலில் தள்ளியும், நஞ்சிமிட்டும் கொல்லப் பார்த்தனர். ஆயின், அவர் இறையின் உண்மை அறிந்ததனால், பட்ட துன்பமெல்லாம் மறைந்தன.
விச்சா தித்தா னற்சே வித்தே மிட்டா மிசைதற் செயலோனே
வேறுசாதியின ரான நந்தனார் அவர் நல்ல விதமாக வணங்கும் வகையில் நந்தியை விலகச் செய்து அவர்தம் சுதந்திரம் அனுபவிக்கச்செய்தவனே - விச்சாதித்தான் – வேறு சாதியினன், மிட்டா – சுதந்திரம், மிசைதல் – அனுபவித்தல்
முற் பாவத்தால் இப்பார் உற்றேன் இற்றே வினையைக் களைவாய்நீ
முன் செய்த பாவத்தால் இந்த உலகில் வந்து சேர்ந்தேன். இன்றே எந்தன் வினைகளைக் நீ களைவாயாக. இற்றே – இன்றே என்பதன் வலித்தல் விகாரம்.
பொற் பாதத்தே விட்டேன் அற்றேன் சற்றே துணையைத் தருவாயோ
உனது பொற்பாதங்களை விடாமல் பற்றினேன். எனக்கு உன் துணையைத் தருவாயோ
தக்கோர் அற்றே கற்றேன் அற்றேன் பொற்பா மறிவைத் தரும் ஈசா
அறிவுடையோரைப் பெறாதிருந்ததனால் அறிவில்லாத வனானேன். பொலிகின்ற அறிவைத் தருகின்ற ஈசனே
தற்போதத்தே உட்காண் உற்றால் சித்தே கையிலைப் பெருமானே
உண்மையான ஆத்ம ஞானத்தை என்னுள் காணுதல் உண்டாகில் அதுவே நான் அடையும் உண்மை அறிவு, கையிலாயத்தில் வீற்றிருப்பவனே. – தற்போதம் – ஆன்ம ஞானம்
On Sep 11, 2025, at 16:44, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP43MY7gz4C8tN7SqNBFToe5do9sZh-v%2Ba0XL9%3DXC10%3Dw%40mail.gmail.com.
வண்ண விருத்தம் முயற்சி – 5 (ராம்)
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் .. தனதான
திருப்புகழ்:
“துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்” (திருத்தணிகை) – (ராகம் – பெஹாக்)
அப்பா லுற்றா யத்தா முத்தே
… அத்தே னருளைத் தருவாயே
… அக்கா ளைத்தாய் விட்டே கிட்டாய்
… அப்பா வருகத் தரைமீதே
வெப்போ டப்போ டிட்டார் நச்சே
… மெய்ப்பா டறியப் பிணிபோகும்
… விச்சா தித்தா னற்சே வித்தே
… மிட்டா மிசைதற் செயலோனே
முப்பீ டைத்தூ ரிட்டே கிட்டால்
… முற்றா வினையைத் தகர்வேனோ
… முற்பா வத்தா லிக்கா லுற்றேன்
… மொட்டா யவிழப் பெறுவேனோ
இப்போ திற்றே கற்றே னற்றேன்
… எட்டா தறிவைத் தருவாயே
… எப்பா வைப்பா டிப்பூ சிப்பேன்
… எற்றோ கயிலைப் பெருமானே
பதம் பிரித்து:
அப்பால் உற்றாய் அத்தா முத்தே
அத்தேன் அருளைத் தருவாயே
அக்காளைத்தாய் விட்டு ஏகிட்டாய்
அப்பா வருகத் தரைமீதே
வெப்போடு அப்போடு இட்டார் நச்சே
மெய்ப்பாடு அறியப் பிணிபோகும்
விச்சாதித்தான் நற் சேவித்தே
மிட்டா மிசைதல் செயலோனே
முப்பீடை தூர் இட்டு ஏகிட்டால்
முற்றா வினையைத் தகர்வேனோ
முற்பாவத்தால் இக்கால் உற்றேன்
மொட்டாய் அவிழப் பெறுவேனோ
இப்போது இற்றே கற்றேன் அற்றேன்
எட்டாத அறிவைத் தருவாயே
எப்பாவைப் பாடிப் பூசிப்பேன்
எற்றோ கயிலைப் பெருமானே
அப்பால் உற்றாய் அத்தா முத்தே
அத்தேன் அருளைத் தருவாயே:
(என்னைவிட்டு) வெகுதூரத்தில் உள்ளாய், முத்தைப்போன்ற என்தலைவா. அந்தத் தேன்போன்ற உன் அருளை எனக்குத் தருவாயாக
அக்காளைத்தாய் விட்டு ஏகிட்டாய்
அப்பா வருகத் தரைமீதே:
(உன் இருக்கையான) அந்தக் காளையின்மீது ஏறி என்னைவிட்டுச் சென்றாய். என் தகப்பனானவனே, நீ தரைமீது வந்தருள வேண்டும்.
வெப்போடு அப்போடு இட்டார் நச்சே மெய்ப்பாடு அறியப் பிணிபோகும்
(அப்பர் பெருமானைச் சமணர்கள்) சுண்ணம்புக் காளவாயிலும், கடலில் தள்ளியும், நஞ்சிமிட்டும் கொல்லப் பார்த்தனர். ஆயின், அவர் இறையின் உண்மைநிலையைஅறிந்ததனால், பட்ட துன்பமெல்லாம் மறைந்தன.
விச்சா தித்தா னற்சே வித்தே மிட்டா மிசைதற் செயலோனே
வேறுசாதியின ரான நந்தனார் அவர் நல்ல விதமாக வணங்கும் வகையில் நந்தியை விலகச்செய்து அவர்தம் சுதந்திரம் அனுபவிக்கச்செய்தவனே. விச்சாதித்தான் – வேறு சாதியினன், மிட்டா – சுதந்திரம், மிசைதல் – அனுபவித்தல்
முப்பீடைத் தூர் இட்டு ஏகிட்டால்
முற்றா வினையைத் தகர்வேனோ:
மும்மலங்களான பீடைகள் என்னைவிட்டுப் போகுமாயின், முற்றிய வினைகளாம் இதுவரையில் சேர்ந்த பாப புண்ணியங்கள் யாவையும் தகர்த்தல் ஆகுமோ?
முப்பீடைகள் - இங்கு மும்மலத்தைக் குறித்தது.
முற்றா - செய்யா என்ற வாய்ப்பாட்டு வினையெச்சம். முற்றிய என்று பொருள் படும்.
முற்பாவத்தால் இக்கால் உற்றேன்
மொட்டாய் அவிழப் பெறுவேனோ:
முற்பிறவிகளில் செய்த பாவத்தினலோ இங்குத் தோன்றினேன்? (மேற்சொன்னபடி) முற்றிய வினைகள் தீர்ந்திடுமாயின், ஆன்மாவில் மொட்டுவிரிவதன்ன மகிழ்ச்சியினை அடைவேனோ?
இப்போது இற்றே கற்றேன் அற்றேன்
எட்டாத அறிவைத் தருவாயே:
இப்போது நைந்து நிற்கின்ற நிலையில் (ஆன்மா என்ற இறையுணர்வை)அறிவை நான் பெறவில்லை. எனவே, எட்டுதற்கு அரிதான அந்த ஆன்ம உணர்வை எனக்குத் தருவாயே
இற்றே: இத்தன்மைத்தான நைந்த நிலையில்
எப்பாவைப் பாடிப் பூசிப்பேன்
எற்றோ கயிலைப் பெருமானே:
(மேற்படி இயைவுணர்வு பெறுதற்கு) எந்த பாக்களைப் பாடி உன்னைப் பூஜிப்பேனோ, அவை எத்தன்மைத்தனவோ (அறியேன்) கயிலையின் சிவபெருமானே.
எற்றோ - எத்தன்மைத்ததோ
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
On Sep 11, 2025, at 16:44, Siva Siva <naya...@gmail.com> wrote:
அப்பா லுற்றா யத்தா முத்தே
… அத்தே னருளைத் தருவாயே
… அக்கா ளைத்தாய் விட்டே கிட்டாய்
… அப்பா வருகத் தரைமீதே
வருக தரைமீதே?
. . . . .
முப்பீ டைத்தூ ரிட்டே கிட்டால்
… முற்றா வினையைத் தகர்வேனோ தகர்ப்பேனோ, தகராயோ ?
… முற்பா வத்தா லிக்கா லுற்றேன்
… மொட்டா யவிழப் பெறுவேனோ
இப்போ திற்றே கற்றே னற்றேன்
… எட்டா தறிவைத் தருவாயே எட்டா அறிவை?
… எப்பா வைப்பா டிப்பூ சிப்பேன்
… எற்றோ கயிலைப் பெருமானே
. . . . . . . . .
On 18 Sep 2025, at 6:53 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNsGDtRJgKFhu9B_WkX73wq36U%3Dm32JDm3gVhgRXxnLng%40mail.gmail.com.
On 18 Sep 2025, at 4:57 PM, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtu1RMk1wqHZLd7W%2B1dWjw827PFxiNS7z%3D9%3D3isZmCVpEA%40mail.gmail.com.
On 18 Sep 2025, at 6:53 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNsGDtRJgKFhu9B_WkX73wq36U%3Dm32JDm3gVhgRXxnLng%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtj1%2Ba3bmsWYhC%2B7UoHL7R-tEqt_KsH%2BHup_BHi22HuU9w%40mail.gmail.com.
On Sep 19, 2025, at 06:29, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXY7Cu2hTfVDeEY7D%3Dv8N8Ys-7QROdNUq9KzACGWUGAn2w%40mail.gmail.com.
முழுமையாகப் பார்த்து மீண்டுமோர் பதிவை இடுகிறேன்:
வண்ண விருத்தம் முயற்சி – 5 (ராம்)
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் .. தனதான
திருப்புகழ்:
“துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்” (திருத்தணிகை) – (ராகம் – பெஹாக்)
அப்பா லுற்றா யத்தா முத்தே
… அத்தே னருளைத் தருவாயே
… அக்கா ளைத்தாய் விட்டே கிட்டாய்
… அப்பா வருகத் தரைமீதே
வெப்போ டப்போ டிட்டார் நச்சே
… மெய்ப்பா டறியப் பிணிபோகும்
… விச்சா தித்தா னற்சே வித்தே
… மிட்டா மிசைதற் செயலோனே
முப்பீ டைத்தூ ரிட்டே கிட்டால்
… முற்றா வினையைத் தகர்வேனோ
… முற்பா வத்தா லிக்கா லுற்றேன்
… மொட்டா யவிழப் பெறுவேனோ
இப்போ திற்றே கற்றே னற்றேன்
… எட்டா தறிவைத் தருவாயே
… எப்பா வைப்பா டிப்பூ சிப்பேன்
… எற்றோ கயிலைப் பெருமானே
. . . . . .
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtvEf4RD3m%3DvF0Yx-cs0rQ0jY7A%3D36OyRARn76HLLFy02w%40mail.gmail.com.
என்ன சொல்லிப் புகழ்வேன், அறிகிலனே.அற்புதம், வன்ணச் சித்திரம், திரு. கோபால்.அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
On Sat, Sep 20, 2025 at 1:47 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
நீங்கள் முயன்ற இந்தத் திருப்புகழ்ச் சந்தத்தில் இன்று நானும் ஒன்று முயன்றேன். அதை என் சந்தப்பா முயற்சிகள் இழையில் இட்டிருக்கிறேன்..கோபால்.
On Thu, Sep 18, 2025 at 12:39 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote: