முருகனுக்கு வேலைக் கொடுத்தது சிவனா? சக்தியா?

102 views
Skip to first unread message

Vivek Bharathi

unread,
Jun 12, 2020, 1:23:27 AM6/12/20
to santhavasantham
வணக்கம். 

அண்மையில் இசையுரை வழங்கும் நண்பரில் ஒருவர், தாம் வேலின் கதையை இசையுரையாக வழங்கவிருப்பதாகவும், அதற்கான மேற்கோள்களைப் படித்துக்கொண்டிருக்கும்போது ஓர் ஐயம் எழுந்ததாகவும் கூறி அவருடைய இசையுரையில் ஒரு பகுதியை எனக்கு அனுப்பி வைத்தார். நான் அதை அப்படியே இவ்விடத்திலும் இடுகிறேன். அறிவார்ந்த சான்றோர்கள் ஐயத்தைக் களைந்துதவ வேண்டுகிறேன். 

தேவர்கள் சிவபெருமானிடம் சென்று, முருகனைத் தங்களுக்குத் தலைவனாக அனுப்பிச் சூரனையும், அவனது கூட்டத்தாரையும் அழித்துத் தமக்கு இன்பம் வழங்கி வாழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். சிவபெருமான் முருகனை அழைத்து, ‘‘குமரனே! நீ விரைந்து சென்று சூரனாதியரை வென்று தேவர்களுக்கு வாழ்வு தருக’’ என்று ஆணை மொழிந்தார். பிறகு சிவபெருமான் தனது அம்சமான பதினோரு ருத்திரர்களின் அம்சத்திலிருந்து பதினோரு ஆயுதங்களை அளித்தார். பிறகு உமாதேவியிடம், ‘‘முருகனுக்கு ஆயுதமொன்றை வழங்குக’’ என்றார். 

அம்பிகை ஒப்பற்ற ஆற்றல் கொண்டதும், விரைந்து செல்வதும், பகைவரை எளிதில் அழித்து வெற்றியை அடைந்து மீள்வதுமான வலிய வேலாயுதத்தைப் படைத்து அவரிடம் அளித்தாள். இதுவே வேல் பிறந்த கதையாகும். சிவசக்தியரின் அம்சமாகவே வேல் தோன்றியது. ஆனால், கந்தபுராணம் உற்பத்தி காண்டம் - விடைபெறு படலத்தில் சிவபெருமான், முருகப்பெருமானுக்கு ஆயுதங்களை அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. 

அது வருமாறு : 

சூரபத்மன் முதலான கொடிய அரக்கர்களின் சேனையை வெல்லப் போர்க்கோலம் பூண்டு நின்ற முருகப்பெருமானிடம் சிவபெருமான் பதினோரு உருத்திரர்களையும் முறையே, 1. தோமரம், 2. கொடி, 3. வாள், 4. குலிசம், 5. அம்பு, 6. அங்குசம், 7. மணி, 8. தாமரை, 9. தண்டம், 10. வில், 11. மழு எனும் பதினோரு ஆயுதங்களாக்கி அளித்தார். பின்பு ஐந்து பூதங்களையும் ஒரு சேர அழிக்கக்கூடியதும் எவர் மேல் விடுத்தாலும், அவருடைய வலிமைகளையும் வரங்களையும் கெடுத்து உயிரைப் போக்கக்கூடியதும் அனைத்துப் படைக்கலங்களுக்கும் தலைமையானதும் ஆகிய வேலாயுதத்தைப் படைத்து முருகக்கடவுளிடம் கொடுத்தார். இதனை,

‘‘ஆயுதற் பின்னர் ஏவில் மூதண்டத்து
ஐம்பெரும்பூதமும் அடுவது
ஏய பல்லுயிரும் ஒருதலை முடிப்பது
ஏவர்மேல் விடுக்கினும் அவர்தம்
மாயிருந் திறலும் வரங்களும் சிந்தி
மண்ணியில் உண்பது எப்படைக்கும்
நாயகமாவது, ஒரு தனிச் சுடர்வேல்
நல்கியே மதலை கைக் கொடுத்தான்.’’

- என வரும் கந்தபுராணச் செய்யுளால் அறியலாம். இவ்வாறு சிவபெருமான் முருகனுக்கு வேல் கொடுத்த வரலாற்றைக் கூறுவது புராண மரபு எனப்படும். ஆனால், நடைமுறையில் அன்னை பராசக்தியே முருகப்பெருமானுக்கு வேலாயுதத்தை வழங்கினாள் என்று கூறப்படுகிறது. அதையொட்டியே ஆலயங்களில் அம்பிகையின் சந்நதியில் முருகன் வேல் வாங்கும் ஐதீக நாடகம் நடந்து வருகிறது.

அவரது ஐயம் : முருகனுக்கு வேலைக் கொடுத்தது சிவனா? சக்தியா? 
"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

Rajja Rajagopalan

unread,
Jun 12, 2020, 2:57:03 AM6/12/20
to santhav...@googlegroups.com
வணக்கம்

வேதப்பொருள் மறைபொருளாய் இருக்கிறதுஅது அறிவுக்கு எட்டாத பரம்பொருளை அறியத்தருவதுஇதுஎப்படி இயலும்அதற்காகத்தான் எதுவெல்லாம் அறியப்படுகிறதோஅடையப்படுகிறதோ அவைஅல்லபரம்பொருள் என்பதையே பெரிதாக விளக்கிஅந்தப் படிப்படியான அறியாமை விலக்கத்தால்விலக்கவும்விளக்கவும் முடியாத விளக்காக இருக்கும் ஆத்மாவே அப்பொருள் எனக் காட்டுகிறது

இது எளியார்க்குப் புரியாது என்பதால் மறைபொருள் விளக்கமாக ஸ்மிருதிகளும்அதனிலும் எளிதாகஇப்படிநடந்தது’ என இதிகாசம் எனும் வரலாற்றுப்பதிவுகளும் வேத விளக்கங்களாகப் பரிமளிக்கின்றன

அவ்வகையில் வத்தன தாம் புராணங்கள்புராணம் என்பது ‘புர அபி நவம்’ என்பதன் திரிபு அதாவதுதொன்மையான கதையாக இருப்பினும் புதிய அறிவையே எப்போதும் தருவது எது எப்போதும் புதுமையாகவேஇருப்பதுஎது மாறாத சத்தியமாக இருப்பதோ அது மட்டுமே எனவே புராணக்கதைகளில் உண்மைஎன்பதுஒன்றுமட்டுமே மற்ற எல்லாம் அதனை உணர்த்த அமைக்கப்பட்ட அன்பூட்டல்

சிவம் என்பது சுத்த சைதன்யம்அதனைச் சார்ந்து எழுவதெல்லாம் சக்தி தீ வேறு சுடர் வேறு ஆகாதல்லவா?   எனவே பரசிவனார் கொடுத்ததும்பராசக்தி கொடுத்ததும் இரு செயல் ஆக முடியாது.  

வேத விழுப்பமான அத்தகைய ஈரற்ற பரம்பொருள உணர்வு கொண்டு பயின்றால்தான்நம்முடைய புராணவேறுபாட்டுக்களிலும்ஏன்நமது ஸதாதந தர்மத்திலும் இருக்கும் முரண்பாடுபோல் தெரியும்நுணுக்கங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்

அப்போதுதான் மனித இனத்தை ஒன்றுபடுத்தும் காவியங்களையும் படிக்க முடியும்

அன்புடன்

மீரா

Sent from my iPhone

On 12 Jun 2020, at 06:23, Vivek Bharathi <tamiludanvi...@gmail.com> wrote:

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABgdW7burDK%2BDPYKmi2YSfSzn5R%2B3LB9TgS_CmA4HBGyUZEtTA%40mail.gmail.com.

Subbaier Ramasami

unread,
Jun 12, 2020, 3:07:40 AM6/12/20
to santhavasantham
‘ஆயுதற் பின்னர் ஏவில் மூதண்டத்து
ஐம்பெரும்பூதமும் அடுவது
ஏய பல்லுயிரும் ஒருதலை முடிப்பது
ஏவர்மேல் விடுக்கினும் அவர்தம்
மாயிருந் திறலும் வரங்களும் சிந்தி
மண்ணியில் உண்பது எப்படைக்கும்
நாயகமாவது, ஒரு தனிச் சுடர்வேல்
நல்கியே மதலை கைக் கொடுத்தான்.’’

ஒரு தனிச் சுடர்வேல்  நல்கியே மதலைகைக் கொடுத்தான்.

ஒரு தனிச் சுடர்வேல் மதலைகைக் கொடுத்தான் என்றோ  மோனை வரவேண்டுமென்றால் ஒரு தனிச்சுடர்வேல் நலமுற  மதலை கைக்கொடுத்தான் என்றோ சொல்லியிருக்கலாம். ஆனால் நல்கியே மதலை கைக்கொடுத்தான். இதிலிருந்து என்ன தெரிகிறது. அவன் நேரடியாக  முருகன் கைக்கொடுக்கவில்லை. அதை ஒருவர்கையில் நல்கி அவர்மூலமாக மதலை கைக்கொடுத்தான். சங்கராச்சார்யார்   பதக்கம் கொடுத்தார் என்று சொல்கிறபோது சங்கராச்சர்யார் நேரடியாகக் கொடுக்கமாட்டார். இன்னொருவர் கையில் நல்கி அவரைக் கொடுக்கச்சொல்வார். ஆனால் சொல்லப்படுவது என்ன? சங்கராச்சார்யார் கொடுத்தார் என்றுதானே! அதைப்போல சிவன் வேலைச் சக்தியின் கையில் நல்கி கொடுக்கவைத்தான் என்பது பொருள்.  கொடுத்தது சக்தி. கொடுக்கவைத்தது சிவன்.

Kaviyogi Vedham

unread,
Jun 12, 2020, 3:15:20 AM6/12/20
to santhavasantham
Ilandhai.. aRputhamana viLakkam. i agree with you,
yogiyar 

Pas Pasupathy

unread,
Jun 12, 2020, 8:55:09 AM6/12/20
to Santhavasantham
சிவன் கொடுத்ததாய்ச் சொல்வதைப் 'புராண' மரபு என்பர். சக்தி கொடுத்ததாய்ச் சொல்வதை 'ஐதீக' மரபு என்பர்.  இந்த ஐதீகத்தை அருணகிரி ;

 பங்கமி லாநீலி மோடிப
     யங்கரி மாகாளி யோகினி
          பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண்

டெம்புதல் வாவாழி வாழியெ
     னும்படி வீறான வேல்தர

என்று ஒரு திருப்புகழில் சொல்கிறார்.  ( தணிகைப் புராணத்தில் இப்படி இருக்கிறது என்று சிலர் சொல்லவே, நான் தேடினேன் ஒரு முறை;  இருக்கவில்லை. சிவன் கொடுத்ததாய்த் தான் எழுதியிருந்தது. எனக்குத் தெரிந்தவரை அருணகிரி சொன்னது தான் எனக்கு இதுவரை கிட்டிய இலக்கிய ஆதாரம்.) 

பெரும்பாலும், ஆலயங்களில் 'ஐதீக' மரபைக் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றாலும், வைத்தீஸ்வரன் கோவிலில் முத்துக்குமார சுவாமி வைத்தியநாத சுவாமியிடம் வேல் வாங்குவதாய் 'புராண மரபை' ஒட்டிக் காட்டுவர் என்று படித்திருக்கிறேன். 

On Fri, 12 Jun 2020 at 03:15, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
Ilandhai.. aRputhamana viLakkam. i agree with you,
yogiyar 

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--

Siva Siva

unread,
Jun 12, 2020, 9:31:53 AM6/12/20
to santhavasantham
/ ஒரு தனிச் சுடர்வேல்  நல்கியே மதலைகைக் கொடுத்தான் /

I think here we should take the 4th meaning seen in Tamil Lexicon.

நல்கு-தல் nalku- , 5 v. tr. 1. [M. nalkuka.] To bestow, grant, give; கொடுத்தல். இல்லோர் புன்கண் டீர நல்கும் (பதிற்றுப். 86, 6). 2. To desire, like; விரும்புதல். நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய் (மணி. 12, 56). 3. To show deep love; தலையளிசெய்தல். பரிந்தவர் நல்கார் (குறள், 1248). 4. To create; படைத்தல். நல்கித் தான்காத்தளிக்கும் பொழிலேழும் (திவ். திருவாய். 1, 4, 5). 
 
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Pas Pasupathy

unread,
Jun 12, 2020, 10:37:26 AM6/12/20
to Santhavasantham
ஐதீக மரபுக்கு இன்னொரு  இலக்கியச் சான்று கொடுக்க மறந்தேன்.

அழியாப் பேரளி உமைகண் நின்று
தன்பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த
அமையா வென்றி அரத்தநெடு வேலோய்!   --- கல்லாடம்

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 12, 2020, 3:07:01 PM6/12/20
to Santhavasantham
On Fri, Jun 12, 2020 at 9:37 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
ஐதீக மரபுக்கு இன்னொரு  இலக்கியச் சான்று கொடுக்க மறந்தேன்.

அழியாப் பேரளி உமைகண் நின்று
தன்பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த
அமையா வென்றி அரத்தநெடு வேலோய்!   --- கல்லாடம்

கல்லாடம், அருணகிரிநாதர், போல படிக்காசுப்புலவர் பாடியுள்ளார்.

வேல்கொடுத் தாய்திருச் செந்தூரர்க்கு, அம்மியின் மீதுவைக்கக்
கால்கொடுத் தாய்நின் மணவாள னுக்குக், கவுணியர்க்குப்
பால்கொடுத் தாய்மத வேளுக்கு மூவர் பயப்படச்செங்
கோல்கொடுத் தாயன்னை யேயெனக் கேதும் கொடுத்திலையே
                      - பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான்
செங்கோல் - செவ்விய பாணம்.

மறைந்து ஒர் ஆண்டு சென்றது. கிரேசி மோகனின் அழகிய வெண்பா:
https://www.vallamai.com/?p=50834
பால்கொடுத்தாய் சம்பந்தப் பிள்ளைக்குப் பண்ணிசைக்க,
வேல்கொடுத்தாய் மைந்தனுக்கு வெற்றிபெற, - தாள்கொடுத்தாய்
அய்யன் இடமிருந்து அய்யோ பதியோட;
பையன் எனக்களிவாய்ப் பாக்கு
                               - கிரேசி மோகன்

மார்கண்டேயனுக்காய் ஈசன் எமனை(அய்யோ-பதி) உதைத்தது அம்பாள் இருக்கும் இடது கால்.
காளிதாசனுக்கும், காளமேகத்துக்கும் தன் திருவாய் தாம்பூலம்(பாக்கு.

-----------

நா. கணேசன்

Subbaier Ramasami

unread,
Jun 13, 2020, 12:31:38 AM6/13/20
to santhavasantham
வேல்கொடுத் தாய்திருச் செந்தூரர்க்கு, அம்மியின் மீதுவைக்கக்
கால்கொடுத் தாய்நின் மணவாள னுக்குக், கவுணியர்க்குப்
பால்கொடுத் தாய்மத வேளுக்கு மூவர் பயப்படச்செங்
கோல்கொடுத் தாயன்னை யேயெனக் கேதும் கொடுத்திலையே  --- அருமையான பாட்டு.

கல்லாடம் கற்றானோடு சொல்லாடாதே என்று ஒரு மொழி கேட்டிருக்கிறேன்

இலந்தை

Subbaier Ramasami

unread,
Jun 13, 2020, 12:33:59 AM6/13/20
to santhavasantham
சிவனும் கொடுத்தான், சக்தியும் கொடுத்தான். இரண்டும்  தனித்தனிவேல் என்று கொள்ளலாமா?   

இலந்தை

Vivek Bharathi

unread,
Jun 14, 2020, 2:22:09 PM6/14/20
to santhavasantham
வணக்கம், 

மீ.ரா அவர்கள் கூறிய கருத்தினை நான் முற்றிலும் ஏற்கிறேன். 

ஆயினும், இன்னும் கொஞ்சம் ஆய்வு இந்த  இழையில் தொடர்ந்தால் தெளிவு கிடைக்கும் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போதுவரை கிடைத்திருக்கும் தெளிவு, 

1) ’நல்குதல்’ என்பதை வாங்கிக் கொடுத்தல் என்று பொருள் கொண்டால், சிவன் வேலைப் பார்வதி கைகளில் கொடுக்கப் பார்வதி வழங்கினார் என்று உணரலாம். 

2) ‘நல்குதல்’ என்பது படைத்தல் எனும் பொருளில் வரும்போது சிவனே வேலைப் படைத்துக் கொடுத்தார் என்றும் பொருள்படுகிறது. 

3) நம் இலக்கியங்களில் புராண மரபு, ஐதீக மரபு என இரண்டு வகை இருப்பதற்கான சான்றுப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன. ஆக, புராண மரபுப்படி சிவனும், ஐதீக மரபின்படி சக்தியும் வேலைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறியலாம். 

இதில் என்னுடைய ஐயம் என்னவென்றால், மக்களிடம் பெரும்பாலும் புழக்கத்தில் இருக்கும் ஐதீக மரபை நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமா? புராணமே மூலக்கதை என்று கொண்டு, புராண மரபை எடுத்துக் கொள்ள வேண்டுமா? 

இந்தக் கேள்வியைத் தாண்டி, எனக்கு இலந்தை ஐயா கொடுத்திருக்கும் விளக்கம் சரி என்று படுகிறது. சிவன் வேலைச் சக்தியிடம் வழங்கச், சக்தி முருகனுக்குக் கொடுத்தாள் என்பது லாஜிக் காகவும் தோன்றுகிறது. 

என் புரிதலில் தவறிருப்பின் மூத்தவர்கள் திருத்தியுதவுக! 

நன்றி!

Siva Siva

unread,
Jun 14, 2020, 2:40:58 PM6/14/20
to santhavasantham
"சக்தி முருகனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தாள்"   :)

Pas Pasupathy

unread,
Jun 14, 2020, 5:17:02 PM6/14/20
to Santhavasantham
முருகன் வேலாயுதம் பெற்றது பற்றி இரண்டு கருத்துகள் இருப்பினும் இரண்டையும் ஒன்று சேர்த்து முருகனுக்கு சிவபெருமான் வேலாயுதத்தைத் தர, பராசக்தியான உமாதேவியார் அதற்கு அளப்பரிய சக்திகளைக் கொடுத்தாள் என்று ஆன்றோர் கூறுவர்.

(இதற்கு எடுத்துக்காட்டாகத் திருக்கோலக்காவில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் பொன் தாளம் தர அதற்குப் பெருமாட்டி ஓசை தந்து ஓசை கொடுத்த நாயகி என்று பெயர் பெற்று விளங்குவதைக் கூறுவர்.)  

பி.கு. என் தனிப்பட்ட கருத்து:  ஸம்ஸ்கிருதத்தில்  'வேலை' சக்தி என்றே சொல்வர். இதுவும் இந்த ஐதீக மரபு உண்டாக ஒரு காரணமோ என்ற ஒரு ஐயம் எனக்கு உண்டு.

சக்தே பஜேத்வாம் ஜகதோ ஜனித்ரீம்

சுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம் 

நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே 

பூயோ நமஸ்தே ஸ்ருதி ஸன்னிதத்ஸ்வ.

- ஜகத்குரு ஆதிசங்கரர் அருளிய  வேல் ஸ்துதி 

இதனையும்  மனத்தில் வைத்தல் நலம். 

Swaminathan Sankaran

unread,
Jun 14, 2020, 6:42:12 PM6/14/20
to santhav...@googlegroups.com
சிவனும் சக்தியும் ஒன்று தானே! ஆகவே, சிவன் வேறு, சக்தி வேறு என்பது மாயை, வெறும் பிரமை. 
ஒருவர் உண்டாக்கி, மற்றவர் உயிர்ப்பித்து, இருவரும் ஆசீர்வதித்துக் கொடுத்தது, என்பது (பசுபதி கூறியுள்ளது மாதிரி)
பொருந்துமோ?  

சங்கரன் 

On Sun, Jun 14, 2020 at 5:17 PM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
முருகன் வேலாயுதம் பெற்றது பற்றி இரண்டு கருத்துகள் இருப்பினும் இரண்டையும் ஒன்று சேர்த்து முருகனுக்கு சிவபெருமான் வேலாயுதத்தைத் தர, பராசக்தியான உமாதேவியார் அதற்கு அளப்பரிய சக்திகளைக் கொடுத்தாள் என்று ஆன்றோர் கூறுவர்.

(இதற்கு எடுத்துக்காட்டாகத் திருக்கோலக்காவில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் பொன் தாளம் தர அதற்குப் பெருமாட்டி ஓசை தந்து ஓசை கொடுத்த நாயகி என்று பெயர் பெற்று விளங்குவதைக் கூறுவர்.)  

பி.கு. என் தனிப்பட்ட கருத்து:  ஸம்ஸ்கிருதத்தில்  'வேலை' சக்தி என்றே சொல்வர். இதுவும் இந்த ஐதீக மரபு உண்டாக ஒரு காரணமோ என்ற ஒரு ஐயம் எனக்கு உண்டு.

சக்தே பஜேத்வாம் ஜகதோ ஜனித்ரீம்

சுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம் 

நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே 

பூயோ நமஸ்தே ஸ்ருதி ஸன்னிதத்ஸ்வ.

- ஜகத்குரு ஆதிசங்கரர் அருளிய  வேல் ஸ்துதி 

இதனையும்  மனத்தில் வைத்தல் நலம். 

[,,,]

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 14, 2020, 7:52:13 PM6/14/20
to சந்தவசந்தம்
பசுபதியின் கூற்றுப் பொருத்தமாகத் தோன்றுகிறது

.. கடௌ பீத வாஸ: கரே சாரு சக்தி: 
புரஸ்தான் மாமாஸ்தே புராரேஸ் தனூஜ

ஸுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்ரம் (இன்னும் சக்தி பாணே .. என்று பல ஸ்தோத்ரங்களில் காணலாம். 

... அனந்த்

On Sun, Jun 14, 2020 at 5:17 PM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:

Vis Gop

unread,
Jun 15, 2020, 3:27:56 AM6/15/20
to santhav...@googlegroups.com
பரமேஶ்வரன் தன் இருகைகளாலும் பிடித்தல்லவோ அந்த வேலைத் தன் மகனுக்கு வழங்கி இருப்பார்!
பணிவுடன் கோபால்.

Sent from my iPhone

Subbaier Ramasami

unread,
Jun 15, 2020, 10:29:10 AM6/15/20
to santhavasantham
அவ்வளவு பளுவா?

On Mon, Jun 15, 2020 at 12:57 PM Vis Gop <vis...@gmail.com> wrote:
பரமேஶ்வரன் தன் இருகைகளாலும் பிடித்தல்லவோ அந்த வேலைத் தன் மகனுக்கு வழங்கி இருப்பார்!
பணிவுடன் கோபால்.

Vis Gop

unread,
Jun 15, 2020, 12:09:00 PM6/15/20
to santhav...@googlegroups.com
அவ்வளவு மதிப்பு வாய்ந்தது. ஆசீர்வாதமாகக் கொடுக்கப் படுவதும் இரு கரங்களாலேயே கொடுக்கப் படும்; பெறவும் படும். 
பணிவுடன் கோபால். 

Sent from my iPhone

Subbaier Ramasami

unread,
Jun 16, 2020, 9:12:17 AM6/16/20
to santhavasantham
இருகரங்களால் கொடுத்தான் என்றால் இடது கை சக்தியின் கை. எனவே இருவரும் சேர்ந்து கொடுத்ததாகத்தான் கொள்ளவேண்டும்.

இலந்தை

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Vis Gop

unread,
Jun 16, 2020, 9:42:39 AM6/16/20
to santhav...@googlegroups.com
அந்தப் பொருளை எண்ணியே நான் அவ்வாறு குறிப்பிட்டேன்.
பணிவுடன்
கோபால்.

Sent from my iPhone

Pas Pasupathy

unread,
Jun 16, 2020, 9:51:44 AM6/16/20
to Santhavasantham
ஆய்வு நோக்கில் பயணிப்பவர்கள் செய்ய ஒரு பணி மிச்சம்! :-)   தமிழ் இலக்கிய, பண்பாடு தாம் முக்கியம் எனினும், .....

 ஸம்ஸ்கிருத ஸ்காந்தத்தின் சங்கர ஸம்ஹிதையைத் தழுவியது தமிழ்க் கந்த புராணம்.  மேலும், ஸ்காந்தத்தைக் காண்டங்கள்  முறையிலும்  எடுத்துரைப்பர். ( ஸம்ஹிதைகளுக்கும் காண்டங்களுக்கும் வேறுபாடுகள் உண்டென்று படித்திருக்கிறேன். )  அதனால், ஸம்ஸ்கிருத மூலங்களில் ( காண்டம், ஸம்ஹிதை)  என்ன சொல்லியிருக்கிறது? என்று தெரிந்தால் நலம்.      

On Tue, 16 Jun 2020 at 09:42, Vis Gop <vis...@gmail.com> wrote:
அந்தப் பொருளை எண்ணியே நான் அவ்வாறு குறிப்பிட்டேன்.
பணிவுடன்
கோபால்.

Ramamoorthy Ramachandran

unread,
Jun 16, 2020, 10:55:48 AM6/16/20
to Santhavasantham
 கராம்மலை யத்தளர் கைக்கரி எய்த்தே
அராவணை யில்துயில்வோய் என
அந்தநள்
விராவி அழைத்தருள் மெய்ப்பொரு ளுக்கே
இராமன் எனப்பெயர் ஈந்தனன் அன்றே! 

என்றோ, அகலிகை சாப விமோசனத்துக்கு கோதம முனிவர் கூறிய 'இராமன்' என்ற பெயரை விட்டார் எடுத்து ஈந்தார்.
அதுபோல் பார்வதி  வேலை நல்கினாள்.- அன்புடன் புலவர் இராமமூர்த்தி. 

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Jun 16, 2020, 10:56:35 AM6/16/20
to Santhavasantham
திருத்தம்: அந்நாள்.

Ramamoorthy Ramachandran

unread,
Jun 16, 2020, 10:58:11 AM6/16/20
to Santhavasantham
இன்னொன்று: வசிட்டர், விட்டார் ஆனது!

Ramamoorthy Ramachandran

unread,
Jun 16, 2020, 11:06:42 AM6/16/20
to Santhavasantham
அம்மை சீர்காழியில்,பொற்கிண்ணத்தில் அம்மை கறந்தளித்த பாலை, இறைவன் வாங்கி ஞானசம்பந்தனுக்கு அளித்தார். இருவரும் ஒருவர் தர மற்றவர்வாங்கி அளித்தல் வழக்கம். 
- புலவர் 

Siva Siva

unread,
Jun 16, 2020, 11:12:27 AM6/16/20
to santhav...@googlegroups.com
Any reference to backup this?

On Tue, Jun 16, 2020 at 11:06 AM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
அம்மை சீர்காழியில்,பொற்கிண்ணத்தில் அம்மை கறந்தளித்த பாலை, இறைவன் வாங்கி ஞானசம்பந்தனுக்கு அளித்தார். இருவரும் ஒருவர் தர மற்றவர்வாங்கி அளித்தல் வழக்கம். 
- புலவர் 
--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 16, 2020, 12:53:58 PM6/16/20
to சந்தவசந்தம்
’எதற்காக இவர்களெல்லாம் எனது வேலை யார் கொடுத்தார் என்பது பற்றி இப்படி விவாதிக்கிறார்கள்?’ என்று முருகன் கேட்பது காதில் விழுகிறது! :-)) 

... அனந்த்

Vivek Bharathi

unread,
Jun 16, 2020, 1:24:54 PM6/16/20
to santhavasantham
வேலை யின்மையால் வேலைப் பற்றிநாம் 
வேண்டும் வண்ணமே கதைக்கிறோம்! 
வேலை யன்கதை மனதில் ஊன்றிட 
வெற்றி என்பதால் ரசிக்கிறோம்! 

நூலை நன்குணர்ந் தோது வார்மிசை 
நூல்வி டுத்திடின் ஆடையாம்! 
பாலைக் காய்ச்சுதல் பருக சுவைதரும் 
பால கன்றனி ஆவலே!! 

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 16, 2020, 4:00:12 PM6/16/20
to சந்தவசந்தம்
>> நூலை நன்குணர்ந் தோது வார்மிசை 
>> நூல்வி டுத்திடின் ஆடையாம்! 

அருமை!  

... அனந்த்

Vis Gop

unread,
Jun 16, 2020, 11:02:01 PM6/16/20
to santhav...@googlegroups.com
ஸம்ஸ்க்ருத ஸ்காந்தத்தின் அறிமுக விளக்கம் ஒன்றில் சக்தி என்கிற ஒரு அஸ்த்ரம் முருகனுக்கு பாகசாஸனர் என்கிற தெய்வம் மூலம் கொடுக்கப் பட்டதாக இருக்கிறது. பாகசாஸனர் தேவர்களுக்குத் தலைவரான இந்திரனையோ தெய்வங்களுக்குத் தலைவரான ஈசனையோ குறிக்கக்கூடும். 
பணிவுடன் கோபால். 
Sent from my iPhone

Subbaier Ramasami

unread,
Jun 17, 2020, 1:28:34 PM6/17/20
to santhavasantham
கைலாயத்தில் முருகனுக்கும் சிவனுக்கும் இடையே இப்படி ஒரு உரையாடல்

சிவன்: முருகா, நீ எனக்கு உபதேசித்ததால் குருவாகி விட்டாய். உனக்கு நான்  குருகாணிக்கையாக மிகச் சக்திவாய்ந்த ஞான வேல் ஒன்று தரவிழைகிறேன். ஆனால் அதிலும் ஒரு சங்கடமிருக்கிறது
"என்ன சங்கடம் தந்தையே"  
"குருவுக்குக் காணிக்கை கொடுக்கும் போது வணங்கித்தான் கொடுக்கவேண்டும். ஆனால் நீ என் மகனாகவும் இருப்பதால் உன்னை நான் வணங்குவதை நீ ஏற்கமாட்டாய்"
"என்னால் வணங்கப்படவேண்டியவர் என்னை வணங்குவதாவது? தந்தையே நான் ஒரு வழி சொல்லட்டுமா?"
"சொல்"
"நீங்கள் மட்டுமே என்னைத் தனியாகப் பெற்றெடுத்துவிட்டீர்கள். அதனால் தாய்க்குக் கொஞ்சம் வருத்தம்.  இப்பொழுது வேலை நீங்களே கொடுத்தாலும் தாய்க்கு வருத்தம் ஏற்படும்"
"அதனால் என்ன செய்யச் சொல்கிறாய்" 
"அப்பா நான் தாயை வணங்கலாம். நீங்கள் வேலை அன்னையிடம் கொடுத்துவிடுங்கள். நான் அன்னையிடம் வணங்கிப் பெற்றுக்கொள்கிறேன்.  "
"சரி முருகா, நல்ல வழி சொன்னாய்"
முருகன் சொன்ன படியே  சிவன் வேலை சக்தியிடம் தர  சக்தி  தன் பங்குக்கு அதில் சக்தியை ஏற்றி முருகனிடம் தருகிறாள்.

பாகசாஸனர் முருகனிடம் கொடுத்ததாக இருக்கிறது. ஒரு பாகத்தைச் சாஸனமாகப் பெற்றவர் சக்தி. அவர்தான் பாகசாஸனர். அவர் பெற்றுக் கொடுத்தாள் என்றும் கொள்ளலாம்

Vivek Bharathi

unread,
Jun 18, 2020, 2:50:41 AM6/18/20
to santhavasantham
ஆஹா நிறைவாக இலந்தையார் கொடுத்த காட்சி மனத்திரையில் படமாக ஓடியது! மிக்க நன்றி. நான் அந்த இசையுரை ஆசிரியரிடம் இவ்விளக்கங்களை எல்லாம் தெரியப்படுத்துகிறேன். 

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages