Grammar doubts - 2

120 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jul 29, 2023, 10:33:58 PM7/29/23
to santhavasantham
Starting a new thread.
=====================

Gopal had a question regarding a usage in one of his songs:


/ தணியாத அன்புந்தத் தாப்பரையன் தாள்தலைமேல் /

[தாப்பு=தாம்பு, கயிறு; அரை=இடை,இடுப்பு; தாப்பரையன்=தாமோதரன்]


My thoughts.

1) தாம்பு - தாப்பு என்று வலித்தல் விகாரம் பெற்று வந்தது என்று கொள்ளல் கூடும்.


2) மென்றொடர்க் குற்றியலுகரங்கள் சில இடங்களில் வன்றொடர்க் குற்றியலுகரம் ஆவதும் உண்டு.

தாம்பால் கட்டப்பட்ட அரையன் = "தாப்பரையன்" என்று வரும் என்று தோன்றுகின்றது. (மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை).


ஆறுமுகநாவலர் - இலக்கணச் சுருக்கம்.

127. மென்றொடர்க் குற்றியலுகர வீற்று மொழிகளுள்ளே சில, நாற்கணமும் வரின், வேற்றுமையிலும், அல்வழியிலே பணபுத்தொகையிலும், உவமைத் தொகையிலும், வன்றொடர்க் குற்றியலுகரமாதலுமுண்டு.


உதாரணம்.

மருந்து + பை - மருத்துப்பை }

கரும்பு + நாண் - கருப்புநாண் }

கரும்பு + வில் - கருப்புவில் } வேற்றுமை

கன்று + ஆ – கற்றா }


அன்பு + தளை - அற்புத்தளை } பண்புத்தொகை

என்பு + உடம்பு - எற்புடம்பு }


குரங்கு + மனம் - குரக்குமனம் }உவமைத்தொகை

இரும்பு + நெஞ்சம் - இருப்புநெஞ்சம் }


V. Subramanian

GOPAL Vis

unread,
Jul 29, 2023, 11:26:49 PM7/29/23
to santhav...@googlegroups.com
வன்றொடர்க் குற்றியலுகரமாதலுமுண்டு.
ஆதலும் உண்டு என்பது வலித்தல் விகாரம் இல்லாமலும் வரலாம் என்பதை உணர்த்துகிறதா?
கோபால்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCM%2BfWw6dv5AFFkHQ6JXqcsSLnQEUZFzwP%2B-Na7FVUwEFA%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jul 29, 2023, 11:34:21 PM7/29/23
to santhav...@googlegroups.com
As they say in some situations - "That is above my pay-grade" ! :) 🙂

( For more info on this idiom: 

V. Subramanian

GOPAL Vis

unread,
Jul 30, 2023, 12:30:25 AM7/30/23
to santhav...@googlegroups.com
Thanks a lot.
Thanks also for the new English idiom.
Gopal.

சௌந்தர்

unread,
Jul 30, 2023, 10:49:27 AM7/30/23
to சந்தவசந்தம்
Thanks for the references. The phrase நச்சரவு came to my mind immediately. By strange coincidence, today's lecture at Melkote Yadugiri Yatiraja Matam on the Chaturmasya observation is about Thirunedunthandakam pasuram 12. The lines go like this.
நெஞ்சுருக்கிக் கண்பனிப்ப நிற்கும் சோரும்
. . நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்
நஞ்சரவில் துயிலம்ர்ந்த நம்பீ! . .  .

Here the usage நஞ்சரவில் makes me believe both versions (i.e. நஞ்சரவு and நச்சரவு) are possible. We may use either to better suit the situation.

Soundar

N. Ganesan

unread,
Jul 30, 2023, 3:46:05 PM7/30/23
to சந்தவசந்தம்
சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்

Siva Siva

unread,
Jul 30, 2023, 4:42:21 PM7/30/23
to santhav...@googlegroups.com
நச்சரவு is the standard form (as far as I know).

The usage of நஞ்சரவு in the song you mentioned - could be considered a case of மெலித்தல் விகாரம்.

For example:
பணிந்தவ ரருவினை பற்றறுத் தருள்செயத்
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவ னரவொடு பேரெழி லாமைகொண்
டணிந்தவன் வளநக ரந்தணை யாறே.

As they note in the kuRippurai:
பிணித்தவன் எனற்பாலது எதுகை நோக்கிப் பிணிந்தவன் என மெலிந்தது.

V. Subramanian

சௌந்தர்

unread,
Jul 30, 2023, 6:40:23 PM7/30/23
to சந்தவசந்தம்
சிலம்பரசன், சிலம்புச்செல்வர், சிலம்பாட்டம். 

சௌந்தர்

unread,
Jul 30, 2023, 6:41:45 PM7/30/23
to சந்தவசந்தம்
கேவலம் இலக்கணம் கருதி எதுகைக்காக மெலியுமென்றால், கண்ணன் இடை நோவாமல் இருக்க மெலியக் கூடாதா?

N. Ganesan

unread,
Jul 30, 2023, 6:45:46 PM7/30/23
to santhav...@googlegroups.com
கரும்பு + சாறு = கரும்புச்சாறு

கரும்பு + அம் + சாறு = கருப்பஞ்சாறு


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jul 30, 2023, 8:50:26 PM7/30/23
to santhav...@googlegroups.com
Sure, it is up to the author!

By the way, as far as I know, all seyyuL vikArams & aLabedais are for meter conformance / sound effect only. When and where a poet chooses to adopt any of them (for whatever reason) is up to that person - so I think. 
Tamil scholars may be able to elaborate further on this topic.

அளபெடை - n. < id. + id. (Gram.) Lengthening of sound in poetry, etc., உயிரளபெடை, ஒற்றளபெடை. (நன். 61.)

செய்யுள்விகாரம் - n. < id. +. Changes in words allowed as poetic licence, nine in number, viz., valittal, melittal, nīṭṭal, kuṟukkal, virittal, tokuttal, mutaṟ-kuṟai, iṭai-k-kuṟai, kaṭai-k-kuṟai; வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை எனச் செய்யுளிற் சொற்கள் பெறும் ஒன்பதுவகை மாறுபாடு. (நன். 155, உரை.)

V. Subramanian



N. Ganesan

unread,
Aug 17, 2023, 10:27:11 PM8/17/23
to santhav...@googlegroups.com
கன்று + ஆ = கற்றா.
தில்லைவேந்தனின் இன்றைய அண்ணாமலை வெண்பா.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 18, 2023, 12:04:51 AM8/18/23
to santhav...@googlegroups.com
On Thu, Aug 17, 2023 at 9:26 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
கன்று + ஆ = கற்றா.
தில்லைவேந்தனின் இன்றைய அண்ணாமலை வெண்பா.

கன்று + ஆ = கன்றா எனவும் வரும்.

 திருசெங்கோட்டுத் திருப்புகழ்
 -------------------------
பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து
      பைந்தார் புனைந்த    குழல்மீதே
   பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
       பங்கே ருகங்கொள்      முகமீதே
மந்தார மள்றல்சந்தார மொன்றி
       வன்பாத கஞ்செய்    தனமீதே
   மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
       மங்காம லுன்ற      னருள்தாராய்
கந்தா அரன்றன்மைந்தா விளங்கு
       கன்றா முகுந்தன்      மருகோனே
   கன்றா விலங்க லொன்றாறு கண்ட
       கண்டா வரம்பை      மணவாளா
செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
       திண்டோள் நிரம்ப     அணிவோனே
   திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
       செங்கோட மர்ந்த     பெருமாளே.

  வாரியார் உரை:
https://www.tamilvu.org/slet/l41F0/l41F0pd1.jsp?bookid=259&pno=121&brno=6
கன்றாமுகுந்தன்:-
கன்றுதல். கோபித்தல், கோபிக்காத காருண்யமூர்த்தி திருமால்.
கன்று ஆ முகுந்தன். கன்றுகளையும் பசுக்களையுங் காத்தவன் என்றும் பொருள்படும்.
முகுந்தன்-மு,முத்தி, கு.பூதலச் செல்வம், இகபர சித்திகளை வழங்குபவர் முகுந்தம்.

கன்றா விலங்கல் ஒன்றாறு கண்ட கண்டா:-
கன்றா-சினந்து. விலங்கல்-மலை. கிரவுஞ்சம்.
வீரவாகுதேவர் முதலியோர் அம்மலையில் சென்று மயங்க, முருகவேள் வேலால் பிளந்து வழியை உண்டாக்கி யருள் புரிந்தார்.

சௌந்தர்

unread,
Aug 18, 2023, 7:14:33 PM8/18/23
to சந்தவசந்தம்
கற்றினம் (கற்றினம் மேய்த்த கழல்- கண்ணன் பற்றிய குறிப்பு- தொண்டரடிப்பொடியாழ்வார் தனியன்), 
கற்றெருமை (திருப்பாவை)

N. Ganesan

unread,
Aug 19, 2023, 9:10:01 AM8/19/23
to santhav...@googlegroups.com
On Fri, Aug 18, 2023 at 6:14 PM சௌந்தர் <rsou...@gmail.com> wrote:
கற்றினம் (கற்றினம் மேய்த்த கழல்- கண்ணன் பற்றிய குறிப்பு- தொண்டரடிப்பொடியாழ்வார் தனியன்), 
கற்றெருமை (திருப்பாவை)

நன்று. கற்றாயர் = கற்றா + ஆயர் = கன்று + ஆ (மேய்க்கும்) ஆயர்.
இதுவும் சேர்க்கலாம். இரும்பு + பாதை = இருப்புப்பாதை, ... போல.
பெற்றார் தளை கழல பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்ச போய் வஞ்ச பெண் நஞ்சு உண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார்_வண்ணனே கொட்டாய் சப்பாணி
கற்றாயன் = கண்ணபிரான்
பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை வாய்வைத்த போர் ஏறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை_மணாளா சிறுக்குட்ட செங்கண்மாலே
சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்து போய்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்து உடன் வந்தாய் போலும்

On Thursday, 17 August 2023 at 19:27:11 UTC-7 N. Ganesan wrote:
கன்று + ஆ = கற்றா.
தில்லைவேந்தனின் இன்றைய அண்ணாமலை வெண்பா.

கன்று + ஆ = கன்றா எனவும் வரும்.

 திருசெங்கோட்டுத் திருப்புகழ்
 -------------------------
பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து [...]

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 19, 2023, 9:26:58 AM8/19/23
to santhav...@googlegroups.com
On Sat, Aug 19, 2023 at 8:09 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Fri, Aug 18, 2023 at 6:14 PM சௌந்தர் <rsou...@gmail.com> wrote:
கற்றினம் (கற்றினம் மேய்த்த கழல்- கண்ணன் பற்றிய குறிப்பு- தொண்டரடிப்பொடியாழ்வார் தனியன்), 

நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் நாச்சியார் சொன்னதுதான்:

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள்! உங்களுக்கு ஏச்சுக் கொலோ?
கற்றன பேசி வசவுணாதே காலிகள் உய்ய மழை தடுத்து
கொற்றக் குடையாக ஏந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின்

N. Ganesan

unread,
Aug 19, 2023, 9:32:04 AM8/19/23
to santhav...@googlegroups.com

மற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா மானிடங்காள்

உற்றபோதன்றி நீங்கள் ஒருவனென்றுணர மாட்டீர்

அற்றமே லொன்றறீயீர் அவனல்லால் தெய்வமில்லை

கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமினீரே

Siva Siva

unread,
Oct 27, 2023, 10:27:54 PM10/27/23
to santhav...@googlegroups.com

நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

வலி மிகுதல் / மிகாமை

(.கி.பரந்தாமனார்)


பக்க எண் : 207 - 248 ( https://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=171&pno=207 )

9. இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்து வருந்தொடர்களில் வரும் வலி மிகாது.

ஆதி பகவன் = ஆதிபகவன்.

தேச பக்தி = தேசபக்தி.


My notes:
When both words are of Sanskrit nature - then the whole phrase is combined in Sanskrit as per that Sanskrit sandhi ( = it is treated as a whole Sanskrit phrase) and then brought into Tamil form.

So, no Tamil sandhi is applied between those 2 words.

e,g: நீலகண்டன்


But if only one word is Sanskrit and the other word is Tamil - then all normal Tamil sandhi rules apply.

e.g. கறைக்கண்டன்

பெரியோர் பாடல்களில் விதிவிலக்கு என்னுமாப்போல் இரு வடமொழிச் சொற்கள் தமிழ்ப்புணர்ச்சியோடு வருவதைச் சில இடங்களில் காணலாம்.

அப்பர் - 4.66.1

கச்சைசே ரரவர் போலுங் கறையணி மிடறர் போலும்

பிச்சைகொண் டுண்பர் போலும் பேரரு ளாளர் போலும்

இச்சையான் மலர்கள் தூவி யிரவொடு பகலுந் தம்மை

நச்சுவார்க் கினியர் போலும் நாகவீச் சரவ னாரே.


குறிப்புரையில்: ..... நாகவீச்சரவனார் = "சாளரந்தோறும் தோன்றுஞ் சந்திரவுதயம் போலும்" என்புழிப்போலப் பெற்ற தமிழ்ப் புணர்ச்சி.


V. Subramanian

=========


On Sun, Jul 30, 2023 at 8:50 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

Anand Ramanujam

unread,
Oct 28, 2023, 7:45:22 AM10/28/23
to santhav...@googlegroups.com
வடமொழிச் சொற்கள் குறித்த சந்தி விதிகளை விளக்கிய திரு. சிவ சிவா, திரு. அனந்த் அவர்களுக்கு மிக்க நன்றி! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Dec 31, 2023, 5:50:44 PM12/31/23
to santhav...@googlegroups.com

ஏழாம்வேற்றுமை விரி


Based on what I have seen in thirumuRai songs:


1.

ஏழாம்வேற்றுமை விரியில் மிசை, இடை, தலை, வழி, இத்யாதி உயிர்மெய்யில் முடியும் உருபுகள் வருமிடத்தில், அடுத்து வரும் சொல் வல்லினத்தில் தொடங்கினால், வல்லொற்று மிகும்.


உதாரணம்:

சம்பந்தர் தேவாரம் - 2.103.6 - "முடிமிசைக் கனல்விடு சுடர்நாகம்"

சம்பந்தர் தேவாரம் - 3.27.2 - "பனிமதி சடைமிசைச் சூடினார்"

சம்பந்தர் தேவாரம் - 1.106.9 - "நீரின் மிசைத்துயின்றோன்"

திருவிசைப்பா - 9.23.5 - "செய்த்த லைக்கம லம்மலர்ந் தோங்கிய"

பெரியபுராணம் - 12.28.252 - "செய்த்தலைப் பணிலமுத்து ஈனுஞ் சேய்ஞலூர்" (பணிலம் - சங்கு);

சுந்தரர் தேவாரம் - 7.43.7 -

சென்றி லிடைச்செடி நாய்கு ரைக்கச் சேடிச்சிகள்

மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே

குன்றி லிடைக்களி றாளி கொள்ளக் குறத்திகள்

முன்றி லிடைப்பிடி கன்றி டும்முது குன்றரே.


2.

ஏழாம்வேற்றுமை விரியில் அடுத்து வரும் சொல் வல்லினத்தில் தொடங்கினால், முதற்சொல்லின் ஈற்றில் உள்ள உருபின் கடைசியில் உள்ள ல் ற் ஆவதுபோல் (மேல் - மேற்), ண் ட் என்று ஆகும் (சடைக்கட் கங்கை = சடைக்கண் + கங்கை).

உதாரணம்:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=70570&padhi=057&startLimit=2&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

சுந்தரர் தேவாரம் - 7.57.2

படைக்கட் சூலம் பயிலவல் லானைப்

பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்

கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்

காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்

சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்

தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை

மடைக்கண்நீ லம்மலர் வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே


11.22.88 - சிவபெருமான் திருவந்தாதி

குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் பொல்கிக்

குருகிளையார் கோடு கொடாமே குருகிளரும்

போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும்

போதாநின் பொன்முடிக்கட் போது.


பொன்முடிக்கண் உள்ள போது (மலர்) கொன்றை.


V. Subramanian


On Sat, Oct 28, 2023 at 7:45 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:

Anand Ramanujam

unread,
Dec 31, 2023, 7:07:55 PM12/31/23
to santhav...@googlegroups.com
Thank you for the useful information!


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jan 2, 2024, 12:38:28 AMJan 2
to சந்தவசந்தம்

நன்றி குருவே 🙏

Siva Siva

unread,
Jan 13, 2024, 11:49:20 AMJan 13
to santhav...@googlegroups.com
For those with interest in learning more about viruththam meters in Tamil:

இலந்தையார் எழுதிய
விருத்தம் எழுத வருத்தம் எதற்கு?
என்ற நூல் இன்னும் கிட்டுகின்றதுபோல்!

Viruththam Ezutha Varuththam Etharku? :
Viruththap Paavin Ilakkanam
Paperback – 1 January 2018
By Kavimamani Ilanthai S Ramasami (Author)
=================


On Tue, Jan 2, 2024 at 12:38 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

Mahesh Krishnamurthy

unread,
Jan 13, 2024, 12:11:57 PMJan 13
to santhav...@googlegroups.com
Thanks.. Ordered.. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Feb 15, 2024, 12:27:24 PMFeb 15
to santhav...@googlegroups.com

ய் + (யா / யோ) - புணர்ச்சி ?


இருநாள்கள்முன் நான் எழுதிய பாடல் ஒன்றில்

"மாய்த்த யோகியே" என்ற தொடரை வினைத்தொகையாக எழுத நேர்ந்தது.

மாய் + யோகியே = "மாயோகியே" என்று எழுதினேன்.


இவ்விடத்தில் முதற்சொல்லின் ஈற்றில் உள்ள யகர ஒற்றுக் கெடும் என்று எனக்குப் பட்டது. அன்றேல், "மாய்யோகியே" என்று வரவேண்டும்.


இந்தப் புணர்ச்சியைத் - தனிக்குறிலைத் தொடராத யகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து யகர உயிர்மெய்யில் தொடங்கும் சொல் வருவது - தொல்காப்பியமோ வேறு இலக்கணநூலோ விளக்கியுள்ளதா?


நாய் + யாக்கை = ?

நோய் + யாது = ?

பேய் + யாழ் = ?


V. Subramanian


On Sat, Jan 13, 2024 at 12:11 PM Mahesh Krishnamurthy <mahes...@gmail.com> wrote:

Mahesh Krishnamurthy

unread,
Feb 16, 2024, 12:40:16 AMFeb 16
to சந்தவசந்தம்
Sharing my thought to be confirmed  or corrected..

1. மாய் யோகியே . நாய் யாக்கை ... இரண்டும் புணர பொது விதி அமையாது..ஏனெனில் யோகி வடசொல், யாக்கை, யாது, யாழ் தமிழ் சொற்கள் [ஆவொடு அல்லது யகர முதலாகாது( தொல். மொழி மரபு. 65). ]. 
2. மாய் + யோகியே == மாய் + ஓகியே == மாயோகியே...மற்றவை நாய்யாக்கை, நோய்யாது, பேய்யாழ் என வரும்
3. தனிக்குறிலைத் தொடராத யகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து யகர உயிர்மெய்யில் தொடங்கும் சொல் வருவது தொல்காப்பியமோ வேறு இலக்கணநூலோ விளக்கியுள்ளதா - எனக்கு தெரிந்து இல்லை.

Regards
Mahesh

Siva Siva

unread,
Feb 22, 2024, 9:37:28 AMFeb 22
to santhav...@googlegroups.com
இலக்கணநூல்களில் இது பற்றிய குறிப்பு இல்லையெனில், நான் எழுதியது பிழையன்று என்று கொள்கின்றேன்.

V. Subramanian

Siva Siva

unread,
Apr 2, 2024, 9:45:21 AMApr 2
to santhav...@googlegroups.com
ஆம் / ஆவது

இரண்டாம் வகுப்பு
இரண்டாவது வகுப்பு 

இரண்டும் சரியா? இரண்டுமே ஒரே பொருளா?
Do grammar books elaborate on these?

I wonder if 
இரண்டாம் = adjective
இரண்டாவது = noun.

For example, in English, words like second, third, etc - may be used both as adjectives and nouns.
This is the third bus.
This bus is the third.

V. Subramanian




On Thu, Feb 22, 2024 at 9:37 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

Mahesh Krishnamurthy

unread,
Apr 2, 2024, 11:04:03 AMApr 2
to santhav...@googlegroups.com
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mahesh Krishnamurthy

unread,
Apr 2, 2024, 11:24:02 AMApr 2
to santhav...@googlegroups.com

ஆம், ஆவது என்பன தங்கள் எடுத்துக்காட்டில் வரிசைக்குறிகளே..? ஒரே பொருளில்.

இடம் சார்ந்து ஆவது/ஆம் பொருள் வேறுபடுகிறது..

ஆவது-- 
பத்தாவது எட்டாவது கொடு - பத்தாயினும் எட்டாயினும் என்ற விகற்பப் பொருளில் (நன்னூல் 421)..
இரண்டாவது இடத்தில் வந்தான் .

ஆம்--
எல்லாம் அறிந்தவன் - அனைத்தும் என்ற பொருளில் 

யாரும் விளக்கலாம்...யாராவது விளக்கலாம் (anybody/somebody).

I am a beginner in studying the language, marking my limited understanding for correction or confirmation.
Warm Regards
Mahesh

Siva Siva

unread,
Apr 26, 2024, 3:15:46 PMApr 26
to santhav...@googlegroups.com

A discussion - from Apr 2023 - on உம்மைத்தொகை


/ வசிட்ட ரும்பல முனிவர்கள் தொழுபதி /


வசிட்டரும் பல முனிவரும் என்று வரவேண்டாமோ உம்மை அடுத்த சொல்லிலும் தொடரவேண்டுமல்லவா?


இலந்தை

---


==> முனிவர்கள் - முனிவர்களும் - உம்மைத்தொகை


// இரண்டே இரண்டு இருக்கும் போது இரண்டிலும் உம் வரும். அப்படி வராமல் இருக்கிறதா என்று தேடிப் பார்க்க வேண்டும். //


இலந்தை

---


பின்னர் இட்ட ஓர் உதாரணம்:


http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=40370&padhi=037&startLimit=2&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

அப்பர் தேவாரம் - 4.37.2

காமனை யன்றுகண் ணாற் கனலெரி யாக நோக்கித்

தூமமுந் தீபங் காட்டித் தொழுமவர்க் கருள்கள் செய்து

சேமநெய்த் தான மென்னுஞ் செறிபொழிற் கோயின் மேய

வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த வாறே.


"தூமமும் தீபம் காட்டி" = நறும்புகையும் தீபமும் காட்டித் தொழும் அடியவர்களுக்கு அருள்கள்செய்து


இந்த இடத்தில் இரண்டே பொருள்களைச் சொன்னாலும் ஒன்றில் உம் வந்து இன்னொன்றில் உம் இன்றி வந்துள்ளது!


---


இன்று இந்தத் திருவாசகப் பாடல் என் கண்ணிற் பட்டது.


https://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81290&padhi=29&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

திருவாசகம் - அருட்பத்து - 8.29.1

சோதியே சுடரே சூழொளி விளக்கே .. சுரிகுழற் பணைமுலை மடந்தை

பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய் .. பங்கயத் தயனுமா லறியா

நீதியே செல்வத் திருப்பெருந் துறையில் .. நிறைமலர்க் குருந்தமே வியசீர்

ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் .. அதெந்துவே என்றரு ளாயே


குறிப்புரையில்: "மாலும்" என்னும் உம்மை தொகுத்தல்.


வி. சுப்பிரமணியன்


On Tue, Apr 2, 2024 at 11:24 AM Mahesh Krishnamurthy <mahes...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Apr 29, 2024, 9:25:10 AMApr 29
to santhav...@googlegroups.com

வடமொழிச்சொல்  - சந்தியில் வலி மிகுதல் / வலி மிகாமை


நல்ல தமிழ் எழுத வேண்டுமா? - வலி மிகுதல் / மிகாமை - (.கி.பரந்தாமனார்)

9. இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்து வருந்தொடர்களில் வரும் வலி மிகாது.

ஆதி+பகவன் = ஆதிபகவன்.

தேச+பக்தி = தேசபக்தி.


My notes:
When both words are of Sanskrit nature - then the whole phrase is combined in Sanskrit as per that Sanskrit sandhi ( = it is treated as a whole Sanskrit phrase) and then brought into Tamil form.

So, no Tamil sandhi is applied between those 2 words.

e,g:

நீலகண்டன்

கமலபாதம்


But if only one word is Sanskrit and the other word is Tamil - then all normal Tamil sandhi rules apply.

e.g.

கறைக்கண்டன்

மலர்ப்பாதம்


பெரியோர் பாடல்களில் விதிவிலக்குப்போல் இரு வடமொழிச் சொற்கள் தமிழ்ப்புணர்ச்சியோடு வருவதைச் சில இடங்களில் காணலாம்.

அப்பர் - 4.66.1

கச்சைசே ரரவர் போலுங் கறையணி மிடறர் போலும்

பிச்சைகொண் டுண்பர் போலும் பேரரு ளாளர் போலும்

இச்சையான் மலர்கள் தூவி யிரவொடு பகலுந் தம்மை

நச்சுவார்க் கினியர் போலும் நாகவீச் சரவ னாரே.


குறிப்புரையில்: ..... நாகவீச்சரவனார் = "சாளரந்தோறும் தோன்றுஞ் சந்திரவுதயம் போலும்" என்புழிப்போலப் பெற்ற தமிழ்ப் புணர்ச்சி.


===========

On Wed, Feb 9, 2022 at 9:33 PM Siva Siva <naya...@gmail.com> wrote:


In the context of concatenated phrases - the whole phrase is taken from Sanskrit - and conventions applied on that whole phrase.

(This is the case for Sandhi too).

For example,

கமலபாதம் ( and not கமலப்பாதம்)

பாதகமலம் ( and not பாதக்கமலம்)


So, I believe the correct Tamil form will normally be உமாமகேசுவரன் itself (even though standalone "umA" will be உமை).


https://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=60900&padhi=090&startLimit=5&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

அப்பர் தேவாரம் - 6.90.5

உருத்திரனை உமாபதியை உலகா னானை


V. Subramanian

==================


Some exchange from 2012 regarding sandhi involving Sanskrit words.


On Fri, Sep 21, 2012 at 9:16 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


அன்புள்ள கோபால்,


நிலைமொழி வருமொழி ஆகிய இரண்டும் வடமொழிச் சொற்களாயின் ஒற்று (வல்லொற்று) மிகாது என்பது அ.கி. பரந்தாமனாரின் 'கவிஞராக' நூலிலும் பிறிதொரு நூலிலும் காணும் செய்தி. பாதகமலம், ஆதி பகவன், தினகரன் ஆகியவை அங்குக் காணும் காட்டுகள். இன்னும் சில காட்டுகளும் உண்டு. சங்க காலம் என்று வல்லொற்றின்றி எழுதுவதற்கும் இதைக் காரணமாகக் காட்டுவர்.. மாறாக, தமிழ்ச்சங்கம், அந்தக் காலம், காலக்கோளாறு என்பன போன்று ஒரு வடமொழிச் சொல் கொண்டவை ஒற்று மிகுந்து புணர்வதைப் பார்க்கலாம்.


(பாரத-தேசம் பாத-கமலம் ஆகியவை முழுவார்த்தைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்று நீங்கள் சொல்வது எனக்குச் சரியாக விளங்கவில்லை; அவை ஏன் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும், அதுபற்றி எங்குக் குறிப்பு உள்ளது?)

எப்படியாயினும், நீங்கள் சுட்டிய காட்டுகளில் காண்பது போல இரண்டு வடமொழிச் சொற்களைத் தற்சமமாக்காமல், தற்பவமாகத் தமிழில் பயிலும்போதும் ஒற்று மிகாமல் வரும் என்ற விதி மீறவும் படலாம் என்று தெரிகிறது.


அனந்த்


2012/9/21 vis gop <vis...@gmail.com>


மதிப்புமிக்க வேட்டை அனந்த் அவர்களுக்குப் பணிவான வணக்கம். தங்கள் விளக்கத்துக்கு நன்றி.

தமிழ் இலக்கணத்தில் அரிச்சுவடியான எனக்கு இன்னும் சில விளக்கங்களுக்குப் பிறகே இது விளங்கும் என எண்ணுகிறேன்.

ஒற்று மிகுதல் என்பது தமிழ்ச் சொற்களின் புணர்ச்சி பற்றியது. வடமொழிச் சொற்கள் தமிழில் ஏராளமாகக் கையாளப் பட்டாலும் அவை தமிழாக மாற்றப் பட வேண்டும் என்பது நியதி. ஆகவே தமிழ்ச் சொற்களாக்கப் பட்ட பின் ஒற்று மிகும் நியதிகள் அவற்றுக்கும் பிற செந்தமிழ்ச் சொற்களுக்குள்ள நியதிகளே என்பது என் எதிர்பார்ப்பு. கதி (गति), தயா (दया) என்கிற வடசொற்கள் தம் இயல்பு உச்சரிப்புக்களை இழந்துதான் தமிழாக முடியும். அவைகளை வடமொழி போலவே உச்சரிப்பது ஏற்றுக்கொள்ளப் படலாம். ஆனால் இலக்கண முறையோடன்று. தாங்கள் கொடுத்த உதாரணங்கள் (பாரத-தேசம்), (பாத-கமலம்) இரண்டும் இரட்டை வார்த்தைகள் அல்ல. இரண்டும் இரு முழு வார்த்தைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை. இவற்றை வைத்து வடமொழிச் சொற்களாயின் ஒற்று மிகாது என்கிற முடிவுக்கு வரலாகாது என்று தோன்றுகிறது. 'சீதக் களப' என்னும் தொடரில் இரண்டு வடமொழி வார்த்தைகள் தமிழ் முறைப்படி புணர்வதைக் காணலாம்.

'பரதக் கலை', 'பஞ்சக் கர ஆனை' - பிற உவமைகள்.

இந்த உதாரணங்களால் தங்கள் கருத்தை நான் ஏற்க மறுப்பதாக எண்ண வேண்டாம். மேலும் தங்கள் விளக்கங்களைப் பெறவே இவண் இக்கருத்துக்களை இடுகிறேன். தங்கள் கருத்தைத் தீர்ப்பாக ஏற்கிறேன்.


நல்வாழ்த்துக்களுடன்,

கோபால்.



2012/9/21 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>


புணரும் இரண்டு சொற்களும் வடமொழிச் சொற்களாயின் ஒற்று மிகாது (காட்டு: பாரத தேசம்; பாத கமலம்). எனவே கோபால், ஹரி சொல்வது போல இங்கு, ஒப்பிலாத் தயை, மாறிடாக் கதி என ஒற்று மிகும். ( சில வேளைகளில், கவிதை/பாடல் படிப்பவர் தயை, கதி போன்ற சொற்களின் வடமொழி உச்சரிப்பைப் பின்பற்றுவாராயின், அப்போது ஒற்று மிகாமல் கூற வாய்ப்பிருக்கிறது.)

தத்+ஸமம், தத்+பவம் என்னும் வடமொழிச் சொற்கள் தமிழாக்கப்பட்டு, தற்சமம், தற்பவம் என்று புணர்ந்துள்ளனவாகத் தெரிகின்றன.

.. அனந்த்

=============


Siva Siva

unread,
Jul 7, 2024, 2:16:41 PMJul 7
to santhav...@googlegroups.com

இலக்கணச் சுருக்கம் - ஆறுமுக நாவலர்

94. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகரமெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும்.

உதாரணம்.

மெய் + ஞானம் - மெய்ஞ்ஞானம்

செய் + நன்றி - செய்ந்நன்றி

கை + மாறு - கைம்மாறு


V. Subramanian



On Mon, Apr 29, 2024 at 9:24 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Ram Ramakrishnan

unread,
Jul 7, 2024, 2:21:29 PMJul 7
to santhav...@googlegroups.com
இந்த நோக்கில், நெய்ம்மணக்கும் என்பது சரியாகத் தோன்றுகின்றதே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 7, 2024, at 14:16, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jul 7, 2024, 2:21:46 PMJul 7
to சந்தவசந்தம்
Thank you for the reference from இலக்கணச் சுருக்கம்!

I also managed to find the related நன்னூல் சூத்திரம் from https://www.tamilvu.org/courses/degree/c021/c0213/html/c0213222.htm as follows:

<<
எண்மூ எழுத்து ஈற்று எவ்வகை மொழிக்கும்
முன்வரு ஞநமய வக்கள் இயல்பும்;
குறில்வழி யத்தனி ஐந்நொது முன்மெலி
மிகலுமாம்; ணளனல வழிநத் திரியும். - (நன்னூல்,158)

தனிக்குறிலை அடுத்து யகரமெய் அமையும் சொல்லும், ஓர் எழுத்து ஒரு மொழியாக வரும் ஐகாரமாகிய சொல்லும் நிலைமொழிகளாக இருந்து, அவற்றிற்கு முன்னே,,என்னும் மெல்லின மெய் எழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகள் வந்து சேரும்போது, அவ்வெழுத்துகள் மிகும்.

எடுத்துக்காட்டு:
தனிக்குறிலை அடுத்து யகர மெய் வரும் சொல் மெய், பொய், நெய் என்பன. ஓர் எழுத்து ஒருமொழியாகிய ஐகாரச் சொல் கை, பை, தை, மை என்பன

மெய் + ஞான்றது = மெய்ஞ்ஞான்றது
கை + நீண்டது = கைந்நீண்டது
மெய் + மாட்சி = மெய்ம்மாட்சி (மெய்யினது மாட்சி)
கை + நீளம் = கைந்நீளம் (கையினது நீளம்)
கை + மலர் = கைம்மலர் (கையின்கண் மலர்)
>>



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jul 7, 2024, 2:22:38 PMJul 7
to சந்தவசந்தம்
ஆம், சரியென்றே எனக்கும் தோன்றுகிறது.

...

Siva Siva

unread,
Jul 7, 2024, 2:37:01 PMJul 7
to santhav...@googlegroups.com
நெய் கமழும் பொங்கல் என்றால் "ம்" என்பது தானே எல்லார் வாயிலும் வரும்!  :)

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jul 7, 2024, 2:50:41 PMJul 7
to சந்தவசந்தம்
😊

….

-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jul 17, 2024, 10:24:54 PM (9 days ago) Jul 17
to santhav...@googlegroups.com

பிந்துமதி

பாட்டில் எழுத்தெழுத்தாகப் பார்க்கும்பொழுது, ஒற்றைப்படை இடங்கள் எங்கும் ஒற்றில்லாத எழுத்தும் இரட்டைப்படை இடங்கள் எங்கும் ஒற்று இருக்கும் எழுத்தும் அமைந்த பாடல்.

இது தமிழின் நவீனகால எழுதுமுறைக்கு ஏற்ப ஏற்படுத்திக்கொண்ட புது வடிவம்.


பழைய இலக்கணப்படி "பிந்துமதி": யாப்பருங்கலவிருத்தி என்ற நூலிற் காண்பது:

"பிந்துமதி என்பது எல்லா எழுத்தும் புள்ளியுடையனவே வருவது"

அந்நூலிற் காணும் உதாரணம்:

"நெய்கொண்டெ னெற்கொண்டெ னெட்கொண்டென் கொட்கொண்டென்

செய்கொண்டென் செம்பொன்கொண் டென்?"

பழங்காலத்தில் எகர ஒகர உயிரெழுத்துகளும் அவ்வுயிர் ஏறிய உயிர்மெய்யெழுத்துகளும் புள்ளி பெற்று வருவன. ஆதலால், இப்பாடலில் எல்லா எழுத்துகளுக்கும் புள்ளி இருந்தது.


V. Subramanian


https://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=306&pno=90

பண்டைக் காலத்தில் எகர ஒகரக் குற்றெழுத்துக்களும், அவற்றில் நெட்டெழுத்துக்களும், ஒரே மாதிரி எழுதப்பட்டன

ஆகவே குற்றெழுத்துக்கும் நெட்டெழுத்துக்கும் வேறுபாடு அறிவதற்காக, எகர ஒகரங்களின்மேல் புள்ளி வைத்தும் ஏகார ஓகார நெட்டெழுத்துக்களின்மேல் புள்ளி வையாமலும் எழுதி வந்தனர்.


மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்”

எகர ஒகரத் தியற்கையு மற்றே”

(தொல். எழுத்து. சூத்திரம் 15,16)



எகர ஒகர மெய்யிற் புள்ளி மேவும்”

(வீரசோழியம், சூத்திரம் 6)



தொல்லை வடிவின எல்லா வெழுத்துமாண்

டெய்து மெகர மொகர மெய்புள்ளி”

(நன்னூல், எழுத்து 43)

======

https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/Nov/02/மயங்கா-மரபின்-எழுத்துமுறை-3269902.html

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் தமிழ்மொழி எழுதப்பட்ட எழுத்து முறைக்குப் "பிராமி' என்று பெயர். இதைத் தமிழ் பிராமி, தமிழி என்றும் சொல்வர். இந்தப் பிராமி எழுத்து முறையில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடும் வழக்கம் இல்லை. மேலும் எகர, ஒகர உயிர்/உயிர்மெய் எழுத்துகளுக்கு வேறுபாடு கிடையாது. "கொடி' என்பதை இடத்துக்கேற்றவாறு, "கொடி' என்றோ அல்லது "கோடி' என்றோ படித்துக்கொள்ள வேண்டும். தமிழ் தெரிந்தவர்களுக்கு இது குழப்பமாக இருந்ததில்லை போலும்.

இன்றைக்கும் Raman என்பதை நாம் ராமன் என்று படிக்கிறோம், ஆனால், இந்தப் பெயரைக் கேள்வியுறாத வேறுநாட்டார், இதனை ரமன், ரமான், ராமான் என்று படித்துக் குழப்பமடைவதுண்டு. கடல, மககள, சினம, தநதை, வயல ஆகியவற்றை நாம் கடல், மக்கள், சினம், தந்தை, வயல் என்று சரியாகப் படித்துவிடுவோம். "அந்தத் தெருவில் தெர் சென்றது' என்பதை "அந்தத் தெருவில் தேர் சென்றது' என்று குழப்பமில்லாமல் படித்துவிடலாம். "கொழுநன் மீது கொபம் கொண்டாள்' என்பதனை, "கொழுநன் மீது கோபம் கொண்டாள்' என்றும் படித்துவிடுவதில் சிரமம் இல்லை. எனவேதான், பண்டைய தமிழ் எழுத்துகளில் புள்ளிகளோ, /, /ஓ வேறுபாடோ இல்லை.

ஆனால், தமிழ் தெரியாதவர்கள் இதனைப் படிக்கும்போது மெத்தத் தடுமாறுவர் என்பது உண்மை. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் தமிழ்நாட்டுக்கு வந்த சமண, புத்தத் துறவிகளுக்கு இது பேரிடராக இருந்திருக்கும். எனவே, தமிழில் எழுதப்பட்டதைப் படிக்கும்போது அவர்கள் பெரிதும் குழம்பியிருந்திருப்பர். இந்தக் குழப்பத்தைத் தீர்த்துவைக்க முனைந்தவர் தொல்காப்பியர். அவர்தான்,

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்

எகர ஒகரத்து இயற்கையும் அற்றே (எழுத்.நூன்.15,16)

என்று தொல்காப்பியத்தில் எழுதி வைத்துள்ளார். இதற்கு, மெய்யெழுத்துகள், மேலே புள்ளிபெறும், எகர/ஒகர உயிர்/உயிர்மெய் எழுத்துகளும் அவ்வாறே புள்ளிபெறும் என்பது பொருள். எனவே, "செடி', "கொன்' என்பவற்றை நெடிலாகச் "சேடி', "கோன்' என்றும், "செ', "கொ' ஆகிய எழுத்துகளுக்கு மேல் புள்ளி வைத்தால், அவற்றைக் குறிலாகச் "செடி', "கொன்' என்றும் படிக்க வேண்டும் என்பது தொல்காப்பிய(ர்) விதி. ஆனால், இந்தப் புள்ளிமுறை தொல்காப்பியர் காலத்துக்கும் முன்னர் இருந்து, அவற்றைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறாரா அல்லது இந்த முறை தொல்காப்பியராலேயே ஏற்படுத்தப்பட்டதா என்பது கேள்வி.

தொல்காப்பியர் தனது இலக்கண நூலில், தமக்கு முன்னர் இருந்த பல மரபுகளைக் குறிப்பிடுகிறார். அவ்வாறு குறிப்பிடும்போது, அவர் அந்த மரபைக் கூறி, "என்ப', "என்மனார் புலவர்', "மொழிப' என்று குறிப்பிடுவார். காட்டாக,

பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப (எழுத். நூன்:8/2)

வல்லெழுத்து என்ப க, , , , (எழுத். நூன்:19/1)

கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் (எழுத். நூன்:6/2)

என்ற நூற்பாக்களைப் பார்க்கலாம். இவ்வாறாக, "என்ப' என்பது 145 இடங்களிலும், "என்மனார்' என்பது 75 இடங்களிலும், "மொழிப' என்பது 87 இடங்களிலும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால், புள்ளிகளைப் பற்றிக் கூறுமிடத்து,

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்

எகர ஒகரத்து இயற்கையும் அற்றே

என்று இந்நூற்பாக்களைத் தன்கூற்றாகவே கூறியிருப்பதை உற்று நோக்க வேண்டும். புள்ளிமுறை தொல்காப்பியருக்கு முன்னர் இருந்திருந்தால் அவர் இந்நூற்பாக்களை,

மெய்யின் இயற்கை புள்ளிபெறும் என்ப

எகர ஒகரமும் அற்றென மொழிப

என்பது போன்று அமைத்திருந்திருப்பார். இதற்குச் சான்றாக இன்னொன்றையும் காட்டலாம். தொல்காப்பியத்துக்குச் சிறப்புப் பாயிரம் என்ற முன்னுரையை அளித்திருப்பவர் பனம்பாரனார் என்ற புலவர். அவர் தொல்காப்பியரைப் பற்றிக் குறிப்பிடும்போது,

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி,

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி

என்று குறிப்பிடுகிறார். "மயங்கா மரபின் எழுத்துமுறை' என்பதற்கு, மெய்ப்புள்ளி, எகர/ஏகார, ஒகர/ஓகார வேறுபாடுகள் இன்றி, மயக்கம் (ambiguity) தருகிற எழுத்து முறையில், புள்ளியை அறிமுகப்படுத்தி, இந்த மயக்கங்களைத் தீர்த்து வைத்தவர் என்று பொருள்கொள்வது சிறப்பாகும். தொல்காப்பியருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்குப் பின்னர் தோன்றிய உரையாசிரியர்களின் காலத்தில் இந்த எழுத்துமுறையின் வரலாறு வெளிப்படாத காரணத்தால், இத்தொடருக்கு வேறுவிதமான பொருள் கூறிச் சென்றனர் எனலாம்.

- முனைவர் ப.பாண்டியராஜா

===============



On Sun, Jul 7, 2024 at 2:50 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Jul 21, 2024, 12:07:03 PM (6 days ago) Jul 21
to santhav...@googlegroups.com
Here is another example of some short vowel-sound letters getting a dot on top - in the olden days' writing scheme.
----
http://www.tamilvu.org/slet/l0B00/l0B00pd1.jsp?bookid=10&auth_pub_id=25&pno=386
http://www.tamilvu.org/slet/l0B00/l0B00pd1.jsp?bookid=10&auth_pub_id=25&pno=387

4. மாத்திரைச் சுருக்கம்

மாத்திரைச் சுருக்கம் என்பது ஒருசொல் ஒரு மாத்திரை குறையப் பிறிது
ஒரு சொல்லாய்ப் பிறிது ஒரு பொருள் வரப் பாடுவது.

வரலாறு :

     ‘நேரிழையார் கூந்தலின்ஓர் புள்ளிபெறின் நீள்மரமாம்,
     நீர்நிலைஓர் புள்ளிபெற நெருப்பாம், -- சீர்அளவு
     காட்டொன்று ஒழிப்ப இசையாம், -- கவின் அளவும்
     மீட்டுஒன்று ஒழிப்ப மிடறு’ என வரும்.

  [பெண்களின் கூந்தல் (ஓதி) ஒருபுள்ளி பெற்றால் ஒரு நீண்ட மரமாகும். (ஒதி)
நீர்நிலை (ஏரி) ஒருபுள்ளி பெற்றால் நெருப்பாகும். (எரி) சிறப்புடைய பாட்டு (காந்தாரம்)
ஒரு நெட்டெழுத்தைக் குறுக்கினால் பண் ஆகும். (கந்தாரம்) பிறிது ஒரு
நெட்டெழுத்தையும் குறுக்கினால் கழுத்தாகும். (கந்தரம்) (ஏ ஓ என்ற நெடில்களைக்
குறிலாக்கப் பண்டையார் புள்ளியிட்டு எழுதிய மரபை நோக்குக.)

  ஓதி - மகளிர் தலைமயிர் ; ஒதி - உதி என்ற மரம். ஏரி - நீர்நிலை ; எரி -
நெருப்பு. காந்தாரம் - காடு ; காந்தாரம் - ஒரு பண் ; கந்தரம் - கழுத்து. இது
மாத்திரைச் சுருக்கமாமாறு காண்க.

     ‘மாத்திரை சுருங்க மறுபொருள் உணர்த்துரை
     மாத்திரைச் சுருக்கம் எனவகுத் தனரே.’ - மா. 299 அ.

     ‘ஒருபொருள் தருஞ்சொலோர் மாத்திரை குறைய
     மற்றொரு பொருள்தரல் மாத்திரைச் சுருக்கம்.’ - மு.வீ. சொ. 20 ]

----
V. Subramanian

Siva Siva

unread,
Jul 26, 2024, 8:01:23 AM (24 hours ago) Jul 26
to santhav...@googlegroups.com
On Bangalore - in Tamil


On Sun, Jul 21, 2024 at 12:06 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

Ram Ramakrishnan

unread,
Jul 26, 2024, 8:33:19 AM (23 hours ago) Jul 26
to santhav...@googlegroups.com
I think the name of the city has been changed to Bengaluru. Given this, my opinion is Sri. Thillai Natarajan has captured it correctly.

அன்பன் (பெங்களுரு வாசி எவ்வெப்போது இந்தியா வருகிறனோ அவ்வப்போது)
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 26, 2024, at 08:01, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jul 26, 2024, 8:51:10 AM (23 hours ago) Jul 26
to santhav...@googlegroups.com
My question is a general one and not specific to the usage in Sri Natarajan's post.
ஊர் என்பது நெடுங்காலமாக (500+ வருடங்கள்?) "ஊரு" என்றே கன்னடத்தில் புழங்கும் வடிவம். இப்பொழுது புதிதாக மாற்றம் அடையவில்லை. (They just changed the city name spelling in English to Mysuru, Bengaluru, etc).
50 வருடங்களுக்கு முன்னும் அவ்வூர்கள் கன்னடத்தில் மைசூரு, பெங்களூரு. 
50 ஆண்டுகள்முன் அவை தமிழில் எவ்வாறு எழுதப்பெற்றன? மைசூரில்? மைசூருவில்?

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Jul 26, 2024, 9:57:24 AM (22 hours ago) Jul 26
to santhav...@googlegroups.com
பெங்களூர், பெங்களுரு ப்பெயர் மாற்றக் குழப்பத்தில், தில்லை வேந்தனை,  தில்லை நடராசன் என்று தவறாக மாற்றியதற்கு வருந்துகிறேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 26, 2024, at 08:33, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

I think the name of the city has been changed to Bengaluru. Given this, my opinion is Sri. Thillai Natarajan has captured it correctly.

Ram Ramakrishnan

unread,
Jul 26, 2024, 11:46:42 AM (20 hours ago) Jul 26
to santhav...@googlegroups.com
“பழையன கழிதலும் புதியன புகுதலும்” எனக்
கொள்ளலாகுமா?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 26, 2024, at 08:51, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Jul 26, 2024, 1:09:54 PM (19 hours ago) Jul 26
to santhav...@googlegroups.com
நஞ்சன் கூடு என்பதில் நஞ்சன் கூட்டில் என்றுதான் வரும். அதைப்போலத்தான் பெங்களூரில் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் 

இலந்தை

Reply all
Reply to author
Forward
0 new messages