ஈற்றடி - வந்த அடிமனத்தில் வை

39 views
Skip to first unread message

Siva Siva

unread,
Aug 30, 2026, 9:16:11 PMAug 30
to santhavasantham
ஈற்றடி - 

வந்த அடிமனத்தில் வை

வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Aug 31, 2026, 5:27:05 PMAug 31
to santhavasantham

2026-08-30

ஈற்றடிக்கு வெண்பா - வந்த அடிமனத்தில் வை

---------------

1)

வேணியில் கங்கை விடவரவம் கூவிளம்

கோணிய வெண்பிறையார் கூத்தனது - மாணியஞ்ச

வந்த நமனையவன் மார்பில் உதைத்தசி

வந்த அடிமனத்தில் வை.


வேணியில் கங்கை, விட-அரவம், கூவிளம், கோணிய வெண்பிறை ஆர் கூத்தனது - 

மாணி அஞ்ச வந்த நமனை அவன் மார்பில் உதைத்த சிவந்த அடி - 

மனத்தில் வை - 


V. Subramanian

Govindaraju Arunachalam

unread,
Sep 1, 2026, 1:46:51 AMSep 1
to santhav...@googlegroups.com
சிக்கலான ஈற்றடிக்கு அடியேன் புனைந்த வெண்பா

செவிக்கு விருந்து திருக்குறள் ஆகும்

புவியில் அதனைப் புகழாதார் யாருளர்

அந்தணர் என்போர் அறவோரே நீகேட்டு

வந்த அடிமனத்தில் வை.

 

-கருவூர் இனியன்.


குறிப்பு: அந்தணர் என்போர் அறவோர் என்பது நீகேட்டு உவந்த அடி; அதனை மனத்தில் வை என்பதே சொல்ல வந்த கருத்து.

 


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN5Fwo7vOUr9qvQqCyDR90aXhycGq%2B%3D3%3DnOoQU1HjTfUg%40mail.gmail.com.


--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Parthasarathy S

unread,
Sep 1, 2026, 2:30:02 AMSep 1
to சந்தவசந்தம்
அருமையாகப் பிரித்துச் சிவந்த அடி மனத்தில் வை என்றது வியக்க வைக்கிறது.
தாஸன் புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர் 

Parthasarathy S

unread,
Sep 1, 2026, 2:32:19 AMSep 1
to சந்தவசந்தம்
இந்த ஈற்றடிக்கு அடியேனின்  முயற்சி
ஈற்றடி- வந்த அடிமனத்தில் வை
வெண்பா

விந்தை வியனுலகில் வேண்டும் வழிபெறவே
சிந்தை சிறந்தாரைச் சேர்ந்திடுக -  சந்ததம்
அந்தி அருகிலென ஆய்ந்துடன் இன்றுவரை

வந்த அடிமனத்தில் வை
புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

Siva Siva

unread,
Sep 1, 2026, 8:31:35 AMSep 1
to santhav...@googlegroups.com
இனிய வெண்பா.

வி. சுப்பிரமணியன் 

Siva Siva

unread,
Sep 1, 2026, 8:32:04 AMSep 1
to santhav...@googlegroups.com
Thanks.
V. Subramanian

Siva Siva

unread,
Sep 1, 2026, 8:33:48 AMSep 1
to santhav...@googlegroups.com
/ சந்ததம் அந்தி அருகிலென ஆய்ந்துடன் இன்றுவரை வந்த அடி  /

இச்சொற்றொடர்க்குப் பொருள்விளக்கம் அளித்தால் உதவும்.

வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Sep 1, 2026, 8:49:36 AMSep 1
to santhavasantham

2)

ஓதுமறை சொல்லும் ஒருவன்வன் றொண்டர்க்கா

மாது பரவை மனையடைந்து - தூதுசொல்ல

அந்த அழகிய ஆரூர்த் தெருவினில்

வந்த அடிமனத்தில் வை.


ஓது-மறை சொல்லும் ஒருவன் -

வன்றொண்டர்க்கா மாது பரவை மனை அடைந்து தூதுசொல்ல -

அந்த அழகிய ஆரூர்த் தெருவினில் வந்த அடி -

மனத்தில் வை -


வி. சுப்பிரமணியன்


On Mon, Aug 31, 2026 at 5:26 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

1)

Subbaier Ramasami

unread,
Sep 1, 2026, 9:13:12 AMSep 1
to santhav...@googlegroups.com

கனவிலும் கூடக் கவிதை  அடிகள்
நனவென நெஞ்சில் நடக்கும்- நினைவாக 
அந்த அடியை அகலாது வைக்க

வந்த அடிமனத்தில் வை

அடிமனத்தில் வைத்தால்  அதுமறவா துள்ள
படிமனத்தில் நன்கு பதியும்- வடிதினத்தில்
அந்த அடிதானாய்  அங்கே எழுவதனால்

வந்த அடிமனத்தில் வை

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 1, 2026, 9:44:29 AMSep 1
to santhav...@googlegroups.com
இனிமை.
கனவில் வந்த அடி மனத்தில் நிற்கவைக்க முடியுமென்றால் அது சாதனையே!

வி. சுப்பிரமணியன்

Kaviyogi Vedham

unread,
Sep 1, 2026, 10:57:55 AMSep 1
to santhav...@googlegroups.com
aanaikkum adi sarukkum/
 see
a ந்த அடியை அகலாது வைக்க
வந்த அடிமனத்தில் வை
On Tue, Sep 1, 2026 at 9:13 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Subbaier Ramasami

unread,
Sep 1, 2026, 2:27:48 PMSep 1
to santhav...@googlegroups.com
நன்றி வேதம்.   அகலாது வைத்திட என்றிருக்க வேண்டும்

இலந்தை

Siva Siva

unread,
Sep 1, 2026, 9:34:51 PMSep 1
to santhavasantham

My last song for this last line.

3)

மயற்பிரமன் பாம்பணை மாலறியா ஈசன்

புயற்கண்டம் காட்டும் புனிதன் - கயற்கண்ணி

செந்துவர்வாய்ச் சிற்றிடைத் தேவி திருக்கரம்தை

வந்த அடிமனத்தில் வை.


(மயல் - மயக்கம்);

(புயல் - மேகம்);

(துவர் - பவளம்); (தைவருதல் - வருடுதல்);


வி. சுப்பிரமணியன்

Arasi Palaniappan

unread,
Sep 2, 2026, 1:35:42 PMSep 2
to சந்தவசந்தம்
அருமை!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Sep 2, 2026, 1:36:00 PMSep 2
to சந்தவசந்தம்
இனிமை பேராசானே!

Arasi Palaniappan

unread,
Sep 2, 2026, 1:36:43 PMSep 2
to சந்தவசந்தம்

Siva Siva

unread,
Sep 2, 2026, 1:53:02 PMSep 2
to santhav...@googlegroups.com
Thanks.

Reply all
Reply to author
Forward
0 new messages