ஒரு பத்திரிகையாளனாக என்னுடைய அனுபவத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் எத்தனையோ ஜல்லிக்கட்டுகளைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் பெரும் தொகையில் காயமடைவது மனிதர்களாகத்தான் இருந்திருக்கிறார்களே அன்றி, மாடுகள் அல்ல. எனக்கு சாகசங்களில் நம்பிக்கை கிடையாது. அதன் பொருட்டு சாகசமே கூடாது என்று சொல்ல நான் யார்? தவிர, எது சாகசம் என்பதை யார், எந்த அடிப்படையில் தீர்மானிப்பது? விமானப் பயணம் என்றால், எனக்கு உதறல். ஏனைய எந்தப் போக்குவரத்தைக் காட்டிலும் விமானப் போக்குவரத்தே குறைந்த விபத்துகள் நடப்பதும் பாதுகாப்பானதுமாகும் என்று புள்ளிவிவரத்தோடு சொல்லும் நண்பர்கள் உண்டு. ஒரு பாதசாரியாக சென்னை சாலைகளைக் கடப்பது விமானப் பயணத்தைக் காட்டிலும் அபாயகரமானது.
மனிதர்கள், மாடுகள் இரு தரப்பினருக்குமே ஆபத்து விளைவிப்பதாக ஜல்லிக்கட்டு நடந்த காலகட்டம் ஒன்று இருந்தது. அரசு தலையீட்டின்பேரில் ஏராளமான விதிகள், கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்ட பின்னர் சூழல் மேம்பட்டது. இன்னும்கூட ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம். ஒருவேளை தமிழர்கள் `எதற்கு இந்த முரட்டு விளையாட்டு?` என்று யோசித்து ஜல்லிக்கட்டுக்குத் தாமாகவே விடை கொடுத்தாலோ, காலப்போக்கில் அதுவாகவே வழக்கொழிந்தாலோ நான் சந்தோஷப்படுவேன். ஆனால், மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்கிற பெயரில் ஜல்லிக்கட்டு முடக்கப்படுவது அபத்தம்.
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்ட பிந்தைய சில ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகை நெருங்கும்போது, கிராமப்புறத் தமிழகம் கொந்தளிப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தக் கொந்தளிப்பு இயல்பானது. விவசாயிகளுக்கு மாடுகளுடனான பிணைப்பைக் கிராமப்புறங்களைத் தாண்டி இருப்பவர்களால் புரிந்துகொள்ள முடியாது. மனிதர்களுக்கு இணையாக, மாடுகளுக்கும் பிரத்யேகமாக ஒருநாள் மாட்டுப் பொங்கல் நிர்ணயித்துக் கொண்டாடும் சமூகம் இது. இன்றளவும் கிராமப்புறத் தமிழகத்தில் இரண்டாம் நாள் பொங்கலே முதல் நாள் பொங்கலைக் காட்டிலும் விசேஷமானது. நவீன உழவில் காளைகளுக்கான தேவை அழிக்கப்படலாம்; பால் தேவையும் உற்பத்தியும் விசுவரூபம் எடுத்திருக்கிறது. மாடுகள் இன்றி கிராமப்புறப் பொருளாதாரம் இல்லை.
ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்று கேட்டுத் தெரிந்துகொண்டு, இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “இந்த நவீன யுகத்தில் ஜல்லிக்கட்டை ஏன் கணினியில் விளையாடக் கூடாது? காளைகளுக்குப் பதில் சிங்கங்களைத் தருகிறோம், அடக்குகிறீர்களா?” என்று கேட்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகர்ப்புற மேட்டிமைப் பார்வையின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்கத் தோன்றுகிறது.”
With all those eye-grabbing headlines of the past couple of weeks, how can I not say something about jallikattu. In the first place, I have not, despite a rural pre-teen, seen any version of jallikattu. But then, I must be no different from almost all those thousands who have created those recent headlines. Many of them, however, may have an advantage over me; they may have seen director-created versions in films. But, like me, they would have heard of the ancient Tamil sport from those who’ve seen it in the State’s Southern districts. And, they too, like me, would have heard varied descriptions.
Going by those descriptions, I have no problems with the sport, provided the bulls are not inebriated with alcohol or frenzied with drugs or, worse, chilli powder. I also have no problems with the sport if the bulls are allowed to run free, even in a stockade that has an exit, and are not tethered to an immovable object and can get only as far as the rope will allow them without the danger of being throttled. And, I have no problem with the sport if goads or any other kinds of instruments are not used. A bull allowed to run free with men trying to rip the prize around its neck or merely to tame it is certainly a far less cruel sport than Iberian and Latin American bull-fighting. Which also I’ve not seen — except in films.
The picture of bulls running free and being chased for the prizes around their necks takes me back to my pre-teens in villages in the deep South. It was on Maattu Pongal day, after the pongal — always cooked in clay pots on wood-stoked clay hearths decorated with the most intricate kolams — and after the cattle were fed the white pongal and the golden palmyrah jaggery pongal. All our houses had cattle, for milk, for the water cart, for the cart the family travelled in. The cattle were turned loose on the sandy village roads with a slap or two. And as they galloped about, the awaiting village youth would be waiting to chase them and grab the prizes off their necks. The prizes would invariably be a new veshti (a new veshti in those days was much valued), may be the bonus of a thundu (a towel/shawl of sorts), and, knotted in the veshti, manjal (turmeric), betel leaves and nuts, and a coin or note or two. Also around the neck would be a garland of coconut halves, sugarcane sections and panangkizhangu (palmyrah palm sprouts). And that was what manja virattu was all about. I had never heard of jallikattu in those days. But manja virattu — accompanied by hackery racing — is still big in most villages of the deep South.
Manja virattu must have, at some point in history, evolved into the sport of jallikattu. And, as in almost every sport today, money would have entered this one too. And where there’s money, there’s abuse. I look forward to abuse-free jallikattu. Perhaps even in Madras.
On Monday, January 30, 2017 at 10:49:10 PM UTC-8, தேமொழி wrote:
On Monday, January 30, 2017 at 9:55:27 PM UTC-8, N. Ganesan wrote:Here is the movie, ViLaiyaaTTuppiLLai, 1970. Story by Kothamangalam Subbu:Few know that his first foray into fiction, in the 1930s, was with a short story, ‘Manji Virattu’ (another form of jallikattu). Not satisfied with writing a short story on this theme, Subbu serialised a sprawling novel, Rao Bahadur Singaram, in the popular weekly, Ananda Vikatan. This story, centred on the romance between a young girl who raises a bull and a youth who sets out to tame it, was filmed (Vilaiyattu Pillai, 1970) by the same team that produced Thillana Mohanambal.
Perhaps, the very first movie featuring Jallikattu as its major theme.
நன்றி.எம்ஜிஆர் - தாய்க்குப் பின் தாரம் (1956) - ஜல்லிக்கட்டு உள்ளதாம்:(கண்ணதாசன் - கதை வசனம்)தெலுங்குப் படத்தில் ஆமானுடன் போரிடும் காட்சி அமைத்துள்ளனர்:மேலும், ஆமான் பற்றிய செய்திக்கு: https://groups.google.com/forum/#!topic/mintamil/7rR2jNBlt6Mநா. கணேசன்
\
சல்லிக்கட்டு
சல்லிக் கட்டும் மல்லுக் கட்டும்
சண்டைக்குக் காரணமே - ராசாத்தி
சண்டைக்குக் காரணமே.
1
அரண் மனை வாசல் முன்னே
ஆயிரம் காளைகளாம் - ராசாத்தி
ஆயிரம் காளைகளாம்.
2
ஆள்ஒண் ணுக்குக் காளை ஒண்ணு
அங்கே இருக்குதுபார் - ராசாத்தி
அங்கே இருக்குதுபார்.
3
காளை எல்லாம் சாயம் பூசிக்
கருத்தாய் நிற்குதுபார் - ராசாத்தி
கருத்தாய் நிற்குதுபார்.
4
ரம்பம் போலே கொம்பு எல்லாம்
ஜம்பமா நிற்குதுபார் - ராசாத்தி
ஜம்பமா நிற்குதுபார்.
5
கொம்பைச் சுற்றிக் கொம்பும் பட்டும்
ஜொலிக்குது அங்கேபார் - ராசாத்தி
ஜொலிக்குது அங்கேபார்.
6
சாடை கண்டு காளை எல்லாம்
ஓடப் பார்க்குதுபார் - ராசாத்தி
ஓடப் பார்க்குதுபார்.
7
காளைக்குப் பின்னே ஆளுகள் எல்லாம்
சாடு றாங்கநீபார் - ராசாத்தி
சாடு றாங்கநீபார்.
8
நிண்ணு குத்திக் காளை எல்லாம்
நிமிர்ந்து நிற்குதுபார் - ராசாத்தி
நிமிர்ந்து நிற்குதுபார்.
9
கறுத்த காளையும் செவத்த காளையும்
கலந்து நிற்குதுபார் - ராசாத்தி
கலந்து நிற்குதுபார்.
10
வெள்ளைக் காளையும் மயிலைக் காளையும்
வெருண்டு நிற்குதுபார் - ராசாத்தி
வெருண்டு நிற்குதுபார்.
11
வாலுப் பக்கம் வளைஞ்சு வளைஞ்சு
வர்றாங்க வாலிவரு - ராசாத்தி
வர்றாங்க வாலிவரு.
12
ஆத்திரம் புடிச்சு அப்பரா ணியைத்தான்
அலாக்காய்த் தூக்குதுபார் - ராசாத்தி
அலாக்காய்த் தூக்குதுபார்.
13
________________________________________________
12. வாலிவரு - வாலிபர்.
மாலை போட்ட மாடு ஓடுது
மறிக்க முடியாமே - ராசாத்தி
மறிக்க முடியாமே.
14
தொத்தல் மாடும் வத்தல் மாடும்
துவண்டு நிற்குதுபார் - ராசாத்தி
துவண்டு நிற்குதுபார்.
15
உருமால் கட்டையும் திருமால் குட்டையும்
ஊறான் புடுங்குறான்பார் - ராசாத்தி
ஊரான் புடுங்குறான்பார்.
16