grammar doubts

3,416 views
Skip to first unread message

Siva Siva

unread,
Apr 2, 2011, 7:29:46 AM4/2/11
to santhavasantham
ஏல் - ஏற்றல் / ஏற்பது

இச்சொல்லை எதிர்மறையாகப் பிரயோகிக்கும்பொழுது, எப்படி வரும்? உதாரணமாக:
ஏலாதவர்? ஏற்காதவர்?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

Madhurabharathi

unread,
Apr 2, 2011, 12:37:18 PM4/2/11
to santhav...@googlegroups.com
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக் கேலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.

இந்தச் செய்யுளில் ‘ஏலாய்’ (ஏற்கமாட்டாய்) என்ற எதிர்மறைப் பொருளில் ஔவை பாடியிருக்கிறார்.
 
பேச்சுவழக்கில் ஏலாதவர் என்பது இயலாதவர் என்பது மருவி வருவதாக உள்ளது.
 
அன்புடன்
மதுரபாரதி
 
 
2011/4/2 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

SUBBAIER RAMASAMI

unread,
Apr 2, 2011, 12:38:18 PM4/2/11
to santhav...@googlegroups.com
ஏலாதார் என்றால் இயலாதவர் என்று பொருள்.
 
நான் என் கவிதையில் இப்பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன்
 
இன்னொரு பொருள் தாங்கமுடியாத என்பதாக்ம்
 
காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனிற் பலராவர்- ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட
தொடர்புடையேம் என்பார் சிலர்(நாலடியார்)
 
ஏற்காதவர் என்பது சரி என்று தோன்றுகிறது
 
இலந்தை

2011/4/2 Siva Siva <naya...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Apr 3, 2011, 1:23:36 AM4/3/11
to santhav...@googlegroups.com, SUBBAIER RAMASAMI
அருமை. விளக்கம் மெத்தச் சரியே,
 யோகியார்

2011/4/2 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

Siva Siva

unread,
Apr 3, 2011, 8:51:46 AM4/3/11
to santhavasantham


2011/4/2 Siva Siva <naya...@gmail.com>

தேடியதில் கண்டன:

http://www.tamilvu.org/courses/degree/a021/a0211/html/a02116l6.htm

5. விளி ஏலாத தன்மைப் பெயர் ஒன்றினைக் கூறுக.
விளி ஏற்காத தன்மைப் பெயர் - நான்.

6.
விளி ஏலாத பெயர்களுள் இரண்டினைக் கூறுக.
அவன், அவள், அது போன்ற சுட்டுப்பெயர்களும், எவன், எவள், எது முதலிய வினாப்பெயர்களும் விளி ஏற்காத பெயர்கள் ஆகும்.
-----------

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=60450&padhi=045&startLimit=3&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

6.45.3:
வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர்
    வெண்மதியும் பாம்பு முடனே வைத்தீர்
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர்
    கண்டார்க்குப் பொல்லாது கண்டீர் எல்லே
கொள்ளத்தான் இசைபாடிப் பலியுங் கொள்ளீர்
    கோளரவுங் குளிர்மதியுங் கொடியுங் காட்டி
உள்ளத்தை நீர்கொண்டீர் ஓதல் ஓவா
    ஒளிதிகழும் ஒற்றியூ ருடைய கோவே.

இதன் பொழிப்புரையில்:
"... பகற்பொழுதில் பிச்சை வாங்கவருபவரைப் போல இசையைப் பாடிக் கொண்டு வந்து, பிச்சையையும் ஏலாது, உம்முடைய பாம்பு, பிறை, காளை எழுதிய கொடி இவற்றைக் காணச் செய்து, எம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டீர்.   ...."
-----

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=1&Song_idField=10630&padhi=063&startLimit=5&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

1.63.5:
தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கிய தாழ்சடையன்
பிணிநீர்மடவா ரையம்வவ்வாய் பெய்கலை வவ்வுதியே
அணிநீருலக மாகியெங்கு மாழ்கட லாலழுங்கத்
துணிநீர்பணியத் தான்மிதந்த தோணி புரத்தானே.

பொழிப்புரையில்: "..... மகளிர் பால் சென்று அவர்கள் தரும் பிச்சையை ஏலாது  ....."
குறிப்புரையில்: ".... மகளிரிடம் ஐயம் ஏற்காது ...."

--------------
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=8&Song_idField=8102

திருவசகம் - கீர்த்தித் திருவகவல்:
குறிப்புரையில்:
........ அடி 48-49
வித்தக வேடம் - ஞானாசிரியக் கோலம். தூண்டு சோதி (இறைவன்) தோற்றியபின்னர், அடிகள் தம் விருப்பின் வழியே மீளத் திருப்பெருந்துறை செல்லுங்கால், வழியில் உத்தரகோசமங்கையில், `இறைவன் இதுகாறும் திருப்பெருந்துறையுள் முன்போல இருந்து நம்மை ஏற்றருள்வானோ! ஏலாது விட்டுவிடுவானோ` என்னும் ஏக்கத்தால், நீத்தல் விண்ணப்பம் பாடி நின்றபொழுது, .........

----------------

இவ்வுதாரணங்களைப் பார்க்கும்பொழுது, 'ஏலாமல்', 'ஏற்காமல்' இரண்டுமே சரியோ?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

naa.g...@gmail.com

unread,
Apr 3, 2011, 4:38:54 PM4/3/11
to சந்தவசந்தம்

நாளாந்தரம் பயன்படும் பல சொற்கள் ஏல்- என்னும் வேரில்
இயங்குகின்றன. லெக்சிகன்:

-----------

ஏற்க ēṟka
, adv. < ஏல்-. See ஏற்கவே. (J.)

ஏற்கநட-த்தல் ēṟka-naṭa-
, v. intr. < id. +. To behave properly; ஒழுங்காய் நடத்தல். (W.)

ஏற்கவே ēṟkavē
, adv. < id. + ஏ. Before- hand, early, in good time; முன்னமே.
ஆபத்துவந்த போது நம்மைத் தேடித்திரியவொண்ணா தென்று ஏற் கவே கடலிடங்
கொண்டவனை (ஈடு, 3, 6, 2).

ஏற்கெனவே ēṟkeṉavē
, adv. < id. + என வே. See ஏற்கவே.

ஏற்ப ēṟpa
, < id. part. An adverbial word of comparison; ஓர் உவமவுருபு. (தண்டி.
33.)--adv. In accordance with; தக்கபடி.

ஏற்படு-தல் ēṟpaṭu-
, v. intr. < id. +. [T. K. ērpaḍu, M. ēlpeḍu.] 1. To come into
existence; to become formed; to be produced, or created; உண்டாதல்.
அந்த ஊர் அவனால் ஏற்பட்டது. 2. To be engaged in; to enter upon, as a
business; தலைப்படுதல். (J.) 3. To agree, consent, become a party to a
contract; உடன்படு தல். (J.)

ஏற்படுத்து-தல் ēṟpaṭuttu-
, v. tr. Caus. of ஏற்படு-. [T. ērparatsu, K. ērpaḍisu, M. elpeḍu- tu.]
1. To create, make, form, construct, establish; உண்டுபண்ணுதல். அவன்
அந்த ஊரை ஏற்படுத்தினவன். 2. To persuade, prevail upon, induce;
இணங்கச்செய்தல். (J.) 3. (Law.) To find, as guilty or not guilty;
நிச்சயித்தல். அவ னைக் குற்றவாளியென் றேற்படுத்தினார்கள் Colloq. 4. To
prepare, arrange; ஆயத்தப்படுத்துதல். (W.) 5. To ordain, appoint,
assign, institute, put into office; நியமித்தல். அவனை
அக்காரியத்திற்குத் தலைவ னாக ஏற்படுத்தினார்கள்.

ஏற்பாடு ēṟpāṭu
, n. < ஏற்படு-. [T. ērpāṭu, K. ērpāḍu.] 1. Arrangement, method,
system, rule, established custom; ஒழுங்கு. அந்த ஏற்பாடு
நன்றாயிருக்கிறது. 2. Appointment to an office; நியமனம். அந்த வேலைக்கு
அவனை ஏற்பாடு பண்ணி னான். 3. Engagement, covenant; உடன்படிக்கை. 4.
Testament, as the Old and New Testament in the Bible; Chr.

ஏற்பு ēṟpu
, n. < ஏல்-. 1. Appropriateness, fitness; பொருத்தம். ஏற்புற வணிதலும்
(நம்பியகப். 125). 2. Acceptance, reception; ஏற்றுக்கொள்கை. வர வேற்பு.

ஏற்புடைக்கடவுள் ēṟpuṭai-k-kaṭavuḷ
, n. < ஏற்பு + உடை +. Deity appropriate to the subject-matter dealt
with in a book, dist. fr. வழி படுகடவுள்; நூற்குரிமைபூண்டுள்ள கடவுள்
(குறள், 1, உரை.)

ஏற்புழி ēṟpuḻi
, adv. < id. + உழி. In the suitable place; ஏற்குமிடத்து. அடைகளை
ஏற்புழி யெங்கும் ஒட்டுக (சிலப். 13, 155, உரை).

ஏற்புழிக்கோடல் ēṟpuḻi-k-kōṭal
, n. < ஏற் புழி +. (Gram.) Application of rules and definitions to
cases where they might suitably apply, allowing of exceptions, one of
32 utti; பொருந்து மிடங்களிற் கொள்ளுகையென்னும் உத்தி. (நன். 227,
விருத்.)

ஏற்போன் ēṟpōṉ
, n. < ஏல்- Beggar, mendicant; யாசிப்போன். (சூடா.)

Siva Siva

unread,
Apr 5, 2011, 9:03:03 PM4/5/11
to santhav...@googlegroups.com
அறிந்தாற்போல
கண்டாற்போல
புரிந்தாற்போல
அடுத்தாற்போல்
பெய்தாற்போல

இவ்வாறு வரும் பிரயோகங்களின் அமைப்பின் இலக்கண விளக்கம் என்ன? இவற்றில் வரும் 'ஆல்' என்பதன் பொருள் என்ன?

Siva Siva

unread,
Jun 6, 2011, 1:05:29 PM6/6/11
to santhav...@googlegroups.com
இன்று கண்ணில் பட்ட ஒரு பிரயோகம்:
"ஆண்பனை காய்கள் காய்க்கா. பெண்பனை பூத்துக் குலுங்கிக் காய்க்கும்."

காய்த்தல் - காய்க்கா? எதிர்மறையில் 'காயா' என்றுதானே வரும்? காய்க்கமாட்டா என்றும் வருமன்றோ?

தேடியதில் கண்ட ஒரு பிரயோகம்:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1219&padhi=72&startLimit=79&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

தாள தொன்றினில் மூன்றுபூ மலரும்
   தமனி யச்செழுந் தாமரைத் தடமும்
நீள வார்புனல் குடதிசை யோடி
   நீர்க ரக்குமா நதியுடன் நீடு
நாள லர்ந்துசெங் குவளைபைங் கமலம்
   நண்ப கல்தரும் பாடலம் அன்றிக்
காள மேகம்ஒப் பாள்உறை வரைப்பிற்
    கண்ப டாதகா யாப்புளி உளதால்.

காயாப்புளி - காய்த்தல் இலாத புளி.

அதே போல் 'பிறத்தல்' - பிறவா,,,,,

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=6&Song_idField=60550&padhi=055&startLimit=9&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

அப்பர் தேவாரம் 6.55.9
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
    முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
    சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
    அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி.

மூத்தலோ பிறத்தலோ இறத்தலோ இல்லாது எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டு என்றும் இயற்கையாகவே விளங்கும் தேவர் தலைவரும் தொழும் தெய்வமே !


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/4/5 Siva Siva <naya...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Jun 7, 2011, 1:37:05 AM6/7/11
to santhav...@googlegroups.com
காயாத கானகத்தே என்னும் பாடல் பிரசித்தம்.
 
பார்த்தல் - பாரா முகம்    பார்க்காத போது
இப்படிப் பிரயோகங்கள் வழக்கில் வந்துவிட்டதால் இரண்டையும் ஏறுறுக்கொள்ளவேண்டியதுதான்.
 
ஆண்பனை காய்கள் காயா? என்று கேட்பதாக வைத்துக்கொள்வோம். ஆண்பனனயின் காய்கள் காயாகுமா? என்றும் பொருள்வருமே!
 
இலந்தை


 
2011/6/6 Siva Siva <naya...@gmail.com>
--

Pas Pasupathy

unread,
Jun 7, 2011, 7:57:19 AM6/7/11
to santhav...@googlegroups.com
மேலும், ’காயா’ என்றால் ‘உலரா’ என்ற
பொருள் வரும். ( மேலும் பல பொருள்களும் காய் என்ற வினைச்சொல்லுக்கு உண்டு)
 
காட்டு:
மழைக்காலத்தில் துணிகள் காயா.
 
காய்- காய்க்க- காய்க்காது ..காய்க்கா
என்பதே தற்காலத்தில் சரி.

2011/6/7 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>



--

selva kumaran

unread,
Jun 7, 2011, 8:23:42 AM6/7/11
to santhav...@googlegroups.com
'காய்க்காது' என்பதன் ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சமாகக் "காய்க்கா"  என்பதைப் புரிந்துக் கொண்டிருக்கிறேன். சரியா?

2011/6/7 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

selva kumaran

unread,
Jun 7, 2011, 8:24:49 AM6/7/11
to santhav...@googlegroups.com
பிழை திருத்தம்.

காய்த்தல் என்பதன் ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.

காய்க்காது என்பதன் ஈறுகெட்ட வினையெச்சம்.

RAJAGOPALAN APPAN

unread,
Jun 7, 2011, 8:35:26 AM6/7/11
to santhav...@googlegroups.com
 காய்தலும், காய்த்தலும் வேறு வேறு. காய்த்தல் என்பது வினைகுறித்த பொதுச்சொல். 'காய்க்கும்' என்ற உடன்பாட்டு வினைக்கு எதிர்ச்சொல் 'காய்க்காது' என்பதே. ஆனாலும், "எட்டி காயாதிருந்தென்ன காய்த்துப் பயனென்ன" என்று வருவதையும் பார்க்கிறோம். 'காயாப் புளி' என்பதற்கு, வெம்மையால் தாக்கப்படாத புளி என்றோ வெம்மையை ஏற்படுத்தாத புளி என்றோ கூடப் பொருள் கொள்ளலாம்.
 அ.ரா

2011/6/6 Siva Siva <naya...@gmail.com>
--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 7, 2011, 10:27:51 AM6/7/11
to santhav...@googlegroups.com
காய்க்கும்- காய்க்கா என்பதை, வாய்க்கும் - வாய்க்கா என்பதோடு ஒப்பிடலாம்.

அனந்த்

2011/6/7 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

Hari Krishnan

unread,
Jun 7, 2011, 10:34:48 AM6/7/11
to santhav...@googlegroups.com


2011/6/7 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

காய்க்கும்- காய்க்கா என்பதை, வாய்க்கும் - வாய்க்கா என்பதோடு ஒப்பிடலாம்.


எடுத்துக் காட்டுகள் எவ்வளவு யோசித்தாலும் சிக்கவில்லையென்றாலும், காயா, காய்க்கா என்ற இரண்டு வடிவங்களுமே சரிதான் என்று படுகிறது.  செவிசாய்க்கா, தலைசாய்க்கா, செவி சாயா, தலைசாயா என்பன போன்ற பிரயோகங்களும் உண்டு.  
--
அன்புடன்,
ஹரிகி.

Siva Siva

unread,
Jun 8, 2011, 12:16:12 AM6/8/11
to santhav...@googlegroups.com
ஆம். நீங்கள் சொல்வதும் ஏற்புடைத்தே.
ஆயினும், 'மன்னன் கொடுக்கான்' போன்ற பிரயோகம் சற்று உறுத்துகிறாற்போல் தோன்றுகிறது.
------


http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=5&Song_idField=50150&padhi=015&startLimit=6&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

அப்பர் தேவாரம் - 5.15.6
மங்கை காணக் கொடார்மண மாலையை
கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை
நங்கை மீரிடை மருதரிந் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தா ரிதழியே.



2011/6/7 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
காயாத கானகத்தே என்னும் பாடல் பிரசித்தம்.

Siva Siva

unread,
Jul 21, 2011, 10:56:37 PM7/21/11
to santhav...@googlegroups.com
இருத்தல் ---> 'இருந்தால்' என்ற பொருளில் எப்படி வரும் --> இருக்கின்? இருப்பின்?


இரண்டுமே சரியோ?

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 22, 2011, 12:20:25 AM7/22/11
to santhav...@googlegroups.com
இரண்டு வகையிலும் பயிலுவதை இலக்கியத்தில் காணலாம்.
 

மனத்தகத் தழுக்கறாத மவுனஞான யோகிகள்

வனத்தகத் திருப்பினும் மனத்தகத் தழுக்கறார்

மனத்தகத் தழுக்கறுத்த மவுனஞான யோகிகள்
முலைத்தடத் திருப்பினும் பிறப்பறுத் திருப்பரே. - சிவவாக்கியர் 

அண்ணல தருளின் நண்ணினர் இருப்பினும் 

சீவன் முத்தரென் றோதினர் அகன்று...  

- திருமுறை  சங்கற்ப நிராகரணம் (உமாபதி சிவாச்சாரியார்)


எண்ணாயிரம் ஆண்டு யோகம் இருப்பினும் 

கண்ணார் அமுதனை கண்டறிவாரில்லை 

உண்ணடி (உள்நாடி) ஒளிபெற உள்ளே நோக்கினார் 

கண்ணாடி போல க் கலந்து நின்றானே     -இயற்றிவர் யாரெனத் தெரியவில்லை 


எங்கே இருக்கினும் பூரி இடத்திலே 

அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை 

அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச் 

சங்கே குறிக்கத் தலைவனு மாமே - திருமூலர்


..அனந்த் 


2011/7/21 Siva Siva <naya...@gmail.com>

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 22, 2011, 12:28:11 AM7/22/11
to santhav...@googlegroups.com
இடுக்கண் பட்டு இருக்கினும் இரந்து யாரையும் விடுக்கில் பிரானென்று வினவுவோம் அல்லோம் அடுக்கல் கீழ்க் கிடக்கினும் அருளி நாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே. - திருநாவுக்கரசர் 

இருக்கினும் என்பது நிகழ்காலக் குறிப்புக் கொண்டது என்றும், இருப்பினும் என்பது வருங்காலக் குறிப்புள்ளது என்று கொள்ளலாமோ? ம்

அனந்த்

2011/7/21 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

RAJAGOPALAN APPAN

unread,
Jul 22, 2011, 2:41:26 AM7/22/11
to santhav...@googlegroups.com


 

 

//எண்ணாயிரம் ஆண்டு யோகம் இருப்பினும்

கண்ணார் அமுதனை கண்டறிவாரில்லை

உண்ணடி (உள்நாடி) ஒளிபெற உள்ளே நோக்கினார்

கண்ணாடி போல க் கலந்து நின்றானே     -இயற்றிவர் யாரெனத் தெரியவில்லை//
 
 
 திருமூலரின் திருமந்திரப் பாடல் தான். பாடலின் சரியான வடிவம்:
 
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருப்பினும்
கண்ணால் அமுதினைக் கண்டறி வாரில்லை.
உண்ணாடி யுள்ளே ஒளியுற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்திருந் தானே.
 
அமுது- இன்ப வடிவினனாகிய இறைவன். கருத்து: யோக நிலையில் இருந்தால் மட்டும் போதாது. இறை நினைவோடு கூடிய யோகமே பயன் தரக் கூடியது.
 
 
 
அ.ரா 
2011/7/22 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
Aug 20, 2011, 11:24:34 AM8/20/11
to santhav...@googlegroups.com
ஐ, மை, மெய், பொய்,,, போன்ற சொற்களின் பின் வரும் சொல் மெல்லினத்தில் தொடங்கினால் அம்மெல்லினம் மிகும்.

ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கத்திலிருந்து:

94. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகரமெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும்.
உதாரணம்.
மெய் + ஞானம் - மெய்ஞ்ஞானம்
செய் + நன்றி - செய்ந்நன்றி
கை + மாறு - கைம்மாறு

-------
இக்காலத்தில் பலரும் பொய்ம்மை, மெய்ஞ்ஞானம், ஐந்நூறு,,,, என்று எழுதாமல்
பொய்மை, மெய்ஞானம், ஐநூறு,,,, என்று எழுதிவருவதைக் காண்கிறேன்.
இனி இவ்விதியைப் பொருட்படுத்தத் தேவையில்லையா?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/7/21 Siva Siva <naya...@gmail.com>

Hari Krishnan

unread,
Aug 20, 2011, 11:36:45 AM8/20/11
to santhav...@googlegroups.com


2011/8/20 Siva Siva <naya...@gmail.com>

இக்காலத்தில் பலரும் பொய்ம்மை, மெய்ஞ்ஞானம், ஐந்நூறு,,,, என்று எழுதாமல்
பொய்மை, மெய்ஞானம், ஐநூறு,,,, என்று எழுதிவருவதைக் காண்கிறேன்.
இனி இவ்விதியைப் பொருட்படுத்தத் தேவையில்லையா?

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

சரியா அல்லது

பொய்ம்மையும் வாய்மை யிடத்த

சரியா?

Hari Krishnan

unread,
Aug 20, 2011, 11:51:43 AM8/20/11
to santhav...@googlegroups.com


2011/8/20 Siva Siva <naya...@gmail.com>

ஐநூறு,,,, என்று எழுதிவருவதைக் காண்கிறேன்.
இனி இவ்விதியைப் பொருட்படுத்தத் தேவையில்லையா?

கம்பன்:

மையுறவு உயிர் எலாம் இறுதி வாங்குவான்
கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான் 
ஐ-ஐநூறாயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான் வில்லின் கல்வியான்
(குகப் படலம்)

இச்சொல்லின் வேறுபட்ட வடிவம்: 

என்றலுமே அடி இறைஞ்சி, ஈர்-ஐஞ்ஞூற்று இராக்கதர்கள்,
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி,
நின்று இரண்டு கதுப்பும் உற, நெடு முசலம் கொண்டு அடிப்ப,
பொன்றினவன் எழுந்தாற்போல், புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான். 
(கும்பகர்ணன் வதைப் படலம்.)

ஐந்நூறா, ஐநூறா, ஐஞ்ஞூறா?

Parthasarathy Krishnan

unread,
Aug 20, 2011, 11:59:42 AM8/20/11
to santhav...@googlegroups.com
ஐந்நூறு என்பதே சரி.

2011/8/20 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Paaki (பாகி)


Hari Krishnan

unread,
Aug 20, 2011, 12:20:18 PM8/20/11
to santhav...@googlegroups.com


2011/8/20 Parthasarathy Krishnan <paaki...@gmail.com>

ஐந்நூறு என்பதே சரி.

ஒப்புக்கொள்கிறேன்.  ஆனால், ஐநூறு என்ற வடிவமும் பயன்பாட்டில் இருந்திருக்கிறதல்லவா?

மேலும்:

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் 
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் 
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே 
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. 

திருமூலர், திருமந்திரம்.  (அச்சுப் பிழையாகவும் இருக்கலாம்.  ஏனெனில், திருமூலரே மெய்ஞ்ஞானம் என்றும் பயன்படுத்தியிருக்கிறார்,

.............
இன்ன மெய்ஞ்ஞானத் துணிவினை மற்றாங்கு
          இழிபடு போர்கொலை தண்டம்
பின்னியே கிடக்கும் அரசியலதனில்
          பிணைத்திடத் துணிந்தனை,,,,,
(பாரதி, மஹாத்மா காந்தி பஞ்சகம்)

இரண்டு வடிவங்களும் பயன்பாட்டில் இருந்தன அல்லவா?

Parthasarathy Krishnan

unread,
Aug 20, 2011, 12:22:16 PM8/20/11
to santhav...@googlegroups.com
உள்ளது ஹரி, அது கவிஞர்களுக்கான சலுகை..

2011/8/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

unread,
Aug 20, 2011, 9:28:34 PM8/20/11
to santhav...@googlegroups.com


2011/8/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

என்னிடம் உள்ள நூலில் 'பொய்ம்மை' என்றே இக்குறளில் உள்ளது.
 

Siva Siva

unread,
Aug 20, 2011, 9:38:02 PM8/20/11
to santhav...@googlegroups.com


2011/8/20 Hari Krishnan <hari.har...@gmail.com>



2011/8/20 Siva Siva <naya...@gmail.com>
ஐநூறு,,,, என்று எழுதிவருவதைக் காண்கிறேன்.
இனி இவ்விதியைப் பொருட்படுத்தத் தேவையில்லையா?

கம்பன்:

மையுறவு உயிர் எலாம் இறுதி வாங்குவான்
கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான் 
ஐ-ஐநூறாயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான் வில்லின் கல்வியான்
(குகப் படலம்)


வர்த்தமானன் பதிப்பில் 'ஐ-ஐந் நூறாயிரம்' என்று இப்பாடலில் காண்கிறேன்.

இச்சொல்லின் வேறுபட்ட வடிவம்: 

என்றலுமே அடி இறைஞ்சி, ஈர்-ஐஞ்ஞூற்று இராக்கதர்கள்,
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி,
நின்று இரண்டு கதுப்பும் உற, நெடு முசலம் கொண்டு அடிப்ப,
பொன்றினவன் எழுந்தாற்போல், புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான். 
(கும்பகர்ணன் வதைப் படலம்.)

ஐந்நூறா, ஐநூறா, ஐஞ்ஞூறா?

திருமுறையில் ந/ஞ இரண்டும் வருவதைக் கண்டுள்ளேன்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=9&Song_idField=90050&padhi=005&startLimit=9&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

9.5.9
எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்
    எண்ணில்பல் கோடிதிண் டோள்கள்
எண்ணில்பல் கோடி திருவுரு நாமம்
    ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும்
எண்ணில்பல் கோடி எல்லைக்கப் பாலாய்
    நின்றைஞ்ஞூற் றந்தணர் ஏத்தும்
எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி
    இவர்நம்மை ஆளுடை யாரே. 


http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10804&padhi=804&startLimit=11&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

நாலொரு கோடியே நாற்பத் தெண்ணாயிரம்
மேலும்ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்
பால்அவை தொண்ணூற்றோ டாறுட்படும் அவை
கோலிய ஐயைந்து ளாகும் குறிக்கிலே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



Pas Pasupathy

unread,
Aug 21, 2011, 7:47:56 AM8/21/11
to santhav...@googlegroups.com
தற்காலத் தமிழ் வழக்கில் மெல்லினம் இரட்டிப்பதில்லை
என்கிறார் ஈழத் தமிழறிஞர் எம்.ஏ.நுஃமான்.

க்ரியா அகராதியில் வாய்மை, மெய்மை, கைமாறு என்ற சொற்கள் இருப்பதைப் பார்க்கலாம்.
 

 
2011/8/20 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Parthasarathy Krishnan

unread,
Aug 22, 2011, 12:45:07 PM8/22/11
to santhav...@googlegroups.com
தமிழ் மாறி வருகிறது. அதையும் தொல்காப்பியர் கூறிவிட்டார்.
"விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே"
என்று கூறிவிட்டார்.




2011/8/21 Pas Pasupathy <pas.pa...@gmail.com>



--
Paaki (பாகி)


Pas Pasupathy

unread,
Aug 22, 2011, 1:40:12 PM8/22/11
to santhav...@googlegroups.com
பழந்தமிழில் உள்ள புணர்ச்சி விதிகளைக் கடைபிடிக்கவில்லை என்றால் சொற்றொடருக்கு என்ன பொருள், ஏன் விதிகள் அவசியம்   என்பவை சுவையான விஷயங்கள்.
 
எந்த இலக்கண நூலும் இவற்றைப் பற்றிப் பேசுவதில்லை. இது
வருந்தத் தக்கது. சில புணர்ச்சி விதிகளில் நாமே யூகிக்கலாம்.
இவற்றைத் தொகுத்துப் புது இலக்கண நூல் எழுதப் பட்டால், இப்போது எழுதப் படும் நூல்களை விடப் பயனுள்ளதாக இருக்கும்.
 
உதாரணமாக,
 
மெய்மை என்றால் மெய்யும், மையும் என்று உம்மைத்தொகையில்
பொருள் கொள்ளலாம்.
 
மெய்ம்மை என்பது அதைத் தவிர்க்கும்.
 
 
 
பொருளில் குழப்பம் வரச் சந்தர்ப்பம் இல்லை என்றால், மாற்றங்களை
வரவேற்கலாம்.

2011/8/22 Parthasarathy Krishnan <paaki...@gmail.com>

Siva Siva

unread,
Aug 22, 2011, 6:23:58 PM8/22/11
to santhav...@googlegroups.com
/எந்த இலக்கண நூலும் இவற்றைப் பற்றிப் பேசுவதில்லை. இது வருந்தத் தக்கது. /

ஆம்.
'செம்மொழி' இன்று 'some மொழி' ஆகிக்கொண்டிருக்கிறதுபோல் தோன்றுகிறது.

2011/8/22 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Siva Siva

unread,
Nov 24, 2011, 9:31:57 AM11/24/11
to santhav...@googlegroups.com
மற்றும்
-------------
இக்காலத்தமிழில் எங்கெங்கும் 'மற்றும்' ஒலிக்கிறது.

தொலைபேசியில்: "தங்கம் மற்றும் வெள்ளி விலை"

தமிழ்நாட்டு அரசாங்கத்தில்: (http://www.tn.gov.in/tamiltngov/gosdb/viewdepartments.php) :
"
தமிழ் வளர்ச்சி, அறநிலையம் மற்றும் செய்தித்துறை"
"
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை "
......
......

இப்பிரயோகம் சரிதானா?

Pas Pasupathy

unread,
Nov 24, 2011, 5:03:46 PM11/24/11
to santhav...@googlegroups.com
 
சரியே.
 
”மற்றும்” இரண்டு பொருளில் வரும்.
 
1. கூடுதலாக, மேலும்.
 
சந்தவசந்தக் கவிஞர்களுக்கு மற்றும் ஒரு பரிசு.
 
 
2. "and" என்ற பொருளில்.
 
நீங்கள் கொடுத்த காட்டுகள்.
 
( குறிப்பு : ”இரவுபகல்”  ”நிறைகுறை” போன்ற மரபுத்தொடர்களில் இப்படி எழுதக் கூடாது.)
 

 
2011/11/24 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

ka thamizhamallan

unread,
Nov 24, 2011, 7:16:16 PM11/24/11
to santhav...@googlegroups.com, Devamaindhan, kambane kajagam
மற்றும் என்னும் சொல்லை இணைப்பிடைச் சொல்லாகச் சிலர் பயன்படுத்துகிறார்கள்.தமிழில் “உம்“ என்பதைத்தான் பயன்படுத்துதல் வேண்டும்.  மறைந்து வந்தால் அதை உம்மைத் தொகை என்று இலக்கணம் சொல்லும்.ஆங்கிலத்தில் பழகியவர்கள் “அண்டு“ என்பதைச் சொல்லிச்சொல்லி அதை மொழிபெயர்த்து மற்றும் என்று சொல்வது அடிமை வழக்கம்.

"தங்கம்  வெள்ளி விலை"என்றே சொல்லலாம்.


"
தமிழ் வளர்ச்சி, அறநிலையம் , செய்தித்துறை"
"
இளைஞர் நலன் , விளையாட்டு மேம்பாட்டுத்துறை "என்று சொன்னாலே போதும்
சிலர் இசை,பாட்டு அண்டு டேன்சு நன்றாக இருக்கிறது என்று சோ ,பட் பயன்படுத்துவது போல் நடிகைகளைப்பின்பற்றிப் பேசுகிறார்கள்.இதுபோலிச்  சோம்பேறிகளின் வழக்கம்.
-முனைவர் க.தமிழமல்லன்

......


௨௫ நவம்பர், ௨௦௧௧ ௩:௩௩ முற்பகல் அன்று, Pas Pasupathy <pas.pa...@gmail.com> எழுதியது:

Pas Pasupathy

unread,
Nov 24, 2011, 8:22:28 PM11/24/11
to santhav...@googlegroups.com
தற்கால வழக்கில் வந்துவிட்ட பொருள் இது. 
“க்ரியா”  அகராதி பதிவு செய்த பொருள். இனி மறையுமா?
ஐயம் தான்.
 
 
மேலும் உம்மைத் தொகை என்பதால் “ தங்கம் வெள்ளி விலை” என்றால்
“ தங்கமும் வெள்ளியும் ” விலை  என்றுதான்  விரியுமோ?
 
வேற்றுமைத் தொகைகளில் உம்மைத் தொகையின் பயன்பாடு
என்ன என்பது எனக்குத் தெளிவாக இல்லை.
 
காட்டாக, “தங்கத்தின் விலை, வெள்ளியின் விலை” என்ற பொருளை
“தங்கம் வெள்ளி விலை” என்ற ”உம்மைத்”  தொகைத் தொடர் 
குறிக்குமா? 
 
 

2011/11/24 ka thamizhamallan <vtth...@gmail.com>

Siva Siva

unread,
Nov 24, 2011, 11:15:23 PM11/24/11
to santhav...@googlegroups.com
'தங்க வெள்ளி விலை' என்று வருமோ?


http://www.thevaaram.org/thirumurai_1/ani/082uraima2.htm
"....உரையாசிரியர் அவற்றை விளக்கிச் செல்லுதலோடு ஏற்ற இடங்களில் தேவார திருவாசக மேற்கோள்களைப் பெய்து அவற்றிற்கு வலி சேர்க்கின்றார்....'


2.85.1
வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

..... திங்களையும் கங்கையையும் முடிமேல் சூடி ....


2011/11/24 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Hari Krishnan

unread,
Nov 25, 2011, 12:07:04 AM11/25/11
to santhav...@googlegroups.com


2011/11/25 Siva Siva <naya...@gmail.com>

தங்க வெள்ளி விலை' என்று வருமோ?

தங்கம், வெள்ளி விலையுயர்வு (அல்லது)
தங்கமும் வெள்ளியும் விலையுயர்வு.

மற்றும் என்னும் ஆட்சி and க்கு சமமாககப் பயன்படுவது ஒருபுறம்.  ஆங்கிலத்தில் முடிப்பதுபோலவே கண்ணனும் ராமனும் கோவிந்தனும் மற்றும் கிருஷ்ணனும் என்று அவதிப்படுத்துவதைத்தான் தாங்கமுடியவில்லை.  

ஆசிரியர் நாகநந்தி அவர்கள் ‘மற்றும்’பற்றி தன்னுடைய வானொலி உரையில் குறிப்பிட்டுள்ளார்.  இந்தப் பக்கத்தில்:


மொழிப்பயிர்ச்சி என்னும் தலைப்பிலுள்ள சொற்பொழிவைக் கேட்கவும்.

Raja.Tyagarajan

unread,
Nov 25, 2011, 10:10:29 AM11/25/11
to santhav...@googlegroups.com

அன்புடையீர்,

இராஜ.தியாகராஜனின் வணக்கம்.

மற்றும் என்ற சொல் அகராதியில் வந்துவிட்டாலும், முனைவர் திரு தமிழமல்லன் கூறியபடி, புதுச்சேரியில் தமிழார்வலர்களும், தமிழறிஞர்களும், மற்றும் என்ற சொல்லை and என்பதற்கு மாற்றாகப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.  திரு பரந்தாமனாரின் கூற்றுப்படி, உம்மைத் தொகை என்பது;

1) சேர்ந்த இரு சொற்களும் தொடர்புள்ளச் சொல்லாக இருத்தல் வேண்டும்.  (எ-கா) மாடுகன்று. 

2) இரு சொற்களுக்கு இடையில் “உம்” சேரும் போதில், பொருள் சிதைவுறக் கூடாது.

இவ்வாறு வருகையில் அஃது உம்மைத் தொகை எனக்கொள்க என்கிறார்.

ஆயினும் அரசுத்துறைகள் பலவும் இப்படித்தான் பயன்படுத்துகின்றன.  எப்படியோ தமிழைப் பயன்படுத்தவாவது செய்கின்றனவே என்று உள்ளத்தைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

மேலும் சில எடுத்துக் காட்டுகள்

சேர, சோழ, பாண்டியர்;  இஃது சேரரும், சோழரும், பாண்டியரும் என்ற பொருளைத் தருகிறது. இத்தொடரை சேரர், சோழர் மற்றும் பாண்டியர் (chera, chola and pandiya) என்று ஆங்கில வழியில் பெயர்ப்பது சரியல்ல என்றே உரைக்கின்றனர்.

Directorate of Accounts and Treasuries, Puducherry என்பதை கணக்கு மற்றும் கருவூலக இயக்குநரகம், புதுச்சேரி எனப் பெயர்க்காது, கணக்கு, கருவூலக இயக்குநரகம், புதுச்சேரி என்று பெயர்ப்பதே சரியென்கின்றனர்.  மேலும் சில காட்டுகள்:  வேண்டுதல் வேண்டாமை,  அருளாண்மை,  தாய்தந்தை, நரைதிரை, காயிலைக்கிழங்கு, கபிலபரணர். 

வேற்றுமைத் தொகை என்பதை திரு பரந்தாமனார் வரிகளில்:

வேற்றுமைத் தொகை:

இரு சொற்களுக்கிடையே "ஐ", "ஆல்", "கு", "இன்", "அது", "கண்" முதலான உருபுகள் மறைந்திருக்குமானால் அது வேற்றுமைத் தொகையாம்: -

எடுத்துக்காட்டு:-

  1. இரண்டாம் வேற்றுமை:
    (எ-கா)தமிழ் கற்றான் - "ஐ" மறைந்துள்ளது.
    இரண்டாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
    (எ-கா): தயிர்க்குடம் - "ஐ" உருபும், உடைய எனும் சொல்லும் மறைந்துள்ளன.

    மூன்றாம் வேற்றுமை:
    (எ-கா)தலை வணங்கினான் - "ஆல்" மறைந்துள்ளது
    மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
    (எ-கா): பொற்குடம் - "ஆல்" உருபும் செய்த எனும் பயனும் மறைந்துள்ளது.
  2. நான்காம் வேற்றுமை:
    (எ-கா)நோய் மருந்து - "கு" மறைந்துள்ளது.
  3. ஐந்தாம் வேற்றுமை:
    (எ-கா)மலையருவி - "இல்" (அ) "இன்" மறைந்துள்ளது
    ஐந்தாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
    (எ-கா)புண்ணீர் - "இல்" எனும் உருபும் இருந்து என்னும் பயனும் மறைந்துள்ளன
  4. ஆறாம் வேற்றுமை:
    (எ-கா)தமிழர் பண்பு - "அது" மறைந்துள்ளது
    (எ-கா)அவன் வண்டி - "உடைய" மறைந்துள்ளது
  5. ஏழாம் வேற்றுமை:
    (எ-கா)மணி ஒலி - "கண்" மறைந்துள்ளது
    ஏழாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
    (எ-கா)வயிற்றுத்தீ - "கண்" உருபும், தோன்றிய என்னும் பயனும் மறைந்துள்ளன.

அன்பன்

இராஜ.தியாகராஜன்.

karthik emaya

unread,
Nov 25, 2011, 10:50:22 AM11/25/11
to santhav...@googlegroups.com

"மற்றும்" என்ற வார்த்தையின் பயன்பாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள விழைகிறேன் ....

உம்மைத் தொகை, மற்றும் இவை இரண்டும் எங்கெங்கு பயன்படுத்த பட வேண்டும் என அறிய விழைகிறேன்....

--

Raja.Tyagarajan

unread,
Nov 25, 2011, 11:16:49 AM11/25/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள கார்த்திக் அவர்களுக்கு
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
நீங்கள் கேட்ட முதல் வினாவிற்கான என்னுடைய கருத்து.  தமிழில் உம்மைத் தொகை இருக்கையில், அதனைக் கருதாமல், ஆங்கிலத்தில் இருக்கும் and என்கிற சொல்லைத் தமிழில் மற்றும் என்று பெயர்த்து அனைவரும்  பயன்படுத்துகின்றனர்.    நாம் தான், அருவி என்ற அழகுத் தமிழிருக்க, ஆங்கிலத்தில் காணும் காட்சியாக வந்த சொல்லான waterfalls என்பதை மீண்டும் தமிழாக்கம் செய்து நீர்வீழ்ச்சி என்று பயன்படுத்துபவர்கள் ஆயிற்றே.    ஆனால் மற்றும்  என்பதை ”மற்றுமோர் அழகு,” “மற்றுமிரு விழிகள்,”   என்பன போன்று பாடல்களில் பயன்படுத்துவது சரியென்பதாக எனக்குப் படுகிறது.  சந்தவசந்தம் பெரியவர்கள் கருத்தினை அறிய விழைகிறேன்.
 
உம்மைத் தொகை, வேற்றுமைத் தொகை பற்றி எனது மடலிலேயே நானறிந்தவைகளைச் சொல்லியிருக்கிறேன்.                  
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
 
----- Original Message -----

Siva Siva

unread,
Nov 25, 2011, 11:20:25 AM11/25/11
to santhav...@googlegroups.com
நீங்கள் சுட்டிய உரையைக் கேட்டேன். தெளிவு தரும் உரை.

2011/11/25 Hari Krishnan <hari.har...@gmail.com>

Siva Siva

unread,
Nov 25, 2011, 11:37:14 AM11/25/11
to santhav...@googlegroups.com
பாடல்களில் 'மற்று'/'மற்றும்' என்பது சில இடங்களில் அசையாகவும் வரும்.

மற்றும் என்பது 'மேலும்', 'மீண்டும்', 'வேறும்' என்ற பொருள்களில் பல இடங்களில் வரும்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview_en.php?thiru=12&Song_idField=1221&padhi=72&startLimit=135&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் -
மற்றும் இனையன வண்டமிழ்  மாலைகள் பாடிவைகி
வெற்றி மழவிடை வீரட்டர் பாதம்மிக நினைவில்
உற்றதொர் காதலின் அங்குநின் றேகிஒன் னார்புரங்கள்
செற்றவர் வாழுந் திருவதி கைப்பதி சென்றடைவார்.

மேலும், இவை போன்ற செழுமையான தமிழ்ப் பதிகங்களைப் பாடி, அப்பதியில் தங்கிப் பின், வெற்றியும் இளமையும் மிக்க ஆனேற்றினையுடைய திருவதிகை வீரட்டானத்தில் வீற்றிருக் கும் இறைவரின், திருவடிகளில் தம் நினைவில் மிகவும் பொருந்திய தோர் காதல் எழுந்ததால், அங்கு நின்றும் சென்று, பகைவரின் முப்புரங் களையும் எரித்த வீரட்டானத்து இறைவர் வீற்றிருந்தருளும் திருவதி கைப் பதியினைச் சென்று அடைபவராய்,

குறிப்புரையில்: 'மற்றும் இனையன வண்டமிழ் மாலைபாடி' என்பதால் மேலும் பல பதிகங்கள், இத்திருப்பதியின்கண் அருளப்பெற்றிருக் கலாம் எனத் தெரிகின்றது. எனினும் அவை கிடைத்தில.


http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=30920&padhi=092&startLimit=1&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

சம்பந்தர் தேவாரம் - 3.92.1
மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூம்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.

நல்ல நெஞ்சமே ! இறைவனின் திருநாமத்தைச் சிந்தனை செய்வாயாக. அத்திருநாமமானது மருந்தாக இருந்து நோயைத் தீர்க்கும். மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும். மறுமையில் நற்கதி தரும். மேலும் உயிர்கள் அடைதற்கேற்ற பயன்கள் யாவும் தரும். போக்கமுடியாத துன்பத்தைப் போக்கும். .......


2011/11/25 Raja.Tyagarajan <thia...@dataone.in>


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Pas Pasupathy

unread,
Nov 25, 2011, 11:24:10 AM11/25/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள தியாகராஜன்,
 
நன்றி.
 
முதல் பகுதியில் நீங்கள் சொன்ன மாடுகன்று, நரைதிரை போன்ற தொடர்களை ‘மரபுத் தொடர்கள்’ என்கிறது “க்ரியா” அகராதி.  நான் எழுதியபடி, இவற்றிற்கு மற்றும் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்கிறது.
அதனால் அவை பிரச்சனைகள் அல்ல.
 
இரண்டாம் பகுதி.  வேற்றுமைத் தொகை என்ன என்பதன்று என் கேள்வி.
 
 உம்மைத் தொகை “எழுவாய்”களுக்குத் தான் பயன்படுமா?
 
”தமிழ்ச்சங்கத்தில் தியாகு காசாளர் மற்றும் சங்கத் தலைவராகப் பணிபுரிகிறார்.” என்று எழுதப் படிக்கிறோம்.
 
இதை ‘மற்றும்’ இல்லாமல் எப்படி எழுதவேண்டும்?
 
 
”காசாளராகவும், சங்கத் தலைவராகவும் “ என்று நீளமாகத் தான் எழுதவேண்டுமா?
 
 ‘மற்றும்’ இல்லாமல் உம்மைத் தொகையைப் பயன்படுத்தி இதை எழுதமுடியுமா? 
 
”தங்கம் வெள்ளி விலை சொல்லு”  என்பது “உம்மைத் தொகை” என்றால்,
 
அ.கி.ப சொன்னதுபோல் , “தங்கமும், வெள்ளியும்” என்றுதான் விரியுமா?
அல்லது “தங்கத்தின், வெள்ளியின் “ என்று விரியுமா?
 
”தங்கமும் வெள்ளியும் விலை சொல்லு” என்று விரித்தால்  பொருள்
சரியாக இல்லையே?
 
 
 
=====
 
அ.கி.ப சொன்னது:
உம்மைத் தொகை என்பது;

1) சேர்ந்த இரு சொற்களும் தொடர்புள்ளச் சொல்லாக இருத்தல் வேண்டும்.  (எ-கா) மாடுகன்று. 

2) இரு சொற்களுக்கு இடையில் “உம்” சேரும் போதில், பொருள் சிதைவுறக் கூடாது.


2011/11/25 Raja.Tyagarajan <thia...@dataone.in>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Raja.Tyagarajan

unread,
Nov 25, 2011, 12:28:49 PM11/25/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள பேரா. பசுபதி அவர்களுக்கு,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
உங்கள் வினாவை சொன்ன போது, எழுவாய்ப் பயன்பாட்டைச் சற்றே மாற்றிய திரு அரங்க.நடராசனார், உம்மைத் தொகை என்பதாக எழுதினால்,  ”தியாகு, தமிழ்ச் சங்கத்தில், காசாளர், தலைவர் ஆகப் பணிபுரிகிறார்” என்றும்  உம்மைத்தொகையை விரித்து எழுதினால், “தியாகு தமிழ்ச் சங்கத்தில், காசாளரும், தலைவரும் ஆக பணிபுரிகிறார்”, என்றும் விளக்கினார்.   நீங்கள் சொன்ன, இரண்டாவதைப் பற்றி அவர் சொன்னது தமிழின் அழகே இங்கே தான் இருக்கின்றது என்றார்.  ஆங்கிலத்தில் சொல்லும் போதுதான் "Tell about Gold and Silver price “ என and பயன்படுத்தியாக வேண்டும்.   தமிழில், “தங்கம், வெள்ளி விலை சொல்லு” என்ற எளிமையான சொல்லாட்சியே அழகென்றார்.  மேலும் அதில் நீ என்ற எழுவாய் மறைந்திருப்பதாகவும் சொன்னார்.  இதனை எதற்காக உம்மைத் தொகை என்று எடுக்க வேண்டும் என்றும்,   ஒருவேளை அப்படி விரித்துப் பயன்படுத்த வேண்டுமெனில்,  “தங்கம்+அத்து+இன், வெள்ளி+யின் என்று அத்துச் சாரியையுடனும்,  வேற்றுமை உருபுகளுடனும்  சேர்ந்து,  ”தங்கத்தின், வெள்ளியின் விலை கூறு” என்று மற்றும் என்ற சொல்லின்றிப்  பயனாகும் என்றார்.   தேவையின்றி மற்றும் என்கிற சொல்லை நுழைப்பது ஆங்கிலத்தின் தாக்கமே என்றார்.  மற்றும் பயனான  பல தேவாரப் பதிகங்களைப் பற்றி சொன்ன போது, சிவசிவா சொன்னபடி, செய்யுள்களில் மற்று, மற்றும் என்கிற சீராட்சிகள்  வேறு வகையானவை, அசையாகவும், வேறு/கூடுதல்/ மறுபடி என்பன போன்ற பொருளில் பயனாகும் என்றார். 
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
  
 
 
----- Original Message -----
Sent: Friday, November 25, 2011 9:54 PM
Subject: Re: grammar doubts

Pas Pasupathy

unread,
Nov 25, 2011, 1:39:13 PM11/25/11
to santhav...@googlegroups.com
நன்றி.

2011/11/25 Raja.Tyagarajan <thia...@dataone.in>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Pas Pasupathy

unread,
Nov 25, 2011, 2:15:26 PM11/25/11
to santhav...@googlegroups.com
விளக்கத்தை மீண்டும் படித்தேன்.
 
விளக்கத்தில் ஆங்கிலக் குறியீடான காற்புள்ளி   செய்யும் வேலை
கண்டு வியந்தேன்! :-)) 
 
நிற்க.
 
அ.கி.பரந்தாமனார் சொல்கிறார்:
 
"சாதாரணமாகப் பெரும்பாலோர் தமிழ்மொழி இலக்கணத்திற்கு மாறாகக்
காற்புள்ளியை உம்மையுடன் சேர்த்துத் தவறாக எழுதி வருவதை எடுத்துக்
காட்டலாம். ‘அண்ணனும், தம்பியும்’ என்று காற்புள்ளியை எண்ணும்மையின் பின்
போட்டுத் தவறாக எழுதுவதைப் பார்த்திருக்கலாம்.  தமிழிலக்கணத்தில்
உம்மையின் வேலை இணைப்பது. இவ்வும்மை இருப்பதே அங்குப் போதும். இஃது எண்ணும்மை எனப்படும். ஆங்கிலத்தில் காற்புள்ளியின் வேலை பிரிப்பதாகும்.
தமிழ்மொழி இலக்கண முறைப்படி எண்ணும்மையால் இணைத்துவிட்டு ,
ஆங்கிலக் குறியீட்டு முறைப்படி காற்புள்ளியிட்டுப் பிரிப்பது வேடிக்கையாக
இருக்கிறது. நீண்ட வாக்கியத்தில் பொருள் தெளிவாக்குவதற்காகக் காற்புள்ளியை
எண்ணும்மைக்குப் பின் இடுவதை வேண்டுமானால் ஒருவாறு ஏற்கலாம். "
 
 
 
ஆங்கிலத்திலிருந்து வந்த காற்புள்ளி, ஆங்கில “and" (மற்றும்) , தமிழ் உம்மைத் தொகை...
 
 யோசியுங்கள்.

2011/11/25 Raja.Tyagarajan <thia...@dataone.in>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

ka thamizhamallan

unread,
Nov 26, 2011, 5:44:39 AM11/26/11
to santhav...@googlegroups.com, Devamaindhan, kambane kajagam
சந்தவேனில் ஆர்வலர்கள் நன்றாகக் கருத்துக்களை முன்னெடுத்து வைத்தல் மகிழ்ச்சிக்குரியது.

தங்கம் வெள்ளி விலை--தங்கமும் வெள்ளியும்  என்று வராது.
தங்கத்தின் விலையும் வெள்ளியின் விலையும் என்பதைத்தான் மற்றும் என்ற சொல்லைப்பயன்படுத்திச்சொல்கிறார்கள்.

தங்கம்,வெள்ளிஆகியவற்றின் விலை என்று விரித்துப்பொருள் காண்கிறார்கள் மக்கள்.

ஆங்கிலத்திலும் கோல்டுஅண்டுசில்வர் பிரைசு என்று வந்தால் சரியானதாகக் கொள்ள இயலுமா?

மற்றும் என்னுஞ் சொல் அண்டு என்று பொருளில் நண்பர் எடுத்துக்காட்டிய பாக்களிலும் வரவில்லை.
திருவள்ளுவர்

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
இந்தக்குறட்பாவில்  அண்டு என்னும் பொருளில்  மற்றும் என்னுஞ் சொல்லைப்பயன்படுத்தவில்லை என்பதைக் கவனிக்கலாம்.

பூரி மற்றும் கிழங்கு  என்னும் தொடரில் அண்டு என்னும் பொருள் வருகிறது. அதைப்போன்ற இடங்களில் பூரி கிழங்கு என்று எழுவது தமிழ் மரபாகும்.அங்கே உம் மறைந்து உம்மைத்தொகையாக வந்துள்ளது.

கலைஞர் மற்றும் வைகோ அறிக்கை விட்டார்கள் என்பதைக் கலைஞரும் வைகோவும் அறிக்கை விட்டார்கள் என்று எழுதவேண்டிய மரபு தொ.கா.வினரால் கைவிடப்பட்டது.அறிஞர்கள் அதைப்பின்பற்றல் சரியன்று.அறிஞர்கள் பயன்படுத்தும் நல்வழக்ாற்றைத் தான் ஊடகங்கள் பயன்படுத்த வேண்டும். சரியா?

துாவலை ஆங்கிலருடையது என்று கைவிடவில்லை. அதைப்பயன்படுத்துவது போல் காற்புள்ளியைப் பயன்படுத்துகிறோம்.அது அவர்களுக்கு மட்டும் உரிமையுடையதன்று.


முனைவர் க.தமிழமல்லன்

௨௬ நவம்பர், ௨௦௧௧ ௧௨:௪௫ முற்பகல் அன்று, Pas Pasupathy <pas.pa...@gmail.com> எழுதியது:

Pas Pasupathy

unread,
Nov 26, 2011, 2:01:21 PM11/26/11
to santhav...@googlegroups.com
விளக்கத்திற்கு நன்றி.
 
>>அறிஞர்கள் பயன்படுத்தும் நல்வழக்காற்றைத் தான் ஊடகங்கள் பயன்படுத்த வேண்டும். சரியா?>>
 
சரியே. ஆனால், அறிஞர்கள் சொல்வதை யாவரும் படிக்கும் இலக்கண நூல்கள் தெளிவாக விளக்கியிருந்தால் ஊடகங்களும் இத்தவறைச் செய்திருக்காது  என்பது என் கருத்து. ( எனக்குத் தெரிந்து புலவர் நன்னன் ஒரு நூலில் இதைச் (மற்றும் பற்றி) சொல்லி இருக்கிறார் ; மற்றபடி (நான் அறிந்த) எளிதில் கிடைக்கும் இலக்கண நூல்கள் விளக்குவதில்லை. இதனால் பலருக்கும் இது தெரியாது. )
 
‘தங்கம், வெள்ளி விலை  சொல்லு’ என்பது எவ்வகைத் தொடர்?
உம்மைத் தொகையின் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையா?
 
“தங்கம் மற்றும் வெள்ளி விலை சொல்லு” என்ற வாக்கியத்துடன்
ஒப்பிட்டால், “மற்றும்” என்பதற்குப் பதிலாக காற்புள்ளி வந்தது போல
உள்ளது !  ஆனால், “மற்றும்” என்பது அண்ட் என்பதற்குப் பதிலாகப்
பயன்படுத்தும் சொல்: காற்புள்ளி பிரிக்கும் சொல்! வேடிக்கை தான்!
 
இலக்கண நூல்களில் இருப்பவை தற்காலத்திற்கேற்ற விளக்கங்கள் அல்ல.
 
.
நீங்கள் சொன்ன விளக்கங்களைப் போன்றவை பாட நூல்களில்
இருந்தால் ( ”மற்றும்”  பற்றிய விளக்கத்துடன் ) இத்தவறு வராது என்று எண்ணுகிறேன்.
 
“க்ரியா” அகராதி 50- ஆண்டு உரைநடையில் வந்த பெரும்பான்மையான
இப்பயன்பாட்டைப் பதிவு செய்துள்ளது என்றால், 50-ஆண்டுகளில் வந்த
 பள்ளி இலக்கண நூல்கள் இவற்றைப் பற்றித் தெளிவாக
எழுதவில்லை என்றுதானே பொருள்? உம்மைத்தொகை பற்றி எழுதும்போது
இதைச் சொல்வது கடினமா? “ தங்கம் வெள்ளி “ என்றால், தங்கமும் வெள்ளியும்
என்று பொருள் என்று சொல்பவர்கள், வேறு விதமாகவும் வாக்கியங்களில்
சொற்றொடர் விரியும் என்று சொல்ல வேண்டாமா?
 
இப்படியெல்லாம் விளக்கும் இலக்கணநூல் இருந்தால், சொல்லுங்கள்.
வாங்கிப் படிப்பேன்.
 
2011/11/26 ka thamizhamallan <vtth...@gmail.com>

Siva Siva

unread,
Nov 26, 2011, 10:39:00 PM11/26/11
to santhav...@googlegroups.com
இன்று கண்ணிற்பட்ட ஒரு பாடல்:

----
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=10810&padhi=081&startLimit=10&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC
சம்பந்தர் தேவாரம் - 1.81.10
"தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்....."

உணவளிப்போர் தங்கள் கைகளிலே தர, அதனை வாங்கி உண்ணும் சமணர்களும் தாழ்ந்த சீவரம் என்னும் கல்லாடையை உடுத்திய புத்தர்களும் ஆகியவர்களின் தீயொழுக்கத்தை மனத்துக் கொள்ளாமல், .... பேணித்தொழுவீர்களாக....


குறிப்புரையில்:
"புத்தர் சமணர்களுடைய தீயொழுக்கத்தைச் சிந்தியாமல் காழிநகரைத் தொழுமின்கள் என்கின்றது."
----

இதை நோக்குங்கால், 'தங்கம் வெள்ளியின் விலை' என்பதும் 'தங்கம் வெள்ளி விலை' என்பதும் சரிபோல் தோன்றுகிறது.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2011/11/26 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Suganthi

unread,
Nov 27, 2011, 6:58:14 PM11/27/11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Open source software development and support for Tamil.
If I translate the above sentence


தமிழுக்கான இலவச திறவூற்று மென் பொருள்  உருவாக்கமும் பயன் பாடும் என்று வருமா?
I feel that  it is not a complete sentence.

With regards
SuganthiVenkatesh

Taking Tamil to the Next Generation



Sent from my iPhone

Pas Pasupathy

unread,
Nov 28, 2011, 5:28:34 PM11/28/11
to santhav...@googlegroups.com
"Open source software development and support for Tamil"
 
The above is not a sentence.
 
So the translation can not be a sentence.
 

 
2011/11/27 Suganthi <vkn...@gmail.com>

Suganthi

unread,
Nov 28, 2011, 5:46:50 PM11/28/11
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி

I am trying to make a tag line
Thanks
With regards
SuganthiVenkatesh

Taking Tamil to the Next Generation



Sent from my iPhone

Siva Siva

unread,
Dec 3, 2011, 8:50:34 AM12/3/11
to santhav...@googlegroups.com
கவிஞன் / புலவன்
-------------------------
1) கவிஞன், புலவன் - இச்சொற்களிடைப் பொருள்வேறுபாடு உண்டா?
2.1) வேறுபாடு உண்டு என்னில்: ஒருவனே கவிஞனும் புலவனும் ஆக இயலுமா?
2.2) வேறுபாடு இல்லை என்னில், கவிஞன் என்று அழைக்கப்படுவோரைப் புலவன் என்று அழைக்கலாம் அன்றோ?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/11/24 Siva Siva <naya...@gmail.com>

Hari Krishnan

unread,
Dec 3, 2011, 11:13:12 AM12/3/11
to santhav...@googlegroups.com


2011/12/3 Siva Siva <naya...@gmail.com>

கவிஞன் / புலவன்
-------------------------
1) கவிஞன், புலவன் - இச்சொற்களிடைப் பொருள்வேறுபாடு உண்டா?
2.1) வேறுபாடு உண்டு என்னில்: ஒருவனே கவிஞனும் புலவனும் ஆக இயலுமா?
2.2) வேறுபாடு இல்லை என்னில், கவிஞன் என்று அழைக்கப்படுவோரைப் புலவன் என்று அழைக்கலாம் அன்றோ?

It is like saying all Lawyers are advocates; but an advocate need not be a lawyer. :)
 
For example, Gandhi was an advocate of Satyagraha and a Lawyer by profession.
 
ஏதானும் புரியற மாதிரி எழுதியிருக்கேனா?

Dr Subramanian

unread,
Dec 3, 2011, 8:35:16 PM12/3/11
to santhav...@googlegroups.com
அது சரிங்கோ ; இதுல யாரு அட்வொகேட் -புலவனா கவிஞனா?
வவேசு

2011/12/3 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Land: 044-26208896
Mobile: 9381044470

Siva Siva

unread,
Dec 3, 2011, 8:54:39 PM12/3/11
to santhav...@googlegroups.com


2011/12/3 Hari Krishnan <hari.har...@gmail.com>

You seem to have gone to question 2.1 choosing to skip question 1.
So, implicitly, you are stating that there is a difference between the words கவிஞன் & புலவன். I am curious to know the difference.


 


Suganthi

unread,
Dec 4, 2011, 3:02:17 PM12/4/11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
புலவன்: அறிஞன்,ஞானி
கவிஞன், தேவன்,புதன் கிரகம்
என்றும்
கவிஞன்: செய்யுள் ஏற்றுபவன், சுக்கிரன் என்றும் லிப்கோ அகராதியில் உள்ளது
அப்படியென்றால் ஞானத்தோடு செய்யுள் எழுதுபவர் புலவர் என்று கொள்ளலாமா?
With regards
SuganthiVenkatesh

Taking Tamil to the Next Generation



Sent from my iPhone

Suganthi

unread,
Dec 4, 2011, 3:06:59 PM12/4/11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அறிவுத் திறனோடு  ஆராய்ந்து கவி எழுதும்  புலவனை அட்வோகேட் என்று சொல்லலாம் என்றால்
கவிதை எழுதும் அட்வோகேட்டை எப்படி அழைப்பது?

Taking Tamil to the Next Generation



Sent from my iPhone

Chandar Subramanian

unread,
Dec 4, 2011, 7:14:15 PM12/4/11
to santhav...@googlegroups.com
கவிதை இயற்றுபவர் கவிஞர். மொழியில் புலமை பெற்றவர் புலவர். (பண்டிதர் எனும் சொல் புலவருக்குப் பொருந்துமோ?) கவிச்சிந்தனைக்கு புலமை ஒரு பிணையாக இருக்க இயலாது என்பதே என் எண்ணம். புலமை பெற்றவர் அனைவரும் கவிபுனையும் ஆற்றல் கொண்டவராக இருப்பார்கள் என்று கூறவியலாது. புலமை பெற்றவர் கவிஞராக இருந்தால் சிறப்பு.
 


 
2011/12/3 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Girija Varadharajan

unread,
Dec 4, 2011, 7:17:30 PM12/4/11
to santhav...@googlegroups.com

புலமை உடையவன் புலவன் எனக்கொள்வது சரியாகுமா?  அப்படியானால் புலமை என்பது பல திறமைகளை உள்ளடக்கியது என எண்ணுகிறேன். ( எடுத்துக் காட்டு : அவருக்குச் சங்கீதத்தில் புலமை ஜாஸ்தி)  .

கவிஞன் என்பது பாவெழுதும் புலமையை மட்டுமே குறிக்கிறது என எண்ணுகிறேன். 


வரதராசன்.அ.கி


2011/12/5 Suganthi <vkn...@gmail.com>

Raja.Tyagarajan

unread,
Dec 5, 2011, 2:13:06 AM12/5/11
to santhav...@googlegroups.com
அன்புடையீர்,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
என்னுடையகருத்தும்  திரு சந்தர் சுப்ரமணியன் அவர்களின் கருத்தினை ஒட்டியே.
 
இற்றைக்குப் புதுவையில், பலரும் பாக்களை இயற்றிப் பாவலர் என்னும் பெயர் பெற்றிருப்பினும், புலவர் என்ற அடைமொழியிட்டு, பலப்பல இலக்கிய நிகழ்வுகளிலும் பாவரங்குகளிலும் பட்டியரங்களிலும் அழைக்கப்படுபவர்கள் புலவர் பட்டம்/பட்டயம் பெற்ற தமிழாசிரியர்களே!  (இஃது இந்த நூற்றாண்டின் நிலைப்பாடு!)
 
புலவர் என்மர் மொழியில்/கலையில்/இசையில்/இயலில்/ஒரு துறையில்/,  புலமை பெற்ற மொழியார்வலர்கள்/ கலையார்வலர்கள்/ இசையார்வலர்கள்/ இயலார்வலர்கள்/ துறையார்வலர்கள் இப்படி!!   
 
நிச்சயம் மொழியார்வலர்கள்/ புலவர்கள் 100 விழுக்காடு  மரபியற் பாக்கள் வனைய வல்லமையுள்ளவர்கள்.  ஆனால் எது பாடல் (கவிதை) என்பதை  உறுதி செய்வதில்தான்  சுவைஞர்களுக்கான கடமை வருகிறதென எண்ணுகிறேன்.  ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்னர், அன்றைக்கு, திரு ஹரியண்ணா சொன்ன வரிகள் என்னுள்ளத்தில் நிழலாடுகின்றன. ஒருவருக்கு வெண்பா எழுதுவது எப்படி என்று விளக்கி வெண்பா எழுத வைத்துவிடலாம்; ஆனால் கவிதை எழுத வைப்பது????????
 
ஆகவே மொழியார்வலர்களான புலவர்கள் பாவலர்களாகவும் இருக்கலாம்: இல்லாமலும் போகலாம்; அதுபோல இன்றைய காலகட்டத்தில் பாவலர்கள் புலவர்களாய் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்!
எது கவிதை?
 
குதப்பிக் குழப்புதல் கோதுகவி யென்றால்
புதுநிறம் போர்த்தல் புதுமையென் றாமோ?
சிதைத்து மடக்கல் செறுகவிதை என்றால்
செதுக்கிச் சிதைப்பதும் சிற்பமென் றாகுமோ!
 
யாப்பு மணியு மிருப்பதே பாவென்றால்
பாப்பாக்கை யேந்தும் பதுமையும் மெய்யுருவாம்!
கோப்ப ழகாய்ச்சொல் குவிப்பதேப் பாவென்றால்
தீப்பொறி வண்ணஞ் செறிந்ததும் ஓவியமாம்!
 
விக்கி வெடித்திடும் வித்தார வித்தைகள்;
சிக்கி பிடித்திடுஞ் சித்திரப்பூப் பின்னல்கள்;
முக்கி முயன்றிடும் மோன கரகாட்டம்;
சொக்கி மயக்கிடும் சொல்லின் சிலம்பாட்டம்!
 
துஞ்சுதலைக்  கண்கள் தொலைத்துக் குமுறுகின்ற
நெஞ்சவெளி தன்னில் நினைவேப் பயிராக
மஞ்சுதமிழ்  சொல்லாங்கு மங்கையெனச் சூழ்ந்தாடும்
வெஞ்சினந் தான்கவிதை வேட்டு!
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்.

Siva Siva

unread,
Dec 5, 2011, 9:03:00 AM12/5/11
to santhav...@googlegroups.com
எல்லாம் அறிந்திருத்தல் அரிதே!
இலக்கணம், இலக்கிய நூல்கள் இவற்றை அறிந்திருப்போர் பாடலோ சிறுகதையோ நெடுங்கதையோ எழுதாதிருக்கலாம். அதேபோல் நெடுங்கதை எழுதுபவர் பாடல் புனையாதிருக்கலாம்.
ஆகவே, அடிப்படை மொழிப்பயிற்சியும் ஏதாவது சில துறைகளில் தேர்ச்சியும் பெற்றிருப்பவரைப் புலவர் எனலாம் என்று தோன்றுகிறது.
அப்படி நோக்கினால், பாவலர்களும் புலவர்கள்தாமே!

இக்காலத்தில் 'கவிஞர்' பலரும் தமக்குப் 'புலவர்' என்ற அடைமொழியை விரும்புவதில்லை என்று எனக்குப் படுகிறது. ஒருவேளை BA, MA, போன்ற பட்டங்களைப்போல், புலவர் என்பது கீழ்நிலை என்றும், 'கவிஞர்' என்பது அதனினும் மேல்நிலை என்று கருதுகிறார்களோ?
ஒருவேளை தமக்குப் பாடல் எழுதவந்தாலும் மொழிப்பயிற்சி இல்லை என்று கருதிப், 'புலவர்' என்று அழைக்கப்படும் தகுதி தமக்கு இல்லையாதலால், 'கவிஞர்' என்று அழைத்தலே பொருந்தும் என்று எண்ணுகிறார்களோ?

********

இன்னுமோர் ஐயம்! கவிஞர் = பாவலர்?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்





2011/12/4 Girija Varadharajan <girijavar...@gmail.com>

Pas Pasupathy

unread,
Dec 5, 2011, 5:02:55 PM12/5/11
to santhav...@googlegroups.com
'கவி' தமிழ்ச்சொல்லா? வடசொல்லா? என்பதைப் பற்றித் 'தினமணி'யில் ஒரு விவாதம் நடந்தது அண்மையில் ;
பல கட்டுரைகள் வந்துள்ளன. தேடினால் கிடைக்கும்.
பரிபாடல் காலத்திருந்தே 'கவி' தமிழில் உள்ளது. அதன் பிறகு கவிஞர்
போன்ற சொற்களும் இலக்கியத்தில் வரத் தொடங்கின.
 
பொதுவாகச் சொன்னால், முற்காலப் பா = பிற்காலக் கவி 
 

 
2011/12/5 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Siva Siva

unread,
Dec 6, 2011, 3:56:28 PM12/6/11
to santhav...@googlegroups.com
இதைச் சொல்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

******

http://www.dinamani.com/edition/story.aspx?artid=328636&SectionID=179&MainSectionID=179&SectionName=Tamil%20Mani&SEO=

தமிழ்மணி
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்!

First Published : 07 Nov 2010 12:00:00 AM IST

"பா' என்பது தமிழ்ச்சொல். தொல்காப்பியர், செய்யுளியலில், "பா' என்றே குறிப்பிடுவார். "கவி' என்ற சொல்லை எங்கும் எடுத்தாளவில்லை. தமிழில் செய்யுளின் வேறு பெயர்களாக யாப்பு, தூக்கு, தொடர்பு, பனுவல் போன்ற தமிழ்ச் சொற்களையே தனித்தமிழ்ப் புலவர்கள் கையாள்வர். நால்வகைப் பாக்களும் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா,  என்றே வழங்கப்படும். இவற்றுடன் "கவி' என்ற சொல்லை இணைப்பதே இல்லை. தொல்காப்பியர் பாவின் வகைகளைக் கூறுமிடத்து,
""ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
நாலியற் றென்ப பாவகை விரியே!''   (தொல்.செய்யு-101)
என்றே குறிப்பிட்டுள்ளார்.

நம் செந்தமிழ் மொழியுடன் வந்து கலந்து, பெருவாழ்வு பெற்றுவிட்ட வட சொற்களில் ஒன்றுதான் கவிதை என்ற சொல். தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாக நல்லந்துவனார் என்னும் புலவர்,
""மாசில் பனுவல் புலவர் புகழ்புல
நாவிற் புனைந்த நன்கவிதை''   (பரிபாடல்-6:7,8)
என்று "கவிதை' என்னும் சொல்லைச் சேர்த்தார். கவிதை - கவியது தன்மை. அதாவது, "ஈண்டுச் செய்யுள் மேல் நின்றது' என்று இதற்குப் பரிமேலழகர் உரை விளக்கம் தந்துள்ளார்.

பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கியங்களுள் கவி, கவிதை, கவிஞர் என்ற சொற்கள் இடம்பெற்றுப் பொலியத் தொடங்கின. இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதையில் "தலைக்கோல்' சிறப்பைக் கூறுமிடத்தில், ""தேர்வலஞ் செய்து கவி கை கொடுப்ப'' என்றார். இங்கு "கவி' என்றது புலவரை.

கம்பர், தமிழ்ப் புலவர்களைக் குறிப்பிடும்போது, ""சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர்'' (பாலகாண்டம்-நகர்ப்படலம்:1) என்றார்.

இக்காலத்தில் புலவர் என்று சொல்லிக்கொள்வதைக் காட்டிலும் "கவிஞர்' என்று சொல்லிக் கொள்வதில் மனநிறைவு காணும்நிலை பெரு வழக்காகிவிட்டது. "பாட்டரங்கம்' என்று கூறுவதைவிட "கவியரங்கம்' என்று கூறுவதே நாகரிகம் என்று கருதும் போக்கு வளர்ந்துவிட்டது.

தமிழில் உள்ள நால்வகைப் பாக்களைப்போல் வடமொழியிலும் நால்வகைப் பாக்கள் உண்டு. அவற்றை "நாற்கவி' என்பர். ஆசுகவி, மதுரகவி, வித்தாரக்கவி, சித்திரக்கவி என்ற நால்வகைக் கவியிலும் வல்லவராய்த் திகழ்ந்த காரணத்தினால்தான் அகப்பொருள் விளக்கம் எழுதிய கவிஞர், "நாற்கவிராசநம்பி' என்று அழைக்கப்பட்டார். எனவே, "கவி' என்பது வடசொல்; "பா' என்பது தமிழ்ச்சொல்.
******

2011/12/5 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Pas Pasupathy

unread,
Dec 6, 2011, 4:08:51 PM12/6/11
to santhav...@googlegroups.com
ஆம். இதை மறுத்தும், இதை வலியுறுத்தியும் மேலும் சில கட்டுரைகள் வந்தன.
 
 
  

2011/12/6 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

unread,
Dec 6, 2011, 4:25:10 PM12/6/11
to santhav...@googlegroups.com
தேடியதில் கண்ட ஒரு தேவாரம்!
கவிதை புனைபவர்களைப் புலவர் என்று அதில் சம்பந்தர் சொல்கிறார்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=11020&padhi=102&startLimit=1&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

சம்பந்தர் தேவாரம் - 1.102.1
உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங்
கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி
அரவாரரையா வவுணர்புரமூன் றெரிசெய்த
சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே.

ஞானம் நிறைந்த கலை உணர்வோடு, கவிதைகள் பாடும் புலவர்களுக்கு ஒரு நாளும் கரவாத வள்ளன்மை மிக்க கைகளை உடைய கற்றவர்கள் வாழும் ஒலிமிக்க காழி மாநகரில் விளங்கும் பாம்பை இடையில் அணிந்துள்ள பரமனே! அசுரர்களின் முப்புரங்களையும் எரித்த அம்பை ஏந்தியவனே! என்று போற்றுபவர், தத்துவ ஞானத்தில் தலையானவராவர்.


2011/12/6 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Pas Pasupathy

unread,
Dec 6, 2011, 4:34:21 PM12/6/11
to santhav...@googlegroups.com
தமிழ்-அகராதியில்:
 
 

மேற்பாவல். (W.) 3. [M. pāval.] Balsam-pear. See பாகல்².

பாவலர் pā-valar

, n. < பா&sup4; +. Poets, bards; கவிஞர். (திவா.)

பாவலா pāvalā

, n. cf. U. āwāra. Loitering; சுற்றித்திரிகை. Loc.

 
கவிதை kavitai

, n. < kavi-tā. Stanza, poem; பாடல். பாடேன் றொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல்கொண்டு (திவ். பெரியதி. 7, 2, 2).



2011/12/6 Siva Siva <naya...@gmail.com>

--

நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Ganapathy SankaraSubramanian

unread,
Dec 29, 2011, 12:06:23 AM12/29/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள பசுபதி அய்யா அவர்களே,
ஒற்று இலக்கணமும்,சொற்புணர்ச்சி விதிகளும் கற்றுக் கொள்ள் ஆசை.தகுந்த
புத்தகத்திற்கு வழி காட்டவும்

On 12/7/11, Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
> தமிழ்-அகராதியில்:
>
>
> பாவலர் pā-valar

> <http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.8:1:5802.tamillex>:
> (page
> 2634<http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.8.tamillex.2339840>)
>
>
> மேற்பாவல். (W.) 3. [M. *pāval*.] Balsam-pear. See பாகல்².
>
> பாவலர் pā-valar
>
> , *n*. < பா&sup4; +. Poets, bards; *கவிஞர்*. (திவா.)
> பாவலா pāvalā
>
> , *n*. cf. U. *āwāra*. Loitering; சுற்றித்திரிகை. *Loc*.
>
>
> கவிதை kavitai
>
> , *n*. < *kavi-tā*. Stanza, poem; பாடல். பாடேன் றொண்டர்தம்மைக்

Pas Pasupathy

unread,
Dec 29, 2011, 7:37:52 AM12/29/11
to santhav...@googlegroups.com
பல நூல்கள் உள்ளன; ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் சிறப்பு.
 
"நல்ல தமிழ் எழுத வேண்டுமா?" அ.கி.பரந்தாமனார் , பாரி நிலையம்.
 
இதை முதலில் வாங்கிப் படிக்கலாம்.
 
 


 
2011/12/29 Ganapathy SankaraSubramanian <ganapathysank...@gmail.com>

Siva Siva

unread,
Jan 7, 2012, 8:22:01 PM1/7/12
to santhav...@googlegroups.com
Telephone: தொலைபேசி? தொலைப்பேசி?

எது சரி?

Hari Krishnan

unread,
Jan 7, 2012, 9:42:58 PM1/7/12
to santhav...@googlegroups.com


2012/1/8 Siva Siva <naya...@gmail.com>

Telephone: தொலைபேசி? தொலைப்பேசி?

எது சரி?

எந்த விடையைச் சொன்னாலும் எதிர்க்கேள்வி எழுப்புவதற்காகவென்றே எழுந்துள்ள ஐயம்.  தொலைபேசி என்பதே சரி.

எதிர்க்கேள்வி என்ன வரும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்: தொலைக்காட்சியா, தொலைகாட்சியா?  தொலைக்காட்சிதான்.  தேவாரத்தில் தேடிப் பார்த்தால் சான்று கிடைக்கக்கூடும். :))

Siva Siva

unread,
Jan 7, 2012, 9:46:03 PM1/7/12
to santhav...@googlegroups.com
"அதிஜாக்கிரதை ஹரியண்ணா" என்ற பட்டம் உமக்கே! :)

2012/1/7 Hari Krishnan <hari.har...@gmail.com>

Pas Pasupathy

unread,
Jan 8, 2012, 7:21:32 AM1/8/12
to santhav...@googlegroups.com
'தொலைவிலிருந்து பேசினான்’ ..5-ஆம் வேற்றுமை . வலி மிகாது.

அந்த மாதிரி, ‘தொலைபேசி’ ...5-ஆம் வேற்றுமைத் தொகை.
வலி மிகாது.



2012/1/7 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

unread,
Jan 9, 2012, 10:53:52 AM1/9/12
to santhav...@googlegroups.com
Telephone: பேச உதவும் கருவியைப் 'பேசி' என்று கொண்டால், தூரத்தில் இருப்பவரோடு பேச உதவுவதால், 'தொலைப்பேசி' என்று 'ப்' மிகாதோ? (தூரப்பார்வை, கிட்டப்பார்வை, என்பன போல்). 'தொலைபேசி'தான் சரி என்றுகொள்ளவேண்டும் எனில், அதை இடுகுறிப்பெயராகக் கருதி, ஆராயமல் விட்டுவிடலாமோ?

Television: நாம் காண்பது காட்சி. காட்டுவது காட்டி அன்றோ? (வழிகாட்டி, கைகாட்டி, என்பனபோல்). ஒருவேளை, 'காட்சி' என்பது காட்சியைக் காட்டுகிற கருவிக்கும் ஆகிவந்ததுபோல். ஆகவே, தொலைக்காட்சி?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2012/1/8 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Hari Krishnan

unread,
Jan 9, 2012, 10:22:53 PM1/9/12
to santhav...@googlegroups.com


2012/1/9 Siva Siva <naya...@gmail.com>

Telephone: பேச உதவும் கருவியைப் 'பேசி' என்று கொண்டால், தூரத்தில் இருப்பவரோடு பேச உதவுவதால், 'தொலைப்பேசி' என்று 'ப்' மிகாதோ? (தூரப்பார்வை, கிட்டப்பார்வை, என்பன போல்). 'தொலைபேசி'தான் சரி என்றுகொள்ளவேண்டும் எனில், அதை இடுகுறிப்பெயராகக் கருதி, ஆராயமல் விட்டுவிடலாமோ?

ஒன்று குறிப்பிட விரும்புகிறேன்.  தொலைபேசி என்பது, தொலைவில் உள்ள (குறிப்பிட்ட நபரோடு) உரையாடப் பயன்படுத்தப்படும் கருவி.  தொலைவிலுள்ளவருடன் பேசவும், தொலைவிலுள்ளவருடைய பேச்சைக் கேட்கவும் ஆனது.   The communication is two way. 

Television: நாம் காண்பது காட்சி. காட்டுவது காட்டி அன்றோ? (வழிகாட்டி, கைகாட்டி, என்பனபோல்). ஒருவேளை, 'காட்சி' என்பது காட்சியைக் காட்டுகிற கருவிக்கும் ஆகிவந்ததுபோல். ஆகவே, தொலைக்காட்சி?

தொலைக்காட்சி என்பது, தொலைவில் எங்கோ ஓர் தொலைபரப்பு நிலையத்தில் பரப்பப்படும் காட்சிகளைப் பெற மட்டுமே பயன்படுத்தப்படும் கருவி.  தொலைபேசியைப் போல, நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் உரையாட (அல்லது அந்த நபர் இல்லாத சமயத்தில் அவருக்காக ஒரு செய்தியை விட்டுவைக்கப்) பயன்படுகிறதோ?

ஏதோ ஒரு குறிப்பிட்ட நிலையத்திலிருந்து பெறப்படும் காட்சி.  அந்த நிலையத்திலும் கூட, எதை ஔிபரப்புகிறார்களோ அதைமட்டும்தான் காண உதவும்; அந்த நிலையத்தில் உள்ள மற்றவர்களின் நடமாட்டத்தைக் காண உதவுமோ?  அல்லது இங்கே நான் இயங்கிக் கொண்டிருப்பதை அங்கே நிலையத்தில் உள்ளவர்களால் காண முடியுமோ?  The communication here is one way.

தொலைபேசி என்பது தொலைவிலுள்ளவருடன் கலந்துரையாடப் பயன்படும் கருவி; தொலைக்காட்சியோ, தொலைவிலுள்ளவர்களுடன் கலந்துரையாட அல்லாமல், தொலைவிலிருந்து பரப்பப்படுவதைப் பார்ப்பதற்கு உதவும் கருவி.

எங்க ப்பலாம் எங்க க்கலாம்? 

RAJAGOPALAN APPAN

unread,
Jan 10, 2012, 10:00:49 AM1/10/12
to santhav...@googlegroups.com

Telephone என்பதும், Television என்பதும் ஆங்கிலச் சொற்கள். அந்தக் கருவிகளுக்கு, முறையே தொலைபேசி என்றும், தொலைக்காட்சி என்றும் ஓரளவிற்கு ஓசை பொருந்திவருவது போல், தமிழில் நாமாகப் பெயரிட்டிருக்கிறோம். அவை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட சொற்களல்ல. இரண்டுமே முழுமையான தனிச் சொற்கள். தொலைவு+பேசி; தொலைவு+காட்சி என்று இரண்டு சொற்களின் புணர்ச்சியாகக் கருதக் கூடாது என்று தோன்றுகிறது.

அ.ரா
2012/1/10 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Jan 11, 2012, 12:25:24 AM1/11/12
to santhav...@googlegroups.com


2012/1/10 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

தொலைவு+பேசி; தொலைவு+காட்சி என்று இரண்டு சொற்களின் புணர்ச்சியாகக் கருதக் கூடாது என்று தோன்றுகிறது.

இரண்டு சொற்களின் புணர்ச்சி என்று எப்போது சொன்னேன்?

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 11, 2012, 2:49:15 AM1/11/12
to santhav...@googlegroups.com
பேசித்தொலை என்றும் தொல்லைக்காட்சி என்றும் அழைத்தால் இ ப்போதைய  நடைமுறைக்குப் பொருந்தும்! :-))
அனந்த்  
12 நாட்களுக்குப் பின் கணினித் தொடர்பு கிட்டியது.  

2012/1/10 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

RAJAGOPALAN APPAN

unread,
Jan 11, 2012, 5:31:48 AM1/11/12
to santhav...@googlegroups.com
திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு,
 
ஐயா,
 
//இரண்டு சொற்களின் புணர்ச்சி என்று எப்போது சொன்னேன்?//

தாங்கள் அப்படிக்கூறியதாக நானும் சொல்லவில்லை. தங்கள் கருத்தை மறுக்கும் நோக்கம் எனக்கு இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. அந்தச் சொற்களைப்பற்றிய கருத்தோட்டங்களுக்கு இடையில், அவை பற்றிய என்னுடைய கருத்தையும் பதிவு செய்தேன். அவ்வளவே.

அ.ரா

2012/1/11 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
Jan 21, 2012, 1:10:39 PM1/21/12
to santhav...@googlegroups.com
அ.கி.பரந்தாமனார் - "நல்ல தமிழ் எழுத வேண்டுமா"

இந்நூலை இங்குக் காணலாம்.
http://218.248.16.19/library/lA434/html/lA434poo.htm

வலி மிகும், வலி மிகா இடங்கள் பற்றிய விளக்கங்களை 207-248 பக்கங்களில் காணலாம்.

Siva Siva

unread,
Jan 30, 2012, 6:52:42 PM1/30/12
to santhav...@googlegroups.com
ஒருமை பன்மை ஐயம்:

பல் - பற்கள்;
சொல் - சொற்கள்;
வில் - விற்கள்;

இல் (வீடு) - இற்கள்? இல்கள்?

பாடல்களில் இருவிதமாகவும் காண்கிறேன்.

http://www.kaumaram.com/thiru_uni/tpun0417.html
தானதன தானதத்த தானதன தானதத்த
     தானதன தானதத்த ...... தனதான

கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று
     கேவலம தானஅற்ப ...... நினைவாலே
கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த
     கேடுறுக வேநினைக்கும் ...... வினையாலே

வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில்
     மேதினியெ லாமுழற்று ...... மடியேனை
வீடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து
     வீறுமயில் மீதிலுற்று ...... வருவாயே

நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து
     நீடுபுகழ் தேவரிற்கள் ...... குடியேற
நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த
     நீலநிற மால்தனக்கு ...... மருகோனே

சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள்
     சோபைவட கோபுரத்தி ...... லுறைவோனே
சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி
     தோளின்மிசை வாளெடுத்த ...... பெருமாளே.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=70090&padhi=009&startLimit=1&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC
மலைக்கும்மக ளஞ்ச மதகரியை
    உரித்தீர்எரித் தீர்வரு முப்புரங்கள்
சிலைக்குங்கொலைச் சேவுகந் தேறொழியீர்
    சில்பலிக்கில்கள் தோறுஞ் செலவொழியீர்
கலைக்கொம்புங் கரிமருப் பும்மிடறிக்
    கலவம்மயிற் பீலியுங் காரகிலும்
அலைக்கும்புனல் சேரரி சிற்றென்கரை
    அழகார்திருப் புத்தூர் அழகனீரே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2011/11/25 Siva Siva <naya...@gmail.com>

Hari Krishnan

unread,
Jan 30, 2012, 10:11:33 PM1/30/12
to santhav...@googlegroups.com


2012/1/31 Siva Siva <naya...@gmail.com>

ஒருமை பன்மை ஐயம்:

பல் - பற்கள்;
சொல் - சொற்கள்;
வில் - விற்கள்;

இல் (வீடு) - இற்கள்? இல்கள்?

பாடல்களில் இருவிதமாகவும் காண்கிறேன்.

தாங்கள் மஞ்சக் கடுதாசி கொடுத்திருக்கும் இடங்கள் அச்சுப் பிழையாக இருக்கும் வாய்ப்பும் உண்டு.  தற்காலங்களில் சந்தி பிரித்து வெளியிடுவதன் விளைவாகவும் இருக்கலாம்.  

இருந்த போதிலும், சில இடங்களில் லகர ளகரங்கள் புணராமல் இருப்பதுமுண்டு.  நன்னூல் காண்டிகையுரையிலிருந்து (சைவசித்தாந்தக் கழகப் பதிப்பு) குறிப்பிட்ட இரண்டு பக்கங்களை ஒளிவருடி இணைத்திருக்கிறேன்.  குறிப்பாக, இரண்டாவது படத்தில், ‘கால்குதித்தோடிக் கடல்புக மண்டி வாள்போழ்ந்தட்ட நீள்கழன் மறவர்’ என்ற எடுத்துக்காட்டை கவனிக்கவும்.  காற்குதித்தோடி கடற்புக மண்டி வாட்போழ்ந்தட்ட நீட்கழன் மறவர்’ என்று புணரவில்லை என்பதையும் நோக்கவும்.

சூத்திரமும் விளக்கமும் இந்தப் பக்கங்களிலேயே கொடுக்கப்பட்டுள்ளதால், அது பற்றி ஏதும் எழுதவில்லை. 
img057.jpg
img058.jpg

Siva Siva

unread,
Feb 4, 2012, 1:22:31 PM2/4/12
to santhav...@googlegroups.com
இரு சொற்களின் இடையேதானே புணர்ச்சி விதிகள் ? ஒரு சொல்லோடு விகுதி இணையும்போது இத்தகையை புணர்ச்சி விதிகள் அங்கே பொருந்துமா?

பரிமேலழகர் உரையில் 'இல்கள்' என்று வரக்காண்கிறேன்.
http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=31&auth_pub_id=29&pno=138

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.    (குறள் - 340)

"....... பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின்,பிறர் இல்களுள் துச்சிலிராது என்பதாம், ஆகவே உயிரோடுகூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது.   ........"




2012/1/30 Hari Krishnan <hari.har...@gmail.com>

Pas Pasupathy

unread,
Feb 6, 2012, 8:35:01 PM2/6/12
to santhav...@googlegroups.com


2012/2/4 Siva Siva <naya...@gmail.com>

இரு சொற்களின் இடையேதானே புணர்ச்சி விதிகள் ? ஒரு சொல்லோடு விகுதி இணையும்போது இத்தகையை புணர்ச்சி விதிகள் அங்கே பொருந்துமா?


” ‘கள்’ விகுதி பிற்பட்டதாதலின் இலக்கண நூல்களில் அதற்கு விதிகள்
கூறப்படவில்லை” என்று தமிழண்ணல் விளக்கி இருக்கிறார்.

அதனால் இலக்கியத்தில் “கள்’ விகுதிக்கு இருவிதமாகக் காட்டுகள்
இருப்பதைப்  பல சொற்களுக்குப் பார்க்கலாம். ( நாள்கள், நாட்கள், ...) 


 
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Siva Siva

unread,
Feb 6, 2012, 10:10:55 PM2/6/12
to santhav...@googlegroups.com
கள் விகுதி பலகாலமாகத் தமிழில் புழங்கும் ஒன்றுதானே. அது புழக்கத்தில் வந்த பின் எழுந்த இலக்கணநூல்களும் அதைப் பொருட்படுத்தவில்லையா?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2012/2/6 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Krishnamoorthy Premkumar

unread,
Feb 7, 2012, 1:31:05 AM2/7/12
to santhav...@googlegroups.com
சிலப்பதிகாரத்தில் கீழ்க் கண்ட வரிகளில் 'கள்' விகுதி காணப்படுகிறது.

(காட்சிக் காதை)

என் நாட்டாள் கொல் யார்மகள் கொல்லோ 
நின்நாட்டு யாங்கள் நினைப்பினுமறியோம்
 
அன்பன் 
ப்ரேமு 

2012/2/7 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
"நற்றுணை யாவது நமச்சி வாயவே"


Hari Krishnan

unread,
Feb 7, 2012, 1:45:07 AM2/7/12
to santhav...@googlegroups.com


2012/2/7 Krishnamoorthy Premkumar <krsna...@gmail.com>

சிலப்பதிகாரத்தில் கீழ்க் கண்ட வரிகளில் 'கள்' விகுதி காணப்படுகிறது.

(காட்சிக் காதை)

என் நாட்டாள் கொல் யார்மகள் கொல்லோ 
நின்நாட்டு யாங்கள் நினைப்பினுமறியோம்
 
அன்பன் 
ப்ரேமு 

http://www.tamilvu.org/slet/l0100/l0100ar6.jsp?auth_id=6&book_id=1&head_id=2&x=170&txt=%E0%AE%95

சூ. 170 :கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே

கொள்வழி யுடைய பலவறி சொற்கே
தொல்காப்பிய சூத்திரம்.

இதைத் தவிர,

ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும். 24
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர்
தம்தம் இசைகள் ஒத்தன நிலையே.

என்பதைப் போன்ற பல இடங்களில் -கள் விகுதி தொல்காப்பியச் சூத்திரத்தில் காணப்படுகிறது.

Pas Pasupathy

unread,
Feb 7, 2012, 11:48:29 AM2/7/12
to santhav...@googlegroups.com
நான் புரிந்துகொண்டது:
 
'கள்' விகுதி தொல்காப்பியக் காலத்தில்  இருந்தாலும், இதற்கேற்ற புணர்ச்சி விதிகள்
சொல்லப்படவில்லை என்பதையே தமிழண்ணல் குறிக்கிறார்.
 
" மேலும், விகுதிப் புணர்ச்சியில்  வல்லெழுத்தின்பின் வரும் வலி மிகுவதற்கு
விதியும் இல்லை" (  நல்ல தமிழ் எழுதவேண்டுமா? ப. 258)  என்றும்
அ.கி.பரந்தானார் எழுதியுள்ளார்.
 
நாள்களா?  நாட்களா?  என்பதைப் பற்றி எழுதும்போது தமிழண்ணல் எழுதுகிறார்.
 
" ... கள் விகுதி பிற்பட்டதாகலின், இலக்கண நூல்களில் இதற்கு விதி கூறப் படவில்லை.  'வாள் + கண் = வாட்கண் ; நாள் + குறிப்பு = நாட்குறிப்பு , நாள் + காட்டி = நாட்காட்டி . இவ்வாறு ஏனைய இடங்களில் வருவதால், ஒப்புமையாக்க உணர்வில் 'நாட்களும்' வந்துவிட்டது "..
(   தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும், திருத்தமும் , ப.42-43)
( இங்கே 'விதி' என்று அவர் எழுதியது  புணர்ச்சி விதி என்று நான் எண்ணுகிறேன்.)
 
இதற்கு மே.வீ. வேணுகோபால பிள்ளை
என்ற நன்னூல் சூத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு ,
 
" . . பொருந்திய வகையில் புணர்தலைக் கொள்ளுதல் அறிவுடையோர் யாவர்க்கும் முறையாகும் " என்று முடிவு செய்தார்.
 
அவர் "வன்றொடர்க் குற்றியலுகரத்திற்குப் பின் 'கள்' சேரும்போது வலி மிகுதல் நன்றன்று;பிழை என்று சொல்வதற்கில்லை"
 
என்பது போல் பரிந்துரை செய்தார் என்பது
யாவரும் அறிந்ததே. ( அ.கி.ப, நல்ல த.எழு.வே?, ப.285)  ஆனால், மற்ற
சொற்களுக்கு ( இல்..போன்றவை) என்ன பரிந்துரை செய்தார் என்பது நமக்குத்
தெரியவில்லை.
 
அதனால், 'கள்' விகுதிக்குப் புணர்ச்சி விதிகள் எந்த நூலிலும் இல்லாத போது,
இலக்கிய வழக்கு, செவிக்கு இனிமை, பொருள் மயக்கமின்மை ..போன்றவற்றை வைத்தே நாம் மற்ற 'கள்' சொற்களை நாம் எழுதவேண்டும்.
 
  

2012/2/7 Hari Krishnan <hari.har...@gmail.com>
--


--

Ganapathy SankaraSubramanian

unread,
Feb 7, 2012, 10:34:07 PM2/7/12
to santhav...@googlegroups.com
அசை நிலை என்றால் என்ன? தயவுசெய்து விளக்கவும்.

கோ.கணபதி

On 2/7/12, Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
> நான் புரிந்துகொண்டது:
>

> 'கள்' விகுதி தொல்காப்பியக் காலத்தில் இருந்தாலும், இதற்கேற்ற *
> புணர்ச்சி விதிகள்*


> சொல்லப்படவில்லை என்பதையே தமிழண்ணல் குறிக்கிறார்.
>

> "* மேலும், விகுதிப் புணர்ச்சியில் வல்லெழுத்தின்பின் வரும் வலி மிகுவதற்கு *
> *விதியும் இல்லை*" ( நல்ல தமிழ் எழுதவேண்டுமா? ப. 258) என்றும்


> அ.கி.பரந்தானார் எழுதியுள்ளார்.
>
> நாள்களா? நாட்களா? என்பதைப் பற்றி எழுதும்போது தமிழண்ணல் எழுதுகிறார்.
>

> " ... *கள் விகுதி பிற்பட்டதாகலின், இலக்கண நூல்களில்


> இதற்கு விதி கூறப் படவில்லை. 'வாள் + கண் = வாட்கண் ; நாள் + குறிப்பு
> = நாட்குறிப்பு , நாள் + காட்டி = நாட்காட்டி . இவ்வாறு ஏனைய

> இடங்களில் வருவதால், ஒப்புமையாக்க உணர்வில் 'நாட்களும்' வந்துவிட்டது* "..


> ( தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும், திருத்தமும் , ப.42-43)
> ( இங்கே 'விதி' என்று அவர் எழுதியது புணர்ச்சி விதி என்று நான் எண்ணுகிறேன்.)
>
> இதற்கு மே.வீ. வேணுகோபால பிள்ளை
> http://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=6&auth_pub_id=15&pno=239
> என்ற நன்னூல் சூத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு ,
>

> " . . *பொருந்திய வகையில் புணர்தலைக் கொள்ளுதல் அறிவுடையோர் யாவர்க்கும் **
> முறையாகும்* " என்று முடிவு செய்தார்.
>
> அவர் "*வன்றொடர்க் **குற்றியலுகரத்திற்குப் பின் 'கள்' சேரும்போது வலி மிகுதல்
> நன்றன்று;**பிழை என்று சொல்வதற்கில்லை*"


>
> என்பது போல் பரிந்துரை செய்தார் என்பது
> யாவரும் அறிந்ததே. ( அ.கி.ப, நல்ல த.எழு.வே?, ப.285) ஆனால், மற்ற
> சொற்களுக்கு ( இல்..போன்றவை) என்ன பரிந்துரை செய்தார் என்பது நமக்குத்
> தெரியவில்லை.
>
> அதனால், 'கள்' விகுதிக்குப் புணர்ச்சி விதிகள் எந்த நூலிலும் இல்லாத போது,
> இலக்கிய வழக்கு, செவிக்கு இனிமை, பொருள் மயக்கமின்மை ..போன்றவற்றை வைத்தே நாம்
> மற்ற 'கள்' சொற்களை நாம் எழுதவேண்டும்.
>
>
>
> 2012/2/7 Hari Krishnan <hari.har...@gmail.com>
>
>>
>>
>> 2012/2/7 Krishnamoorthy Premkumar <krsna...@gmail.com>
>>
>>> சிலப்பதிகாரத்தில் கீழ்க் கண்ட வரிகளில் 'கள்' விகுதி காணப்படுகிறது.
>>>
>>> (காட்சிக் காதை)
>>>
>>> என் நாட்டாள் கொல் யார்மகள் கொல்லோ

>>> நின்நாட்டு *யாங்கள்* நினைப்பினுமறியோம்

>> *சூ. 170 :**கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே*
>> *கொள்வழி யுடைய பலவறி சொற்கே*தொல்காப்பிய சூத்திரம்.


>>
>> இதைத் தவிர,
>>
>> ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும். 24
>> ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர்

>> தம்தம் *இசைகள் *ஒத்தன நிலையே.


>>
>> என்பதைப் போன்ற பல இடங்களில் -கள் விகுதி தொல்காப்பியச் சூத்திரத்தில்
>> காணப்படுகிறது.
>>
>>
>> --
>> அன்புடன்,
>> ஹரிகி.
>>
>> --
>>
>>
>> --
>>
>
> பசுபதி
> http://groups.google.ca/group/yAppulagam
> http://s-pasupathy.blogspot.com/
>

Siva Siva

unread,
Feb 7, 2012, 11:04:31 PM2/7/12
to santhav...@googlegroups.com
அசைநிலை:
தேடியதில் கண்டது:
http://www.tamilvu.org/courses/diploma/a021/a0212/html/a021234.htm


2012/2/7 Ganapathy SankaraSubramanian <ganapathysank...@gmail.com>

Siva Siva

unread,
Feb 8, 2012, 6:04:09 PM2/8/12
to santhav...@googlegroups.com
திருவாசகத்தில் சில பகுதிகளின் தலைப்பு ''பதிகம்" என்றும், வேறு சில பகுதிகளின் தலைப்பு "பத்து" என்றும் குறிக்கப்படுகின்றன.  இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன?
--------
1 சிவபுராணம்
2. கீர்த்தித் திரு அகவல்
3. திருவண்டப் பகுதி
4. போற்றித் திருஅகவல்
5. திருச்சதகம்
6. நீத்தல் விண்ணப்பம்
7. திருவெம்பாவை
8. திரு அம்மானை
9. திருப்பொற் சுண்ணம்
10. திருக்கோத்தும்பி
11. திருத்தெள்ளேணம்
12. திருச்சாழல்
13. திருப்பூவல்லி
14. திருஉந்தியார்
15. திருத்தோள் நோக்கம்
16. திருப்பொன்னூசல்
17. அன்னைப் பத்து
18. குயிற்பத்து
19. திருத்தசாங்கம்
20. திருப்பள்ளியெழுச்சி
21. கோயில் மூத்த திருப்பதிகம்
22. கோயில் திருப்பதிகம்
23. செத்திலாப் பத்து
24. அடைக்கலப் பத்து
25. ஆசைப்பத்து
26. அதிசியப் பத்து
27. புணர்ச்சிப்பத்து
28. வாழாப்பத்து
29. அருட்பத்து
30. திருக்கழுக்குன்றப் பதிகம்
31. கண்டபத்து
32. பிரார்த்தனைப் பத்து
33. குழைத்தப் பத்து
34. உயிருண்ணிப்பத்து
35. அச்சப்பத்து
36. திருப்பாண்டிப் பதிகம்
37. பிடித்த பத்து
38. திருஏசறவு
39. திருப்புலம்பல்
40. குலாப் பத்து
41. அற்புதப்பத்து
42. சென்னிப்பத்து
43. திருவார்த்தை
44. எண்ணப்பதிகம்
45. ய'த்திரைப் பத்து
46. திருப்படை எழுச்சி
47. திருவெண்பா
48. பண்டாய நான்மறை
49. திருப்படை ஆட்சி
50. ஆனந்தமாலை
51. அச்சோப் பதிகம்
--------

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2012/1/30 Siva Siva <naya...@gmail.com>

Hari Krishnan

unread,
Feb 8, 2012, 9:49:24 PM2/8/12
to santhav...@googlegroups.com


2012/2/9 Siva Siva <naya...@gmail.com>

திருவாசகத்தில் சில பகுதிகளின் தலைப்பு ''பதிகம்" என்றும், வேறு சில பகுதிகளின் தலைப்பு "பத்து" என்றும் குறிக்கப்படுகின்றன.  இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன?

:)

சந்தவசந்தத்தில் ஓர் அன்பரின் பெயர் வெகுசில இடங்களில் சுப்பிரமணியம் என்றும் பல இடங்களில் சிவசிவா என்றும் குறிக்கப்படுகின்றது.  இன்னொருவருடைய நிலைமையோ ரொம்பவே க்ரானிக்.  ஹரி (இடைவெளி) கிருஷ்ணன் என்ற பெயரைக் கொண்ட அவர் திஸ்கி 1.6 காலங்களில் ?ரி கிரு?ணன் என்று அவர் ஒரு கேள்விக்குறியாகத் திரிந்துகொண்டிருந்தார்.  (ஒங்க பேரைக்கூட ஒழுங்கா எழுதத் தெரியலையா ஒமக்கு என்ற கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறார்.)  பிறகு அவுட்லுக் எக்ஸ்பிரஸில் மெயில் செட்டிங்ஸை மாற்றினால் கிரந்த எழுத்துத் தெரியும் என்ற மகத்தான உண்மையைக் கற்றுக்கொண்டார்.  ஹரி கிருஷ்ணன் என்று பத்தாண்டுகளுக்குமேல் சுற்றிக் கொண்டிருந்தார்.

ஆனால் இப்போதெல்லாம் ‘ஹரிகி’ என்று அவர் பெயர் ‘நறுக்கி’ விடப்பட்டிருக்கிறது.  இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன?

Siva Siva

unread,
Feb 24, 2012, 6:01:01 PM2/24/12
to santhav...@googlegroups.com
வாயாரப் பாடுதல்
கண்ணாரக் காண்டல்
வயிறார உண்டல்
நெஞ்சார நினைதல்
கையாரத் தொழுதல்
தோள்களார நடம் ஆடுதல்
.......
.......

காலார நடத்தல்? காலாற நடத்தல்?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/2/8 Siva Siva <naya...@gmail.com>

Girija Varadharajan

unread,
Feb 24, 2012, 6:16:25 PM2/24/12
to santhav...@googlegroups.com
இதற்கு விடை தெரியவில்லை.

ஆனால் எனக்கு வேறொரு ஐயம் உளது.

சளைக்காமல் வேலை செய்தான் என்று எழுதுகிறோம். இந்தப் பொருள் வருமாறு

சற்றுமவன் காணான் சளைப்பு

என்றோ

சற்றுமங் கில்லை சளைப்பு


என்றோ வெண்பாவின் ஈற்றடி அமைக்கலாமா?

சளைப்பு என்பதற்குப் பதிலாக சலிப்பு என்பது வரும் எனபதறிவேன்.

வரதராசன். அ. கி

2012/2/25 Siva Siva <naya...@gmail.com>:

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 24, 2012, 6:32:20 PM2/24/12
to santhav...@googlegroups.com
காலார நடத்தல்  சரி. வயிறார உண்டல்- வயிறார உண்ணல்?

ராஜன், 2 ஈற்றடிகளும் இலக்கணப்படி சரியே. ஆனால், இளைப்பு என்பதற்கொப்பாகச் சளைப்பு என்ற சொல்லை அகராதியில் காணவில்லை. நீங்கள் சொல்வது போலச் சலிப்பு எனலாம். 

அனந்த்
 


2012/2/24 Girija Varadharajan <girijavar...@gmail.com>
இதற்கு  விடை தெரியவில்லை.

ஆனால் எனக்கு வேறொரு ஐயம் உளது.

சளைக்காமல் வேலை செய்தான் என்று எழுதுகிறோம். இந்தப் பொருள் வருமாறு

சற்றுமவன் காணான் சளைப்பு

என்றோ

சற்றுமங் கில்லை சளைப்பு


என்றோ  வெண்பாவின் ஈற்றடி அமைக்கலாமா?

சளைப்பு என்பதற்குப் பதிலாக சலிப்பு என்பது வரும் எனபதறிவேன்.

வரதராசன். அ. கி

2012/2/25 Siva Siva <naya...@gmail.com>:
> வாயாரப் பாடுதல்
> கண்ணாரக் காண்டல்
> வயிறார உண்டல்
> நெஞ்சார நினைதல்
> கையாரத் தொழுதல்
> தோள்களார நடம் ஆடுதல்
> .......
> .......
>
> காலார நடத்தல்? காலாற நடத்தல்?
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
>
> 2012/2/8 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Feb 24, 2012, 7:04:48 PM2/24/12
to santhav...@googlegroups.com
அல், தல் என்ற தொழிற்பெயர் விகுதிகளால்,

ஆடு - ஆடல், ஆடுதல்
காண் - காணல், காண்டல்,
உண் - உண்ணல், உண்டல்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/24 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Girija Varadharajan

unread,
Feb 24, 2012, 8:45:27 PM2/24/12
to santhav...@googlegroups.com
நன்றி அனந்த். நானும் அகராதியில் பார்த்தேன் இப்பிரயோகம் இல்லை.

வரதராசன்.


2012/2/25 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

Subbaier Ramasami

unread,
Feb 24, 2012, 9:23:04 PM2/24/12
to santhav...@googlegroups.com
ஆர்தல் என்றால் அனுபவித்தல், மகிழ்தல் நிறைதல். கால் வலியெடுக்காமல் அது
அனுபவிக்கும் வரை நடத்தல் எனவே காலார நடத்தல் என்பதுதான் சரிஏற்கனவே
ஆர்தல் பற்றி சிவசிவா இங்கே இடுகை இட்டுள்ளார் nayanmars
(naya...@yahoo.com
) எழுதியது
--0-1514364824-1186802482=:43264

Content-Type: text/plain; charset=iso-8859-1

Content-Transfer-Encoding: 8bit

2007-08-09

பின்னங்களில் முழுதானவன் - சிலேடை

---------------------------------------------------

(இப்பாடலை எழுதியபோது அதைச் சிலேடையாக எழுத முயன்றிலேன். சில
பின்னங்களின் பெயர்கள் வரும்படித்தான் அமைத்தேன். ஆனால் எழுதிய பின் அதே
பாடலை இன்னும் ஆழ்ந்து நோக்கியதில் அதில் இயற்கையாக அமைந்திருந்த சிலேடை
புலப்பட்டது!)

அரையா எமன்மாள அன்றுதைத்த காலா
வரவார் அரையாஓர் பின்னா முடியா
வரமீ இறையே ஒருமா துடையாய்
அரைமேனி யாய்காத் தருள்!
பின்னங்கள் : அரை, கால், ஒருமா (1/20), .

அளவைச் சொற்கள்: இறை (கொஞ்சம்), மேனி (வயல் விளைச்சல் அளவை);

பதம் பிரித்து - 1:

அரையா! எமன் மாள அன்(று) உதைத்த காலா!
அர(வு) ஆர் அரையா! ஓர் பின்னா முடியா!
வரம் ஈ இறையே! ஒரு மா(து) உடையாய்
அரை மேனியாய்! காத்(து) அருள்!
அரையா - அரசனே;

எமன் மாள அன்(று) உதைத்த காலா! - எமன் வீழ அன்று உதைத்த காலை உடையவனே!

அரவு ஆர் அரையா - பாம்பு (கச்சாகப்) பொருந்திய இடை உடையவனே!

ஓர் பின்னா முடியா - பின்னாத சடைமுடி உடையவனே!

வரம் ஈ இறையே - வரம் அளிக்கும் இறைவனே!

ஒருமாதுடையாய் அரைமேனியாய் - பார்வதியைப் பாதி உடலாக உடையவனே!

காத்(து) அருள் - (அடியேனைக்) காத்து அருள்புரிவாயாக!

பதம் பிரித்து - 2:

அரையா எமன் மாள அன்(று) உதைத்த, கால் ஆ(வு)

அர(வு) ஆர் அரையா! ஓர் பின்னா! முடியா

வரம் ஈ இறையே! ஒரு மா(து) உடையாய்
அரை மேனியாய் ! காத்(து) அருள்!
அரைதல் - தேய்தல் - மெலிதல்/அழிதல்;

கால் - பாதம்; திருவடி;

காலுதல் - (திரவம் முதலியன) வெளிப்படுதல் (to flow); (அருவி) குதித்தல்
(to leap forth); கக்குதல்; தோற்றுவித்தல் (to reveal);

ஆவுதல் - விரும்புதல்;

அரவு - ஒலி;

ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்; அனுபவித்தல்;

ஓர் - நினை; ஆராய்;

பின்னன் - பின்னவன் - அனைத்து உலகங்களும் ஒடுங்கிய பின்னும் இருப்பவன்;

2012/2/25 Siva Siva <naya...@gmail.com>:

Girija Varadharajan

unread,
Feb 24, 2012, 10:03:22 PM2/24/12
to santhav...@googlegroups.com
என்னுடைய ஐயம் இலக்கணம் தொடர்புடையது அன்று. இருப்பினும் இதற்கென்று வேறு
இழை துவக்க விரும்பவில்லை.

டி; லிட். ( Doctor of. Literature) என்ற பட்டத்தை எப்படித் தமிழில் எழுதுவது?

(தற்போதைய முனைவர் என்ற பட்டம் இதனைக் குறிக்காது என எண்ணுகிறேன். டி.
லிட் என்பது கௌரவ டாக்டர் பட்டம் அல்லவா?. முனைவர் என்பது முறையாகப்
படித்து அதன் பின்னர் பெறும் பட்டம் என்பது என் எண்ணம். )

” என் ஆசிரியப் பிரான்” நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் கி வா
ஜ “ டி. லிட். பட்டம் பெற்றது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வடித்துளார்.
அவர் இப்பட்டத்தைத் தமிழ்ப்படுத்த வில்லை.

ஐயர் அவர்கள் பெற்ற பட்டத்தைப் பற்றித் தமிழில் எழுதுவது எவ்வாறு ?


வரத ராசன். அ. கி

2012/2/25 Subbaier Ramasami <elan...@gmail.com>:

It is loading more messages.
0 new messages