மதிசூடி துதிபாடி - 5

805 views
Skip to first unread message

Siva Siva

unread,
Aug 30, 2012, 9:57:28 PM8/30/12
to santhavasantham
Previous posts in the ' மதிசூடி துதிபாடி - 4 ' thread.

2011-04-30
உயிரானான் போற்றி
----------------------------
(
அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)
(
சம்பந்தர் தேவாரம் - 2.68.1 - "வானமர் திங்களு நீரு மருவிய வார்சடை யானைத்")

1)
அம்மையும் அப்பனும் ஆகி
..
அருள்மழை பொழிகிற ஐயன்
செம்மலை போன்றொளிர் மெய்யன்
..
திருவடி தொழுமடி யார்கள்
இம்மையில் இடர்களி லாமல்
..
இன்புற நல்வரம் நல்கும்
செம்மலின் சேவடி போற்றி
..
சிவபெரு மானடி போற்றி.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Aug 31, 2012, 9:02:36 PM8/31/12
to santhavasantham

2)
ஆதியும் அந்தமும் ஆகி
..
அனைத்தையும் ஆள்கிற ஐயன்
பாதியும் முழுமையும் ஆவான்
..
பதமலர் பணியடி யார்க்கு
மேதியி னான்அணு காத
..
மேல்நிலை யைத்தரும் வீரன்
நாதியன் சேவடி போற்றி
..
நம்பெரு மானடி போற்றி.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/8/30 Siva Siva <naya...@gmail.com>

Previous posts in the ' மதிசூடி துதிபாடி - 4 ' thread.

2011-04-30
உயிரானான் போற்றி
----------------------------
(
அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)
(
சம்பந்தர் தேவாரம் - 2.68.1 - "வானமர் திங்களு நீரு மருவிய வார்சடை யானைத்")

1)
அம்மையும் அப்பனும் ஆகி

Lalitha & Suryanarayanan

unread,
Aug 31, 2012, 9:48:22 PM8/31/12
to santhav...@googlegroups.com
நீதியை நிலத்தினில் வேண்டி
நேரினில் கிழவனும் ஆகி
வேதியன் போலவும் தோன்றி
விரும்பியே வாதினில் வென்ற
மாதொரு பாகனை நித்தம்
வணங்கிடப் பாடல்கள் யாத்துச்
சோதியன் துதியையே பாடத்
தோன்றிய சோடியர் நன்றே!


சிவசூரி.

2012/9/1 Siva Siva <naya...@gmail.com>

thangamani

unread,
Sep 1, 2012, 1:47:56 AM9/1/12
to சந்தவசந்தம்
அம்மையொ டாடிடும் ஐயன்
...அடியரின் உளங்கவர் கள்வன்
பொம்மைக ளாகவே நம்மை
...புவியினில் நடித்திட வைப்பான்
செம்மையில் திகழுறும் மெய்யன்
...சிகையினில் நதிமதி சூடும்

செம்மலின் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி.
அன்புடன்,
தங்கமணி.

On Aug 31, 6:57 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> Previous posts in the ' மதிசூடி துதிபாடி - 4 ' thread.
>
> 2011-04-30
> உயிரானான் போற்றி
> ----------------------------
> (அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)
> (சம்பந்தர் தேவாரம் - 2.68.1 - "வானமர் திங்களு நீரு மருவிய வார்சடை யானைத்")
>
> 1)
> அம்மையும் அப்பனும் ஆகி
> .. அருள்மழை பொழிகிற ஐயன்
> செம்மலை போன்றொளிர் மெய்யன்
> .. திருவடி தொழுமடி யார்கள்
> இம்மையில் இடர்களி லாமல்
> .. இன்புற நல்வரம் நல்கும்
> செம்மலின் சேவடி போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Sep 1, 2012, 12:18:30 PM9/1/12
to santhav...@googlegroups.com
இனிய வாழ்த்துக் கண்டு மகிழ்ந்தேன்!
பாடல்களைப் படித்துவரும் அன்பர்கள் எல்லார்க்கும் வணக்கம்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2012/8/31 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
நீதியை நிலத்தினில் வேண்டி
.. நேரினில் கிழவனும் ஆகி
வேதியன் போலவும் தோன்றி
.. விரும்பியே வாதினில் வென்ற
மாதொரு பாகனை நித்தம்
.. வணங்கிடப் பாடல்கள் யாத்துச்
சோதியன் துதியையே பாடத்
.. தோன்றிய சோடியர் நன்றே!


சிவசூரி.

Siva Siva

unread,
Sep 1, 2012, 6:41:38 PM9/1/12
to santhavasantham

3)
இருவரும் மூவரும் ஆகி
..
எளியனும் அரியனும் ஆகும்
பெருமையன் நுண்ணியன் நாளும்
..
பிணைமலர் கொடுபணி அன்பர்
அருவினை யாலிடர் எய்தி
..
அலமரா வணம்அருள் செய்யும்
திருவனின் சேவடி போற்றி
..
சிவபெரு மானடி போற்றி.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/8/31 Siva Siva <naya...@gmail.com>

2)
ஆதியும் அந்தமும் ஆகி

thangamani

unread,
Sep 2, 2012, 5:29:57 AM9/2/12
to சந்தவசந்தம்
உங்கள் பாடல் இனிமை,மிக அருமை,
உங்களுக்கே கைவந்த கலை!வாழ்த்துகள்.

அன்புடன்,
தங்கமணி.

On Sep 1, 6:48 am, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:


> நீதியை நிலத்தினில் வேண்டி
> நேரினில் கிழவனும் ஆகி
> வேதியன் போலவும் தோன்றி
> விரும்பியே வாதினில் வென்ற
> மாதொரு பாகனை நித்தம்
> வணங்கிடப் பாடல்கள் யாத்துச்
> சோதியன் துதியையே பாடத்
> தோன்றிய சோடியர் நன்றே!
>
> சிவசூரி.
>

> 2012/9/1 Siva Siva <nayanm...@gmail.com>

thangamani

unread,
Sep 2, 2012, 6:51:43 AM9/2/12
to சந்தவசந்தம்
ஓதிடும் நான்மறை ஏற்றும்
...ஒருதனி முழுமுத லாவன்
கோதிலன் குணநிதி யாகக்
...குறைகளை தீர்த்திடும் ஈசன்
மாதிடம் வைத்தவன் ஆலம்
...மணிமிட றுடைகறை கண்டன்

நாதியன் சேவடி போற்றி
...நம்பெரு மாளடி போற்றி.

அன்புடன்,
தங்கமணி.

On Sep 1, 6:02 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> ஆதியும் அந்தமும் ஆகி
> .. அனைத்தையும் ஆள்கிற ஐயன்
> பாதியும் முழுமையும் ஆவான்
> .. பதமலர் பணியடி யார்க்கு
> மேதியி னான்அணு காத
> .. மேல்நிலை யைத்தரும் வீரன்
> நாதியன் சேவடி போற்றி
> .. நம்பெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/8/30 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > Previous posts in the ' மதிசூடி துதிபாடி - 4 ' thread.
>
> > 2011-04-30
> > உயிரானான் போற்றி
> > ----------------------------
> > (அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)
> > (சம்பந்தர் தேவாரம் - 2.68.1 - "வானமர் திங்களு நீரு மருவிய வார்சடை யானைத்")
>
> > 1)
> > அம்மையும் அப்பனும் ஆகி
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Sep 2, 2012, 7:12:08 PM9/2/12
to santhavasantham

4)
ஈறொடு முதலென ஆகி
..
ஈறொடு முதலிலா ஈசன்
வேறொரு துணையிலை என்று
..
விரைகழல் பணியடி யார்க்குப்
பேறருள் புரிகிற பெம்மான்
..
பிறைமதி ஒளிர்சடை எந்தை
சீறர வன்பதம் போற்றி


..
சிவபெரு மானடி போற்றி.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/1 Siva Siva <naya...@gmail.com>

3)
இருவரும் மூவரும் ஆகி

Lalitha & Suryanarayanan

unread,
Sep 2, 2012, 10:01:23 PM9/2/12
to santhav...@googlegroups.com
ஆறொடு மதியதைச் சூடும்
அரனடி அதனையே எண்ணி
வேறொரு நினைவெதும் இன்றி
விதவித மணமலர் போலே
நீறொடு அரவமும் நெஞ்சில்
நிறைந்திடும் வண்ணமும் பாடி
ஏறொடு எதிரினில் தோன்ற
எழுதுக என்றுமே நன்றே!


சிவசூரி

2012/9/3 Siva Siva <naya...@gmail.com>

thangamani

unread,
Sep 3, 2012, 4:38:53 AM9/3/12
to சந்தவசந்தம்
உருவமும் அருவமும் ஆவான்
...உடுக்கையும் சூலமும் ஏந்தும்
மருவறு பிறைதனைச் சூடி
...மன்றினில் ஆடிடும் ஐயன்
இருவினை தருமிடர்த் தீர
...இணையடித் தொழவருள் செய்வான்

திருவனின் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி

அன்புடன்,
தங்கமணி.

On Sep 2, 3:41 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> இருவரும் மூவரும் ஆகி
> .. எளியனும் அரியனும் ஆகும்
> பெருமையன் நுண்ணியன் நாளும்
> .. பிணைமலர் கொடுபணி அன்பர்
> அருவினை யாலிடர் எய்தி
> .. அலமரா வணம்அருள் செய்யும்
> திருவனின் சேவடி போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/8/31 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2)
> > ஆதியும் அந்தமும் ஆகி
>

> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Sep 3, 2012, 12:20:57 PM9/3/12
to சந்தவசந்தம்
உருவமும் அருவமும் ஆவான்
...உடுக்கையும் சூலமும் ஏந்தும்
மருவறு பிறைதனைச் சூடி
...மன்றினில் ஆடிடும் ஐயன்
இருவினை தருமிடர்த் தீர
...இணையடி தொழவருள செய்வான்

திருவனின் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி.

இணையடி*த்* தொழ --ஒற்று மிகை
 ஒற்று நீகி இட்டேன்.

அன்புடன்,
தங்கமணி.

thangamani

unread,
Sep 3, 2012, 12:28:23 PM9/3/12
to சந்தவசந்தம்
அம்மையொ டாடிடும் ஐயன்
...அடியரின் உளங்கவர் கள்வன்
பொம்மைக ளாகவே நம்மைப்

...புவியினில் நடித்திட வைப்பான்
செம்மையில்  திகழுறும் மெய்யன்
...சிகையினில் நதிமதி சூடும்
செம்மலின் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி.

'பொம்மைகளாகவே நம்மை*ப்* புவியினில்'
ஒற்று இட்டேன்.

அன்புடன்,
தங்கமணி.

thangamani

unread,
Sep 3, 2012, 2:01:56 PM9/3/12
to சந்தவசந்தம்
ஆறுதல் தந்திட வேண்டி
...அனுதினம்  தொழுதிடும் அன்பர்
தேறுதல் பெற்றிட துன்பம்
...தீர்ந்திட இன்னருள் செய்வான்
ஊறிடும் பரிவினில் காக்கும்
...உமையவள் பங்குடை ஈசன்

சீறர வன்பதம் போற்றி
...சிவபெரு மானடி போற்றி.

அன்புடன்,
தங்கமணி.

On Sep 3, 4:12 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> ஈறொடு முதலென ஆகி
> .. ஈறொடு முதலிலா ஈசன்
> வேறொரு துணையிலை என்று
> .. விரைகழல் பணியடி யார்க்குப்
> பேறருள் புரிகிற பெம்மான்
> .. பிறைமதி ஒளிர்சடை எந்தை
> சீறர வன்பதம் போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/9/1 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 3)
> > இருவரும் மூவரும் ஆகி
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Sep 3, 2012, 7:10:35 PM9/3/12
to santhavasantham

5)
உருவமும் அருவமும் ஆகி
..
உயிர்களுக் கருள்கிற நேசன்
வருவதும் போவதும் இல்லான்
..
மலரடி வாழ்த்தடி யாரின்
இருவினை வேரறச் செய்வான்
..
இமையவர்க் காவெயில் எய்த
செருவனின் சேவடி போற்றி


 ..  
சிவபெரு மானடி போற்றி.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/2 Siva Siva <naya...@gmail.com>

4)
ஈறொடு முதலென ஆகி
..
ஈறொடு முதலிலா ஈசன்

Siva Siva

unread,
Sep 5, 2012, 12:24:52 AM9/5/12
to santhavasantham

6)
ஊர்விடை ஒன்றுகந் தேறி
..
உமையொடு வருகிற ஈசன்
நீர்மலர் கொடுதொழு வார்க்கு
..
நிம்மதி யைத்தரும் இன்பன்
பேர்பல உடையவன் பூமேற்
..
பிரமனின் சிரத்தினில் பிச்சை
தேர்பவன் சேவடி போற்றி


..
சிவபெரு மானடி போற்றி.

பூமேற் பிரமனின் சிரத்தினில் - பூமியில் பிரமனின் மண்டையோட்டில்; / தாமரைப்பூவின் மேல் இருக்கும் பிரமனின் மண்டையோட்டில்;
பிச்சை தேர்பவன் - பிச்சை ஏற்பவன்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/3 Siva Siva <naya...@gmail.com>

5)
உருவமும் அருவமும் ஆகி

thangamani

unread,
Sep 5, 2012, 2:53:16 AM9/5/12
to சந்தவசந்தம்
ஆறுதல் தந்திட வேண்டி
...அனுதினம்  தொழுதிடும் அன்பர்
தேறுதல் பெற்றிடத் துன்பம்

...தீர்ந்திட இன்னருள் செய்வான்
ஊறிடும் பரிவினில் காக்கும்
...உமையவள் பங்குடை ஈசன்
சீறர வன்பதம் போற்றி
...சிவபெரு மானடி போற்றி.


'தேறுதல் பெற்றிட*த்*துன்பம்' ஒற்று இட்டேன்.

அன்புடன்,
தங்கமணி.

thangamani

unread,
Sep 5, 2012, 3:02:51 AM9/5/12
to சந்தவசந்தம்
பெருகிடும் பத்தியில் அன்பர்
...பிறைமதி சடையனின் சீரை
உருகிட இசைத்தநன் மாலை
...உகந்திடச் சூடிடும் ஐயன்
வெருவரு மறலியை எற்றி
...வீழ்த்திஅம் மாணியைக் காத்தச்

செருவனின் சேவடி போற்றி
....சிவபெரு மானடி போற்றி.

அன்புடன்,
தங்கமணி.

On Sep 4, 4:10 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> உருவமும் அருவமும் ஆகி
> .. உயிர்களுக் கருள்கிற நேசன்
> வருவதும் போவதும் இல்லான்
> .. மலரடி வாழ்த்தடி யாரின்
> இருவினை வேரறச் செய்வான்
> .. இமையவர்க் காவெயில் எய்த
> செருவனின் சேவடி போற்றி
>  ..  சிவபெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/9/2 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 4)
> > ஈறொடு முதலென ஆகி
> > .. ஈறொடு முதலிலா ஈசன்
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Sep 5, 2012, 7:47:45 AM9/5/12
to santhav...@googlegroups.com


2012/9/5 thangamani <tvthan...@gmail.com>

பெருகிடும் பத்தியில் அன்பர்
...பிறைமதி சடையனின் சீரை
உருகிட இசைத்தநன் மாலை
...உகந்திடச் சூடிடும் ஐயன்
வெருவரு மறலியை எற்றி
...வீழ்த்திஅம் மாணியைக் காத்தச்
செருவனின் சேவடி போற்றி
....சிவபெரு மானடி போற்றி.

--> மதி*ச்*சடையன். 

/ மாலை...உகந்திடச் சூடிடும் ஐயன்/  
இவ்விடத்தில் 'உகந்திட' என்ற சொல் பொருந்துமா?

thangamani

unread,
Sep 5, 2012, 2:44:24 PM9/5/12
to சந்தவசந்தம்
பெருகிடும் பத்தியில் அன்பர்
...பிறைமதிச் சடையனின் சீரை

உருகிட இசைத்தநன் மாலை
...உகப்புடன் சூடிடும் ஐயன்

வெருவரு மறலியை எற்றி
...வீழ்த்திஅம் மாணியைக் காத்தச்
செருவனின் சேவடி போற்றி
....சிவபெரு மானடி போற்றி.

--> மதி*ச்*சடையன்.

ஒற்று இட்டேன்.

/ மாலை...உகந்திடச் சூடிடும் ஐயன்/
இவ்விடத்தில் 'உகந்திட' என்ற சொல் பொருந்துமா?

உகந்திட என்பதற்கு பதில் 'உகப்புடன்'-- பொருந்துமா?
சரிசெய்ய வேண்டுகிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

On Sep 5, 4:47 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2012/9/5 thangamani <tvthangam...@gmail.com>

thangamani

unread,
Sep 5, 2012, 3:32:37 PM9/5/12
to சந்தவசந்தம்
வார்சடை மேல்நதி  யோடு
...மதியினைச் சூடிடும் ஐயன்
பேர்புகழ் பாடிடு வாரைப்
...பிணித்திடு வினைவிடு விப்பான்
கார்பொழி வாயருள் பெய்வான்
...கரமதில் கலனொடு பிச்சை

தேர்பவன் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி.

அன்புடன்,
தங்கமணி.

On Sep 5, 9:24 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> ஊர்விடை ஒன்றுகந் தேறி
> .. உமையொடு வருகிற ஈசன்
> நீர்மலர் கொடுதொழு வார்க்கு
> .. நிம்மதி யைத்தரும் இன்பன்
> பேர்பல உடையவன் பூமேற்
> .. பிரமனின் சிரத்தினில் பிச்சை
> தேர்பவன் சேவடி போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> பூமேற் பிரமனின் சிரத்தினில் - பூமியில் பிரமனின் மண்டையோட்டில்; / தாமரைப்பூவின்
> மேல் இருக்கும் பிரமனின் மண்டையோட்டில்;
> பிச்சை தேர்பவன் - பிச்சை ஏற்பவன்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/9/3 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 5)
> > உருவமும் அருவமும் ஆகி
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Sep 5, 2012, 11:51:22 PM9/5/12
to santhavasantham

7)
எவ்வணம் ஏத்தினும் அன்பர்
..
எண்ணிய வண்ணம ருள்வான்
வெவ்விடம் திகழ்மணி கண்டன்
..
விரைந்தடி யாருயிர் தன்னை
வவ்விட வருநம னாரை
..
மலரடி யாலுதை செய்த
செவ்வழல் வணன்அடி போற்றி


..
சிவபெரு மானடி போற்றி.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/5 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Sep 7, 2012, 12:12:29 AM9/7/12
to santhavasantham

8)
ஏசும னத்தொடு சற்றும்
..
எண்ணுதல் இன்றியிவ் வெற்பை
வீசுவேன் என்றவன் தன்னை
..
மெல்விரல் இட்டழ வைத்தான்
மாசுணம் நாணது வாக
..
மலைவிலால் முப்புரம் எய்த
தேசுடை யான்அடி போற்றி


..
சிவபெரு மானடி போற்றி.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/5 Siva Siva <naya...@gmail.com>

7)

எவ்வணம் ஏத்தினும் அன்பர்
..
எண்ணிய வண்ணம ருள்வான்

thangamani

unread,
Sep 7, 2012, 2:25:48 AM9/7/12
to சந்தவசந்தம்
அவ்விடம் இவ்விடம் என்றே
...அனைத்திலும்  அணுவிலும் உள்ளான்
செவ்வியத் தீந்தமிழ்ப் பாவில்
...திகழ்கிற பத்தியில் நிற்பான்
நவ்வியன் நான்மறை போற்றும்
...நாயகன் அடிமுடி காணா
செவ்வழ லானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி.


செவ்விய=சிறந்த
நவ்வி=அழகு.

அன்புடன்,
தங்கமணி.

On Sep 6, 8:51 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> எவ்வணம் ஏத்தினும் அன்பர்
> .. எண்ணிய வண்ணம ருள்வான்
> வெவ்விடம் திகழ்மணி கண்டன்
> .. விரைந்தடி யாருயிர் தன்னை
> வவ்விட வருநம னாரை
> .. மலரடி யாலுதை செய்த
> செவ்வழல் வணன்அடி போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/9/5 Siva Siva <nayanm...@gmail.com>

Lalitha & Suryanarayanan

unread,
Sep 7, 2012, 2:43:15 AM9/7/12
to santhav...@googlegroups.com
எவ்வகைப் பாடலும் யாத்தும்  
   எழிலுறப் பக்தியில் கோத்தும்
கவ்விய விதிப்பயன் ஓடக் 
  கழலடி புகழினைப் பாடி
இவ்வரங் கந்தனில் இட்டும்
   இன்பினை எமக்கெலாம் நல்கச்
செவ்வழல் வணனடி போற்றும்
   சிவசிவ மணியமை வாழ்க!

சிவசூரி.


2012/9/7 thangamani <tvthan...@gmail.com>

Siva Siva

unread,
Sep 7, 2012, 9:54:01 PM9/7/12
to santhavasantham

9)
ஐந்தலை அரவமும் ஆறும்
..
அம்புலி யோடணி ஐயன்
வந்தனை செய்பவர் தங்கள்
..
வல்வினை தீர்த்தருள் செய்வான்
முந்தயன் மாலிவ ரால்தன்
..
முடியடி காணுதற் கொண்ணாச்
செந்தழ லான்அடி போற்றி


..
சிவபெரு மானடி போற்றி.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/7 Siva Siva <naya...@gmail.com>

Lalitha & Suryanarayanan

unread,
Sep 7, 2012, 10:23:04 PM9/7/12
to santhav...@googlegroups.com
சிந்தையில் ஒன்றினை வைத்துச்
சிறப்புடன் இரண்டென* நின்று
முந்தைய பயனதால் நன்கு 
முக்கணன் வடிவினைப் போற்றி
வந்தனை நான்முகன் மாலும்
மகிழ்ந்துசெய் வடிவினை எண்ணி
ஐந்தர வும்ஆறையும்** சொல்லும்
அழகினைப் போற்றலே நன்று.


*சிவசிவா, தங்கமணி அம்மையையும் குறிக்கும்.

** ஐந்தலை அரவமும் ஆறும் என்று பாடியதைப் புகழ்ந்தது.

சிவ சூரியநாராயணன்.

2012/9/8 Siva Siva <naya...@gmail.com>

thangamani

unread,
Sep 8, 2012, 8:18:54 AM9/8/12
to சந்தவசந்தம்
அழகான பாடல்கள்!
மிக்கநன்றி சிவ சூரி அவர்களே.
சிவசிவாவுக்கே சேரும் உங்கள்பாராட்டுகள்.
பூவால் இந்நார் சிறிது மணம்பெறுகிறது.

அன்புடன்,
தங்கமணி.
On Sep 7, 11:43 am, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:

> எவ்வகைப் பாடலும் யாத்தும்
>    எழிலுறப் பக்தியில் கோத்தும்
> கவ்விய விதிப்பயன் ஓடக்
>   கழலடி புகழினைப் பாடி
> இவ்வரங் கந்தனில் இட்டும்
>    இன்பினை எமக்கெலாம் நல்கச்
> செவ்வழல் வணனடி போற்றும்
>    சிவசிவ மணியமை வாழ்க!
>
> சிவசூரி.
>
> 2012/9/7 thangamani <tvthangam...@gmail.com>

thangamani

unread,
Sep 8, 2012, 8:50:08 AM9/8/12
to சந்தவசந்தம்
பேசுவர் அவனுடைப் பெற்றி
...பெரிதவன் தயைசெயும் பாங்கு
சாசுவ தமாயவன் அன்பு
...தன்னை எண்ணுவர்க் கையன்
பூசுவெண் ணீற்றனின் சீற்றம்
...பொடியென எயிலெரி செய்தத்
தேசுடை யானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி.

அன்புடன்,
தங்கமணி.


On Sep 7, 9:12 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)
> ஏசும னத்தொடு சற்றும்
> .. எண்ணுதல் இன்றியிவ் வெற்பை
> வீசுவேன் என்றவன் தன்னை
> .. மெல்விரல் இட்டழ வைத்தான்
> மாசுணம் நாணது வாக
> .. மலைவிலால் முப்புரம் எய்த
> தேசுடை யான்அடி போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/9/5 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 7)
> > எவ்வணம் ஏத்தினும் அன்பர்
> > .. எண்ணிய வண்ணம ருள்வான்
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Sep 8, 2012, 9:45:02 AM9/8/12
to santhav...@googlegroups.com
இனிய வாழ்த்து!
எண்ணிற் பாடிய பாடலை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன்.

2012/9/7 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
-- 

Siva Siva

unread,
Sep 8, 2012, 11:51:37 PM9/8/12
to santhavasantham

10)
ஒளியடை யாமதி யார்கள்
..
உண்மையை ஒளித்துழல் வார்கள்
தெளிவிலா அவர்களின் சொல்லைத்
..
தீதென நீங்கிய நல்லார்
அளிமனத் தால்பணிந் தேத்த
..
அவர்க்கருள் புரிபவன் கங்கை
தெளிசடை யான்அடி போற்றி


..
சிவபெரு மானடி போற்றி.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/7 Siva Siva <naya...@gmail.com>

9)

Lalitha & Suryanarayanan

unread,
Sep 9, 2012, 12:02:50 AM9/9/12
to santhav...@googlegroups.com
வளமிகு கவிதைகள் வேகம்
வளர்கிற வண்ணமும் காட்டி
மளமள வெனவே நீங்கள்
மணியணி கண்டனின் சீரை
தளர்வெதும் இன்றியே நித்தம்
தருகிற திறமையைக் கங்கை
தெளிசடை யானடி யார்கள்
சிறப்பெனக் கொள்ளுவர் சித்தம்!


சிவ சூரியநாராயணன். 


2012/9/9 Siva Siva <naya...@gmail.com>

Lalitha & Suryanarayanan

unread,
Sep 9, 2012, 12:42:11 AM9/9/12
to santhav...@googlegroups.com
மாற்றிய படிவம்:

வளமிகு கவிதைகள் வேகம்
வளர்கிற வண்ணமும் காட்டி
மளமள வென்றுடன் நீங்கள்
மணியணி கண்டனின் சீரை
தளர்வெதும் இன்றியே நித்தம்
தருகிற திறமையைக் கங்கை
தெளிசடை யானடி யார்கள்
சிறப்பெனக் கொள்ளுவர் சித்தம்!


சிவ சூரியநாராயணன். 



Siva Siva

unread,
Sep 9, 2012, 4:13:15 PM9/9/12
to santhavasantham

11)
ஓவுதல் தோன்றுதல் இல்லான்
..
ஒழிவிலா துன்னுவார் உள்ளம்
மேவுநற் றளியெனக் கொள்வான்
..
வேதனை தருவினைப் பந்தம்
யாவும றுத்தருள் செய்யும்
..
அங்கணன் ஆயிழை கூறன்
சேவுடை யான்அடி போற்றி


..
சிவபெரு மானடி போற்றி.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/8 Siva Siva <naya...@gmail.com>

10)
ஒளியடை யாமதி யார்கள்
..
உண்மையை ஒளித்துழல் வார்கள்

Lalitha & Suryanarayanan

unread,
Sep 9, 2012, 10:09:23 PM9/9/12
to santhav...@googlegroups.com
தாவுதல் திரியுதல் இன்றித்
தாணுவின் பதமதே எண்ணிப்  
பாமலர் நிதநிதம் பண்ணிப் 
பரமனை அருச்சனை செய்து
மேவிடும் உலகினில் நீங்கள்
மேலொரு பொருள்எதும் இல்லாத் 
தேவனைத் துதித்திடும் போது
செந்தமிழ் கொஞ்சிடக் கண்டேன்!

காவிரி நடந்தெதிர் வந்தால்
கண்கவர் சோலைகள் ஆடும் 
பாவலர் நடந்தெதிர் வந்தால்
பைந்தமிழ் நேர்நிரை பாடும் 
கூவிடும் குயிலிணை நாடும்
குவலயம் மகிழ்வினைக் கூடும்
கூவிளம்* கொண்டிவண் நன்றே 
கோவினைப் பாடுவீர் என்றும்!

(*கூவிளம்= வில்வம்; நேர்நிரை வாய்பாடு; கூவிளம் கொண்டு தொடங்கி நீங்கள் இருவரும் செய்யும் துதியைக் குறித்தல் )



பூசலார் முன்னொரு நாளில்
புதுக்கிய கோயிலைப் பாடும்
வாசமா மலரினைப் போன்று
வடித்துள பாடலும் தானே 
வீசிடும் காற்றினில் நீந்தி
வேகமாய் என்னகம் சேர்ந்து
மாசெலாம் அகற்றிடக் கண்டே
மகிழ்வுடன் வந்தனன் வாழ்த்த!


சிவ சூரியநாராயணன்.




2012/9/10 Siva Siva <naya...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 10, 2012, 12:19:46 AM9/10/12
to santhav...@googlegroups.com

சிவசிவனார் பாடல்களும் அதைப் போற்றும் கவிதைகளும் மிக அழகு. 

அனந்த் 



2012/9/10 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Lalitha & Suryanarayanan

unread,
Sep 10, 2012, 1:11:11 AM9/10/12
to santhav...@googlegroups.com
வாடிடும் பயிரின் முன்னால்
வார்த்திடும் நீரைப் போன்று
பாடிடும் என்றன் முன்னால்
பாமழை பொழியும் அனந்தர்
நாடிவண் வரவே சூர்ய
நாரணன் மகிழ்கின் றேனே!
ஏடினில் தெரியும் உருவம்
எதிரினில் வரவும் வேண்டும்!

வணக்கமும்  நன்றியும்

சிவசூரி.


2012/9/10 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Lalitha & Suryanarayanan

unread,
Sep 10, 2012, 1:45:48 AM9/10/12
to santhav...@googlegroups.com
பாமழை பொழியும் அனந்தர்  என்பதைப்
பாமழை பொழிஅ னந்தர் என்று கொள்க.

சிவசூரி.

2012/9/10 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>

thangamani

unread,
Sep 10, 2012, 12:42:08 PM9/10/12
to சந்தவசந்தம்
அந்த இ லங்கையின் வேந்தை
...அடர்த்தக மடக்கிய ஈசன்
குந்தக மாஇடர் செய்யும்
...கொடுவினை தீர்த்திடு மெய்யன்
செந்தமிழ்ப் பாவிசைத் தேனை
...செவிமடுத் தின்புறும் எம்மான்
செந்தழ லானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி.

அன்புடன்,
தங்கமணி.


On Sep 8, 6:54 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> ஐந்தலை அரவமும் ஆறும்
> .. அம்புலி யோடணி ஐயன்
> வந்தனை செய்பவர் தங்கள்
> .. வல்வினை தீர்த்தருள் செய்வான்
> முந்தயன் மாலிவ ரால்தன்
> .. முடியடி காணுதற் கொண்ணாச்
> செந்தழ லான்அடி போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/9/7 Siva Siva <nayanm...@gmail.com>

thangamani

unread,
Sep 10, 2012, 1:00:06 PM9/10/12
to சந்தவசந்தம்
நெளியுநல் லுரகமு டன்வான்
...நிலவையும் நதியையும் சூடும்
கிளிகர மேந்துமை பங்கன்
...கேட்டினைத் தீர்த்தருள் செய்வான்
எளியரின் உறுதுணை யாக
...எங்கணும் நிறைந்தவன் காப்பான்
தெளிசடை யானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி.

அன்புடன்,
தங்கமணி.


On Sep 9, 8:51 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 10)
> ஒளியடை யாமதி யார்கள்
> .. உண்மையை ஒளித்துழல் வார்கள்
> தெளிவிலா அவர்களின் சொல்லைத்
> .. தீதென நீங்கிய நல்லார்
> அளிமனத் தால்பணிந் தேத்த
> .. அவர்க்கருள் புரிபவன் கங்கை
> தெளிசடை யான்அடி போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/9/7 Siva Siva <nayanm...@gmail.com>

Siva Siva

unread,
Sep 10, 2012, 8:42:34 PM9/10/12
to santhavasantham

இத்தொடரின் கடைசிப்பாடல்:
12)
ஔவிட வந்தடை கின்ற
..
அருவினை தீர்த்தருள் செய்வான்
செவ்வழி வண்டினம் பாடும்
..
செழும்பொழில் இடைமரு தூரன்
கொவ்வையின் கனியன வாயாள்
..
கூறினன் அம்பவ ளம்போல்
செவ்வணன் திருந்தடி போற்றி


..
சிவபெரு மானடி போற்றி.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/9 Siva Siva <naya...@gmail.com>

11)
ஓவுதல் தோன்றுதல் இல்லான்
..
ஒழிவிலா துன்னுவார் உள்ளம்

Siva Siva

unread,
Sep 12, 2012, 11:00:53 PM9/12/12
to santhavasantham
ஆர்வம் உள்ளோர்க்காக: 
உயிரானான் போற்றி - The entire set with some notes!

2012/9/10 Siva Siva <naya...@gmail.com>
2011-04-30 - uyir AnAn pOtRi.pdf

Lalitha & Suryanarayanan

unread,
Sep 13, 2012, 12:25:41 AM9/13/12
to santhav...@googlegroups.com
பன்னிரு பாடல்கள் தம்மைப்
பரிவுடன் எமக்கென நன்றாய்த் 
துன்னிய மலரெனச் சேர்த்துத் 
துதித்திட வழிவகை செய்ய
உன்னரும் உளத்தினில் தோன்ற
ஒன்றென ஓரிடம் தன்னில்
மன்றினில் உள்ளவர் காண
மணந்திட  விடுத்தது நன்றே.

சிவ சூரியநாராயணன்.



 


2012/9/13 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Sep 13, 2012, 9:49:34 PM9/13/12
to santhavasantham

2011-05-06
அப்பனிடம் ஆலங்காடு (திருவாலங்காடு)
-------------------------------------
(
எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)

1)
கோலவெண் டிங்களுங் கோள ராவுங்
..
கொக்கிற குங்குரா மலருஞ் சூடி
ஏலவெண் பொடியணி மார்பன் முன்னம்
..
இன்னமு தடைந்திடு வோமென் றெண்ணி
வேலையை வெற்பினை மத்தாக் கொண்டு
..
விண்ணவர் கடைந்தபோ தங்கெ ழுந்த
ஆலம துண்டருள் செய்த வெங்கள்
..
அப்பனி டந்திரு வாலங் காடே.

பதம் பிரித்து:
கோல வெண் திங்களும், கோள் அராவும்,
..
கொக்கிறகும், குரா மலரும் சூடி,
ஏல வெண் பொடி அணி மார்பன்; முன்னம்
..
இன் அமுது அடைந்திடுவோம் என்று எண்ணி
வேலையை வெற்பினை மத்தாக் கொண்டு
..
விண்ணவர் கடைந்தபோது அங்கு எழுந்த
ஆலம் அது உண்டு அருள் செய்த எங்கள்
..
அப்பன் இடம் திருவாலங்காடே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/10 Siva Siva <naya...@gmail.com>

இத்தொடரின் கடைசிப்பாடல்:
12)

Siva Siva

unread,
Sep 14, 2012, 9:07:31 PM9/14/12
to santhavasantham

2)
கருமணி மிடற்றினன் எழுத்தஞ் சோதிக்
..
கைதொழும் பத்தரைக் காத்த வர்க்குத்
தருவென வேண்டுவ ரங்கள் எல்லாம்
..
தந்தருள் செய்பவன் தன்னொப் பில்லான்
அருவமும் உருவமும் ஆணும் பெண்ணும்
..
ஆகிய அற்புதன் ஆலின் கீழே
அருமறை நால்வருக் குரைக்கும் எங்கள்


..
அப்பனி டந்திரு வாலங் காடே.

மிடறு - கண்டம்;
எழுத்து அஞ்சு ஓதி - திருவைந்தெழுத்தை ஓதி;
தன்னொப்பில்லான் - தனக்கு ஓர் ஒப்பு இல்லாதவன்;
தரு - கற்பக மரம்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/13 Siva Siva <naya...@gmail.com>

2011-05-06
அப்பனிடம் ஆலங்காடு (திருவாலங்காடு)
-------------------------------------
(
எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)

1)

Message has been deleted

Lalitha & Suryanarayanan

unread,
Sep 15, 2012, 2:42:14 AM9/15/12
to santhav...@googlegroups.com
கோலமா மதியினைச்சூடிக் 
கோயிலாய் உளத்தினைக் கொண்டார்
காலமாம் கிழவனைக் காலால்
கருணையால் உதைத்ததைப் பாட
சாலநற் கவிதைகள் செய்யும்
சாதனை நித்தமும் செயவார் 
ஞாலமே மகிழ்வினை எய்த
நற்சிவ மணியமை தாமே!

சிவசூரி.

2012/9/15 thangamani <tvthan...@gmail.com>
நீலகண் டமொடுசெஞ்  சடைசேர்  கங்கை
...நிலவுபொன் கொன்றையம் மலரும் சூடி

thangamani

unread,
Sep 15, 2012, 8:07:56 AM9/15/12
to சந்தவசந்தம்
நீலகண் டமொடுசெஞ் சடைசேர் கங்கை
...நிலவுபொன் கொன்றையம் மலரும் சூடி
காலமும் ஆனவன் எமனை எற்றும்
...காலனாய் மாணியைக் காத்த செம்மல்
கோலமுக் கண்ணுதல் எழிலைக் காணக்
...குலைந்திடும் ஊழ்வினை விண்ணோர்க் காக
ஆலமு துண்டருள் செய்த எங்கள்
...அப்பனி டந்திரு ஆலங் காடே.

நன்றி சிவசூரி அவர்களே!
திருத்தம் செய்து இடுகையில்,
மின்நிறுத்தத்தினால் என்பாடல் பதிவாகவில்லை.
இப்போது இடுகிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

On Sep 15, 11:42 am, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:


> கோலமா மதியினைச்சூடிக்
> கோயிலாய் உளத்தினைக் கொண்டார்
> காலமாம் கிழவனைக் காலால்
> கருணையால் உதைத்ததைப் பாட
> சாலநற் கவிதைகள் செய்யும்

> *சாதனை நித்தமும் செயவார்  *


> ஞாலமே மகிழ்வினை எய்த

> நற்*சிவ* *மணியமை* தாமே!
>
> சிவசூரி.
>
> 2012/9/15 thangamani <tvthangam...@gmail.com>

Siva Siva

unread,
Sep 15, 2012, 6:30:59 PM9/15/12
to santhavasantham

3)
கானையும் மன்றெனக் கருதி ஆடும்
..
கண்ணுத லான்தொழும் அன்பர் கட்குத்
தேனையும் பாலையும் ஒத்தி னிப்பான்
..
தெளிவினைத் தந்திரு வினையைத் தீர்ப்பான்
மானையும் மழுவையும் கையில் ஏந்தி
..
மால்விடை மேல்வரும் மாதோர் பாகன்
ஆனையின் ஈருரி போர்த்த எங்கள்


..
அப்பனி டந்திரு வாலங் காடே.

கான் - காடு - சுடுகாடு;
ஈர் உரி - உரித்த தோல்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/14 Siva Siva <naya...@gmail.com>

2)

Lalitha & Suryanarayanan

unread,
Sep 16, 2012, 12:27:37 AM9/16/12
to santhav...@googlegroups.com
அறுசீர் விருத்தத்தில் அடியேனும் அனுபவிக்கும் அதிசயப் பத்து

சிவசிவனாரும் தங்கமணி அம்மையாரும் செய்யும் துதிப்பாடல் தம்மை வியந்து போற்றுகின்ற பத்துப்பாடல்களை
அவர்கள் அனுமதியை வேண்டி இதே இழையில் இடுகின்றேன். திருச்சிற்றம்பலம்!


சிவ சூரியநாராயணன்.

சந்தத்தின் வசந்தமெனத் தண்டமிழர் புகழ்கின்ற சங்க மிங்கே
அந்தத்தின் பின்னுமாகி ஆதிக்கும் முந்தியாகி யாது மாகும்
தொந்தத்தின் பந்தத்தைச் சொல்வதுபோல் தூமலரைத் தூவு தல்போல்
சிந்திக்கும் சிவன்புகழைத் தினம்செப்பல் அதிசயத்தைச் சேர்ந்த தாமே.

ஒருவர்முன் கவிபாட மற்றொருவர் எதிரொலிக்க ஒப்பில் லாமல்
உருவாகும் கவிதைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஓரு ணர்வாய்க்
கருவாகி இருமனத்தில் ககனத்தில் நீந்தியெதிர் காட்சி காட்டல்
அரனாரின் அருளாலே நிகழ்கின்ற அதிசயமே ஆகு மாமே.

வெவ்வேறு கண்டத்தில் வெவ்வேறு வயதினராய் வேறாம் சூழல்
ஒவ்வாத தொழில்செய்தும் ஓயாமல் ஒன்றன்பின் ஒன்றாய் நன்றே
இவ்வாறு கவியியற்றி இட்டுவரும் நிலைகண்டே இன்ப முற்றே
எவ்வாறே இணையத்தில் இப்படியோர் அதிசயமே இங்கென் பாரே.

முன்னவரே கொடுக்கின்ற முதற்பாடல் ஈற்றடியில் முக்கு ளித்துப்
பின்னவரும் முன்னவரும் பிறைசூடி புகழ்சொல்வர் பின்தொ டர்ந்தே
இன்னபடி இங்குபத்துப் பாடல்களை இருவருமே  யாக்கின் றாரே
அன்னவரின் கவிதையெனும் அதிசயம்போல் அதிசயமும் ஆவ துண்டோ.

காணாமல் பேசாமல் கலந்தெதுவும் முடிக்காமல் கண்முன் இங்கே
கோணாமல் குறையாமல் குன்றாமல் நன்றாகக் கூவு தல்போல்  
ஆணான ஒருவருடன் அன்பான அம்மையுமாய் ஆகி நின்றே
வாணாளில் விதவிதமாய் வடிப்பதுவும் அதிசயமே வையம் மீதே.
 
பொன்னனைய மேனியனைப் புகழ்கின்றார் புலவர்கள் போற்றி,போற்றி!
அன்னையவர் பெயரினிலே ஆடகப்பொன் மணியொன்றும் ஆடக் காண்போம்
முன்னையடி கொடுக்கின்ற முருகுமணி முழங்குவது மோதும் காதில்
பின்னரொரு காரணமும் தென்படாத ததிசயமே பின்னெ னக்கே.

தலம்பலவும் காண்கின்றார் தண்டமிழின் துணையாலே தாகம் கொண்டே
வலம்வந்து வடிக்கின்ற வண்ணங்கள் விருத்தங்கள் மாயை நீக்கும்
நலம்தந்து மதிதந்து ஞானமெலாம் தந்திருக்கும் நாளும் போதும்
கலம்கொண்டு கடத்துவிக்க வருகின்ற அதிசயமும் கண்முன் தோன்றும்.

துணையாக பக்தியொன்றே துணிவாக நெஞ்சத்தில் தோன்றும் தோன்றும்
இணையான இவர்போலும் இணையொன்றும் இகத்தினிலே இல்லை இல்லை
அணியான மணியாக அன்பர்கள் அன்றாடம் ஆடிப் பாடும்
இணையத்தின் எழிற்சந்த வசந்தத்தில் இல்லையென ஏதும் இல்லை.

கட்டுண்டு கிடந்திருந்தும் கண்ணுதலான் புகழினையே காதில் கேட்டே
கட்டுண்டு நானுந்தான் கவிமணிகள் எதிரினிலே காதல் மீறப்
பிட்டுண்டு மன்னவனின் பிரம்புண்டு புண்ணுண்டான் போட்ட தேனைத்
தொட்டின்று கவிசெய்யத் துணிவுண்ட அதிசயமும் தோன்றும் தானே.


சிவமணியார் தினந்தோறும் சிறப்பாகத் துதிக்கின்ற சீரை உண்டே
தவமேதும் செய்யாதும் தமிழோடு நிற்கின்ற தன்மை யாலே
சிவசூரி நானுந்தான் சிலநேரம் சிவனாரின் சேவை செய்து
கவியோகி போலத்தான் மாறுகின்ற அதிசயமும் காணு வீரே.

ஈசனடியாரைப் போற்றி மகிழும்
சிவ சூரியநாராயணன்.

16 09 12






2012/9/16 Siva Siva <naya...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 16, 2012, 7:59:00 AM9/16/12
to santhav...@googlegroups.com
அதிசயப் பத்து ஒரு அற்புதப் பத்து! 'சிவமணியார்' செய்துவரும் விந்தையை இவ்வளவு அழகாகப் பாடலில் வடித்துள்ள திறனைக் கண்டு மகிழ்கிறேன்.  தற்கால நாயன்மார்கள் பணி மென்மேலும் வளரட்டும்!  

அனந்த் 

2012/9/16 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>






2012/9/16 Siva Siva <naya...@gmail.com>

Lalitha & Suryanarayanan

unread,
Sep 16, 2012, 9:13:11 AM9/16/12
to santhav...@googlegroups.com
வணக்கம்.
பேராசிரியருக்கு என் நன்றிகள் .
சிவசூரி.


2012/9/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
Sep 16, 2012, 9:19:29 AM9/16/12
to santhav...@googlegroups.com
அருமை அருமை!
உங்கள் வாழ்த்துப்பத்தை வாசித்து மகிழ்கின்றேன்.

அதி- சயப் பத்தே! 

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2012/9/16 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
அறுசீர் விருத்தத்தில் அடியேனும் அனுபவிக்கும் அதிசயப் பத்து

Lalitha & Suryanarayanan

unread,
Sep 16, 2012, 9:34:53 AM9/16/12
to santhav...@googlegroups.com

அதி- சயப் பத்தென அழகாய்ப் பிரித்து யாரே இதுபோல் பகர்ந்திடுவார்!
நன்றி.
சிவசூரி.
2012/9/16 Siva Siva <naya...@gmail.com>

Lalitha & Suryanarayanan

unread,
Sep 16, 2012, 11:13:17 AM9/16/12
to santhav...@googlegroups.com
கட்டுண்டு கிடந்திருந்தும் கண்ணுதலான் புகழினையே காதில் கேட்டே 
கட்டுண்டு நானுந்தான் கவிமணிகள் எதிரினிலே காதல் மீறப்
பிட்டுண்டு மன்னவனின் பிரம்புண்டு புண்ணுண்டான் போட்ட தேனைத் 
தொட்டின்று கவிசெய்யத் துணிவுண்ட அதிசயமும் தோன்றும் தானே.  

In the 3rd line, it will sound even better if there is mOnai in 5th seer.

siva sivaa


பிட்டுண்டு மன்னவனின் பிரம்பதனால் புண்ணுண்டான் பிலிற்று தேனைத்  ??

சிவசிவாவுக்கு நன்றிகள்.

நான் இப்படி மாற்றிக்கொள்கிறேன்:


கட்டுண்டு கிடந்திருந்தும் கண்ணுதலான் புகழினையே காதில் கேட்டே 
கட்டுண்டு நானுந்தான் கவிமணிகள் எதிரினிலே காதல் மீறப்
பிட்டுண்டு மன்னவனின் பிரம்பதனால் புண்ணுண்ட பித்தன் என்னைத்
தொட்டின்று கவிசெய்யத் தூண்டுகின்ற அதிசயமும் தோன்றும் தானே.

சிவசூரி.




2012/9/16 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>

thangamani

unread,
Sep 16, 2012, 1:48:04 PM9/16/12
to சந்தவசந்தம்
திரு.சிவசூரி அவர்களுக்கு,
ஆச்சரியப் படவைத்த உங்கள் அதிசயப் பத்து
அருமை!அற்புதம்!மிக்கநன்றி!
சிவசிவாவுக்கு என்நன்றியைச் சொல்லுகிறேன்.

//சிவமணியார் தினந்தோறும் சிறப்பாகத் துதிக்கின்ற சீரை உண்டே


தவமேதும் செய்யாதும் தமிழோடு நிற்கின்ற தன்மை யாலே

சிவசூரி நானுந்தான்//

'தவமேதும் செய்யாதும் தமிழோடு
நிற்கின்ற தன்மையாலே சிவசிவாவின் பாடலோடு
நான் பாட எடுக்கும் முயற்சிதான்...
மீண்டும் நன்றி.
அன்புடன்,
தங்கமணி.

On Sep 16, 9:27 am, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:

> 2012/9/16 Siva Siva <nayanm...@gmail.com>

Siva Siva

unread,
Sep 16, 2012, 8:38:39 PM9/16/12
to santhavasantham

4)
குழைமனத் தொடுதொழும் அம்மைக் காகக்
..
குவிகரத் திடைப்பழந் தன்னை ஈவான்
மழவிடை யாயருள் என்று வாழ்த்தி
..
மலரடி வழிபடும் அன்பர் தங்கள்
பழவினை தீர்த்தருள் பரமன் சுற்றும்
..
பல்கணப் படைபல பறைகள் ஆர்ப்ப
அழலெரி அங்கையில் ஏந்தி ஆடும்


..
அப்பனி டந்திரு வாலங் காடே.

அம்மை - காரைக்கால் அம்மையார்;
மழ விடையாய் - இளமைவாய்ந்த இடபத்தை, வாகனமாக உடையவனே;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/15 Siva Siva <naya...@gmail.com>

3)

thangamani

unread,
Sep 17, 2012, 9:45:54 AM9/17/12
to சந்தவசந்தம்
மருவறு வெண்பிறைச் சடையன் கையில்
...மான்மழு தீயுடன் சூலத்தைக் கொள்வான்
இருவினை தருமிடர் எளிதில் தீர
...இன்னருள் செய்திடும் ஈடில் ஈசன்
கருவுறு பவக்கடல் கடக்கச் செய்வான்
...கண்ணுதல் தருவடி அமர்ந்து தானாய்

அருமறை நால்வருக் குரைக்கும் எங்கள்
...அப்பனி டந்திரு ஆலங் காடே.

அன்புடன்,
தங்கமணி.

On Sep 15, 6:07 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> கருமணி மிடற்றினன் எழுத்தஞ் சோதிக்
> .. கைதொழும் பத்தரைக் காத்த வர்க்குத்
> தருவென வேண்டுவ ரங்கள் எல்லாம்
> .. தந்தருள் செய்பவன் தன்னொப் பில்லான்
> அருவமும் உருவமும் ஆணும் பெண்ணும்
> .. ஆகிய அற்புதன் ஆலின் கீழே
> அருமறை நால்வருக் குரைக்கும் எங்கள்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> மிடறு - கண்டம்;
> எழுத்து அஞ்சு ஓதி - திருவைந்தெழுத்தை ஓதி;
> தன்னொப்பில்லான் - தனக்கு ஓர் ஒப்பு இல்லாதவன்;
> தரு - கற்பக மரம்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/9/13 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2011-05-06
> > அப்பனிடம் ஆலங்காடு (திருவாலங்காடு)
> > -------------------------------------
> > (எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)
>
> > 1)
>

> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Sep 17, 2012, 9:50:31 AM9/17/12
to சந்தவசந்தம்
ஊனையும் உயிரையும் உருக்கும் தெய்வம்
...ஒப்பிலா தயையினில் உதிக்கும் அன்பில்
வானையும் மண்ணையும் அண்டம் யாவும்
...மாறிடா கதியினில் வைத்துக் காக்கும்
தானையும் தனதெனும் அகந்தைப் போக்கும்
...தண்ணருள் தந்தெமைத் தாங்கும் வள்ளல்

ஆனையின் ஈருரி போர்த்த எங்கள்
...அப்பனி டந்திரு வாலங் காடே.

அன்புடன்,
தங்கமணி.

On Sep 16, 3:31 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> கானையும் மன்றெனக் கருதி ஆடும்
> .. கண்ணுத லான்தொழும் அன்பர் கட்குத்
> தேனையும் பாலையும் ஒத்தி னிப்பான்
> .. தெளிவினைத் தந்திரு வினையைத் தீர்ப்பான்
> மானையும் மழுவையும் கையில் ஏந்தி
> .. மால்விடை மேல்வரும் மாதோர் பாகன்
> ஆனையின் ஈருரி போர்த்த எங்கள்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> கான் - காடு - சுடுகாடு;
> ஈர் உரி - உரித்த தோல்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/9/14 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> --http://nayanmars.netne.net/

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 17, 2012, 2:52:23 PM9/17/12
to santhav...@googlegroups.com
2012/9/17 thangamani <tvthan...@gmail.com>
மருவறு வெண்பிறைச் சடையன்  கையில்
...மான்மழு தீயுடன் சூலத்தைக் கொள்வான்
இருவினை தருமிடர் எளிதில் தீர
...இன்னருள் செய்திடும் ஈடில் ஈசன்
கருவுறு பவக்கடல் கடக்கச் செய்வான்
...கண்ணுதல் தருவடி அமர்ந்து தானாய்
அருமறை நால்வருக் குரைக்கும் எங்கள்
...அப்பனி டந்திரு ஆலங் காடே.

>> முதல் அடியில் வாய்பாட்டைக் கவனிக்கவும். சூலம் கொள்வான் என்னலாம்.  
 
ஊனையும் உயிரையும் உருக்கும் தெய்வம்
...ஒப்பிலா தயையினில் உதிக்கும் அன்பில்
வானையும் மண்ணையும் அண்டம் யாவும்
...மாறிடா கதியினில்   வைத்துக் காக்கும்
தானையும்  தனதெனும் அகந்தைப் போக்கும்
...தண்ணருள் தந்தெமைத் தாங்கும் வள்ளல்
ஆனையின் ஈருரி போர்த்த எங்கள்
...அப்பனி டந்திரு வாலங் காடே.

>> அகந்தைப் போக்கும் - ஒற்று மிகை; 'தானொடு தனதெனும் அகந்தை போக்கும் என்றும் அமைக்கலாம். 

அன்புடன்,
அனந்த் 


On Sep 15, 6:07 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> கருமணி மிடற்றினன் எழுத்தஞ் சோதிக்
> .. கைதொழும் பத்தரைக் காத்த வர்க்குத்
> தருவென வேண்டுவ ரங்கள் எல்லாம்
> .. தந்தருள் செய்பவன் தன்னொப் பில்லான்
> அருவமும் உருவமும் ஆணும் பெண்ணும்
> .. ஆகிய அற்புதன் ஆலின் கீழே
> அருமறை நால்வருக் குரைக்கும் எங்கள்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> மிடறு - கண்டம்;
> எழுத்து அஞ்சு ஓதி - திருவைந்தெழுத்தை ஓதி;
> தன்னொப்பில்லான் - தனக்கு ஓர் ஒப்பு இல்லாதவன்;
> தரு - கற்பக மரம்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/13 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2011-05-06
> > அப்பனிடம் ஆலங்காடு (திருவாலங்காடு)
> > -------------------------------------
> > (எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)
>
> > 1)
>
> --http://nayanmars.netne.net/
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Sep 17, 2012, 8:27:57 PM9/17/12
to santhavasantham

5)
கனைகடல் தனைக்கடை நாளெ ழுந்த
..
கரியவி டந்தனை உண்ட கண்டன்
சினமறு சிந்தையர் ஆகி என்றும்
..
சேவடி தனைநினை சீலர் தங்கள்
முனைவினை தீர்த்தருள் முக்கண் அண்ணல்
..
முளைமதி சூடிக ணங்கள் சூழ
அனலெரி அங்கையில் ஏந்தி ஆடும்


..
அப்பனி டந்திரு வாலங் காடே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/16 Siva Siva <naya...@gmail.com>

4)

vis gop

unread,
Sep 18, 2012, 3:31:35 AM9/18/12
to santhav...@googlegroups.com
தேனையும் பாலையும் தித்திப் பென்போம்
     தேவிட்டாவோ முறைகூட்டி அருந்தின் ஈசக் 
கோனையும் அரசியையும் நீங்கள் பாடிக் 
     குலைகுலையாய்க் கொட்டுகிற துதிபோல் ஆமோ
மானையும் மழுவையும் கையில் ஏந்தி
     மடக்கியதன் இடக்காலைத் தூக்கி ஆடும்
ஆனைக்கா மதுரைச்சீர் காழி தில்லை
     ஆலங்காட் டரசனுமக் கருளீ வானே!

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2012/9/18 Siva Siva <naya...@gmail.com>
--

vis gop

unread,
Sep 18, 2012, 4:45:23 AM9/18/12
to santhav...@googlegroups.com
தேனையும் பாலையும் தித்திப் பென்போம்
     தேவிட்டாவோ முறைகூட்டி அருந்தின் ஈசக் 
கோனையும் அரசியையும் நீங்கள் பாடிக் 
     குலைகுலையாய்க் கொட்டுகிற துதிபோல் ஆமோ
மானையும் மழுவையும் கையில் ஏந்தி
     மடக்கியதன் இடக்காலைத் தூக்கி ஆடும்
ஆனைக்கா மதுரைச்சீர் காழி தில்லை
     ஆலங்காட் டரசனுமக் கருளீ வானே!

  'தெவிட்டாவோ' என்பதில் தட்டச்சுப் பிழை; மன்னிக்கவும்.

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2012/9/18 Siva Siva <naya...@gmail.com>

5)

--

Siva Siva

unread,
Sep 18, 2012, 7:59:06 PM9/18/12
to santhav...@googlegroups.com
படித்து வருவோர்க்கும் வாழ்த்துவோர்க்கும் என் வணக்கம்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2012/9/18 vis gop <vis...@gmail.com>

Siva Siva

unread,
Sep 18, 2012, 8:00:22 PM9/18/12
to santhavasantham

6)
சங்கர பேயுருத் தருக வென்று
..
தாள்பணிந் தம்மையார் வேண்ட ஆங்கே
அங்கருள் புரிந்தவன் அன்பர்க் கன்பன்
..
அயன்சிரம் அதிற்பலி தேரும் ஐயன்
கங்குலிற் பூதக ணங்கள் சூழக்
..
கரடிகை துடியொடு பறைமு ழங்க
அங்கியைக் கையினில் ஏந்தி ஆடும்


..
அப்பனி டந்திரு வாலங் காடே.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/17 Siva Siva <naya...@gmail.com>

thangamani

unread,
Sep 19, 2012, 8:48:55 AM9/19/12
to சந்தவசந்தம்
மருவறு வெண்பிறைச் சடையன் கையில்
> ...மான்மழு தீயுடன் சூலம் கொள்வான்

> இருவினை தருமிடர் எளிதில் தீர
> ...இன்னருள் செய்திடும் ஈடில் ஈசன்
> கருவுறு பவக்கடல் கடக்கச் செய்வான்
> ...கண்ணுதல் தருவடி அமர்ந்து தானாய்
> அருமறை நால்வருக் குரைக்கும் எங்கள்
> ...அப்பனி டந்திரு ஆலங் காடே.

//முதல் அடியில் வாய்பாட்டைக் கவனிக்கவும். சூலம் கொள்வான் என்னலாம்.//

> ஊனையும் உயிரையும் உருக்கும் தெய்வம்
> ...ஒப்பிலா தயையினில் உதிக்கும் அன்பில்
> வானையும் மண்ணையும் அண்டம் யாவும்
> ...மாறிடா கதியினில் வைத்துக் காக்கும்

> தானொடு தனதெனும் அகந்தை போக்கும்

> ...தண்ணருள் தந்தெமைத் தாங்கும் வள்ளல்
> ஆனையின் ஈருரி போர்த்த எங்கள்
> ...அப்பனி டந்திரு வாலங் காடே.

//அகந்தைப் போக்கும் - ஒற்று மிகை; 'தானொடு தனதெனும் அகந்தை போக்கும்
என்றும்
அமைக்கலாம்.//
அனந்த் அவர்களுக்கு,
மிக்கநன்றி.பிழைகள் சரிசெய்து இட்டுள்ளேன்.

அன்புடன்,
தங்கமணி.

On Sep 17, 11:52 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> 2012/9/17 thangamani <tvthangam...@gmail.com>

Siva Siva

unread,
Sep 19, 2012, 5:58:00 PM9/19/12
to santhavasantham

7)
மணிமிட றன்மலை தலையால் ஏறும்
..
மாண்புகண் டவரையன் றம்மை யென்றான்
பணிபவர்க் கருங்கனி ஒத்தி ருப்பான்
..
பழவினைத் தொகுதியைப் பறைத்த ருள்வான்
துணிமதி முடிமிசைச் சூடி அல்லில்
..
சுற்றிலும் பூதக ணங்கள் ஆர்ப்ப
அணிகுழல் மலைமகள் காண ஆடும்


..
அப்பனி டந்திரு வாலங் காடே.

மணிமிடறன் - நீலகண்டன்;
பறைத்தல் - அழித்தல்;
துணிமதி - பிறைச்சந்திரன்;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/18 Siva Siva <naya...@gmail.com>

6)

vis gop

unread,
Sep 20, 2012, 12:59:01 AM9/20/12
to santhav...@googlegroups.com
2012/9/18 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
.
.
 
ஊனையும் உயிரையும் உருக்கும் தெய்வம்
...ஒப்பிலா தயையினில் உதிக்கும் அன்பில்
வானையும் மண்ணையும் அண்டம் யாவும்
...மாறிடா கதியினில்   வைத்துக் காக்கும்
தானையும்  தனதெனும் அகந்தைப் போக்கும்
...தண்ணருள் தந்தெமைத் தாங்கும் வள்ளல்
ஆனையின் ஈருரி போர்த்த எங்கள்
...அப்பனி டந்திரு வாலங் காடே.

>> அகந்தைப் போக்கும் - ஒற்று மிகை; 'தானொடு தனதெனும் அகந்தை போக்கும் என்றும் அமைக்கலாம். 

அன்புடன்,
அனந்த் 
---------------------------------
ஒப்பிலா தயையினில் . . .
மாறிடா கதியினில் . . . 
                                          ஐயம். இவைகளில் ஒற்று தேவையில்லையா?
பணிவுடனும்,
நல்வாழ்த்துக்களுடனும், 
கோபால்.

Hari Krishnan

unread,
Sep 20, 2012, 3:58:14 AM9/20/12
to santhav...@googlegroups.com


2012/9/20 vis gop <vis...@gmail.com>

ஒப்பிலா தயையினில் . . .
மாறிடா கதியினில் . . . 
                                          ஐயம். இவைகளில் ஒற்று தேவையில்லையா?
பணிவுடனும்,
நல்வாழ்த்துக்களுடனும், 
கோபால்.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் ஒற்று மிகும்.  அறியாப் பிள்ளை, மாறாக் கல்வி என்பன போன்றே இவையும்.

--
அன்புடன்,
ஹரிகி.

Siva Siva

unread,
Sep 20, 2012, 8:01:55 AM9/20/12
to santhav...@googlegroups.com
சில சொற்களை வடமொழிச் சொற்களாகக் கருதினால் புணர்ச்சியில் ஒற்று மிகாது வருமோ?
அப்படி எனின், இவ்விடங்களையும் அவ்வாறு கொள்ள வாய்ப்பு உள்ளதோ?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2012/9/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

-- 

vis gop

unread,
Sep 20, 2012, 8:10:58 AM9/20/12
to santhav...@googlegroups.com
தயை, கதி என்ற இரண்டு சொற்களையுமே தற்பவமாகத் தமிழ்ச் சொற்களாக்கித் தான் யாப்பில் எடுத்தாள முடியும் என்பது என் பணிவான கருத்து.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2012/9/20 Siva Siva <naya...@gmail.com>

thangamani

unread,
Sep 20, 2012, 1:12:43 PM9/20/12
to சந்தவசந்தம்
கனிதனை அம்மையின் கரத்தில் அன்று
...கனிவுடன் ஈந்தமுக் கண்ணன் அன்பர்
நனைமிகு நறுமலர் நற்றாள் தூவி
... நடமிடு கூத்தனை துதிசெய் வாரின்
புனைகிற தீந்தமிழ்ப் பாடல் மாந்தும்
...பூரணன் அருளினை வழங்கும் ஐயன்

அனலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
...அப்பனி டம்திரு வாலங் காடே.

நனை=தேன்.

அன்புடன்,
தங்கமணி.


On Sep 18, 5:27 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> கனைகடல் தனைக்கடை நாளெ ழுந்த
> .. கரியவி டந்தனை உண்ட கண்டன்
> சினமறு சிந்தையர் ஆகி என்றும்
> .. சேவடி தனைநினை சீலர் தங்கள்
> முனைவினை தீர்த்தருள் முக்கண் அண்ணல்
> .. முளைமதி சூடிக ணங்கள் சூழ
> அனலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/9/16 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Sep 20, 2012, 1:49:58 PM9/20/12
to சந்தவசந்தம்
தழையினை மலரினைச் சாற்றித் தீரா
...சஞ்சலம் தீர்த்திடும் மலர்த்தாள் போற்றிப்
பிழைமலி வாழ்விதில் பீழை யின்றிப்
...பேற்றினில் உய்வினைப் பெறவும் வேண்டின்
விழைவுடன் இன்னருள் விரைந்து செய்வான்
...வேலையின் விடமுணும் மெய்யன் வெய்ய

அழலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
...அப்பனி டந்திரு வாலங் காடே.

அன்புடன்,
தங்கமணி.

On Sep 17, 5:38 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> குழைமனத் தொடுதொழும் அம்மைக் காகக்
> .. குவிகரத் திடைப்பழந் தன்னை ஈவான்
> மழவிடை யாயருள் என்று வாழ்த்தி
> .. மலரடி வழிபடும் அன்பர் தங்கள்
> பழவினை தீர்த்தருள் பரமன் சுற்றும்
> .. பல்கணப் படைபல பறைகள் ஆர்ப்ப
> அழலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> அம்மை - காரைக்கால் அம்மையார்;
> மழ விடையாய் - இளமைவாய்ந்த இடபத்தை, வாகனமாக உடையவனே;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/9/15 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 3)
>
> --http://nayanmars.netne.net/

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 20, 2012, 2:45:15 PM9/20/12
to santhav...@googlegroups.com
புணரும் இரண்டு சொற்களும் வடமொழிச் சொற்களாயின் ஒற்று மிகாது (காட்டு: பாரத தேசம்; பாத கமலம்). எனவே கோபால், ஹரி சொல்வது போல இங்கு, ஒப்பிலாத் தயை, மாறிடாக் கதி என ஒற்று மிகும்.  ( சில வேளைகளில், கவிதை/பாடல் படிப்பவர் தயை, கதி போன்ற சொற்களின் வடமொழி உச்சரிப்பைப் பின்பற்றுவாராயின், அப்போது  ஒற்று மிகாமல் கூற வாய்ப்பிருக்கிறது.)
 தத்+ஸமம், தத்+வம்  என்னும் வடமொழிச் சொற்கள் தமிழாக்கப்பட்டு, தற்சமம், தற்பவம் என்று புணர்ந்துள்ளனவாகத் தெரிகின்றன.   
.. அனந்த்
   

2012/9/20 vis gop <vis...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 20, 2012, 2:48:12 PM9/20/12
to santhav...@googlegroups.com
கூத்தனை துதிசெய்வாரின் -ஒற்று 

2012/9/20 thangamani <tvthan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 20, 2012, 2:59:09 PM9/20/12
to santhav...@googlegroups.com
சாற்றி - சாத்தி  
தீரா*ச்*சஞ்சலம் 
தழையினை மலரினைச் சாத்தியும் தீராத சஞ்சலம் என்று பொருள் தர வாய்ப்புள்ளது. அவ்வாறு கருதினீர்களா? இல்லையெனில், சாத்திக்குப் பின் ஒற்றுக்குப் பதிலாக ஒரு கால்புள்ளி (கமா) இடலாம்.  
அனந்த் 

2012/9/20 thangamani <tvthan...@gmail.com>

Siva Siva

unread,
Sep 20, 2012, 8:51:25 PM9/20/12
to santhav...@googlegroups.com
Thanks for the clarification.

2012/9/20 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
Sep 20, 2012, 8:53:22 PM9/20/12
to santhavasantham

8)
பேர்க்கமு யன்றவ ரக்கன் தன்னைப்
..
பெருமலை மேல்விரல் இட்ட டர்த்தான்
நாக்குகள் பத்தினால் பாடக் கேட்டு
..
நாளொடு வாளையும் நல்கு நாதன்
பூக்கமழ் சடைமிசைத் திங்கள் சூடி
..
பூதக ணம்புடை சூழ மொந்தை
ஆர்க்கநள் ளிருளினில் நட்டம் ஆடும்


..
அப்பனி டந்திரு வாலங் காடே.

மொந்தை - ஒருகட்பறைவகை (A drum with one face);
ஆர்க்க - ஒலிக்க;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/19 Siva Siva <naya...@gmail.com>

7)

thangamani

unread,
Sep 21, 2012, 2:25:27 AM9/21/12
to சந்தவசந்தம்
கனிதனை அம்மையின் கரத்தில் அன்று
> ...கனிவுடன் ஈந்தமுக் கண்ணன் அன்பர்
> நனைமிகு நறுமலர் நற்றாள் தூவி
> ... நடமிடு கூத்தனைத் துதிசெய் வாரின்

> புனைகிற தீந்தமிழ்ப் பாடல் மாந்தும்
> ...பூரணன் அருளினை வழங்கும் ஐயன்
> அனலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
> ...அப்பனி டம்திரு வாலங் காடே.

> நனை=தேன்.
//கூத்தனை துதிசெய்வாரின் -ஒற்று//

திரு.அனந்த் அவர்களுக்கு,
கூத்தனை*த்* துதிசெய்வாரின் ஒற்று இட்டேன்.
தங்கள் சுட்டலுக்கு மிக்க நன்றி.

vis gop

unread,
Sep 21, 2012, 1:00:29 PM9/21/12
to santhav...@googlegroups.com
மதிப்புமிக்க வேட்டை அனந்த் அவர்களுக்குப் பணிவான வணக்கம். தங்கள் விளக்கத்துக்கு நன்றி. 
தமிழ் இலக்கணத்தில் அரிச்சுவடியான எனக்கு இன்னும் சில விளக்கங்களுக்குப் பிறகே இது விளங்கும் என எண்ணுகிறேன். 
ஒற்று மிகுதல் என்பது தமிழ்ச் சொற்களின் புணர்ச்சி பற்றியது. வடமொழிச் சொற்கள் தமிழில் ஏராளமாகக் கையாளப் பட்டாலும் அவை தமிழாக மாற்றப் பட வேண்டும் என்பது நியதி. ஆகவே தமிழ்ச் சொற்களாக்கப் பட்ட பின் ஒற்று மிகும் நியதிகள் அவற்றுக்கும் பிற செந்தமிழ்ச் சொற்களுக்குள்ள நியதிகளே என்பது என் எதிர்பார்ப்பு. கதி (गति),  தயா (दया) என்கிற வடசொற்கள் தம் இயல்பு உச்சரிப்புக்களை இழந்துதான் தமிழாக முடியும். அவைகளை வடமொழி போலவே உச்சரிப்பது ஏற்றுக்கொள்ளப் படலாம். ஆனால் இலக்கண முறையோடன்று. தாங்கள் கொடுத்த உதாரணங்கள் (பாரத-தேசம்), (பாத-கமலம்) இரண்டும் இரட்டை வார்த்தைகள் அல்ல. இரண்டும் இரு முழு வார்த்தைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை. இவற்றை வைத்து வடமொழிச் சொற்களாயின் ஒற்று மிகாது என்கிற முடிவுக்கு வரலாகாது என்று தோன்றுகிறது. 'சீதக் களப' என்னும் தொடரில் இரண்டு வடமொழி வார்த்தைகள் தமிழ் முறைப்படி புணர்வதைக் காணலாம்.
'பரதக் கலை', 'பஞ்சக் கர ஆனை' - பிற உவமைகள். 
இந்த உதாரணங்களால் தங்கள் கருத்தை நான் ஏற்க மறுப்பதாக எண்ண வேண்டாம். மேலும் தங்கள் விளக்கங்களைப் பெறவே இவண் இக்கருத்துக்களை இடுகிறேன். தங்கள் கருத்தைத் தீர்ப்பாக ஏற்கிறேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.



2012/9/21 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

thangamani

unread,
Sep 21, 2012, 2:25:16 PM9/21/12
to சந்தவசந்தம்
தங்கமும் வைரமும் சற்றும் ஈடோ
...சங்கரன் தண்ணருள் தானே செல்வம்
செங்கழல் சதங்கையும் செவியில் ஆர்க்க
...சிந்தையில் நிறைந்திடத் தெம்பை வார்க்க
அங்கமும் தேய்ந்திட அரன் தாள் எண்ணி
...அங்கையை ஊன்றியே அம்மை சேரும்

அங்கியைக் கையினில் ஏந்தி ஆடும்
...அப்பனி டம்திரு வாலங் காடே.

அன்புடன்,
தங்கமணி.

On Sep 19, 5:00 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> சங்கர பேயுருத் தருக வென்று
> .. தாள்பணிந் தம்மையார் வேண்ட ஆங்கே
> அங்கருள் புரிந்தவன் அன்பர்க் கன்பன்
> .. அயன்சிரம் அதிற்பலி தேரும் ஐயன்
> கங்குலிற் பூதக ணங்கள் சூழக்
> .. கரடிகை துடியொடு பறைமு ழங்க
> அங்கியைக் கையினில் ஏந்தி ஆடும்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/9/17 Siva Siva <nayanm...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 21, 2012, 9:16:28 PM9/21/12
to santhav...@googlegroups.com

அன்புள்ள கோபால்,

நிலைமொழி வருமொழி ஆகிய இரண்டும் வடமொழிச் சொற்களாயின் ஒற்று (வல்லொற்று) மிகாது என்பது அ.கி. பரந்தாமனாரின் 'கவிஞராக' நூலிலும் பிறிதொரு நூலிலும் காணும் செய்தி. பாதகமலம், ஆதி பகவன், தினகரன் ஆகியவை அங்குக் காணும் காட்டுகள். இன்னும் சில காட்டுகளும் உண்டு. சங்க காலம் என்று வல்லொற்றின்றி எழுதுவதற்கும் இதைக் காரணமாகக் காட்டுவர்.. மாறாக, தமிழ்ச்சங்கம், அந்தக் காலம், காலக்கோளாறு என்பன போன்று ஒரு வடமொழிச் சொல் கொண்டவை ஒற்று மிகுந்து புணர்வதைப் பார்க்கலாம்.

(பாரத-தேசம் பாத-கமலம் ஆகியவை முழுவார்த்தைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்று நீங்கள் சொல்வது எனக்குச் சரியாக விளங்கவில்லை; அவை ஏன் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும், அதுபற்றி எங்குக் குறிப்பு உள்ளது?)   
எப்படியாயினும், நீங்கள் சுட்டிய காட்டுகளில் காண்பது போல இரண்டு வடமொழிச் சொற்களைத் தற்சமமாக்காமல், தற்பவமாகத் தமிழில் பயிலும்போதும் ஒற்று மிகாமல் வரும் என்ற விதி மீறவும் படலாம் என்று தெரிகிறது.

 

அனந்த்

2012/9/21 vis gop <vis...@gmail.com>

Siva Siva

unread,
Sep 21, 2012, 10:06:34 PM9/21/12
to santhavasantham

9)
போதியல் பிரமனும் புள்ளூர் மாலும்
..
பொன்னடி முடியிவை காண வொண்ணாச்
சோதியன் தொழுமடி யார்கட் கென்றும்
..
துணையவன் தூயவன் அஞ்சொல் மாதோர்
பாதியன் பூரணன் வடியார் சூலப்
..
படையினன் பாரெலாம் படைத்தொ டுக்கும்
ஆதியன் அனலினை ஏந்தி ஆடும்


..
அப்பனி டந்திரு வாலங் காடே.

போது - பூ; இயல்தல் - தங்குதல்;
புள் - பறவை; ஊர்தல் - செல்லுதல்;
வடி ஆர் சூலப் படை - கூரான சூலாயுதம்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/20 Siva Siva <naya...@gmail.com>

8)

vis gop

unread,
Sep 22, 2012, 3:58:59 AM9/22/12
to santhav...@googlegroups.com
மதிப்புமிக்க வேட்டை அனந்த் அவர்களுக்குப் பணிவான வணக்கம். 
பாரத-தேசம் பாத-கமலம் ஆகியவை முழுவார்த்தைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்று நான் சொன்னது என்னுடைய (அறியாமையின்) யூகம். மக்களிடையே மிகப் பிரபலமாகி விட்ட சில வார்த்தைகள் அவ்வப்படியே (ஆங்கிலமாயினும், வடமொழியாயினும்) பயன்பாட்டில் இருப்பது இயல்புதானே. இந்த அடிப்படையிலே எழுந்த யூகமே அது. சில வார்த்தைகள் சம்பந்தம் இல்லாத பொருளுடன் பிரபலமாகி அப்படியே பயன்படுவதும் கண்கூடல்லவா? அழகான தமிழ்ச் சொல்லான 'கோளாறு' (the path of the planets, ग्रह चारं), சரியாக இயங்காமை (out of order, not in condition) போன்ற பொருளை அடைந்து அவ்வாறே ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறதே!
தங்கள் விளக்கத்தினால் ஒற்று மிகுதல் சற்று புரியத் தொடங்கியது. மிக்க  நன்றி. 
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2012/9/22 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

thangamani

unread,
Sep 22, 2012, 2:59:56 PM9/22/12
to சந்தவசந்தம்
பிணிபவச் சுழலதில் மீள வேண்டிப்
....பெய்கழல் தொழுபவர் பீழைத் தீர்ப்பான்
தணிவுறு உயர்தவக் கோலம் கொள்வான்
...தனியனாய் கானதில் தங்கும் காடன்
துணியெனப் பிறைதனைச் சூடும் தேவைச்
...சூழ்ந்திடும் கணங்களும் சுற்றி ஆர்ப்ப

அணிகுழல் மலைமகள் காண ஆடும்
...அப்பனி டந்திரு வாலங் காடே.

அன்புடன்,
தங்கமணி.

> 2012/9/18 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 6)

Siva Siva

unread,
Sep 22, 2012, 11:45:41 PM9/22/12
to santhavasantham

10)
கங்குலை ஒத்திருள் நிலவும் நெஞ்சர்
..
கருத்தனை அறிகிலார் கண்ணி லாரே
திங்களும் நாகமும் சேர்ந்து லாவும்
..
சென்னியன் சேவடி போற்றும் மாணி
சங்கர னேயருள் என்னக் காலன்
..
தனையுதைத் தடியரின் உயிரைக் காத்த
அங்கணன் அனலினை ஏந்தி ஆடும்


..
அப்பனி டந்திரு வாலங் காடே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/21 Siva Siva <naya...@gmail.com>

9)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 23, 2012, 8:44:07 AM9/23/12
to santhav...@googlegroups.com

அழகிய பாடல். ஒற்று மிகையும் குறைவும்  உள்ள 2 இடங்களைக் கவனித்தல் நன்று.


அனந்த்   


2012/9/22 thangamani <tvthan...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 6)

thangamani

unread,
Sep 23, 2012, 1:54:00 PM9/23/12
to சந்தவசந்தம்
நீர்க்குமி ழியாகுமிந் நிலையில் வாழ்வில்
...நிலைப்பதும் அவனது நேயம்; எங்கும்
பார்க்கும னைத்துமே பரனாய்க் காணும்
...பத்தியில் உருகிடப் பரிந்து வந்துத்
தீர்க்குமவ் வினைதனை செந்தாள் கூத்தன்
...துடியுடன் தெறிக்கும் பம்பை நாதம்

ஆர்க்கநள் ளிருளினில் நட்டம் ஆடும்
...அப்பனி .னிடந்திரு வாலங் காடே.

அன்புடன்,
தங்கமணி.

On Sep 21, 5:53 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)
> பேர்க்கமு யன்றவ ரக்கன் தன்னைப்
> .. பெருமலை மேல்விரல் இட்ட டர்த்தான்
> நாக்குகள் பத்தினால் பாடக் கேட்டு
> .. நாளொடு வாளையும் நல்கு நாதன்
> பூக்கமழ் சடைமிசைத் திங்கள் சூடி
> .. பூதக ணம்புடை சூழ மொந்தை
> ஆர்க்கநள் ளிருளினில் நட்டம் ஆடும்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> மொந்தை - ஒருகட்பறைவகை (A drum with one face);
> ஆர்க்க - ஒலிக்க;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/9/19 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 7)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Sep 23, 2012, 2:04:26 PM9/23/12
to சந்தவசந்தம்
பிணிபவச் சுழலதில் மீள வேண்டிப்
> ....பெய்கழல் தொழுபவர் பீழை தீர்ப்பான்

> தணிவுறு உயர்தவக் கோலம் கொள்வான்
> ...தனியனாய்க் கானதில் தங்கும் காடன்

> துணியெனப் பிறைதனைச் சூடும் தேவைச்
> ...சூழ்ந்திடும் கணங்களும் சுற்றி ஆர்ப்ப
> அணிகுழல் மலைமகள் காண ஆடும்
> ...அப்பனி டந்திரு வாலங் காடே.

பீழை தீர்ப்பான் -- மிகை
தனியனாய்*க்*கானதில்-- குறை
(சரியோ?)
திரு.அனந்த் அவர்களுக்கு,நன்றி
சுட்டலுக்கு மிக்கநன்றி.


அன்புடன்,
தங்கமணி.


On Sep 23, 5:44 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> அழகிய பாடல். ஒற்று மிகையும் குறைவும்  உள்ள 2 இடங்களைக் கவனித்தல் நன்று.
>
> அனந்த்
>

> 2012/9/22 thangamani <tvthangam...@gmail.com>

thangamani

unread,
Sep 23, 2012, 2:49:55 PM9/23/12
to சந்தவசந்தம்
கோதிலன் குணநிறை குன்றா னானின்
...குரைகழல் போற்றிக் கூடும் அன்பில்
நாதியும் அவனென நாடும் அன்பர்
...நடுவினில் துணையென நயமாய் நிற்கும்
நீதியின் உருவவன் நேயச் செம்மல்
...நெறிசெலும் தெளிவினை நெஞ்சில் சேர்க்கும்

ஆதியன் அனலினை ஏந்தி ஆடும்
...அப்பனி டந்திரு வாலங் காடே.

அன்புடன்,
தங்கமணி.

On Sep 22, 7:06 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> போதியல் பிரமனும் புள்ளூர் மாலும்
> .. பொன்னடி முடியிவை காண வொண்ணாச்
> சோதியன் தொழுமடி யார்கட் கென்றும்
> .. துணையவன் தூயவன் அஞ்சொல் மாதோர்
> பாதியன் பூரணன் வடியார் சூலப்
> .. படையினன் பாரெலாம் படைத்தொ டுக்கும்
> ஆதியன் அனலினை ஏந்தி ஆடும்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> போது - பூ; இயல்தல் - தங்குதல்;
> புள் - பறவை; ஊர்தல் - செல்லுதல்;
> வடி ஆர் சூலப் படை - கூரான சூலாயுதம்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/9/20 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 8)
>
> --http://nayanmars.netne.net/

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 23, 2012, 4:59:16 PM9/23/12
to santhav...@googlegroups.com
ஒவ்வொரு வரியும் அழகாக அமைந்த அருமையான பாடல். 

 >> எங்கும்
பார்க்கும னைத்துமே பரனாய்க் காணும்
...பத்தியில் உருகிடப் பரிந்து வந்துத்
தீர்க்குமவ் வினைதனை செந்தாள் கூத்தன்
...துடியுடன் தெறிக்கும் பம்பை நாதம்
  
வந்துத் தீர்க்கும் - ஒற்று மிகை; தெறிக்கும்- வாய்பாத்தை ஒட்டித் தெறித்திடும் எனலாம். 

அனந்த்

பி.கு. முந்தைய பாடலில் ஒற்றுச் சரியாக்கியது நன்று.   



2012/9/23 thangamani <tvthan...@gmail.com>

Siva Siva

unread,
Sep 23, 2012, 7:22:10 PM9/23/12
to santhavasantham

இத்தொடரின் கடைசிப்பாடல்:

11)
பேரழ குடலெனக் கெதற்கென் றன்று
..
பேயுரு வேண்டிய டைந்த அம்மை
சீரடிக் கீழமர்ந் தினிது பாடத்
..
திருவருள் புரிந்தவன் தேவ தேவன்
நீரடை சடையுடை நிமலன் கண்ணார்
..
நெற்றியன் பாரிடம் முழவொ லிக்க
ஆரழல் அங்கையில் ஏந்தி ஆடும்


..
அப்பனி டந்திரு வாலங் காடே.

பதம் பிரித்து:
"
பேர் அழகு உடல் எனக்கு எதற்கு" என்று அன்று
..
பேய் உரு வேண்டி அடைந்த அம்மை
சீர் அடிக்கீழ் அமர்ந்து இனிது பாடத்
..
திருவருள் புரிந்தவன்; தேவ தேவன்;
நீர் அடை சடையுடை நிமலன்; கண் ஆர்
..
நெற்றியன்; பாரிடம் முழவு ஒலிக்க,
ஆர் அழல் அங்கையில் ஏந்தி ஆடும்
..
அப்பன் இடம் திருவாலங்காடே.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/22 Siva Siva <naya...@gmail.com>

10)

thangamani

unread,
Sep 24, 2012, 3:52:12 PM9/24/12
to சந்தவசந்தம்
எங்குளன் எம்பிரான் என்று தேடி
...ஏங்கிடும் எளியரின் இதயம் தன்னில்
தங்குவன்; வெவ்வினைத் தாங்கும் உள்ளம்
...தந்திடும் சங்கரன் தாளைப் போற்றும்
குங்கும முகமலர் குளிர்ந்த பார்வை
...கொண்டவள் கூறுடைக் கோல மேவும்

அங்கணன் அனலினை ஏந்தி ஆடும்
....அப்பனி டந்திரு வாலங் காடே.

அன்புடன்,
தங்கமணி.


On Sep 23, 8:45 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 10)
> கங்குலை ஒத்திருள் நிலவும் நெஞ்சர்
> .. கருத்தனை அறிகிலார் கண்ணி லாரே
> திங்களும் நாகமும் சேர்ந்து லாவும்
> .. சென்னியன் சேவடி போற்றும் மாணி
> சங்கர னேயருள் என்னக் காலன்
> .. தனையுதைத் தடியரின் உயிரைக் காத்த
> அங்கணன் அனலினை ஏந்தி ஆடும்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/9/21 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 9)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Sep 24, 2012, 11:10:06 PM9/24/12
to santhavasantham
Here are a couple of youtube clips from the kAraikkAl ammaiiyAr movie:

http://www.youtube.com/watch?v=-K8UL9EosZI&feature=relmfu

http://www.youtube.com/watch?v=uqmDccfjik8&feature=relmfu

(There are several more clips as well from that movie).

2012/9/23 Siva Siva <naya...@gmail.com>

Hari Krishnan

unread,
Sep 25, 2012, 6:03:25 AM9/25/12
to santhav...@googlegroups.com


2012/9/20 vis gop <vis...@gmail.com>

தயை, கதி என்ற இரண்டு சொற்களையுமே தற்பவமாகத் தமிழ்ச் சொற்களாக்கித் தான் யாப்பில் எடுத்தாள முடியும் என்பது என் பணிவான கருத்து.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

அதே அதே சபாபதே!  ஈறுகெட்ட எதிர்மறையைப் பார்த்தவன் தயையும் கதியையும் பார்க்கவில்லையே! கதியற்றவனுக்குத் தயை புரியுமையா....(கதியற்றவனுக்கு தயையா அல்லது கதியற்றவனுக்குத் தயையா? தெர்லே!)

vis gop

unread,
Sep 25, 2012, 6:26:18 AM9/25/12
to santhav...@googlegroups.com
என் புரிதல் படி அது  கதியற்றவனுக்குத் தயை தான். 
[kadhiyatravanukkuth thayai]
गति, दया தமிழில் இல்லை. இந்த விஷயத்தில் வட சொல்லுக்குச்  சில சலுகைகள் இருக்கலாம். அவை புழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இலக்கணத்தில் இடம் பிடித்திருக்கும். [ஊகம்!]
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2012/9/25 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Balasubramanian N.

unread,
Sep 25, 2012, 7:10:02 AM9/25/12
to santhav...@googlegroups.com

ஹ்ம்ம்ம்ம்... கதியற்றவர்க்குத்தயையில்லை, தயைபெற்றோர்க்குக்கதியில்லை! இராசக்கோபுரத்துத்தீட்சிதர் விழாவுக்குக்கவர்னர் வந்துப் பேசியபோதுக்கேட்டதை *ஸொல்கிறேன்!!

பாலச்சுப்பிரமணியன் விகடக்கவி

2012/9/25 vis gop <vis...@gmail.com>

Hari Krishnan

unread,
Sep 25, 2012, 8:16:04 AM9/25/12
to santhav...@googlegroups.com


2012/9/25 vis gop <vis...@gmail.com>
[ஊகம்!]


யப்பா கோவாலு!

சீவக சிந்தாமணியில, விமலையார் இலம்பகம்னு ஒண்ணு.  அதுல ஆரம்பகட்டம் இது.  அது வரைக்கும் ராஜகுமாரன் என்று நெருங்கிய நண்பர்கள் கூட அறிந்திராத சீவகனை, ராஜகுமாரன் என்று ஒருகட்டத்தில் அறிந்து கொண்டு, மகிழ்ச்சியில் பொதுமக்களுக்கு நடுவில் உற்சாகமாக் கூவி அறிவித்துவிடுகிறார்கள்.  ‘இதுவரைக்கும் மாணிக்கம் சேற்றைப் பூசிக்கொண்டு மறைந்து கிடந்தது.  இப்போது நீங்கள் அதை வெளிப்படுத்திவிட்டீர்கள்.  இனிமேல் நீங்கள் இவனைப் பாதுகாக்க என்னென்ன எச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று சீவகனுடைய தம்பியான நந்தட்டன் சொல்லிக்கொண்டு வருகிறான்.  அவற்றில் ஒரு பாட்டு இது.

வண்ணப் பூமாலை சாந்தம் வால் அணி கலன்கள் ஆடை
கண் முகத்து உறுத்தித் தூய்மை கண்டலால் கொள்ள வேண்டா
அண்ணல் அம் புள்ளோடு எல்லா ஆயிரம் பேடைச் சேவல்
உண்ணு நீர் அமிழ்தம் காக்க ஊகமோடு ஆய்க என்றான்

சீவகன் அணிந்துகொள்ளும் பூமாலை, சந்தனம், அணிகலன்கள், ஆடை இவற்றையெல்லாம் ஆயிரம் பெடை அன்னங்கள் புடைசூழ நிற்கும் ராஜஹம்சத்தின் கண்ணுக்கு நேரே காட்டி, அவை தூய்மையானவைதானா என்று உறுதிப்படத்திக்கொள்ள வேண்டும்.  அவன் பருகும் நீரையும் உண்ணும் சோற்றையும் முதலில் ஊகத்துக்குக் கொடுத்துப் பரிசோதித்த பிறகே அவனுக்குக் கொடுக்க வேண்டும்.

ஊகம்னா கருங்குரங்கு.  கெடச்ச சந்துல எல்லாம் என்னிய கருங்குரங்கு, கருங்குரங்குன்னு சொல்றியேப்பா கோவாலு!  இது நாயமா!  தருமமா!

(நகா போலியன் தகா வாலியனைத் தடிக்கொண்டுத் தாக்கத் தன்கைத்தலத்தையோச்சா முன்னம் ஐயாம் எஸ்கேப்!)

vis gop

unread,
Sep 26, 2012, 12:51:42 AM9/26/12
to santhav...@googlegroups.com
[ஊகம்னா கருங்குரங்கு.  கெடச்ச சந்துல எல்லாம் என்னிய கருங்குரங்கு, கருங்குரங்குன்னு சொல்றியேப்பா கோவாலு!  இது நாயமா!  ]
அரி! (சிங்கம்!),
ஊகம்னா கருங்குரங்குன்னு சொல்லித்தந்ததுக்கு நன்றி. ஆனா என்னையதாங் சொல்லிக்கிட்டேங். அத்தத் தப்பா எடுத்துக்கிட்டு இப்டித் திட்டிருக்க வாணாங்!
கோன்னா மாட்ட நெனச்சுக்குவேங். என்ன வாலுன்னுட்டியே! நாயமான்னு இடைக்குறை போட்டுவேற நைசாக் கேலி!
இனிமேல்ட்டு நெசமாலுமே திட்டித் திட்டி எழுதரத்தத் தவுற வேற வழி இல்லப்பா!
நல்வாழ்த்துக்களுடன்,  [ழ் போட்டுக்கிறேங். எதுனா நெனச்சுக்கப் போறே!] 
கோபால்.

2012/9/25 Hari Krishnan <hari.har...@gmail.com>


--

Siva Siva

unread,
Sep 26, 2012, 10:01:28 PM9/26/12
to santhavasantham

2011-05-17
சண்பை நகர் (சீகாழி)
------------------------------
(
மா மா மா புளிமாங்காய் - என்ற வாய்பாடு)
(
சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - 'முந்தி நின்ற வினைகள் அவைபோகச்')

1)
மழுவும் மானும் ஏந்தும் மணிகண்டன்
பழுதில் பத்தர் பரவப் பயிலூராம்
குழுமிக் குயில்கள் கூவ முகில்வந்து
தழுவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/9/23 Siva Siva <naya...@gmail.com>

இத்தொடரின் கடைசிப்பாடல்
:

It is loading more messages.
0 new messages