நாடுமனம் போகாது நைந்து

18 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Feb 24, 2026, 8:35:39 PMFeb 24
to santhav...@googlegroups.com
25-2-26-புதன்கிழமை

--🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
ஆயரைக் காத்தான் அருமைமிகு ஐவரையும்
தூயராய்க் காத்தான் துளவத்தான் - போயெவரும்
வாடிநிற்க வீடுதரும் வைகுந்தன் வாழ்வளிப்பான்
நாடுமனம் போகாது நைந்து


  _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_


+91 98441 24542/9980794542

Arasi Palaniappan

unread,
Feb 24, 2026, 9:53:44 PMFeb 24
to சந்தவசந்தம்
அருமை!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNR9Pc7mFmt4GqXC128h9ysG5FyNrWXNSsajkk8ikHD6EdPPg%40mail.gmail.com.

Sai Ganesan H

unread,
Feb 25, 2026, 12:27:50 AMFeb 25
to santhav...@googlegroups.com
அருமை! 

Parthasarathy S

unread,
Feb 25, 2026, 1:32:15 AMFeb 25
to santhav...@googlegroups.com
நன்றிகள் பல திரு அரசி பழனியப்பன் அவர்களே! 



Parthasarathy S

unread,
Feb 26, 2026, 5:00:56 AMFeb 26
to santhav...@googlegroups.com

26-2-26 வியாழக்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
கூரை கொடுப்பான் குளிர்மழை காத்திடுவான்
தேரைக் களத்தில்  திறமிடுவான் - தாராளன்
கூடாத வெல்லாம் கொடுப்பானைக் கொண்டலை

நாடுமனம் போகாது நைந்து


 _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_
--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

Parthasarathy S

unread,
Feb 26, 2026, 5:39:25 AMFeb 26
to சந்தவசந்தம்
நன்றி திரு சாய் கணேசன் அவர்களே!

Parthasarathy S

unread,
Feb 27, 2026, 9:01:27 PMFeb 27
to santhav...@googlegroups.com
28-02-26 சனிக்கிழமை

 🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா – 🪷🪷🪷
ஓடிவுடன் வந்து உதவிக் கரந்தந்து
வாடும் களிறுக்கு வாழ்வளித்தான்  - காடிருக்கும்
வேடுவனைச் சோதரனாய் வேணும் வரதனையே

நாடுமனம் போகாது நைந்து


 _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Arasi Palaniappan

unread,
Feb 28, 2026, 1:23:42 AMFeb 28
to சந்தவசந்தம்
ஓடியுடன் வந்தும்  உதவிக் கரந்தந்தும் 

வாடும் களிறுக்கு வாழ்வளித்தான்  - காடிருக்கும்
வேடுவனைச் சோதரனாய் வேணும் வரதனையே
நாடுமனம் போகாது நைந்து

என்று அமைத்தால் குற்றியலுகரத்தால் தளை தட்டாது!

Parthasarathy S

unread,
Feb 28, 2026, 2:19:38 AMFeb 28
to santhav...@googlegroups.com
அடியேன், எம்பெருமான் பரமபதத்தில் இருந்தே காப்பாற்றியிருக்கலாம் ஆனால் ஆனை அழைத்ததற்கு மடுக்கரைக்கு வந்து உதவியதால் குற்றியலுகரம் தட்டாமல் இருக்க வந்தே என்று ஏவகாரத்தை இட்டு  ஓடியுடன் வந்தே  உதவிக் கரந்தந்து அமைக்கிறேன்

திருத்தியமைக்கு நன்றிகள் பல. தாஸன்

Parthasarathy S

unread,
Feb 28, 2026, 10:06:03 PMFeb 28
to santhav...@googlegroups.com
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
சிறையில் பிறந்து சிறைவிடுப்பான் சற்றும்
மறையில் பிறழா மதியான் - குறையிலாப்
பீடுடையன் பாற்கடலன் பீதக வாடையனை

நாடுமனம் போகாது நைந்து


 _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Mar 2, 2026, 1:56:15 AMMar 2
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
கம்பத்தைத் தாயாக்கிக் காட்டுவரும் வேறுண்டோ
கொம்பினில் பூமி கொள்வரோ - தம்மிடைத்
தேடிவரும் பத்தருக்குத் தம்மையே ஈபவரை

நாடுமனம் போகாது நைந்து



  _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Mar 3, 2026, 1:39:00 AMMar 3
to சந்தவசந்தம்
3-3-26 செவ்வாய்க்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
கோடா மனமீவன் குற்றம் அருகினில்
நாடா வகையில் நடத்துவன் - ஆடாது
வீடே விரும்பி வரதனவன் வானடியை

நாடுமனம் போகாது நைந்து


  _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Mar 4, 2026, 5:27:41 AMMar 4
to santhav...@googlegroups.com
04.03-26 புதன் கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
தேடுமறை தேடத் தெளிவாய்த் தெரியாதான்
பாடுநிறை பன்னிருவர் சொல்தேர்வான் - கூடுவார்
கோடிகுறை நெஞ்சிடான் கொள்வான் குணத்தையே

நாடுமனம் போகாது நைந்து


   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Mar 5, 2026, 1:32:32 AMMar 5
to santhav...@googlegroups.com
05.03-26 வியாழக் கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
ஆடியங்கு நாகம் அடக்கிடுவான் நாடியே
ஓடிவரும் மாற்றலரை ஓய்த்திடுவான் - கூடியே
பாடுவோர் எக்குலமோ பாராதான் கோவிந்தன்

நாடுமனம் போகாது நைந்து


   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Mar 6, 2026, 7:29:18 PMMar 6
to santhav...@googlegroups.com
06.03-26 வெள்ளிக் கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
கோடியாய் அண்டங்கள் கொண்டவன் நாடில்லை
காடுசெல்  என்றால் கமலமுகம் - கோடாதான்
டிலான் யார்க்குமே எட்டாத வீடுடையான்
*நாடுமனம் போகாது நைந்து


   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Mar 7, 2026, 5:55:26 AMMar 7
to santhav...@googlegroups.com
07-03-26 சனிக்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
நாடி தனக்கொரு நன்மை கொளாதவன்
ஓடி வருவான் உதவிக்கு - வீடதை
நேடி சரணமென நிற்போர் நிலைப்பரே

நாடுமனம் போகாது நைந்து


   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_
Reply all
Reply to author
Forward
0 new messages