Fwd: அசாத்தியமான அற்புதமான மூன்று நூல்கள்

242 views
Skip to first unread message

K.R. Kumar

unread,
Aug 3, 2015, 10:00:37 AM8/3/15
to santhav...@googlegroups.com

எனக்கு கீழ்க்கண்ட மடல் இன்று வந்தது. இதுவரை நான் கேள்விப்படாத செய்திகள். ஆகவே உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்.

Forward செய்வதை நம் குழு ஆதரிப்பதில்லை. ஆனாலும் செய்திகளின் தரத்தை முன்னிட்டு அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,
குமார்(சிங்கை)

பிகு: இதுபோல தமிழ் இலக்கியங்களில் நம் மூதாதைப் புலவர்கள் கவிதைகள், செய்யுட்கள் யாத்திருக்கிறார்களா ?

---------- Forwarded message ----------
From: "Srinivasan G" <gsrin...@gmail.com>
Date: Aug 2, 2015 10:51 PM
Subject: அசாத்தியமான அற்புதமான மூன்று நூல்கள்
To:
Cc:

ஒரே காவியத்தில் Palindrome முறையில் ராமாயண , மஹாபாரத இதிஹாசங்களா என்ற வியப்பு அடங்கும் முன்னரே
பாகவதத்தையும் உள்ளடக்கிய காவியமும் உண்டு என்ற தகவலைப்  படிக்கும்போது வியப்பின் உச்சிக்கே சென்று விடுவோம்.

அன்பன்
ஸ்ரீநிவாஸன்

ஹிந்து தர்மத்தின் அற்புதமான இதிஹாஸங்களாக இலங்குபவை ராமாயணமும் மஹாபாரதமும்.
வேதத்தின் சுருக்கமே ராமாயணம் என்றும் ஐந்தாவது வேதம் தான் மஹாபாரதம் என்றும் தொன்று தொட்டு இந்த நாட்டில் போற்றப்பட்டு வருகிறது.

உலகில் முதல் முதல் எழுந்த காவியம் என்பதால் ஆதி காவியம் என ராமாயணம் கருதப்படுகிறது. 644 ஸர்க்கங்களில் 24000 சுலோகங்களில்
ஏழு காண்டங்களில் தர்மத்தின் திரு உருவான ராமனின் கதையை சம்ஸ்கிருதத்தில் மஹரிஷி வால்மீகி தருகிறார்.

18 பர்வங்களில் (100 உப பர்வங்களில்) ஒரு லட்சம் சுலோகங்களில் 2314 அத்தியாயங்களில் மஹரிஷி வேத வியாஸரால் மஹா பாரதம் இயற்றப்பட்டுள்ளது.

காலம் காலமாக இந்த இரு இதிஹாஸங்களும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஏராளமானோரை பல்லாயிரக்கணக்கில் கட்டுரைகள், நூல்கள் மற்றும்
காவியங்களை வெவ்வேறு மொழிகளில் இயற்ற ஊக்குவித்திருப்பதை உலகமே அறியும்.

ஆனால் பாரதத்தைச் சேர்ந்த மூன்று அதிசயக் கவிஞர்கள் இந்த இரு இதிஹாஸங்களை வைத்து ஒரு அற்புதமான அதிசயமான செயலை சம்ஸ்கிருத மொழியில்

சாதித்துள்ளனர்.

தைவக்ஞர் சூரிய கவி

தைவக்ஞர் சூரிய கவி என்பவர் பெரும் சம்ஸ்கிருத விற்பன்னர், கவிஞர்! அவர் 36 ஸ்லோகங்கள் அடங்கிய ராமகிருஷ்ண விலோம காவ்யம் என்று ஒரு காவியத்தை
இயற்றியுள்ளார். இதில் ஸ்லோகத்தை முதலிலிருந்து படித்துக் கொண்டு போனால் ராமாயணக் கதையைக் காணலாம். ஸ்லோகத்தின் பின்னாலிலிருந்து திருப்பிப்
படித்துக் கொண்டு போனால் வருவது இன்னொரு ஸ்லோகம். அதில் மஹாபாரதக் கதையைக் காணலாம். விகடகவி, தேருவருதே போன்ற சொற்களில் வரும்
எழுத்துக்களைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டாலும் அதே சொற்கள் வருவது ஒரு சொல் அலங்காரம். இதை ஆங்கிலத்தில் Palindrome என்கிறோம்.

ஒரு ஸ்லோகம் அல்ல, பல ஸ்லோகங்கள் அடங்கிய ஒரு காவியமே இப்படி அமைக்கப்பட்டுள்ளது என்றால்..!

வியக்க வைக்கும் இந்தக் காவியத்திலிருந்து உதாரணத்திற்கு இரு பாடல்களை இங்கு காணலாம்.

ramayan,mahabaharat

கௌசிகே த்ரிதபஸி ஷ்ரவ்ரதி யோத்ததாத் த்விதநயஸ்வமாதுரம் I
ரந்துமாஸ்வயன தத்தித்தாதயோ தீவ்ர ரக்ஷஸி பதத்ரிகேஷிகௌ II
-ஆறாவது ஸ்லோகம்

இதன் பொருள் : எல்லா உயிரினங்களின் ஆசைகளை நிறைவேற்ற உறுதி பூண்ட தசரத மன்னர், (மனோ வாக்கு காயம் ஆகிய )மூன்று விதத்திலும் தவம் செய்த
ரிஷி விஸ்வாமித்திரருக்குத் தன் செல்வங்களான ராமர், லக்ஷ்மணரைத் தந்தார்.

இதே ஸ்லோகத்தை திருப்பிப் போட்டுப் படித்தால் பொருள் மாறி விடும் இப்படி:- புண்ணியச் செயல்களைச் செய்த ஓ, பரீட்சித்து மன்னனே, ராக்ஷஸ குணத்தில்
வேறு யாரையும் ஒப்பிடமுடியாத பூதனையையும் பறவையின் உருவில் இருந்த பகனையும் குதிரையின் உருவில் இருந்த கேசினையும் விளையாட்டு லீலையாக
எல்லையற்ற ஞானம் உடைய ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் உடலிலிருந்து (உயிரை நீக்கி) முக்தி அளித்தார்.

rama brown

இதே காவியத்திலிருந்து இன்னொரு பாடலைப் பார்ப்போம்.
க்ஷதாய மா யத்ர ரகோரிதாயுர் அங்கானுகானன்யதயோயனானி I
நிநாய யோ வன்யனகானுகாரம் யுதாரிகோரத்ரயமாயதாக்ஷ: II
– 34வது ஸ்லோகம்

இதன் பொருள் : சுக்ரீவனும் இதர குரங்குகளும் யுத்தகளத்தில் நுழைந்தவுடன் அழியப் போகும் வாழ்வை உடையவனான ராவணனால் ராமருக்கு எந்தக் காயத்தையும்
விளைவிக்க முடியவில்லை.
இதையே பின்னாலிலிருந்து படித்தால் வரும் பொருள் இது: நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணர் மலை போன்ற உருவத்தை ஒத்த (அகாசுரன், கேசின், பூதனா ஆகிய)
மூன்று பயங்கரமான அசுரர்களை வதம் செய்தான்.

இது போன்ற விலோம காவியத்தின் ஆதிகர்த்தா சூர்யகவியே என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர் பார்த்தபுரத்தில் (அஹ்மத் நகர்) 1580ஆம் ஆண்டு வாக்கில்
வாழ்ந்த அற்புதமான கவிஞர். இதற்கு அவரே ஒரு உரையையும் எழுதி இருக்கிறார். அதில் இப்படிப்பட்ட ஒரு காவியம் செய்வது எவ்வளவு கஷ்டமானது என்பதையும் விளக்கியுள்ளார்.

rama B&W

சிதம்பர கவியின் அற்புத காவியங்கள்

அடுத்து 1600ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் வாழ்ந்த சிதம்பர கவி என்பவர் சப்தார்த்த சிந்தாமணி என்ற நூலை இயற்றியுள்ளார். இதிலும் முதலிலிருந்து படித்தால் ராமாயணமும்
பின்னாலிலிருந்து படித்தால் மஹாபாரதக் கதையும் மிளிரும். தஞ்சை சரஸ்வதி மஹாலில் சுவடி வடிவில் உள்ள இந்த அற்புத நூல் இன்னும் அச்சிடப்படவில்லை எனத் தெரிகிறது.
ஆனால் இதன் பெருமை உலகெங்கும் பரவி விட்டிருக்கிறது.

இவர் இன்னும் ஒரு படி மேலே போய் கதா த்ரயம் என்ற காவியத்தையும் இயற்றி இருக்கிறார். இதில் ஸ்லோகத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தால் ராமாயணம், மஹாபாரதம்
ஆகியவற்றோடு பாகவதக் கதையையும் படிக்கலாம், ஒரே பாடலில் மூன்று பிரம்மாண்டமான நூல்கள்!

அதிசயம், ஆனால் உண்மை! உலகில் இது போல எந்த ஒரு மொழியிலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சாதனையாக இது கருதப்படுகிறது!

கவிஞர் வேங்கடாத்வரி

சிதம்பர கவியை அடுத்து அதிசயமான மூன்றாவது கவிஞராகத் திகழ்பவர் வேங்கடாத்வரி என்பவர். 1650ஆம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞர் இவர்.
இவரது ராகவ யாதவீயம் என்பது 30 ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு அரிய நூல். ஸ்லோகத்தை நேரடியாகப் படித்தால் ராமாயணக் கதையையும் தலைகீழாகப் படித்தால்
மஹாபாரத கதையையும் இதில் படிக்க முடிகிறது.இதில் இரு ஸ்லோகங்களைப் பார்க்கலாம்.

ராமநாமா சதா கேதபாவே தயாவான் அதாபீனதேஜா: ரிபௌ ஆனதே I
காதிமோதாஸஹாதா ஸ்வபாஸா ரஸாமே சுக: ரேணுகாகாத்ரஜே பூருமே II
-ஸ்லோகம் 7

அனுலோமமாக அதாவது முதலிலிருந்து கடைசி வரை வரிசைக்கிரம்மாகப் பார்த்தால் இதன் பொருள் : துயரப்படுவோரிடம் எப்போதும் சதா கருணையுடன் திகழும் ராமபிரான்,
சூரியனைப் போலப் பிரகாசிப்பவரும் சுலபமாக அணுகக்கூடியவரும் முனிவர்களைத் துன்புறுத்திய ராக்ஷஸர்களை அழித்தவருமான அவர் ரேணுகாவின் புத்திரரும் பூமி
அனைத்தையும் தனது செல்வமாகக் கொண்டு சுற்றித் திரிந்தவருமான பரசுராமரைப் பார்த்த போது குளிர்ந்த ஒளியுடன் அடக்கமுடன் திகழ்ந்தார்.

இதையே திருப்பிப் போட்டால் வரும் ஸ்லோகம்:

மேருபூஜேத்ரகா காணுரே கோஸுமே சா அரஸா பாஸ்வதா ஹா சதா மோதிகா I
தேன வா பாரிஜாதேன பீதா நவா யாதவே அபாத் அஸ்வேதா சமானாமரா II

பிரதிலோமமாக அதாவது கடைசியிலிருந்து முதல் வரை (மேலே உள்ள ஸ்லோகப்படி பார்த்தால்) இதன் பொருள் : மேருவையும் வெல்லும் ரைவர்த்தக மலையில் இருந்தபோது
பாரிஜாத மலரை அடைந்த ருக்மிணி பூமியில் உள்ள குறைந்த வாசனையே உள்ள எந்த புஷ்பங்களின் மீதும் ஆசையின்றிப் போனதோடு ஒரு புதிய மேனியை அடைந்தவள் போலத்
திகழ்ந்தாள்.

ஆக அனுலோமமாகவும் பிரதிலோமமாகவும் உள்ள இந்த விலோம காவியத்தின் அனைத்துப் பாடல்களையும் வார்த்தை வார்த்தையாக எடுத்து அர்த்தத்தைக் கூறப் போனால்
கவிதையின் அழகும் ஆழமும் நன்கு புரிவதோடு பிரமிப்பும் வியப்பும் வரும்.

இன்னும் ஒரு பாடல்:
தாம் ஸ: கோரமதோஷ்ரீத: விக்ராம் அஸதர: அதத I
வைரம் ஆஸ பலாஹாரா வினாஸா ரவிவம்சகே II
– ஸ்லோகம்18

அனுலோமமாக இதன் பொருள்: ராமனின் வலதுகரமாகத் திகழ்ந்த பயமே அறியாத லக்ஷ்மணனால் மூக்கு அறுபட்டவுடன் சூர்ப்பணகை ராமன் மேல் பழி வாங்கத் துடித்தாள்.
இந்த ஸ்லோகத்தை பிரதிலோமமாக கடைசியிலிருந்து தலைகீழாக எழுதிப் பார்த்தால் வருவது இந்த ஸ்லோகம்:-

கேசவம் விரஸானாவி: ஆஹ ஆலாபஸமாரவை: I
ததரோதஸம் அக்ராவித: அஷ்ரித: அமரக: அஸதாம் II

இதன் பொருள்:-மலைகளின் கொட்டமழிப்பவனும், தேவர்களின் தலைவனும், அசுரர்களை அழிப்பவனுமான இந்திரன் தனது சந்தோஷம், பலம், ஒளி ஆகியவற்றை இழந்தான்.
வானையும் பூமியையும் படைத்த கிருஷ்ணனிடம் சமாதானப்படுத்தும் சொற்களைப் பேசினான்.
காவியம் படிப்போம்; பரப்புவோம்!

(சம்ஸ்கிருத) இலக்கணத்திற்குட்பட்டு பொருள் பொதிந்த சொற்களை இப்படி அமைப்பதென்பது இறை அருளினால் மட்டுமே வரும் என சூரிய கவியே மனம் நெகிழ்ந்து
சொல்லியுள்ளார்.

இப்படிப்பட்ட தெய்வீகக் கவிஞர்கள் இந்த நாட்டில் தோன்றி இதிஹாஸ மேன்மையையும் சம்ஸ்கிருத மொழியின் அருமையையும் இவ்வாறாக நிலை நாட்டி இருப்பது
அதிசயங்களின் சிகரமன்றோ !

krisna bow

பாதுகைகள் தோன்றிய வரலாறு

* சீதா-ராம கல்யாணம் முடிந்து அயோத்தி வந்த ராமரை எல்லோரும் வாழ்த்தி விலை உயர்ந்த பரிசுகளை அளித்தனர். அப்போது மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும்
தொழிலாளி அழகிய பாதுகைகளை மிகவும் சிரத்தையுடன் செய்து கொண்டு வந்தான். பின்னர், உயரிய பரிசுகளை பலர் தரும் போது நாம் அற்ப பாதுகைகளையா
தருவது என வருந்தி பின் வாங்கினான். இதைக் கவனித்த ராமர், "உண்மையான உழைப்பில் உதித்த உன் பரிசுதான் உயர்ந்தது' எனக் கூறி பாதுகைகளை ஏற்றுக்கொள்ள,
மித்ரபந்து மகிழ்ந்து போனான். ராமர் காட்டுக்குப் புறப்பட்ட போது, "வனவாசம் போகும் போது எதையும் உடன் எடுத்துப் போகக் கூடாது தான். இருந்தாலும் இந்தப்
பாதுகைகளை அணிந்து செல்கிறேன்' என்று கைகேயியிடம் கூறிவிட்டு, கண்ணீருடன் நின்ற மித்ரபந்துவை பார்த்து, "விலை உயர்ந்த பரிசுகள் எனக்குப் பயன்படவில்லை.
உன்னுடைய பாதுகைகள்தான் கல்லும், முள்ளும் குத்தாமல் காக்கப் போகிறது' என்றார். அந்தப் பாதுகைகள்தான் 14 வருஷம் அயோத்தியையும் ஆண்டது

பிரமிக்க வைக்கும் அற்புத வடிவமைப்பு
                                                                 
நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள திருத்தலம் தில்லை விளாகம். இங்கு பஞ்சலோகத்திலான ஸ்ரீகோதண்ட ராமர், சீதாபிராட்டியார்,
இலக்குவன், அனுமன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். இந்த விக்கிரகங்களின் கையிலும், காலிலும் உள்ள பச்சை நிற நரம்புகள்,
விரலில் உள்ள ரேகைகள், கை, கால்களில் உள்ள நகங்கள் மற்றும் அனுமனின் திருமேனியில் மண்டிக் கிடக்கும் உரோமங்கள், தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஸ்ரீராமர் கானகம் செல்லும் போது அவருடைய அன்னை கௌசலை இடது மணிக்கட்டில் கட்டிய ரட்சா பந்தன், இடது முட்டியின் கீழே கட்டப்பட்டுள்ள
ரட்சை, எழுத்துக்களுடன் கூடிய தனுசு போன்றவையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

N. Ganesan

unread,
Aug 3, 2015, 10:28:43 AM8/3/15
to சந்தவசந்தம்

On Monday, August 3, 2015 at 7:00:37 AM UTC-7, குமார்(சிங்கை) wrote:

பிகு: இதுபோல தமிழ் இலக்கியங்களில் நம் மூதாதைப் புலவர்கள் கவிதைகள், செய்யுட்கள் யாத்திருக்கிறார்களா ?

யாத்திருக்கிறார்கள்.

நா. கணேசன் 

Kaviyogi Vedham

unread,
Aug 3, 2015, 11:53:38 AM8/3/15
to santhav...@googlegroups.com
அபார ஆய்வு ஸ்வாமி. வாழ்க,
யோகியார்
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to santhavasanth...@googlegroups.com.
> To post to this group, send email to santhav...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>

--
வாழ்க..!..
எமது ஆஸ்ரமத்தின்..அற்புத- ‘இலக்கியவேல்’
(மாதத்)தமிழ் ஏட்டை ரூ100- அனுப்பி(சந்தா)
வாங்கிப்பின்பு உங்கள், மிகப்புதிய ,இலக்கியப்படைப்பும்
அனுப்புங்கள். இரண்டாவது ஆண்டாக இது குருஜி அருளால்
சக்கைப்போடு போடுகிறது. No M. O pl.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
pl.See my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--
cel no=095000-88528

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 3, 2015, 2:44:31 PM8/3/15
to santhav...@googlegroups.com
எடுத்துவிடுங்கள் ஐயா!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Subbaier Ramasami

unread,
Aug 3, 2015, 4:42:16 PM8/3/15
to சந்தவசந்தம்
எதைப்போல? 

--

Vis Gop

unread,
Aug 4, 2015, 3:03:50 AM8/4/15
to santhav...@googlegroups.com
சமஸ்க்ரிதத்தில் வேறு சில காவ்யங்களும் இது போல உண்டு! 'ராகவ யாதவீயம்' என்றொன்றுண்டு. நான் கல்லூரிக் காலத்தில் பரிசாகப் பெற்றேன். பிறகு மற்ற ஒருவருக்காக LIFCO வில் வாங்கியுமிருக்கிறேன். இது முன்னிலிருந்து பின்வரை ராகவனையும் பின்னிலிருந்து முன்வரை யாதவனையும் புகழ்ந்து பேசும் காவ்யமாகும்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

ramaNi

unread,
Aug 4, 2015, 3:23:04 AM8/4/15
to சந்தவசந்தம்

K.R. Kumar

unread,
Aug 4, 2015, 4:01:58 AM8/4/15
to santhav...@googlegroups.com

செய்திக்கு நன்றி.

தமிழில் இது போன்ற படைப்புகள் உண்டா என்று கேட்டிருந்தேன். திரு.கணேசன் ஐயா மட்டும் "இருப்பதாக" க் கூறியுள்ளார்.

அவரிடமிருந்து மேற்கொண்டு மடல்களை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
குமார்(சிங்கை)

Chandar Subramanian

unread,
Aug 4, 2015, 4:10:44 AM8/4/15
to santhavasantham
vilOma kAvyA was discussed few years back in santhavantham. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com
raamakrshhna.pdf

Vis Gop

unread,
Aug 4, 2015, 6:17:38 AM8/4/15
to santhav...@googlegroups.com
Thanks for a copy of the Viloma Kavya.
gopal.

Subbaier Ramasami

unread,
Aug 4, 2015, 8:56:25 AM8/4/15
to சந்தவசந்தம்
நீலகண்டதீக்‌ஷிதரின் ஒரு நூல்   மகாபாரதத்தையும் இராமாயணத்தையும் தருவதைப்பார்த்திருக்கிறேன். பெயர் நினைவில்லை.

ஒருதுறைக்கோவைக்குச் சௌந்தர பாரதி அகமாகவும் புறமாகவும் உரையெழுய்தி பார்த்த நினைவு இருக்கிறது. 

N. Ganesan

unread,
Aug 4, 2015, 9:20:11 AM8/4/15
to சந்தவசந்தம்

On Tuesday, August 4, 2015 at 5:56:25 AM UTC-7, Ram wrote:
நீலகண்டதீக்‌ஷிதரின் ஒரு நூல்   மகாபாரதத்தையும் இராமாயணத்தையும் தருவதைப்பார்த்திருக்கிறேன். பெயர் நினைவில்லை.

ராகவயாதவீயத்தைச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

தமிழில் பெயருங்கூட வடமொழியைவிடப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
இரவீச மரபினர் காதை. 
இரவி - சூரியன் என எடுத்தால் ராமாயணம்
இரவு ஈசன் - சந்திரன் என எடுத்தால் பாரதம்.
நூலின் ஒரு பகுதியே அச்சானது. ஆதரவின்மையால் மறுபகுதி அச்சாகவில்லை.
நூல் என்னிடம் உள்ளது. சென்னையில் ரோஜா முத்தையா நூலகத்தில் இருப்பது
கேட்டாலிக் தெரிகிறது. மு. அருணாசலம் கொடுத்த பிரதி.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 4, 2015, 9:30:11 AM8/4/15
to சந்தவசந்தம்

On Tuesday, August 4, 2015 at 12:23:04 AM UTC-7, ramaNi wrote:

direct URL:

Swaminathan Sankaran

unread,
Aug 4, 2015, 9:38:37 AM8/4/15
to santhav...@googlegroups.com
I am forwarding a note I received in response to the original message on this topic which I forwarded to a good friend of mine who is way,way more knowledgeable than me in Sanskrit literature.

Sankaran
---------- Forwarded message ----------

Subject: RE: அசாத்தியமான அற்புதமான மூன்று நூல்கள்

                                                      I may like  to add to whatever you have observed/forwarded.

                                                        माघ and भारवि initiated use of play and pun on words. The popular quote following is testimony to it.

                               उपमा कालिदासस्य  भारवेरर्थगौरवं |
                               दण्डिन: पदलालित्यं माघे सन्ति त्रयो गुणा: ||

                                                Their style grew more and more--got exaggerated--until they culminated in a special class of poems in epic style to narrate two different stories simultaneously. Kaviraja Pandita--a Telugu speaking poet--composed राघवपाण्डवीय  in Sanskrit dealing with stories of Rama and of Pandava Princes. Every verse is interpreted in two ways--sometimes by puns and sometimes by different dissections of the euphonic combinations. The author's capability to handle this difficult method has been applauded in the following verses.
 सुबन्धुर्बाणभट्टश्च कविराज इति त्रय: |

वक्रोक्तिमार्गनिपुणा: चतुर्थो विद्यते न वा ||

  Subhandu, Bananhatta and Kaviraja—these three are experts in Vakrokti( clever manipulation/usage of words). There may or  may not be a fourth.

  श्रीमद्रामायणम् गङ्गा भारतं सागरो महान् |

तत्संयोजनकार्यज्ञौ कविराजभगीरतौ |

 Srimad Ramayanam is like River Ganga and Sriman Mahabharatam is an ocean. Only two know how to unite them. One is Bhagiratha and the other Kaviraja Pandita.

                            A Jain writer Dhananjaya has authored a work with the same name Raghava Pandaviya-- giving also an alternate title द्विसन्धान काव्य.

                         हरदत्तसूरि  has achieved the same literary feat narrating the stories of Rama and Nala in a work called  राघवनैषधीय.

                          A poet by name चिदंबर  has written a त्रिसन्धान काव्य called राघवयादवपाण्डवीय narrating simultaneously stories of Ramayana, Mahabharata and Bhagavata.

                     The above are literary feats achieved by some poets attempting, with specific intents, narration of two or more stories simultaneously.

                     महाकवि भारवि' s किरातार्जुनीयं contains a number of verses which when read from left to right/top to bottom give a meaning and read the other way--as one reads languges like Urdu/Persian/arabic--left to right/bottom to top--become other meaningful verses. Here is a pair from Chapter 15.

 निशितासिरतोऽभीको न्येजतेऽमरणा रुचा |

सारतो न विरोधी न: स्वाभासो भरवानुत ||

तनुवारभसो भास्वानधीरोऽविनतोरसा |

चारुणा रमते जन्ये कोऽभीतो रसिताशिनि ||

                  महाकवि भारवि’अर्थगौरव is well illustrated with the following verse from chapter 1 of किरातार्जुनीयं. The forester-वनेचर- deputed by युधिष्टिर to spy on and gather information about Duryodhana’s  governance of the state reports to him with the following information:

कथाप्रसङ्गेन जनैरुदाहृतादनिस्मृताखन्डलसूनुविक्रम: |

तवाभिबधानात् व्यथते नतानन: सुदु:सहान् मन्त्रपदादिवोरग: ||

   He ( Duryodhana) experiences unbearable pain with his head hung down as does a serpent with hood down at the unbearable utterances of a mantra. The genius of the poet comes into full play.  कथाप्रसङ्ग  means ‘conversation’ as well as a विषवैद्य-one who can cure somebody of snake-bite by chanting certain mantras. इन would mean ‘best of tribe’.  कथाप्रसङ्गेन and जनै: together read as कथाप्रसङ्गेनजनै:  read along with उदाहृदात्   means ‘by the utterances of the best of tribe of poison curers’. Read as कथाप्रसङ्गेन जनै: उदाहृतात्  it would mean ‘mentioned during conversation’.  आखण्डलसूनुविक्रम:  can be split as आखण्डलसूनो: विक्रम:--prowess of Arjuna( son of Indra)  as well as आखन्डलसूनो: ( Upendra-Vishnu )  वि: ( bird )  तस्य क्रम: (  its path )—flight of Garuda.  तवाभिधानात् can be interpreted as तव अभिधानात्—by the mention of your ( Yudhishtira’s) name.  There is a dispensation which says ‘ mention of the first letter of a name would  tantamount to mention of the full name’—नामैकदेशग्रहणे नाममात्रग्रहणं Under this provision,  तवाभिधानात्  can be resolved into तश्च (  त  would stand for तार्क्ष्य—Garuda)  वश्च ( would stand for वासुकि—King of Serpents) तवौ तयो: अभिधानं तस्मात्—together would mean ‘ mention of names of Garuda and Vasuki during the chanting of mantra’.

      The meaning of the verse would then be: Reminded of the prowess of Arjuna when people mention your name during casual conversations, he bears unbearable pain with his head down as would a serpent with its hood down, reminded of the flight( arrival of ) of Garuda  by  the utterances of the names of Garuda and Vasuki as part of chantings of a mantra by a poison-curer.  

                      There is also an instance of a भाष्यकार interpreting a devotional lyric in two different ways.  There are nine commentaries in Sanskrit on Adi Sakaracharya's सौन्दर्यलहरी.

One of them titled गोपालसुन्दरी has been written by one श्रीनरसिंहस्वामिन्. இவர் சௌந்தர்யலஹரீ ஸ்தோத்திரங்களை சிவபரமாகவும் விஷ்ணுபரமாகவும் வியாக்யானம் செய்துள்ளார். The various commentaries in Sanskrit have been compiled by महामहोपाध्याय श्री कुप्पुस्वामि शास्रिगळ्  and published by Nag Publishers. श्री राधाकृष्णशास्त्रिगळ् from Srirangam has translated all these commentaries into Tamil and the same has been published by MAHA PERIYAVAL TRUST, Bengaluru-560 054.

N. Ganesan

unread,
Aug 4, 2015, 9:53:34 AM8/4/15
to சந்தவசந்தம்

On Tuesday, August 4, 2015 at 1:10:44 AM UTC-7, Chandar Subramanian wrote:
vilOma kAvyA was discussed few years back in santhavantham. 

In 2009. gave a JAOS article on viloma kavya.

sri ramakrishna viloma kaavya, the Deavanagari text can be requested from the email addresses give in the pdf.
And we can convert to Tamil and English scripts.

N. Ganesan

N. Ganesan

unread,
Aug 4, 2015, 9:54:17 AM8/4/15
to சந்தவசந்தம்

Chandar Subramanian

unread,
Aug 6, 2015, 8:40:13 PM8/6/15
to santhavasantham
தெலுங்கில் ஒரு கவிஞர், ஏறக்குறைய க்ராஸ்வேர்ட் போன்ற அமைப்பில், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல், இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என்று நான்குமுறைகளிலும் ஒரே விதமாய் வருமாறு கவிதை யாத்துள்ளார் என்று திரு தமிழழகன் சொல்லக் கேட்டுள்ளேன். கவிதை அவரிடம் இல்லை, இணையத்தில் இதுகுறித்த குறிப்பும் இல்லை, யாரேனும் இதுகுறித்த தகவல் தரவியலுமா?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Swaminathan Sankaran

unread,
Aug 6, 2015, 9:55:20 PM8/6/15
to santhav...@googlegroups.com
Please see the item below which I forwarded earlier. This was a response I received from a friend of mine when I referred the very first posting on this topic to him. I draw your attention to the passage on Mahakavi Bhaaravi and his Kirataarjumeeyam.

Sankaran
 I may like  to add to whatever you have observed/forwarded.

                                                        माघ and भारवि initiated use of play and pun on words. The popular quote following is testimony to it.

                               उपमा कालिदासस्य  भारवेरर्थगौरवं |
                               दण्डिन: पदलालित्यं माघे सन्ति त्रयो गुणा: ||

                                                Their style grew more and more--got exaggerated--until they culminated in a special class of poems in epic style to narrate two different stories simultaneously. Kaviraja Pandita--a Telugu speaking poet--composed राघवपाण्डवीय  in Sanskrit dealing with stories of Rama and of Pandava Princes. Every verse is interpreted in two ways--sometimes by puns and sometimes by different dissections of the euphonic combinations. The author's capability to handle this difficult method has been applauded in the following verses.
 सुबन्धुर्बाणभट्टश्च कविराज इति त्रय: |

वक्रोक्तिमार्गनिपुणा: चतुर्थो विद्यते न वा ||

  Subhandu, Bananhatta and Kaviraja—these three are experts in Vakrokti( clever manipulation/usage of words). There may or  may not be afourth.

  श्रीमद्रामायणम् गङ्गा भारतं सागरो महान् |

तत्संयोजनकार्यज्ञौ कविराजभगीरतौ |

 Srimad Ramayanam is like River Ganga and Sriman Mahabharatam is an ocean. Only two know how to unite them. One is Bhagiratha and the other Kaviraja Pandita.

                            A Jain writer Dhananjaya has authored a work with the same name Raghava Pandaviya-- giving also an alternate title द्विसन्धान काव्य.

                         हरदत्तसूरि  has achieved the same literary feat narrating the stories of Rama and Nala in a work called  राघवनैषधीय.

                          A poet by name चिदंबर  has written a त्रिसन्धान काव्य called राघवयादवपाण्डवीय narrating simultaneously stories of Ramayana, Mahabharata and Bhagavata.

                     The above are literary feats achieved by some poets attempting, with specific intents, narration of two or more stories simultaneously.

                     महाकवि भारवि' s किरातार्जुनीयं contains a number of verses which when read from left to right/top to bottom give a meaning and read the other way--as one reads languges like Urdu/Persian/arabic--left to right/bottom to top--become other meaningful verses. Here is a pair from Chapter 15.

 निशितासिरतोऽभीको न्येजतेऽमरणा रुचा |

सारतो न विरोधी न: स्वाभासो भरवानुत ||

तनुवारभसो भास्वानधीरोऽविनतोरसा |

चारुणा रमते जन्ये कोऽभीतो रसिताशिनि ||

                  महाकवि भारवि’s  अर्थगौरव is well illustrated with the following verse from chapter 1 ofकिरातार्जुनीयं. The forester-वनेचर- deputed by युधिष्टिर to spy on and gather information about Duryodhana’s  governance of the state reports to him with the following information:

कथाप्रसङ्गेन जनैरुदाहृतादनिस्मृताखन्डलसूनुविक्रम: |

तवाभिबधानात् व्यथते नतानन: सुदु:सहान् मन्त्रपदादिवोरग: ||

   He ( Duryodhana) experiences unbearable pain with his head hung down as does a serpent with hood down at the unbearable utterances of a mantra. The genius of the poet comes into full play. कथाप्रसङ्ग  means ‘conversation’ as well as a विषवैद्य-one who can cure somebody of snake-bite by chanting certain mantras. इन would mean ‘best of tribe’.  कथाप्रसङ्गेन and जनै: together read asकथाप्रसङ्गेनजनै:  read along with उदाहृदात्   means ‘by the utterances of the best of tribe of poison curers’. Read as कथाप्रसङ्गेन जनै: उदाहृतात्  it would mean ‘mentioned during conversation’. आखण्डलसूनुविक्रम:  can be split as आखण्डलसूनो: विक्रम:--prowess of Arjuna( son of Indra)  as well asआखन्डलसूनो: ( Upendra-Vishnu )  वि: ( bird  तस्य क्रम: (  its path )—flight of Garuda.  तवाभिधानात् can be interpreted as तव अभिधानात्—by the mention of your ( Yudhishtira’s) name.  There is a dispensation which says ‘ mention of the first letter of a name would  tantamount to mention of the full name’—नामैकदेशग्रहणे नाममात्रग्रहणं Under this provision,  तवाभिधानात्  can be resolved into तश्च (  त  would stand forतार्क्ष्य—Garuda)  वश्च ( व  would stand for वासुकि—King of Serpents) तवौ तयो: अभिधानं तस्मात्—together would mean ‘ mention of names of Garuda and Vasuki during the chanting of mantra’.

      The meaning of the verse would then be: Reminded of the prowess of Arjuna when people mention your name during casual conversations, he bears unbearable pain with his head down as would a serpent with its hood down, reminded of the flight( arrival of ) of Garuda  by  the utterances of the names of Garuda and Vasuki as part of chantings of a mantra by a poison-curer.  

                      There is also an instance of a भाष्यकार interpreting a devotional lyric in two different ways.  There are nine commentaries in Sanskrit on Adi Sakaracharya's सौन्दर्यलहरी.

One of them titled गोपालसुन्दरी has been written by one श्रीनरसिंहस्वामिन्. இவர் சௌந்தர்யலஹரீ ஸ்தோத்திரங்களை சிவபரமாகவும் விஷ்ணுபரமாகவும் வியாக்யானம் செய்துள்ளார். The various commentaries in Sanskrit have been compiled by महामहोपाध्याय श्री कुप्पुस्वामि शास्रिगळ्  and published by Nag Publishers. श्री राधाकृष्णशास्त्रिगळ् from Srirangam has translated all these commentaries into Tamil and the same has been published by MAHA PERIYAVAL TRUST, Bengaluru-560 054.

 Swaminathan Sankaran

N. Ganesan

unread,
Aug 7, 2015, 9:08:38 AM8/7/15
to சந்தவசந்தம்
Here is Dr. S. Sankaran's mail converted to Latin script using Aksharamukha ( http://www.virtualvinodh.com/wp/aksharamukha/ ). For ease of reading.
We can talk more on some aspects.

N. Ganesan

On Thursday, August 6, 2015 at 6:55:20 PM UTC-7, கடிச்சம்பாடி wrote:
Please see the item below which I forwarded earlier. This was a response I received from a friend of mine when I referred the very first posting on this topic to him. I draw your attention to the passage on Mahakavi Bhaaravi and his Kirataarjumeeyam.

Sankaran
I may like  to add to whatever you have observed/forwarded.

                                                       māgha and bhāravi initiated use of play and pun on words. The popular quote following is testimony to it.

                              upamā kālidāsasya  bhāravērarthagauravaṁ |
                              daṇḍina: padalālityaṁ māghē santi trayō guṇā: ||

                                               Their style grew more and more--got exaggerated--until they culminated in a special class of poems in epic style to narrate two different stories simultaneously. Kaviraja Pandita--a Telugu speaking poet--composed rāghavapāṇḍavīya  in Sanskrit dealing with stories of Rama and of Pandava Princes. Every verse is interpreted in two ways--sometimes by puns and sometimes by different dissections of the euphonic combinations. The author's capability to handle this difficult method has been applauded in the following verses.
subandhurbāṇabhaṭṭaśca kavirāja iti traya: |
vakrōktimārganipuṇā: caturthō vidyatē na vā ||

 Subhandu, Bananhatta and Kaviraja—these three are experts in Vakrokti( clever manipulation/usage of words). There may or  may not be afourth.

 śrīmadrāmāyaṇam gaṅgā bhārataṁ sāgarō mahān |

tatsaṁyōjanakāryajñau kavirājabhagīratau |

Srimad Ramayanam is like River Ganga and Sriman Mahabharatam is an ocean. Only two know how to unite them. One is Bhagiratha and the other Kaviraja Pandita.

                           A Jain writer Dhananjaya has authored a work with the same name Raghava Pandaviya-- giving also an alternate title dvisandhāna kāvya.

                        haradattasūri  has achieved the same literary feat narrating the stories of Rama and Nala in a work called  rāghavanaiṣadhīya.

                         A poet by name cidaṁbara  has written a trisandhāna kāvya called rāghavayādavapāṇḍavīya narrating simultaneously stories of Ramayana, Mahabharata and Bhagavata.

                    The above are literary feats achieved by some poets attempting, with specific intents, narration of two or more stories simultaneously.

                    mahākavi bhāravi' s kirātārjunīyaṁ contains a number of verses which when read from left to right/top to bottom give a meaning and read the other way--as one reads languges like Urdu/Persian/arabic--left to right/bottom to top--become other meaningful verses. Here is a pair from Chapter 15.

niśitāsiratō'bhīkō nyējatē'maraṇā rucā |

sāratō na virōdhī na: svābhāsō bharavānuta ||

tanuvārabhasō bhāsvānadhīrō'vinatōrasā |

cāruṇā ramatē janyē kō'bhītō rasitāśini ||

                 mahākavi bhāravi’s  arthagaurava is well illustrated with the following verse from chapter 1 ofkirātārjunīyaṁ. The forester-vanēcara- deputed by yudhiṣṭira to spy on and gather information about Duryodhana’s  governance of the state reports to him with the following information:

kathāprasaṅgēna janairudāhr̥tādanismr̥tākhanḍalasūnuvikrama: |

tavābhibadhānāt vyathatē natānana: sudu:sahān mantrapadādivōraga: ||

  He ( Duryodhana) experiences unbearable pain with his head hung down as does a serpent with hood down at the unbearable utterances of a mantra. The genius of the poet comes into full play. kathāprasaṅga  means ‘conversation’ as well as a viṣavaidya-one who can cure somebody of snake-bite by chanting certain mantras. ina would mean ‘best of tribe’.  kathāprasaṅgēna and janai: together read askathāprasaṅgēnajanai:  read along with udāhr̥dāt   means ‘by the utterances of the best of tribe of poison curers’. Read as kathāprasaṅgēna janai: udāhr̥tāt  it would mean ‘mentioned during conversation’. ākhaṇḍalasūnuvikrama:  can be split as ākhaṇḍalasūnō: vikrama:--prowess of Arjuna( son of Indra)  as well asākhanḍalasūnō: ( Upendra-Vishnu )  vi: ( bird )  tasya krama: (  its path )—flight of Garuda.  tavābhidhānāt can be interpreted as tava abhidhānāt—by the mention of your ( Yudhishtira’s) name.  There is a dispensation which says ‘ mention of the first letter of a name would  tantamount to mention of the full name’—nāmaikadēśagrahaṇē nāmamātragrahaṇaṁ Under this provision,  tavābhidhānāt  can be resolved into taśca (  ta  would stand fortārkṣya—Garuda)  vaśca ( va  would stand for vāsuki—King of Serpents) tavau tayō: abhidhānaṁ tasmāt—together would mean ‘ mention of names of Garuda and Vasuki during the chanting of mantra’.

     The meaning of the verse would then be: Reminded of the prowess of Arjuna when people mention your name during casual conversations, he bears unbearable pain with his head down as would a serpent with its hood down, reminded of the flight( arrival of ) of Garuda  by  the utterances of the names of Garuda and Vasuki as part of chantings of a mantra by a poison-curer.  

                     There is also an instance of a bhāṣyakāra interpreting a devotional lyric in two different ways.  There are nine commentaries in Sanskrit on Adi Sakaracharya's saundaryalaharī.

One of them titled gōpālasundarī has been written by one śrīnarasiṁhasvāmin. இவர் சௌந்தர்யலஹரீ ஸ்தோத்திரங்களை சிவபரமாகவும் விஷ்ணுபரமாகவும் வியாக்யானம் செய்துள்ளார். The various commentaries in Sanskrit have been compiled by mahāmahōpādhyāya śrī kuppusvāmi śāsrigaḷ  and published by Nag Publishers. śrī rādhākr̥ṣṇaśāstrigaḷ from Srirangam has translated all these commentaries into Tamil and the same has been published by MAHA PERIYAVAL TRUST, Bengaluru-560 054.

- hide quoted text -

2015-08-06 20:40 GMT-04:00 Chandar Subramanian <chandarsu...…gmail.com>:
தெலுங்கில் ஒரு கவிஞர், ஏறக்குறைய க்ராஸ்வேர்ட் போன்ற அமைப்பில், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல், இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என்று நான்குமுறைகளிலும் ஒரே விதமாய் வருமாறு கவிதை யாத்துள்ளார் என்று திரு தமிழழகன் சொல்லக் கேட்டுள்ளேன். கவிதை அவரிடம் இல்லை, இணையத்தில் இதுகுறித்த குறிப்பும் இல்லை, யாரேனும் இதுகுறித்த தகவல் தரவியலுமா?

On Tue, Aug 4, 2015 at 7:24 PM, N. Ganesan <naa.g...…gmail.com> wrote:

chitra kaavya - chitra bandha

On Tuesday, August 4, 2015 at 1:10:44 AM UTC-7, Chandar Subramanian wrote:
vilOma kAvyA was discussed few years back in santhavantham. 

In 2009. gave a JAOS article on viloma kavya.

sri ramakrishna viloma kaavya, the Deavanagari text can be requested from the email addresses give in the pdf.
And we can convert to Tamil and English scripts.

N. Ganesan
-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...…googlegroups.com.
To post to this group, send email to santhav...…googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

-- 
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...…googlegroups.com.
To post to this group, send email to santhav...…googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages