தொடக்கம் என்பதுதான் சரி. தொடுதல் என்ற வினையடியாகப் பிறந்த சொல். எதையும் நிகழ்த்துவதற்கு முன் தொடுதல், முதல் மற்றும் முக்கிய வினையாவதால் தொடக்கம் என்பதே சரியாகும்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
----- Original Message -----From: Niranjan BharathiSent: Wednesday, August 08, 2012 6:12 PMSubject: Re: தொடக்கம் துவக்கம் என்ன வேறுபாடு ?மிக்க நன்றி
2012/8/8 Hari Krishnan <hari.har...@gmail.com>
2012/8/8 Niranjan Bharathi <niranjan...@gmail.com>
அனைவர்க்கும் வணக்கம்,ஒரு சிறிய சந்தேகம்.தொடக்கம், துவக்கம் இந்த இரண்டிற்கும் என்ன வேறுபாடு ?இந்தச் சொற்களை எப்படி, எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் ?இவற்றை உதாரணங்களோடு விளக்க முடியுமா ?இந்தப் பக்கத்தில்நான்காம் சொற்பொழிவு ‘மொழிப் பயிற்சி‘யை முழுதும் கேட்கவும்.தொடக்கம் என்பதே சரி. துவக் என்ற வடமொழி வேரிலிருந்து கிளைத்தது துவக்கம். அதற்கு ‘ஆரம்பம்’ என்ற பொருள் கிடையாது. எப்படியோ பின்னாளில் தொடக்கத்தின் இடத்தை துவக்கம் பிடிக்கத் ‘தொடங்கி‘விட்டது!முழுச் சொற்பொழிவில் பல்வேறு சொற்கள் அலசப்படுகின்றன.--
அன்புடன்,
ஹரிகி.
--
இதுபற்றி முன்னமே பேசியிருப்பதாக ஒரு நினைவு. தொடக்கம், துவக்கம் இரண்டுமே அகராதிப்படி சரியெனக் காண்கிறது.
OTL:
toTakkam 1. origin; 2. beginning, commencement; 3. beginning the recitation of Tiruva1ymol6i after capin2t2i1karan2am ; 4. means for an end; attempt; 5. wealth; 6. class
tuvakku 04 1. skin; 2. body; 3. sensory organ of touch
tuvakku-tal 01 to begin, enter upon, commence
tuvakku-tal 02 1. to tie, bind; 2. to engross the senses or affections; to fascinate; to bring under one's influence; to be tied, entangled
துவக்கு (வடமொழி த்வக்) என்பது தோல்/ஸ்பரிசத்தை குறிக்கும். எனவே தொடக்கம் என்பதற்கு அ.ரா. சுட்டிய விளக்கம் துவக்கத்திற்கும் பொருந்தலாம். (--”தொடக்கம் என்பது..... தொடுதல் என்ற வினையடியாகப் பிறந்த சொல். எதையும் நிகழ்த்துவதற்கு முன் தொடுதல், முதல் மற்றும் முக்கிய வினையாவதால் தொடக்கம் என்பதே சரியாகும்”--)
அனந்த்
ஹரி -> டிக்ஷனரி!
வட மொழியில் 'துவங்க்' (tvang, त्वंग) என்கிற வேரும் உண்டு [त्वंगति, त्वंगतः, त्वंगन्ति]. குதி, தாண்டு, பாய், போன்ற பொருள் கொண்டது. இப்பொருள்கள் நுழை, தொடங்கு என்கிற பொருள் வெளிப்படுமாறு பயன் படுத்தப்பட முடியும். (உ ம்) ஒரு முயற்சியில் குதிப்பது என்பது தொடங்குவது என்கிற பொருளைத்தானே சுட்டும்? 'எண்ணித் துணிக கருமம்' என்றால் 'ஆராய்ந்தபின் (துணிந்து) தொடங்குக' என்று பொருள் தருகிறது, துணிவும் தொடக்கமும் வெவ்வேறாயிருப்பினும்! [துவக், துவங்க் வேர்கள் தமக்குள்ளே உறவற்றவை.] துவங்கு என்பது சரியில்லை என்பதை இங்கேதான் நான் முதலில் கற்கிறேன். துவக் என்கிற வேரை விட, துவங்க் என்கிற வேர் 'துவங்கு' என்ற நடைமுறைத் தமிழ்ச் சொல்லுக்கு அருகில் இருப்பது போல் இல்லையா?!
தொட்டுக்க ஒரு சின்ன விஷயம் ஹரி!துவக் என்றால் தோல். ஊறுகாயில் 'தொக்கு' என்ற வகை இதிலிருந்து வந்திருக்கலாம் என எனக்குச் சந்தேகம் வந்தது. உதாரணமாக எலுமிச்சை, நாரத்தை இவைகளால் செய்யப்படும் ஊறுகாய் அவற்றின் தோலினால் பலநாட்கள் சுவைப்பவை. தமிழ்ச் சொல் தொக்கு இப்பொருளுக்கு அருகில் இல்லை. வடமொழியும் தமிழும் அறிந்த சில அறிஞர்களிடம் சில மாதங்கள் முன்பு இதுபற்றிக் கேட்டேன். இருக்கலாமே என்று நகைத்தார்கள்.நல்வாழ்த்துக்களுடன்,கோபால்.
’துவக்க’த்தைத் ’த்வக்’குடன் லிங்க்விஸ்டிக் சம்பந்தப்படுத்தி அறிவாளித்தனமான விசாரம் துவங்கியிருப்பது சுவாரசியமாக இருக்கிறது.
அது ’வாய்ப்பு’ இல்லை அதுதான் இலக்கணப்படி ஒரு வினைச்சொல்லிலிருந்து அதன் Causal[செய்>செய்வி என்பதைப்போல] & தொழிற்பெயர் ஆக்கும் விதி:-
துவங்கு அடிப்படைச்சொல், துவக்கு, துவக்கம் எனத் திரிகிறது :-
e.g.அடங்கு/-க்கு/-க்கம், இறங்கு/-க்கு/-க்கம், இரங்கு/-க்கு/க்கம், இணங்கு/-க்கு/-க்கம், இயங்கு/க்கு/க்கம், மேலும் உறங்க்/-க்கம், ஒதுங்கு/-க்கு/-க்கம், கசங்கு/-க்கு,
கலங்கு/-க்கு/க்கம்/-க்கல், இன்னும் கிறங்கு,குலுங்கு,சிணுங்கு, சுருங்கு, தவங்கு, தொடங்கு/-க்கம், நடுங்கு/-க்கம், நுடங்கு/-க்கு, பதுங்கு, பிணங்கு, பிதுங்கு, மடங்கு, மயங்கு, மழுங்கு,வழ்ங்கு/-க்கம், விளங்கு/-க்கு/-க்கம் –
இத்தனை தெளிந்தஇலக்கணப் பிரயோகங்களின் நடுவே,
--
இது என் பங்கு. 'தொக்கு என்ற சொல்லுக்கு வேர் 'தொகு'. தொகுக்கப்பட்டு, உருவம் வெளிப்படாது மறைந்து நிற்றலால் (தொக்கி நிற்பதால்) 'தொக்கு' ஆயிற்றென்க.
அ.ரா.
--
3350 Ta. tuvaṅku (tuvaṅki-), tuvakku (tuvakki-) to begin, enter upon; tuvakkam beginning, commencement. Ko. tovk- (tovky-) to begin. ? To. twïQx- (twïQxy-) to be at the point of, be ready to; twïQk- (twïQky-)to start, begin. DED 2754.
த்ராவிட பாஷைகளின் மிகப் பழைய சொற்களில் ஒன்றாக துவக்கு/துவங்கு இருக்கிறது. இதற்கும்
வடமொழிச் சொற்களுக்கும் தொடர்பில்லை. Refer Madras Lexicon and DED.
கோதர்கள், தொதுவர், இருளர், மலசர், ... பண்பாடுகளை ஆராய்வதால் துவக்கம் போன்ற சொற்களின் தொடக்கம் தெரிந்துகொள்கிறோம். மேலும், சங்க இலக்கியச் செய்திகளை - உ-ம்: கலந்தொடா மகளிர் (புறநானூறு 299) - அறிந்துகொள்ளவும் உதவும். இவ்வாய்வின் முக்கியத்துவம் பற்றிய ஒரு குறிப்பு: காட்டாக, ஆணி (< ஆழ்தல்) என்பது ரிக்வேதத்தில் எப்படி தமிழில் இருந்து செல்கிறது என்பதற்கு Pangolin என்னும் விலங்கின் தமிழ்ப் பெயர்கள் உதவுகின்றன. https://listes.services.cnrs.fr/wws/arc/ctamil/2013-10/msg00051.html
நா. கணேசன்
இது என் பங்கு. 'தொக்கு என்ற சொல்லுக்கு வேர் 'தொகு'. தொகுக்கப்பட்டு, உருவம் வெளிப்படாது மறைந்து நிற்றலால் (தொக்கி நிற்பதால்) 'தொக்கு' ஆயிற்றென்க.
அ.ரா.
On Wednesday, August 8, 2012 3:05:35 AM UTC-7, Niranjan Bharathi wrote:அனைவர்க்கும் வணக்கம்,ஒரு சிறிய சந்தேகம்.தொடக்கம், துவக்கம் இந்த இரண்டிற்கும் என்ன வேறுபாடு ?இந்தச் சொற்களை எப்படி, எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் ?இவற்றை உதாரணங்களோடு விளக்க முடியுமா ?விளக்கமுடியும் என நினைக்கிறேன். மதறாஸ் லெக்ஸிகான்துவக்கு என்னும் வினைச்சொல்லை துடக்கு/தொடக்கு என்னும்சொல்லுடன் தொடர்பு இருக்கலாம் என்கிறது. அவ்வாறுஏதும் இல்லை என்கிறனர் மொழியியல் பேராசிரியர்கள்.மேலும், மலைவாழ் ஆதிவாசிகளிடம் இச்சொல் இருக்கிறது:Dravidian Etymological Dictionary:DEDR 3350 Ta. tuvaṅku (tuvaṅki-), tuvakku (tuvakki-)3350 Ta. tuvaṅku (tuvaṅki-), tuvakku (tuvakki-) to begin, enter upon; tuvakkam beginning, commencement. Ko. tovk- (tovky-) to begin. ? To. twïQx- (twïQxy-) to be at the point of, be ready to; twïQk- (twïQky-)to start, begin. DED 2754.
த்ராவிட பாஷைகளின் மிகப் பழைய சொற்களில் ஒன்றாக துவக்கு/துவங்கு இருக்கிறது. இதற்கும்
வடமொழிச் சொற்களுக்கும் தொடர்பில்லை. Refer Madras Lexicon and DED.
கோதர்கள், தொதுவர், இருளர், மலசர், ... பண்பாடுகளை ஆராய்வதால் துவக்கம் போன்ற சொற்களின் தொடக்கம் தெரிந்துகொள்கிறோம். மேலும், சங்க இலக்கியச் செய்திகளை - உ-ம்: கலந்தொடா மகளிர் (புறநானூறு 299) - அறிந்துகொள்ளவும் உதவும். இவ்வாய்வின் முக்கியத்துவம் பற்றிய ஒரு குறிப்பு: காட்டாக, ஆணி (< ஆழ்தல்) என்பது ரிக்வேதத்தில் எப்படி தமிழில் இருந்து செல்கிறது என்பதற்கு Pangolin என்னும் விலங்கின் தமிழ்ப் பெயர்கள் உதவுகின்றன. https://listes.services.cnrs.fr/wws/arc/ctamil/2013-10/msg00051.html
நா. கணேசன்
தொடையை துட என்பர் மலையாளியர். அதே ஒலித் திரிபைத் தான் தொடங்கு > துடங்கு என்பதிலும் காணவியல்கின்றது. இதில் பார்க்கப் படவேண்டியது என்னவென்றால் எது முதலில் தோன்றிய சொல் என்பது தான். தமிழில் உகரம் தான் ஒகரமாக மாறும். காட்டாக, உட்கார் .> ஒக்கார்; உடம்பு > ஒடம்பு; உடைந்து > ஒடஞ்சி. எனவே துடங்கு தான் தொடங்கு என்று ஆகி இருக்க வேண்டும். துல் > துள் > துள்ளு என்பது முனைப்புக் கருத்து. ஆதலால் துல் > துள் > துட் + அங்கு = துடங்கு என முனைப்புக் கருத்துடையது தொடங்கு என்பது - சேசாத்திரி
தொடங்கு என்பது ஏற்கனவே நடைபெறுவதை நின்று போனால் மீண்டும் செய்வது.தொடர் என்பது ஏற்கனவே நடைபெறுவதை தொடர்ந்து செய்வது.துவங்கு என்பது முதன் முதல் செய்வது.
வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்