Watch "பக்தியினாலே" on YouTube

14 views
Skip to first unread message

Kavingar Jawaharlal

unread,
Jul 14, 2024, 10:52:27 PM (12 days ago) Jul 14
to santhavasantham

Swaminathan Sankaran

unread,
Jul 15, 2024, 10:29:14 AM (12 days ago) Jul 15
to santhav...@googlegroups.com
கவிதையையும், அதை படித்த விதத்தையும் மிகவும் ரசித்தேன்.

சங்கரன் 

On Sun, Jul 14, 2024 at 8:52 PM Kavingar Jawaharlal <kavingar....@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOin%2BB9DeXNXGTD_NoJ2EcwZjCK-R_OAz1ejXC%2BYNsMe-QrNzQ%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

Vivek Bharathi

unread,
Jul 16, 2024, 6:48:17 AM (11 days ago) Jul 16
to santhav...@googlegroups.com
சிலிர்த்துக் கேட்டேன் ஐயா. மிக்க நன்றி
"ஓம் சக்தி"
விவேக்பாரதி
www.vivekbharathi.com




Imayavaramban

unread,
Jul 16, 2024, 8:24:21 AM (11 days ago) Jul 16
to santhav...@googlegroups.com
“சீறுபுலி யானை யாளி சிங்கம் முதலாய்ச்

சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்!”


என்னும் பாம்பாட்டிச் சித்தர் கருத்தை எதிரொலிக்கும் வரிகள் மிக அருமை!

பாரதியாரின் வரிகளைப் படிப்பது போன்ற பரவசம் ஊட்டும் கவிதை அற்புதம்!

- இமயவரம்பன்
… 

On Jul 15, 2024, at 7:59 PM, Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:



N. Ganesan

unread,
Jul 25, 2024, 12:11:44 PM (2 days ago) Jul 25
to santhav...@googlegroups.com, Kavingar Jawaharlal

On Sun, Jul 14, 2024 at 8:52 PM Kavingar Jawaharlal <kavingar....@gmail.com> wrote:
>
> https://youtu.be/I87Y-K3WkdI

அருமை, ஐயா. 

தாயுமானவரின் "கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்" என்னும் விருத்தம் நினைவுக்கு வருகிறது:

பாரதியார் உங்கள் பாடலைத் தொடங்க உதவியுள்ளார் என்பதும் அறிந்தேன். வாழ்க!

NG

தோத்திரப் பாடல்கள்

பக்தி

[ராகம் -- பிலஹரி]

பல்லவி

பக்தியி னாலே -- தெய்வ -- பக்தியி னாலே.

சரணங்கள்

பக்தியி னாலே -- இந்தப்
   பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சித்தந் தெளியும், -- இங்கு
   செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும், -- நல்ல
    வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத்
தத்துவ முண்டாம், -- நெஞ்சிற்
   சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்,
(பக்தியி னாலே)1

காமப் பிசாசைக்-குதி
   கால்கொண் டடித்து விழுத்திட லாகும்; இத்
தாமசப் பேயைக் -- கண்டு
   தாக்கி மடித்திட லாகும்; எந் நேரமும்
தீமையை எண்ணி -- அஞ்சுந்
   தேம்பற் பிசாசைத் திருகி யெறிந்துபொய்ந்
நாம மில்லாதே -- உண்மை
    நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும்,
(பக்தியி னாலே)2

ஆசையைக் கொல்வோம், -- புலை
   அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட
பாச மறுப்போம்,-இங்குப்
   பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல் -- உண்மை
   முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனைப் போற்றி -- இன்பம்
   யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம்,
(பக்தியி னாலே)3

சோர்வுகள் போகும், -- பொய்ச்
    சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும், நற்
பார்வைகள் தோன்றும், -- மிடிப்
   பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும், -- பல
   செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்,
தீர்வைகள் தீரும், -- பிணி
    தீரும், பலபல இன்பங்கள் சேர்ந்திடும்,
(பக்தியி னாலே)4

கல்வி வளரும், -- பல
   காரியங் கையுறும், வீரிய மோங்கிடும்,
அல்ல லொழியும், -- நல்ல
   ஆண்மை யுண்டாகும், அறிவு தெளிந்திடும்,
சொல்லுவ தெல்லாம் -- மறைச்
   சொல்லினைப் போலப் பயனுள தாகும், மெய்
வல்லமை தோன்றும், -- தெய்வ
   வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்ந்திடலாம், உண்மை
(பக்தியி னாலே)5


சோம்ப லழியும், -- உடல்
   சொன்ன படிக்கு நடக்கும், முடி சற்றுங்
கூம்புத லின்றி-நல்ல
   கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்,
வீம்புகள் போகும், -- நல்ல
    மேன்மை யுண்டாகிப் புயங்கள் பருக்கும், பொய்ப் 

பாம்பு மடியும் மெய்ப்

    பரம் வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும்,

(பக்தியி னாலே)6

சந்ததி வாழும், -- வெறுஞ்
    சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்,
‘இந்தப் புவிக்கே -- இங்கொர்
    ஈசனுண் டாயின் அறிக்கையிட் டேனுன்றன்
கந்த மலர்த்தாள் -- துணை;
   காதல் மகவு வளர்ந்திட வேண்டும், என்
சிந்தை யறிந்தே -- அருள்
    செய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும்,
(பக்தியி னாலே)7





On Tue, Jul 16, 2024 at 7:24 AM 'Imayavaramban' via சந்தவசந்தம் <santhav...@googlegroups.com> wrote:
>
> “சீறுபுலி யானை யாளி சிங்கம் முதலாய்ச்
>
> சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்!”
>
>
> என்னும் பாம்பாட்டிச் சித்தர் கருத்தை எதிரொலிக்கும் வரிகள் மிக அருமை!
>
> பாரதியாரின் வரிகளைப் படிப்பது போன்ற பரவசம் ஊட்டும் கவிதை அற்புதம்!
>
> - இமயவரம்பன்
> …
>>
>>
>> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOin%2BB9DeXNXGTD_NoJ2EcwZjCK-R_OAz1ejXC%2BYNsMe-QrNzQ%40mail.gmail.com.
>
>
>
> --
>  Swaminathan Sankaran
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BUgLfB8-pSvQ%3D5mHwLae6YJZ%3D2sGZkwst_OovAcSoJUtA%40mail.gmail.com.
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages